அதன் பின் போகும் வழியில் குலுவில் உள்ள சிவ-வைஷ்ணவோ தேவி கோவிலில் தரிசனம் செய்தோம்.
நதியருகே - இங்குதான் உள்ளே நாங்கள் தங்கிய கூடாரங்கள்
கசோலில் முக்கியமாக ஒரு போதை Power Cake சாப்பிடாமல் வந்தால் பேரிழப்பாம்! எனவே அதையும் ருசித்தோம். ஒன்றுக்கு ரூ 800. இரண்டு வாங்கி எல்லோரும் பகிர்ந்து கொண்டோம்.
இரவு உணவுக்குப் பின் Campfire (காணொளியில்) முடித்து கூடாரத்திற்குள் தூக்கம். அதிகாலை 3 மணிக்கு நாய்கள் குரைத்து உறக்கம் போனது. கூடவே சிந்தூர் ஆப்பரேஷன். பதிலாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஏதும் நடந்தால் என்னாகும் என்ற பயம் தொற்றிக் கொண்டது. நமச்சிவாய மந்திரம் இருக்க நமக்கு ஏன் பயம்! ஐந்தெழுத்து மந்திரம் சொல்லித் தூங்கிப் போனேன்.
கஸோலில் அப்பகுதியைப் பார்க்க நடந்து போன சமயத்தில் எடுத்தவை
மணிக்கரண் சிவாலயம்
பின் மணிக்கரணில் கடைத்தெருவில் சில பொருட்கள் வாங்கிக் கொண்டு 5 மணிக்கு கஸோலில் இருந்து எங்கள் சாமான்களை எடுத்துக் கொண்டு (Bh)புந்தர் எனுமிடத்தில் இறங்கினோம். வண்டி ஓட்டுநருக்கு நன்றி சொல்லி ஊக்கத் தொகை கொடுத்து வழியனுப்பினோம். அங்கு இரவு உணவு உண்டோம்.
9.15ற்கு அங்கிருந்து, வரும் போது நாங்கள் மணாலிக்கு வந்த Vacation Express பேருந்தில் தில்லி நோக்கி பயணம் செய்ய வேண்டும். Volvo வந்ததும் ஏறி அமர்ந்து அயர்ந்து தூங்கிட 6 மணிக்குக் கண் விழித்த போது தில்லியை வண்டி நெருங்கிக் கொண்டிருந்தது.
08-05-25 - வியாழன், காலை உணவு முடித்ததும் வண்டி வந்தது. எங்களை அக்ஷர்தாம் வண்டி நிறுத்துமிடத்தில் இறக்கியதும் நாங்கள் அக்ஷர்தாமிற்குள் சென்றோம். அரிய காட்சிகளைக் கண்டபின் Food court ல் சாப்பிட்டோம். கொஞ்சம் இனிப்புகள் வாங்கிக் கொண்டோம்.
செங்கோட்டை
அதன் பின் சாந்தினி சௌக்கில் இறங்கி பொருட்கள் வாங்கி முடித்த பின் காத்திருந்த வண்டியில் ஏறி 7 மணிக்கு புதுதில்லி ரயில் நிலையம் சென்றடைந்தோம். வண்டி ஓட்டுநருக்கு ஊக்கத் தொகையும் கொடுத்து நன்றியும் சொல்லி விடை பெற்றோம். இரவு உணவு உண்ட பின் கேரளா விரைவு வண்டியில் ஏறினோம். இரண்டு இரவு பகல்கள் தங்கும் வீடாக இருக்கும் கம்பார்ட்மென்டில் அமர்ந்தோம்.
09-05-25 - வெள்ளிக் கிழமை பகலும் இரவும் கடந்தது. 10-05-25 சனிக்கிழமை, ரயிலிலேயே, ஜோலார்பெட்டில் காலை உணவு, ஈரோடில் மதிய உணவு வாங்கி உண்டோம். மதியம் 1.30 மணிக்குப் பாலக்காடில் நாங்கள் 8 பேர் இறங்கினோம். அதே ரயிலில் அருண் திருச்சூர் வரை சென்று அங்கிருந்து இடுக்கி மருத்துவக்கல்லூரிக்குச் சென்றான். அது போலவே அதே ரயிலிலேயே விநாயக் திருவனந்தபுரம் அவனது கல்லூரிக்குச் சென்றான். இருவரையும் வழி அனுப்பிவிடு பாலக்காடிலிருந்து 3 மணிக்கு ஷோரனூர் ரயில் ஏறினோம். அங்கிருந்து 6 மணிக்கு நிலம்பூர் ரயிலில் ஏறி இரவு 8 1/2 மணி அளவில் வீட்டை அடைந்தோம்.
