திங்கள், 11 ஆகஸ்ட், 2014

மதங்களைப் பாரோம்......உயர் ஜன்மம் இத் தேசத்தில் எய்தின ராயின்



                ஒற்றுமை என்பது இரு நாடுகள் தங்கள் எல்லைகளில் அமைதிக் கொடி பிடிப்பதில் அல்ல. அந்நாட்டிற்குள் வாழும் மக்கள் உணர்வு பூர்வமாக ஒன்றி வாழ்வதே! இது எல்லா நாட்டவர்க்கும், நாடுகளுக்கும் பொருந்தும் என்றாலும், நம் நாட்டிற்கு அது மிகவும் இன்றியமையாத ஒன்று.  எல்லா மதத்தவர்களையும் தன்னகத்தே கொண்டு, எல்லா மதத்தவரும் சம உரிமை பெற்று வாழ்வதுடன், அவர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தாமல் மதாசார்பற்ற நாடாக விளங்கும் நாடு என்று சொல்லுவது உதட்டளவிலும், எழுத்தளவிலும் மட்டும்தானோ என்று நினைக்கும்படியான சில சம்பவங்கள் சமீபத்தில் நடந்தது எல்லோரும் அறிந்திருக்கலாம்.  மனதிற்கு வேதனையும் தந்தவை.


     அதில் ஒன்று, சில நாட்களுக்கு முன் மஹாராஷ்டிரா சடனில் பணிபுரியும், ரம்சான் நோன்பிலிருந்த அர்ஷத் ஜுபயர் என்பவரின் வாயில் சிவசேனை எம்.பி, சப்பாத்தியைத் திணித்த சம்பவம்.  அரசியல்வாதிகள் மட்டுமல்ல, எல்லா ஊடகங்களைச் சேர்ந்தவர்களும் இதை இஸ்லாம் மதத்தவரின் மனம் புண்படும் விதம் கையாண்ட விதம் மிகவும் வேதனைக்குரியது. 

அது போலவே தெலுங்கானா மாநிலத்தின் அம்பாசிடராகத் தேர்ந்தெடுக்கவிருந்த டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை, அவர் பாகிஸ்தானின் மருமகள் ஆனதால், அவரைத் தேர்ந்தெடுக்கக் கூடாது என்று வாதித்த பாஜக எம் எல் ஏ வின் வார்த்தைகள்.  “நான் ஒரு இந்தியப் பெண்,  மரணம் வரை இந்தியப் பெண்ணாகவே இருப்பேன்” என்று கண்ணீர் மல்கப் பேசிய சானியா மிர்சாவை நினைக்கும் போது ஒரு விதத்தில் பெருமையாகவும், இன்னொரு விதத்தில், இப்படிப்பட்ட ஒரு சூழல் ஏற்பட்டுவிட்டதே என்று வேதனையாகவும் இருக்கிறது. இறுதியில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், பொறுப்பற்று, அதன் பின்விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல் இது போன்ற செயல்களைச் செய்யும் போதும், பேசும் போதும், நம் நாட்டின் ஒருமைப்பாடும் நாட்டின் அமைதியும் சீர்குலைய வழிவகுக்கின்றது. மதக்கலவரங்கள் நிகழவும் காரணமாகின்றது.

இப்படிப் பொறுப்பாக இருக்க வேண்டியத் தலைவர்கள் பொறுப்பற்று சுயநலம் கருதிச் செயலாற்றிக் கொண்டிருக்க, பிற மதங்களையும் மதிக்கும் நல்ல மனமுள்ள பொதுமக்களும் நம்மிடையே வாழ்வதால்தான், நமது நாடு,  மதக் கலவரங்களால் பாதிக்கப்பட்டாலும் அதிலிருந்து மீண்டு எழுந்து, “அரசியல்வாதிகள் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கலவரம் மூட்டினாலும் நாங்கள் ஒற்றுமையானவர்கள்தான் என்று” சொல்லிக் கொள்ளும் வகையில் சம்பவங்களும் நடக்கின்றன.  அப்படிப்பட்ட ஒரு சம்பவம்தான் இதோ இங்கே, கேரளாவில் மலப்புரம் அருகேயுள்ள கொழிக்கரையில் நடந்திருக்கின்றது.


