சேட்டைக்காரன் வலைத்தள பதிவர் திரு வேணுகோபாலன்
தில்லை அகத்து க்ரியேஷன்ஸ் வழங்கிய பரோட்டா
கார்த்திக் குறும்படத்தின் ப்ரிவ்யூ காட்சி நேற்று (07-08-2014), டிஸ்கவரி புக்
பாலஸில் இனிதே நடந்தது. டிஸ்கவரி புக் பேலஸ் உரிமையாளர் திரு வேடியப்பன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
திடங்கொண்டு போராடு வலைத்தள பதிவர் சீனு
திடங்கொண்டு போராடு வலைத்தள பதிவர் சீனு அவர்கள் நிகழ்வைத்
தொகுத்து வழங்க, சிறப்பு விருந்தினராக, சேட்டைக்காரன் வலைத்தள பதிவர் திரு வேணுகோபாலன் அவர்கள் விளக்கேற்றி
குறுந்தகடை வெளியிட அதை மின்னல் வரிகள் வலைத்தள பதிவர் திரு பாலகணேஷ் அவர்கள்
பெற்றுக் கொண்டார்.
திரு வேணுகோபாலன் அவர்களும், வாத்தியார் பாலகணேஷ் அவர்களும்
திரு சுரேகா
(வாத்தியார் திரு பால கணேஷ் அவர்களின் வார்த்தைகளில் சொல்ல
வேண்டும் என்றால் லாரல், ஹார்டி). எங்கள்
சார்பில் நண்பர்கள் குடந்தையூர் ஆர்.வி. சரவணன் அவர்களும், கோவை ஆவி அவர்களும் திரு சுரேகா அவர்களையும், அடுத்த மாதம்
வெளியாகவிருக்கும் தொட்டால் தொடரும் திரைப்படத்தின் இயக்குனரும், பதிவருமாகிய திரு
கேபிள் சங்கர் அவர்களையும் அழைக்க அவர்களும், கேஆர்பி செந்தில் அவர்களும் சிறப்பு
விருந்தினர்களாக, வந்து கலந்து கொண்டு சிறப்பித்தது எங்களுக்கு மிக்க மகிழ்சியைக்
கொடுத்தது. மூவரும் படத்தைப் பற்றிய
விமர்சனங்களை முன் வைத்தனர்.
80 வயது இளைஞர் திரு சுப்பு தாத்தா
நம் நண்பரும், ஜாலிப் பதிவருமான 80 வயது
இளைஞர் திரு சுப்பு தாத்தா அவர்கள் அவர் உடல் நிலை சிறிது தளர்ந்திருந்தாலும்
வந்து கலந்து கொண்டு வாழ்த்திச் சிறபித்தது, கருத்துரை வழங்கியது மிகவும்
மகிழ்ச்சியைத் தந்தது. இமயத்தலைவன், செல்லப்பா டயரி என்று இரு தளங்களின் பதிவரான
திரு செல்லப்பா அவர்கள், கரைசேரா அலை வலைத்தளப் பதிவர் திரு அரசன், சேம்புலியான்
வலைத்தள பதிவர் திரு ரூபக் ராம், ஸ்கூல் பையன் வலைத்தள பதிவர் திரு சரவணன்
அவர்கள், தண்ணீர்மலை திரு முத்துக்கருப்பன், திரு வேகாவேல் அவர்களும் வருகை
தந்திருந்தனர். மெட்ராஸ் பவன் வலைத்தளப் பதிவர் திரு சிவகுமார் அவர்கள் கலந்து
கொண்டு படத்தைப் பற்றிய கருத்துரை வழங்கினார்.
