சனி, 1 ஆகஸ்ட், 2015

மத்திய அரசிற்கும், மாநில அரசிற்கும் சாமானியர்களின் சார்பில் ஒரு கடிதம்.

படம் இணைத்திலிருந்து
மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி, எந்த ஆட்சியாளர்கள் நீங்கள் ஆட்சி புரிந்தாலும், தயவாய் மக்கள் எங்களின் வேண்டு கோளைச் சற்று நேரம் ஒதுக்கிக் கவனாமாகப் படித்துப் பாருங்கள். மத்தியில் உள்ளவர்களுக்குத் தமிழ் தெரியாது என்று சொல்லித் தப்பிக்கப் பார்க்காதீர்கள். உலகம் சுற்றும் வாலிபர்கள் நீங்கள். எனவே உங்கள் உள்ளூரில் உள்ள ஒரு மாநிலத்தின் மொழியைத் தெரிந்து கொள்ள முயற்சித்தோ, தெரிந்து கொண்டோ, இல்லை மொழிபெயர்ப்பாளர்கள் வைத்துக் கொண்டோ வாசித்து விடலாம். 

மத்திய, மாநில கட்சிகளே! உங்களுக்குள் அரசியல் ரீதியாகவும், கட்சி ரீதியாகவும், தனிப்பட்ட ரீதியாகவும் கூட கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், -எங்களைப் பகடைக் காய்களாக்கி சுகம் கண்டது போல், கண்டு வருவது போல்,

ஒளிபடைத்தக் கண்ணினாய் வா வா வா,
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா,
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா 

என்று பாரதியாரால் அழைக்கப்பட்ட, இந்தியாவின் வருங்காலச் சிற்பிகள் என்று போற்றப்படும் எங்கள் குழந்தைகளையும் பகடைக் காய்களாய்க்கிவிடாதீர்கள். அவர்களின் வருங்காலத்தையும் சற்று சிந்தையில் கொள்ளுங்கள். உங்களுக்காக மட்டும் பணம் சேமிக்கும் (இங்கு கவனிக்க! “எங்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும்” என்ற வார்த்தைகளைக் கையாளாமல் நாங்கள் மிக மிக பண்பட்ட வார்த்தையை உபயோகித்திருக்கின்றோம்!) பழக்கத்தை சற்று அப்புறப்படுத்திவிட்டு, சாமானிய மக்கள் எங்களுக்காகவும் சிறிது நேரம் ஒதுக்கி, நாட்டின் கல்விச் சொத்தைச் சேமியுங்கள்.

ஒரு நாடு உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்றால் அதன் அடித் தட்டு மக்கள் வரை கல்வி அறிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும். இங்கு கல்வி அறிவு என்பது ஏட்டுக் கல்வி மட்டுமல்ல. நம் நாட்டை மேம்படுத்தும் வகையிலான சமுதாய மாற்றத்தைக் கொண்டுவரும் விழிப்புணர்வுக் கல்வியையும், குடியியல் உணர்வை (CIVIC SENSE) ஊட்டும் கல்வியையும் சேர்த்துத்தான் சொல்லுகின்றோம். அப்படிப்பட்டக் கல்வி என்பது ஒரு நாட்டின் அறிவுக் கண்ணைத் திறக்கும் என்பது உங்களுக்குத் தெரியாமல் இல்லை. ஒரு வேளை அப்படித் திறந்துவிட உதவி விட்டால், இப்போது உங்களால் ஏமாந்து கொண்டிருக்கும் நாட்டின் மூலை முடுக்குகளில் வசிக்கும் எளிய பாமர மக்களும் உங்களை எதிர்த்துக் கேள்வி எழுப்பி, சாது மிரண்டால் நாடு கொள்ளாது என்பது போல் ஆகி உங்களை எல்லாம் பதவி நாற்காலிகளிலிருந்துத் தூக்கி எறிந்து விடுவார்கள் என்ற பயமோ?

