சனி, 23 நவம்பர், 2013

அதிசயம் ஆனால் உண்மை




ஆல்பெர்ட் ஷ்வெய்ஷரைப் (Albert Schweitzer) பற்றிக் கேள்விபட்டிருபீர்கள். தன் 21 அம் வயதில் தனக்கு மிகவும், மகிழ்சிகரமான வாழ்வு தந்த இறைவனுக்கு நன்றி சொல்ல, உதவியற்று உழலும் மனிதர்களுக்கு உதவுவதே சிறந்த வழி என்பதை உணர்ந்தவர்.  பின்பு ஒரு போதும் வருந்தக் கூடாது என்று ஒன்பது வருடங்கள் தன் மகிழ்சிகரமான வழ்க்கையைத் தொடர்ந்த பின், தன் 30 வது வயதில் ஆப்பிரிக்க நாடுகளில் மருத்துவர்களின் அவசியத்தை உணர்ந்து 7 ஆண்டு காலம் மருத்துவம் பயின்று, 
தன் மனைவியை செவிலியும் ஆக்கி ஆப்பிரிக்கா சென்று மருத்துவச் சேவை புரிந்த மஹான்.  அது போல் ஒரு மஹான் காசரகோடு (கேரளா ) அருகே உள்ள பதிஅடுக்கா எனும் இடத்தில்.  பெயர்  சாய்ராம் பட் என்று அழைக்கப்படும் 
K.N. கோபாலகிருஷ்ண பட்.



 ஒரு சாரண விவசாயி.  சாதித்ததோ வியக்க வைக்கும் சாதனை. கடந்த மாதம், மற்றவர்களின் உதவி ஏதும் இன்றி, தான் கட்டிய 208 வது வீட்டின் சாவியை வீடில்லாத ஒரு ஏழைக்குக் கொடுத்தார். அன்றைய தினம், காசரகோடு மாவட்டத்திற்கு மட்டுமல்ல, கேரள மாநிலத்துக்கு மட்டுமல்ல, தென்னகத்துக்கே ஒரு பொன்னாள்.  அரசியல்வாதிகளும், எழுத்தாளர்கள், சமூக சேவகர்கள் என்று எல்லாத் துறையிலும் உள்ளவர்கள் அவரைப் பாராட்டிப் பேசவும், எழுதவும் செய்தார்கள்  தனி ஒரு மனிதனுக்கு தன் வாழ்நாளில் 208 வீடுகள் வீடில்லாத ஏழைகளுக்குக் கட்டிக் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்த ஒரு மஹான். இவருடைய இந்தச் சேவை ஏராளமான மனிதர்களுக்கு ஊக்கம் தரும் ஒன்றாக மாறியிருக்கிறது.  பெரும்பான்மையான பள்ளிகளில் பயிலும் குழந்தைகள், தங்களுடன் பயிலும் வீடில்லாத ஏழைக் குழந்தைகளுக்கு வீடு கட்டி கொடுக்கும் சம்பவங்கள் ஏராளமாக நடந்து வருகிறது.  சமூக்சேவையில் ஈடுபட்டிருக்கும் ஸ்தாபனங்களும் இது போன்ற சேவையில் ஈடுபடத் தொடங்கி இருக்கின்றன.  அப்படி இந்த தனிமனிதனின் சாதனை எல்லோருக்கும் ஒரு முனுதாரணாமாக மாறியிருக்கிறது.



3 கருத்துகள்:

  1. வணக்கம்

    சரித்திரத்தில் இடம் பிடித்த மனிதர் பற்றிய பதிவு மிக அழகாக எழுதியள்ளிர்கள் வாழ்த்துக்கள் உங்கள் வலைப்பக்கம் என் வருகை தொடரும்....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. உங்கள் வருகைக்கும், கருத்திற்கும், வாழ்த்திற்கும், எங்கள் வலைப்பக்கம் உங்கள் வருகை தொடர்வதற்கும் மிக்க மிக்க நன்றி!! இது போன்ற உங்கள் ஊக்கம் தரும் கருத்துக்கள் எங்களுக்கு ஆக்கம் மிகு படைப்புகளை உருவாக்க உதவும்.!! நன்றி மீண்டும!

    பதிலளிநீக்கு
  3. ஆச்சரியமான ஆசாமிகள். இவர்களைப்போன்றவர்களின் செயல்களை பாராட்டுவதோடு ஆங்காங்கே பரவும் வழிவகை செய்ய வேண்டும்.

    பதிலளிநீக்கு