செவ்வாய், 19 மே, 2026

மணாலி - கஸோல் பயணம் - 2


05-05-25 - திங்கள் காலை உணவு முடித்து கஸோல் நோக்கிப் பயணம். போகும் வழியில் மணாலிக்கும் குலு வுக்கும் இடையில் எங்கும், பலூன் - tethered hot air balloon ride, மற்றும் Rafting - மிதவைப் படகுச் சவாரி நடத்துமிடங்கள். நாங்களும், தும்பி மட்டும் ஓட்டுநருக்குத் தெரிந்த ஓரிடத்தில் படகுச் சவாரிக்குத் தயாரானோம். 

tethered hot air balloon - நாங்கள் இதில் பறக்கவில்லை 



ஒரு நபருக்கு ரூ 800ம் கூடவே அதற்கான உடை மற்றும் தலைக்கவசத்திற்கு ரூ 100ம். இரண்டு மிதவைப் படகுகளில் அனுபவம் மிக்க Raft மிதவைப் படகுகளைச் செலுத்துபவர்களின் உதவியுடன் 2 கிமீ தூரம் பயணித்தோம். 2 கிமீ என்று சொன்னாலும் 1 கிமீ தூரம் போல்தான் தோன்றியது.
குலுவில் உள்ள வைஷ்ணோ தேவி கோவில் - உள்ளே படங்கள் எடுக்க அனுமதி இல்லை. காணொளியில் சிறிய க்ளிப்பிங் இருக்கும்.

அதன் பின் போகும் வழியில் குலுவில் உள்ள சிவ-வைஷ்ணவோ தேவி கோவிலில் தரிசனம் செய்தோம். 

நதியருகே - இங்குதான் உள்ளே நாங்கள் தங்கிய கூடாரங்கள்

அங்கிருந்த காட்டு ரோஜா
இந்த நதியருகேதான் கூடாரங்கள். நாங்கள் ஓரிரவு அங்கு தங்கினோம். மணாலி - கஸோல் பயண ஏற்பாட்டின் ஒரு பகுதியாக. 

5 மணி அளவில் கசோலை அடைந்தோம். நதியருகே 3 கூடாரங்கள் எங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தன. வித்தியாசமான அனுபவம். 

கசோலில் முக்கியமாக ஒரு போதை Power Cake சாப்பிடாமல் வந்தால் பேரிழப்பாம்! எனவே அதையும் ருசித்தோம். ஒன்றுக்கு ரூ 800. இரண்டு வாங்கி எல்லோரும் பகிர்ந்து கொண்டோம்.  

இரவு உணவுக்குப் பின் Campfire (காணொளியில்) முடித்து கூடாரத்திற்குள் தூக்கம். அதிகாலை 3 மணிக்கு நாய்கள் குரைத்து உறக்கம் போனது.  கூடவே சிந்தூர் ஆப்பரேஷன்.  பதிலாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஏதும் நடந்தால் என்னாகும் என்ற பயம் தொற்றிக் கொண்டது.  நமச்சிவாய மந்திரம் இருக்க நமக்கு ஏன் பயம்! ஐந்தெழுத்து மந்திரம் சொல்லித் தூங்கிப் போனேன்.

 கஸோலில் அப்பகுதியைப் பார்க்க நடந்து போன சமயத்தில் எடுத்தவை

கிராமிய வீடுகள்,

06-05-25 - செவ்வாய், காலை உணவு முடித்த பின் கூடாரத்தை காலி செய்துவிட்டு, பொருட்கள் வைக்கும் ஓர் அறையில் பொருட்களை வைத்துவிட்டு கஸோலில் அப்பகுதியைப் பார்க்க நடந்து போனோம். வித்தியாசமான காட்சிகள். அனுபவங்கள். கிராமிய வீடுகள், தெருக்கள், பொது சுமக்கும் கோவேறு கழுதைகள். 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
பின், வண்டி ஏறி மணிக்கரண் எனும் இடத்திற்குப் பயணமானோம். ஒரு சீக்கிய குருத்வாரா சென்று அங்கு அன்னதானம் சாப்பிட்டோம். அங்குள்ள வெந்நீரூற்றுகளில் குளிக்கவும் செய்தோம். 

மணிக்கரண் சிவாலயம்

சிவபெருமானும் பார்வதி தேவியும் 11,000 ம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இடமாம். அதனால் பார்வதி பள்ளத்தாக்கு என்று சொல்லப்படுகிறது. மணிக்கரண் சிவாலயத்தில் தரிசனம் செய்து வணங்கிய பின் அங்குள்ள கொதிக்கும் தீர்த்தத்தில் வழிபாட்டிற்கான அரிசி மற்றும் கடலையை நூலில் கட்டி தொங்க விட்டு நீருக்குள் இறக்கி வேக வைத்து பிரசாதமாக எடுத்துக் கொண்டோம்.
  

