தலக்காடு- 1, 2, 3, 4, 5 , 6 , 7 , 8
சென்ற பதிவில் வைத்தியேஸ்வரா கோயிலினுள் சென்றதைத் தொடங்கியிருந்தேன் இல்லையா. அப்போதே 4 மணி ஆகியிருந்தது. ஒரு நாள் பயணம் என்றால் நம்மவருக்கு எங்கு சென்றாலும் அதிகபட்சம் 7 மணிக்குள் வீட்டிற்கு வந்துவிட வேண்டும். அப்போதே மணி 4. கோவிலை பார்த்துவிட்டு வண்டி நிறுத்திய இடத்திற்குச் சென்று காரில் ஏறி பயணத்தைத் தொடங்கினால் பெங்களூருக்குள் நுழைவதற்கே 2 1/2 மணி நேரம் ஆகிவிடும். அதன் பின் பெங்களூர் போக்குவரத்தை சமாளித்து வீட்டிற்குச் செல்ல மணி 8.30 அல்லது சற்றுக் கூடுதலும் ஆகிவிடும். அப்பாவை வேறு அழைத்துக் கொண்டு போயிருந்தோம்.
கோயிலுக்குள் நுழையும் போதே நெல்லை என்னிடம், "லேட்டாகிறதே உங்க ஹஸ்பண்டுக்குக் கஷ்டமாகிடுமோ" என்றார்.
"இவ்வளவு தூரம் வந்தாச்சு. பார்த்துக் கொள்ளலாம். கோவிலுக்குள் போய் படங்களேனும் எடுத்துடலாம். மீண்டும் எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்குமான்னு தெரியலை." அப்படி நெல்லையிடம் சொல்லிக் கொண்டே கோவிலுக்குள் நுழைந்தாலும், உள்ளுக்குள் ஒரு சின்ன கலக்கம் இருக்கத்தான் செய்தது.
அடுத்தாற் போல் கோவிலைச் சுற்றி இருக்கும் சிற்பங்கள் மற்றும் வேலைப்பாடுகளைப் பார்த்துக் கொண்டே சுற்றி வருவோம் என்று சென்ற பதிவில் முடித்திருந்தேன் இல்லையா. இறைவன் இருக்கும் கர்பகிரஹம், அர்த்த மண்டபத்தை இணைக்கும் பெரிய வெளி மண்டபத்திற்குள் நுழையும் முன்னர் துவாரபாலகர் மற்றும் தூண்கள் படங்களைப் பகிர்ந்திருந்தேன்.
உள்ளே நுழைந்ததும் வைத்தியேஸ்வரர் பெரிய லிங்க வடிவில் தரிசனம் தருகிறார். முருகன், பிள்ளையார் எல்லோரும் வீற்றிருக்கிறார்கள். ஆனால் படங்கள் எடுக்க அனுமதி இல்லை.
மண்டபத்திலிருந்து வெளியில் வந்ததும் சுற்றி வருவதற்கு வலப்பக்கம் திரும்பும் இடத்தில் காணொளி எடுக்கத் தொடங்கினேன். கொஞ்சம் மட்டுமே காணொளியில் இருக்கும். முழு காணொளி எடுக்க முடியவில்லை.
நம்ம நெல்லை ஒற்றைக் கையில் மொபைலை வைத்துக் கொண்டு குறுக்குவாட்டிலும்
நெடுக்குவாட்டிலும் பிடித்துக் கொண்டு மிக மிக வேகமாகப் படம் எடுத்துக் கொண்டே
சென்றார். அவர் திறமை எனக்கு வியப்பு!
நான் படம் எடுக்கவில்லை என்றால் நடந்திருக்கலாம் அந்த வேகத்திற்கு. ஆனால்
படம் எடுக்காம முடியாதே! அதுவும் இவ்வளவு அழகிய கோயிலை, உங்களுக்கும் காட்ட
வேண்டுமல்லவா! அப்புறம் சான்ஸ் கிடைக்குமா என்று தெரியாது. படங்களேனும் பார்த்துக்
கொள்ளலாமே! ஆனால், நான் மெதுவாகச் சென்றால் அப்புறம் என்னைத் தேடுவார்கள். வேகமாகச் சென்றதால் காணொளி எடுக்காமல் படங்கள் மட்டுமே அதுவும் எனக்கு இரண்டு
கைகளிலும் பிடித்துக் கொண்டுதான் எடுக்க முடியும். இருந்த நேரத்தில் முடிந்தவற்றை
எடுத்துக் கொண்டு வந்தாச்சு.
