பீமநகரி 1
பீமநகரி 2
==============================================================
பீமநகரி - 3
சில அடி தூரத்தில் வித்தியாசமான பெயருடன் ஒரு விநாயகர் கோயில் உண்டு. பதிவு பெரிதாகிவிட்டதால், அதை அடுத்த பகுதியில் பார்ப்போமா? என்று முடித்திருந்தேன்.
இதோ அந்த விநாயகர் கோயிலை வெளியிலிருந்துப்
பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டுத் தொடங்குவோம் நம் நடையை! ஜடாயுபுரம், பீமநகரி
முகப்பில்
உள்ள பச்சை நிறப் பலகையில் "அருள்மிகு எதிர்வல்லி சோழ விநாயகர் திருக்கோவில்"
என்று எழுதப்பட்டுள்ளது. படத்தைப் பெரிது பண்ணி பார்த்தால்தான் ஓரளவு தெரியும். எதிர்வல்லி என்பது "எதிரிகளை வெல்பவர்" அல்லது "எதிர்ப்புகளை முறியடிப்பவர்" எனப் பொருள்படும்.
இக்கோயில் சோழ மன்னர்களின் காலத்துடன் தொடர்புடையது, அதனாலேயே விநாயகர் 'சோழ விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார் என்று சொல்லப்படுகிறது.
பல நூற்றாண்டுகள் பழமையான, கருங்கற்களால் ஆன கட்டுமானத்தைக் கொண்ட கோயில்.
இந்த எதிர்வல்லி சோழ விநாயகர், இப்பகுதி மக்களின் காவல் தெய்வமாகவும், வேண்டுதல்களை நிறைவேற்றும் நாயகனாகவும் போற்றப்படுகிறார். எதிர்மறை ஆற்றல் (Negative energy) மறைய, இங்கு விநாயகருக்கு சிதறுகாய் உடைத்து வழிபடுவது வழக்கம்.
இக்கோயில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் (TNHRCE) நேரடி வழிபாட்டு
நிர்வாகத்தின் கீழ் வராமல், தனித்துவமான அமைப்பான கன்னியாகுமரி தேவஸ்வம் போர்டின்
(Kanyakumari Devaswom Board) கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. ஆனால் அதுவும் இணைக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் முந்தைய திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் (கேரளா)
இருந்ததால், இங்குள்ள பெரும்பாலான வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்கள் "கன்னியாகுமரி
தேவஸ்வம் போர்டு" மூலமாகவே நிர்வகிக்கப்படுகின்றன. தமிழ்நாடு அறநிலையத்துறையின்
ஒரு பிரிவாக இது செயல்பட்டாலும், இதன் கணக்கு வழக்குகளும் நிர்வாக முறைகளும் தேவஸ்வம்
சட்டதிட்டங்களின் படியே தனியாக நடத்தப்படுகின்றன.
இந்தத் தெப்பக் குளம் பீமநகரி பற்றிய சென்ற பதிவில் கிராமத்துக் கோவில் ஸ்ரீ பால பரமேஸ்வரி கோயில் பதிவில் போட்டிருந்தேன் இல்லையா அதே குளம் தான் பிள்ளையார் கோயிலுக்கும். இப்படிப் போனால் படித்துறையும் உண்டு. எதிரில் அம்பாள் கோயில் தெரு தெரிகிறது பாருங்க. எதிர் எதிரில். அங்கும் படித்துறை தெரிகிறது பாருங்க.
இக்கோவில் ஊர் காவல் தெய்வங்கள். முன்னர் திறந்த வெளியில் இருந்த தெய்வங்கள் இப்போது அழகான கட்டிடங்களுக்குள் வெயிலில் காயாமல், மழையில் நனையாமல்...
இடப்புறம் ஸ்ரீ கணபதி, நல்ல மாடன், நல்ல மாடத்தி, வலப்புறம் ஸ்ரீ .........மாடன், பீமநகரி என்று இருக்கிறது. அன்றுமே நேரில் பார்த்தப்பவே வலப்புறம் உள்ள கோயிலின் முகப்பில் பீமநகரி என்பதற்கு மேல் உள்ள எழுத்துகள் சரியாகத் தெரியவில்லை.
