வியாழன், 1 ஜனவரி, 2015

சக்கர வண்டியில் அமர்ந்து தனியே உருட்டி சபரிமலை செல்லும் சேதுசாமி!!


                தனது 22 ம் வயதில் ஆற்றில் குளிக்கும் போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் ஏற்பட்ட விபத்தில் இடுப்புக்குக் கீழ் செயலிழந்த 67 வயதுள்ள சேதுசாமி கடந்த ஏழு வருடங்களாகச் சக்கர வண்டியில் அமர்ந்து, தனியே உருட்டி சபரிமலை சென்று ஐயப்ப தரிசனம் நடத்தி வருகிறார்.  கால்நடையாகத் தமிழகம் மற்றும், கர்நாடகாவிலுள்ள ஐயப்ப பக்தர்கள் ஐயப்ப தரிசனம் செய்ய நடந்து செல்வதைக் காணும் போது நமக்கு உண்டாகும் வியப்பை பன் மடங்காக்கிவிடும் ஒரு செயல்.  மனமிருந்தால் மார்கமுண்டு என்பதை உணர்த்தும் செயல்.  உண்மையான இறையுணர்வுள்ள பக்தர்களுக்கு இன்னல்களும், இயலாமையும் ஒரு போதும் இல்லை என்பதை உணர்த்தும் செயல்.  கண்ணூரைச் சேர்ந்த இவர் பல ஆண்டுகளாகக் கோவையிலுள்ளத் தன் பிள்ளைகளுடன்தான் வசிக்கிறார்.


      காலை ஏழு மணிக்குப் பயணத்தைத் தொடங்கும் இவர், வெயிலில் ஓய்வெடுத்து, ஒரு நாள் 10 முதல் 15 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கிறார்.  சாலை அருகேயுள்ளக் கோவில்களில் இரவு தூங்குவார். ஏறத்தாழ ஒரு மாதம் பயணம் செய்து மலையை அடைந்ததும், சக்கரப்பலகை வண்டியை அங்கு வைத்த பின் தவழ்ந்து மலை ஏறுவார். தவழ்ந்து இறங்குவது சிரமம் ஆதலால் டோலியில் (நாற்காலியில் அமர்ந்தபடி ஆட்கள் தூக்கிச் செல்லுதல்) வருவாராம்.  பதினெட்டாம் படி ஏறிப் பொன்னம்பல வாசனைக் காணும் போது, தன் மாதக் கணக்கான சிரமமானப் பயணத்தில் அனுபவித்தத் துன்பங்களை எல்லாம் மறந்து போவாராம்.  பின் மீண்டும் அது போல் ஒரு பயணம் செய்யத் தேவையான ஆவல் அப்போதே அவரது மனதை ஆட்கொண்டு விடுமாம்.  ஆம்! ஐயப்பன் முன் வந்து வணங்கும் கோடிக்கணக்கான பக்தர்களில் வித்தியாசமான சேது சாமியை ஐயப்பனும் அடையாளம் கண்டு கொண்டு அருளைப் பொழியத்தானே செய்வார்.  விமானத்திலும், ரயிலிலும், பஸ்ஸிலும், காரிலும் சிரம்மின்றிச் செல்லிஉம் பக்தர்களுக்கிடையே, நடந்தே வந்து ஐயப்பனைத் தரிசிக்கும் பக்தர்களுக்கு இடையே தவழ்ந்து சென்று பொன்னம்பலவாசன் முன் நிற்கும் சேதுசாமிக்கு, மர்றவர்களுக்கு எல்லாம் கிடைக்கும் மன மகிழ்ச்சி மற்றும் மன ஆறுதலை விட அதிகமாகத்தானே கிடைக்க வேண்டும்!  சேதுசாமிக்கு மீண்டும் பல ஆண்டுகள் சிவசுதனானந்த சித்தனாம் ஐயப்பனைத் தரிசிக்க ஆயுளும் ஆரோக்கியமும் கிடைக்க நாம் எல்லோரும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.                                                                    
படம்-நன்றி-கூகுள்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    

34 கருத்துகள்:

  1. சேதுசாமி அவர்களின் தன்னம்பிக்கை பாராட்டுக்குறியது அவருக்கு ஐயப்பன் ஆசி உண்டாகட்டும்.
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  2. சேதுசாமிக்கு ஐயப்பன் அருள் என்றும் கிடைக்கும்...