“ஒருவர்தான் உயர்ந்தவர் மற்றவர்கள் ஒன்றுமில்லாதவர்கள் என்பதாக இருக்கும் மதத்தை, சாதிகளை இந்த பூமியை விட்டே அகற்றிவிடு. அப்படியொரு மதத்தை. சாதியைப் பெருமையாகக் கருதும் போக்கையும் அகற்றிவிடு. ஓ, இறைவனே. உன்னுடைய உண்மையான மதத்தை எங்களுக்குக் கற்றுக் கொடு. அதன்படியே வாழ, நாங்கள் தயாராக இருக்கிறோம்.” இப்படி, நாங்கள் எழுதுவதற்கு முன்னரேயே, தீண்டாமை எனும் பேய் சமூகத்தின் ஒடுக்கப்பட்டோருக்கும், அடுப்பூதும் பெண்களுக்கும் கல்வி தேவையில்லை என்று அடிமைப்படுத்திக், கேவலப்படுத்தி வந்த காலகட்டத்திலேயே, முக்தாபாய் எனும் ஒரு சாதாரணப் பெண் இந்நாட்டின் ஒரு மூலையிலிருந்து எழுதிய உணர்வு பூர்வமான கடிதத்தின் ஒரு சிறிய அங்கம்தான் இந்த வார்த்தைகள். இந்த முக்தாபாயைப் பற்றிக் நீங்கள் கேட்டதுண்டா? இந்த முக்தாபாயைப் போன்று பல பெண்கள் இருந்தார்கள், இருக்கின்றார்கள் இப்போதும் என்பது நாட்டை ஆளும் உங்களுக்குத் தெரியாதா என்ன?

எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும்
அக்குடியிற் கற்றோரை வருக என்பர் வெற்றி வேற்கை
எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும்
கண் என்ப வாழும் உயிர்க்கு திருக்குறள்    
பிச்சைப் புக்காயினும் கற்றல் மிகவினிதே இனியவை நாற்பது
எம்மை உலகத்தும் யாம் காணேம் கல்வி போல்
மம்மர் அறுக்கும் மருந்து நாலடியார்
பயிற்றிப் பல கல்வி தந்து இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும் பாரதி பாடல்

என்றெல்லாம் எமது மூதாதையர் பாடிய பெருமையுடைய கல்வியை, வெள்ளத்தால் போகாது வெந்தணலால் வேகாது, வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது என்ற பெருமையுடைய கல்வியை,

விலைபோட்டு வாங்கவா முடியும்? என்று கேட்ட பாவேந்தர் பாரதிதாசனின் கேள்வி உங்கள் செவியில் விழவில்லை போலும். அப்படிக் கேட்டு அவரே பகர்ந்த விடையை - வேளைதோறும் கற்று வருவதால் படியும்! கல்வியை இன்று, நாங்களும், எங்கள் குழந்தைகளும்  வேளை தோறும் கற்று படிய வைக்க முனைந்தாலும், எங்கள் தலைமுறைகள் பல கண்டாலும் சேர்க்க முடியாத அளவிலான விலை கொடுத்து வாங்க வேண்டிய உயரத்திற்கு உயர்த்திய உங்களின் பெருமையை நாங்கள் என்னவென்று சொல்லுவது? ஆசிரியப் பணிக்குப் பணம், உதவிப் பேராசிரியப் பணியிலிருந்து பேராசிரியப் பணி உயர்வுக்குப் பணம், பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆவதற்குக் கோடிக் கணக்கில் பணம், (அங்கும் சாதி விளையாட்டு) என்று பணம் கொடுத்தால்தான் பதவி என்று கல்வித்துறையில் ஊழலைப் பரவச் செய்யும் உங்களை எல்லாம் எங்கள் ஆட்சியாளர்கள் என்று சொல்லிக் கொள்ள வெட்கபடுகின்றோம்.  வேதனை அடைகின்றோம்.

நாடு முழுவதும் எல்லா மக்களும் பயன் பெரும் வகையிலான ஒரே சீரான கல்வியை ஏன் உங்களால் அளிக்க முடியவில்லை? தொடக்கக் கல்வி முதல், உயர் கல்வி வரை பெரும் பணக்காரர்களுக்கு ஒரு கல்வி, நடுத்தர மக்களுக்கு ஒரு கல்வி, ஏழைப் பாமர மக்களுக்கு ஒரு வகைக் கல்வி என்று கல்வியிலேயும் தரம் பிரித்து, அங்கு உங்கள் அரசியலைப் புகுத்தி, பணக்காரக் கல்விக் கூடங்களை உயர்தரக் கல்வி என்று பெருமை பேசும் உங்களின் கல்விக் கண்ணை என்னவென்று சொல்ல?