இதைப் பார்த்ததும் எனக்கு பாபிலோனின் தொங்கு தோட்டம் நினைவுக்கு வந்தது அதன் நடுவே மாளிகை. ஏனோ இந்த வீடு என்னை மிகவும் கவர்ந்தது.
உயிர்ப்பிருந்த போது இல்லா சுதந்திரம்...
உயிர்ப்பிழந்த நிலையில் கிடைத்திட.
படர்ந்திருக்கும் செடி, கொடிகள்!
அப்போது மிக மிகச் சிறிய கிராமமாக 10-12 வீடுகள் பாலபரமேஸ்வரி கோயில் அருகிலும் அப்புறம் சற்று வெளியில் ஒரு சில வீடுகள் மட்டுமே இருந்த கிராமம் இப்போது பீமநகரி ஊராட்சியாக வளர்ந்துள்ளது.
இந்த அழகிய கிராமத்திற்கு வந்த சாபக்கேடு - சமீபகாலமாக, விவசாய நிலங்கள்
வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. எனவே இப்பகுதியின் இயற்கை எழிலை பாதுகாக்க
வேண்டும் என்ற குரல்களும் எழுந்து வருகின்றன.
இதோ இந்த உரலைப் பார்த்ததும் ஆச்சரியம். எங்கள் ஊரிலா? நாம சின்ன வயசுல
இப்படிப் பார்த்ததே இல்லையே....குங்கும் தீட்டி, விளக்கு, பூ எல்லாம் போட்டு, சுப்பு
அக்காவிடமும் கேட்டேன். சரி இன்னும் சில மாதங்களில்
ஏதேனும் கோயில் வந்துவிடுமோ? அருகில் வேலியில்
அம்மன் துணிகள் போலத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அது அருகில் உள்ள அம்மான் கோயில்
துணிகளா என்று தெரியவில்லை. யாரும் இல்லாததால் கேட்கவும் முடியவில்லை. சுப்பு அக்காவிடமும்
கேட்டேன். அவருக்கும் தெரியவில்லை...
பாருங்கள் பெருமாள் நகர். Community! ஊரில் இப்படி முளைக்கத் தொடங்கியிருக்கின்றன. வயல்கள் அழிந்து வருகின்றன. விவசாயம் குறைந்து வருகின்றது. ஏதேனும் புரட்சி நடக்க வேண்டும் இல்லையேல் எதிர்காலம் கேள்விக்குறி. உணவுப் பற்றாக்குறை ஏற்படும். எனக்கு மிகவும் விருப்பமான விவசாயமும் செய்ய முடியவில்லையே என்று வருத்தத்துடன் அதற்கு எதிரில் உள்ள அழகான தாமரைக் குளத்தை க்ளிக்கிக் கொண்டு நடந்தேன்.
இப்படத்தில் தூரத்தில் தெரிகிறதா மேலே படத்தில் பார்த்த அடுக்கடுக்கான மலை. இந்தத் தாமரைக் குளத்தைப் படங்கள் எடுத்துக் கொண்டிருந்த போது
கார் மேகம் திரண்டு மழை பெய்யத் தொடங்கிவிட்டது. குடை எடுத்துக் கொண்டு வரவில்லை. கேமராவை
பைக்குள் பொதிந்து வைத்துக் கொண்டு வேகமாக ஓடினேன்....ஒதுங்க
இடம் பார்த்தால் சற்று தூரத்தில் ஒரு நெல் குத்தும் மில் அரவை மில், மற்றும் அரிசி
வகைகள் வைத்திருந்த மில் இருந்தது. அங்கு ஒதுங்கிக் கொண்டேன். வகை வகையான அரிசி, பருப்புகள் இருந்தன. அரை மணி நேரம் அடர்த்தியான
மழை.