    பதிலளிநீக்கு
  3. இந்த பதிவை படித்தவுடன், நம்முடைய பக்தி எல்லாம் எந்த மூலைக்கு என்று எண்ணத் தோன்றுகிறது.

    பாதயாத்திரையாக சென்று இறைவனை தரிசிப்பவர்களை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த செயல் உண்மையிலேயே மெய் சிலிர்க்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கு! ஆம் கடினமான ஒரு யாத்திரைதான்!

      நீக்கு
  4. ஆச்சரியமூட்டும் அற்புதமான தகவல்
    முயற்சி இருப்பின் முடியாதது நிச்சயம் ஒன்றுமில்லை
    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கு! வாழ்த்திற்கும்!

      நீக்கு
  5. என்னமோ போங்க ! இதுமாதிரி நபர்களின் பக்தியை பார்த்தால் தான் அதிசயமாக இருக்கும்!!! எப்டியோ அவர் உற்சாகமா இருந்தா சரி:)

    பதிலளிநீக்கு
  6. என்னவொரு மன உறுதி....! சுவாமியே சரணம் ஐயப்பா...

    பதிலளிநீக்கு
  7. சேதுசாமியின் தன்னம்பிக்கை பாராட்டுக்குரியது.

    விழியுடைய பலரும் மலைப் பயணத்தில் நடக்கும் போது காலில் இடித்துக் கொள்வர்.

    ஆனால் - பார்வைக் குறைபாடுள்ள பக்தர்கள் - எந்த ஒரு சிரமமும் இன்றி மலையில் நடந்து வருவதை சபரிமலையில் பலமுறை தரிசித்துள்ளேன்!..

    சாமியே சரணம் ஐயப்பா!..

    பதிலளிநீக்கு
  8. உள்ளத்திற் கொண்ட உறுதி பலனளிக்கும் என்பதற்கு
    நல்ல உதாரணமான ஓர் சிறந்த பக்திமான்!

    நலமாக வாழ நானும் வேண்டுகிறேன்!
    சாமியே ஐயப்பா!

    பதிலளிநீக்கு
  9. ஆச்சரியம்தான்.

    இறைவன் அவருக்கு அருள் புரியட்டும்.

    பதிலளிநீக்கு
  10. சேதுசாமியின் ஆர்வமும் இறைபக்தியும் தன்னம்பிக்கையும் பாராட்டுதலுக்கு உரியது! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  11. pseudo பக்தர்கள் இடையே உண்மையான பக்தரை அடையாளம் காட்டும் பதிவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. மனமுடைந்து போகாது இறைவரம் நாடியே வேண்டுவது மெச்சத் தக்கதே நிச்சயம் அவர் வேண்டுதல் பலிக்கும்.. உருக்கமான நல்ல பதிவு சகோ! அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ..... !

    பதிலளிநீக்கு
  13. சேதுசாமியின் தன்னம்பிக்கையும், தளராத முயற்சியும், இறைபக்தியும் அளப்பெரியது. அவர் நீண்ட ஆயுளுடன் நிம்மதியான வாழ்க்கை வாழட்டும்.

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
  14. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் துளசிதரன் ஐயா.

    பதிலளிநீக்கு
  15. த ம +
    நமது ஆட்களின் அட்வென்சர் பயணம் இது மாதிரியான பக்தி பயணங்கள் தானோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலும் இப்படித்தான் இருக்கின்றது தோழரே! நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கு!

      நீக்கு
  16. தன்னம்பிக்கை மனிதர்......

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி துளசிதரன் ஜி!

    பதிலளிநீக்கு
  17. இவருக்கு ஐயனின் அருள் பரிபூரணமாக கிடைக்க நாமும் பிரார்த்திப்போம்.
    சுவாமியே சரணம் ஐயப்பா!

    பதிலளிநீக்கு
  18. பக்தியின் உச்ச நம்பிக்கை. நாம கைகால் வலித்தால் நாளை கோவிலுக்கு போகலாம் என நினைப்போம். இறைவன் அருள் கிடைக்கப்பெற்றவர்.

    பதிலளிநீக்கு