ஹலோ தில்லைஅகத்தானே! எப்படி இருக்கீங்க? என்னாச்சு? நியூஸ் ஒண்ணும் காணோம்?
ஹலோ! கீதா...நாலடியாரே! நான்
நல்லாத்தான் இருக்கேன். நியூஸுக்கு என்ன
பஞ்சம்? நேத்து இங்க கேரளாவுல பந்த். நீ படிச்சுருப்ப. அதான் கஸ்தூரி ரங்கன் குழு, மேற்குத் தொடர்ச்சி
மலைத்தொடரைப் பாதுகாப்பது பத்தி கொடுத்திருக்கிற சில பரிந்துரைகளை அமல்படுத்த
எடுத்த மத்திய அரசின் முடிவை எதிர்த்துதான் இந்த பந்த்.
அதான் தெரிஞ்ச விஷயமாச்சே! கேரளாவுல ஒரு
நல்ல விஷயம் வந்துடக் கூடாதே. உடனே அதை
எதிர்த்து பந்த்! அதுவும் இடது சாரி உடனே கொடி பிடிச்சுடுவாங்களே! ரொம்பவே
பாப்புலர்.
ஆனா இதுல என்னன்னா அந்தக் குழு எடுத்துருக்கற வரைபடத்துல மலைகள்ள உள்ள வயல்
பகுதிகளும், தோட்டப் பகுதிகளும் (ரப்பர், மிளகு, காப்பி, தேயிலை) வனபாதுகாப்பு
ஏரியாக்குள்ள வந்துடுதாம். அப்ப அங்க வசிக்கற விவசாயிகள், தொழிலாளர்கள் அவர்கள் வாழ்க்கை
பாதிக்கபடுமாம் அதான் இந்த ஹர்த்தால். 11 மாவட்டங்களில், 121 பஞ்சாயத்துக்கள்
பாதிப்படையுமாம். C.M. உம்மன்சாண்டி, அந்த பரிந்துரையை விவசாயிகள்
பாதிக்கப்படாம என்ன செய்யலாம்னு ஆராய நிபுணர் குழு அமைச்சு, அவங்க சொல்லற
திருத்தங்களை ஏற்கணும்னு கோரிக்கை வைக்கலாம்னு சொல்லிருக்காராம். கோர்ட் இந்த பந்த்னால அரசுக்கு எவ்வளவு
பாதிப்புனும், கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரை பத்தி ஒரு விழிப்புணர்வை மக்கள்
மத்தியில அரசு ஏற்படுத்தணும் அப்படினு சொல்லிருக்காம்.
கேரளாவுல ஹர்த்தால்னா ஜாலிதான் எல்லாருக்கும். சின்னப் பசங்க கிரிக்கெட் விளையாட, இளம் வயது பசங்க கம்ப்யூட்டர்ல கேம்ஸ் விளையாட,
வேலை செய்யும் பெண்கள் வீட்டுல டி.வி. பார்க்க, ஆண்கள் பாட்டில தூக்கிட்டு,
கூட்டம் போட்டு தண்ணி அடிக்க இப்படி பல விஷயம் செய்ய இந்த ஹர்த்தால் உதவியா
இருக்குனு சொல்லு....
.சரி வேற என்ன அங்க விசேஷங்கள்?
.“Fire In the Blood” அப்படினு ஒரு ஆவணப் பட்த்தை, டைலன் மோஹன்
அப்படின்றவரு எடுத்துருக்காரு. அதுல என்னன்னா,
மேற்கத்திய மருந்து கம்பெனிங்களோட லாப வேட்டைய அப்படியே வெட்ட வெளிச்சம் போட்டு
காட்டிருக்காங்களாம். அதப்
பார்க்கறவங்களுக்கு கண்டிப்பா ஆத்திரமா வருமாம்.
அந்த அளவுக்கு மருந்து கம்பெனிங்க மனுஷ உயிர பொருட்டா நினைக்காம லாபம்
ஒண்ணுதான் குறியா இருக்கறதா வெவரமா சொல்லிருக்காங்களாம்பா. அத முக்கியமான நாடாளுமன்றங்கள்ள போட்டுக்
காட்டறாங்களாம்.
அதான் மருத்துவ உலகத்துல நடக்கற அட்டூழியங்கள் எல்லாம் தெரிஞ்சதுதானே! சரி, அப்படியே நம்ம நாடாளு மன்றத்துலயும்
போடுவாங்களாமா? நம்ம நாட்டுக்கு ரொம்பவேத்
தேவை.
ஆங்க் அதுக்கும் முயற்சி செய்றாங்களாம். .ஏதோ அதப் பாத்தாவது திருந்தினா
சரிதான்...இன்னுரு interesting news கேளு...உன் friend மல்லிகாக்கு கல்யாணமாம்.