இப்படத்தில் வலப்பக்கம் ஒரு கட்டிடம் தெரிகிறதா? அங்குதான் ஒதுங்கிக் கொண்டேன். சற்று தூரத்தில் வலப்பக்கம் திரும்பினால் திருப்பதிசாரம் கீழூர் சாலை. அது வழி வீட்டிற்கு...
இப்படி திருப்பதிசாரம் கிராமத்திலிருந்து பீமநகரி சென்று அப்படியே மீண்டும் கிராமத்திற்குள் வந்துவிடலாம் ஒரு circle route. கீழே இருக்கும் காணொளியை விருப்பமிருந்தால் பார்க்கலாம். நான் எடுத்திருந்த வேறு சில காணொளிகளில் இருந்த பறவைகளின் சத்தத்தைப் பிரித்தெடுத்து இக்காணொளியுடன் சில இடங்களில் இணைத்திருக்கிறேன்.
கோவிலின் பழமை வெளியிலிருந்து பார்க்கும்போதே தெரிகிறது. உள்ளே ஒரு நடை சென்றிருக்கலாம்!
பதிலளிநீக்குஸ்ரீராம், கோயிலின் வெளியே ஒரு இரும்பு கேட் இருந்தது அது பூட்டுப் போட்டிருந்தது இல்லைனா உள்ள போயிருப்பேனே...அட் லீஸ்ட் சுத்தி எடுத்துட்டு வந்திருப்பேனே. அதுவும் நாமெல்லாம் படங்கள் எடுக்காம விடுவோமா...
நீக்குகீதா
ஓ! கிரில் கேட் டில் இருந்த ஓட்டை வழியாகப் படம் எடுத்ததால் கேட் வரலை. இன்னொரு படம் இருக்கு அதிலும் கேட் இல்லை.
நீக்குகீதா
சோழ விநாயகர்! அப்போ பாண்டிய விநாயகர், சேர விநாயகர் எல்லாம் இருக்குமா? ராஜராஜன் காலமா.. அடேயப்பா.. எவ்வளவு பழைய கோவில்? உள்ளே சென்றிருக்கலாம்.
பதிலளிநீக்குஹாஹாஹா கோயம்புத்தூரில் மதுக்கரை அம்மன் கோயியில் சேர விநாயகர் இருக்கிறார். அப்ப சேரமன்னர்கள் தங்கள் தேசத்தைப் பார்த்த நிலையில் பிரதிஷ்டை செஞ்ச விநாகர் என்று.
நீக்குபாண்டி விநாயகர் கேட்டதில்லை. ஆனால் வேறு ஒரு தெய்வம் பாண்டி என்று உண்டு இப்ப டக்குனு நினைவில் வரவில்லை.
ஆமாம் ராஜராஜன் காலம்னு சொல்லப்பட்டிருக்கிறது. உள்ளே போக முடியலையே. அடுத்த முறை போக வாய்ப்பு கிடைத்தால் எப்ப கோயில் திறக்கும்னு பார்த்து போய்விட்டு வர நினைத்திருக்கிறேன். இல்லைனா உள்ள போகாமல் வருவேனா...
கீதா
சிறிய கோவிலாகத்தான் தெரிகிறது. அதுதான் நம்மூர் அறநிலையத்துறை ஆர்வம் காட்டவில்லை போலும். இல்லாவிட்டால் வசூலுக்கு வந்திருக்குமே..
பதிலளிநீக்குஆமாம் சின்ன கோயில் தான் பழைய கோயில் ஒட்டி அதைக் கொஞ்சம் மேம்படுத்திக் கட்டியிருக்காங்க முகப்பு எல்லாம். முன்ன நாங்க அங்கு இருந்தப்ப முன்பக்கம் எல்லாம் இப்படி இருக்கவில்லை
நீக்குஆமாம் மேலும் அது கன்னியாகுமரி தேவஸம் போர்ட் கீழே ஆனால் எல்லாரும் சொல்வது கவர்ன்மென்ட் கோயில்னுதான்...ஃபேமஸ் ஆகலை போல இல்லைனா நீங்க சொல்றாப்ல வசூலுக்கு வந்திருக்கும். இப்ப உள்ளூர் மக்கள்தான் கவனிச்சுக்கறாங்க
நன்றி ஸ்ரீராம்
கீதா
குளம் நிரம்பி மேல்சுவரைத் தொட்டுக்கொண்டு தளும்பி நிற்கிறது. அந்தக் காட்சியே ஒரு மனநிறைவைத் தருகிறது.. மனமே தளும்புவது போல...
