ஞாயிறு, 8 டிசம்பர், 2013

தெலங்கானாவும்,சைனாவும்,பசுமரத்தாணியும்,கலப்படப்பாலும் அரட்டை அகம் 4



ஹலோ! தில்லைஅகத்தானே! என்ன உன்னோட வழக்கம்போல பேசவே முடியல? நம்ம அடுத்த குறும்படம்  ப்ராஜெக்ட் ஷூட்டிங்ல பிஸியா?

ஆமாம்! கீதா! நாம ஏப்ரல்ல முழு ஷூட்டிங்க் ப்ளான் பண்ணிருக்கோம்ல, குடந்தையூரார் கூட வரதா சொல்லிருக்கார்ல........ஆனா அப்ப ஸ்கூல் எல்லாம் லீவாகிடும். அதனால அந்த பார்ட் எல்லாம் இப்ப கொஞ்சம் எடுத்து வைச்சுகிட்டேன். நீ நேர்ல வரும்போது காமிக்கறேன். அப்புறம் எடிட் பண்ணிக்கலாம் தேவையானத. சரி! சரி! என்ன நியூஸ்?




ம்ம்ம்ம் நான் இல்லாம நீ ஏப்ரல்ல ஷூட்டிங்க் எல்லாம் செய்யக் கூடாது.  சொல்லிட்டேன். நியூஸுக்கு வரேன்! தெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு ஆர்பாட்டம் ஆந்திராவுல. 48 மணி நேர பந்த். நோ பஸ்.! நோ ஆட்டோ!  ஸோ! மக்கள் got stranded! ட்ரெய்னுக்கு கூட்டம் முட்டி மோதிச்சாம்! ஜர்கண்டிய விட மோசமாயிருச்சாம். அதனால, திருப்பதிக்கு போனவங்க எல்லாம் அங்கேயே இருக்கும்படி ஆய்டிச்சு. அதுவும் நேத்து Dec.6 பாபர் மசூதி இடிப்பு தினம். பந்த் வேற.  ஸோ ராணுவம் எல்லாம் வரவழைச்சு, உலகத்தையே ரக்ஷிக்கும் அந்த “ஜகத் ரக்ஷகனுக்கே” ராணுவ ப்ரொடெக்ஷன்!! தமிழக அரசுக்கு பஸ் விட முடியாததுனால 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை இழப்பு இருக்கலாமாம்.  இந்த நஷ்ட ஈட அந்த ஏழு மலையான் கொடுப்பாரா? பெரிய லட்டுதான்!! நம்ம ஏழு கொண்டலவாடா, இங்க சென்னைல லட்டுக்காக காத்துக்கிட்டு இருக்கற மக்களுக்கு லட்டு கொடுத்து விடல. அல்வாதான்! இந்த லட்டு நெஜமாவே ரொம்ப ஃபேமஸ்பா...ஏதாவது மாமாஸ், மாமிஸ் “நேக்கு சுகர், பி.பி. இருக்கு லட்டு எல்லாம் வேண்டாம்னு சொன்னாங்கனு வையி, உடனே ஏழு கொண்டலவாடா ஃபேன்ஸ், “எல்லாம் அந்த ஏழு மலையான் பாத்துப்பன்! இந்த லட்ட அவன் மருந்தா நினைச்சு சாப்பிடுங்கோ. அப்புறம் சுகராவது, பி.பி. யாவது?  ஒரு மண்ணும் எட்டிப்பாக்காது னு சொல்லி, சின்ன துண்டா கொடுப்பாங்கனு நினைக்காத...அரை லட்ட திணிப்பாங்க......... சரி, உன் நியூஸ் என்ன?