உங்கள் முகமூடிகளான தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் எப்படியேனும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், இந்தியா முழுவதும் உள்ள அரசு கல்விக் கூடங்களுக்கும், தனியார் கல்விக் கூடங்களுக்கும் ஒரே வகைக் கல்விதான் என்ற சமச்சீர் கல்வியை நீங்கள் கொண்டு வந்தால், இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் இருக்கும் பரம ஏழைகள், மாநகர மக்களுக்கும்,  செல்வந்தருக்கும் நிகராக கல்வித் தரத்திலும், வேலை வாய்ப்புகளுக்கானத் தரத்திலும் சமமாக நிற்க முடியும் அல்லவா? எல்லாத் துறை கல்விக்கும் – பொறியியல் கல்வியிலிருந்து, வேளாண்மை, கால்நடை மருத்துவக் கல்வி உட்பட, மொழியியல் கல்வி, சமூகவியல் கல்வி வரை, பொறியிலாளர் பணியிலிருந்து, ஆசிரியர் பணி வரை - நீங்கள் ஊக்கமளிக்கும் வகையில், ஆராய்ச்சிக் கூடங்களையும், வேலைவாய்ப்புகளையும் உட்படுத்தி, ஏன் நாட்டைச் சுத்தப்படுத்தும் பணியாளர்களிலிருந்து, வயலில் வேலை செய்யும் மக்களும் கல்வி அறிவு பெறச் செய்யும் அளவிற்கு நாட்டுத் திட்டங்களைக் கொண்டுவந்தால், இப்போது நிலவும் ஏற்றத் தாழ்வுகள் எல்லாமே ஒழிந்துவிடும். ஒழிந்துவிட்டால் உங்கள் ஓட்டு வங்கிக்கு வேட்டு வந்துவிடும் என்ற பயம்தானே காரணம்?! பாமரர்கள் இருக்கும்வரை உங்கள் காட்டில் மழைதானே!

இப்படிக் கல்வித் துறையில் பணக்காரர், ஏழை என்ற பாகுபாடு வருவதால் தானே எங்கள் ஏழைக் குழந்தைகள் படிக்க வாய்ப்பும், வசதியும் இல்லாமல் குழந்தைத் தொழிலாளிகளாய் மாறும் நிலைமை. குழந்தைத் தொழிலாளிகளாய் இருந்து படிப்பதில் ஒன்றும் தாழ்வு இல்லைதான். ஆனால், அந்தக் கல்வி வாய்ப்பே அவர்களுக்கு மறுக்கப்படும் போது? எத்தனை கிராமங்களில் பள்ளிகள் இருக்கின்றன?  எத்தனைப் பள்ளிகள் ஆசிரியர்கள் இல்லாமல் இன்று மூடப்படும் நிலைமை?  இதற்கு யார் காரணம்? என்று நீங்கள் சிந்தித்துப் பார்த்தது உண்டா? பலமாக, ஆழமாக இருக்க வேண்டிய அடிப்படைக் கல்வியான தொடக்கக் கல்வியே சரியாக இல்லாத போது, உயர்கல்வி எப்படி வளர்ச்சி அடையும்? கல்வியை மேம்படுத்தி  நல்ல குடிமக்களை உருவாக்குவதற்குப் பதிலாக, நல்ல உயர்தர குடி மகன்களை உருவாக்கிய உங்கள் பெருமயை எப்படி வியக்க என்று தெரியவில்லை! “கோன்” உயரக் :குடி:உயர்ந்து உதவுகின்றது!

கல்வித் துறையில் ஊழல்களும், அரசியலும், சாதீயமும், ஏற்றத் தாழ்வுகளும் நிறைந்தது மட்டுமின்றி, ஊழல்களினால் உயர்கல்விக்குத் தேவையான வசதிகளும் இல்லாமையால்தானே நம் நாட்டிலிருந்து வெளி நாடுகள் சென்று ஆராய்ச்சிகள் மேற்கொண்டுதான்தான் நோபல் பரிசு பெற வேண்டும் என்ற நிலைமை? இந்தியர் நோபல் பரிசு பெற்றிருக்கிறார் என்று எப்படி மார்தட்டிப் பெருமை பேச முடிகின்றது உங்களால்? ஊடகங்கள் அவர்களைப் பற்றிப் பக்கம் பக்கமாகப் பெருமை பேசும் போது, அப்படிப் பரிசு வாங்குபவர்களுக்கும், மேலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்பவர்களுக்கும், இங்கு நாம் வழிவகை செய்துகொடுக்கவில்லையே என்ற  குற்ற உணர்வோ, ஆதங்கமோ என்றேனும் ஒரு நாள் கூட உங்களுக்குத் தோன்றுவதில்லையா?  

