வெள்ளி, 16 ஜனவரி, 2015

கண்கள் இருந்தும் குருடர்களாய் வாழ்வோர் காணாததைக், காணும் கண் பார்வை இழந்தவர்கள்


      “எவ்வளவு அழகாக நீங்கள் எனக்காக எல்லாவற்றையும் பார்த்தீர்கள்?.  இதற்கு உரிய விதத்தில் நன்றி சொல்ல என்னால் ஒரு போதும் இயலாது”. 

      ஒருவருக்காக வேறொருவர் பார்ப்பதா...!? குழப்பமாக இருக்கிறதா? முதலாண்டு உயர் நிலைப் பள்ளியில் கடந்த வருடம் வரை கற்பிக்கப்பட்ட ஆங்கிலப் புத்தகத்தில் டேவிட் லாம்போனின் “LIFTING THE VEIL”, எனும் அருமையான கதையில் வரும் ஒரு கண்பார்வை இல்லாதவர், தாய்லாந்தில் சுற்றுலா சென்ற இடத்தில் (!?), சுற்றும் நிகழும் காட்சிகளை அவருக்கு விளக்கிச் சொன்ன ஒரு நண்பரிடம், இருவரும் பிரியும் நேரத்தில் சொன்ன வார்த்தைகள் தான் இது.

நம் கதாநாயகன் கிழக்காசிய நாடுகளில் உள்ள ஒரு நிறுவனத்தில் பம்பரமாகச் சுற்றி வேலை செய்பவர். ஒரு மாலை நேரத்தில் அவரது நிறுவன உரிமையாளர், மறுநாள், அவர் நிறுவனத்திற்கு மிகவும் உதவியாய் இருக்கும் ஒரு சீனாக்காரருடன், தாய்லாந்தில் ஒரு நாள் சுற்றுலா செல்ல வேண்டும் என்று சொன்னதும், வேறு வழியின்றிச் செல்ல ஒத்துக் கொண்டார். அவர் சுற்றுலாவுக்கு மகிழ்ச்சியுடன் போக முடியாததற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உண்டு.  ஒன்று, அவர் செய்ய வேண்டிய வேலைகளை, அவர்தான் சுற்றுலா முடித்து வந்துச் செய்ய வேண்டும்.  இரண்டாவதாக, அவர் சீனா நண்பருடன் சுற்றுலா போகும் இடம், இது போல் பல முறை, பலருடன் நிறுவனத்திற்காகப் போன இடம். மனமில்லாமல், மறுநாள், சிரித்தபடி சீனா நண்பருடன் தாய்லாந்தில் பல இடங்களிலும் சுற்றினார்.

அது ஒரு பேக்கேஜ் டூர் ஆனதால், பிற்பகலில் அக்குழுவில் உள்ளோர் ஒரு பேருந்தில் ஏறி ஒரு விடுதிக்குப் புறப்பட்டனர்.  சீனா நண்பருக்கு வேறு சில நண்பர்கள் கிடைத்ததால், அவர் அவர்களுடன் அமர, தனியே அமர்ந்த நாயகன், முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவருடன், பேசத் தொடங்கினார். இடையே எப்போதோ அவரது கையிலிருந்த, கண்பார்வை இழந்தவர்கள் வைத்திருக்கும் ஊன்றுகோலைப் பார்த்த பின் தான் தன்னுடன் பேசிக் கொண்டிருப்பவர் கண்பார்வை இழந்தவர் என்பதைத் தெரிந்து கொண்டார். 

படத்தில் உள்ளவருக்கும் கட்டுரையில் சொல்லப்படும் மனிதருக்கும் சம்பந்தம் இல்லை. அர்த்தம் மட்டுமே.