பின் மணிக்கரணில் கடைத்தெருவில் சில பொருட்கள் வாங்கிக் கொண்டு 5 மணிக்கு கஸோலில் இருந்து எங்கள் சாமான்களை எடுத்துக் கொண்டு (Bh)புந்தர் எனுமிடத்தில் இறங்கினோம். வண்டி ஓட்டுநருக்கு நன்றி சொல்லி ஊக்கத் தொகை கொடுத்து வழியனுப்பினோம். அங்கு இரவு உணவு உண்டோம்.

9.15ற்கு அங்கிருந்து, வரும் போது நாங்கள் மணாலிக்கு வந்த Vacation Express பேருந்தில் தில்லி நோக்கி பயணம் செய்ய வேண்டும். Volvo வந்ததும் ஏறி அமர்ந்து அயர்ந்து தூங்கிட 6 மணிக்குக் கண் விழித்த போது தில்லியை வண்டி நெருங்கிக் கொண்டிருந்தது. 


07-05-25 - புதன் காலை 7.30க்குப் பேருந்திலிருந்து இறங்கி எங்களுக்காகக் காத்திருந்த வண்டியில் Dakka Inn பயணமானோம். அதுவரை எங்களுக்கு வழிகாடியாகப் பயணித்த தும்பிக்கு ஊக்கத் தொகை கொடுத்து நன்றி சொல்லி வழியனுப்பினோம். 

முன் பிரதமர் சுடப்பட்ட இடம்

பின்னர், காலை உணவை முடித்துக் கொண்டு, இந்திராகாந்தி காட்சியகத்திற்குச் சென்றோம். மறைந்த பிரதமர் இந்திராகாந்தி மற்றும் ராஜீவ் காந்தி வாழ்ந்த இடம். முன் பிரதமர் சுடப்பட்ட இடம் எல்லாம் கண்ட பின் கேரளா ஹவுஸ் உணவகத்தில் மீன் வறுவலுடன் கேரள உணவு சாப்பிட்டோம். அதற்கு முந்தைய வருடம் சிம்லா சென்ற போது வந்த இடம்தான் என்றாலும் புதுமைதான்.
அதன் பின் இந்தியா கேட் சென்று அங்கும் கொஞ்ச நேரம் செலவிடோம். இரவு 7 மணிக்கு தங்குமிடம் வந்து தூங்கினோம். 
அக்ஷர்தாம்

08-05-25 - வியாழன், காலை உணவு முடித்ததும் வண்டி வந்தது. எங்களை அக்ஷர்தாம் வண்டி நிறுத்துமிடத்தில் இறக்கியதும் நாங்கள் அக்ஷர்தாமிற்குள் சென்றோம். அரிய காட்சிகளைக் கண்டபின் Food court ல் சாப்பிட்டோம். கொஞ்சம் இனிப்புகள் வாங்கிக் கொண்டோம். 

செங்கோட்டை
அதன் பின் செங்கோட்டைக்குச் சென்றோம். முந்தைய ஆண்டும் பார்த்த இடம் தான்.  என்றாலும் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். 

அதன் பின் சாந்தினி சௌக்கில் இறங்கி பொருட்கள் வாங்கி முடித்த பின் காத்திருந்த வண்டியில் ஏறி 7 மணிக்கு புதுதில்லி ரயில் நிலையம் சென்றடைந்தோம்.  வண்டி ஓட்டுநருக்கு ஊக்கத் தொகையும் கொடுத்து நன்றியும் சொல்லி விடை பெற்றோம்.  இரவு உணவு உண்ட பின் கேரளா விரைவு வண்டியில் ஏறினோம். இரண்டு இரவு பகல்கள் தங்கும் வீடாக இருக்கும் கம்பார்ட்மென்டில் அமர்ந்தோம். 