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம், இறங்கிடலாமான்னு தோன்றியது. ஊரில் இருந்த வருடங்கள் என்றால் இறங்கியிருப்பேன். இப்ப என்னவோ பல வருடங்கள் கழித்து ஊருக்குப் போவதால் ஒரு அந்நியத்தன்மை வந்துவிட்டது. என்னதான் ஊரை அப்போது போல் ரசித்தாலும்.
நீக்குகீதா
ஆமாம்.. கோவில்கள் மூடி இருந்தன. ஆனாலும் அருகே சென்று ஒரு சுற்று சுற்றி புகைப்படம் எடுத்திருக்கலாம்!
பதிலளிநீக்குஅந்த சாலை அழகாக இருக்கிறது. கிளம்பியதிலிருந்து இந்த இடம் வந்துசேர 15 நிமிடம் ஆகியிருக்குமா?
ஸ்ரீராம் உள்ளே போகமுடியலையே கேட்.....அது போல இந்த எல்லை அம்மன் கோயில்கள் பின்னாடி ஒரு பக்கம் குளத்துச் சுவர்....மறுபக்கம் செடி கொடிகள். அப்பதானே வெள்ளம் வடிநிருந்தது. பின்பக்கம் போக முயன்றேனே....ஒரே இலை தழை குப்பைகள் சகதி. அதான் சைடில் குளம் சுவர் தெரியும் பாருங்க.
நீக்குகுளத்துச் சுவரை ஒட்டி சோழ விநாயகர் வளாகத்துக்குள் போக முடியாதபடி கேட்....அதை ஆட்டி ஆட்டிப் பார்த்தேன் ம்ஹூம் தள்ள முடியலை. பூட்டு இருந்தது.. கூட வருவதற்கும் யாருமில்லை...முன்ன போல இல்லை ஸ்ரீராம் ஊர்.
கீதா
பாழடைந்த அந்த கட்டிடங்கள் கண்ணைக் கவர்கின்றன. ஒருகாலத்தில் ஓஹோ என்று ஜனம் இருந்திருக்கும். இங்குமங்குமாக புழங்கி இருந்திருப்பார்கள்.
பதிலளிநீக்குஆமாம் நிச்சயமாக....ரொம்ப நல்லா இருந்தது. இவை எல்லாம் தான் நாங்க அப்ப பார்த்தவை.....நல்லா இருந்தவை....இப்படி ஆகிப் போச்சு. எங்க போனாங்கனே தெரியலை.....மற்றவை எல்லாம் பின்னர் வந்தவை.
நீக்குநன்றி ஸ்ரீராம்
கீதா
அந்த பாழ் மாளிகை முன்னே ஒரு இருசக்கர வாகனம் நிற்கிறதே... சதிகாரர்கள் கூடமா, அந்த இடத்தின் சொந்தக்காரரா?
பதிலளிநீக்குஹாஹாஹா இல்லை....அருகில் இருந்த வீட்டிற்கு வந்தவர் ஒருவர் அங்கு நிறுத்தியிருந்தார் நடக்கும் ரோட் என்பதால் இப்படி ஓரமாகவாம்!! நான் ஃபோட்டோ எடுப்பதைப் பார்த்து, வண்டி நவத்தணுமாக்கான்னு கேட்டார்....நான் வேண்டாம் என்றுவிட்டேன்...அவரிடம் இந்த வீடு பற்றிக் கேட்டேன் அவருக்குத் தெரியாதாம் அவர் நாரோயில்லருந்து நிலம் பார்க்க வந்தவராம்.