பெல்ஜியத்தைச் சேர்ந்த 60 வயதான அவருக்கு, அவரது 17 ஆம் வயதில் ஏற்பட்ட ஒரு விபத்தால் கண்பார்வை இழக்க நேரிட்டதாம். இருப்பினும் அவர், அவரது மற்ற நான்கு புலன்களின் உதவியுடன் உலகெங்கும் சுற்றுலாப் பயணம் மேற்கொள்வதுண்டாம். அவர்கள் இப்படிப் பேசிக்கொண்டே விடுதியை வந்தடைந்தனர். இறங்கும் போது அவர் நம் நாயகனிடம், தன்னுடன் அமர்ந்து உணவருந்த வேண்டும் என்றும், தனக்காகச் சுற்றிலும் உள்ளவற்றை விளக்கிக் கூறவேண்டும் என்றும் வேண்டிக் கொண்டதும், நம் நாயகனும் சம்மதித்து விட்டார்.  அவருடன் வந்த சீனா நண்பர் அவருக்குக் கிடைத்த புதிய நண்பர்களுடன் அமர்ந்ததால், இவ்விருவரும் அங்கிருந்த ஒரு மேடைக்கு அருகே அமர்ந்தனர்.  உணவுகள் பரிமாறப்பட்டன. கண்பார்வை இழந்தவர், உணவருந்திக் கொண்டே சுற்றிலும் அமர்ந்திருப்பவர்களைப் பற்றிக் கேட்க, நாயகன் ஒவ்வொருவரையும் உன்னிப்பாகக் கவனித்துச் சொல்லத் தொடங்கினார். 

அப்போதுதான் அவரும் கவனிக்கிறார், உலகின் பல நாட்டவர்கள், பல வயதினர்கள், பலவிதமான உடையணிந்து அமர்ந்திருக்கிறார்கள் என்பதை. இடையே மேடையிலிருந்து இசைக்கலைஞர்கள் இன்னிசை வழங்கத் தொடங்கியதும், அவர்கள் கையிலிருந்த ஒவ்வொரு இசைக் கருவியையும் விவரிக்கும் போது நம் நாயகன் உண்மையிலேயே வியந்து போனார்.  பலமுறை அங்கு வந்திருந்த அவர், இதற்கு முன், ஒரு போதும் அவர்களையோ, இசைக் கலைஞர்களையோ, இசைக் கருவிகளையோ கவனித்ததே இல்லை! அதன் பின், சில இளம் பெண்களின் நடன நிகழ்ச்சி நடந்தது. பார்வை அற்றவர் கேட்காமலேயே மிகச் சிறப்பாக நடனமாடுவோரின் உடை, அணிகலன்கள் மற்றும் நடனத்தைப் பற்றி மிக அருமையாக விவரித்தார் நம் நாயகன். நடனப் பெண்களின் கைகளில் பொருத்தப்பட்டிருந்த நீளமான தங்க நிறமுள்ள செயற்கை நகத்தைப் பற்றி கேட்ட பார்வை இழந்தவர்,

“எனக்கு அவற்றைத் தொட்டுப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. முடியுமா?” என்றதும், நம் நாயகன் மேடையின் பின்புறம் சென்று நடன இயக்குனரைக் கண்டு அனுமதி பெற்று, பார்வை இழந்தவரை அங்கு அழைத்துச் சென்று அதைத் தொட்டு உணர வைத்தார்.  நிகழ்ச்சிக்குப் பின் எல்லோரும் பிரிய வேண்டிய நேரத்தில் நம் பார்வை இல்லாத நண்பர், நம் நாயகனிடம் சொன்ன வார்த்தைகள்தான் அது.

“எவ்வளவு அழகாக நீங்கள் எனக்காக எல்லாவற்றையும் பார்த்தீர்கள்?.  இதற்கு உரிய விதத்தில் நன்றி சொல்ல என்னால் ஒரு போதும் இயலாது”. உடனே நம் நாயகன்,

 “இத்தனை நாள் கண்கள் இருந்தும் இவற்றை எல்லாம் காணாதிருந்த என் கண்களை மூடியிருந்த திரையை அகற்றி, நீங்கள் தான் என்னை அதையெல்லாம் காண உதவினீர்கள்.  எனவே, நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்”.  என்று கூறி விடை பெற்றார். 

      இது போல் கடந்த வாரம், நியூசிலாந்தில் உள்ள ஓக்லாண்டைச் சேர்ந்த பார்வை இழந்தவர்களான பீட்முரே என்பவரும், அவரது மனைவி கேரன்ப்ளீமரும் பாலக்காடு வந்திருந்தார்கள்.  ஷொர்னூரின் அருகே உள்ள கலாமண்டலத்தைக் கண்ட (?!) பின் கொச்சி, ஆலப்புழா, திருவனந்தபுரம், கன்யாகுமரி, போன்ற இடங்களையும் கண்டு(?!) டெல்லிக்குப் போகிறார்களாம். வாசித்துக் கேட்ட இந்தியாவைக் காண, நம் பெல்ஜியம் நண்பர் தாய்லாந்து போனது போல், இங்கு வந்தவர்கள் இவர்கள்.

