‘அவதாரின்” பாதிப்பால் (INFLUENCE) எடுக்கப்பட்டு, ஆனால், “அவதார்” எந்த விதத்திலும் இப்படத்தை பாதிக்கவில்லை என்பதை நிரூபிப்பதில் மட்டும்
ஓரளவு வெற்றி கண்ட படம். காதலன், காணாமல் போன தன் காதலியைத் தேடி சென்னையிலிருந்து,
மும்பை செல்வது போல், இறந்து போன தன் காதலியைத் தேடி (AT LEAST காதலியைப் போல் உருவமுள்ள ஒர்த்தியைத் தேடி) பூமி போல் மனிதர்களைக் கொண்ட (தமிழ்
மொழி!!!! பேசும்) ஒரு கிரஹத்துக்குச் செல்லும் (கொண்டு செல்லப்படும்) கதை. இரண்டாம் உலகத்தை “இண்டெர்வெல்லுக்குப் பின்
தான் காட்டுவேன்”, என்று அடம் பிடித்து முதல் உலகத்தை ஜவ்வாக இழுத்தது கொஞ்சம் மனிதாபிமானமற்ற
(??!!) செயலாகிவிட்டது.
இரண்டாம் உலகில், பூக்கள் விரிய முதல் உலக மது (ஆர்யா)
வரும் வரைக் காத்திருந்தது, அது போல் காதல் உணர்வுகளை அறிய இதே மது வரும் வரை
(தற்கொலை முயற்சி செய்தும் சாகாமல்!!) இரண்டாம் உலக அனுஷ்கா காத்திருந்தது,
இதெல்லாம் கொஞ்சம் உள்வாங்க கடினம் என்றாலும், இரண்டாம் உலகை மிகவும் அருமையாகக்
கண் குளிர காட்டியதைப் பாராட்டத்தான் வேண்டும். க்ராஃபிக்ஸ்-GRAPHICS, காஸ்ட்யூம்-COSTUME, ஆர்ட் டைரெக்ஷன்-ART DIRECTION இவை அருமை. இரண்டாம் உலகத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட
இடங்கள், கதாபாத்திரத் தேர்வு, அவர்களுடைய டயலாக் டெலிவரி இவற்றில் எல்லாம் காண்பித்த
கவனத்தையும், ஆர்வத்தையும், ஸ்க்ரீன் ப்ளேயிலும் – SCREEN PLAY – காண்பித்திருந்தால் படத்தில்
விழுந்த பல ஓட்டைகளையும், தவிர்த்திருந்திருக்கலாம்.
முதல் உலக அனுஷ்கா, இண்டெர்வெல்லுக்கு
முன், ஆர்யாவைக் கட்டிப் பிடிக்கின்ற (ஸிக்னலில் -SIGNAL லில் காத்திருக்கும்
வண்டிக்குப் பின்னால் ப்ரேக் – BRAKE பிடிக்காமல்
கார் வந்து இடிப்பது போல்) காட்சியிலிருந்த (உட்கார்ந்திருந்த ரோவே – ROW குலுங்கிருச்சு!!!) இனிமையும், ஆவேசமும், இரண்டாம் உலக அனுஷ்கா, இரண்டாம் உலக ஆர்யாவிற்கு, கடைசிக் காட்சியில் கொடுக்கும் முத்தத்தில் இல்லை. படத்தில், ஆர்யாவின் நடிப்பு, அதற்காக அவர் போட்ட உழைப்பினால் நன்றாக மிளிர்கிறது. அனுஷ்காவின் நடிப்பும் மிக நன்றாக உள்ளது.
காதல் செய்வதிலும், கட்டிப் பிடிப்பதிலும் கெட்டிக்காரர்கள்
முதல் உலகத்தினர்தான் என்பது பிரபஞ்ச சத்தியம் போலத் தெரிகிறது. அதனால் தான் “அந்தத் தெய்வத்தாய்” மதுவை இரண்டாம் உலகத்திற்குக் கொண்டு செல்கிறார்
போலும். (காதல் எல்லாம் இல்லாமல், அந்தக் கிரஹத்துல கல்யாணம் முடித்துக்
குழந்தைகளும் பெத்துதானிருக்கிறார்கள்).
செல்வராகவன் எடுத்த ரிஸ்கிற்காகவும், நம் படங்களிலும் க்ராஃபிக்ஸின்
அட்வான்ஸ்டு டெக்னாலஜி – ADVANCED TECHNOLOGY
OF GRAPHICS- உபயோகப் படுத்துவதை
ஊக்குவிக்கவும் இப்படத்தைப் பார்க்கலாம்.
வணக்கம்
பதிலளிநீக்குபட விமர்சனம் நன்றாக எழுதியுள்ளிர்கள் படம் பார்த்தது போல ஒரு உணர்வு.. வாழத்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி! நண்பரே!
பதிலளிநீக்கு