செவ்வாய், 26 நவம்பர், 2013

மாதர் தம்மை இழிவு செய்யும் மடைமையைக் கொளுத்துவோம்






அன்றே குரல் கொடுத்துவிட்டார் பாரதி. இன்று 25/11, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம். நவம்பர் மாதம் 25ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் உலக அளவில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைகளை ஒழிப்பு தினமாக, UN ஆல் அனுசரிக்கப்படுகிறது.
1960 ஆம் வருடம் இதே நாளில், டொமினிகா ரிபப்ளிக்கில், அரசியல் ஆர்வலர்களான Hermanas Mirabal-Mirabal சகோதரிகள் 3 பேர், Rafael Trujillo வின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்ததனால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். எனவே, 1999 ஆம் வருடத்திலிருந்து அந்தச் சகோதரிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. (விவரம் Wikipedia).
இந்நாளில், நாம், சமீபத்தில் தாலிபன் தீவிர வாதிகளால் மிருகத்தனமாக்க் கொல்லப்பட்ட மேற்கு வங்க எழுத்தாசிரியை, சுஷ்மிதா பானர்ஜியை  மறக்கக் கூடாது. தான் உயிருக்கு உயிராய் நேசித்த ஜான்பாஸ்கானை மணம் முடித்து அவருடன் இன்பமான இல்லற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்த போது, தலிபான் தீவிரவாதிகள் அவரை மதம் மாற வற்புறுத்திய போது அஞ்சாது அதற்கு எதிராகப் போராடி உயிருக்கு ஆபத்து வரும் என்ற நிலையில் 18 வருடங்களுக்கு முன்பு, மேற்கு வங்கத்திற்குத் திரும்பியவர். பெண் சுதந்திரத்திற்கு எதிரான சமூக அநீதிகளைத் தான் எழுதிய “A Kabuli Man’s Bengali Wife” என்ற புத்தகத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டியவர்.  சமீப காலத்தில் மீண்டும் தன் கணவருடன் சேர்ந்து வாழ ஆப்கானிஸ்தான் சென்ற சில நாடளுக்குள்ளாகவே தீவிரவாதிகளின் வெடி குண்டுகளுக்குப் பலியானவர். அந்த வீராங்கனை, இந்த நாளில் பெண் சுதந்திரத்திற்காகப் போராடும் பெண்களுக்கு ஒரு நல்ல முன்னோடி.  WHO வின் 2013 ன் ஆய்வின் படி உலகெங்கிலும் உள்ள 35%, பெண்கள் உடல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ வன்முறைக்கு உள்ளாகிறார்கள்.  ஆனால், நமது நாட்டின் ஆய்வின் படி, 70% பெண்கள் உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் வன்முறைக்கு உள்ளாகிறார்கள்.

பெண்கள் இன்று உலகளவில் எத்தனையோ துறைகளில் சாதனைகள் படைத்து வரத்தான் செய்கிறார்கள். ஓவையார், ஹெலன்கெல்லர், காலத்திலிருந்து, இதோ சமீபத்தில் விண்ணில் பறந்த, (மறைந்த) கல்பன சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க வெளியுறவு இணையமைச்சராக பதவி ஏற்றிருக்கும்
நிஷா தேசாய், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் பெண் எம்.பி, பிரித்தி பட்டேலுக்கு ஆசிய வர்த்தக ஆசிரியரின் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது வரை பெண்களின் நிலைப்பாடும், சாதனைகளும் எண்ணில் அடங்காதவை. மலாலா யோசப்சையி என்பவர் பாகிஸ்த்தான் நாட்டின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள மிங்கோரா எனும் சிற்றூரில் வசிக்கும் ஒரு மாணவி. இவர் வசிக்கும் பகுதியில் பெண்கள் பாடசாலை செல்வதற்கான தாலிபானின் தடையை மீறி இவர் பள்ளி சென்றுவந்தார். மறைமுகமாக பெண்களுக்கு எதிரான செயல்பாடுகளை எழுதிவந்தவர், அண்மையில் தொலைக்காட்சி நேர்முகமொன்றில் நேரடியாக தோன்றியதிலிருந்து பரவலாக அறியப்பட்டதுடன் பழைமைவாத தாலிபான்களின் இலக்கிற்கும் ஆளானார். மலாலா அவர்களை அக்டோபர் 9,2012 அன்று தாலிபான் சுட்டுக் கொல்ல முயன்றது.
இவர் படு காயம் அடைந்தைத் தொடர்ந்து இதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மத, இன, வயது பாகுபாடின்றி கல்வி உரிமையை நிலைநாட்டவும் மனித உரிமைகளை பாதுகாக்கவும் அருந்தொண்டாற்றியமைக்காக பல விருதுகள் பெற்ற மலாலாவிற்கு பாக்கிஸ்தானின் முதல் அமைதிப் பரிசும் வழங்கப்பட்டது.