அது அவங்க இஷ்டம், சுதந்திரம்!!. லட்டு தானே! போனா போகுது உனக்கென்ன?! அங்க சைனாவுல பாரு குழந்தை பெத்துக்க கூட சுதந்திரம் இல்ல! ஒரு ware house ல வேலை செய்யற ஒரு பொண்ணு 2 வதா குழந்தை பெத்துக்கிட்டதுக்கு அவங்களுக்கு fine எவ்வளவு தெரியுமா? 3 லட்சத்து 33 ஆயிரம் இவான்.  அதாவது நம்மூர் கணக்குல 33 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய். அந்தக் குழந்தைய சைனா அரசு அங்கீகரிக்காதாம்.  அது  Black child ஆம். அதனால, அதற்கு எந்த சலுகைகளும் கிடையாதாம். இப்படி 1 கோடியே 30 லட்சம் Black குழந்தைகள் இருக்காங்களாம். அந்த அம்மா தன் கிட்னியை கூட வித்துரலாம்னு பார்த்தாங்களாம். ஆனா, அவங்க மூத்த பையன் எதிர்ப்பு தெரிவிச்சதுனால முடியலயாம். அதே சமயம் பணக்காரங்க ஏராளமான குழந்தைகளைப் பெத்துக்கறத க்ரெடிட்டாக நினைக்கிறாங்களாம். இயக்குனர் ஷாங்க் இவோம்முக்கு 7 குழந்தைகளாம் (2/3 மனைவிகள் மூலம்).  அவர் தனது 2 வது குழந்தைக்கு ஏற்கனவே ஃபைன் கட்டியிருக்காரு. ஆனா, மத்த குழந்தைகள் இருக்கறது இப்பதான் வெளில தெரிஞ்சு அவரு இப்ப 1000 கோடி ரூபாய் கட்டணுமாம்...கோர்ட்ல கேஸு........இப்படி குழந்தை பெத்துக்கறதுக்கு கூடவா சுதந்திரம் இல்லாம....சமூகத்துல அதிருப்தி வராதா? அப்படியெல்லாம் பார்க்கும் போது நம்ம இந்தியாவுல குழந்தை பெத்துக்கறதுல ரொம்பவே சுதந்திரம்தான்!!!!!!!!!! 

நீ சொல்றதும் சரிதான்.....ஆனா...ஒரு விஷயத்த இங்க சொல்லியே ஆகணும். சைனா மக்களை நினைக்கயில் பொறாமையா இருக்கு. நாட்டுக்காக இவ்வளவு ஒத்துழைப்பு கொடுக்கறாங்களே!..வரும் தலை முறை சந்தோஷமா வாழ அவங்க எடுக்கிற இந்த ரிஸ்க் பாராட்டுக்குறியதுதான்.....ஆனா இப்ப அந்த ஒரு குழந்தை சட்டம் தளர்த்தப்பட்டிருக்குனு வாசிச்சேன்.  அதப் பத்தி இப்ப பேசினா ஒரு பதிவாகிடும்...ஸோ.... வேற என்ன?


இந்த படத்தப் பாருங்க irony!!!!!இது எப்படி இருக்கு?


ம்ம்ம்..ஆமாம்! நானும் அப்படித்தான் நினைச்சேன். அப்புறம் ஒரு நியூஸ்.  கேரளா ஹை கோர்ட், பச்சை மரத்துல ஆணி அடிச்சு அட்வர்டைஸ்மென்ட் போர்ட் மாட்டறது எல்லாம் சட்டவிரோதமானது. தண்டனைக்குறியதுனு செய்தி. அதுவும் யாரு கேஸ் போட்டுருக்காங்கனு நினைக்கிற? எர்ணாகுளம், மூவட்டுபுழா St. Augustine's Girls Higher Secondary School மாணவிகள் தான். 2011 ல போட்டுருக்காங்க.  இதோ, இப்ப கோர்ட் அந்த சின்னக் குழந்தைகளுக்கு இருக்கற பசுமை ஆர்வத்தை மறுக்க முடியாம இந்தச் சட்டம். Hats off to Students!!!!!


கலப்பட பால்இவங்கள என்ன செய்யலாம்?


