ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

அந்த நாளும் வந்திடாதோ!!!...

படம் இணையத்திலிருந்து

“குடியைக் கெடுக்கும் குடி” இவ்வுண்மை எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான் என்றாலும், குடியால் சீரழிவோர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் கூடிக் கொண்டேதான் இருக்கின்றது. குடிப்பவர்கள் ஓட்டும் வாகனங்கள் ஏற்படுத்தும் விபத்துக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டேதான் இருக்கின்றது. குடிப்பவர்களால் ஏற்படுத்தப்படும் விபத்துக்களில், குடிக்காமல் உயிரழப்போர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டேதான் இருக்கின்றது.

கடந்த வியாழன், திருவனந்தபுரத்திலுள்ள அரசு பொறியியல் கல்லூரியில் ஓணப்பண்டிகையின் கொண்டாட்டத்தின் பாகமாக அனுமதியின்றி கல்லூரிக்குள் நடத்திய வாகன ஊர்வலத்தில் பங்கெடுத்த, 20 பேருக்கும் மேலான மாணவர்களைச் சுமந்து கொண்டு கண்மண் தெரியாமல் பாய்ந்த ஒரு ஜீப் மோதி சிவில் இஞ்சினியரிங்க் 6 வது பருவம் படிக்கும் மாணவி தெஸ்னி பஷீர் உயிரிழந்தார். இந்த ஜீப்பை ஓட்டிய மாணவரும், உடனிருந்த மாணவர்களும் குடி மற்றும் மயக்க மருந்து போதையில் இருந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

இதில் வேதனை என்னவென்றால், அந்த ஜீப் கல்லூரி விடுதியை ஒட்டிய புதர் காடுகளுக்கிடையே கடந்த 13 வருடங்களாக, அதன் பதிவு கூட புதிப்பிக்கப்படாமல் கிடக்கிறதாம். அரசியல்வாதிகள், மாணவர்கள் இயக்கங்களை வளர்க்கச் செய்ய உதவி!?, கல்லூரியில் கலவரம் ஏற்படும் போது ஆய்தங்கள் கடத்தப் பயன்படுத்தப்படும் ஜீப்பாம் அது! சில வருடங்களுக்கு முன் ஏதோ ஒரு போலீஸ் அதிகாரி அதைக் கஸ்டடியில் எடுத்து பறிமுதல் செய்து காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்றாராம். உடனே அரசியல் தலைவர்கள் தலையிட்டு அதைத் திரும்ப எடுத்துச் செல்ல வைத்துவிட்டார்களாம்!

இது போல் இரண்டுமாதங்களுக்கு முன்பு மும்பையில் குடித்துக் காரோட்டிய ஜான் ஹவி கட்கர் எனும் பெண் வழக்கறிஞரின் கார் ஒரு டாக்சியில் மோதி, அந்த டாக்சியின் ஓட்டுநரான 55 வயதான முகம்மது அப்துல் சையதும், அதில் பயணித்த பயணியான 50 வயதுள்ள சலீம் பாபுவும் இறந்துவிட்டார்கள். இதையொட்டிக் கைது செய்யப்பட்ட ஜான் ஹவி கட்கர் கடந்த 5 ஆம் தேதி இரண்டு மாத சிறைவாசத்திற்குப் பின் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்.  இனி விசாரணை நடக்கும்.  இறுதியில் பெண் வழக்கறிஞரான ஜான் ஹவி தண்டனையிலிருந்து தப்பி விடுவார். அது உறுதி.  

மாணவர்களுக்குக் குடிக்க ஓணப் பண்டிகைக் கொண்டாட்டம் ஒரு காரணமாக இருந்தது போல், ஜான் ஹவிக்கு அன்று குடிக்க ஏதேனும் ஒரு காரணம் இருந்திருக்கலாம்.  குடித்த அவர் காரோட்டாமல் இருந்திருந்தால் அந்த விபத்தையே தவிர்த்திருக்கலாம்.  விபத்தில் உயிரிழந்த அவ்விருவரும் இப்போதும் அவர்களது குடும்பத்தினருடன் வாழ்ந்து கொண்டிருந்திருப்பார்கள்.  பாவம் அவர்களுக்குத் தெரியாது மூக்குமுட்டக் குடித்த ஒரு பெண் அவர்கள் வரும் வழியில் வருகிறாள் என்று.