திரு கேஆர்பி செந்தில் அவர்கள் விமர்சிக்கிறார். கண்ணாடி அணிந்து இருப்பவர், பதிவர், வெளிவரவிருக்கும் தொட்டால் தொடரும் எனும் திரைப்படத்தின் இயக்குனர் திரு கேபிள் சங்கர்
குடந்தையூர் சரவணன் அவர்களின் நண்பர்
கருத்துரை வழங்கினார். அவரது மேனேஜர் அவர்களும் வருகை தந்திருந்தார். எழுத்தாளரும்,
பத்திரிகை நவரத்னா குகன் அவர்களும் கலந்து கொண்டார்.
பல கருத்துக்கள், விமர்சனங்கள் முன்
வைக்கப்பட்டன. நேர்மறை கருத்துக்கள்,
விமர்சன்ங்களுடன், எதிர்மறை கருத்துக்கள், விமர்சனங்களும் பேசப்பட்டன. நாங்கள் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு. குறித்துக்
கொண்டோம். இவையெல்லாம் தானே எங்களது
அடுத்த படைப்பை மேம்படுத்தும்!
கோவை ஆவி
குடந்தையூர் ஆர்.வி சரவணன் திரு ராயச்செல்லப்பா
வருகை தந்து சிறப்பித்து, வாழ்த்தி,
விமர்சித்துக் கருத்துக்கள் தந்த எல்லா நண்பர்களுக்கும், சிறப்பு
விருந்தினர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்!
சில புகைப்படங்கள்
நேயர் விருப்பம்....ஆவி கண்ணை மூடி, ரசித்துத், தன் இனிய குரலில் சிந்துநதியின் இசை...பாடலைப் பாடுகின்றார்...எல்லாரும் நின்னுட்டுதான் ஆடுவாங்க...இங்க பாருங்க நம்ம வாத்தியார் உட்கார்ந்தபடியே நடனம்....பின்னால் இருக்கும் இரு வாலிபச் சிங்கங்கள்....கருப்புச் சட்டை- கரை சேரா அலை கள் திரு அரசன், அடுத்து இருப்பவர் சேம்பிலியான் திரு ரூபக்ராம்.. "ஆவி" பாடுவது கேக்குதா.....இல்லைனா நீங்க அவர் உலகத்துக்குப் போயிடுங்க....
திரு சுரேகா அவர்களின்
உதவியாளர் ரேவதி
கதைச் சுருக்கம்:
சிறு வயதிலேயே தந்தையை இழந்த கார்த்திக் தன்
தாய்க்கு ஒரு மகன் மட்டுமல்ல, அவன்
பயிலும் பள்ளிக்கும் பொறுப்புள்ள, நல்ல ஒரு மாணவனாகத் திகழ்கிறான். அவர்களது வீடுடன் இணைந்துள்ள அவர்களது உணவதத்தில்
சிறுவயது முதல் “பரோட்டா மாஸ்டர்” ஆனதால்,
பள்ளியில் அவனைப் பலரும் “பரோட்டா கார்த்திக்” என்று கேலி செய்கின்றனர். கல்வி
அறிவுடன் மனித நேயத்தையும் பொதுநலச் சேவையின் அவசியத்தையும் கற்பிப்பதுதான்
ஆசிரியரின் கடமை என்ற எண்ணமுள்ள சிவானந்தன் எனும் ஆசிரியர், கார்த்திக்கும் அவனது
நண்பர்களும் ஏராளமான நற்பணிகள் செய்யக் காரணமாக இருந்து அவர்களை ஊக்குவிக்கிறார்.
மழையில்
இடிந்த வீட்டில், பெற்றோரை இழந்ததால், பாதுகாப்பில்லாமல் வாழும் வள்ளி எனும் சக
மாணவிக்கு ஒரு வீடு கட்ட பணம் சேகரித்து வீடு கட்டி கொடுக்கின்றார்கள். உடன் பயிலும் 16 வயதான மைமூனா எனும் மாணவியைப் பெற்றோர்கள் “நிக்காஹ்” செய்து கொடுக்க முயலும் போது ஆசிரியர்கள், கல்வி இலாக்கா,
மற்றும் காவல் துறை உதவியுடன் திருமணம் நடக்கவிடாமல் செய்து மைமூனாவுக்கு தொடர்ந்து
கல்வி பயில உதவியும் செய்திருக்கிறார்கள். பள்ளி
மாணவர்கள் போதை மருந்து கலந்த மிட்டாய்கள், பான்பராக் போன்றவற்றை உபயோகிப்பதைத்
தடுக்கவும் செய்திருக்கிறார்கள்.