ரொம்ப நல்ல விஷயம்தான். அந்த மாணவிகளைக் கண்டிப்பா பாராட்டணும். பாராட்டப்பட வேண்டிய சட்டம்தான்.  அத ஒழுங்கா follow பண்ணின்னா சரிதான்.....இங்கயும் ஒரு சட்டம் வரப்போகுதாம்...... தமிழகத்துல தனியார் நிறுவனங்களின் பால்ல 33% கலப்படம், யூரியா, சைனா பௌடர், மைதா மாவெல்லாம் கலக்கற கொடூரமாம். பால்ல தண்ணீர் கலப்பாங்க......கொழுப்புச் சத்த நீக்கிட்டு அதுல கிழங்கு மாவு, மைதா மாவு, அரிசி மாவு கலக்கறாங்களாம். அப்புறம் சைனாவுலருந்து இறக்குமதி செய்யற வெள்ளை மாவை பால்ல கலக்கறாங்களாம். இது சென்னை புறநகர் பகுதில நடக்குதாம். இதை விடக் கொடுமை என்னனா பால் கெட்டியா இருக்கணும்னு 10 லிட்டர் பாலுக்கு 5 கிராம் யூரியா கலக்கபடுதாம். இதனால, குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுறாங்களாம்.  வயசானவங்களும்தான். டைபாய்டு, வயிற்றுப் போக்கு, மஞ்சள் காமாலை,  ஊட்டச்சத்து குறைபாடு, உடல் வளர்ச்சி தடைபடுதல், நிமோனியா காய்ச்சல் போன்ற பாதிப்பாம்.  யூரியா கலக்கறதுனால சிறுனீரகம், கல்லீரல் பாதிப்பு, சில சமயம் குழந்தைகள் இறப்பதற்கும் வாய்ப்பு இருக்காம். அதனாலதான், நம்ம நம்பள்கி இங்க வந்தா பால் குடிக்க பயப்படறாரு.  அப்புறம், நம்ம ஜோக்காளி பகவான்ஜி கூட ஏதோ வயிறு சரியில்லனு நம்பள்கிட்ட யோசனை கேட்டிருந்தாரு. ஒரு வேளை அவரு இந்த மாதிரி பால் ஏதாவது குடிச்சுருப்பாரோ?!! ஆமாம் நீ என்னவோ குழந்தை பெத்துக்கறதுல சுதந்திரம் அப்படினு சொன்ன...என்ன சுதந்திரம்? குழந்தை பெத்துக்கறதுலயும். தில்லு முல்லு பண்ணறதுலயும்தான் சுதந்திரம்!!!!! பெத்தா மட்டும் போதுமா? அந்தக் குழந்தைங்க ஒழுங்கா ஆரோக்கியமா வளர வேண்டாமா? நோய் நொடி இல்லாம? ம்ம்ம் என்னத்த சொல்றதுனு தெரில....ம்ம்ம் இதுலயும் ஒரு நல்ல விஷயம்....இத வாசிக்கறேன் கேளு
With the Supreme Court raising its concern about adulteration of milk, a research scholar from the Indian Institute of Technology, Madras (IIT-M) has developed a colour-based sensor (membrane), which changes colour whe­n the milk gets spoilt.
Concerned over how people get fooled by milk traders who sell spoilt mi­lk to people, Anshika Aga­r­wal, a research scholar in the department of biotechnology at IIT-M decided to come up with a solution to help people buy good quality milk. (courtesy “Chennai first”  http://www.chennaifirst.in/2013/09/page/3/ )

.ம்ம்ம்ம் ஏதோ நல்லது நடந்தா சரிதான்......ஆமாம் நீ சொல்றது ரொம்ப கரெக்ட்டுதான்.சட்டம் எல்லாம் நம்மூர்ல enforce பண்ணறதுலதானே பிரச்சினை....இதுக்கெல்லாம் என்ன solutionனு தெரியாமதான் நாம எல்லாரும் தலைய பிச்சுக்கிட்டுருக்கோம்......சரி சரி...ரொம்பவே பேசிட்டோம்.........BSNL cut பண்ணற டைம் ஆயிடுச்சு....ஸோ...நாளைக்கு continue பண்ணலாம்...பை..பை..

10 கருத்துகள்:

  1. இந்தியாவில்பல மாநிலங்களில் செய்த ஹோதனியில் 68% கலப்படம் என்று படித்தேன். பாலில் கலப்படம் செய்வது தமிழ்நாட்டில் குறைவாக உள்ளதே! இது உண்மை என்றால் நல்ல விஷயம். கலப்படம் செய்வது தவறு என்று சொல்லிவிட்டு Devil's advocate -ஆ நானே ஒரு கேள்வி கேட்கிறேன்.

    தமிழ்நாட்டில் பிணவறையில் சுடுகாட்டில் கூட ஈவு இறக்கம் இல்லமால் லஞ்சம் வாங்கிறார்கள் என்று என் நண்பன் சொன்னான். அசிங்க அசிங்கமாக திட்டினான். அவன் கோபம் நியாமானது தான்! இருந்தாலும் அவனிடம் ஒரு கேள்வி கேட்டேன்; அதையே உங்களுக்கும்..