60 வருடங்களுக்கு முன்பு கொழிக்கரையைச் சேர்ந்த மரக்கார்,  மாதவன் நாயர் என்பவரிடமிருந்து விலைக்கு வாங்கிய 75 சென்ட் நிலத்தில் ஒரு கோயில் இருந்தது. அந்தக் கோயிலை இடிக்காமல் மரக்காரின் குடும்பத்தினர் பாதுகாத்து வந்தனர்.  வருடங்களுக்குப் பிறகு அங்கு வாழ்ந்த இந்து மதத்தினர், அக்கோயிலை பராமரிக்கும் எண்ணத்துடன், மரக்காரின் மருமகளும் இப்போதைய இட உரிமையாளருமான புலாக்கல் மரயங்காட்டில் பாத்திமாவை அணுகினர்.  மண்ணாசையும், பொன்னாசையும் உள்ள மனிதர்கள் நடுவில், மத வேறுபாடுகள் நிறைந்த நம் சமூகத்தில் வாழும் மனிதர்கள் போல் அல்லாமல், பாத்திமா தன் வாரிசுகளிடம் கலந்தாலோசித்த பின் கோவிலையும், அதைச் சுற்றியுள்ள இடத்தையும் பணமேதும் பெற்றுக் கொள்ளாமல் இலவசமாகக், கோயில் பராமரிக்க வேண்டி வந்தவர்களிடம் கொடுத்திருக்கின்றார்.  ரம்சான் மாதத்தில் “சக்காத்து” எனும் தானம் செய்தல் மிகவும் புனிதமான ஒன்று.  அப்படித், திருமதி பாத்திமா லட்சக்கணக்கான விலைமதிப்புள்ள இடத்தையும், கோயிலையும் “சக்காத்து” நல்கி, மனிதரில் இது போன்ற நல்லவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள் என்பதை நிரூபித்துள்ளார்.

இது போன்ற ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் நிகழ்வுகள் அவ்வப்போது நாடெங்கிலும் நடக்கத்தான் செய்கின்றன. 

இந்தியாவிலுள்ள மக்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவகளாக இருந்தாலும் தாங்கள் முதலில் இந்தியர் என்ற எண்ணம் பெரும்பான்மையானவர்களுக்கு உண்டு என்பதைத்தான் “ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பதன் படி திருமதி பாத்திமாவின் செயலும், சானியா மிர்சாவின் வார்த்தைகளும் நமக்கு உணர்த்துகின்றன.  இனியவை உள்ள பொது இன்னாததைக் கூறி, ஏன் வீணே கனியிருக்கக் காய் கவர்வானேன்?! எனவே, இவர்களை வாழ்த்துவோம்!  நம் நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் இது போன்ற மக்களுக்கு நாம் ஆதரவும் தெரிவிப்போம்!

பல மதச் சுவர்களால் வேறுபட்டாலும் சுதந்திர இந்திய சுவாசக்காற்றால் ஒன்றுபடுவோம்

    படங்கள் : இணையம்



            

35 கருத்துகள்:

  1. சமீபத்திய செய்திகளை வைத்தே நல்ல பதிவு போட்டதுக்குஇந்தியர்களின் சார்பில் பாராட்டுக்கள் !
    த ம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி பகவான் ஜி! ஹப்பா என்ன பெரிய பாராட்டு அதுவும் இந்தியர்களின் சார்பில்!! மிக்க நன்றி ஜி!!