ஜோத்பூர் மசாலா மார்க்கெட்
இவர்களுக்கு வட நாட்டிலுள்ள ஜோத்பூர் என்றால் சாலைகளின் இருபுறமும் மசாலாப் பொடிகள் நிறைத்து வைக்கப்பட்டிருக்கும் இடமாம். அங்குள்ள ஸ்பைசஸ்/மசாலா விற்கும் மார்க்கெட்டில் ஏறத்தாழ இருநூறு விதமான மணங்களை நுகர்ந்து அனுபவித்திருக்கின்றார்கள். காசியில், நெய்யின் மணத்தை நுகர்ந்ததால், காசி என்றால் நெய் மணம் தான் நினைவுக்கு வருமாம். அது போல் கோயில்களில் இருந்து வரும் வித்தியாசமானச் சத்தங்களும் நினைவுக்கு வருமாம். பாலக்காடு வந்த அவர்கள் பலாப்பழத்தின் மணத்தை நுகர்ந்து சென்றிருக்கின்றார்கள். ஊட்டியின் குளிரை உணர்ந்து ஊட்டியை நினைவுக்குள் பூட்டி வைத்திருக்கின்றார்கள்.

கண்பார்வை இல்லாத எங்களுக்கு, “ஒவ்வொரு இடமும், நகரமும், நாடும் ஒவ்வொரு அற்புதங்களைப் பதுக்கி வைத்திருக்கின்றது. அதை நாங்கள் அங்கு சென்று எங்களது நான்கு புலன்களால் உணர்ந்து மகிழ்கின்றோம்” எனும் போது, இறைவனிடம் அவர்களுக்கு ஆயுள், ஆரோக்கியம், தேவையான பணம் மற்றும் அவர்களுக்கு உதவிக்கரங்கள் நீட்ட நல்ல மனிதர்களையும் கொடுக்க, வேண்டிக் கொள்ளத் தோன்றுகின்றது. வேண்டிக் கொள்வோம். கூடவே, கண்களின் இன்றியமையாமையையும் உணர்ந்து, எல்லாவற்றையும் கண்குளிரப் பார்த்து, மனதில் நிறைத்துக், கண்கள் இருந்தும் குருடராய் வாழாமல், அகக்கண்ணையும் திறந்து வாழ வேண்டும் என உறுதி எடுத்துக் கொள்வோம்.

படங்கள் : கூகுள்

**********************************************************************************************************************

பின் குறிப்பு : நண்பர்களுக்கு : நம் பதிவர் நண்பர் கோவை ஆவி அவர்கள் 

அறிவித்திருக்கும்  

"ஆவி டாக்கீஸ்" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..!
குறும்பட- சிறுகதை போட்டி 

விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.  அதைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள http://www.kovaiaavee.com/2014/10/blog-post_30.html  ஐ க்ளிக் செய்யவும். விரையுங்கள்!  இறுதித் தேதி நெருங்குகின்றது. நன்றி! 

************************************************************************************************************************

இந்தக் காணொளியைக் காணுங்களேன்! நாங்கள், யானைகள் மனிதர்களைக் கொன்றதைப் பற்றிய பதிவுகள் எழுதி இருந்தோம். யானைகளின் மீது தவறே இல்லைதான்! சரி, சிறிய ஆடுகள் மனிதரை யானையிடமிருந்துக் காப்பாற்ற முடியுமா?! காணுங்கள் இந்தக் காணொளியை. யானையும் அந்த ஆடுகளையும் ஒன்றும் செய்யவில்லை. இயற்கை இயற்கைதான்! என்றுமே! நாம் தான் இயற்கையைப் பழிக்கின்றோம்! அதைப் புரிந்து கொண்டு அதனோடு ஒன்றி வாழத் தெரியாமல்! 


      

42 கருத்துகள்:

 1. உண்மைதான் இறைவன் இயற்கையாகவே ஊனமானர்களுக்கு கூடுதல் உணர்வுகளை அளித்துள்ளான். ஒரு கையில்லாமல் உழைத்து குடும்பத்தை காப்பாற்றுகிறான், இரண்டு கைகலும் இருந்து உழைக்காமல் காலம் முழுவதும் வாழ்கிறவனும் உண்டே இவ்வுலகில்.

  காணொளி கண்டேன் 6 அறிவுக்கு 5 அறிவு எவ்வளவோ மேல்தான்

  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் மிகவும் உண்மையே! நண்பரே! மிக்க நன்றி ஜி!

