சமீபத்தில் இந்தத் திரைப்படத்தைப் பார்க்க நேர்ந்தது. மிக மிக நல்ல
கருத்துடைய படம். வாய் மூடாமல் பேசினால் பிரச்சினைகள். வாய் மூடிவிட்டாலும் பிரச்சினைகள். அதனால் வாய்
மூடிப் பேசவும். அதாவது எப்போது எதை எப்படிப் பேச வேண்டும் என்பதே! அதைப் பார்த்த
போது, இப்போது நடக்கும் நிகழ்வுகளுக்கு இந்தத் தலைப்பைப் பொருத்திப் பார்த்ததன்
விளைவே இந்தப் பதிவு.
மாதொருபாகன் தான் இப்போது தமிழ் நாட்டின் சூடான இடுகை. 2010 ல் வெளிவந்த புதினம். இலக்கியவட்டத்திற்குள்
இருந்த இந்தப் புதினம் பற்றியோ, பெருமாள் முருகன் பற்றியோ, எங்களைப் போன்ற
சாமானியர்களுக்கு இன்று தெரிகிறது என்றால், இன்று உலகம் முழுவதும் இது
பேசப்படுகிறது என்றால், சாதாரண மனிதரும் இதைப் பற்றிப் பேசி இந்தப் புத்தகத்தை
வாசிக்கின்றார்கள் என்றால், அதற்குக் காரணம், ஒரு சிலர் வாயைத் திறந்து பேசியதால்,
இல்லையில்லை கத்தியதால்தான். நன்றி அந்தக் கூட்டத்திற்கு! எங்களுக்கும் இவரைப்
பற்றியும், இவரது எழுத்துக்களைப் பற்றியும் அறிய தந்தமைக்கு. பேசியிருந்தால்
பிரச்சினைகள் எழுந்திருக்காது.
பேசவில்லை! வரம்பிற்கு மீறிய
தாக்கங்கள். புத்தகம் வெளியாகி இரண்டு வருடங்கள் சென்ற பிறகு சர்ச்சை எழுந்து
புத்தகம் உலகம் முழுவதும் செல்லும் அளவு, அதிக அளவு விற்க உதவியதற்கும் சர்ச்சையை
ஏற்படுத்தியவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்! இதற்கு மேல் அவர்களுக்கு நன்றி உரைப்பதற்கில்லை.
வெளியாகி 2 வருடங்களுக்குப் பிறகுதான் சர்ச்சை.
அப்படியென்றால் இரண்டு வருடங்கள் யாருமே அந்தப் புத்தகத்தை வாங்கவுமில்லை. வாசிக்கவுமில்லை
போலும். இதிலிருந்தே தெரிகின்றது இதற்குக் காரணம் சாதி, மதவாதிகளும், அரசியலும். விஸ்வரூபம்
படத்திற்கும் இதுதான் நடந்தது! கமல் நாடு விட்டுப் போவேன் என்றார். ஆனால் பின்னர் சமரசமாகி இங்குதான்
இருக்கின்றார். அது போல பெருமாள் முருகனும் மீண்டு வருவார்! எழுதுவார் என்று நம்புவோம். அவர் புத்தகங்கள் மீண்டும் விற்பனைக்கு
வரவேண்டும் என்பதும் வேண்டுகோள்!
ஒரு புனைவில் சொல்லப்படும் ஒரு நிகழ்விற்காக, அதுவும் 1930-40 களில் நடப்பதாகச் செல்லப்படும் ஒரு நிகழ்விற்காக, அதுவும் குறிப்பிட்ட
சமூகத்தில், ஊரில் நிகழ்வதாகச் சொல்லப்பட்டதே இன்று, அந்த எழுத்தாளர் தனது ஊரை
விட்டே துரத்தப்பட்டு புலம் பெயரக் காரணம். “கீதா வாய் பொத்திப் பேசு”.......சாதி நம்
நாட்டில் விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றது. எனவே யாகாவாராயினும் சாதி பற்றி பேசும்
போது நா காக்க...
மாதொருபாகன் முதல் பாகம் மட்டுமே. இன்னும் இரண்டு பாகங்கள்
உள்ளன. அர்த்தநாரீஸ்வரர், ஆலவாயன். அதன் தொடர்ச்சியாக இதையும் படித்தால்தானே முழுக் கருத்தும் கொள்ள
முடியும்? ஆசிரியர் அதில் என்ன சொல்லியிருக்கின்றார் என்று பார்த்தால்தான்
முழுவதும் புரியும்.
சர்ச்சையைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்பவர்கள் சற்று யோசியுங்கள். அரசாங்கத்திற்குத்
தெரிந்தே நடக்கும் சிவப்பு விளக்குப் பகுதிக்கு சமூகத்திலிருந்து ஏன் எதிர்ப்புகள்
இல்லை? அங்கும் சில சமயம் தவறுதலாகவோ இல்லை விருப்பப்பட்டோ பிறக்கும் குழந்தைகள்
இந்த சமூகத்தில் உலா வரத்தான் செய்கின்றன. அங்கு சாதிகள் பேசப்படுவதில்லையே! எதிர்ப்பதில்லையே.