      நீக்கு
  2. சகிப்புத் தன்மையும், ஈகையும், விருந்தோம்பலும், சகோதரத்துவமும், ஒருவருக்கு ஒருவர் அன்பாகவும் ஆதரவாகவும் இருப்பதே உண்மையான இந்தியப் பண்பாடு. அதனை மாற்றி மறுத்து திரித்து மதத்துவ சாயம் பூசி, அரசியல் செய்வோரையும், மதப் பிரசங்கம் பண்ணுவோரையும் நாம் தூர விலக்க வேண்டும். துட்டனைக் கண்டால் தூர விலக்கு என்ற பழமொழி இவர்களுக்கு பொருந்தும். நாம் அனைவரும் இந்தியர்கள், மதங்கள், மொழிகள் எல்லாம் வெறும் தனிப்பட்ட் அடையாளங்கள் என்பதை உணர்தலே அனைவருக்கும் நல்லது. மதத்துக்கும் துவேசத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தால் நாளை நம் நாடும் இராக், சிரியா, ஆப்கானிஷ்தான், இலங்கை போல வன்முறை களமாக மாறி நாறிக் கிடக்கும் என்பதை எச்சரிக்கை உணர்வோடு உணர்ந்து கொள்தலே மிக்க நலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மதத்துக்கும் துவேசத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தால் நாளை நம் நாடும் இராக், சிரியா, ஆப்கானிஷ்தான், இலங்கை போல வன்முறை களமாக மாறி நாறிக் கிடக்கும் என்பதை எச்சரிக்கை உணர்வோடு உணர்ந்து கொள்தலே மிக்க நலம். //
      உண்மை! உண்மையே!
      மிக அழகான பின்னூட்டம் மாநகரன் அவர்களே! சீரிய கருத்து உரைத்ததற்கு!

      தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  3. வணக்கம்அ
    நல்ல திறனாய்வு நல்ல கருத்துக்களின் வழி பதிவை மேருகூட்டியுள்ளீர்கள்.
    ஒவ்வொருவரிடமும் நான் ஒரு இந்தியன் என்ற வார்த்தை உதிரத்தில் ஊறிப்பிறந்தவை... அதை அழிக்க முடியாது
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள் த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரூபன் தம்பி தங்கள் அழகான கருத்திற்கு!

      நீக்கு
  4. "//“அரசியல்வாதிகள் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கலவரம் மூட்டினாலும் நாங்கள் ஒற்றுமையானவர்கள்தான் //"

    - உண்மை தான். "வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்" என்பது தானே நம் நாட்டின் தாரக மந்திரம். ஆனால் இந்த அரசியல்வாதிகளுக்குத் தான் இந்த தாரக மந்திரம் தெரியாமல் போய்விட்டது.

    இன்றைக்கு பணம், பணம் என்று அடித்துக்கொள்பவர்கள் மத்தியில் சிறிது கூட பணத்தாசை இல்லாமல் அந்த அம்மையார் செய்த செயலை அவர்களின் நல்ல மனதை காட்டுகிறது.

    இப்படியும் மக்கள் இருக்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியப்படுத்தியமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசியல்வாதிகள் என்றுதான் ஒற்றுமைக்கு அடித்தளம் போட்டார்கள்? அந்த பொன்னான காலம் எல்லாம் ஏட்டில், வரலாற்றில் புகுந்துவிட்டது நண்பரே!

      நல்ல மக்களும் நம்மிடையே வாழத்தான் செய்கின்றார்கள். ஆனால் ஒரு சிலர்தான் வெளிச்சத்திற்கு வருகின்றார்கள். வலது கை செய்வது இடது கைக்குக் கூடத் தெரியக் கூடாது என்று இருப்பவர்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள்!

      மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு

  5. இந்தியாவிலுள்ள மக்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவகளாக இருந்தாலும் தாங்கள் முதலில் இந்தியர் என்ற எண்ணம் பெரும்பான்மையானவர்களுக்கு உண்டு என்பதை மறந்து இருந்தவர்களுக்கு உங்கள் பதிவு மீண்டும் நினைவுபடுத்தி சென்றுள்ளது.. நல்ல நிகழ்வுகளை பாசிடிவ் செய்தியாக பகிர்ந்த உங்களுக்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மதுரைத் தமிழா! பாராட்டுகளுக்கு! மக்கள் நல்லவர்கள்தான். அரசியல்வாதிகள் தான் கலவரங்கள் உருவாகுவதற்கு காரணம்.....முதல்வன் திரைப்படத்தில் சொல்வது போல.....