   நீக்கு
 2. இருக்கும்போது அந்தந்தப் பொருட்களின் (மனிதர்களின் என்று கூட வைத்துக் கொள்ளலாம்!) அருமை தெரிவதில்லை நமக்கு. அலட்சியம். நல்லதொரு கண்திறக்கும் பதிவு.

  யானைக் காணொளி அபாரம். இதுவும், இரு நண்பர்களைத் துரத்தும் காநோளியும் நான் என் சேமிப்பில் வைத்திருக்கிறேன்! நேற்று பேஸ்புக்கில் இன்னொன்று பார்த்தேன். ஒரு யானை வந்து காட்டின் வழி செல்லும் கார்களில் முதன்மையாய் நிற்கும் காரின் பேனெட்டில் ஏறி அமர முயற்சித்து, அதன் மீது ஏறி என்று அட்டகாசம் செய்யும். உள்ளே இருப்பவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று நமக்கு திக்திக் என்று இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முற்றத்து முல்லை அருமை தெரியாது என்பார்களே அது போலத்தான்...தெரியும் நீங்கள் இது போன்ற காணொளி வைத்திருப்பீர்கள் என்று. யானை செய்யும் அந்த அட்டகாசத்தைக் காண வேண்டுமே...பார்க்கின்றொம்....

   நீக்கு
 3. அழகான பகிர்வு ..உண்மைதான் ! நாம் கண்ணிருந்தும் எல்லாமிருந்தும் வாழ்க்கையை அனுபவிக்காதிருக்கோம் :(
  இனியாச்சும் மாறுவோம் ..அந்த காணொளி பார்த்தேன் ..அருமை !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரி...நீங்கள் ரசிப்பீர்கள் என்று தெரியும் காணொளியும்....

   நீக்கு
 4. அகக்கண் கேட்கும் கேள்விகளை மதித்து நடந்தாலே போதும்...

  பதிலளிநீக்கு
 5. கண்ணிருந்தும் நாம்தான் குருடர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்
  யானையின் காணொளி அற்புதம் ஐயா
  நாம்தான் யானையின் பாதையில் குறுக்கிடுகிறோம், விலங்குகளின் வாழ்விடங்களில் ஆக்கிரமிப்பு செய்து, யானை அட்டூழியம் என செய்தியும் வெளியிடுகிறோம்
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்! நாம்தான் அவர்களின் இடங்களில்...சரியே மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 6. கண் கொண்டு நோக்கிய கண்களுக்கு நன்றி..

  வலிமை மிக்க யானை - ஏதோ ஒரு முயல் குட்டி மாதிரி வந்தோமா - போனோமா!.. - என்று செல்கின்றது..

  விலங்குகளுக்கு ஐந்தறிவு என்று சொல்வது கூட மிகப் பெரிய பிழை..

  பதிலளிநீக்கு
 7. நாம் கவனம் இல்லாமல் காண்கிறோம். அவர்கள் எப்போதும் கவனமாய் காண்கிறார்கள்.

  மன ஒருநிலைப்பாடு.....அவ்வப்போது ஓடிவிடுவதால்....

  காணொளி அருமை. அழகான புரிதல்... நமக்கு,,,,? அவசர அவசரமாய் நம்மையும் நம்மைச்சுற்றிலும் தொந்தரவு செய்கிறோம்.

  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்! சகோதரி! பல விட்யங்களில் அப்படித்தான். அனுபவிக்காமல்....காணொளியை ரசித்தமைக்கு மிக்க நன்றி!

   நீக்கு
 8. கண்பார்வை அற்றவர்களுக்கு மற்ற புலன்கள் கூர்மையாக வேலை செய்யுமாம்!
  த.ம-1

  பதிலளிநீக்கு
 9. Such a chanceless and a highly motivational post Blogger!! Really impressive and truly inspirational! www.slvinoth.blogspot.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி வினோத்! தங்களது முதல் வருகைக்கும் அழகான கருத்திற்கும்! எங்கள் பதிவை பாராட்டியதற்கும்...மிக்க நன்றி!

   நீக்கு
 10. பார்வை உள்ளவர்கள் பார்க்கத் தவறுவதையும் இழந்தவர்கள் பார்க்கச் செய்வார்கள்! அருமையான திரைப்பட பகிர்வு! அந்த கடைசி வசனம் சிறப்பு! குறும்பட சிறுகதை போட்டியில் கலந்து கொள்ள விருப்பம்தான்! ஆனால் அதற்கான சிறந்த கருவை யோசித்துக் கொண்டிருக்கிறேன்! இன்னும் சிக்கவில்லை! பார்ப்போம்! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சுரேஷ் நண்பரே! கருத்திற்கு.