ஒவ்வொரு பயணமும் நமக்குத் தரும் மகிழ்ச்சியும் அனுபவங்களும் கிடைத்தற்கு அரியவை. அதைத் தந்த இறைவனுக்கு நன்றி. அத்துடன் எங்களுடன் இதுவரை பயணித்த உங்களுக்கும் நன்றி. மீண்டும் ஒரு பயணத்தில் சந்திப்போம்!
பதிவில் இல்லாத காட்சிகள் படங்கள் இக்கணொளியில் உண்டு. முடிந்தால் நேரமிருந்தால் பாருங்கள்.. நன்றி
ஜெயகுமார் சந்திரசேகரன் ஸார் / அண்ணா அவர்களின் 50 வது திருமணநாளுக்கு எங்கள் எல்லோரது வாழ்த்துகள்! நீண்ட ஆரோக்கியத்துடன், அன்புடன் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ்ந்திட பிரார்த்தனைகள்!
------துளசிதரன் தில்லைஅகத்து
ஒரே ஒருமுறை படகுச்சவாரி செய்திருக்கிறேன். கன்னியாகுமரியில்.
பதிலளிநீக்குஇருங்கள்.. ஓ..
அப்புறம் திரிவேணி சங்கமத்தில் செய்திருக்கிறேன். சற்றே படபடப்பாக இருக்கும்!
ஓ கன்னியாகுமரியில் படகுச்சவாரி இருக்கிறது இல்லையா? நாங்கள் சென்றது இயந்திர பெரிய போட். திரிவேணி சங்கம அனுபவம் இல்லை. நீங்கள் சென்று வந்தது கங்கையில் அதுவும் ஆழமாகத்தான் இருக்கும்.
நீக்குராஃப்டிங் படகுச் சவாரியை விடக் கொஞ்சம் ஆபத்தானது. அதனால்தான் தலைக்கவசம். ஆற்றின் ஓட்டமும் பாறைகளும், நிறைந்த பகுதியில் ராஃப்டை செலுத்தவேண்டியிருப்பதால்.
உங்களுக்கு நீச்சல் தெரியும்தானே? எனக்கு ம்ஹூம்.
மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி
துளசிதரன்
// உங்களுக்கு நீச்சல் தெரியும்தானே? எனக்கு. //
நீக்குகடப்பாரை நீச்சல் நன்றாக வரும்!
கடப்பாறை நீச்சல்? முதலில் புரியவில்லை பின்னர் புரிந்தது, பாறையைப் பிடித்துக் கொண்டு நீச்சல் அடிப்பது இல்லையா?
நீக்குமீண்டும் கருத்து கொடுத்ததற்கு மிக்க நன்றி துளசிதரன்
துளசிதரன்
அட! ஸ்ரீராம், கடப்பாறை நீச்சல் தெரியுமா...ஆபத்து சமயங்களில் அது நன்றாக உதவுமே! இது மனுஷங்களுக்கு இயல்பாக இயறகையாகவே வந்துடும். என் பையனை முதலில் நீச்சல் குளத்துல அந்த பயிற்சியாளர், "வாடா நீஞ்சலாம் " என்று சொல்லி அலேக்கா தூக்கிக் குளத்துல போட்டார்....அவன் நீஞ்சி வந்தான் பாருங்க...."அடேய் பொடிப்பயலே எங்கடா இந்தக் கடப்பாறை நீச்சலை அடிக்கப் படிச்ச? என்று கேட்டார். விலங்குகள் நீந்துவது போல உடம்பை செங்குத்தாக வைத்துக் கொண்டு கால்களையும் கைகளையும் துழாவிக் கொண்டு நீந்துதல்...
நீக்குசெம ஸ்ரீராம்,.
கீதா
நீச்சல் தெரியாவிட்டாலும் குறை இல்லை ஸ்ரீராம் ஜி. எத்தனை பேர் அது தெரியாமலேயே வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். இல்லையா.
நீக்குதுளசிதரன்
நீச்சல் தெரியாவிட்டாலும், தண்ணீரில் போகும் போது கொஞ்சம் கவனமாக இறைவனின் பெயரைச் சொல்லிக் கொண்டே வேண்டிக் கொண்டேன்!