ராஜீவ்
எனும் ஆதிவாசி மாணவன் அவனது குடியிருப்பில் பெண்களைத் துன்புறுத்தும் கயவர்களை
எதிர்த்த போது கொல்லப்பட்டு, கொலை தற்கொலையாக்கப்பட்டதை அறிந்த கார்த்திக்கும்
அவனது நண்பர்களும் கொலையாளிகளைக் கைது செய்ய காவல்துறைக்கு உதவியும் செய்கின்றார்கள்.
அப்படி மாணவர்கள் நினைத்தால் எதையும் நடத்திக் காடலாம் என்பதை உணர்த்தவும்
செய்கிறார்கள். பள்ளி அவர்களைப் பாராட்டும் வகையில், “Protectors of the
school, Society, Nation” எனும் விருதை வழங்கி அவர்களை
இறுதியில் கௌரவிக்கிறது. குறும்படத்தில் கொஞ்சம் டெக்னிக்கல் எரர்ஸ் நிறையவே உள்ளது. என்றாலும் காண விரும்புவோர் கண்டு தங்கள் கருத்துகளைச் சொல்லலாம்.
நம் பதிவர் நண்பர்கள் திரு ராயசெல்லப்பா, திரு குடந்தை ஆர் வி சரவணன், திரு கோவை ஆவி மற்றும் திரு டிடி (திண்டுக்கல் தனபாலன்) இதில் பங்கேற்றுள்ளார்கள். (முன்பே இங்கு சொல்லப்பட்ட படம் தான் இருந்தாலும் மீண்டும்....)
நம் பதிவர் நண்பர்கள் திரு ராயசெல்லப்பா, திரு குடந்தை ஆர் வி சரவணன், திரு கோவை ஆவி மற்றும் திரு டிடி (திண்டுக்கல் தனபாலன்) இதில் பங்கேற்றுள்ளார்கள். (முன்பே இங்கு சொல்லப்பட்ட படம் தான் இருந்தாலும் மீண்டும்....)
குறும்படம் காணவிரும்பும் பதிவர்களுக்கு
குறும்படம் அடுத்தவாரம் யூட்யூபில் பதிவேற்றம் செய்யப்படும். செய்த பின் அதன் சுட்டியை எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கின்றோம்.
விழா இனிதே நடந்ததை கண்டு மிக்க மகிழ்ச்சி. படத்தை காண ஆவலாக உள்ளேன்.
பதிலளிநீக்குமிக்க நன்றி சொக்கன் சார். படம் அடுத்த வாரம் யூட்யூபில் பதிவேற்றம் செய்யப்படும். சுட்டி வலைத்தளத்தில் கொடுக்கின்றோம்.
நீக்குவாழ்த்துக்கள் ஐயா! உடல் நலமும், மனநலமும் நேற்று ஒத்துழைக்காமையால் விழாவுக்கு வர முடியவில்லை! நன்றி!
பதிலளிநீக்குபரவாயில்லை நண்பரே! தங்கள் உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் சுரேஷ்! எப்படியும் பதிவேற்றம் செய்வோம்!
நீக்குஅனைத்தும் அருமையாக இருந்தது விரைவில் யூட்யூப்பில் பதிவேற்றம் செய்யுங்க நண்பா....
பதிலளிநீக்குகண்டிப்பாக செய்றோம் நண்பரே! அடுத்த வாரம் இறுதிக்குள் நிச்சயமாக!
