திங்கள், 5 டிசம்பர், 2022

இந்திய கடற்படையின் கிழக்குக் கரையோரத் தலைமையக நகரத்தில் பயணம் - 9 - அரக்கு பள்ளத்தாக்கு


விசாகப்பட்டினத்தில் மூன்று நாட்கள் சுற்றுப் பயணத்தில் இரண்டாவது நாளில் மாலையில் சென்ற ருஷிகொண்டா கடற்கரை பற்றி சென்ற பதிவில் சொல்லி படங்களும் பகிர்ந்திருந்தேன் இல்லையா.

இப்போது கடைசி நாளான மூன்றாவது நாள். ஒரே நாள் பயணமாக, கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரில், விசாகப்பட்டினத்திலிருந்து ஏகதேசம் 116-120 கிமீ தொலைவில் ஒடிஸா மாநில எல்லைக்கு அருகில் இருக்கும் அரக்கு பள்ளத்தாக்கு சென்று பார்த்துவிட்டு அங்கிருக்கும் போரா குகைகளையும் பார்த்துவிட்டு வரலாம் என்று திட்டம்.

பயண ஆர்வலர்களின் கவனத்திற்கு. அரக்கு பள்ளத்தாக்கு மற்றும் போரா குகைகளை ஒரே நாளில் பார்த்துவிடலாம் என்றாலும் அரக்கப்பரக்க பார்க்காமல் அந்தப் பள்ளத்தாகின் அழகையும், காலநிலையையும் அனுபவிக்க வேண்டும் என்றால் இரண்டு முழு நாட்களேனும் தங்கி நிதானமாகச் சுற்றிப் பார்த்து வரலாம்.

முந்தைய தினம், ருஷிகொண்டா கடற்கரையிலிருந்து கிளம்பி பேருந்தில் தங்குமிடம் வந்து அங்கு இருந்த உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு அறைக்கு 8 மணி அளவில் வந்து சேர்ந்ததும் மறுநாள் காலையில் 6.45 ற்கு (7 மணிக்குத்தான் வண்டி கிளம்பியது) விசாகப்பட்டினத்திலிருந்து கிரண்டூல் (சத்திஸ்கர் மாநிலம்) செல்லும் - Vskp Krdl Passenger – 58501 - பாசஞ்சர் வண்டியில் செல்லலாம் என்று திட்டமிட்டோம். நான் ஏற்கனவே பயணத் திட்டம் பற்றிக் குறித்து வைத்திருந்தேன். அரக்கு பள்ளத்தாக்கிற்கும் போரா குகைகளுக்கும் எப்படி எல்லாம் செல்லலாம் என்று விவரங்கள் எடுத்து வைத்திருந்தேன்.

இந்த வழித்தடத்தின் பெயர் கொத்தவலசா கிரண்டூல் லைன் – கே கே லைன்.  இந்தச் சுட்டியில் இதைப் பற்றி வாசிக்கலாம்.

இந்த லைன் பற்றி வெங்கட்ஜியும் அவரது தளத்தில் எழுதியிருந்த நினைவு. எனவே நான் இங்கு தவிர்க்கிறேன்.

ஆந்திரா அரசு சுற்றுலாத் துறையின் தளம் (சுட்டி) வழியாகவும் பதிவு (சுட்டி) செய்து கொள்ளலாம். இதே ரயிலில் தான் அழைத்துச் செல்வார்கள். சாப்பாடு தருவார்கள். இப்போது சாலை வழி சுற்றுலா சேவை மட்டுமே இருப்பதாகத் தெரிகிறது. 

சாலை வழியும் செல்லலாம். அடர்ந்த காடுகள் உள்ள மலைப்பாதை. போகும் போது ரயிலிலும் வரும் போது சாலை வழியிலும் வரலாம் என்றாலும் வரும் போது வெளிச்சம் இருக்காதே. அல்லது வரும் போது ரயில் வழி என்றாலும் காட்சிகள் பார்க்க முடியாதே. ஒரே நாள் பயணம் என்றால்.