யாரு உன் பக்கத்து வீட்டு மல்லிகாவா?
.அடப்பாவி!! அவளையும் லுக் விட்டுருக்கியா? அவ
இல்ல நான் சொன்னது பாலிவுட் மல்லிகா ஷெராவத், தசாவதாரத்துல கிளு, கிளுப்பு
டான்ஸ்..... 37 வயசு, 24 வயசு பையன கல்யாணம் பண்ணிக்கறாங்களாம்.
போற போக்க பாத்தா 80 வயசு பாட்டி, 20 வயசு பையன கல்யாணம் பண்ணிக்குவாங்க
போல... மல்லிகாவோட முதல் கல்யாணம் டைவோர்ஸ்தானே?
ஆமாமாம்.....இப்பவும் மல்லிகா தாலி கட்டின மறு நிமிஷம் டைவோர்ஸ் பண்ணாம
இருந்தா சரி..... எந்த வயசா இருந்தா என்ன...வேலை ஒழுங்கா நடந்தா சரி...!!!!
ஒரு நியூஸ் படிச்சியா....வயல்ல வேலை செய்யும்போது மின்னல் தாக்கி ஒரு பெண்
இறந்துட்டாங்களாம்..ஆனா அவங்களோட வேல செஞ்ச மத்த 8 பேரு உயிர்
தப்பிட்டாங்களாம். இத போலீஸ் வழக்கு
பதிஞ்சு விசாரிச்சிட்டு இருக்காங்களாம்...வினோதமா இருக்கு இல்ல...இத போயி என்ன
விசாரணை...
ஒருவேளை “வாம்மா மின்னல்” அப்படின்னு மின்னல ஸ்டேஷன் வரசொல்லி விசாரிக்க போறாங்க போல...."ஏன் அந்த
அம்மாவை மட்டும் போட்டுத் தள்ளின அதனால, உன்ன இந்திய சட்டத்தின் கீழ் Section 302 ன் படி, கைது செய்யறோம்" அப்படினு...
ஓ! அதான் போலீஸ் மின்னலத் தேடி தீவிர வேட்டை போல....பாவம் போலீஸ் கருகிடாம
இருக்கணும்...உள்ள வழக்கெல்லாம் விட்டுட்டு.....எதுக்குதான் வழக்கு போட்டு
விசாரணைனு இல்லாம...
மழை நீர் வடிகால்வாய்களில் முறைகேடான வகையில் கழிவு நீர் இணைப்புகள் 1.16
லட்சம் துண்டிப்பு னு நியூஸ்..
ஊழல் நாறுதுனு சொல்லு...ஊரெல்லாம் நாறுதோ?
ஏற்கனவே நாத்தம்தானே.....இதுல என்ன புதுசா?
இதக் கேளு...11-12-13 அதிர்ஷ்ட தினமா...அபூர்வ தினமா...அப்படினு......பைத்தியகாரங்க
நிறைய பேரு இருப்பாங்க போல...இந்த தேதிலதான் கல்யாணம் fix பண்ணிருக்காங்களாம் நிறைய பேரு, இந்த நாள்ல தான் பிள்ளை பெத்துகணும்னு சிசேரியனுக்கு
அட்வான்ஸ் புக்கிங்காம்....ஸ்டார் ஹோட்டெல்ஸ் எல்லாம் கொண்டாட்டத்துக்கு
தாயாராகிட்டு இருக்காங்களாம்....இது ஜஸ்ட் வரிசையா வரதுனால இந்த
கொண்டாட்டமாம்......
அத நானும் படிச்சேன்...நமக்கு இதுவும் எல்லா நாளப் போலத்தான்ன.....இதுல வேற
இந்த நாள ஜோதிட சாஸ்திரப்படிகூட ஆராஞ்சங்களாம் நம்ம மக்கள். என்னத்த சொல்லறது....காச வைச்சுக்கிட்டு
என்னத்த செய்யறதுனு தெரில போல....
Technology வளர வளர...உலகம் போற போக்க பாத்தா நீயும்,
நானும் பேசறத கூட ஒட்டு கேப்பாங்க போல.....இப்ப பாரு இந்தோனேசிய அதிபரின் சொலைபேசி
ஒட்டு கேட்புனு ஆஸ்திரேலியா உளவு பார்த்ததாக நியூஸ்....கொஞ்ச நாள் முன்னாடிதான்
அமெரிக்கா இத மாதிரி சில நாடுகள ஒட்டுக் கேட்டு வேவு பார்த்ததா நியூஸ் வந்துச்சு....அதான் சொன்னேன்..