நீக்குநன்றி ஸ்ரீராம்
கீதா
தான்
பதிலளிநீக்குவாழ்ந்த காலங்களின்
தகவலைச் சொல்ல
தனிமைப்படுத்தப் பட்டாலும்
தள்ளி நின்று
காட்சிப்பொருளாக நிற்கிறது.
சூப்பர் ஸ்ரீராம். கவிதை. தகவல் தான் கிடைக்கலை! ஹாஹாஹா...யார்கிட்ட கேட்டாலும் கையை விரிச்சாங்க. எல்லாரும் புச்சாம் ஊருக்கு!!! அப்ப பழைய மனிதர்கள் எல்லாம் எங்கே போனார்கள்!!!!?
நீக்குகீதா
மீண்டும் ஒரு
பதிலளிநீக்குபுதிய "கோலத்து"க்காக
காத்திருக்கும்
அந்த வீடு
திறந்த கதவுகளுடன்
காலத்தைத் தாண்டியும்
காத்து நிற்கிறது
விட்டு விட்டுப்போன
தன் குழந்தைகள்
மறுபடி
தன்னைக் கொண்டாட
சீர் செய்ய
வருவார்கள் என்ற
நம்பிக்கையுடன்!
ஆஹா!!!! ரசித்தேன் ஸ்ரீராம்.
நீக்குஅப்படியாராச்சும் வந்தா எவ்வள்வு நலலருக்கும் ஆனா இதை இடிச்சு ஃப்ளாட் கட்டிருவாங்களே!
எனக்கு இந்த வீடுகளைப் பார்த்ததும் என்னென்னவோ கற்பனை விரிந்தது, ஸ்ரீராம்...
நன்றி ஸ்ரீராம்
கீதா
யார் சுப்பு அக்கா? அந்த இடங்கள் அழகாய் இருக்கின்றன. பார்த்து ரசிக்கலாம். நம் போன்றவர்களால் அங்கு தொடர்ந்து காலம் தள்ள முடியாது!!
பதிலளிநீக்குபோன பதிவிலும் சொல்லியிருந்தேனே. நான் அம்மன் படம் இல்லைன்னு கேட்க அங்கே முன்பிருந்தவர் இப்ப சென்னைல....அந்த அக்கா எனக்கு அங்குதான் பூஜையில் இருக்கேன்னு படம் அனுப்பியதைச் சொன்னேனே... அந்த அக்காதான்..
நீக்குஇருக்கலாம் ஸ்ரீராம் இப்ப இணையம் எல்லா இடத்துலயும் இருப்பதால்...அங்கும் வார இறுதியில் சுற்றிப் பார்க்க நிறைய நிறைய நிறைய இடங்கள் இருக்கின்றன. பேருந்து வசதிகளும் நிறைய. அது போல அங்கும் சாமான்கள் எல்லாம் நல்லா கிடைக்கின்றன. வீட்டுக்குக் கொண்டு தரவங்களும் இருக்காங்க. பார்க்கதான் கிராமம். ஆனால் வசதிகள் நிறைய. இங்கு விட.
கீதா
அந்த பெருமாள் நகரில் ஒரு வசதியான வீடு வாங்கி கொண்டு இறுதிக் காலத்தை இப்படி மலைகளையும் குளங்களையும் பார்த்து ரசித்துக் கொண்டு இன்டர்நெட்டுடன் வாழ்வை கழிக்கலாம்!
பதிலளிநீக்குலாம் தான்....ஆனால் அதன் பின்னால் இருக்கும் நிலங்கள் எல்லாம் போய்விடும்...இன்னும் சில நாட்களில். மற்றபடி மலைக்ள் குளங்கள் ஆறுக்ள் என்று செம இடம் ஸ்ரீராம். சுத்தி அவ்வளவு அழகு. எனக்கு ஆசை உண்டு...ஆனால் யதார்தத்தில் முடியுமா என்று தெரியலை. அங்கு போனால் விவசாயம் கூடச் செய்யலாம். நெல்னு இல்லை காய்கறி பழங்கள் தோட்டம்...
