சனி, 7 டிசம்பர், 2013

இப்போதெலாம் நன்மை மரங்கள் வேரோடு சாய்க்கப்படுகின்றன


       நாட்டிற்கும், நாட்டார்களுக்கும், நன்மை பயக்கும் லட்சியங்களுக்காக வாழ்ந்து, போராடி, இறுதி வரை வெற்றி கண்டு, தென்னாப்பிரிக்க நாட்டையும், சில காலம் ஆண்டு, நம்மை விட்டுப் பிரிந்த நெல்சன் மண்டேலா........அவரது தியாகத்துக்குத் தலை பணிவோம்.  ஆத்மாவிற்காக பிரார்த்தனை செய்வோம்.  இது போன்ற நன்மை மரங்கள் தான் உலகெங்கும் தன்னலம் கருதாது, பிறர்க்கென வாழ்ந்து, மனித குலத்திற்குத் தொண்டாற்றி வருகின்றன. ஆனால், இப்போதெல்லாம், இது போன்ற நன்மை மரங்கள் இறுதி வரை வளர விடப்படாமல், லாப நோக்குள்ள சாதி, மத, அரசியல் வியாபாரிகளால் இடையிடையே வெட்டி சாய்க்கப்படுகின்றன. வேரோடு பிடுங்கி எறியப்படுகின்றன
.        

        அப்படிப்பட்ட ஒரு நன்மை மரம்தான் மஹாராஷ்ட்ராவின் “பெரியாரானநரேந்திர அச்யுட் தபோல்கர். Narendra Achyut Dabholkar (1 November 1945 – 20 August 2013). “மஹாராஷ்ட்டிரா அந்தஷ்ரத்தா நிர்மூலன் சமிதி (MANS, "Committee for Eradication of Superstition in Maharashtra" or "Maharashtra Committee for Eradication of Blind Faith") என்ற இயக்கத்தை உருவாக்கிய நாத்திகரான அவர், பெரியாரின் சமூக சீர்திருத்த வாதங்கள் பலதை, மக்கள் மனதில் பதிய வைக்க, மருத்துவரான அவர், தனக்கு மீதமிருந்த 12 வருட ஸர்வீசை உதறி விட்டு சமூக சேவைப் பணியை மேற்கொண்டார். மூட நம்பிக்கைகளுக்கு எதிராக மட்டுமல்ல, மன நோயாளிகளை, விலங்குகளை விடக் கேவலமாக நடத்தும், ஸ்தாபனங்களுக்கு எதிராகவும், சாதி மாறி திருமணம் நடத்துதலை எதிர்க்கும், சாதிப் பஞ்சாயத்துக்களுக்கு எதிராகவும், பெண்களுக்கு சமநீதி கிடைப்பதற்கும், பால்ய விவாகத்திற்கு எதிராகவும், போராடியவர்.  அதனாலேயே, ஏராளமான எதிரிகளைச் சம்பாதித்தவர்.  .  என் சொந்த நாட்டிலேயே என் சொந்த மக்களிடமிருந்தே நான் போலீஸ் பாதுகாப்பை ஏற்கவேண்டும் என்றால், ஏதோ என்னிடம் தவறு இருக்கிறது என்று அர்த்தம். நான், இந்திய அரசியல் நிர்ணயத்தின் வரையறைக்கு உட்பட்டு, யாருக்கும் எதிராக அல்லாமல் எல்லாருக்காகவும் தான் போராடுகிறேன் என்று சொல்லி தனக்குத் தரப்பட்ட பாதுகாப்பை ஏற்றுக் கொள்ளாதவர். அந்த நன்மை மரம் கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி, பூனாவில் சாய்க்கப்பட்டது. மஹாராஷ்டிரத்தில், மந்திரவாதம் போன்ற மூடநம்பிக்கைகளுக்கு எதிராக சட்டம் கொண்டு வர தீவிரமாக முயன்றவர். ஆனால், சட்டம் கொண்டுவரும் முன் கயவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.


       சில வருடங்களுக்கு முன்பு இஸ்லாமிய மதத்தில், இப்போது பின்பற்றப்படும் பலதும தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவை என்று குரல் கொடுத்த, சேகன்னூர் மௌலவி என்ற ஒரு நன்மை மரம் வேரோடு பிடுங்கப்பட்டு எங்கு மறைக்கப்பட்ட்து என்று கூடத் தெரியவில்லை.  அவரது உடல் கூட கிடைக்கவில்லை.