நீக்குதுளசிதரன்
(ஸ்ரீராம் இதை சிரித்துக் கொண்டே சொன்னாரு துளசி!!!!!! - கீதா)
ஓ! கடப்பாரை நீச்சல் என்றால் இதுவா கீதா இப்போது சொல்லியதில் தெரிந்து கொண்டேன். பரவாயில்லையே அதாவது உங்களுக்குத் தெரிகிறதே!. நான் நீந்த முயலும் போதெல்லாம் என்னவோ தெரியவில்லை ஓரே இடத்தில் மட்டுமே கையும் காலும் அடித்துக் கொண்டு இருப்பேனே தவிர ஒரு இஞ்ச் கூட நகர்ந்ததில்லை! அதனால் நமக்கெல்லாம் ஒத்துவராது என்று அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டேன்.
நீக்குதுளசிதரன்
பலூனிலா? சான்ஸே இல்லை. நான்லாம் ஏறவே மாட்டேன். இதுநாள் வரை அந்த ராட்சத சக்கரத்தில் மட்டுமில்லை, சிறிய சக்கரங்களில் எறியதில்லை. குதிரை பொம்மை, வாத்து பொம்மை என்று உட்கார்ந்து சுற்றும் ராட்டினத்திலும் அமர்ந்ததில்லை. தலை சுற்றும்!!
பதிலளிநீக்குபலூனில் எனக்குமே பயம் தான். உங்களைப் போல் ராட்டினத்தில் நானும் ஏறியதில்லை. ஓரிரு முறை தவிர ஏறியதில்லை. நீங்களும் என்னைப் போல் என்று தெரிகிறது. ஓ உங்களுக்குத் தலைச்சுற்றல் இருக்கிறது இல்லையா?
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்ஜி
துளசிதரன்
நான் ஒரு முறை கூட ஏறியதில்லை ஏற மாட்டேன்.
நீக்குபுரிந்து கொண்டேன் ஸ்ரீராம் ஜி. எனக்கும் பயம் உண்டு
நீக்குதுளசிதரன்
இரண்டு கிலோ மீட்டர் என்றாலும் ஒரு கிலோமீட்டர் போலதான் தோன்றியதா, ஆமாம்.... போக ஒரு கிலோமீட்டர், வர ஒரு கிலோமீட்டர்.. ஆக, இரண்டு கிலோமீட்டர்!!! அதற்கு 800 ப்ளஸ் 100 ஆ?
பதிலளிநீக்குஇல்லை திரும்பி வராது. ஓரிடத்தில் ஏற்றிக் கொண்டு ராஃப்டிங் முடியும் இடத்தில் நாம் சென்ற வண்டி நிற்கும் அங்கு நம்மை ஏற்றிச் செல்ல. மலைச்சரிவாக இருப்பதால் ராஃப்ட் மேல்நோக்கிச் செல்லாது. பெரும்பாலும் இந்த ராஃப்டிங் எல்லாம் தொடங்கும் இடத்தில் ராஃப்ட்களை திரும்ப பிக்கப்பில் தான் கொண்டு செல்கிறார்கள்.
நீக்குநன்றி ஸ்ரீராம்ஜி
துளசிதரன்
ஓ.... புரிந்தது! புரிந்தது!
நீக்குஇடத்தின் பெயரைக் கேட்கும்போது முத்து பாடல் நினைவுக்கு வருகிறது!! அங்கிருந்த காட்டு ரோஜாவை காட்டியதற்கு நன்றி! ஹிஹிஹி...
பதிலளிநீக்குமுத்து படப்பாடல் நீங்கள் சொன்னதும் தான் நினைவுக்கு வருகிறது. அந்தக் காட்டு ரோஜாவின் இதழ்கள் மிகவும் குறைவு. வித்தியாசமாக இருந்தது. அதனால்தான் அதனை மொபைலில் எடுத்துக் கொண்டேன். அதுபோலத்தான் அங்குள்ள வீடுகளும். கூரைகளெள்ளாம் கற்களால் வேயப்பட்டிருந்தது. படம் பார்த்தாலே தெரியும்.
நீக்குநன்றி ஸ்ரீராம்ஜி
துளசிதரன்
போதை கேக்? கஞ்சா கலந்ததா?
பதிலளிநீக்குகசோல் வீடுகள் நம்மூர் அக்ரஹார வீடுகள் போல இருக்கு.