09-05-25 - வெள்ளிக் கிழமை பகலும் இரவும் கடந்தது. 10-05-25 சனிக்கிழமை, ரயிலிலேயே, ஜோலார்பெட்டில் காலை உணவு, ஈரோடில் மதிய உணவு வாங்கி உண்டோம். மதியம் 1.30 மணிக்குப் பாலக்காடில் நாங்கள் 8 பேர் இறங்கினோம்.  அதே ரயிலில் அருண் திருச்சூர் வரை சென்று அங்கிருந்து இடுக்கி மருத்துவக்கல்லூரிக்குச் சென்றான். அது போலவே அதே ரயிலிலேயே விநாயக் திருவனந்தபுரம் அவனது கல்லூரிக்குச் சென்றான். இருவரையும் வழி அனுப்பிவிடு பாலக்காடிலிருந்து 3 மணிக்கு ஷோரனூர் ரயில் ஏறினோம். அங்கிருந்து 6 மணிக்கு நிலம்பூர் ரயிலில் ஏறி இரவு 8 1/2 மணி அளவில் வீட்டை அடைந்தோம். 

ஒவ்வொரு பயணமும் நமக்குத் தரும் மகிழ்ச்சியும் அனுபவங்களும் கிடைத்தற்கு அரியவை.  அதைத் தந்த இறைவனுக்கு நன்றி.  அத்துடன் எங்களுடன் இதுவரை பயணித்த உங்களுக்கும் நன்றி.  மீண்டும் ஒரு பயணத்தில் சந்திப்போம்! 

பதிவில் இல்லாத காட்சிகள் படங்கள் இக்கணொளியில் உண்டு. முடிந்தால் நேரமிருந்தால் பாருங்கள்.. நன்றி

https://youtu.be/cmV8MEg3YL0

ஜெயகுமார் சந்திரசேகரன் ஸார் / அண்ணா அவர்களின் 50 வது திருமணநாளுக்கு எங்கள் எல்லோரது வாழ்த்துகள்! நீண்ட ஆரோக்கியத்துடன், அன்புடன் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ்ந்திட பிரார்த்தனைகள்!


------துளசிதரன் தில்லைஅகத்து

9 கருத்துகள்:

  1. ஒரே ஒருமுறை படகுச்சவாரி செய்திருக்கிறேன்.  கன்னியாகுமரியில். 

    இருங்கள்..    ஓ.. 

    அப்புறம் திரிவேணி சங்கமத்தில் செய்திருக்கிறேன்.  சற்றே படபடப்பாக இருக்கும்!

    பதிலளிநீக்கு
  2. பலூனிலா?  சான்ஸே இல்லை.  நான்லாம் ஏறவே மாட்டேன்.  இதுநாள் வரை அந்த ராட்சத சக்கரத்தில் மட்டுமில்லை, சிறிய சக்கரங்களில் எறியதில்லை.  குதிரை பொம்மை, வாத்து பொம்மை என்று உட்கார்ந்து சுற்றும் ராட்டினத்திலும் அமர்ந்ததில்லை.  தலை சுற்றும்!!

    பதிலளிநீக்கு
  3. இரண்டு கிலோ மீட்டர் என்றாலும் ஒரு கிலோமீட்டர் போலதான் தோன்றியதா, ஆமாம்.... போக ஒரு கிலோமீட்டர், வர ஒரு கிலோமீட்டர்..  ஆக, இரண்டு கிலோமீட்டர்!!!  அதற்கு 800 ப்ளஸ் 100 ஆ?

    பதிலளிநீக்கு
  4. இடத்தின் பெயரைக் கேட்கும்போது முத்து பாடல் நினைவுக்கு வருகிறது!! அங்கிருந்த காட்டு ரோஜாவை காட்டியதற்கு நன்றி! ஹிஹிஹி...

    பதிலளிநீக்கு
  5. போதை கேக்?  கஞ்சா கலந்ததா? 

    கசோல் வீடுகள் நம்மூர் அக்ரஹார வீடுகள் போல இருக்கு.  

    பதிலளிநீக்கு
  6. தொப்பியைப் பார்க்கும்போதே சீக்கிய குருத்வாரா என்று தெரிகிறது. கொதிக்கும் நீரில் பிரசாதம் செய்து கொள்வது செய்தி.

    பதிலளிநீக்கு
  7. ஊக்கத்தொகை என்றால் எவ்வளவு கொடுப்பீர்கள்?  அவருக்கான கட்டணம் எவ்வளவு?

    பதிலளிநீக்கு
  8. பிரதமர் சுடப்பட்ட இடம் பார்த்தபோது கெதக் என்றது.  மைகாட்..  எவ்வளவு துன்பம் அனுபவித்திருப்பார் இந்திரா காந்தி..

    பதிலளிநீக்கு
  9. ஈரோட்டில் மதிய உணவா..  ஆ..  அ ங்கிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில்தான் எங்கள் மகனின் திருமணம் நடக்கவிருக்கும் மண்டபம்! 

    பதிலளிநீக்கு