அந்தத் தொழிலே உலகறிய நடக்கத்தானே செய்கின்றது. எத்தனைப் பெண்கள் கடத்தப்படுகின்றார்கள்,
விரும்பிச் செல்கின்றார்கள்! எதிர்ப்புகள் இல்லை. தொழில் செய்யும் பெண்கள் எல்லா
சமூகத்திலும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அதுவும் நம் கண் முன்னே நடக்கும் இந்த
நிகழ்வுகளுக்கு இல்லாத எதிர்ப்புகள் எப்போதோ நடந்தது என்று புனைவில் சொல்லப்பட்டதற்கு
எதிர்ப்புகள். அதுவும் வெளிவந்து இரண்டு வருடங்கள் சென்ற பின். தற்போதய அரசு சுத்தம்
பற்றி பேசி வருகின்றது. இந்தத் தொழிலை,
தற்போதைய அரசாங்கம் சுத்தம் செய்யுமா?
மட்டுமல்ல சமீபத்தில் ஒரு
வாரப் பத்திரிகையில் வாசிக்க நேர்ந்த ஒன்று. அதை எழுதியிருந்தவர் ஒரு பத்திரிகையாளர்தான்.
ஒரு ஊரில் வயதுக்கு வந்த கன்னி கழியாத பெண் குழந்தைகள் மட்டுமே ஏழ்மையின் காரணமாக
ஆண்கள் இருக்கும் வீடுகளுக்கு அனுப்பப்பட்டு அங்கு 4,5 நாட்காள் இருந்து வேலை முடிந்த
பிறகு வீட்டுக்கு அனுப்பப்படுவார்களாம்.
இதற்கு அந்தக் குடும்பத்திற்கு லட்சங்கள் வழங்கப்படும். அந்த பெண்குழந்தைகளின்
திருமணச் செலவிற்கு அந்தப் பணத்தை பெற்றொர் உபயோகிப்பார்களாம். அனுப்புபவரும்
தாய்/பெண், இதற்கு ஏற்பாடு செய்பவரும் ஒரு பெண். இதற்கு எதிர்ப்புகள் ஏன்
வரவில்லை? பெண்களும், பெண்குழந்தைகளும் விற்கப்படுவதும் நடக்கத்தானே செய்கின்றது. இது
நடப்பது இப்போது. இக்காலக்கட்டத்தில். இதற்கெல்லாம் கொந்தளிக்காதவர்கள்,
எழுத்தாளர் எப்போதோ நடந்ததாக, அதுவும், கண் முன்னே நடக்காத சம்பவம் புனைவாக
எழுதியமைக்குக் கொந்தளிப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது. கொந்தளித்தது
மட்டுமல்ல, புத்தகங்களை எரித்து, அவரை ஊரை விட்டே துரத்தி, அவர் தனது புத்தகங்களை
எல்லாம் சந்தையிலிருந்தும், பதிப்பகங்களிலிருந்தும் அகற்றி விற்பனைக்கு இல்லை
என்பதையும், தானும் இனி எழுதப் போவதில்லை என்றும் அறிவிக்கவும் வைத்திருக்கிறது இந்த
சமூகம். இதற்கு முன்னும் ஒரு சில
எழுத்தாளர்களுக்கு எதிர்ப்புகள் வந்தாலும் முருகனுக்கு ஏற்பட்டது கொடுமையிலும்,
கொடுமை. ஒரு எழுத்தாளரை முடக்கியிட்டிருக்கின்றது. ஒரு எழுத்திற்கு எதிர்ப்புகள்
வரலாம். தவறில்லை. அதை வாயை மூடிப் பேசியிருக்கலாமே. அமைதியான முறையில்
கதாசிரியருடனேயே பேசித் தீர்த்திருக்கலாமே!
மிகவும் கீழ்த்தரமான ஆபாசமானப் புத்தகங்கள் எல்லாம் இந்த சமூகத்தில் புழக்கத்திலிருக்கத்தானே
செய்கின்றன? அதை எழுதும் எழுத்தாளர்களை ஏன் இந்த சமூகம் எதிர்த்துப்
போராடுவதில்லை? நீலப்படங்கள்? ஏன் அதற்கு இந்தச் சமுதாயம் வாயைத் திறந்து
பேசவில்லை? வாயை மூடிக் கொண்டு வேடிக்கைப் பார்க்கின்றது? வாயைத் திறந்தாலும் நல்லதில்லை.
வாயை மூடிக் கொண்டு மௌனம் சாதித்தாலும் நல்லதில்லை. வாய் மூடிப் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த
சமூகமும் அதன் அங்கத்தினராகிய நாமும். உணர்வுகள் ரீதியாக இல்லாமல் அறிவு சார்ந்ததாக,
ஆரோக்கியமான வாதங்களினால்.