ஆமாம் நாம ரெண்டு பேரும் அப்படியே VVIP பாரு, ஒட்டு
கேக்க....சரி அப்படியாவது நம்ம பேசறத ஒரு ஆளு கேக்கட்டும்.....வாசிக்கதான்
மாட்டேன்றாங்க....at least ...ஒட்டுக் கேக்கவாவது செஞ்சுட்டு போட்டும்...
இன்னுரு இன்டெரெஸ்டிங்க் செய்தி. பாண்டிச்சேரில ஜிப்மெர்ல ரெண்டு பெண்களுக்கு
பிறந்த குழந்தைகள்ல இரண்டுக்குமே ஒரே அம்மா பெயர் போட்டு சீட்டு கட்டியிருந்தாங்களாம். குசழந்தைகள் மாறிடுச்சாம்...இப்ப அதனால, DNA டெஸ்ட் பண்ண சொல்லிருக்காங்க.
தமிழ் Directors please note this
down…. படத்துக்கு அருமையான plot கிடைச்சுருக்குனு சொல்லு.....கிரேசி மோகன கதை எழுத சொன்னா...இத வைச்சு ஒரு ஆளமாறாட்டக்
கதையே எழுதிடுவாரு. ஆனா அவருதான் ஏற்கனவே எழுதிருக்காரே....
இப்படி ஒரு மூடநம்பிக்கை பாரு...தேவாங்கு ஒரு அப்பாவி, குரங்கு குடும்பம்..இதச்
சமைச்சு சாப்பிட்டா கண் நல்லாத் தெரியுமாம்.....
இந்த மாதிரி மூட நம்பிக்கைகளுக்குத்தான் நம்ம நாடு பெயரெடுத்த நாடாச்சே....இதனாலதான்
நாம உருப்படாம போயிட்டுருக்கோம்.
நாம் நேத்திக்குத்தானே “சிவசிதம்பரம்னு” ஒரு கதைய நம்ம வலைப்பூல போட்டோம். இன்னிக்கு பாரு “உங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக
இருக்கிறார்களா” அப்படினு ஒரு கட்டுரை, தி இந்து தமிழ் பேப்பர்ல வந்திருக்கு. அருமையா இருக்கு.......
கூகிள் கூட இந்த மாதிரி குழந்தைகளை பாலியல் ரீதியாக கொடுமை
படுத்தறதை,இன்டெர்னெட்டிலிருந்து நீக்கவும், இனி upload and download செய்யாமல்
இருக்க நடவடிக்கை எடுத்துருக்காங்களாம்....இதுக்காக வேண்டி 200 பேரு கடந்த 2 மாசமா
தீயா வேலை செஞ்சுட்டுருக்காங்களாம்...
ஏதோ நல்லது நடந்தா சரிதான்....இப்பலாம் இந்த இன்டெர்னெட்ல வர ஆபாசமான
வீடியோக்களதான் நம்ம நாட்டுல நடக்கற பாலியல் பலாத்காரத்துக்கு மூல காரணமாக
இருக்குது......சில சமயம் ஒரு ஆட்டோல ஏற முடியல...ஒரு பெண் தனியா கடைல போயி சாமான்
வாங்கமுடில..ஏன்...இளம் ஆசிரியைகள் higher
classes ல பாடம் நடத்த
முடில...அந்த அளவுக்கு இருக்கு ஆண்களுடைய பார்வைகள்.......ஏதோ ஒரு பாட்டுல வரும்ல
...’பார்த்தாலே கர்பம் உண்டாயுரும்’ னு அந்த மாதிரி....சரி சரி லேட்டாகிப் போச்சுப்பா.......நாளைக்கு continue பண்னுவோம் நம்ம அரட்டைய....
பிளஸ் வோட்டு போட்டாச்சு! அது ஜூ ஜூ பி!
பதிலளிநீக்குநான் இனி சொல்லும் கருத்துகள் ஒரு வாசகர் என்ற முறையில் மட்டுமே!
இப்படி ஏகப்பட்ட சமாசாரங்களை ஒரே இடுகையில் போட்டா எப்படி?
பிரித்து போடுங்கள். இந்த இடுகையிலே எல்லாவற்றையும் போட்டு....எல்லா செய்திகளையும் ஓட்டுக்கா படிச்சா..அஜீரணம் தான்.
கவனம்!
உங்கள் suggestion க்கும், + வோட்டுக்கும் மிக்க மிக்க நன்றி ! அஜீரணம் உண்டாகாமல் இருக்க கண்டிப்பாகப் பின் பற்றபடும்.! , இந்த மாதிரியான கருத்துக்கள் தான் எங்களுக்கும் அவசியம் உங்களைப் போன்ற பழம் தின்னு கொட்டை போட்டவர்கள் !!?? சொன்னால் எங்கள் இடுகைகளையும், வலைப்பூவையும் மிளிர வைக்க உதவும்....We are very happy.....So, Thanks a lot!!!
நீக்கு