ஆனால், அந்த ஜான் ஹவிக்குத் தெரியும் தான் கூடுதலாகக் குடித்திருப்பதால் கார் ஓட்டக் கூடாது என்று. இருந்தும் ஓட்டியிருக்கிறார் என்றால் என்ன நேர்ந்தாலும் அதை நீதி மன்றத்தில் சமாளித்துவிடலாம் என்ற துணிவு இருந்திருக்க வேண்டும்.  அது போல் கல்லூரிக்குள் ஜீப் ஓட்டிச் சென்ற மாணவர்களுக்கும் தாங்கள் செய்யும் தவறுகளுக்கானத் தண்டனையிலிருந்து தங்களை மீட்க அரசியல்வாதிகள் வருவார்கள் என்ற அசட்டுத் தைரியம் இருந்திருக்க வேண்டும்.

இது போல் ஒரு அசட்டுத் தைரியம் தானே 2002ல் மும்பையில் குடித்துக் காரோட்டிய இந்தி நடிகர் சல்மான்கானுக்கும் இருந்தது. அன்று அவரால் நேர்ந்த விபத்தில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் உயிரிழக்க நேர்ந்தது. 4 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. உரிமம் போலுமின்றி குடித்துக் காரோட்டினார் என்று அவருடன் இருந்த, அவருக்குப் பாதுகாப்பு அளிக்க நியமிக்கப்பட்ட மஹாராஷ்ட்டிர காவல்துறையைச் சேர்ந்த ரவீந்திர பாட்டில் நீதிமன்றத்தில் சொன்னது அன்று எல்லோரையும் திகைப்பில் ஆழ்த்தியது. 

பலமுறை தடுத்தும் கேளாமல் விரைவாக கார் ஓட்டியதால் தான் விபத்து ஏற்பட்டது என்று அந்தப் பாவம் காவலர் சொன்னது அவரது உயிருக்கே வினையாகிவிட்டது.  சொன்னதை மாற்றிச் சொல்ல பலராலும் பலமுறை கட்டாயப்படுத்தபட்ட அவர், திடீரென விசாரணைக்கிடையே ஒரு நாள் காணாமலும் போக, முதலில் சஸ்பென்ஷனும் பிறகு டிஸ்மிசலும் கிடைத்தது அவருக்கு.  நீதி மன்றத்திற்குச் சாட்சி சொல்ல வராததால் அவரைக் கைது செய்ய நீதி மன்றம் உத்தரவும் இட்டுவிட்டது.

வருடங்களுக்குப் பிறகு மஹாபலேஷ்வரில் உள்ள ஒரு சிறிய ஹோட்டலில் வேலை செய்து கொண்டிருந்த ரவீந்திர பாட்டிலை போலீசார் எப்படியோ கண்டுபிடித்து கைது செய்து சிறையிலும் அடைத்துவிட்டார்கள். தன் உயிருக்கு ஆபத்து என்று அவர் இட்ட கூக்குரலை யாருமே கவனிக்கவில்லை.  தண்டனைக்குப் பின் சிறையிலிருந்து வெளியேறிய அவர் மீண்டும் எங்கோ ஓடிப்போய் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்திருக்கிறார். 2007ல் காச நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரழந்த போதுதான் அவர் யாரென்று எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. 

கடந்த மே மாதம், விபத்து நடந்து 13 வருடங்களுக்குப் பிறகு, முக்கியமான சாட்சியான ரவீந்திர பாட்டில் இறந்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு, 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சல்மான் கான் உடனேயே ஜாமீன் கிடைக்கப் பெற்று சிறையினின்றும் வெளியேறி, மீண்டும் தன் வழக்கை உயர் நீதி மன்றத்தில் தொடர முடிவு செய்துவிட்டார்.  அவரது குடியால் ஏற்பட்ட விபத்தில் பலியானது இருவர். நடை பாதையில் தூங்கிக் கொண்டிருந்த ஒருவரும், சல்மானுக்குப் பாதுகாவலுக்குச் சென்ற காவலரும்.  இறந்தவருக்கும், காயமடைந்தவர்களுக்கும் சல்மான் கான் 10 லட்சம் ரூபாய் கொடுத்தாராம்.

ஆனால், என்ன பயன்? விபத்து நடக்கும் போது சல்மானுடன் பயணித்த, விபத்தை நேரில் கண்ட சாட்சியான (சிந்திக்காமல் உண்மையைச் சொன்ன) ரவீந்திர பாட்டிலின் வாழ்க்கையே சீரழிந்து போனது.  இதற்கெல்லாம் காரணம், 2002 செப்டெம்பர் 27 ஆம் தேதி நள்ளிரவு வரை சல்மான்கான் குடிக்கக் காரணம், ஐஸ்வர்யா ராய் அவரது காதலை ஏற்றுக் கொள்ளாததால்தானாம்.  இப்படிக் காதல் தோல்வியைத் தாங்க முடியாமல் குடித்த குடி இருவரது உயிரைக் குடித்து விட்டது.  குடித்திருந்த அவர் அன்று காரோட்டாமல் இருந்திருந்தால் அவ்விபத்தைத் தவிர்த்து இரண்டு உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம். 

