புதன், 18 டிசம்பர், 2013

பொறுத்தது போதும் பொங்கி எழு, என எழ வைத்த சம்பவம்...... The last straw that broke the camel’ back,



தேவயானி கோப்ரகடே கைது செய்யப்பட்டு விலங்கு அணியப்பட்டு அதுவும் தன் குழந்தையை டே கேரில் விட்டு வரும் போது, போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களுடன் செல்லில் அடைக்கப்பட்டு, பரிசோதனை எனும் பெயரில் ஆடைகள் அவிழ்கப்பட்டு, DNA டெஸ்டுக்கும் உட்படுத்தப்பட்டு...... இப்படிப்பட்டச் சட்டங்கள் அமெரிக்காவுக்கு இன்றியமையாததாக இருக்கலாம்தான்.  இவை எல்லாம்தான் ஒருவேளை அமெரிக்காவை அமெரிக்காவாக ஆக்கி இருக்கலாம்தான். என்றாலும், இந்திய அமெரிக்க நட்புறவிற்காக அமெரிக்காவில் இயங்கி வரும் இந்திய தூதரகத்தில் பொறுப்புள்ள பதவியில் சேவை செய்யும், இந்தியாவில் மிக உயர்ந்த தகுதிச் சான்றிதழான IFS பெற்ற, அதுவும், ஒரு பெண்ணிடம், தனி மனித சுதந்திரத்திற்கு வேறு எந்த நாட்டையும் விட முக்கியத்துவம் கொடுக்கும் அமெரிக்கா இப்படி நடந்து கொண்டது அதிர்ச்சியைத் தருகிறது. இந்தியர்களான நமக்கு, இலை மறை காயாக அரசியல் வாதிகளுக்கும் சாதாரண மக்களுக்கும் இரண்டு தரப்பட்ட சட்டங்கள் உள்ளது போல், அங்கும் சிறப்புச் சலுகை வேண்டும் என்பதல்ல எங்கள் வாதம். இதற்கு முன், முன்னாள் குடியரசுத் தலைவர் Dr.அப்துல்கலாம் அவர்களுக்கும், டிஃப்ன்ஸ் மினிஸ்டர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்க்கும், ஷாருக்கான் உள்ளிட்ட ஏராளமான கலைஞர்களுக்கும் இது போல் ஏற்பட்ட அவமானங்களுக்குப் பழிவாங்கும் நோக்கமும் எங்களுக்கு இல்லை.  அமெரிக்க சட்ட்த்திற்கு விரோதமாகத், தன்னுடைய வீட்டு வேலைக்கு உதவும் சங்கீதா ரிச்சர்டுக்கு விசாவில் குறிப்பிட்டுள்ளதை விட குறைவான ஊதியம் கொடுத்து வந்த தேவயானி செய்தது அவ்வளவு பெரிய குற்றமல்ல என்றோ கைது செய்வதோ, விசாரணை செய்யவோ கூடாது என்பதும் அல்ல எங்கள் வாதம். (இது போன்ற பதவி வகிப்பவர்கள் சட்டத்தை மீறாமல் இருப்பது மிக மிக அவசியம்தான்.  தாங்கள் செய்யும் சிறிய ஒரு பிழை கூட மிகப் பெரிய பிரச்சினைகளுக்குக் காரணம் ஆகலாம் என்ற எண்ணம் வேண்டும்). இதற்கு முன்பும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் நடந்த, இது போன்ற வேதனைக்குறிய சம்பவங்களை மனதில் கொண்டு குறைந்த படசம், அவர், தான் இந்திய தூதரகத்தில் துணை தூதர் என்று சொன்ன போதாவது அவருக்கு எதிரே நடவடிக்கை எடுத்த போது இந்திய நாட்டிற்கும் அரசிற்கும் வேதனைப்பட வாய்ப்பில்லாத விதத்தில் அவர் கையாளப்பட்டிருக்க வேண்டும் என்பதே நம் கருத்து. தவறு செய்பவர்கள் தண்டிக்கப் படவேண்டியதுதான்.  ஆனால் தண்டிக்கப் படுபவ்ர்களுக்கும் இதைக் காண்பவர்களுக்கும் தண்டனை கொஞ்சம் கூடிவிட்டதோ என்று தோன்றினால், அங்கு நீதியல்ல அநீதி நடந்திருக்கிறது என்றுதான் அர்த்தம். 

22 கருத்துகள்:

  1. எல்லோரும் எழுதி ஓயட்டும்! பிறகு நான்! +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி!! உங்கள் கருத்துக்களை அறிய, உங்கள் பதிவிற்கும் waiting!!