பதிவு ரொம்ப சீரியஸாகப் போவதால் ஒரு சின்ன பின் குறிப்பு: “சரிதாயணம்
எனும் நூலை எழுதிய எழுத்தாளர் பாலகணேஷ் அவர்களை எதிர்த்து கு.வா.க (குழப்ப வாதிக் கட்சி)
வன்மையாகக் கண்டித்து ஆர்பாட்டம்”. அவர்
தனது நூலில் “அரசியல் வாதிகள் எல்லோருமே கோமாளிகள் என்று சொல்லியதால் நாங்கள் அதை
வன்மையாகக் கண்டித்து ஒரு நாள் முழுவதும் “உண்ணும் விரதம்” இருப்போம்.” பந்தலில் “பின்”
விளைவுகளுக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டி தொண்டர்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.
எங்கள் கட்சிப் பெண்கள் குழு, எங்கள் கட்சித் தலவியான சரிதா அவர்களின்
தலைமையில், “குடும்ப ஒற்றுமைக்காகவும், கட்சி ஒற்றுமைக்காகவும் இரவு பகல் பாராது
கண் அயராது போராடும் பெரிய மருமகளாகிய எங்கள் தலைவி சரிதா, மற்ற மருமகள்களுடனும்,
மாமியாருடனும் சண்டை போட்டு குடும்பத்தை பிரித்ததாகச் சொல்லியிருப்பதை வன்மையாகக்
கண்டிக்கின்றோம். மட்டுமல்ல அவர் மைசூர்பாகைச் செங்கல் போல செய்ததை பாராங்கல்லு போல செய்திருக்கிறார் என்றுக் குறிப்பிட்டு அவர்
பல்லு உடைந்ததாகச் சொல்லியிருப்பதால் நாங்கள் இந்த மாதம் முழுவதும் எங்கள் தலைவி
செய்யும் மைசூர்பாகாலேயே அவரது வீடு முழுவதும் நிறைத்து வைத்து, அதாலேயே சுவரும் எழுப்பப் போகின்றோம். எங்கள் தலைவியைப் பற்றி, தனது மனைவி என்று பாராமல் இப்படி எழுதியதற்காக...எறும்புகள் மொய்க்கட்டும்...” எங்கள் ஆர்பாட்டம் தொடரும். எங்கள் தலைவி சரிதாவிடம் அவர் சமரசம் செய்யும் வரை...
பின் குறிப்பிற்குப் பின் குறிப்பு: கணேஷ் அண்ணா மாதொருபாகனுக்கு
எதிர்ப்பு வந்ததால் அது ஹாட் சேல் ஆகியதால் தனது நூலும் ஏதாவது சர்ச்சையில்
சிக்கினால் விற்றுப் போய்விடுமே என்று தனது வலையில் ஆதங்கப்பட்டுக்???!!! கொண்டதால், ஏதோ
எங்களால் முடிந்த அளவு சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளோம். இனி அண்ணாவின் பாடு,
தலைவி சரிதாவின் பாடு. சமரசமாகுமா? நூல்கள் விற்குமா? பொருத்திருப்போம். வெயிட்டிங்க் ஃபார் தலைவி சரிதாஸ்
சிக்னல்.!
-கீதா
படங்கள் : இணையத்திலிருந்து
//அதை வாயை மூடிப் பேசியிருக்கலாமே. அமைதியான முறையில் கதாசிரியருடனேயே பேசித் தீர்த்திருக்கலாமே!//
பதிலளிநீக்குஉண்மைதான் ...
மனம் பதைக்கிறது சகோதரி :( வாரப்பத்திரிக்கை சம்பவம் ..
ஆம் சகோதரி! வாயை மூடிப் பேசினால் பல தீர்வுகள் கிடைக்கும்...யார் மனதையும் புண்படுத்தாமல்....
நீக்குமைசூர்பாக் V செங்கலா :) இருங்க நாளைக்கு செங்கல் சூளைக்காரங்க உங்க வீட்டு முன் போராட்டம் நடத்தபோறாங்க :) எதுக்கும் முன்ஜாமீன் எடுத்து வையுங்க
பதிலளிநீக்குஹஹஹஹஹ....க்ரெடிட் கோஸ் டு பால கணேஷ் அண்ணா!!!!! மிக அருமையாக எழுதியிருக்கின்றார் சரிதாயணம் அவரது படைப்புகள் பெரும்பான்மையானவை நகைச் சுவை இழையோடத்தான் எழுதுவார். நாங்கள் சரிதாயணம் படித்து சிரித்துக் கொண்டிருக்கின்றோம். சரிதா தொடர்வார் அடுத்தும்.....ஒரு சிறு விமர்சனமாகவும்....அண்ணாவின் நகைச்சுவையையும் சொல்லிச் செல்ல நினைத்திருக்கின்றோம்...
நீக்குமிக்க நன்றி சகோதரி!
உங்களின் எண்ணமும் சிந்தனையும் அருமை.