இதே போல் கடந்த மாதம் பிரபல நடிகையும், பாராளுமன்ற உறுப்பினருமான ஹேமமாலினி குடித்துக் காரோட்டி எதிரே வந்த காருடன் மோதி அக்காரிலிருந்த ஒரு குழந்தை இறந்ததாக செய்தித் தாளில் படித்தோம் அல்லவா?  மறுநாளே ஹேமமாலினியின் ஓட்டுநர் முன் வந்து ஹேமமாலினி காரோட்டவில்லை, தான் தான் காரோட்டினேன் என்று சொன்னதாகச் செய்தியும் வெளியானது.

குடித்துக் காரோட்டிய இவர்களெல்லாம் தங்கள் பணம் மற்றும் பதவி பலத்தால், தாங்கள் குடிக்கவே இல்லை என்றோ, குடித்திருந்தோம் ஆனால் காரோட்டவில்லை என்றோ, தாங்கள் ஓட்டிய வாகனத்தின் ப்ரேக் வேலை செய்யவில்லை என்றோ சொல்லி எப்படியும் தண்டனையிலிருந்து தப்பித்தே விடுவார்கள். அப்படி அவர்களுக்குத் தப்பிக்க உதவ எத்தனையோ பேர் காத்திருக்கிறார்கள்.

அப்படிக் காத்திருப்பவர்களுக்குத் தேவையானதைக் கொடுத்து தாங்கள் எப்படிப்பட்டக் குற்றத்தைச் செய்தலும் எத்தனை பேர்களைக் கொன்றாலும், அதற்கானத் தண்டனையிலிருந்து சுலபமாகத் தப்பிவிடலாம் என்ற தைரியம் குற்றம் செய்பவர்களுக்கும் இருக்கின்றது. அப்படிப்பட்ட தைரியத்தில் கண்மண் தெரியாமல் குடித்து காரோ, ஜீப்போ, லாரியோ ஓட்டி வரும் மரண தூதர்களுக்கு பலியாடாக பாவம் மனிதர்கள் அவர்கள் வரும் வழியில் காத்திருக்கிறார்கள். அப்படி உயிரை விடும் அப்பாவியான மனிதர்களை எண்ணும் போது மனது பதைக்கிறது. அப்படிப்பட்ட அப்பாவி மனிதர்களுக்காக வருந்தத்தான் முடிகின்றது.

குடியைக் கெடுக்கும் இக்குடி இவ்வளவு சுலபமாகக் கிடைக்காமல் இருந்தால் இத்தகைய விபத்துகளைத் தவிர்க்க முடியும்தானே.  அத்தகையவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது எனும் நிலை ஏற்பட்டால் இது போன்ற விபத்துக்களின் எண்ணிக்கையையேனும் குறைக்கவாவது முடியுமே.

குடியைப் பற்றி மட்டும்தான் இங்கு சொல்லப்பட்டுள்ளது. ஆனால், குடி மட்டுமல்ல எல்லா துறைகளிலும் ஊடுருவிப் பாயும் ஊழல்கள் சட்டத்தையே புரட்டும் அளவு இருக்கின்றதே அதை எதிர்த்து மக்கள் நாம் போராடுவதில்லை. குடியை ஒழிக்க போராடுவது ஒரு புறம் இருக்கட்டும், நமது அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான, நமது வாழ்க்கைத் தரம் உயரத் தேவையானவற்றிற்கான உரிமையை விட்டுக் கொடுத்து, அந்த உரிமைகளுக்காக, அந்த உரிமைகளைப் பல சமயங்களில் பெறமுடியாமல் இருக்கும் ஊழல்களை எதிர்த்து  நாம் என்றேனும் போராடுகின்றோமா?  இல்லை.  வேதனைதான்.

சட்டமும் சட்டக்காவலர்களும், பணத்திற்கும் பதவிக்கும் அடிபணியாமல் தங்கள் பணியைச் செவ்வனே ஆற்றும் ஒரு நன்னாள் நம் நாட்டிற்கு வராதா என்ற ஏக்கம் வருகின்றது. கூடவே சட்ட விரோதச் செயல்களைச் செய்யாமல் சட்டத்தை மதித்து வாழும் மக்கள், தங்கள் வாழ்க்கைத் தரம் உயர வேண்டி உரிமைகளுக்காகக் குரல் எழுப்பும் மக்கள் அதிகமாக வாழும் நாடாக நம் நாடு மாறாதா, அந்த நாளும் வந்திடாதா என்ற ஏக்கமும் வருகின்றது.   