    அங்கு வேலை செய்பவன் பத்திர பதிவு ஆபிஸிலா போய் லஞ்சம் வாங்க முடியும். இல்லை regional transport office -ல் போய் லஞ்சம் வாங்கமுடியுமா?. இல்லை பஸ்ஸில் சாராயக்கடையில் கொள்ளை அடிக்க முடியுமா? அவனும் நம்ம பங்காளி தான்! அவன் அப்படித்தான் இருப்பான்.எங்கே ஒருவன் வேலை செய்கிறானோ அங்கு தான் லஞ்சம் வாங்கமுடியும். இது அடிப்படை. மேலும், லஞ்சம் வாங்குவதில் நல்ல லஞ்சம் கெட்ட லஞ்சம் என்று ஏதாவது இருக்கா? இதற்கு யார் வேண்டுமானாலும் பதில் சொல்லலாம்.

    வோட்டுக்கு பணம் வாங்குவது தவறு இல்லை என்று நான் போட்ட பதிவின் தலைப்பை இப்படி கூட மாட்ட்றலாம்.

    பிணவறையில் சுடுகாட்டில் லஞ்சம் வாங்குவதில் தவறு இல்லை என்று...

    http://www.nambalki.com/2013/12/blog-post_7211.html

    +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Nambalki,we always find fault with the weak and poor.If the same mistake is done by others,we wont find any difficulty to free them with excuses.Thanks for the vote and note.

      நீக்கு
    2. நீங்கள் சொல்லியிருக்கும் அந்த 63% வட மாநிலங்களில்-ஒடிஸா, உத்தர்ப்ரதேசம், மேற்குவங்கம்- இங்கு தமிழகத்தில் 33% தான் என்றாலும் குழந்தைகளுக்கு பாதிப்புதானே! அது 1% ஆக இருந்தால் என்ன, 99% ஆக இருந்தால் என்ன? பாதிப்பு பாதிப்புதானே?! நீங்களே இங்கு வரும் போது பால் குடிக்க பயப்படத்தானே செய்கிறீர்கள்?!

      பிண்வறை, சுடுகாடு லஞ்சம் எல்லாம் பல வருடங்களாக நடந்து வருவதுதான். உங்கள் கேள்வி நியாயமானதுதான். சாக்கடையில் எந்த சாக்கடை நல்லது என்று சொல்லுவது போலத்தான். கோடானு கோடி மக்களின் பணத்தில், லஞ்சப் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழும் படா படா திமிலங்களை விட்டுட்டு, அன்றாடங்காய்ச்சிகள் கை நீட்டினால் கேள்வி கேட்டுத் திட்டும் நம் சமூகம் அந்த படா திமிலங்களைக் கேள்வி கேட்குமா? முடிகிறதா? ஒரு கிலோ சாம்பார் வெங்காயம் ரூபாய் 80-100, தக்காளி 45-50, பெரிய வெங்காயம் 50 என்று விலை வாசி எகிறும்போது, வறுமைக்கோட்டிற்குக் கீழும், வறுமைக் கோட்டிலும், வறுமைக் கோட்டிற்கு சற்று மேலேயும் வாழும் மக்கள் என்ன செய்வார்கள்? என்னதான் செய்ய முடியும்? நம் நடுத்தர வர்கமும், அதற்கு மேலே உள்ள சமூகமும், பணக்கார சமூகமும் இருக்கிறதே படு கேவலமான சமூகம். வீட்டு வாசலுக்கே வரும் கைவண்டி, நடைபாதை வியாபாரிகளிடம்மும், செருப்புத் தைப்பவரிடமும், 5 ரூபாய்க்கும், 10 ரூபாய்க்கும் பேரம் பேசும் சமூகம், fixed price, branded கடைகளில் ரூபாய் 50, 100, 500, 1000 கூடுதலாக்க் கொடுக்கத் தயங்கவே மாட்டார்கள்!! அதுவும் பெட்ரோலுக்குச் செலவழித்துச் சென்று. விலைவாசி எகிறும் சமயம் மக்களைக் கண்டு கொள்ளாத அரசியல்வாதிகள் வோட்டு கேட்கும் சமயம் மட்டும் பணத்துடன் எட்டிப் பார்கிறார்களே!! Rute cause for லஞ்சம் என்று ஆராயத் தொடங்கினால் நதிமூலம் ரிஷிமூலம் ஆராய்வது போலத்தான்!! அத்தனைக்கு லஞ்சம் வேரூன்றி விட்டது. Vicious cycle என்று கூடச் சொல்லலாம். இந்த சமூகம் நம்மை விடக் கீழே இருப்பவர்களைத்தான் குற்றம் சாட்டி சாடுகிறது பெரிய மீன் சின்ன மீனை சாப்பிடுவ்து போல! நம்மை விட மேலே உள்ளவர்களை அல்ல. எனவே நீங்கள் கூறுவது சரியே! ஏழைகளும், விவசாயிகளும் வாழ முடியாமல் தற்கொலை செய்து கொள்வது கூட சரியோ என்று தோன்றி விடுகிறது. திமிங்கலங்களுக்கு அதைப் பற்றி என்னக் கவலை? அவர்களுக்கு அரியணையைப் பற்றித்தானே எப்போதும் கவலை!