அரக்கு ரயில் நிலையத்தில் இறங்கியதும் அவர்களின் பேருந்தில் அங்கிருக்கும் இடங்களைச் சுற்றிக் காட்டிவிட்டு, போரா குகைகளுக்கு அதே பேருந்தில் கூட்டிக் கொண்டு வந்து குகைகள் பார்த்ததும் போரா குகைகள் ரயில் நிலையத்தில் விசாகப்பட்டினம் வருவதற்கு கிரண்டூலில் இருந்து விசாகப்பட்டினம் வரும் பாசஞ்சர் ரயில் மாலையில் வரும் என்பதால் பயணம் செய்ய விட்டுவிடுவார்கள். இது ஒரு நாள் திட்டத்திற்கு மிகவும் சௌகரியம்.

ஆனால் நம்ம குழுவுல குழம்பி, அதைத் தவிர்த்து நாங்களே எங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக் கொண்டதால், ரயில் நிலையம் சென்று சீட்டு வாங்கிக் கொள்ளலாம், தங்கியிருந்த இடத்தின் அருகில் ஒரு கிமீ தொலைவில்தானே ரயில் நிலையம் என்பதால் காலை 4 மணிக்கு எழுந்து குளித்துத் தயாராக வேண்டும் என்று சொல்லிக் கொண்டு தூங்கிவிட்டோம்.

திட்டமிட்டபடி, மறுநாள் காலை எழுந்து தயாராகி ரயில் நிலையத்திற்கு நடந்தே சென்று 5.30க்குள் அடைந்துவிட்டோம். பயணச் சீட்டும் எடுத்துக் கொண்டு பாசஞ்சர் ரயில் என்பதால் ரயில் நிற்கும் ப்ளாட்ஃபார்ம் சரியாகத் தெரியாத நிலையில் ஒரு குழப்பம் நீடித்து பின்னர் தகவல் மையத்தை அணுகி விசாரித்து (5 அல்லது 6 வது நடைமேடை என்று நினைவு) தெரிந்து கொண்டு நடைமேடைக்குச் செல்ல நேரம் பார்க்க இன்னும் 20 நிமிடங்களே இருந்தது

எப்படியோ வேகமாகச் சென்று ரயிலில் ஏறி இடம் பிடிக்க வேண்டுமே பாசஞ்சர் ரயில் என்பதால். நல்லகாலம் ஒரு பெட்டியில் இடப்பக்கம் இரு புறமுமாக அமரும் நீள இருக்கைகள் காலியாக இருக்க அமர்ந்தாச்சுநான் வழக்கம் போல் ஜன்னல் அருகில்.

பாசஞ்சர் ரயில் என்பதால் எல்லா சிறு ஊர்களிலும் நின்று நின்று செல்லும். அது ஒரு தனி அனுபவம். எனக்கு மிகவும் பிடிக்கும். மாரிப்பாலேம், சிம்மாச்சலம், பெண்டுர்ட்டி, கொட்டவலசா, மல்லிவிடு, ஷ்ருங்கவர்புக்தா, சிவலிங்கபுரம், டைடா, போரா குஹாலு, கரக்கவலசா, ஷிமிலியகுடா, அரக்கு (நாங்கள் இறங்கும்  இடம்) இப்படியே சென்று கிரண்டலுக்கு இரவு 8.45ற்குச் சென்று சேரும். 

ரயில் கிளம்பிச் செல்லத் தொடங்கி மலைப்பகுதி வரத் தொடங்கியதும் அப்போதுதான் தெரிந்தது போகும் திசையின் வலப்பக்கம் (கிழக்குப் பக்கம்) தான் மலைகளின் பள்ளத்தாக்கும், சூரியன் உதயம், ஆறு, மலைச்சரிவுகள் என்று அருமையான காட்சிகள் என்று தெரிந்ததும் அடடா வாய்ப்பு போச்சே என்று வருத்தம். இனி அடுத்த முறை இப்படி ஒரு பயணம் அமைந்தால் கண்டிப்பாக வலப்பக்கம்தான் அதுவும் ஜன்னல் இருக்கையில்தான் அமர வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்.