“கல்வி இல்லை என்றால் அறிவு இல்லை. அறிவு இல்லை என்றால் ஒழுக்கம் இல்லை. ஒழுக்கம் இல்லை என்றால் ஊக்கம் இல்லை. ஊக்கம் இல்லை என்றால் ஆக்கம் இல்லை. எனவே கல்வி இன்மையே, இந்த சீர்கேட்டிற்குக் காரணம்” என உணர்ந்து, தனக்கும் தன்னைப் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வி பெற முடியவில்லை என்று 1883ல் எழுதி முழங்கிய ஜோதிராவ் புலே பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கின்றோம்.  இல்லை என்றால் இதோ இந்தச் சுட்டியைச் சொடுக்கித் தெரிந்து கொள்ளலாம் நீங்கள்.



ஆட்சியாளர்களே! நீங்கள் கற்றவர்களின் இயலாமையையும், பாமரர்களின் பலவீனத்தையும் உங்களுக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு, உங்கள் ஓட்டு வங்கிக்காகப் பணமாகவும், எத்தனையோ தேவையற்ற இலவசங்களாகவும் வாரி இரைத்து பாமர மக்களை ஏமாற்றுகின்றீர்கள். பாமர மக்களும் மூளையை அடகு வைத்து உங்கள் இலவசங்களுக்கும், பணத்திற்கும் பலியாகி ஏமாறுகின்றார்கள். இந்த இலவசங்களுக்குப் பதிலாக, சமூக விழிப்புணர்வு உள்ள கல்வியை, கிராமத்துப் பள்ளிகளை மேம்படுத்தி வழங்கலாம். படிக்காத மேதை காமராஜர் செய்தது போல் படிப்பறிவு(???) உள்ள, தொழில்நுட்பம் பெருகியுள்ள இந்தக் காலக்கட்டத்தில் கூட உங்களால் கல்வியை மேம்படுத்த முடியவில்லையே! ஏன்? மேம்படுத்தினால்,  நமது ஆசிரியப்பெருமக்கள் பிள்ளை பிடிக்கும் வேலையிலிருந்து கொஞ்சம் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வார்களே!

சரி, உங்களுக்கு எங்கள் மூதாதையர் அழகிய தமிழில் சொல்லியவை புரியவில்லை என்றாலும், உங்கள் காலகட்டத்தில் வாழ்ந்து மறைந்த, மாமனிதர், கல்வியாளர், விஞ்ஞானி நம் அப்துல்கலாம் அவர்கள், நீங்கள் புரிந்து கொள்ளும் மொழியில் சொல்லியது புரியும் தானே!?

 உலக அளவில் முதல் 200 பலகலைக்கழகங்களுக்குள் நமது பல்கலைக்கழகங்களில் ஒன்று கூட வர இயலாமல் போகும் அளவிற்கு, எப்படி, எதனால் நமது கல்வித் தரம் தாழ்ந்துள்ளது என்பதை கலாம் அவர்கள் மிகவும் வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார். காரணங்கள் தெரிந்தவைதான். அதே போன்று இந்தியர் பலர் பட்டதாரிகளாக இருந்தாலும் வேலை இல்லாமல் இருப்பது பற்றியும் கவலை கொண்டிருந்தார். அதற்குக் காரணம் தொழில் திறன் அதாவது தொழிற்கல்வி அடிப்படையில் நமது கல்வித் திட்டம் அமையாததும்தான். இன்னும் நாம் பழம் பெருமை பேசி, மிகவும் புராதானக் கல்வி முறையை வைத்துக் கொண்டு இருப்பதை விட, நமது கல்வித்துறை நம் பள்ளிக் கல்வியிலும், பலக்கலைக்கழகக் கல்வித் திட்டத்திலும் பல மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்றும் அவர் பேசி வந்தார். அதற்கான முயற்சிகளையும் அவர் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் எடுத்துக் கொண்டிருந்தார்.

மூலை முக்குகளில் வசிக்கும் பாமரர்களையும் சென்றடைந்து, நமது சமுதாயத்தில் சாதி, மதத்தினால் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளில் இருந்து, சமுதாய அந்தஸ்தினால் எற்படும் ஏற்றத் தாழ்வுகள் வரை எல்லா வேறுபாடுகளும் ஒழிய வேண்டும் என்றால், பாமரனும் உலக அரங்கில் உயர்ந்து நிற்க வேண்டும் என்றால், கல்வியின் தரமும், கல்வித்துறையில் மாற்றங்களும், முன்னேற்றமும் கொண்டுவந்து  நாடு முழுவதும் ஒரே தரமான கல்வி பெறுவது ஒன்றே வழி என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்லலாம்.