      ஏதோ மறந்திருந்தவர்கள் நினைவு கொண்டால் சரிதான்!

      நீக்கு
  6. இந்திய ஒற்றுமையின் முகியத்துவதை விளக்கும் முகமாக விளக்கங்களுடன் கூடியதும் பணத்தாசை இல்லாதவர்களும் பொது நலன்களுடனும் வாழ்கிறார்கள் என்ற அருமையான பதிவுக்கு நன்றி தொடர வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவர்கள், பொது நலன் கருதி வாழ்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். ஆனால் இடையில் விஷக் கிருமிகள் செய்யும் நாசத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் காணாமல் போய்விடுகின்றார்கள்! மிக்க நன்றி சகோதரி தங்கள் கருத்திற்கு!

      நீக்கு
  7. சாமானிய மக்கள் ஒற்றுமை விரும்புவதை அழகாகச் சொல்லும் பதிவு. பாத்திமா அவர்களை வணங்குகிறேன்..பகிர்விற்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி! தங்கள் மேன்மையான கருத்திற்கு!

      நீக்கு
  8. //ஒற்றுமை என்பது இரு நாடுகள் தங்கள் எல்லைகளில் அமைதிக் கொடி பிடிப்பதில் அல்ல. அந்நாட்டிற்குள் வாழும் மக்கள் உணர்வு பூர்வமாக ஒன்றி வாழ்வதே!//

    100 % சரி.

    //திருமதி பாத்திமா லட்சக்கணக்கான விலைமதிப்புள்ள இடத்தையும், கோயிலையும் “சக்காத்து” நல்கி, மனிதரில் இது போன்ற நல்லவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள் என்பதை நிரூபித்துள்ளார்//

    அரிய தகவலைத் தேடி எடுத்துப் பகிர்ந்திருக்கிறீர்கள்.

    மிகச் சிறந்த பணி. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்துள்ள பின்னூட்டதிற்கும், வருகைக்கும்!

      நீக்கு
  9. மதங்களைக் கடந்த ஒற்றுமை உள்ளவர்கள் தான் நம் இந்தியர் என்பதை
    நல்ல நிகழ்வுகளுடன் வெளிப்படுத்தி எழுதி இருக்கிறீர்கள்.
    அருமையான பதிவு ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் உண்மை...ஆனால் சில விஷக் கிருமிகளின் செயல்களால் ஒற்றுமை குலைவது போல உள்ள செய்திகள் தான் ஊடகங்களில் அதிகம் பேசப்படுகின்றது. மிக்க நன்றி சகோதரி தங்கள் கருத்திற்கு!

      நீக்கு
  10. அருமையான பதிவு நண்பரே... மதநல்லிணக்கம் அரசின் கையிலோ, அரசியல்வாதிகளின் கையிலோ, இல்லை சாதாரண மனித நேயமுள்ள மனிதர்களுடம்தான் இருக்கிறது என்பதற்க்கு திருமதி மரயங்காடு ஃபாத்திமா அவர்களும் ஒரு உதாரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் கில்லர் ஜி! நம் கையில்தான் உள்ளது! பொதுமக்கள் நல்லவர்கள்தான். ஆளுபவர்களும் அதைக் கையாண்டால் நல்லது இல்லையா?!

      மிக்க நன்றி ஜி!

      நீக்கு
  11. நமது மக்கள் மனம் விசாலமானதுதான்.
    அரசியல்வாதிகளின் சுயநலக்கயிறுகளால் சில பொம்மைகள் ஆடலாம்!
    அவற்றின் ஆட்டம் சிலநேரம் எல்லை கடந்தும் போகலாம்.
    மனிதநேயம் மதங்கடந்து இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்னும் வகையில் வழக்கம் போல் இனிய நடையில் அருமையான பதிவு!
    நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! தங்கள் பாராட்ரிற்கு!