52 கருத்துகள்:

  1. அனைத்துக் கேடுகளுக்கும் முதன்மைக்காரணம் இப்பழக்கமே. தங்கள் ஏக்கம் எங்களுக்கும் உண்டு. நன்னாளை எதிர்பார்ப்போம். தமிழ்மணம்+1

    பதிலளிநீக்கு
  2. குடியினால் வண்டிகள் ஒட்டி ஏற்படும் மரணம் ஒரு புறமும் முறையாக லைசன்ஸ் பெறாமல் வண்டிகள் ஒட்டுவதாலும் மரணங்கள் அதிக அளவு ஏற்படுகின்றனதானே அதை ஏன் இந்த பதிவில் சொல்லவில்லை....

    இப்படிக்கு குடித்துவிட்டு வண்டி ஒட்டியும் யாரையும் சாக அடிக்காத
    தமிழன்

    நானும் குடிகாரந்தான் ஆனால் இந்த வருடம் நீயூயர் கொண்டாத்தின் போது 2 க்ளாஸும் அதன் பின் இந்தியாவில் இருந்து வந்த நண்பருடன் வீட்டில் ஒரு முறையும் சென்னை வந்திருந்த போது நண்பர் ஒருவருடன் ஒரு முறையும் கடந்த மாதம் மனைவி அவள் தங்கை வீட்டிற்கு ஒரு வாரம் விடுமுறைக்கு சென்ற போதுமட்டும்தான் குடித்து இருக்கிறேன். வீட்டில் உள்ள பாட்டில்கள் நீ முன்பு மாதிரி இல்லை நீ ரொம்ப மாறிட்டே என்று அழுகின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் உண்மைதான் தமிழா! லைசன்ஸ் பெறாமல் என்பது ஒரு புறம் இருக்க, லைசன்ஸ் இருந்து ம் குடிக்காமலும் கூட விதிமுறைகளைப் பின்பற்றாமல் விபத்துகள் ஏற்படுகின்றனர் தானே...அதைப் பற்றி எல்லாம் இதற்கு முன்பு எழுதியவற்றில் கீதா ஒரு சில பதிவுகளில் சொல்லி இருந்ததால் அந்தப் பகுதி பற்றிச்சொல்லவில்லை.

      குடிகாரன் என்பதற்கும், காஃபி டீ போல குடிப்பதற்கும் வித்தியாசம் உண்டுதானே தமிழா...கலாச்சாரத்தில்..கேரளத்தை எடுத்துக் கொண்டால் காஃபி, டீ குடிப்பது போல (ஏன் ஐரோப்பிய நாடுகளில் கூட விருந்தினருக்கு காஃபி கொடுப்பது போல கொடுப்பது வழக்கமாக உள்ளதுதானே...!!) எந்த ஒரு விழா என்றாலும் உண்டு...
      எனவே இங்கு அந்தப் பழக்கத்தைத் தவறு என்று சொல்லவில்லை தமிழா....இங்கு ரோட்டில் கூட விழுந்து கிடக்கின்றனரே...பெரிய புள்ளிகள் செய்தால் தவறு என்று சொல்லப்படுவதில்லையே என்பதைத்தான்....தப்பிக்கின்றார்களே அதைத்தான்...சட்டம் ஊழல் உள்ளதாகிவிட்டது என்பதைத்தான்...தமிழா

      //வீட்டில் உள்ள பாட்டில்கள் நீ முன்பு மாதிரி இல்லை நீ ரொம்ப மாறிட்டே என்று அழுகின்றன// ஹஹஹஹ்

      நீக்கு
  3. உலகெங்கும் குடித்துவிட்டு வாகனம் ஒட்டுவதால் விபத்துகள் ஏற்ப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அமெரிக்க போன்ற நாடுகளிலும் விபத்துக்கள் குடியால் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இங்குள்ள சட்டங்கள் கடுமையாக இருப்பதால் விபத்துக்ள் குறைந்துதான் இருக்கின்றன அப்படிபட்ட சட்டம் இல்லை என்றால் மிக அதிக அளவில் விபத்துகள் இங்கே ஏற்பட வாய்ப்புக்கள் மிக அதிகமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரிதான்..உலகெங்கிலும் ஏற்படுகிறதுதான்...நீங்கள் சொல்லி இருப்பது போல சட்டம் கடுமையாக இருப்பதால் விபத்துகள் குறைவு..ஆனால் இங்கு பாருங்க்ள்..பெரிய விஐபிகள் எப்படித் தப்பிக்கின்றார்கள்...சட்டம்? அதைத்தான் சொல்லி இருக்கின்றோம் தமிழா.....