திரு அப்துல்கலாம் அவர்களுக்கு மாலை சூட்டி, மௌன அஞ்சலி செலுத்தினாலும் அதை விட, அவர் கல்வித் துறையில் கண்ட கனவுகளை நனவாக்க நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும். அதுவே திரு அப்துல்கலாம் எனும் மாமனிதருக்கு, நீங்கள் செய்யும் அஞ்சலியும், மரியாதையும்.  ஆட்சியாளர்களே! கல்வித்துறையில் நல்ல மாற்றங்களையும், உயர்தரக் கல்வியையும் அடித்தட்டு மக்களும் பெறும் வகையில் கொண்டுவந்தீர்கள் என்றால், உங்கள் பணிகளில் பொதுமக்கள் நாங்களும் பங்கெடுக்கத் தயாராக இருக்கின்றோம்! நாட்டைச் சுத்தப்படுத்துவது இருக்கட்டும், முதலில் கல்வித்துறையில் அந்தச் சுத்தத்தைக் கொண்டுவாருங்கள்.  நாடு தானாகவே சுத்தமாகிவிடும்! கலாமின் கனவாகிய, பொதுமக்களாகிய எங்களின் கனவாகிய, இளைய பாரதத்திற்கு ஊழலற்ற உயரதரமான கல்வியை அளித்து, அவர்களின் தோள்களில் தாங்கி ஊழலற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்க உதவுங்கள்! கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், உங்களிடம் சாமானியப் பொதுமக்கள் நாங்கள் வேண்டுகோள் விடுத்து இக்கடிதத்தைச் சமர்ப்பிக்கின்றோம்.

இப்படிக்கு,

இந்திய மக்கள்.

(----கீதா)














































44 கருத்துகள்:

  1. வெற்றிக்கான சங்கை ஊதியாகி விட்டது..
    ஆனால், கேளாச் செவிகளுக்கு எட்ட வேண்டுமே!..

    பதிலளிநீக்கு
  2. அருமை. உங்கள் பொருமலைச் சொல்லி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம்! தங்களின் கருத்திற்கு! பொருமல் தான் ஆனால் அதைவிட நல்லதொரு கல்வி நம் நாட்டில் வராதா என்ற ஒரு தீராத ஆசை...எனலாம்..

      நீக்கு
  3. இதுவும் ஒரு இந்தியக் கனவு :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கனவு நனவானால் நன்றாகத்தானே இருக்கும்..இல்லையா ஜி!

      நீக்கு
  4. ungalathu kaditham arumai madam!
    ningal kurippittulla anaithum palarathu manathil irukkum ennangalthaan!
    aanal mika azakaaka thokuththirukkurirkal
    vazthukkal madam!
    ---
    panam thaan ellam inkira intha kaala katathil
    naadu maatram kandal santhoshapadum saamanya manitharkalul nanum oruthan.
    aanal antha maatram erpaduma!?

    pathivil sonna perumpaalana panam thodarpaana vishayangkalai neradiyaakavum/maraimukamaakavum
    nan paarthirukkiren.
    aanal ena seya mudikirathu!


    varuthamaaka irukkirathu.

    பதிலளிநீக்கு
  5. ungalathu kaditham arumai madam!
    ningal kurippittulla anaithum palarathu manathil irukkum ennangalthaan!
    aanal mika azakaaka thokuththirukkurirkal
    vazthukkal madam!
    ---
    panam thaan ellam inkira intha kaala katathil
    naadu maatram kandal santhoshapadum saamanya manitharkalul nanum oruthan.
    aanal antha maatram erpaduma!?

    pathivil sonna perumpaalana panam thodarpaana vishayangkalai neradiyaakavum/maraimukamaakavum
    nan paarthirukkiren.
    aanal ena seya mudikirathu!


    varuthamaaka irukkirathu.