பதிலளிநீக்கு///சர்ச்சையைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்பவர்கள் சற்று யோசியுங்கள். அரசாங்கத்திற்குத் தெரிந்தே நடக்கும் சிவப்பு விளக்குப் பகுதிக்கு சமூகத்திலிருந்து ஏன் எதிர்ப்புகள் இல்லை? அங்கும் சில சமயம் தவறுதலாகவோ இல்லை விருப்பப்பட்டோ பிறக்கும் குழந்தைகள் இந்த சமூகத்தில் உலா வரத்தான் செய்கின்றன. அங்கு சாதிகள் பேசப்படுவதில்லையே! எதிர்ப்பதில்லையே. அந்தத் தொழிலே உலகறிய நடக்கத்தானே செய்கின்றது. எத்தனைப் பெண்கள் கடத்தப்படுகின்றார்கள், விரும்பிச் செல்கின்றார்கள்! எதிர்ப்புகள் இல்லை. தொழில் செய்யும் பெண்கள் எல்லா சமூகத்திலும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அதுவும் நம் கண் முன்னே நடக்கும் இந்த நிகழ்வுகளுக்கு இல்லாத எதிர்ப்புகள் எப்போதோ நடந்தது என்று புனைவில் சொல்லப்பட்டதற்கு எதிர்ப்புகள். அதுவும் வெளிவந்து இரண்டு வருடங்கள் சென்ற பின். தற்போதய அரசு சுத்தம் பற்றி பேசி வருகின்றது. இந்தத் தொழிலை, தற்போதைய அரசாங்கம் சுத்தம் செய்யுமா?///
நல்ல கேள்வி ஆனால் அதற்கு பதில் இந்த அரசு மட்டுமல்ல எந்த அரசும் செய்யாது .காரணம் அரசுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் மனசு சுத்தம் இப்போது இல்லை என்பதுதான் உண்மை
மிக்க நன்றி தமிழா! தங்களின் கருத்திற்கு.
நீக்குஆமாம் மக்களின் மனதும் சுத்தமாக இல்லை என்பது உண்மையே!
ம்ம்ம் ஆனால் தமிழா, அரபு நாடுகளில் உள்ள தண்டனை போல் இங்கும் சில விசயங்களுக்காவது கொண்டு வந்தாலும் நடக்காது எங்கின்றீர்களா....
நீக்குதெளிவாக சொல்லமுடியாத சமூக சொல்லலில் இருப்பதால் தான் நானும் வாய்மூடி கொண்டு இருந்துவிட்டேன். ஆங்கிலேயர்க்கு முந்திய ஆண்டிகள் மற்றும் சிற்றரசர்கள் காலத்தில் இந்த கதை நடக்கும் இடம் உட்பட தென்தமிழகத்தின் பல பகுதிகளில் பெண்கள் எப்படி நடத்தபட்டார்கள் என்பது காலம் மறந்து போன வரலாறு. அந்த வரலாற்றுப் பதிவுகளை படித்துப்பார்த்தால் முட்டிகொண்டே சாவார்களா என தெரியவில்லை. நான் அவற்றை படித்ததது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால்:(( so எந்த புத்தகம் என நினைவில்லை. ஆனால் விஷயம் மறக்ககூடியதில்லை. so, வாய் மூடிகொண்டிருக்கவேண்டிய நிலை. நானும் ரொம்ப சீரியஸா போய்டேன் , சரிதாயணம் ஏற்கனவே அமோகப் புகழ் பெற்ற நூல். இப்போ சர்ச்சையை வேற கிளப்பிருகீங்க. so நானும் அண்ணிக்கு (பாலா அண்ணனுக்கு) ஆதரவாய் உங்க போராட்டத்தில் கலந்துகொள்ள போகிறேன்:))
பதிலளிநீக்கும்ம்ம் உண்மைதான் தோழி! நானும் கல்லூரிக் காலத்தில் படித்திருக்கின்றேன். ஆனால் ஆதாரப் பூர்வமாகச் சொல இயலவில்லை...
நீக்குஹஹஹ வாங்க வாங்க....என்னதான் சரிதா அண்ணி போராட்டம் தொடங்கி தொடர்ந்தாலும்....தொடரத்தான் போறாங்க ஆனால் நம்ம அண்ண அதை எப்படி முறியடிக்கிறார்னு பாருங்க.....அடுத்த பதிவுல......என்னம்மா எழுதியிருக்கார் அண்ணா....அவர் பேசினாலே அப்படித்தான் நகைச்சுவை தெளிச்சுத்தான் பேசுவாரு.....
உண்மையான ஆதங்கம்...
பதிலளிநீக்குநம்ம வாத்தியார் எதையும் எதிர்க் கொள்வார்...!
மிக்க நன்றி டிடிட்
நீக்குஹஹஹஹ வெயி வெயிட்.....நம்ம வாத்தியார் அண்ணா எப்படிச் சொல்லப்போறார்னு பாருங்க....
சட்டத்தின் ஆட்சி நடப்பதாக சொல்லப் படுவதெல்லாம் வெறும் வாய் வார்த்தை ஜாலம்தான் என்றே படுகிறது ,பெருமாள் முருகன் நிலையைப் பார்த்தால் !
பதிலளிநீக்குத ம 3
உண்மையே பகவான் ஜி! மிக்க நன்றி ஜி!