அப்படித்தான் சொன்னார்கள். கஞ்சாவின் அம்சம் கொஞ்சம் இருக்கிறது என்றுதான் சொன்னார்கள். அங்கு என்கு பார்த்தாலும் கஞ்சா செடிகள் தாராளமாக இருக்கும் இடம். அந்த கேக்கைச் சுவைத்த போது புகையிலையைச் சுவைத்தது போன்ற ஒரு ருசி. நாங்கள் மிகவும் குறைவாக. அது சைஸ் மிகச் சிறிய கட்லெட் சைஸில்தான் இருந்தது. அங்கு வருவோர் பலரும் ஒன்று இரண்டு என்றெல்லாம் கூடச் சாப்பிடுவார்களாம். அவர்கள் போதையில் மயங்கி விழ வாய்ப்பிருக்கிறது. நல்லகாலம் எங்களுக்கு அதன் பாதிப்பு எதுவும் தெரியவில்லை.
நீக்குநன்றி ஸ்ரீராம்ஜி
கீதா
ஸ்ரீராம் நினைவு இருக்கா. வெங்கட்ஜி தளத்தில் மூன்று சிகரங்கள் பகுதியில் ஒன்றில் மலை ஏறும் போது சில்லம் - கஞ்சா செடியின் படம் போட்டிருட்ந்தார் அந்த இலையில் பக்கோடா செய்து தரட்டுமான்னு அந்த டீக்கடைக்காரர் கேட்டதாகச் சொன்ன நினைவு வருகிறதா?
நீக்குகீதா
தொப்பியைப் பார்க்கும்போதே சீக்கிய குருத்வாரா என்று தெரிகிறது. கொதிக்கும் நீரில் பிரசாதம் செய்து கொள்வது செய்தி.
பதிலளிநீக்குஆம் குருத்வாராவின் உள்ளே செல்லும் எல்லோருக்கும் தலையில் கட்ட மஞ்சள் துணி தருகிறார்கள். உணவும் தேநீரும் அங்கே கிடைக்கும்.
நீக்குகொதிக்கும் நீரில் அரிசியை சின்ன மூட்டையாகக் கட்டி அதில் விட்டு பிரசாதமாக எடுத்துக் கொள்வதெல்லாம் மணிக்கரண் சிவாலயத்தில். கீழே.
நன்றி ஸ்ரீராம்ஜி
துளசிதரன்
ஊக்கத்தொகை என்றால் எவ்வளவு கொடுப்பீர்கள்? அவருக்கான கட்டணம் எவ்வளவு?
பதிலளிநீக்குஒவ்வொருவரும் 100 ரூபாய் என்று கணக்கிலெடுத்தாலே 1000 ரூபாய் வந்துவிடுமே. அதுவே ஓரளவு..அதுதான் டிப்ஸாகக் கொடுக்கும் ஒன்று.
நீக்குநன்றி ஸ்ரீராம்ஜி
துளசிதரன்
பிரதமர் சுடப்பட்ட இடம் பார்த்தபோது கெதக் என்றது. மைகாட்.. எவ்வளவு துன்பம் அனுபவித்திருப்பார் இந்திரா காந்தி..
பதிலளிநீக்குஆமாம், இந்திராகாந்தி சுடப்பட்ட போது அவர் அணிந்திருந்த ஸாரியையும், ராஜீவ்காந்தி சுடப்பட்ட போது அவர் அணிந்திருந்த ஆடையையும் அங்கு பாதுகாக்கிறார்கள்.
நீக்குஅதனைப் பார்த்த போது மனதிற்கு மிகவும் வேதனையாக இருந்தது.
நன்றி ஸ்ரீராம் ஜி
துளசிதரன்
ஈரோட்டில் மதிய உணவா.. ஆ.. அ ங்கிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில்தான் எங்கள் மகனின் திருமணம் நடக்கவிருக்கும் மண்டபம்!
பதிலளிநீக்குபாருங்கள்! ஈரோடில் நாங்கள் அட்வான்ஸாக அன்றே உணவு உண்டோம்! அது போல வரவிருக்கும் திருமண நாளில் மணமக்களுக்கு அட்வான்சாக வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்கிறோம்! பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ மனதார இறைவனை வேண்டி வாழ்த்துகிறோம்,
நீக்குதுளசிதரன்
JKC தம்பதியரின் 50 வது மணநாளுக்கு வணக்கங்களும், வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குஅது போலவே JKC தம்பதியரின் 50 தாவது மணநாளிற்கு நம் எல்லோரது வாழ்த்துகளும் வணக்கங்களும்
நீக்குதுளசிதரன்
பதிவு அருமை. பயண விவரங்களுடன் . சென்ற இடங்களின் படங்ககளுடன் பதிவு செய்து விட்டீர்கள்.