      மிக்க நன்றி தமிழா....

      நீக்கு
    2. இன்னொன்றும்இங்கு சொல்ல விடுபட்டுவிட்டது. குடிப்பவர்கள் எல்லோரும் மோசமானவர்கள் என்றோ, குடிக்காதவர்கள் எல்லோரும் ரொம்ப நல்லவர்கள் என்றோ சொல்லுவதற்கில்லைதானே தமிழா. இரண்டு வகையிலும் இரண்டுமே உள்ளதுதானே. குடிக்காதவர்களும் விபத்துகள் ஏற்படக் காரணமாகத்தான் இருக்கின்றார்கள். இங்கு நம் சட்டம் எப்படி ஊழல் நிறைந்ததாக இருக்கின்றது என்பதற்காகத்தான் அந்த பெரிய புள்ளிகளைப் பற்றியது...தமிழா...

      நீக்கு
  4. >>> சட்டமும் அதன் காவலர்களும், பணத்திற்கும் பதவிக்கும் அடிபணியாமல் தங்கள் பணியைச் செவ்வனே ஆற்றும் ஒரு நன்னாள் நம் நாட்டிற்கு வராதா என்ற ஏக்கம் வருகின்றது.<<<

    இதில் வேறொரு கருத்து ஏதும் இருக்க முடியாது.. நிச்சயம் வரத்தான் வேண்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா...மிக்க நன்றி ஐயா தங்களின் கருத்திற்கு...

      நீக்கு
  5. தமிழ் மணம் 2 பிறகு வருவோம்....

    பதிலளிநீக்கு
  6. இன்னும் ஒரு முன்னூறு வருசந்தான்...
    எல்லாம் சரியாகிடும்...!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடப்பாவி...இன்னாபா இது கவுத்துப்புட்ட...300ன்னு சொல்லி...

      நீக்கு
  7. தோழர் இந்த இடத்தில்
    பல ஆண்டுகளுக்கு முன்னர் படித்த ஒரு சம்பவத்தை நினைவுகூர ...
    தன மகன் குடிப்பதை அறிந்த ஒரு பெரும் பணக்காரர் அவனை கண்டித்து வெளிநாட்டு சரக்கு மட்டுமே அடிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

    சில மாதங்கள் கழித்து ஒரு பைக்கை வேகமாக திருகி விளக்குக் கம்பத்தில் மோதி உயிரிழந்தான் அந்த இளைஞன். நன்றி இந்தியா டுடே...

    வினை என்று தெரிந்தே அறுக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தோழர் கஸ்தூரி...நிகழ்வுடன் பின்னூட்டம் தந்தமைக்கு...வேதனைதான்..

      நீக்கு
  8. அப்படி ஒருநாள் வந்தால் மிகுந்த சந்தோஷமே...
    வருமா என்பதே கேள்விக்குறி...

    பதிலளிநீக்கு
  9. /சட்டமும் சட்டக்காவலர்களும், பணத்திற்கும் பதவிக்கும் அடிபணியாமல் தங்கள் பணியைச் செவ்வனே ஆற்றும் ஒரு நன்னாள் நம் நாட்டிற்கு வராதா என்ற ஏக்கம் வருகின்றது// எனது வேண்டுதலும் அதே ..

    நாம் குடிக்காம காரோட்டினாலும் எதிரில் வரும் குடிகார அறிவில்லா ஜந்துக்களால் அவதிபடுவது அப்பாவி ஜனம்தானே :( ..குடித்து விட்டு ஏ சி அறையில் சிகரெட்டும் புகைத்து மயங்கி நெருப்பு பெட்டில் பரவி இறந்த ஒருவர் பற்றி பேப்பர்ல படிச்சிருக்கேன் ... .

    இது தேவையா என்று ஒவ்வொருவரும் சிந்தித்தாலே போதும் டாஸ்மாக் ஈயடிக்கும் ..அப்பாவிகளின் உயிர்களுக்கும் பாதுகாப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி..தங்களின் கருத்திற்கு...ஆம் ரூமில் அப்படி இருப்பது ஆபத்தே...