நீக்குவாத்யார் எதையும் எதிர் கொள்வார்..... என்று தனபாலன் சொல்வது போல எங்கள் வாத்யார் நிச்சயம் இந்த எதிர்ப்பையும் வெல்வார்!
பதிலளிநீக்குஹஹஹஹ்ஹ நிச்சயமாக....வெங்கட் ஜி அது என்ன "எங்கள் வாதியார்" அஹஹஹ் எங்கள் அண்ணாவாக்கும்.....என்னதான் இப்ப சரிதா அண்ணி போராட்டம் ஆரம்பிச்சாலும் நாங்க மைதிலி தோழி சொன்னது போல அண்ணாவுக்குத்தான் ஆதரவு......வெயிட்....வெயிட்...
நீக்குசர்ச்சைகள் ஏற்படுத்தும் எதிர்வினைகளால் பயன்பெறுபவர்கள் யார்? எதிர்ப்பாளர்கள் இதில் என்ன பயன் கண்டார்களோ!!
பதிலளிநீக்குசரிதாயணம் புத்தகத்தை எதிர்த்து நானும் தொடர்ந்து கிருஷ்ணா ச்வீட் மைசூர்பா சாப்பிடும் போராட்டத்தை அறிவிக்கிறேன்... யாராவது வாங்கிக் கொடுத்தால்!
ஆமாம்! நன்றி நண்பரே தங்கள் கருத்திற்கு
நீக்குஹஹஹஹஹ்ஹ போராட்டத்தில் கலந்து கொண்டதற்கு மிக்க நன்றி! ஓ அப்படின்னா போராட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு கிருஷ்ணா ஸ்வீட் மைசூர்பா இலவசமாகத் தரப்படும்னு நாங்க அறிவிப்பதாக இருந்தோம் அடுத்த பதிவில் ஏன்னு கேட்டா ...பாவம் சரிதா ....போராட்டத்துக்கு ஆள் கம்மியா இருக்கறதுனால அப்படியாவது ஆள் சேக்கலாம்னு..தான்...அப்போ அது தெரிஞ்சுதான் உங்க போராட்டமா.....சரி சரி அப்ப கலந்துக்கங்க கண்டிப்பா மைசூர்பா உண்டு....
வாயை மூடி பேசவும் உண்மைதான் அடடா...நாட்டுல என்னல்லாமோ...நடக்குதே...ஏன் எதுக்குன்னு தெரிந்து செய்றாங்களா..இல்லை தெரியாம செய்றாங்களா...?
பதிலளிநீக்குவாங்க சகோதரி! ஆமாங்க .....ஏன் எதுக்கு? பதில் இல்லை...மிக்க நன்றி சகோதரி!
நீக்குMORE OFTEN AND MANY A TIME THE MOUTHS ARE OPENED BY MISTAKE THAN BY INTENT.பல நாட்கள் விடுப்பிற்குப்பின் இப்போது மீண்டும் ஆஜர். என் “ வாழ்வின் விளிம்பில் “ சிறு கதைத் தொகுப்பில் ”இப்படியும் ஒரு கதை” படித்தீர்களா? ஏன் சர்ச்சை இன்னும் எழவில்லை. மாதொரு பாகன் பற்றி நானும் ஏதாவது எழுதுவேன்.
பதிலளிநீக்குஉங்களைக் காணவில்லையே என்று நினைத்தோம்....உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பலாம் என்றிருந்தோம் ....அதற்குள் உங்கள் வருகை...
நீக்குஆமாம் சார் ! சரிதான் உங்கள் கருத்து...
வாங்க இருக்கின்றோம் சார் உங்கள் புத்தகத்தை மணிமேகலை பிரசுரத்திலிருந்து. எங்கல் லிஸ்டில் உள்ளது.
ஓ! எதிர்ப்பு வருமா உங்கள் கதைக்கு. அப்ப்டியென்றால் கண்டிப்பாக விற்றுவிடும் சார்....
மாதொருபாகனைப் பர்றி எழுதுங்கள் சார். உங்கள் கருத்தைத் தெரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கின்றோம்.
மிக்க நன்றி சார்
தங்களது எந்த கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியாமல் வாய் மூடி போய் விட்டு... மீண்டும் வந்து,,,,
பதிலளிநீக்குதங்களிடம் ஒருகேள்வி
எங்கள் வாத்தியாரிடம் எவ்வளவு வாங்குனீங்க ?
தமிழ் மணம் - 5
வாருங்கள் வாருங்கள்! உங்களிடம் மட்டும் இல்லை...யாரிடமும் பதில் இல்லை...அது சரி உங்கள் நாட்டில் இருப்பது போல இந்த மாதிரி விசயங்களுக்காவது சட்டம் கொண்டு வந்தா நல்லாருக்கும்ல ஜி? என்ன சொல்றீங்க?
நீக்குஎன்ப்பா இது அது என்ன எங்கள் வாத்தியார்.....அவரு எங்களுக்கும் அண்ணா தெரியும்ல.......எங்க அண்ணன் கிட்ட வாங்குவமா....வேணா அண்ணங்கிட்ட கேட்டுப்பாருங்க.....