பதிலளிநீக்குகாணொளி அருமை.கிராமிய வீடுகள் நன்றாக இருக்கிறது.
ஆமாம் அங்கு கிராமங்கள் அழகாக இருக்கின்றன ஆனால் மலைகள் பகுதியில் இருப்பதால் ஆபத்தும் இருக்கும் என்றே தோன்றியது.
நீக்குகாணொளியையும், பதிவையும் ரசித்ததற்கு மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு.
துளசிதரன்
அங்குள்ள குளிரைத் தாங்கக் கூடிய விதத்தில் அதிகம் ஜன்னல்கள் இல்லாமலும் இருந்தாலும் கண்ணாடிகளுடந்தான் பெரும்பான்மை கதவுகளும் கூட அப்படித்தான். கூரைகள் கற்களால் என்று இருந்தன.
நீக்குநன்றி சகோதரி
துளசிதரன்
ஜெயக்குமார் சந்திர சேகரன் அவர்களுக்கு 50 வது மணநாள் வாழ்த்துகள் , வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஆமாம் வாழ்த்துவோம்!
நீக்குதுளசிதரன்
ரொம்ப தாமதமாகத்தான் பதிவுக்கு வந்திருக்கிறேன். பயணம், வேலைகள்.
பதிலளிநீக்குநீங்கள் சென்றது படகுச்சவாரி அல்ல. ராஃப்டில் பயணிப்பது தனி அனுபவம். நீரின் வேகத்தோடு பயணிக்கும்போது அது தரும் உணர்வே தனி.
வடநாட்டில் கங்கை மற்றும் பல நதிகளின் இது உண்டு. நான் இன்னும் பயணித்ததில்லை.
பாருங்கள், நானும் பயணத்தில் இருந்ததால், தாமசித்துதான் பதில் தருகிறேன்.
நீக்குநீங்கள் சொன்னது சரிதான் ராஃபிடிங் தான். பதிவில் அப்படித்தான் சொல்லியிருக்கிறேன். Rafting - மிதவைப்படகுச் சவாரி என்று பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.
எனக்கும் இது முதல் அனுபவம் தான்.
நன்றி நெல்லைத்தமிழன்
துளசிதரன்
கூடாரங்கள் உட்புறம் எப்படி இருந்தது? அதிலேயே பாத்ரூம் டாய்லட் வசதிகள் இருந்ததா?
பதிலளிநீக்குஅருகில் இருந்த நதியில் குளித்தீர்களா?
அந்த இடங்களிலேயே இருபது படங்கள் எடுத்திருக்கலாம்.
கூடாரம் என்று சொல்வதென்றால், கூடாரத்திற்குள் கட்டில் மட்டும்தான் போட முடியும். நம் சாமன்கள் எல்லாம் கட்டிலுக்குக் கீழே வைத்துக் கொள்ள வேண்டும். கட்டிலின் இரு புறமும் நடக்க ஒரு அடி வழி. டாய்லெட் எல்லாம் வெளியில் கொஞ்சம் இறங்கிச் செல்ல வேண்டும். பொதுவான டாய்லெட்கள் தான். நதியில் குளிக்கவில்லை., இப்போது தோன்றுகிறது குளித்திருக்கலாம் என்று. ஆனால் தண்ணீர் மிகவும் தணுப்பு.
நீக்குநன்றி நெல்லைத் தமிழன்
துளசிதரன்
கஸோல் பகுதியில் வீடுகளைப் புகைப்படம் எடுத்துப் போட்டிருக்கீங்க.
பதிலளிநீக்குஅங்குள்ள வீடுகளின் கூரைகளில் கற்கள் நிறைய இருக்கும், பறந்துவிடக் கூடாது என்று.
இல்லை பெரும்பாலான வீடுகளின் கூரைகளே கற்கள்தான்.
நீக்குநன்றி நெல்லைத் தமிழன்
துளசிதரன்
பல இடங்களுக்கும் சென்று வந்ததை மிகச் சுருக்கமாகச் சொல்லியிருக்கீங்க.
பதிலளிநீக்குஅது கொஞ்சம் திருப்தி இல்லாததுபோலத் தோன்றியது.