இவர்களைப் போல், வறுமையிலும், அன்றாடங்காய்ச்சிகளாக, வயலில் கூலி வேலை செய்தும், வெயிலிலும், மழையிலும், தன் தோளிலும், தலையிலும், முதுகிலும், மனதிலும் சுமைகளைச் சுமந்து கூலி வேலை செய்து, குடிகாரக் கணவனின் வருமானத்தை எதிர்பாராது, தன் வருமானத்தை மட்டுமே நம்பி தன் குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளின் சாதனையும மேலே சொலப்பட்ட பெண்களின் சாதனைகளுக்கு இணையாகத்தான் கருதப்பட வேண்டும்.  எப்படி பெண்களின் சாதனைகளைக் கூற ஒரு பதிவு பத்தாதோ,  அதே போன்று பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகளைச் சொல்ல ஒரு பதிவு போதாது.  ஒரு பக்கம் பெண்கள் சாதனைகள் படைத்தாலும், மறு பக்கம் அவர்கள் பல வன்முறைகளைச் சந்திக்கத்தான் செய்கிறார்கள் ஏன் கருவிலேயே அழிக்கப்படும், பெண் சிசுக் கொலைகள் இன்னும் நடக்கத்தான் செய்கின்றன. இந்த வன்முறைகளில் கொலைகளும் பாலியல் வன்முறைகளும் மட்டுமல்ல, கணவனால் நிகழும் வன்முறையும் அடங்கும். பெண்களுக்கு எதிரான ஆண்களின் வன்முறைகள் மட்டுமல்ல, பெண்களே, பெண்களுக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபட்டால் என்னவென்று சொல்லுவது? (மாமியார்களே! நீங்களும் ஒரு காலத்தில் மருமகள்களாக வாழ்ந்தவர்கள்தான்.  நீங்களும் பெண்கள்தான்! மருமகள்களே! உங்களது பெற்றோரைப் போலவே உங்கள் கணவன்மார்களின் பெற்றோர்களுக்கும், அன்பும் பாசமும் கொடுக்க நீங்கள் கடமைப்பட்டவர்கள்தான்!)

நம் நாட்டில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்தியாவிற்கான சுற்றுலாவுக்கான குறிப்பில், “இந்தியா பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நாடு என்று பதிவாகி உள்ளது. இந்தப் பதிவு இந்தியவைப் பற்றிய மதிப்பை சர்வதேச அளவில் வெகுவாகப் பாதித்துள்ளது. 

பெண்குழ்ந்தைகள் முதல் வயதான மூதாட்டி வரை, வயது வித்தியாசம் இல்லாமல் பெண்கள் வன்முறைகளுக்கு உள்ளாவது வருத்தத்திற்கும், வேதனைக்கும் உரியது.  சமீபத்தில் டெல்லியில் நடந்த பாலியல் வன்முறை ஒன்று போதும்.  என்ன சொல்ல?  இந்த ஒரு நாள் மட்டும் அனுசரிக்கப்பட்டால் போதாது, எல்லா நாளுமே பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கும் தினமாகத்தான் விடிய வேண்டும். அனுசரிக்கப்படவேண்டும். 