        கம்யூனிசம் பேசும் பலரும் அதை செயலில் காண்பிப்பதில்லை என பயமின்றிப் பேசிய C.P. சந்திரசேகரன் எனும் நன்மை மரம் கண்ணூர் அருகே வெட்டிக் கொல்லப்பட்டது கடந்த வருடத்தில். 




        நேர்மையான காவல் துறை அதிகாரியான ஹேமந்த் கார்கரே, என்ற நன்மை மரம், மும்பையில் 2008 ல் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலின் போது, கலவரத்தின் மறைவில் சூழச்சிகரமாக வெட்டி சாய்க்கப்பட்டது.





       இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடிய வேலுப்பிள்ளைப் பிரபாகரனை, கைது செய்து விசாரணை செய்வதற்குப் பதிலாக அந்த நன்மை மரத்தை வேரோடுப் பிடுங்கியது மட்டுமல்லாமல்லாமல், கள்ளங்கபடமற்ற அவரது மகன் உட்பட, குடும்பத்தினரையே கொன்று ஒடுக்கிய சம்பவம் நடந்தது இலங்கையில். அதற்கு மௌன அனுமதி கொடுத்ததோ இலங்கை அதிபரான ராஜபக்ஷே. 



      அது போல சில வருடங்களுக்கு முன்பு, ஒடிசாவில்,  ஆஸ்திரேலிய கிறித்தவ மிஷினரியைச் சேர்ந்த கிரஹாம் ஸ்டேன்ஸ்,  Evangelical Missionary Society of Mayurbhanj உடன் இணைந்து, மலைவாழ் ஏழை ஆதிவாசிகளின் கல்விக்காகவும், லெப்ரசி நோயாளிகளுக்காகவும் உழைத்தவர். அந்த நன்மை மரத்தையும், குழந்தைகள் அடங்கிய குடும்பதோடு தீக்கிரையாக்கினர் நம் நாட்டில்.

      இப்படி, நன்மை மரங்களெல்லாம் வேரோடு சாய்கப்பட்டால், நம்நாடும் இவ்வுலகும், சமூக நன்மையாம் தாவரங்கள் வாழத் தகுதியற்ற பாலைவனமாகித்தான் விடும். அப்படியாகாமல் இருக்க அந்த நன்மை மரங்களின் நன்மை விதைகள் விதைக்கப்பட்டிருக்கும் நல்ல மனங்களில் அந்த நன்மை மரங்கள் மீண்டும் செழித்தோங்கி வளர எல்லாம் வல்ல இறைவன் அருள்வான் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம். 

19 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. நன்றி! பாராட்டிற்கும், வோட்டிற்கும்! வாருங்கள் உங்கள் feedback ற்கு waiting!!!!

      நீக்கு
  2. இப்படி, நன்மை மரங்களெல்லாம் வேரோடு சாய்கப்பட்டால், நம்நாடும் இவ்வுலகும், சமூக நன்மையாம் தாவரங்கள் வாழத் தகுதியற்ற பாலைவனமாகித்தான் விடும். அப்படியாகாமல் இருக்க அந்த நன்மை மரங்களின் நன்மை விதைகள் விதைக்கப்பட்டிருக்கும் நல்ல மனங்களின் மூலம் அந்த நன்மை மரங்கள் மீண்டும் செழித்தோங்கி வளர எல்லாம் வல்ல இறைவன் அருள்வான் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம். //

    மிகச் சரியாகச் சொன்னீர்கள்
    நன்மை மரங்கள் நமக்கானவை
    நம்மவை.அதனைப் பாதுகாக்கத் தவறினால்
    இழப்பு நமக்குத்தான்,நன்மை மரங்களுக்கில்லை
    வாழ்த்துக்களுடன்..


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக! "அதனைப் பாதுகாக்கத் தவறினால் இழப்பு நமக்குத்தான்,நன்மை மரங்களுக்கில்லை" ரொம்ப சரியான கருத்து!! உங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும், வாழ்த்திற்கும் மிக்க மிக்க நன்றி! உங்கள் கருத்து நல்ல ஊக்கம் அளிக்கிறது!!