நீக்குடிஸ்கவரியில் குறும்படங்களைத் திரையிடுவதற்கான சிற்றரங்கம் அழகாகவும் அளவாகவும் அமைந்துள்ளது. குளிரூட்டு வசதி அருமை. (2) பரோட்டா கார்த்திக் என்ற பெயரைக் கேட்டதும் symbolic ஆக அனைவருக்கும் ஒரு பரோட்டாவாவது வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் சிலர் வந்திருந்ததாகத் தெரிகிறது. அவர்கள் வருத்தத்துடன் திரும்பியதாக உறுதிசெய்யவேண்டாத தகவல்கள் கூறுகின்றன. (3) திருமதி கீதா அவர்களின் இலக்கியபூர்வமான அறிமுக உரை அனைவரையும் கவர்ந்தது. (4) ஆக்கபூர்வமான யோசனைகளும் தெரிவிக்கப்பட்டன. பதிவர்களுக்கேன்றே குறும்படத் தயாரிப்பு தொழில்நுட்பம் பற்றிய சிறப்புப் பயற்சி வகுப்பு விரைவில் ஏற்பாடுசெய்வதாக அத்தொழிலில் அனுபவம் பெற்ற சில நண்பர்கள் உறுதியளித்துள்ளனர். (5) மொத்தத்தில் ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. நன்றி துளசி அவர்களே!
பதிலளிநீக்குநாங்கள் 1,2,4, கருத்துக்களைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டோமே என்று நினைத்து அதை சரி செய்ய முனைந்த போது நீங்கள் அதைச் சொல்லிவிட்டீர்கள்! ரொம்ப நன்றி சார்! நல்ல அனுபவம் என்று சொல்லியமைக்கு மிக்க நன்றி சார்!
நீக்குகுறும்படம் காண ஆவலாக உள்ளோம்.நன்றி
பதிலளிநீக்குவிரைவில், அடுத்தவாரம் பதிவேற்றம் செய்யப்படும் சகோதரி!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா
நிகழ்வு சிறப்பாக நடைபெற்று முடிந்தமை என் மனதுக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. குறும்படத்தின் கதை நன்றாக உள்ளது இதைப்போன்ற குறும்படம்மேலும் தயாரிக்கும் முயற்சி தொடர எனது வாழ்த்துக்கள் புகைப்படங்கள் எல்லாம் நன்றாக உள்ளது த.ம 2வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி சகோதரா! தங்கள் வாழ்த்திற்கு!
நீக்குஅய்யா,
பதிலளிநீக்குவணக்கம். நான் வலைத்தளத்திற்குப் புதியவன்.
வலைத்தள நண்பர்களை இப்படி ஒருங்கிணைத்து படைப்பாக்கம்,
வெளியீடு, விமர்சனம் .....
எல்லாம் எனக்குப் புதியதாகத் தான் இருக்கிறது.
ஒத்த கருத்துள்ளோரை ஒருங்கிணைக்கவும் , வளர்க்கவும் வளரவும் செய்யப் பெரும் வாய்ப்பு இங்குள்ளது.
குறும்படம் கண்டதும் நிச்சயம் கருத்திடுவேன்.
( என் பதிவுகளில் தாங்கள் கேட்டிருந்த இரு கேள்விகளுக்கும் சரியோ தவறோ , பதிலளித்து விட்டேன். ஏற்புடைமை/ ஏற்கப்படாமை பற்றி நீங்கள் தான் கருத்துக் கூறவேண்டும்)
நன்றி!
ஆம் ஐயா!
நீக்கு//ஒத்த கருத்துள்ளோரை ஒருங்கிணைக்கவும் , வளர்க்கவும் வளரவும் செய்யப் பெரும் வாய்ப்பு இங்குள்ளது.// நிச்சயமாக.
