சாதி அடிப்படையிலான மயானங்களைப் பொதுவாக்க மாநகராட்சி
நடவடிக்கை.
செத்தப்பிறகும் சாதியா? ஏங்க
இருக்கும்போதுதான் சாதி பார்த்து, பார்த்துச் சீரழிந்துகொண்டு இருக்கிறோம்.
ஜப்பான்காரனும், அமெரிக்காகாரனும் என்னெல்லாமோ ஆராய்ச்சி பண்ணிக், கண்டுபிடித்து எங்கேயோப்
போய்கொண்டு இருக்கும்போது நாம் மட்டும்
என்னடானா, இருக்கின்ற சாதிகள் பத்தாது
என்று இன்னும் புதுசா ஏதாவது சாதி சேர்த்துக்கலாமானு ஆராய்ச்சி பண்ணிக்கொண்டு
இருக்கிறோம். சாதிகள் பேரில் புதிய, புதிய கட்சிகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.
சாதி, மதச் சண்டைகளுக்கு குறைச்சலே இல்லை.
இதுல வேற நாம் கட்டுரை எழுதும்போது, இந்தியாவில் பல சாதிகளும்,
மதங்களுமிருந்தாலும் இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக சகோதர, சகோதரிகளாக வாழ்ந்து
வருகின்றோம்னு சும்மானாலும் ஜம்பம் அடித்துக் கொள்ள வேண்டியது. காதுல பூ சுத்தும்
வேலை.
இன்றைய சூழலில் (ஓரளவிற்கு) நகரங்களைத் தவிர, இன்னும் கூட இந்தியக்
கிராமங்களிலும், டவுண்களிலும், வேற வேற ஜாதிப் பெண்ணும், பையனும் கல்யாணம் செய்து
கொண்டார்கள் என்றால் அந்தப் பையனுக்கும், பெண்ணிற்கும் சரி, அவர்கள் குடும்பத்தாருக்கும்
சரி, உயிருக்கு உத்தரவாதம் இல்லை. அதில் ஒருவர் முற்பட்டவராகவோ, மற்றொருவர்
பிற்பட்டவராகவோ, இல்லை, ஒருவர் பிற்பட்டவர், மற்றொருவர் தாழ்த்தப்பட்டவர் (எல்லாம்
நம் சமூகம் வைத்தப் பெயர்கள்தான்) என்றாலோ, பிரச்சினை அம்மா, அப்பாவின் உயிர்
பலியோடு முடிவதில்லை. இரண்டு கிராமங்கள், இரண்டு சமுதாயங்களின், உறாவினர்களின்
சண்டையில் முடிந்து பல உயிர்களின் பலியில்தான் முடிகிறது. இதைத்தான் நாம்
சமீபத்தில் இளவரசன், திவ்யாவிற்கு நடந்த சம்பவத்தின் மூலம் அறிந்தோமே.
எத்தனையோ இளவரசன் திவ்யாக்கள் பலியாகித்தான் இருக்கிறார்கள். உயிருடன் இருக்கும்போது சாதி பார்த்து, அதனால்
உயிரழந்து, பொதுவாக்கப்படப்போகிற மயானத்தில்(!?) எரிக்கப்படுதல், இல்லைப்
புதைக்கப்படுதல்.!!! என்ன ஒரு
முரண்பாடு!!? விந்தையான சமூகம்!!!
உயிரோடு இருக்கும் போது நடக்கின்ற சாதி வெறியை, சாதிச் சண்டைகளையும், சாதியையும்
ஒழிக்காதவர்கள், ஏதோ செத்தப்பிறகாவது, எரிப்பதற்கான சாதி அடிப்படையில் இருக்கும் மயானங்களைப்
பொதுவாக்க நடவடிக்கை எடுக்கிறார்களே என்று மனதை சமாதானப்படுத்திக் கொள்ளத்தான்
வேண்டும் போல. எரித்தபின்னோ, புதைத்து
அழுகிய பின்னோ கிடைக்கும் எலும்புத்துண்டுகள் எந்த சாதியைச் சேர்ந்தவை? யாராலும் சொல்ல முடியுமா?
கமலஹாசன் தன் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்த போது “சாதி” என்று இருந்த இடத்தில், பள்ளி நிர்வாகம் சாதியைத்தான்
குற்ப்பிட வேண்டும் என்று சொன்னபோதும் கூட ‘மனித சாதி’ என்றுதான், தான் எழுதுவேன் என்று குறிப்பிட்டதாக
எங்கோ படித்த நினைவு. இது போன்ற ஒரு சிந்தனை உள்ளவர்கள் தமிழகத்தில் பெருகி
வரவேண்டும். சாதியைக் குறிப்பிடாதவர்களுக்கு இடஒதுக்கீடு, கலப்புத் திருமணம் செய்பவர்களுக்கும்,
அவர்களது குழந்தைகளுக்கும் இடஒதுக்கீடு
என்று அரசே செய்ய முன்வந்தால் கண்டிப்பாக இனிவரும் காலத்தில் சாதி ஒழிந்து போக
வாய்புண்டு. ஒன்று, அரசு சாதியைக் கிள்ளி எறியவேண்டும். இல்லையென்றால் மக்கள் புரட்சி எழ
வேண்டும். அப்பொழுதுதான் இதற்கு ஒரு
முடிவு வரும். ஆனால், அரசாட்சி செய்யும் அரசியல்
வாதிகளும், மக்களுமே இந்தச் சாதியை வைத்து சித்து விளையாட்டு விளையாடிக் கொண்டு
இருக்கும்போது, அரசியல் சட்டம் வேடிக்கப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறதே தவிர
நாடு உருப்படுவதற்கானப் பாதையைக் காட்டுவதாகத் தெரியவில்லை. ஜோக்காளி, நடிகர் சூர்யா பேசியதைப் பதிவு
செய்து பதிவில் கேட்டது போல் “இந்தப் பூனைக்கு யார் மணி கட்டுவது”? ஒளிமய(யான)மான எதிர்காலம்??!!
ஜாதி மதம் இந்த இரண்டும் இந்தியா எதையும் சாதிக்க்விடாது! ஒருவன் வாழ மற்றொருவன் நசுக்கப்படவேண்டும்---இது தான் இந்தியா. இதை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு தலையாட்ட முட்டாள் ஜனங்கள்!
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கு மிக்க நன்றி நம்பள்கி. என்ன கேடு கெட்ட பிழைப்போ! இந்தியா உருப்படப் போவதில்லை என்பதுதான் நிஜமானது! உங்கள் கதுத்துகு மிக்க நன்றி!. நம்பஉங்கள் பதிவுகளை வாசித்து நானும் எனது தோழியும் ரொம்ப ரசித்துப் பேசுவதுண்டு.
நீக்குநண்பரே, இழவு வீட்டிற்குப் போய், 'இது பிணம் தானே! வேறு சாதியினரின் இடுகாட்டில் அடக்கம் செய்யலாமே! பிணத்திற்குத் தெரியவா போகிறது?" என்று சொல்லிப் பாருங்களேன், அனேகமாக அடுத்த பிணம் உங்களுடையதாகத்தான் இருக்கும்! சாதி வெறியர்களுக்கு, உயிருள்ள மனிதனும் ஒன்று தான், பிணமும் ஒன்று தான். சுடுகாட்டைப் பற்றி யார் கவலைபடப்போகிறார்கள்!
பதிலளிநீக்குஉங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி.!! நண்பரே.! நீங்கள் சொல்வது சரிதான். அப்போனா நாம் எல்லோரும் நடைப் பிணங்கள்?!! நன்றி உங்கள் கருத்துக்கு!
நீக்கு