      நீக்கு
  10. ஒவ்வொரு விபத்திலும் வாகன ஓட்டிகளின் குடிப்பழக்கமே காரணமாக இருந்ததை தெளிவாகச் சொன்னீர்கள். மேலும் “நம்மை இவர்கலால் என்ன செய்து விட முடியும்?” என்ற அலட்சியம் வேறு அவர்களுக்கு.

    குடிப்பழக்கம் உடலுக்கு கேடு என்று தெரிந்தும் குடிக்கத்தான் செய்கிறார்கள். மதுவிலக்கை கொண்டு வந்தால் கள்ளச்சாராயம் குடிக்கிறார்கள். எப்படி பார்த்தாலும் அரசாங்கத்தால் மதுவை ஒழிக்க முடியாது. குடிப்பவர்களை அவர்களது குடும்பத்தார்தான் திருத்த முடியும்.

    பதிலளிநீக்கு
  11. இப்போது மக்களின் கவனத்தைக் கவர்ந்திருப்பது டாஸ்மாக். எனவே அது சம்பந்தமான போராட்டம்! ஒரு மாதத்துக்குமுன் சென்னையைச் சேர்ந்த இரண்டு நடுத்தர வயதுப் பெண்கள் கோடிக்கணக்கான மதிப்புள்ள கஞ்சா வைத்திருந்ததால் கைது செய்யப் பட்டார்கள். அவர்கள் யாரிடம் விற்றிருப்பார்கள்? பெரும்பாலும் கல்லூரிகளில்தான்.

    நீங்கள் சொல்லி இருப்பது போல ஊழல் புரையோடிப் போயிருக்கிறது. காவல்துறை மக்களைக் காக்கும் வேலையைத் தவிர மற்ற அனைத்தையும் செய்கிறது. அரசியல்வியாதிகள் பொதுமக்கள் நலனை நினைத்துத் தொலைநோக்குப் பார்வையில் செயல்படுவதில்லை.

    மதுப் பழக்கம் உள்ளிட்ட எந்தத் தீமையையும் ஒழித்துக் கட்ட 'திருடனாய்ப் பார்த்துத் திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' பாலிசிதான் சரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பர் ஸ்ரீராம் தங்களின் கருத்திற்கு...

      நீக்கு
  12. அப்படி ஒரு நாள் வருமேயானால் மகிழ்வோம் நண்பரே
    இப்பொழுது நடைபெறும் போராட்டங்கள் எல்லாம்
    வேர்ட்டு அரசியலுக்காகத்தான், ஏனென்றால்
    கடையை மூடச் சொல்லும்
    எந்த ஒரு அரசில் கட்சியும்
    தன் தொண்டர்களைப் பார்த்து குடிக்காதீர்கள்
    என கூறியதாக தெரியவில்லை,
    கட்சிக் காரர்கள் தாங்கள் நடத்தும்
    மது ஆலைகளையும் மூட முன் வரவில்லை
    பாவம் மக்கள்
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! கரந்தையார் தங்களின் கருத்திற்கு...

      நீக்கு
  13. குடி மட்டுமல்ல எல்லா துறைகளிலும் ஊடுருவிப் பாயும் ஊழல்கள் சட்டத்தையே புரட்டும் அளவு இருக்கின்றதே
    அதை எதிர்த்து மக்கள் நாம் போராடுவதில்லை. குடியை ஒழிக்க போராடுவது ஒரு புறம் இருக்கட்டும், நமது அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான, நமது வாழ்க்கைத் தரம் உயரத்
    தேவையானவற்றிற்கான உரிமையை விட்டுக் கொடுத்து, அந்த உரிமைகளுக்காக, அந்த உரிமைகளைப் பல சமயங்களில் பெறமுடியாமல் இருக்கும் ஊழல்களை எதிர்த்து  நாம் என்றேனும்
    போராடுகின்றோமா?////

    pathilum ningale ezuthi vittirkal.   (இல்லை) makkal porada aarampithal pothum naadu thaana urupada aarampikkum.

    சட்டமும் சட்டக்காவலர்களும், பணத்திற்கும் பதவிக்கும் அடிபணியாமல் தங்கள் பணியைச் செவ்வனே ஆற்றும் ஒரு நன்னாள் நம் நாட்டிற்கு வராதா என்ற ஏக்கம் வருகின்றது.
    கூடவே சட்ட விரோதச் செயல்களைச் செய்யாமல் சட்டத்தை மதித்து வாழும் மக்கள், தங்கள் வாழ்க்கைத் தரம் உயர வேண்டி உரிமைகளுக்காகக் குரல் எழுப்பும் மக்கள் அதிகமாக
    வாழும் நாடாக நம் நாடு மாறாதா, அந்த நாளும் வந்திடாதா என்ற ஏக்கமும் வருகின்றது.///



    enakkum athee...
    arumaiyaanathoru pathivu sir.
    vazthukkal.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மகேஷ் தங்களின் விரிவான கருத்திற்கு...