      நீக்கு
  3. வருத்தமான செய்திகள் மனத்தைக் கன்னக்கச் செய்கிறது .எல்லா ஆத்மாவிற்க்கும் பிரார்த்தனை செய்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி! கவியாழி அவர்களே! உண்மைதான்! கருத்திற்கும் வருகைக்கும் நன்றி!!

      நீக்கு
  4. நெல்சன் மண்டேலா - மனிதருள் மாணிக்கம்...

    நரேந்திர அச்யுட் தபோல்கர் அவர்களின் தகவல்களுக்கு நன்றி...

    உங்களின் ஆதங்கம் எல்லோருக்கும் வர வேண்டும்... உணரவும் வேண்டும்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி DD அவர்களே! நீங்கள் அளிக்கும் ஊக்கத்திற்கும்!!

      துளசிதரன், கீதா

      நீக்கு
  5. வணக்கம்
    சிறப்பாக சொன்னிர்கள்..ஒவ்வொரு தகவலும் படிக்கும் போது மனதுக்கு ஒரு உணர்வு பிறக்கிறது.. கடசில் அருமையாக முடித்துள்ளிர்கள்...வாழ்த்துக்கள்..

    எனது புதிய வலைப்பூவின் ஊடாக கருத்து எழுதுகிறேன்... உங்களை அழைக்கிறது..http://tamilkkavitaikalcom.blogspot.com

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும், கருத்திற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி! நண்பரே!

      உங்கள் புதிய வலைப்பூவை எங்கள் வலைப்பூவில் இணைத்து தொடர ஆரம்பித்து விட்டோமே! தாங்களும் அதிலிருந்துதானே அழகிய முருகனுடன் எங்களைத் தொடர அழைத்திருந்தீர்கள்!! உங்கள் புதிய வலைப்பூவிற்கு வாழ்த்துக்கள்!!

      துளசிதரன், கீதா

      நீக்கு
    2. இங்கே பொது நலத்திற்காக வளரும் நன்மை மரங்களை ,சமூக விரோதிகள் தங்களின் சுய நலத்திற்காக வெட்டி வீழ்த்துவது எந்த வகையிலும் நியாயமில்லை .உங்கள் தொகுப்பு பாராட்டுக்குரியது !
      த.ம +1

      நீக்கு
  6. இங்கே பொது நலத்திற்காக வளரும் நன்மை மரங்களை ,சமூக விரோதிகள் தங்களின் சுய நலத்திற்காக வெட்டி வீழ்த்துவது எந்த வகையிலும் நியாயமில்லை .உங்கள் தொகுப்பு பாராட்டுக்குரியது !
    த.ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றாகச் சொன்னீர்கள் பகவான்ஜி!! பாராட்டிற்கும், கருத்திற்கும், த.ம. + 1 ற்கும் சேர்த்து நன்றி! நன்றி!!

      நீக்கு
  7. சமீபத்தில் படித்த வாசகம் நினைவுக்கு வருகின்றது.

    மூன்று மதங்களில் உள்ள மதத்தலைவர்கள் மட்டும் எண்ணங்களில் செயல்களில் மிகவும் ஒற்றுமையாக இருக்கின்றார்கள். பின்பற்றும் மனிதர்கள் தான் பாவமாகிப் போகின்றார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! தலைவர்களிடம் பிரச்சனை இல்லை...பின்பற்றுபவர்கள்தான் மனிதர்கள்தான்...உண்மைதான் நண்பரே!

      நீக்கு
    2. ஆம்! தலைவர்களிடம் பிரச்சனை இல்லை...பின்பற்றுபவர்கள்தான் மனிதர்கள்தான்...உண்மைதான் நண்பரே!

      நீக்கு
  8. இப்படி தன்னலமற்று மக்களுக்காக உழைப்பவர்கள் சிலரே அவர்களையும் வேரோடு வீழ்த்தினால் என்னாவது? இதற்கு தீர்வென்று வழிவகைகள் சொன்னாலும் சிறப்பாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழிவகைகள் தீர்வென்று இருந்தாலும் அவற்றிற்கும் அவற்றைச் செயல்படுத்த விடாமல் தடைகள் இருக்கத்தானே செய்கின்றன

      மிக்க நன்றி சகோதரி! தங்களின் கருத்திற்கு,...

      நீக்கு