      நீக்கு
  2. வணக்கம்

    அரசியலின் ஆழம் ரொம்ப தெரிந்து.... மிக அருமையாக எழுதியுள்ளிர்..நண்பா......மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

    எனது புதிய வலைப்பு உங்களை அன்புடன் வரவேற்கிறது இதோமுகவரி-http://tamilkkavitaikalcom.blogspot.com

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப நன்றி நண்பரே! பாராட்டுக்களுக்கும்!! உங்கள் புதிய வலைப்பூ எங்கள் வலைப்பூவில் இணைந்து விட்டது. நாங்கள் அங்கு வந்து உங்கள் கவிதைகளுக்கு பின்னூட்டமும் அளித்து விட்டோம்!!. காதல் கடிதங்கள் வாசிக்க முடியவில்லையே!! உங்கள் வலைபூவில் அதைக் காணவில்லையே?! உங்கள் புதிய வலபூவையும் தொடர ஆரம்பித்துவிட்டோம் அதில் இணைந்தும் விட்டோம்!!!

      நன்றி நண்பரே!!!

      நீக்கு
  3. பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு முதலில் "வாயில் பால்" ஊற்ற வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியே அரசியில் கலப்படம் செய்பவர்களுக்கு வாய்க்கரிசி போடவேண்டும் என்றும் சொல்லாம்!

      பெட்ரோலில் கலப்படம் செய்பவர்களை அதே பெட்ரோல் ஊத்தி கொளுத்தணும்!
      இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்! என்ன பயன்?

      நீக்கு
    2. DD அவர்களே! நன்றி உங்கள் கருத்துக்கு! நாங்கள் என்ன சொல்லவேண்டும் என்று நினைத்தோமோ அதை அப்படியே நம்பள்கி பதிலாகக் கொடுத்துவிட்டார்.

      நன்றி நம்பள்கி!!

      நன்றி DD!!

      நீக்கு
  4. நான் கேள்வி கேட்பது யாரயையும் நோக்கி அல்ல! மக்கள் சிந்தக்கனும் என்ற ஒரே காரணதிற்க்காக.

    தமிழர்கள் முட்டாள்கள் அல்ல! விவாதம் என்று வந்தால் நன்றாகவே அலசி ஆராய்வார்கள்---அது சினிமாவைப் பொருத்தவரை தான் [கேவலமான] உண்மை!

    மக்கள் திலகமா? நடிகர் திலகமா?
    ரஜினியா ? கமலா?

    நன்றாகவே அலசுவார்கள்!
    அதே சமயம் மற்ற விஷயங்களில் ஆராய்வது கம்மி!---வெகு ஜனப் பத்திரிக்கை ௯(அவர்கள் அஜண்டா படி ] சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள். இது மாறவேண்டும்!

    கீதா அவர்களுக்கு...
    நீங்கள் கேட்ட கேள்விக்கு என் பின்னூட்டத்தில் பதில் கொடுத்து இருக்கிறேன்! டைபாய்ட் மற்றும் பல நோய்கள் பற்றிய பதிவில். சென்று பார்க்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது எல்லாமே சரிதான் நம்பள்கி! நம் எல்லா ஊடகங்களும் அப்படித்தான் இருக்கின்றன! சினிமாவுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் மற்ற விஷயங்களில் சுத்தமாக இல்லை எனலாம். நல்ல விஷயங்களில் ஆராய்ச்சி என்பதே இல்லாததால் தானே நம் நாடு இன்னும் பின் தங்கிய நிலையிலேயே இருக்கிறது!! இதைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்..இடுகையாகிவிடும்!...

      உங்கள் பின்னூட்டத்தில் சென்று பார்க்கிறேன்! ரொம்ப நன்றி! நம்பள்கி!!

      துளசி, கீதா

      நீக்கு