      நீக்கு
  2. நிகழ்வினை மிகச் சரியான விதத்தில்
    விமர்சனம் செய்துள்ளீர்கள்
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி!! உங்களைப் போன்றோரின் உக்கம் எங்களுக்கு மிக மிக சந்தோஷமாக இருக்கிறது! நன்றி மீண்டும்!!

      நீக்கு
  3. உலக மாகா உள்குத்து மர்மங்கள் நிறைந்த அரசியல் வித்தை...

    கொந்தளித்துக் கொழுந்து விட்டு எரியும் நமக்குத்தான் திண்டாட்டம்... குளிர்காயும் 'வியாதி' களுக்குக் கொண்டாட்டமோ கொண்டாட்டம்...

    அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா... போயி ஒழுங்காப் புள்ள குட்டிகளைப் படிக்க வைங்கப்பா...

    அல்லாம் போட்டாசுச்சு... போட்டாச்சு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா... போயி ஒழுங்காப் புள்ள குட்டிகளைப் படிக்க வைங்கப்பா..."

      ஹா! ஹா! நல்ல கருத்து!! மிக்க நன்றி! நைனா, உங்கள் வருகைக்கும், கருத்திற்கும்!

      நீக்கு
  4. இதெல்லாம் தேர்தல் நேர விளையாட்டு

    பதிலளிநீக்கு
  5. குனிய குனிய இந்த குத்துக்கள் கூடிக்கொண்டேதான் போகும் !
    த.ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரிதான் பகவான் ஜி! இந்த ஊடகங்களில் வரும் செய்திகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக அமைவது எது சரியென்று மக்களுக்கும் குழப்பம் வருவதுதான் மிச்சம்!
      உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!!

      நீக்கு
  6. வணக்கம்
    மிகச்சிறப்பாக எழுதியுள்ளீர்கள் மேலும் மேலும் வளர எனது வாழ்த்துக்கள்...
    என்பக்கம் புதிய பதிவாகhttp://tamilkkavitaikalcom.blogspot.com/2013/12/blog-post_3387.html#comment-form
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி!!

      உங்கள் வலைப்பூவில் நீங்கள் இடும் புதிய பதிவுகள் கிடைப்பதில்லை. என்ன பிரச்சினை என்று பார்க்கவும் எங்கள் வேண்டு கோள்! நீங்கள் இங்குகொடுத்திருக்கும் லிங்கச் சென்று பார்க்கிறோம்!

      நீக்கு
  7. வணக்கம்
    த.ம.6வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. நடுநிலை உணர்வுடன் உங்கள் கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி! உங்கள் வருகைக்கும், கருத்திற்கும், நீங்கள் தரும் ஊக்கத்திற்கும்!!

      நீக்கு
  9. உலகிலேயே அமெரிக்காதான் பெண்களுக்கும் குழந்த்தைகளுக்கும் பாதுகாப்பு தருவதில் முதல் இடம் வகிக்கின்றது. பெண்களை திருமனம் முடித்து வெறும் போகப்பொருளாக மட்டுமே நினைத்து அனுபவித்து நினைத்த மாத்திரத்தில் திருமன ரத்து செய்ய முடியாது. அப்படி ரத்து செய்தால் மனைவிக்கு அவனது சொத்தில் பெரும் பகுதியை கொடுக்கனும். அவள் எந்தமாதிரி வாழ்க்கையை வாழ்ந்திருநாளோ அதே வாழ்க்கை தரத்தை திருமனத்துக்கு பின்னும் உறுதி செய்யனும்.
    அங்கு விவாகரத்து சகஜாமானதால் வளர்ப்பு குழந்தைகளின் துன்புறுத்தல் காரனமாக குழந்தை பாதுகாப்பு சட்டம் கடுமையாக உள்ளது.

    ஒரு பென்னை வீட்டு வேலை பார்ப்பதற்காக இந்தியாவில் இருந்து அழைத்து வருவது எந்த ஊர் நியாயம்?. இதைச்செய்தது அமெரிக்கரே ஆனாலும் சட்டம் சும்மா விடாது.

    தேவயானியின் குற்றத்துக்கு இநிய அரசாங்கம் நியாம் கற்ப்பிப்பது இந்தியாவிற்கு கேலி சேர்க்கும் அவமானமான வேலையாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அமெரிக்க சட்டங்கள் பற்றி தெரியும்.! உங்கள் கருத்து சரியே! ஏற்றுக் கொள்கிறோம்!! உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  10. தங்கள் விமர்சனமும் அமெரிக்கா சட்டங்கள் பற்றியும் இந்தப்பதிவில் தெரிந்துகொண்டேன்.

    பதிலளிநீக்கு