   கலந்து கொள்ளுங்கள். நீங்கள் நன்றாக எழுதுவீர்கள் என்பதால்தான். நல்ல கதைக் கரு சிக்கட்டும். சிக்கிடும்....

   நீக்கு
 11. வணக்கம்
  அருமையான கருத்தாடல்... விலங்கின் உறைவிடம் இன்று மனிதனின் வாழ்விடமாகிவிட்டது... விலங்குகள் போ என்று துரத்தும்...போகா விட்டால் சாவுதான்...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் அவர்களின் இருப்பிடத்தில் புகுந்ததால் இப்படித்தான் நிகழும்....மிக்க நன்றி ரூபன் தம்பி!

   நீக்கு
 12. நல்லதொரு பதிவு! மாற்றுத் திறனாளிகள் மீது இரக்கம் வரும்படியாக இல்லாமல், அவர்கள்தாம் நன்றாக இருப்பவரின் கண்ணைத் திறந்து வைத்தார்கள் என எழுதியுள்ள விதம் நல்ல எடுத்துக்காட்டு! நம் திரைப்பட எழுத்தாளர்கள் படிக்க வேண்டிய பாடம் இந்தப் பதிவு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா! திரைப்பட எழுத்தாளர்கள் படிக்கும் அளவு சிறப்பாக இருந்தது என்று குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி நண்பரே! ஆம்! மாற்றுத் திறனாளிகளிடமிருந்து நாம் கற்க நிறைய இருக்கின்றன. மிக்க நன்றி!

   நீக்கு
 13. எழுத்துலகில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து கொண்டு இருக்கீங்க. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே! தங்கள் வாயிலிருந்தா! இந்த வார்த்தைகள்! எத்தனை பெரிய வார்த்தைகள்! பாராட்டு! வாழ்த்து! மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. தாங்கள் எவ்வளவு சீரிய எழுத்தாளர், சிந்தனையாளர். பல புத்தகங்களைப் படைத்தவர். தாங்கள் இப்படி வாழ்த்தியதற்கு நாங்கள் மிகவும் மகிழ்கின்றோம். மட்டுமல்ல மிகவும் ஊக்கமளிக்கின்றது. இன்னும் சிறப்பாக எழுத வேண்டும் என்றும்...மிக்க நன்றி!

   நீக்கு
 14. இப்படி பார்வை இல்லாதவர்களுடன் பழக ஆரம்பித்தால் ,புதிய உலகத்தை நாணமும் காணலாம் போலிருக்கே !
  த ம 12

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாற்றுத் திறனாளிகளுடன் பழக ஆரம்பித்தால் நாம் நிறைய கற்க முடியும்! ஜி! புதிய உலகத்தை! மிக்க நன்றி!

   நீக்கு
 15. தன்னம்பிக்கையும் விழிப்புணர்வும் தரும் கட்டுரை.கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய் நம்மில் பலர் இருக்கிறோம். அந்த கண்பார்வையற்றவரின் சுற்றுலா ஆர்வம் என்னை வியக்க வைத்தது.

  இணைப்பு வீடியோ பார்த்தேன். விலங்குகள் பறவைகள் அனைத்திற்கும் மனிதன்தான் பொது எதிரி. அந்த யானை பைக் ஆசாமியை ஒன்றும் செய்யவில்லை என்பது, ஆச்சரியமான விஷயம்தான்.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் மற்றும் காணும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்! (பொங்கலன்று ,உங்கள் வலைத்தளத்தில், மதம் பிடித்த யானை மயக்க ஊசி போட்ட மருத்துவரைக் கொன்ற சோக செய்தி இருந்தபடியினால் அன்று பொங்கல் வாழ்த்து சொல்ல மனம் ஒப்பவில்லை. ஆகவே இன்று சொல்கிறேன்.)
  த.ம. 14

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஐயா! தங்களில் அருமையான பின்னூட்டத்திற்கு. காணொளியை ரசித்தமைக்கும்.....