தேவையற்ற பேச்சுக்களை குறைத்தால் சர்ச்சைகள் எழாதுதான்! மாதொரு பாகனை ஒரு படைப்பாக மட்டும் கருதினால் பிரச்சனை இல்லை! எல்லாவற்றிலும் அரசியல் புகுந்துவிட்டது! நன்றி!
பதிலளிநீக்குஆம்! மிகச் சரியே சுரேஷ் ஆனால் அதுதான் நமக்கு கைவராத கலை ஆயிற்றே......மிக்க நன்றி !
நீக்கு
பதிலளிநீக்குதலைவி சரிதாவின் பாடு சமரசமாகுமா?
நூல்கள் விற்குமா? பொருத்திருப்போம்.
வெயிட்டிங்க் ஃபார் தலைவி சரிதாஸ் சிக்னல்.!
ஆசானே! சரிதாஸ் சிக்னல் "கிரின்" சிக்னல்தானே?
நட்புடன்,
புதுவை வேலு
பொறுத்திருந்து காணுங்கள் ஐயா ஹஹஹஹ் மிக்க நன்றி!
நீக்கு[[[மட்டுமல்ல சமீபத்தில் ஒரு வாரப் பத்திரிகையில் வாசிக்க நேர்ந்த ஒன்று. அதை எழுதியிருந்தவர் ஒரு பத்திரிகையாளர்தான். ஒரு ஊரில் வயதுக்கு வந்த கன்னி கழியாத பெண் குழந்தைகள் மட்டுமே ஏழ்மையின் காரணமாக ஆண்கள் இருக்கும் வீடுகளுக்கு அனுப்பப்பட்டு அங்கு 4,5 நாட்காள் இருந்து வேலை முடிந்த பிறகு வீட்டுக்கு அனுப்பப்படுவார்களாம். இதற்கு அந்தக் குடும்பத்திற்கு லட்சங்கள் வழங்கப்படும். அந்த பெண்குழந்தைகளின் திருமணச் செலவிற்கு அந்தப் பணத்தை பெற்றொர் உபயோகிப்பார்களாம். அனுப்புபவரும் தாய்/பெண், இதற்கு ஏற்பாடு செய்பவரும் ஒரு பெண். இதற்கு எதிர்ப்புகள் ஏன் வரவில்லை? பெண்களும், பெண்குழந்தைகளும் விற்கப்படுவதும் நடக்கத்தானே செய்கின்றது. இது நடப்பது இப்போது. இக்காலக்கட்டத்தில். இதற்கெல்லாம் கொந்தளிக்காதவர்கள், எழுத்தாளர் எப்போதோ நடந்ததாக, அதுவும், கண் முன்னே நடக்காத சம்பவம் புனைவாக எழுதியமைக்குக் கொந்தளிப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது. ]]
பதிலளிநீக்குதமிழ்நாட்டில் பிறந்து...ஜாதியின் வீச்சு தெரியாமல் எழுதிய புத்தகம்--மாதொரு பாகன் .
நீங்கள் மேலே சொன்ன கருத்துக்கு வருகிறேன்..நம் ஊரில் ஜாதி வெறி எப்படி இருக்குறது என்பதற்கு ஒரு உதாரணம்..
பெத்த மகளை ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்தால் -அதான் கற்பழிப்பு செய்தால் பெற்றோர்கள் என்ன செய்வார்கள்? (அது என்னவோ கற்பு என்ற புண்ணாக்கை ரப்பர் வைத்து அழித்தா மாதிரி)
அப்ப அப்பன் ஆயி கேட்கும் முதல் கேள்வி.."யாரடி அவன், :நம்ம சாதியா? அப்படின்னா கண்ணாலம் பண்ணிடலாம்" அப்ப கீழ் ஜாதி என்றால்...
கீழ் ஜாதி என்றால்,....இருக்கவே இருக்கு அருவா?
இதன் இந்தியா!
தமிழ்மணம் +1
சரிதான் நம்பள்கி! இங்கு சாதி இதுதான் இந்தியா உண்மையே! இவ்வளவு வளர்ந்தும் என்று சொல்லிக் கொண்டாலும் இந்த சாதி மட்டும் இன்னும் மாறவில்லை. அப்படி என்றால் என்ன வளர்ச்சி? வளர்ச்சி என்று சொல்லுவதில் அர்த்தம் இல்லையே இன்னும் இந்த சாதி பாடாய் படுத்துகின்றதே என்றுதான் ஒரு ஆதங்கத்தில்தான்....
பதிலளிநீக்குமிக்க நன்றி நம்பள்கி!
நானும் இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் "வாடகை மனைவி", கார் சாவிகளை மாற்றுவது போல் தங்கள் துணைகளை மாற்றிக்கொள்வது போன்ற
பதிலளிநீக்குகலாச்சார சீரழிவுகளைப் பற்றி ஒரு வார பத்திரிக்கையில் படித்திருக்கிறேன். நீங்கள் சொல்வது போல் இதற்கெல்லாம் கொந்தளிக்காதவர்கள், அநியாயமாக
ஒரு எழுத்தாளனை கேவலப்படுத்தி அசிங்கப்படுத்தி விட்டார்கள்.