      நீக்கு
  14. பதில்கள்
    1. மிக்க நன்றி நாகேந்த்ர பாரதி நண்பரே தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  15. இதுதான் அய்யா..சட்டம் அனைவரக்கும் சமம் என்று சொல்லிக் கொள்கிற ஜனநாயகத்தின் லட்சனம்......

    பதிலளிநீக்கு
  16. என்று தொலையும் இந்தக் குடியெனும் கோரம்
    என்று பாடத்தோன்றுகிறது சகோதரரே!

    வருந்துகிறேன்!

    த ம 8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி இளமதி தங்களின் கருத்திற்கு...

      நீக்கு
  17. குடி குடிப்பவர்களை மட்டும் அல்லாமல் குடிக்காதவர்களையும் கெடுக்கிறது என்பதற்கு சிறந்த உதாரணம் இது போன்ற சம்பவங்கள்! ஏழைகளுக்கு ஓர் நீதியும் பணக்கார பிரபலங்களுக்கு ஓர் நீதியும் என்று நீதி வழங்கப்படுவது வேதனையானது. குடி இல்லா மாநிலம் உருவானால் நல்லது!

    பதிலளிநீக்கு
  18. பெருகி வரும் மதுப் பழக்கம், அதனால் ஏற்படும் போக்குவரத்து நேர்ச்சிகள் (விபத்துகள்), அதைத் தண்டிக்க அருகதையற்ற சட்டம், இருக்கிற கொஞ்சநஞ்சச் சட்ட நெறிகளையும் கழுத்தை நெரித்துக் கொல்லும் செல்வாக்கு என்று அனைத்தையும் தொடக்கத்திலிருந்து இறுதி வரை முழுமையாக அலசியிருக்கிறீர்கள்! நன்றி! பார்க்கப் போனால், அவரவர் பிள்ளைகளை அவரவர் ஒழுக்கமாக வளர்ப்பது ஒன்றுதான் இவை எல்லாவற்றுக்கும் தீர்வாக இருக்க முடியுமோ எனத் தோன்றுகிறது. ஆனால், அப்படியே நாம் கட்டுக்கோப்பாக வளர்த்தாலும் சுற்றிச் சூழ்ந்திருக்கும் இந்த நஞ்சு பாய்ந்த சமூகத்தில் சேர்ந்து கெட்டுப் போகாமல் அவர்கள் எத்தனை நாளுக்குத் தாக்குப் பிடிப்பார்கள் என்பது வலிபோக்கனார் ஒரு பதிவில் எழுதியிருந்தது போல கேள்விக்குறியான ஒன்றுதான். :-(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நன்பர் இபுஞா தங்களின் விரிவான விளக்காமான, நல்ல பின்னூட்டத்திற்கு....

      நீக்கு
  19. குடிகெடுக்கும் குடி உயிரையும் எடுக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி புலவர் ஐயா தங்களின் கருத்திற்கு...

      நீக்கு
  20. மொள்ளமாறிப்பயலுக்கும், முடிசவித்த சிரிக்கிக்கும் காதல் இருந்து தொலையட்டும் இதனால் பொது மக்கள் பாதிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம் இதுக்குத்தான் அரபு நாட்டு சட்டங்கள் வேண்டும் 80 குற்றங்கள் குறைய இதுவே வழி ஆனால் அரசியல்வாதிகள் விடமாட்டார்கள் காரணம் இதில் முதலில் பாதிக்கப்போவது அவர்களின் பிள்ளைகளே...

    மதுக்கடையை மூடுவது குடியை நிறுத்துவது அரசின் கையில் இருக்கிறது என்று சொல்வது முட்டாள்த்தனம் இது நமக்கு தேவையா இல்லையா என்ற சிற்றறிவுகூட இல்லாதவனுக்கு 6 அறிவு 80தே தவறுதான்

    இந்தப்போராட்டம் 80 எல்லாம் கண்மூடித்தனமான சித்து விளையாட்டு இதில் தற்போது மாணவர்கள் சிக்கியுள்ளார்கள் இது எதில் கொண்டு போய் விடப்போகிறதோ தெரியவில்லை.
    நல்லதொரு பதிவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி தங்களின் விரிவான கருத்திற்கு!

      நீக்கு
  21. சட்டத்தை பணத்தால் வளைக்க முடிகிற இவர்களுக்கு, மனசாட்சி கூடவா கேட்காது ?