    பதிலளிநீக்கு
  6. நான் பதிவு எழுதத் துவங்கியதிலிருந்து பதிவுகளின் மூலம் நம் வாசகர்களுக்கு சொல்ல விழைந்த விஷயம், உயர்வு தாழ்வு இருக்கும் இச்சமூகம் பற்றியதே. இதில் இப்போதிருக்கும் சூழ்நிலை இவால்வ் ஆனதே. உயர்வு தாழ்வு எல்லா நிலைகளிலும் இருக்கிறது. இதை பூர்வஜன்ம பலன் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஏற்றதாழ்வு எண்ணம் நம் ரத்தத்தில் ஊறிவிட்டது. நம்மில் சிலர்தான் அரசியல் வாதிகளாகிறார்கள். எண்ணத்தள்வில் நமக்கு ஒரு ஒத்த சிந்தனை இருக்குமானால் அதுவே பெரிய விழிப்புணர்வை உண்டாக்கும் எல்லோருக்கும் கல்வி என்பது அரசின் கொள்கை என்று கூறிக் கொள்கிறார்கள் ஆனால் எல்லோருக்கும் சமகல்வி என்பதும் உணரப் படவேண்டும் வாழ்க்கையில் பேதங்கள் நிறைந்திருக்கிறது. சாதி பேதங்கள் மட்டுமல்லாமல் ஏழை பணக்காரன் என்னும் வர்க்க பேதமும் நிலவுகிறது. அரசின் கொள்கைகள் இந்த பேதங்களைஊதிப்பெரிதாக்கிக் குளிர் காய்வதில்தான் இருக்கிறது. வர்க்க பேதமற்றசமுதாயம் மலர கல்வி வேண்டும் அதுவும் சமச் சீரான கல்வியாய் இருக்கவேண்டும் சிறார்கள் மனதில் வேற்றுமை எண்ணங்களைப் போக்கும் கல்வியாக இருக்கவேண்டும் அதற்கு கல்வியை மொத்தமாக அரசு ஏற்று செயல்படவேண்டும் அந்தமாதிரிச் செயல்படும்போது பள்ளி இறுதிப் படிப்புவரை கல்வி, மதிய உணவு சீருடை எல்லாம் எல்லோருக்கும் ஏழை பணக்காரன் என்னும் பேதமில்லாமல் முற்றிலும் இலவசமாகக் கட்டாயப் படுத்தப் படவேண்டும் உயர்வு தாழ்வு எண்ணம் சிறார்களின் மனதில் பதிய விடாமல் இருக்க வேண்டும் .இதில் ஒத்த கருத்துக்கள் உருவாக்கப் படவேண்டும் செய்வோமா.?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக அருமையான விரிவான பின்னூட்டம். உங்கள் கருத்துகள் அனைத்தும் மிகமிகச் சரியே! எங்கள் பள்ளி அப்படித்தான் சார் இருந்தது. பணக்காரப் பெண் ஏழைப் பெண் என்பதெல்லாம் தெரியாது சார் பள்ளி வளாகத்திற்குள். என்னவென்றால் சீருடை என்றாலும் பணக்காரர்களின் சீருடைக்கும் ஏழைகளின் சீருடைக்கும் வித்தியாசம் கொஞ்சம் தெரிந்தது. ஆனால் மற்ற படி எந்தவிதத்திலும் தெரியாது. பிறந்தநாள் கூட கொண்டாட அனுமதி இல்லை. ஏனென்றால் அது ஏற்றத் தாழ்வுகளை விதைத்துவிடும் என்பதால்...அருமையான பள்ளி சார் செயின்ட் ஜோசஃப் பள்ளி...

      நீக்கு
  7. உங்களுடைய விண்ணப்பம் சரியானதே. நானும் உடன்படுகிறேன்.

    பதிலளிநீக்கு
  8. என்னம்மா இப்படிப் பண்ணிட்டீங்களேம்மா!... இவ்வளவு சூடான ஒரு பதிவை ஆதரித்து எழுதினால் எதிர்காலத்தில் எம் எஸ் விஸ்வநாதன் மாதிரி சாகும்வரை ஒரு பத்மஸ்ரீ கூட எங்களுக்குக் கிடைக்காமல் போய்விடுமே அம்மா!.. உண்மையைச் சொன்னால் உதைக்க அல்லவா வருகிறார்கள் அரசியல்வாதிகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹ்...சார்..மிகவும் ரசித்தோம்..உங்கள் பதிலை....

      நீக்கு
  9. பாமரன் கல்வி கற்கும் தி-ட்டத்துக்கு அவர்கள் ஏற்கனவே சங்கு ஊதிவிட்டார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே! வேதனைதான்...மீட்டெடுக்க முடியாதா என்ற ஒரு ஆதங்கம்தான்...

      நீக்கு
  10. சவுக்கடி பதிவு உள்ளங்கை நெல்லிக் கனி போல விளக்கம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி புலவர் ஐயா! தங்களின் கருத்திற்கு..