குருத்வாராவில் எப்படிப் பரிமாரினார்கள், என்ன கொடுத்தார்கள், அளவா? இன்னும் வேண்டும் என்றால் எப்படிக் கேட்டீர்கள், நன்றாக இருந்ததா? கையில் கொண்டு சென்றிருந்த பைகளை வெளியில் விட்டுவிட்டுத்தான் செல்லணுமா? கர்சீப்பை தலையில் கட்டிக்கொண்டீர்களா இல்லை வேறு என்ன செய்தீர்கள்.
பல கேள்விகள். ஆனால் நீங்கள் குறிப்பெடுத்துக்கொள்ளவில்லை, அல்லது போய் ரொம்ப நாட்கள் ஆகிவிட்டதால் ரொம்பவே சுருக்கமாகச் சொல்லிவிட்டீர்கள்.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குகாணொளி இருப்பதால் சுருக்கிவிட்டேன். உணவு தேவையான அளவு கிடைக்கிறது, குருத்வாராவில். மீண்டும் கேட்டால் தருகிறார்கள். எங்கள் உடைமைகளை வண்டியில் வைத்துவிட்டுச் சென்றோம்.
நீக்குகுருத்வாரா உள்ளே செல்லும் போது அவர்கள் கொடுக்கும் துணியைத் தலையில் கட்டிக் கொண்டு வெளியே வரும் போது ஓரிடத்தில் போட வேண்டும். மீண்டும் அதையேதான் வைக்கிறார்கள் என்று தோன்றுகிறது.
ஆமாம் ஒரு வருடம் ஆகிவிட்டதால் பலதும் மறந்துவிட்டது.
நன்றி நெல்லைத்தமிழன்
துளசிதரன்
முன்னாள் பிரதமர் சுடப்பட்ட இடத்தை நீங்கள் சரியாகப் படமெடுக்கவில்லை. அந்தப் பாதையில் நடந்துசென்றபோது அவர் சுடப்பட்ட இடத்தைத் தனியாகக் காண்பித்திருப்பார்கள்.
பதிலளிநீக்குஅடுத்த படம் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்பூதூரில் இறந்தபோது அவர் உடலில் பாக்கி இருந்த உடைகள் ஷூக்கள்.
அந்தப் பாதைதான் அப்படம் பதிவில் கொடுத்திருக்கிறேனே. முன் பிரதமர் சுடப்பட்ட இடம் என்று படத்தின் கீழ் குறிப்பிட்டு.
நீக்குஅங்கு கைட் யாரும் இல்லை. அறிவிப்பு பலகைகள், குறிப்புகள் இருந்தன கூடவே பாதையைச் சுற்றி வேலித் தடுப்பு. அப்பாதையின் படம் பதிவில் இருக்கிறதே.
ஆமாம் ராஜீவ் காந்தியின் உடைகளும் இருந்தன அதன் கீழே போட விடுபட்டிருக்கலாம்.
நன்றி நெல்லைத் தமிழன்
துளசிதரன்
காணொளியும் கண்டேன். அதில் உள்ள இடங்களை பதிவில் குறிப்பிடவில்லை.
பதிலளிநீக்குதுளசீதரன் சார்.. எப்போதோ ஒரு முறை இந்த மாதிரி வட இந்தியப் பகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் போறீங்க. அதை விரிவாக எழுதணும் என்று கேட்டுக்கறேன். நிறைய படங்களையும் இணைக்கலாம்.
பயணத்துக்கு என்ன ஆச்சு... எதிர்பார்த்தபடி இருந்ததா? பார்க்க முடியாத இடங்கள் என்ன? வேறு எந்தப் பகுதியைச் சேர்த்துக்கொண்டிருக்கலாம்?
வெஜிடேரியன் உணவு கிடைப்பது கடினமா?
இவற்றையெல்லாமும் நிறையச் சொல்லியிருக்கலாம். நேரமின்மை என்பதைப் புரிந்துகொள்கிறேன். இருந்தாலும்...............
காணொளியிலும் இங்கு பதிவில் குறிப்பிட்ட இடங்கள்தான் சொல்லியிருக்கிறேன். ஆனால் அங்கு படங்களும் காணொளிகள் இணைத்ததால் இங்கு பதிவில் படங்கள் எல்லாம் பகிரவில்லை.
நீக்குஅடுத்த பதிவில் முயற்சி செய்கிறேன்.
பயணம் எதிர்பார்த்தபடி இருந்தது. நன்றாக இருந்தது. பார்க்க முடியாமல் போன இடங்கள் இல்லை ஏனென்றால் இது பயண ஏற்பாட்டாளர் மூலமாகப் போனதால் அவர்கள் சொல்லியிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றுவிடுகிறார்கள். நாங்கள் இடங்கள் எல்லாம் முடிவு செய்யவில்லை. எல்லாமே பயண ஏற்பாட்டாளர்கள் தரும் லிஸ்ட்தான்.