    பதிலளிநீக்கு
  22. குடி எல்லோர் குடியையும் கெடுக்கும்.காத்திருப்போம் நன்னாளுக்காய்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சென்னைப்பித்தன் ஐயா தங்களின் கருத்திற்கு...

      நீக்கு
  23. படிக்கப் படிக்க ரத்தம் கொதித்தது. இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கேள்விப்பட்டு மறந்து போன இந்த விபத்துகளைப் பற்றி நினைவூட்டினீர்கள்.

    லஞ்ச லாவண்யமும் ஊழலும்தான் எல்லாவற்றுக்கும் காரணம். முதுகெலும்பு அற்றுப் போனோமே என்று வருந்தியதுண்டு. வலைத்தளத்தில் கூட இவற்றை எல்லாம் நினைத்தாலும் பகிராமல் இருக்கும் என்னை நினைத்து வெட்கியது உண்டு. ஹேட்ஸ் ஆஃப் துளசி சகோ & கீத்ஸ். உங்கள் இருவரின் தைரியத்துக்கும்.

    சலாம் சலாம். :)

    பதிலளிநீக்கு
  24. குடிப்பது எவ்வளவு சேதம் விளைவிக்கிறது என்று விவரித்து எழுதி இருக்கிறீர்கள் குடிப்பது என்பது மேல்மட்ட மத்தியதர மஅளிடம் ஒரு ஸ்டேடஸ் சிம்பல் எனும் அடையாளத்தைப் பெற்று விட்டது .ஒரு விழிப்புணர்வு பதிவு. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  25. பணம் மட்டுமே பிரதானமாகி விட்ட இந்த நாட்டில் உயிருக்கு மதிப்பில்லை. ஹேமமாலினி தன் தவறை மறைக்கக் குழந்தையின் தகப்பன் மேல் குற்றம் சுமத்தினார்! அது மிகவும் மோசமான நடவடிக்கை! :( இந்த நாட்டில் அரசியல்வாதிகளுக்கும், பெரும்பணக்காரர்களுக்கும் தவறுகள் செய்யவும் அதை மறைக்கவும் முழுச் சுதந்திரம் உண்டு! :(

    பதிலளிநீக்கு
  26. அன்புள்ள அய்யா,

    “குடியைக் கெடுக்கும் குடி”

    ஒரு பாதிரியார் வேகமாக பைக்கை ஓட்டிக்கொண்டு வந்தார். எதிரே வந்தவர்,
    ”ஏன் இவ்வளவு வேகமாக ஓட்டுகிறீர்கள்....?” என்று கேட்டாராம். அதற்கு பாதிரியார்,
    “எனக்கு என்ன புள்ளையா குட்டியா...?” என்றாராம்.
    “எங்களுக்கு புள்ள குட்டி இருக்கில்ல...” என்று நண்பர் சொன்னதாகச் சொன்னார்.

    குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவர்கள் அவர்கள் அழிவதோடு... அப்பாவி மக்களை அழித்து, அவர்களின் குடும்பத்தையும் நிர்கதியாக்கி விடுகின்றனர் என்பதை நன்கு உணர்ந்து கொள்ளச் செய்தீர்கள்.
    அதோடு மட்டுமல்லாமல் ஊழல்களை எதிர்த்து நாம் எதிர்த்துப் போராடவேண்டும் என்ற வேண்டுகோளை வைத்திருக்கிறீர்கள்.
    மக்கள் விழிக்க வேண்டும்... விழிப்புணர்வு ஏற்படவேண்டும்.

    “நல்ல மனுஷன் சாராயத்தை தொட்டதுமில்லை-அது தொட்டவனை லேசில தான் விட்டதுமில்லை-மனுஷனோட ரத்தத்தை தான் அட்டை குடிக்கும் ஆனா மனைவி மக்கள் குடும்பத்தையே பட்டை குடிக்கும்-“குடிக்காதே தம்பி குடிக்காதே-நீ குடிச்சிருந்தா ஊருலகம் மதிக்காதே,உன் வீட்டை ஒரு கழுதை கூட மிதிக்காதே”
    -வாலியின் வார்த்தையை மதித்து நடக்க வேண்டும். அந்த நாளும் நிச்சயம்வந்திடும்.

    நன்றி.
    த.ம. 13

    பதிலளிநீக்கு
  27. வேதனையான செயல்கள் .... ஹம் ..என்ன செய்வது ....அவரவர் சிந்தனையை உபயோகிக்கவேன்டிய நேரம் இது...

    பதிலளிநீக்கு