   இனி இது போன்ற நாட்களில் சோக செய்தி வெளியிடாமல் பார்த்துக் கொள்கின்றோம் ஐயா! நல்லதொரு கருத்தைச் சொல்லி உள்ளீர்கள்! மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
 16. படிப்பவர் விழிப்புணர்வு பெறும் வகையிலான பதிவு ஐயா

  பதிலளிநீக்கு
 17. நம்மிடம் என்னவெல்லாம் இருக்கிறது என்பதை இழந்தவர்களை பார்த்தால் தான் தெரிகிறது இல்லையா சகாஸ்! புத்தக கண்காட்சியில் தோழி கீதா அவர்களை தென்றல் கீதா அக்கா சந்தித்த போது என்னை வெகுவாக விசாரித்ததாக அக்கா சொன்னார்கள். அவர்களிடம் கைபேசி எண் கேட்டிருக்கிறேன். விரைவில் தோழியை அழைக்கிறேன்:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரி! ஆமாம் எல்லா உறுப்புகளும் இருந்தும்...அவற்றை நாம் ஒழுங்காக உபயோகப்படுத்துவதில்லையே!

   ஆம்! தோழி! தென்றல் கீதா அவர்களிடம் மிகவும் விசாரித்தேன்...துளசி முத்துநிலவன் ஐயாவிடம் பேசினார். விரைவில் உரையாடுவோம்....கூகுளிலும் கூட வரலாம். எங்கள் ப்ளாகர் ஐடியில்.....அது ஓபனாகவேதான் இருக்கும்....இங்கிருந்துதானே எல்லாமே பதிவேற்றம்...அதனால்....கீதா.

   நீக்கு
 18. பதிவின் ஆரம்ப வாசகமே மனதை நெகிழச்செய்துவிட்டது !

  தன்னம்பிக்கை என்ற மாமருந்து நிகழ்த்தும் அதிசயங்களுக்கு எல்லையே கிடையாது.

  எனது தாயார் அடிக்கடி சொல்லும் பழமொழி ஒன்று ஞாபகம் வருகிறது...

  " நடந்தால் நாடும் சொந்தமாகும்... படுத்தே கிடந்தால் பாயும் பகையாகும் ! "

  நன்றி
  சாமானியன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! எனது தாயார் அடிக்கடி சொல்லும் பழமொழி ஒன்று ஞாபகம் வருகிறது...

   " நடந்தால் நாடும் சொந்தமாகும்... படுத்தே கிடந்தால் பாயும் பகையாகும் ! "//

   அருமையான பழமொழி....மிக்க நன்றி அறியத்தந்தமைக்கு!

   நீக்கு
 19. தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்

  நம்மால் ஒரு மணி நேரம் கிட கண்ணைக் கட்டிக்கொண்டு வாழ முடியாது. ஆனால் இவர்கள் வாழ்நாள் முழுவதும் இருட்டிலேயே காலத்தை கழிக்கிறார்களே.
  அவர்களிடமிருந்து நாம் எவ்வளவோ கற்றுக்கோளா வேண்டும்.
  காணொளியை பார்த்தேன். அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! தங்களின் அழகான கருத்திற்கு!

   நீக்கு
 20. மனதைத் தொட்ட பகிர்வு. கண்ணிருந்தும் குருடராய் வாழ்ந்து கொண்டிருக்கும் பலர்......

  யானைக் காணொளி - அருமை.

  அவற்றின் இடத்தினைப் பறித்துக் கொண்டு அவற்றையே குற்றம் சொல்கிறோம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி வெங்கட்ஜி! கருத்திற்கு..

   ஆம் அவர்களின் இடத்தில் தானே நாம் வாழ்கின்றொம்....

   நீக்கு
 21. அன்பு தமிழ் உறவே!
  ஆருயிர் நல் வணக்கம்!

  இன்றைய வலைச் சரத்தின்,
  திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
  "வலை - வழி - கைகுலுக்கல் - 2"
  சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
  வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
  வாழ்த்துகள்!

  "வலைச் சரம்" வானத்தில் வானவில்லாய்
  உமது பதிவின் எழில் முகம் கண்டேன். களிப்புறேன்.
  உவகை தரும் பதிவுகள் உயிரோவியமாய் திகழட்டும்!
  தேன் தமிழாய் சுவைக்கட்டும்! திகட்டாமல் திக்கெட்டும்.

  நட்புடன்,
  புதுவை வேலு
  WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM
  (குழலின்னிசையின் உறுப்பினராகி உவகை தர வேண்டுகிறேன் நன்றி)

  பதிலளிநீக்கு