நீக்குநன்றி ஸ்ரீராம்
கீதா
ஓ.. ஒரு வட்டப்பாதையில் நடந்திருக்கிறீர்கள்! மொத்தம் எவ்வளவு நேரம் பிடித்தது? திடீர்மழை உற்சாகமாக இருந்திருக்கும்.
பதிலளிநீக்குஹாஹாஹா....ஆமாம் இதுவும் நம்ம ஊரோடு சேர்நதுதானே. சுற்றி வர எளிது. சாதாரணமாக 45 மணி நேரம் ஆகும். நான் ஆங்காங்கே நின்று ரசித்து ஃபோட்டோ பிடித்து எல்லாம் வர 1 1/2 மணி நேரம் ஆகிவிட்டது!! இடையில் மழை.
நீக்குஆமாம் திடீர் மழை ரொம்ப மகிழ்ச்சியாகிவிட்டது. ஸ்ரீராம்....முந்தைய நாள்தான் மழை நின்று வெள்ளம் வடிந்திருந்தது. அன்று வெயில் அடித்தது என்று கிளம்பினேன்...திடீர் மழை!!
கீதா
தொந்தரவு செய்வோர் யாரும் அருகில் இன்றி, வேடிக்கை பார்ப்போர் யாரும் அருகில் இன்றி, வேறு எந்த பேச்சுக்குரல், வாகன சத்தங்களும் இல்லாமல் இயற்கையின் பின்னணி இசையோடு காணொளி அபாரம்.
பதிலளிநீக்குரசனையான பதிவு.
உண்மையிலேயே ஸ்ரீராம்...ஏகாந்தமாக அப்படி ரசித்து நடந்தேன். இனி மீண்டும் எப்ப கிடைக்குமோ என்று.....அப்படித் தனியாக நடப்பது சுகம்.
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்,
கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. பீமநகரி செல்லும் பாதை காட்சிகள் பசுமை மிகுந்ததாக க அருமையாக உள்ளது.
/பலகையில் "அருள்மிகு எதிர்வல்லி சோழ விநாயகர் திருக்கோவில்" என்று எழுதப்பட்டுள்ளது./
ஆம். விநாயகரின் பெயரே வித்தியாசமாக உள்ளது. ஆனால், அந்தப் பெயரின் அர்த்தம் நன்றாக உள்ளது. நம் எதிரிகளை வென்று நமக்கு வரும் எந்தவொரு தடைகளையும் தகர்த்தெறிந்து நம்மை காத்தருளுபவர். ஆகா.. அருமையாக உள்ளது. அவரை நானும் இங்கிருந்தபடியே நமஸ்கரிக்கிறேன்.🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலாக்கா..
நீக்குஆமாம் இப்படி இன்னொரு விநாயகர் சோழர்காலத்தவர் தாழக்குடி எனும் அருகிலுள்ள கிராமத்தில் இருக்கிறார் என்று தெரியவருகிறது.
பெயர்க்காரணம் அதுதான்...
போகும் வழி ரொம்ப அழகா இருக்கும்
மிக்க நன்றி கமலாக்கா
கீதா.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குதாங்கள் பதிந்த இந்த இயற்கைப் பதிவு நன்றாக உள்ளது. சோழர் காலத்தில் கட்டிய அந்த விநாயகர் (எதிர்வல்லி விநாயகர்) பெயரை மிக ரசித்தேன்.