11 கருத்துகள்:

  1. வணக்கம்
    தலைப்புக்கு எற்ப பதிவு அருமையாக அமைந்துள்ளது... இவர்கள் எல்லோரும் சாதனையாளர்கள் தொடருங்கள்... எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக, மிக நன்றி! நண்பரே! இந்தத் தலைப்பு மிக மிக விரிவானத் தலைப்பு. ஒரு தொடராக எழுதும் அளவு அதுவும் 'முற்றுப் புள்ளி' வைக்க முடியாத ஒரு தலைப்பு என்றும் கூடச் சொல்லலாம். ஏதோ, என்னால் முடிந்த அளவு, கடுகிலும் சிறிதளவுதான் இது. உங்கள் கருத்தும், தொடருதலும் மிகுந்த சந்தோஷத்தைத் தருகிறது. நன்றி!

      நீக்கு
  2. [[பெண்களே, பெண்களுக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபட்டால் என்னவென்று சொல்லுவது? (மாமியார்களே! நீங்களும் ஒரு காலத்தில் மருமகள்களாக வாழ்ந்தவர்கள்தான்.]]

    தமிழ் நாட்டில் தாய்க்குலங்கள் வாய் கிழியும்: உண்மையில்..
    மருமகள்களுக்கு முதல் நான்கு என்று எதிரிகள் முறையே...
    மாமியார்!
    நாத்தனார்
    ஓர்ப்படி
    கணவன்

    ஒரே நல்ல ஆத்மா மாமனார் மட்டுமே!

    +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா!ஹா! நல்ல Point தான்! ஆனால், அதே மாமனார் ஒரு காலத்தில் கணவனாக (எதிரி list ல்) இருந்தவர்தானே!!!! பரவாயில்லை மாமானார் ஆகும்போதாவது நல்ல ஆத்மாவாகிறாரே!!

      ரசித்தேன்!!

      நன்றி!!

      நீக்கு
  3. //இவர்களைப் போல், வறுமையிலும், அன்றாடங்காய்ச்சிகளாக, வயலில் கூலி வேலை செய்தும், வெயிலிலும், மழையிலும், தன் தோளிலும், தலையிலும், முதுகிலும், மனதிலும் சுமைகளைச் சுமந்து கூலி வேலை செய்து, குடிகாரக் கணவனின் வருமானத்தை எதிர்பாராது, தன் வருமானத்தை மட்டுமே நம்பி தன் குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளின் சாதனையும மேலே சொலப்பட்ட பெண்களின் சாதனைகளுக்கு இணையாகத்தான் கருதப்பட வேண்டும்.//
    இவர்களது சாதனை முன்னவர்களை விட மிக மிக மேலானது...
    அருமையான பதிவு... வாழ்த்துக்கள்... த.ம.(+1)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்து மிகவும் சரியே!!! உங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும், வாழ்த்திற்கும், பாராட்டிற்கும், ஓட்டிற்கும் மிக்க மிக்க நன்றி ந்ண்பரே!! உங்களைப் போன்றவர்களின் ஊக்கம் எங்களுக்கு மிக அவசியம். நன்றி !

      நீக்கு
  4. கண்டிப்பாக ஒரு நாள் மாறும்... மாறியே தீரும்...

    தமிழ்மணம் ஏன் ஓட்டுப்பட்டையாக மாறவில்லை... தளம் கூட இன்னும் .in என்று தான் முடிகிறது...

    அனுப்பிய இரண்டு script-யையும் இணைத்தீர்களா...?

    dindiguldhanabalan@yahoo.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி! நன்றி! உங்கள் கருத்திற்கும், வருகைக்கும் நன்றி!

      Script இணைப்பதில் ஒரு சில சந்தேகங்கள் இருக்கிந்றன. எனது தோழி உங்களைத் தொடர்பு கொள்ளுவார் அதை சரி செய்வதற்கு.

      நன்றி!!

      நீக்கு
    2. தமிழ்மணம் ஓட்டுப்பட்டையும், இன்ட்லி, தமிழ் 10 இணைத்து உதவியதற்கு நண்பர் தனபாலானுக்கு மிக மிக நன்றி.!!!

      நீக்கு
  5. சாதரணப் பெண்களின் தினப்போராட்டங்களை சாதனையென்றே நம்பாத சமூகம். என்றும் மாறாது.

    பதிலளிநீக்கு