இனி மேலே உள்ள காணொளியைத் தொடர்ந்து இருக்கும் சிற்பங்களின் படங்கள்.
இந்தச் சிற்பம் - அபஸ்மரா (முயலகன்) என்பது மனிதனின் அறியாமை, அகந்தையை குறிப்பதாக அந்த அசுரன் மீது, நடராஜப் பெருமான் தனது வலது காலை வைத்து மிதித்து, அதாவது மனிதர்கள் நம் அறியாமையை அடக்கி, ஞானத்தை நிலைநிறுத்துவதாக அவரது cosmic dance (சிவ நர்த்தனம்) தூணின் மேலே நந்தி, பிள்ளையார்
தூணின் மேலே புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணர் அருகில் உள்ளவை சிதைந்திருப்பதால் சரியாகத் தெரியவில்லை. அவரின் கீழ் நரசிம்மர். கீழே விஷ்ணு, பூதேவி, ஸ்ரீதேவி?
அடுத்த பதிவில் கோவிலின் பின்பக்கம் பார்த்தவற்றைப் படங்களுடன் பார்ப்போம்.
ஒரு சிறிய தகவல் - தலக்காடு பஞ்சலிங்கேஸ்வரர் கோவில்கள் என்று பார்த்துவருகிறோம் இல்லையா? அவை பஞ்சபூதங்களைக் குறிக்கின்றனவாம். பாதாளீஸ்வரா (நிலம்), மருலீஸ்வரா (நீர்), அர்க்கேஸ்வரா (நெருப்பு) (இக்கோவில் நாங்கள் செல்ல முடியவில்லை), வைத்யேஸ்வரா (வானம்/ஆகாசம்) இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் கோயில், மல்லிகார்ஜ்ஜுனா (வாயு) (இக்கோயிலும் நாங்கள் செல்ல முடியவில்லை).
அடுத்த பதிவில் தொடர்வோம்...
------கீதா





















இனிய காலை வணக்கம்....
பதிலளிநீக்குசிற்பங்களின் படங்கள் - பிரமிப்பு......
ஒவ்வொரு இடமாக நின்று நிதானித்து பார்த்து வர அதிகம் நேரம் தேவை தான். பல சமயங்களில் இப்படி நேரம் இல்லாமல் போய் விடுகிறது.
தொடர்கிறேன்.
நன்றி வெங்கட்ஜி!
நீக்குஆமாம் சில சமயங்களில் நேரம் இல்லாமல் போய்விடுகிறது. அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பார்க்க வேண்டும் எனும் போது.
கீதா
உங்களவர் போலதான் நானும். எங்காவது வெளியில் சென்றால் எனக்கும் ஒன்பது மணிக்குள்ளாவது வீட்டுக்கு வந்துவிட வேண்டும்.
பதிலளிநீக்குஅது நல்லது ஸ்ரீராம். நம் வீட்டிலும் மூவருமே அப்படித்தான். ஆனால் போகும் இடங்களில் ரசனையானவற்றை கொஞ்சம் ஆழ்ந்து ரசிப்பேன்...கொஞ்சம் படங்கள் எடுக்க வேண்டும் என்றால் நேரம் எடுத்துக் கொள்வேன். நம்மவர் படங்கள் எடுக்க மாட்டார். எல்லாம் டக் டக்குனு பார்த்துட்டு மின்னல் வேகத்தில் சென்று காத்திருக்க வேண்டிய இடத்தில் காத்திருப்பார். ஆனால் நானும் மகனும் கொஞ்சம் ஆழ்ந்து ரசிப்பவர்கள். எனவே கிளம்பும் போதே சொல்லிக் கொண்டு கிளம்புவோம்...அவசரப்படுத்தக் கூடாது ஆனால் நேரத்திற்குள் வந்துவிடலாம்னு.