அது போல பால பரமேஸ்வரி கோவிலும் அழகாக உள்ளது. ஸ்ரீ கணபதி ஸ்ரீ மாடன் ஸ்ரீ மாடத்தி போன்ற தெய்வங்களை ஊர் மக்கள் அழகான கோவில் கட்டி வழிபடுவது சிறப்பு. கோவில் பளபளவென்று புதிதாக உள்ளது. எங்கள் அம்மா வீட்டில் இருந்த போது, (திருமணத்திற்கு முன்) மாடத்தி என்ற பெயரைக் கொண்ட ஒரு பெண்மணி ஒரு பலசரக்கு கடை வைத்திருந்தார். அங்கு அடிக்கடிச் சென்று அவர் கடையில் சில சாமான்களை வாங்கியது நினைவுக்கு வந்தது. நான் சென்னையிலிருந்து வரும் போதெல்லாம், அவர் கடைக்குச் செல்வேன். நாங்கள் மாடத்தி கடை என்றே சொல்வோம். உங்கள் பதிவை பார்த்ததும் மலரும் நினைவாக வந்தது.
ஊர் முழுவதும் நல்ல இயற்கை காட்சிகள். அடுக்கடுக்கான மலைகள், வானில் மழைக்காக சூழும் கரு மேகங்கள், தாமரை மலர்கள் ஆங்காங்கே ஓடும் சிற்றோடைகள் என அத்தனைப் படங்களும் அட்டகாசம். பெரிய மழையில் நனைந்தும் விடாமல், படங்களை நன்றாக எடுத்துள்ளீர்கள். பார்த்துப் பார்த்து ரசித்தேன். உங்கள் திறமையை எண்ணி வியந்தேன். /வியக்கிறேன்.
அதுபோல் பதிவுக்கு, நல்ல ரசிப்புடன் நம் சகோதரர் ஸ்ரீராம் அவர்களும் கருத்து மழையாக பொழிந்திருக்கிறார். அவைகளையும் படித்து ரசித்தேன்.
தங்களின் சென்ற பதிவுக்கு கருத்திடுவதற்காக வந்தேன். இந்தப் புதுப்பதிவு கண்ணில் பட்டதும், (நீங்களும் எபியில் குறிப்பிட்டிருந்ததை படித்த நினைவும் வந்தது.). இங்கேயே நிற்கிறேன். பீமநகரியை விட்டு நகர மனமில்லை. :)) எல்லாம் இயற்கையின் கொடை. இந்தக் கொடையை மக்கள் தானமாக்காமல் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
காணொளியும் கண்டு ரசித்தேன். பறவைகளின் சத்தத்தோடு காணொளி மெல்லிசையும் மிக அற்புதம். மீண்டும் உங்கள் திறமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
எல்லை தெய்வங்களுக்கான கோயில் சமீப வருடங்களில் கட்டப்பட்டது.
நீக்குநம்ம ஊர்ப் பக்கங்களில் எல்லை அம்மன் பெயர்களை வைப்பதுண்டு. இசக்கியம்ம்மாள், பகவதி, ஔவை, முத்தாரம்மன், சந்தனமாரியம்மா என்று. இங்கும் கூட எல்லையம்மா, ஒன்னம்மா, மாரம்மா என்று இருக்கே
உண்மை அக்கா. பீமநகரி விட்டு வர மனம் வராது அங்கு போய்ப் பார்த்தால்...இருந்தால்...அப்படியே இருந்துவிடலாமே என்று தோன்றும்.
காணொளியும் கண்டு ரசித்ததற்கு மிக்க நன்றி கமலாக்கா.
கீதா
பழமையான ஆலயம். சிறப்பு.
பதிலளிநீக்குபாழடைந்த வீடு..... பார்க்கவே வேதனை. எத்தனை இன்பமும் துன்பமும் கலந்து பார்த்திருப்பார்கள் மனிதர்கள்.
படங்களும் மனதைக் கவர்ந்தன.
ஆமாம், வெங்கட்ஜி...அந்த வீடுகள் பார்த்ததும் வருத்தம் ஒரு புறம் கூடவே இந்த வீட்டை செப்பனிட்டா இப்ப எப்படி இருக்கும் என்ற எண்ணம் வேறு....
நீக்குநன்றி வெங்கட்ஜி
கீதா
மிக அழகான படங்கள்! தமிழ் நாட்டில் இவ்வளவு அழகான ஊரா? என்று தோன்றுகிறது. காமிரா அழகை சற்று மிகைப்படுத்தி காட்டும். நேரிலும் இப்படியே இருக்கிறதா?