ஆம் நண்பரே! .மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு!
நீக்குநீங்க இன்னொரு விசயத்தில் பார்த்த்டீங்கனா..
பதிலளிநீக்குஃப்ரிவே ல ஸ்பீட்லிமிட் 65 ல, 70- 85 ல ஓட்டிப்போராறவங்க 1000 பேர் இருப்பார்கள். ஆனால் அதில் போலிஸ்ட்ட ஸ்பீட் லிமிட்ல போகலஇனு மாட்டி அபராதம் கட்டுறவன் 10 பேருதான் இருப்பான். சரியா?
"என்னை விட அதிகப்போனவனையெல்லாம் விட்டுட்டான் போலீஸ். நான் 71ல தான் போனேன்னு "நியாயம்" பேசுறவங்கல பார்த்து இருக்கீங்களா?"
இங்கே 71 ல ஓட்டிய (அப்)பாவிதான் நம்ம பெருமாள் முருகன்!
அவரு ஸ்பீட் லிமிட்டுக்கு குறைவாக 65ல ஓட்டவில்லை என்பது உண்மைதானே, கீதா அவர்களே?? :)
விதண்டாவதம்னா வ்ருண்னு ஆயிப்போச்சு இப்போல்லாம்! என்ன பண்ணுறது?? :))))
விதண்டாவதம்னா வ்ருண்னு ஆயிப்போச்சு இப்போல்லாம்! என்ன பண்ணுறது?//ஹஹஹஹ வாங்க வருண்! என்னடா ஆளைக் காணலையேனு நினைச்சோம்...ம்ம்ம் அங்க உள்ள ஸ்பீட் லிமிட் தெரியும்....அபராதம் கட்டுறவங்க, நியாயம் பேசுறவங்களையும் பார்த்துருக்கேன்....
பதிலளிநீக்குஉங்கள் பதிலகளை ரசிக்கின்றோம் வருண். ஆனால், சிலவற்றிற்கு பதில் என்பது கொஞ்சம் கடினம். மன்னிச்சுக்குங்க ஓகேயா....
நன்றி வருண்....
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு//வெளியாகி 2 வருடங்களுக்குப் பிறகுதான் சர்ச்சை. அப்படியென்றால் இரண்டு வருடங்கள் யாருமே அந்தப் புத்தகத்தை வாங்கவுமில்லை. வாசிக்கவுமில்லை போலும். இதிலிருந்தே தெரிகின்றது //
பதிலளிநீக்கு2010ல் முதல் பதிப்பு. நான்கு வருடங்களுக்குப்பின்புதான் சர்ச்சை.
இப்போது அது நான்காவது பதிப்பு முடிந்திருக்கிறது. எனவே நிறையப்பேர் வாசித்துவிட்டார்கள்.. இத்தனை நாள் அதில் சர்ச்சைகள் எழாததற்குக் காரணம், ஒன்று அதைப் படித்தவர்கள் நாவலாகத்தான் பார்த்தார்கள்.
இப்போது ஆங்கில மொழிபெயர்ப்பின் முதல் பதிப்பு வந்தபின்தான், அரசியல் மற்றும் ஆட்சி அமைப்புகளும் மாறியபின்தான், சாதிப்பிரச்சனைகளை முன்னிறுத்தி தாங்கள் இருப்பதாகக் காட்டிக்கொள்ளநினைத்து வென்றிருக்கிறார்கள் அல்லது வென்றது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
// மாதொருபாகன் முதல் பாகம் மட்டுமே. இன்னும் இரண்டு பாகங்கள் உள்ளன. அர்த்தநாரீஸ்வரர், ஆலவாயன். அதன் தொடர்ச்சியாக இதையும் படித்தால்தானே முழுக் கருத்தும் கொள்ள முடியும்? ஆசிரியர் அதில் என்ன சொல்லியிருக்கின்றார் என்று பார்த்தால்தான் முழுவதும் புரியும். //
மாதொருபாகனின் கதாநாயகன் கதாநாயகியின் முடிவை கதைப்போக்கை ஏற்றுக்கொண்டால் என்ன கதை என்று ஒன்றும், ஏற்றுக்கொள்ளாதபட்சத்தில் என்ன கதை என்று மற்றொன்றும் தான் 'ஆலவாயன்' & 'அர்த்தநாரி'.
//அதை வாயை மூடிப் பேசியிருக்கலாமே. // உண்மைதான். எழுத்தை எழுத்தாலேயோ, இன்னொரு இலக்கியப்படைப்பினாலேயோ பேசியிருக்கலாம்.