நீக்குநான் அப்படி நேரம் கணக்கிட்டுத்தன கிளம்புவோம் அதாவது எனக்கு எடுக்கும் நேரத்தையும் கணக்கிட்டு. அன்று கொஞ்சம் எக்ஸ்ட்ரா இடங்கள் சேர்ந்ததால் தாமதமாகிவிட்டது.
நன்றி ஸ்ரீராம்.
கீதா
// உள்ளுக்குள் ஒரு சின்ன கலக்கம் இருக்கத்தான் செய்தது. //
பதிலளிநீக்குஎன்ன ஒரு பயம்! நானும் அப்படி கோபப்படுவேனோ என்று நினைத்துப் பார்க்கிறேன். பல வருஷங்களுக்கு முன், நான் வீட்டில் இருந்து பாஸ் வெளியில் அல்லது வெளியூர் சென்று குறித்த நாளில், ஓரளவுக்காவது குறித்த நேரத்துக்குள் வராத நேரங்களில் சில நேரம் கடுமையாக நடந்து கொண்டிருக்கிறேன்! இப்போதெல்லாம் அப்படி கிடையாது!
ஹாஹாஹா.....பயம் கொஞ்சம் உண்டு. ஆனால் அன்று சமாளித்துவிடலாம் என்ற ஒரு சின்ன நப்பாசையும் ....இருந்தாலும் சொல்லிக் காட்டிக் கொண்டிருந்தது வேறு விஷயம். அதனால் கிளம்பும் போதே எனக்கான நேரத்தைச் சொல்லிவிடுகிறேன். கோபித்துக் கொள்ளக் கூடாது என்று சொல்லி...ஹிஹிஹி...
நீக்கு// இப்போதெல்லாம் அப்படி கிடையாது!//
குட் பாய்!!!
கீதா
ஒற்றைக்கையில் மொபைலில் படம் எடுப்பது எனக்கும் வராத கலை. செல்பியே சரியாக எடுக்க மாட்டேன்.
பதிலளிநீக்குஹைஃபைவ்! எனக்கும் செல்ஃபி எல்லாம் எடுக்கவே வராது எடுப்பதும் இல்லை!!!
நீக்குநன்றி ஸ்ரீராம்.....என் கட்சிக்கு ஒருவர்!!
கீதா
படங்கள் யாவும் சிறப்பு. அருமையாக எடுத்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குநன்றி நன்றி ஸ்ரீராம். கேமரா பேட்டரி இருந்திருந்தால் இன்னும் நன்றாக எடுத்திருக்கலாமோ என்று தோன்றியது.
நீக்குஇப்ப எக்ஸட்ரா ஒரு பேட்டரி வாங்கி வைத்துக் கொண்டுவிட்டேன். சமீபத்தில் நந்தி ஹில்ஸ் போனப்ப எடுக்க முடிந்தது பெரும்பாலும் கேமரா தான். பனி மூட்டப் படங்கள், மொபைலிலும் எடுத்தேன் தான்.
அது பதிவு வரும்.
கீதா
சிற்பங்கள் உள்ள இடங்களை முடிந்தவரை நன்றாக வைத்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. நடைச் சுற்றில் கோவிலின் மேற்கூரை பழமையைக் காட்டுகிறது.
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம் நல்லா வைச்சிருக்காங்க. சிதைந்திருப்பது எதனால் என்பதால் இவை அனைத்தும் மணலுக்கு அடியிலிருந்து அகழ்ந்து எடுத்தவை என்பதால். பல வருடங்களுக்கு முன்னால், கோயிலின் கோபுரம் கொஞ்சம் மட்டும் மணலுக்கு வெளியில் தெரியுமாம்...இப்படி தி ஜா தன் தலக்காடு பயணக்கட்டுரையில் சொல்லியிருக்கிறார். அதை ஜெ மோ தன் தளத்தில் சொல்லியிருந்தார்.
நீக்குநன்றி ஸ்ரீராம்
கீதா