போகும் திசையின் வலப்பக்கம் (கிழக்குப் பக்கம்தான் 

நம்மை கதவருகில் நின்று ஃபோட்டோ எடுக்க விடமாட்டார்களே!

பெட்டி முழுவதும் கூட்டம். வலப்பக்கம் ஒரு பெரிய குடும்பம், குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் மாணவிகள் கூட்டம். வலப்பக்க எல்லா ஜன்னல்களும் ஆக்ரமிக்கப்பட்டிருந்தன. ஒரு ஜன்னல் வழியாக இரண்டு, மூன்று பேர் போட்டி போட்டுக் கொண்டு எட்டிப் பார்த்து மொபைலில் ஃபோஒட்டோக்கள் எடுத்துக் கொண்டிருந்தனர்.

வழியில் 58 டனல்கள், 84 பாலங்கள். அத்தனை அழகு ஒவ்வொரு பாலமும். ஒவ்வொரு டனலிலும் ரயில் நுழையும் போதும் குழந்தைகளும் இளசுகளும் உற்சாகத்தில் கூவிச் சத்தமிட்டுக் கொண்டு, மொபைல் டார்ச்சை அடித்துக் கொண்டு என்று ஒரே கும்மாளம். அந்த உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொண்டு நாமும் சிறு குழந்தைகள் ஆவோம். வழி நெடுக ஏதேனும் கொரித்துக் கொண்டும் வந்தார்கள். பெரிய குடும்பம் சாப்பாடு மூட்டையும் கொண்டு வந்திருந்தார்கள்.

டனல்கள்

சில கல்லூரி மாணவ மாணவியரிடம் நட்புடன் பேசியதில் அவர்கள் எஞ்சினியரிங்க் முதல் வருடம் என்று தெரிந்த்து. இடையிடையே தெரிந்த இடைவெளிகளில் ஜன்னல் வழி நான் பார்த்து பார்த்துக் கொண்டிருந்தேன் படங்கள் எடுக்க முடியவில்லையே என்று. அப்படியும் இடையில் கிடைத்த ஒரு இடை வெளியில் சட்டென்று 3, 4 க்ளிக்ஸ் மட்டுமே எடுக்க முடிந்தது. அதைப் பகிர்ந்திருக்கிறேன் இங்கு.

பகுதி தூரம் கடந்த பின்னர் இப்படியான காட்சிகள். அதாவது அரக்கு ரயில் நிலையத்தை  அடைவதற்கு 1 1/2 மணி நேரம் முன்

நிறைய கிராமங்கள். நான் அமர்ந்திருந்த ஜன்னல் பக்கம் காடுகள், ஆங்காங்கே வீடுகள், மலைகள். எடுத்த படங்களில் சரியாக வந்தவற்றை மட்டுமே இங்கு பகிர்ந்திருக்கிறேன்.  (பிரச்சனைகள் நிறைந்த கேமரா ஆச்சே!).  

விசாகப்பட்டினத்திலிருந்து 6.45 ற்குக் கிளம்பிய வண்டி அரக்கு ரயில் நிலையத்திற்கு 10.55 ற்குச் சென்று சேர வேண்டும். 4 மணி நேரப் பயணம் எனலாம். ஆனால் ரயில் 40 நிமிடங்கள் தாமதம்.

அரக்கு ரயில் நிலையம் வரும் முன் போரா குகைகள் ரயில் நிலையம் வரும். அங்கும் இறங்கிக் கொள்ளலாம். ரயில் பாதையின் கீழேதான் போரா குகைகள்! ஆனால் முகப்பிற்குச் செல்ல, ரயில் நிலையத்திலிருந்து 1/2 கிமீ தூரம் பெரிய இறக்கத்தில் இறங்கிச் செல்ல வேண்டும். குகைகளைப் பார்த்த பின் அங்கிருந்து அரக்கு ஊருக்குச் செல்லலாம்சாலை வழி 1 ¼ - 1 ½  மணி நேரம் ஆகும்ஏகதேசம் 38 கிமீ தூரம்.