இப்போது தாங்கள் புதியவர் அல்லர். எங்கள் எல்லோருடனும் இணைந்து விட்டீர்களே! ஐயா! நிச்சயமாகத் தங்கள் மேலான கருத்தைச் சொல்ல வேண்டும், படம் பார்த்து.
தங்கள் வலைத்தளத்தில் பதில் கொடுத்துள்ளோம். ஐயா! மிக்க நன்றி!
சில விழாக்கள் மட்டும்தான் கலந்து கொள்பவர்களுக்கு முழு நிறைவைத் தரும். நேற்றைய நிகழ்வு அத்தகைய ஒன்றாகத் திகழ்ந்தது. பதிவர்கள் ஒன்றுதிரண்டு நிறை குறைகளை அலசி, குறும்படத்தை ரசித்து..... இனிய, மறக்க முடியாத மாலைப் பொழுதுகளில் ஒன்றாகிப் போனது நேற்றைய தினம். மிக்க நன்றி துளசிதரன் ஸார் அண்ட் கீதா மேம்.
பதிலளிநீக்குமிக்க நன்றி கணேஷ் சார்! நீங்கள் எல்லோரும் ரசித்ததற்கும் மாலைப் பொழுது மறக்க முடியாத ஒன்றாகிப் போனதற்கும்....உங்கள் எல்லோரது ஆதரவும், கருத்துக்களும், உதவியும் அதில் அடக்கம் தானே சார்.
நீக்குரொம்ப மகிழ்சியாக இருக்கிறது சார். உங்கள் எல்லோரது நட்பும் கிடைத்ததற்கு!
விழா படங்களும் செய்திகளும் அருமை நண்பரே
பதிலளிநீக்குதங்களின் முயற்சியைப் பாராட்டியே ஆக வேண்டும்
தொடரட்டும் தங்களின் சாதனை
குறும்படத்தினைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்
நன்றி நண்பரே
தம 3
மிக்க நன்றி நண்பரே! தங்கள் பாராட்டிற்கு! எல்லோரது ஆதரவும் நட்பும் கிடைத்ததால்.....அடுத்த வாரம் பதிவேற்றம் செய்யப்படும். நண்பரே!
நீக்குவிழாவில் கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி சார். நடிக்க வாய்ப்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி சார். இந்த படத்தில் பங்கு பெற வாய்ப்பு கிடைத்தால் குறும்படம் எடுக்கும் துணிச்சல் எனக்கு வந்திருக்கிறது
பதிலளிநீக்குஎங்களுக்கும் சந்தோஷம்தான் சரவணன் சார்! நீங்கள் கலந்து கொண்டதற்கும், நமது நட்பு விரிவடைவதற்கும், இதோ உங்கள் படத்தில் நாங்களும் பங்கு பெறும் வாய்ப்பு கிடைத்ததற்கும்.....மிக்க நன்றி சார்! மகிழ்ச்சியாகவும் உள்ளது சார்!
நீக்குஇப்பவே பார்க்கவேண்டுமென்ற பசி எடுத்து விட்டது புரோட்டாவுக்கு ஒரு வாரம் காத்திருக்க வேண்டுமா ?அதுவரை இந்த பதிவை அசைப் போட்டு கொண்டிருக்க வேண்டியதுதானா ?
பதிலளிநீக்குத ம 4
இந்தப் புரோட்டாவுல கொஞ்சம் ஒரு சிறு மாற்றம் அதனால அடுத்த வாரம் யூட்யூப்ல போட்டுடறோம்ஜி!
நீக்குநிகழ்வினை அழகிய படங்களோடு அருமையாக விளக்கினீர்கள்.
பதிலளிநீக்குகதை சுருக்கம் அருமை; ஆவலோடு காத்திருக்கிறேன், இறை நாட்டம்.
மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கு. அடுத்த வாரம் பதிவேற்றம். படம் பார்த்துவிட்டு தங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்!