அங்கு வெஜிடேரியன் உணவுதான் கிடைக்கிறது பெரும்பாலும். கஷ்டமில்லை.
ரொம்ப விரிவாகச் சொல்வதென்றால் ரொம்ப நீண்டு விடுமே என்ற பயம் காரணமாகத்தான் சுருக்கியதோடு பலதும் நினைவிலும் இல்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதுவதால்.
நன்றி நெல்லைத்தமிழன்
துளசிதரன்
எல்லோரும் நீச்சல் தெரிந்திருக்கணும் என்று சொல்றாங்க.
பதிலளிநீக்குநீச்சல்னா ஒழுங்கான நீச்சல் தெரிந்திருக்கணூம். நம் பலருக்கும் தெரியாது.
ஒருவேளை படகு கவிழ்ந்தாலோ, அதைச் சமாளிக்க, பயமில்லாத மனம் வேண்டும். நீச்சல் தெரிந்திருந்தால் மாத்திரம் போதாது.
சாதாரண நீச்சலுக்கும், நதியில் நீச்சலடிக்கவும் ரொம்பவே வேறுபாடு உண்டு. நதியில் அடுத்த கையை எடுத்து வைப்பதற்குள் பத்தடி தூரம் தண்ணீர் நம்மைத் தள்ளிவிடும்.
எனக்கும் உங்களைப்போல் நீச்சல் தெரியாது (கொஞ்சம் தெரியும்). இந்தக் கொஞ்சத்தை வைத்துக்கொண்டு, ஸ்நார்க்கிளிங் வரவா, ரூபாய் தந்துவிடுவேன் என்று மெக்சிகோவில் சொன்னதற்கு, சாரி... நீச்சல் மற்றும் ஸ்னாக்கிளிங்கிற்கான நீச்சல் தெரிந்திருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார்.
ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான். முறையான பயிற்சி தேவை.
நீக்குஓ நன்றாக நீச்சல் முறையாகத் தெரிந்திருந்தால்தான் மெக்சிகோவில் அப்படியானதில் பங்கு கொள்ள முடியும் இல்லையா?
நன்றி நெல்லைத்தமிழன்
துளசிதரன்
நெல்லை குளத்தில் நீந்துவிதற்கும். அருவி விழும் சுனையில் நீந்துவதற்கும், ஆற்றில் நீந்துவதற்கும், ஸ்விம்மிங் பூலில் நீந்துவதற்கும் அதைவிடக் கடலில் நீந்துவதற்கும் வித்தியாசம் உண்டு. ஆற்றில் நீர் சாதாரணமாக ஓடிக் கொண்டிருந்தால் நான் நீந்துவேன் ஆனால் வேகமாக ஓடினால் நீந்த முடியாது. அது போல் திருக்குறுங்குடி மலைநம்பி அருவி மற்றும் சுனையில் - 40 அடி ஆழம் - அங்கு நீந்திச் சென்று ஒரு பாறையில் ஏறிய அனுபவம். ஆனால் இப்போது முடியுமா என்றால் சந்தேகம் அது செய்த போது, 45 வயதிருக்கும். மகன் அநாயாசமாக நீந்தினான், கடல் அலையிலும் நீந்துவான்ம் அலையோடு ஏறி ஏறி இறங்கி வருவான்....
நீக்குகங்கையில் எல்லாம் நீந்த தனி பயிற்சி வேண்டும். படகு கவிழ்ந்தால் அதை எதிர்கொள்ளும் தைரியம் வேண்டும். ஆழம் கூடுதல் ஆழம் கூடுதலான பகுதியுஇல் அழுத்தம் கூடுதல் இருக்கும் எனவே நாம் அந்த அழுத்தத்தைத் தாங்கிக் கொண்டு நீந்த வேண்டும் பாடியை லைட்டாக வைத்துக் கொண்டு மிதக்கவும் தெரிய வேண்டும்...
கீதா
கீதா
நீச்சல் மற்றும் ஸ்னாக்கிளிங்கிற்கான நீச்சல் தெரிந்திருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார்.//
நீக்குஓ ஒரு நல்ல வாய்ப்பு விட்டுப் போனது இல்லையா?
துளசிதரன்
கொதிக்கும் நீரில் பிரசாதம் செய்வது பற்றி வெங்கட் நாகராஜ் பதிவில் படித்த நினைவு.