போரா குகைகளுக்கும் அரக்கு ஊருக்கும் ரயில் மார்கத்தில் 32 கிமீ தூரம்.  இடையில் 2, 3 நிறுத்தங்கள். கிட்டத்தட்ட 1 மணி நேரம் ஆகும். அரக்கு நிலையத்தில் இறங்கினால் அங்கு அரக்கு ஊருக்குள் சென்று அங்கிருக்கும் பத்மபுரம் பூங்கா, பழங்குடி மக்கள் அருங்காட்சியகம் எல்லாம் கண்டுவிட்டு, சாலை வழியாக வரும் போது பள்ளத்தாக்கின் கலிகொண்டலா வியூ பாயின்ட், காஃபி தோட்டம், சப்பாரா அருவி போன்றவற்றைப் பார்ர்த்துவிட்டு போரா குகைகள் இருக்கும் இடத்தை அடைந்து அதைப் பார்த்துவிட்டு, போரா குகைகளைப் பார்க்க 1 மணி நேரத்திலிருந்து 1 ¼ மணி நேரத்திற்குள் முடித்துவிடலாம். அங்கிருந்து மாலை 4.30 - 4.45 மணியளவில் வரும் Vskp Krdl Vskp Passenger – 58502 - பாசஞ்சர் வண்டியில் விசாகப்பட்டினத்திற்கு இரவு 8.45 மணியளவில் வந்து சேர்ந்துவிடலாம்.

குழுவில் போரா குகைகள் நிறுத்தத்தில் இறங்கலாமா அல்லது அரக்கு  நிறுத்தத்தில் இறங்கலாமா என்று ஆலோசித்ததில் எனக்கு போரா குகைகள் நிறுத்தத்தில் இறங்கினால் அரக்கு வரை செல்லும் நேரத்தை மிச்சப்படுத்தலாமோ, அந்த நேரத்தில் போரா குகைகளைக் கண்டுவிட்டு அரக்கு ஊருக்குச் சாலை வழி பயணித்து அரக்கில் இருப்பவற்றைப் பார்த்துவிட்டு அரக்கு ரயில் நிலையத்திலிருந்து மாலை ரயில் ஏறிவிடலாம் என்று யோசனை தோன்றினாலும், போரா குகைகள் அருகில் சாப்பிட உணவகம் ஏதேனும் இருக்குமா என்ற சந்தேகம் வந்ததால், அரக்கு ரயில் நிலையத்திலேயே இறங்கிக் கொண்டோம்.

நாமாகச் செல்வதென்றால் சரியான விவரங்கள் திட்டமிடல் இருந்தால் நன்றாகவே ஒரே நாளில் முடிக்கலாம்தான். ரயிலில் என்றால் சரியான நேரத்திற்குச் சென்று சேர வேண்டும்.

இப்பதிவில்அரக்கு பள்ளத்தாக்கிற்குப் போகும் வழியில் ரயிலில் இருந்து எடுத்த பல படங்களில் சில படங்கள் மட்டுமே. 

அடுத்த பதிவில் ஊருக்குள் பார்த்த இடங்களைப் பற்றிச் சொல்கிறேன்.


------கீதா



 

26 கருத்துகள்:

  1. படங்கள் அழகு. ஆனால் நீங்கள் விடுகின்ற இடைவெளியில், இது எந்த இடம், எப்போ பயணம் போனாங்க?, கல்லூரி விழாவிற்கு அப்புறம் சென்ற இடமா என்றெல்லாம் சந்தேகம் வந்துவிடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...   அதேதான் என் கருத்தும் கீதா அக்கா.!!!

      நீக்கு
    2. ஹாஹாஹா நெல்லை, கருத்திற்கு நன்றி....

      கல்லூரி விழாவா? அது துளசியின் பதிவு.....என் பதிவல்ல. நான் விசாகப்பட்டினம்தானே எழுதிட்டுருக்கேன்....நெல்லை நீங்க எல்லாரும் சொல்வதைப் பார்த்தால் நான் தான் துளசியின் பதிவும், கருத்தும் எழுதுவது போல சொல்வது போல இருக்கு...