      தமிழ் இலக்கணத்திலும், இலக்கியத்திலும், ஆங்கிலத்திலும் விற்பன்னராகிய நீங்கள் நாங்கள் எழுதுவதில் உள்ள குறைகளையும் சுட்டிக் காட்டினால், எங்கள் எழுத்துக்களை மேம்படுத்திக் கொள்ளத் துணை புரியும் என்பதைத் தாழ்மையுடன் தெர்வித்துக் கொள்கின்றோம்.

      நீக்கு
  12. மதம் என்பதே மக்களை ஒன்றிணைப்பதற்காக, மக்களை நல் வழிப்படுத்துவதற்காக,
    மகான்களால் போதிக்கப் பட்டனை. அனைத்து மதங்களும் அன்பை மட்டுமே போதிக்கின்றன.
    ஆனால் நாம் தான் அன்பைத் பின்பற்றுவதில்லை.
    பாத்திமோ போன்றவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்
    பாராட்டுவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையே! மிக்க நன்றி நண்பரே தங்கள் சீரிய கருத்திற்கு!

      நீக்கு
  13. சாதி மதம் இனம் மொழி இவைகள் எல்லாம் திடீரென பற்றிக் கொள்ளும் தன்மை உடையவை. அரசியல் வாதிகளும் சந்தர்ப்ப வாதிகளும் ஆதாயம் தேட உபயோகிக்கும் உணர்வுகள். நாம் இந்தியர்கள் வேற்றுமையிலும் ஒற்றுமை காண்போம் என்பன எல்லாம் எழுதுவதற்கு நன்றாக இருக்கும். அடிப்படையில் நாம் இவற்றில் குளிர் காய்பவர்கள். இன்னும் டீ குடிக்க தனி டம்ளரும் , கோவில்களில் அன்னதானங்களிலும் உயர் சாதி கீழ் சாதி பேதம் பார்க்கப் படுவதும் தொடர்கிறது. மாறுபட்ட கருத்தானாலும் உண்மைதானே இவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையே சார்! மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு! யதார்த்த உலகில் நடப்பதுதானே!

      நீக்கு
  14. இந்தியாவிலுள்ள மக்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவகளாக இருந்தாலும் தாங்கள் முதலில் இந்தியர் என்ற எண்ணம் பெரும்பான்மையானவர்களுக்கு உண்டு என்பதைத்தான் “ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பதன் படி திருமதி பாத்திமாவின் செயலும், சானியா மிர்சாவின் வார்த்தைகளும் நமக்கு உணர்த்துகின்றன.//

    ஆம் ஐயா அழகாக எடுத்துரைத்தீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  15. எந்த மதமும் நல்வழியைச் சொல்ல
    எந்த ஆளும் அவ்வழியால் செல்ல
    முடியாமையே கேடு!

    சிறந்த திறனாய்வுப் பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  16. எப்படியோ நான் கமெண்ட் போட்டுவிட்டதாக இல்லையா நினைத்தேன்:(
    சாரி சகாஸ் ஏதோ நெட்வொர்க் பிரச்சனையை போல!
    பாத்திமா போன்றோர்தான் நம் மண்ணின் ஜீவநாடிகள் இல்லையா சகாஸ்!
    சானியா கலங்கும் அதே வேளையில் எனக்கு அறிவித்த பரிசு என்ன ஆச்சு என தெலுங்கானாவை பார்த்து குழம்பிய சாய்னா வை பார்த்தீர்களா!!!
    அருமையான பகிர்வு! சுதந்திரதின வாழ்த்துகள் சகாஸ்!

    பதிலளிநீக்கு
  17. வணக்கம்.
    அருமையான செய்தி வகுப்பில் பகிரலாம்

    பதிலளிநீக்கு