      நீக்கு
  11. வணக்கம்,
    தங்கள் பதிவு அருமை,
    நல்லா சொன்னீர்கள், கேட்கனுமே,,,,,,,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  12. படத்தில் ஐந்தாவது பிரிவு சிரிக்க வைக்கிறது! சிந்திக்கவும் வைக்கிறது!

    //திரு அப்துல்கலாம் அவர்களுக்கு மாலை சூட்டி, மௌன அஞ்சலி செலுத்தினாலும் அதை விட, அவர் கல்வித் துறையில் கண்ட கனவுகளை நனவாக்க நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும். அதுவே திரு அப்துல்கலாம் எனும் மாமனிதருக்கு, நீங்கள் செய்யும் அஞ்சலியும், மரியாதையும். ஆட்சியாளர்களே! //

    அருமையான வரிகள் கீதா!

    முதலில் அரசு கண்னை மூடிக்கொண்டு தனியார்ப்பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதைக்குறைத்தாலே போதும்! இதில் பாதி அரசியல்வாதிகளின் பள்ளிகள்! அப்புறம் எப்படி அரசு அனுமதி வழங்காமல் இருக்கும்? இதில் வேடிக்கை என்னவென்றால் மாநகாராட்சி பள்ளிகளில் படிப்பவர்கள் பலரும் தமிழகத்தில் முதலிடம் பெற்றாலும் பெற்ற‌வர்கள் என்னவோ லட்சக்கணக்கில் கடன் வாங்கியாவது தனியார் பண்ணிகளில் தானே சேர்க்கிறார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகச் சரியாகச் சொன்னீர்கள். தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதைக் குறைத்தும், பல சிலபஸ்களுக்குப் பதிலாக மத்திய அரசு சிலபஸ், அதற்கு நிகராக அந்தந்த மாநில அரசு சிலபஸ் ஆனால் கண்டிப்பாகத் தாய்மொழி கற்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் வைத்தால் கிராமப்புற குழந்தைகளும் மற்ற மாணவர்களுக்கு நிகராக இருப்பார்கள்தானே..

      ஆம் பெற்றவர்கள் பலர் தனியார் பள்ளிகளில்தான் சேர்க்கிறார்கள்...வேதனைதான்...கல்வியின் தரம் அப்படி ஆகிப் போனதோ...மிக்க நன்றி சகோதரி அருமையான பின்னூட்டத்திற்கு..

      நீக்கு
  13. கனவு மெய்ப்பட வேண்டும்! நல்லதொரு சமச்சீர் கல்வி முறை அமைய வேண்டும்! சிறப்பான பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பர் சுரேஷ்! தங்கள் கருத்திற்கு!

      நீக்கு
  14. எனக்கும் கோவம் கோவமா வருதுங்க.
    ஆனா என்ன பன்றது ஆணா?! பொறந்துட்டேனே. ஆனா ஒண்ணுங்க இல்லாட்டி நான் வேற மாதிரி பதிவு போடுவேன்..., ஆணா இருக்கிறதாலதான் (ஜாக்கிரதையா இருக்கனுமேங்குற தாலதான்) பதிவு போட்டாலும் ரசனையா ரசம் வைப்பது எப்படி, சுடாமல் சுடு தண்ணீர் வைப்பது எப்படி.., அப்பளம் பொறிப்பது எப்படி அடுத்த வீட்டு முருங்கை கீரையை அபேஸ் செய்வது எப்படி.., என்ற ஆராய்ச்சி கட்டுரைகளையெல்லாம் பதிவாகவும் புத்தகமாகவும் போடவும் முடிவு செய்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. கல்வித் திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்து எல்லாவகைக் கல்வியும் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகை கொணர்தல் வேண்டும்...
    நல்ல பதிவு....

    பதிலளிநீக்கு
  16. தங்கள் கனவு மெய்ப்பட வேண்டும் சகோதரி.

    பதிலளிநீக்கு
  17. ஒவ்வொரு கேள்வியும் நச்! அருமையான கடிதம்..என் கையெழுத்தும்.
    த.ம.7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி! தங்களின் கருத்திற்கு..பாராட்டிற்கும்...மிக்க நன்றி தங்களின் கையெழுத்திற்கும்....இப்படி ஒவ்வொருவரும் சேர்ந்துவிட்டால் ஒரு புரட்சி வந்திடாதோ....