      நானே வலைப்பக்கத்திலிருந்து விலகிடலாமான்னு நினைத்துக் கொண்டிருக்கிறேன்....கூடியவிரைவில்!!!!!! விலகிவிடுவேன்.....ஆனால் துளசி நீங்க கேட்டீங்கன்னு ரப்பர் பதிவு வேறு போடுவதாக இருக்கிறார். அதைப் போட நான் தானே இதில் படங்கள் எல்லாம் போட வேண்டும்...பதிவும் டைப்பி...

      ஆனால் நான் இனி எழுதுவதாக இல்லை...பெரும்பாலும் விசாகப்பட்டினத்தோடு அல்லது இப்பதிவோடு கூட நிறுத்திக் கொண்டுவிடுவேன் என்று நினைக்கிறேன்.

      கீதா

      நீக்கு
    3. ஸ்ரீராம் கீதாக்கானு உங்க கருத்து நெல்லை கருத்தின் கீழ் வந்திருக்கிறதே!!!! எது அதே அதே!!!! ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  2. அரக்குப் பள்ளத்தாக்கிற்கு எப்போ போவீங்களோ..

    அடுத்த பதிவு எப்போது வருமோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா.....ரயில் தாமதம்....இப்பத்தானே நின்றிருக்கிறது. உள்ளே சென்று பார்க்க வேண்டுமே....இதை மட்டுமேனும் போட்டு முடிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.... ஆனால் தெரியவில்லை நெல்லை.

      கீதா

      நீக்கு
  3. அரக்குப் பள்ளத்தாக்கு பற்றி வெங்கட் எழுதி இருந்தவை நினைவில் வந்தன. உங்கள் அனுபவங்களையும் சொல்லுங்கள். பார்க்கலாம். இங்கெல்லாம் இப்படியான இடங்கள் இருப்பதே வெங்கட் எழுதினப்போத் தான் முதல் முதலாகத் தெரிந்து கொண்டேன். இப்போ நீங்க திட்டமிட்டுப் பயணித்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அவர் சென்ற சமயத்தில்தான் அதே வருடத்தில்தான் நாங்களும் சென்றிருந்திருக்கிறோம் என்று நினைக்கிறேன் கீதாக்கா. ஆனால் எனக்கு உடனே எழுத முடியவில்லை. படங்கள் எல்லாம் பழுதான ஹார்ட் டிஸ்க்கில் சிக்கி கணினி போய், வீட்டுப் பிரச்சனைகள் இப்படி பல...

      ஆமாம் நான் அப்போது நெட்டில் பார்த்து திட்டமிட்டுத்தான் சென்றோம் கீதாக்கா.

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  4. படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.
    விவரிப்பு அழகு

    பதிலளிநீக்கு
  5. உற்சாகமான பதிவு.. ரயிலில் பயணம் செய்கையில் இப்படியான இடங்கள் சொர்க்கம்..

    அழகான படங்கள்
    அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் துரை அண்ணா நிஜமாகவே ரொம்ப ரசித்த பயணம்.

      //அழகான படங்கள்
      அருமை..//

      மிக்க நன்றி துரை அண்ணா

      கீதா

      நீக்கு
  6. நிறைய இடைவெளி விட்டு பதிவிடுவதால் பதிவுகளின் தொடர்ச்சி மறந்து போய் விடுகிறது. வெங்கட்ஜி அவரது தளத்தில் அரக்கு பள்ளத்தாக்கு பற்றிய பதிவு வெளியிட்டிருந்தார்.

    படங்கள் சரியான முறையில் எடுக்கப்பட்டுள்ளன. middle shot தான் landscape காட்சிகளுக்கு பொருந்தும். அம்முறையில் சிறப்பாக வந்திருக்கின்றன.

    ஏதாவது கதை எழுதி செவ்வாய் அன்று எ பி யில் வெளியிடுங்கள்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய இடைவெளி விட்டு பதிவிடுவதால் பதிவுகளின் தொடர்ச்சி மறந்து போய் விடுகிறது.//

      ஹாஹாஹா நீங்களுமா ஜெகே அண்ணா. இடம் தானே முக்கியம். இது போன்றவை தொடராக இல்லாமலும் வாசிக்கலாமே. ஆமாம் வெங்கட்ஜி எழுதியிருந்தார்.