//அமைதியான முறையில் கதாசிரியருடனேயே பேசித் தீர்த்திருக்கலாமே!//
பேச வேண்டிய அவசியமே இல்லை. இது கட்டைப்பஞ்சாயத்து செய்யவேண்டிய விசயமும் இல்லை. அப்படிப்பேசியதால்தான், எழுத்தாளர் தன்னை ஒரு காரணமாகக் கொண்டு தன் ஊர் மக்களுக்கு இவர்கள் ஏதாவது பிரச்சினை செய்துவிடுவார்கள் என்று அஞ்சி, இனி பெருமாள் முருகன் செத்துவிட்டான் என்று அறிக்கையிடும் அளவுக்கு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
மிக்க நன்றி நண்பரே! தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும்!
நீக்கு//வெளியாகி 2 வருடங்களுக்குப் பிறகுதான் சர்ச்சை. அப்படியென்றால் இரண்டு வருடங்கள் யாருமே அந்தப் புத்தகத்தை வாங்கவுமில்லை. வாசிக்கவுமில்லை போலும். இதிலிருந்தே தெரிகின்றது //
பதிலளிநீக்கு2010ல் முதல் பதிப்பு. நான்கு வருடங்களுக்குப்பின்புதான் சர்ச்சை.
இப்போது அது நான்காவது பதிப்பு முடிந்திருக்கிறது. எனவே நிறையப்பேர் வாசித்துவிட்டார்கள்.. இத்தனை நாள் அதில் சர்ச்சைகள் எழாததற்குக் காரணம், ஒன்று அதைப் படித்தவர்கள் நாவலாகத்தான் பார்த்தார்கள்.
இப்போது ஆங்கில மொழிபெயர்ப்பின் முதல் பதிப்பு வந்தபின்தான், அரசியல் மற்றும் ஆட்சி அமைப்புகளும் மாறியபின்தான், சாதிப்பிரச்சனைகளை முன்னிறுத்தி தாங்கள் இருப்பதாகக் காட்டிக்கொள்ளநினைத்து வென்றிருக்கிறார்கள் அல்லது வென்றது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
// மாதொருபாகன் முதல் பாகம் மட்டுமே. இன்னும் இரண்டு பாகங்கள் உள்ளன. அர்த்தநாரீஸ்வரர், ஆலவாயன். அதன் தொடர்ச்சியாக இதையும் படித்தால்தானே முழுக் கருத்தும் கொள்ள முடியும்? ஆசிரியர் அதில் என்ன சொல்லியிருக்கின்றார் என்று பார்த்தால்தான் முழுவதும் புரியும். //
மாதொருபாகனின் கதாநாயகன் கதாநாயகியின் முடிவை கதைப்போக்கை ஏற்றுக்கொண்டால் என்ன கதை என்று ஒன்றும், ஏற்றுக்கொள்ளாதபட்சத்தில் என்ன கதை என்று மற்றொன்றும் தான் 'ஆலவாயன்' & 'அர்த்தநாரி'.
//அதை வாயை மூடிப் பேசியிருக்கலாமே. // உண்மைதான். எழுத்தை எழுத்தாலேயோ, இன்னொரு இலக்கியப்படைப்பினாலேயோ பேசியிருக்கலாம்.
//அமைதியான முறையில் கதாசிரியருடனேயே பேசித் தீர்த்திருக்கலாமே!//
பேச வேண்டிய அவசியமே இல்லை. இது கட்டைப்பஞ்சாயத்து செய்யவேண்டிய விசயமும் இல்லை. அப்படிப்பேசியதால்தான், எழுத்தாளர் தன்னை ஒரு காரணமாகக் கொண்டு தன் ஊர் மக்களுக்கு இவர்கள் ஏதாவது பிரச்சினை செய்துவிடுவார்கள் என்று அஞ்சி, இனி பெருமாள் முருகன் செத்துவிட்டான் என்று அறிக்கையிடும் அளவுக்கு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
***பேச வேண்டிய அவசியமே இல்லை. இது கட்டைப்பஞ்சாயத்து செய்யவேண்டிய விசயமும் இல்லை.****
பதிலளிநீக்குREALLY???!!!
அப்படியெல்லாம் உங்களை நீங்களே எல்லாம் தெரிந்த கடவுள் மாதிரி நினைத்துக்கொண்டு பொத்தாம் பொதுவாக சொல்லிவிட முடியாது.
ஏகப்பட்ட பேர் காயப்பட்டு இருக்காங்க. There are so much offensive language and casteist remarks against WOMEN and the so called "low class" people.
If they come and say, I am seriously offended, I hate this bastard who insulted us in the name of writing a "fiction", What will you say?
Speak for yourself. Dont make any sweeping statements like you do here. The world has spectrum of people. If you are not offended, you can say I dont find anything wrong in it.I am not offended. Dont say what you are saying holds good for EVERYONE!
How they should fight for themselves in a civilized way is different.
***பேச வேண்டிய அவசியமே இல்லை. இது கட்டைப்பஞ்சாயத்து செய்யவேண்டிய விசயமும் இல்லை.***
Your sweeping statement is completely UNACCEPTABLE by millions of people who are offended by this "novel"!
Thanks for letting me share my thoughts again here!