நீக்குநிகழ்வை நேரில் பார்த்தது போல் இருந்தது பதிவு!!! இங்க கீதா மேடம் எங்கே?? நான் ஆவலாய் தேடினேன். சீக்கிரம் you tube லிங்க் குடுங்க சகா! அப்புறம் அழகாக பெயர்களோடு அறிமுகப்படுத்தப்பட்ட படம் பதிவோடு ஒன்றைச்செய்தது:) வாழ்த்துக்கள் சகா! ரொம்ப பெருமையா இருக்கு நம்ம சகோஸ், அப்புறம் சுப்பு தாத்தா எல்லோரையும் பார்த்தது!
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோதரி! நல்ல ஆளத் தேடறீங்க.....ஹாஹாஹா.....அப்புறம் இந்த மேடம் எல்லாம் வேண்டாமே நாங்கள் சகா தானே....சகான்னோ, சகோன்னோ சொல்லிக்கங்க....ப்ளீஸ்....கீதான்னு சொன்னா ரொம்பவே சந்தோஷம்....
நீக்குயுட்யூப் லிங்க் கொஞ்சம் பொறுத்துக்கங்க சகோதரி....அடுத்த வாரம் கண்டிப்பா போட்டுருவோம்......
பதிலளிநீக்குவணக்கம்!
காட்சிகள் கண்முன் கமழ்கின்றன! இன்றமிழின்
மாட்சிகள் மின்னும் மனத்து
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
மிக்க நன்றி ஐயா! தங்கள் கருத்திற்கு!
நீக்குநேரில் பார்த்தது போல் படங்களும் விபரங்களும் அருமை! விரைவில் பரர்க்கவேண்டும் என்ற ஆவலாக உள்ளது சாதிச்சிட்டிங்க...... சகோ! வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்....!
பதிலளிநீக்குசாதிக்கவில்லை சகோதரி! முயற்சி அளவில்தான்......அதற்கெல்லாம் நெடுந்தூரம் பிரயாணிக்க வேண்டும் ......
நீக்குவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி!
நீக்குநிகழ்சியை படங்களோடு அருமையாக விளக்கினீர்கள்.கதை சுருக்கம் அருமை; கதை சுருக்கம் இல்லையெனில் மண்டை வெடித்திருக்கும்.(இல்லையெனில் பூரிக்கட்டையால் உங்க மண்டை உடையாதா என்று கேட்க கூடாது) பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஎல்லாப் படமும் போட்டுவிட்டு கீதா மேடம் படத்தை மட்டும் மறைத்தற்கு கண்டனம் உங்க தோழியை நாங்க கொத்தி தூக்கிகிட்டு போயிடமாட்டோம்...
மதுரைத் தமிழா முதலில் உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி!
நீக்குகதைச் சுருக்கம் தந்திருக்கின்றோம்....என்றாலும் அதில் சொல்லப்பட்டிருக்கும் நிகழ்வுகள் எல்லாம் விஷுவலாக இல்லாமல் வசனங்களிலேயே வந்துவிடும். சின்ன பட்ஜெட் என்பதால். மலையாளத்திலும், தமிழிலும் எடுத்திருப்பதால், மலையாளத்தில் வரும் வசனங்களுக்கு ஏற்ப தமிழ் வசனங்கள் பேசப்பட வேண்டியிருந்தது. தமிழ் தெரிந்த துளசி, பதிவர்கள் எல்லோரும் அவர்கள் சொந்தக் குரலில் பேசியிருக்கின்றனர். ஆனால் படத்தில் மாணவர்கள் பேசும் வசனங்கள் பாலக்காட்டில் கொஞ்சம் தமிழ் தெரிந்த மாணவர்களை வைத்து தமிழில் டப் செய்யப்பட்டதால் அது பிற மொழிப் படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டால் வரும் நெருடல் இதிலும் உள்ளது...அது கொஞ்சம் படத்தின் தமிழ் வெர்ஷனில் நெகட்டிவ் ஆகிவிட்டது. இதற்கு முன் அமைந்த காமெரா, எடிட்டிங்க் க்ரூ கிடைக்காததால் அதிலும் கொஞ்சம் குறைகள். மாணவர்களுக்கென்று ஆங்கிலத்தில், interactive session சில பயிற்சிகள் அளிப்பதற்காக எடுப்பதால்....இதற்கு முன் எடுத்த படங்கள் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டது. இதுவே முதல் முயற்சி மலையாளத்திலும், தமிழிலும்.....எனவே...தமிழா நீங்கள் பார்த்துவிட்டு உங்கள் விமர்சனங்களைக் கொடுக்கலாம். பூரிக்கட்டையால் கொடுத்தாலும் வாங்கிக் கொள்கின்றோம்.