பதிலளிநீக்குஅதையெல்லாம் படமெடுக்காமல் என்ன செய்தீங்க? மொபைலிலேயே சவக் சவக்னு படங்கள் எடுத்திருக்கலாமே சார்..
அரிசி கட்டி கொதிக்கும் நீரில் விட்டு எடுக்கும் காணொளி வீடியோ தொகுப்பில் இருக்கிறது. வீடியோவில் முதலில் அது துள்ளி இறக்கி பின்னர் வருகிறது நீராவி அடிப்பதால் சரியாகத் தெரியவில்லையொ? கூட்டமாகவும் இருந்தது.
நீக்குபல படங்கள் காணொளிகள் ஒரு வருடம் ஆனதால் அந்த பயணத்திற்குப் பிறகு வெவ்வேறு இடங்கள் நிகழ்வுகள் என்று படங்கள் காணொளிகள் எடுத்து ஃபேஸ்புக்கில் போட எடுத்ததால் இவற்றில் பல போய்விட்டன. பதிவுக்கும் காணொளிக்கும் கிடைக்கவில்லை.
என் மொபைலில் இடம் வேண்டுமே அடுத்தடுத்து படங்கள் காணொளிகள் எடுத்து சேவ் பண்ணியதால் இடம் இல்லாமல் போகிறது. என்னிடம் கணினி இல்லை சேவ் செய்து கொள்ள அதனாலேயே பலதும் கீதா தனக்கு அனுப்பச் சொல்லிவிடுவார் எடுக்க எடுக்க.....அனுப்பி சேமித்து வைத்துக் கொள்ள. கஷ்மீர் பயணம் அப்படித்தான் அவருக்கு அனுப்பி அவர் பிரித்து சேமித்து வைத்துள்ளார்.
நன்றி நெல்லைத் தமிழன்
துளசிதரன்
ராஃப்டிங் செய்வது ஒரு அற்புத அனுபவம். நாங்களும் செய்திருக்கிறோம். ரிஷிகேஷில் படகிலிருந்து ஆற்றில் நம்மை இறக்கி விடுவார்கள் - ராஃப்டிங் சமயத்தில்! கயிறைக் கட்டி மிதப்பது ஒரு பதைபதைக்கும் அனுபவம். உங்கள் அனுபவங்களும் நன்று.
பதிலளிநீக்குபடங்கள், தகவல்கள் என அனைத்துமே சிறப்பு. அக்ஷர்தாம் என்ற பெயரிட்ட படம் - படத்திலிருப்பது அக்ஷர்தாம் அல்ல! அது பிர்லா மந்திர் மற்றும் லக்ஷ்மி நாராயண் மந்திர் என அழைக்கப்படும் ஆலயம். மந்திர் மார்க் பகுதியில், நான் இருந்த வீட்டின் மிக அருகே இருக்கிறது. முடிந்தால் மாற்றி விடுங்கள் கீதா ஜி.
வெங்கட்ஜி. ஸாரி இன்றுதான் பார்த்து பப்ளிஷ் பண்ணுகிறேன் துளசியிடம் சொல்கிறேன் பதில் கொடுக்க.
நீக்குதுளசி அக்ஷர்தாம் என்று இப்படத்தை அனுப்பியதால் சேர்த்தேன். அவரிடமே கேட்டுவிடுகிறேன் அக்ஷர்தாம் படம் இருக்கிறதா என்று. நான் இவற்றிற்குச் சென்றிராததால் எனக்குத் தெரியவில்லை.
கேட்டு மாற்றிவிடுகிறேன் ஜி. நன்றி ஜி
கீதா
ஓ! கயிறைக் கட்டி இறக்கிவிட்டால் அப்படி மிதக்க வேண்டுமா? ராஃப்ரை செலுத்துபவர் வர மாட்டாரா? நாம் மட்டுமா? நல்ல தைரியம் வேண்டும் அதற்கு,
நீக்குநாங்கள் சென்ற ராஃப்ட் அதைச் செலுத்துபவர் வந்தார், நாம் கயிறை பிடித்துக் கொண்டு அமர்ந்தால் போதும். அவர் செலுத்துவார். 2 கிமீ தூரம் தானே. அது ஒரு சுகமான அனுபவம்.
படம் தவறு நடந்துவிட்டது. அதை எடுத்துவிட்டோம். அதைக் குறிப்பிட்டதற்கும் மிக்க நன்றி.
துளசிதரன்