      மிட் ஷாட் பொருந்தும்தான். ஆனால் நான் ஓடும் ரயிலில் இருந்து எடுத்ததால் நதி, அதன் அருகில் மாடுகள் ஃபோட்டோ லாங்க் ஷாட்....மிக்க நன்றி அண்ணா படங்க்ளைச் சொன்னதற்கு

      //ஏதாவது கதை எழுதி செவ்வாய் அன்று எ பி யில் வெளியிடுங்கள்.//

      நிறைய முடிக்கப்படமால் இருக்கின்றன...மனம் ஒத்துழைக்கமாட்டேங்குது அண்ணா.

      எனக்குப் பொறுப்புகள்....வீட்டு வேலைகள்... இடையில்தானே இவை எல்லாம் அதனால் இடைவெளி விட்டுத்தான் எழுத முடிகிறது.

      மிக்க நன்றி ஜெ கே அண்ணா

      கீதா

      கீதா

      நீக்கு
  7. அந்தப் பக்கம் எல்லாவற்றையும் எல்லோரும் பார்த்தும், போட்டோ எடுத்துக்கொண்டும் வர, நமக்கு இந்த பக்கம் வாய்த்தது குட்டிசுவரும் மண்மலைமேடும்தான் போல!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா ஆமாம் ஸ்ரீராம். இதிலும் பாருங்க இந்தப் பக்கம் பாலங்கள் எல்லாம் எடுத்த படங்கள் நம்ம கேமராதான் டப்பாவாச்சே சரியா வரலை...என்ன சொல்ல?!!

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  8. அரக்கு ரயில் நிலையம் என்கிறீர்களே...   அக்னி வெயிலில் உருகாமல் இருக்குமா?  (ஹிஹிஹிஹி)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன்...நானும் அரக்கு என்பதை நினைத்து அரக்கு பள்ளத்தாக்கு என்பதற்கான பெயர்க்காரணத்தைத் தேடினேன். எங்கும் கிடைக்கவில்லை, ஸ்ரீராம்

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  9. பயண அனுபவங்கள் அருமை... வட மாநிலங்களிலுள்ள சுற்றுலா தலங்கள் பலவற்றை பற்றி தெரிந்துகொள்ள முடிகிறது. எழில் கொஞ்சும் கடைசி 3 படங்கள் மிக மிக அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நாஞ்சில் சிவா சகோ. ஆமாம் இது அருமையான இடம்...அடுத்த பதிவுகள் போட முடியாத நிலை. விரைவில் போட வேண்டும்...

      கீதா

      நீக்கு
  10. //வழியில் 58 டனல்கள், 84 பாலங்கள். அத்தனை அழகு ஒவ்வொரு பாலமும். ஒவ்வொரு டனலிலும் ரயில் நுழையும் போதும் குழந்தைகளும் இளசுகளும் உற்சாகத்தில் கூவிச் சத்தமிட்டுக் கொண்டு, மொபைல் டார்ச்சை அடித்துக் கொண்டு என்று ஒரே கும்மாளம். அந்த உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொண்டு நாமும் சிறு குழந்தைகள் ஆவோம். வழி நெடுக ஏதேனும் கொரித்துக் கொண்டும் வந்தார்கள். பெரிய குடும்பம் சாப்பாடு மூட்டையும் கொண்டு வந்திருந்தார்கள்.//

    ரயில் பயணம் இனிமையானது. இளம் வயது ரசனை மிக அருமையானது.
    உற்சாகமும், துள்ளலும் நம்மை தொற்றிக் கொள்வது உண்மை. நாமும் இப்படி மகிழ்ந்தவர்கள் தானே!

    ,மிக அருமையான பதிவு. படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதிக்கா பயணமும் இளையவர்கள் என்ன நாமும் தான் ரசிப்போமே...!!! நம்மையும் தொற்றிக் கொள்ளும் ஆமாம்....

      மிக்க நன்றி கோமதிக்கா பதிவை ரசித்தமைக்கு

      கீதா

      நீக்கு