துளசி ப்ரிவ்யூ ஷோவிற்கு வர இயலாததால், கீதா பதிவர் நண்பர்கள் உதவியுடன் சென்னையில் நடத்தினார். தமிழா கீதா என்று போதும்....மேடம் வேண்டாமே ப்ளீஸ்......
கீதா எப்போதுமே ஒளிந்து கொண்டுவிடுவார் படத்தில் மட்டுமல்ல....எழுத்திலும் அப்படியே ஃபோட்டோ எடுத்துவிட்டாலும் தன் படத்தை வெளியிடமாட்டார். ....கீதாதான் படம் எல்லாம் வெளியிட்டது.....கீதாவைப் பிடியுங்கள்...ஹாஹா....
Thanks a lot for your kindness in inviting me to this elite audience group. I was really thrilled to see Sureka and chellappa, not to mention of other equally known bloggers bala ganesh, kovai avi, seenu, settaikkaran. A lot of talents are immersed in the bloggers and I do hope that a seminar type meeting as suggested by Thiru Sureka will bring out the best potentials by a fruitful discussion.
பதிலளிநீக்குThe short film was indeed nice.
Thank u Madam.
subbu thatha.
Thanks a lot subbu thatha for your kind presence, wishes and blessings! Great,that amidst your health issues you participated in the function. Yes thatha if the workshop on making short films by Thiru surekha group as suggested by Thiru surekha himself is materialized it will be beneficial for all who are in the field and who wish to make short films in the future. Let us hope for the best thatha! Thanks a lot for your appreciation of the film thatha....Thanks a lot!
நீக்குலின்கிற்காக காத்திருக்கிறேன்...
பதிலளிநீக்குத.ம எட்டு...
இந்த வாரம் அப்லோட் செய்து விடுகின்றோம் தோழரே!
நீக்குபரோட்டா கார்த்திக் குறும்பட வெளியீட்டு விழா வெற்றிகரமாக நிகழ்ந்தது அறிந்துமகிழ்ச்சி. வலையுலகப் புள்ளிகளுக்கும் இது ஒரு மாறுதலான அனுபவமாயிருந்திருக்கும் இப்பதிவில் ஒரேயடியாக ஏழு வயதை சுப்புத் தாத்தாவுக்குக் கூட்டிவிட்டீர்களே. அவரும் ஏதும் சொல்லவில்லையே. மூன்று நான்கு நாட்கள் ஊரில் இல்லாததால் கருத்துப் பதிவிட தாமதம். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குசார் பரவாயில்லை சார்.....தாமதமானாலும்.....
நீக்குசார், சுப்புத்தாத்தாவின் வயது 80 என்றுதான் சொல்லிக் கேள்விப்பட்டோம்....பரவாயில்லை, அவரை 80 வயது இளைஞர் என்றுதானே சொல்லியிருக்கின்றோம்.....ஒருவேளை அதனால் அவரும் 7 வயது கூடியதைக் கண்டுகொள்ளவில்லை போலும்....
மிக்க நன்றி தங்கள் வாழ்த்துக்களுக்கு!