      நீக்கு
  18. கட்டுரையை இன்னொருமுறை படிக்க வேண்டும். மீண்டும் வருவேன்.
    த.ம.8

    பதிலளிநீக்கு
  19. ///திரு அப்துல்கலாம் அவர்களுக்கு மாலை சூட்டி, மௌன அஞ்சலி செலுத்தினாலும் அதை விட, அவர் கல்வித் துறையில் கண்ட கனவுகளை நனவாக்க நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும். அதுவே திரு அப்துல்கலாம் எனும் மாமனிதருக்கு, நீங்கள் செய்யும் அஞ்சலியும், மரியாதையும். ///
    உண்மைதான் சகோதரியாரே
    தங்கள் கடிதத்தில் எனது பெயரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  20. என்னுடைய எண்ணவோட்டத்தை அப்படியே வெளிப்படுத்திய பதிவு. மதுக்கடையை தனியாரும், கல்விக்கூடங்களை அரசும் நடத்துவதுதான் முறை. ஆனால் இங்கு கல்வியை தனியாருக்கு விற்றுவிட்டு, மது விற்பனையில் இலக்கு வைத்து பணம் பண்ணுகிறது அரசு. எல்லாவற்றையும் நம்மிடமே கறந்து, நமக்கு கொஞ்சம் இலவசத்தை கொடுத்து வாயடைத்து விடுகிறது.
    மது விற்று வரும் வருமானத்தில் இலவசப் பொருள் பெறுவதை மக்களும் அவமானமாக கருதவேண்டும்.
    அற்புதமான பதிவு!
    த ம 10

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்கள் எண்ண ஓட்டத்தோடு ஒத்ததுக்கு....மிகவும் மகிழ்வாக இருக்கின்றது.....ஆம் நீங்கள் சொல்லி இருப்பது அனைத்தும் சரியே!

      நீக்கு
  21. கல்வியை அரசாங்கம் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு, எல்லா மக்களுக்கும், எல்லா கல்வியும் இலவசம் என்று, அந்தந்த மாநிலத்தில், அவரவர் தாய்மொழிக் கல்வியை ஊக்குவித்தால் எல்லாம் சரியாகி விடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா தங்களின் கருத்திற்கு....மிக நல்ல கருத்து!

      நீக்கு
  22. இதை விட மற்றொரு பிரச்சனை சமீப காலமாக என் மனதை அதிக அளவு வாட்டிக் கொண்டு இருக்கின்றது. 1990 க்குப் பிறகு பிடித்த பெண்கள் பெரும்பாலான ஆங்கில வழிக் கல்விக் கூடங்களில் ஆசிரியையாக இருக்கின்றார்கள். அவர்கள் மாணவர்களுக்கு கற்பிக்கும் விதம், மாணவர்கள் படும் பாடு நாலைந்து பதிவுகளாக எழுத வேண்டும். ஒவ்வொரு வருட தொடக்கத்திலும் தனியார் பள்ளிக்கூடத்தில் படிக்க வைக்கும் நடுத்தர வர்க்க பெற்றோர்கள் படும் பாட்டை தனியாக எழுத வேண்டும். தரம் என்பது பாதாளம். கல்வி மூலம் தனிநபர்களின் வருமானம் என்பது உச்சத்தில். வேதனையாக உள்ளது. விடிவு விரைவில் வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்களின் மேன்மையான கருத்திற்கு! ஆம் மிக மிக உண்மையே! சமீபத்திய ஆங்கில, ஆசிரிய, ஆசிரியைகளும் சரி, தமிழ் ஆசிரிய, ஆசிரியைகளும் சரி மோசமாகக் கற்பிக்கின்றார்கள். குழந்தைகளை நினைத்தால் மனது மிகவும் வேதனிக்கின்றது. சமீபத்திய ஒரு அனுபவத்தினால், தனியாக இதைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்பதால்தான, இதைப்பற்றியும் ஒரு இடுகை எழுதிக் கொண்டிருக்கின்றோம்.

      மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  23. பிரமாண்டமான பதிவு நல்லதொரு அலசல் வாழ்த்துகள்
    தமிழ் மணம் 12

    பதிலளிநீக்கு
  24. கல்வியின் மீதான உங்கள் அக்கறையும் ஆர்வமும் பாராட்டுக்குரியது. ஒரு நீண்ட பின்னூட்டம் இட்டேன். அது மிகநீண்டு விட்டதால் தனி பதிவாக எனது வலைப் பக்கத்தில் வெளியிட்டு விட்டேன்.

    பதிலளிநீக்கு