பதிலளிநீக்குநேரிலும் அப்படியேதான் இருக்கும் பானுக்கா. செல்லும் வழி எல்லாமே.
நீக்குதமிழ்நாட்டில் இப்படித் தேனீ, கம்பம், பகுதிகள், திருநெல்வேலியின் மேற்குப் பகுதிகள், செங்கோட்டை, குற்றாலம் , அம்பாசமுத்திரம், காரைக்கறிச்சி, களக்காடு, ஏர்வாடி, கடம்போடுவாழ்வு (நான் இங்கு அந்த ஊர்ப்படங்களும் போட்டிருக்கிறேன். மிக அழகிய கிராமம்) இன்னும் பல எல்லாமே அத்தனை அழகாக இருக்கும்
நன்றி பானுக்கா
கீதா
முதல் படம் எங்கள் ஊர், எங்கள் கிராம தேவதையின் கோவிலை நினைவூட்டியது.
பதிலளிநீக்குதாமரைக் குளம் அழகோ அழகு! நாங்கள் ஸ்ரீவாஞ்சியம் சென்றுவிட்டு திரும்பும் பொழுது இதே போல தாமரைகள் பூத்திருந்த ஒரு குளத்தைப் பார்த்தது நினைவுக்கு வந்தது. அப்போதும் லேசான மழை! அந்தப் படங்கள் பழைய டிஜிட்டல் காமிராவில் இருந்தன.
உங்கள் ஊர்ப்பகுதியும் அழகுதானே அக்கா தஞ்சாவூரின் உட்பகுதிகள்.
நீக்குதாமரைக்குளங்கள் எங்கிருநாலும் பார்க்க அழகுதான் ல...எங்கள் ஊரில் சுற்றி இன்னும் உண்டு இப்போது குறுகிவருகின்றன.
நன்றி பானுக்கா
கீதா
சோழர் கால பிள்ளையார் கோயில்.... உள்ளே செல்ல முடியலையா? கோயிலைப் பார்க்கும்போதே பழைமை தெரியுது
பதிலளிநீக்குதாமரைக் குளங்கள் கண்ணைக் கவருகின்றன.
பதிலளிநீக்குபெருங்களத்தூரிலும் நான் இரண்டு தாமரைக் குளங்களைப் பார்த்திருக்கிறேன். பிறகு ப்ளாட் போட்டுட்டாங்க. யார் அனுமதி கொடுக்கறாங்கன்னே தெரியலை
அடுக்கடுக்கா மலைகளுடன் கூடிய படம் ரொம்ப சூப்பர்.
பதிலளிநீக்குஆடுகளை ஏதோ மான்கள் ரேஞ்சுக்குப் படங்கள் எடுத்திருக்கீங்களே
பாழடைந்த வீடுகளைக் காணும்போதும், வயதான கைவிடப்பட்டவர்களைக் காணும்போதும் ஒரு காலத்தில் பலருக்கும் சந்தோஷத்தைக் கொடுத்திருப்பாங்க கொடுத்திருக்கும் என்று நினைத்துக்கொள்வேன்.
பதிலளிநீக்குபாழடைந்த வீடு எத்தனை விசேஷங்களைப் பார்த்திருக்கும்.
படங்கள் ரசித்தேன் இருந்தாலும் மனதுக்கு வருத்தம்தான்.
மாளிகை பார்க்க வெகு அழகு. புதிதாகச் செய்தாலும் உங்களால் அங்க எங்க தங்க முடியும்? அந்த மாதிரி மாளிகைல தங்கணும்னா உங்களுக்கு பத்துப் பசங்க, இருபது பேரப் பசங்க, வீட்டு வேலைக்கு பதினைந்து ஆட்கள் என்று கூட்டமா இருக்கணுமே.
பதிலளிநீக்குபயணத்தினால் ரொம்பவே தாமதமாக பதிவுக்கு வந்தேன். என்ன பண்ண...
பதிலளிநீக்கு