வெள்ளி, 9 ஜனவரி, 2015

பாடல்கள் பலவிதம்...ஒவ்வொன்றும் ஒருவிதம் - 2

                                                         
 இங்கு நாங்கள் பகிர்ந்துள்ள பாடல்கள்  எங்கள் கல்லூரிக் காலத்தில் மிகவும் பிரபலமாக விளங்கியவை.  மிகவும் அருமையான பாடல்கள்.  கல்லூரிகளில் நடந்த பல விழாக்களிலும் இந்தப் பாடல்கள் ஒலிக்காமல் இருந்ததில்லை.   எவர் க்ரீன் என்று சொல்லலாம் இவற்றை. இங்கு பகிர்ந்துள்ள பாடல்கள் இரண்டுமே தமிழிலும், மலையாளத்திலும் அதே மெட்டுடன் வந்தவை. 

 மறைந்த இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களின் மலையாளப் படமான ஓளங்கள்  படத்தில்  இளையராஜா இசையமைத்த பாடலான தும்பி வா தும்பக் குடத்தின் மிகவும் பிரபலமாகி பலருக்கும் பிடித்துப் போக அந்த மெட்டு தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களிலும் போடப்பட்டது.  பாலுமகேந்திரா விற்கு இந்த மெட்டு மிகவும் பிடித்துப் போனதால அதே மெட்டை ஔர் ஏக் ப்ரேம் கஹானி திரைப்படத்திலும் உபயோகித்துக் கொண்டார்.  இந்த மெட்டு 2009 ல் வெளிவந்த ஹிந்திப் படமான "பா" வில் போடப்பட்டது.  பாடல் கும் கும் கும்...

ஓளங்கள் எனும் மலையாளப் படத்தில் வரும் தும்பிவா தும்பக்குடத்தின் - 1982


தும்பிவா தமிழில் ஆட்டோராஜா எனும் படத்தில் - 1982


"பா" எனும் ஹிந்தி படத்தில் வரும் அதே மெட்டு. கும் கும் கும்


 அடுத்ததாக கேரள இசையமைப்பாளர் ரவீந்திரன் - ரவீந்திரன் மாஸ்டர், மிகவும் அருமையான ஒரு இசையமைப்பாளர்.  அவரது பாடல்கள் எல்லாமே மெலடியாகவும், கர்நாடக சங்கீதம் அடிப்படையிலும் இருக்கும்.  அவரது மலையாளப் படப் பாடல்களைத் தனியாக ஒரு இடுகையாக அடுத்து வரும் இந்தப் பதிவு தொடரில் தருகின்றோம்.  இங்கு நாங்கள் பகிர்ந்துள்ள பாடல் அவர் இசையமைத்த சிரியோ சிரி படத்தில் வரும் ஏழு ஸ்வரங்களும் எனும் பாடல், தமிழில் வெளியான ரசிகன் ஒரு ரசிகை எனும் படத்தில் ஏழிசைக் கீதமே என்று வெளிவந்து மிகவும் பிரபலமானது.  இவரது மூன்று மகன் களில், நவீன் மாதவ் தமிழில் பின்னணிப்பாடகராக இருக்கின்றார்.  ராஜன் மாதவ் திரைப்பட இயக்குனராகவும், (முரண் படம் இவர் இயக்கியது), சஜன் மாதவ் இசை இயக்குனராகவும் உள்ளனர். இப்பாடலை  பாடியதோ  இன்று  தன் 75 வயது  பிறந்த நாளை  கொல்லூர்  மூகாம்பிகையின்முன்  தன்  குடும்பத்துடன்  சங்கீத அர்ச்சனை நடத்தி  புனிதப்படுதிக்கொண்டிருக்கும்  நம் 'Gana  Gandharvan ' k  .J . ஜேசுதாஸ் .இந்நன்நாளில்  அவர் இன்று போல் என்றும் வாழ  வும் ,இன்றுபோல் என்றும் பாடி நம் செவியில் தேன் மழை பொழியும் மேகமாக திகழவும்   வாழ்த்துவோம் . அதற்காக  எல்லாம் வல்ல இறைவனை  வேண்டிக்கொள்வோம் .

சிரியோ சிரி -1982 - மலையாளம். ஏழு ஸ்வரங்களும் தழுகி - இசை-ரவீந்திரன் மாஸ்டர்


ரசிகன் ஒரு ரசிகை - 1986 ஏழிசை கீதமே - ஏசுதாஸ் - இசை - ரவீந்திரன் மாஸ்டர்

நாங்கள் ரசித்தது போல் நீங்களும் ரசிப்பீர்கள் என்று நினைத்துப் பகிர்ந்துள்ளோம்.

36 கருத்துகள்:

  1. இசைக்கு மொழி இல்லை
    இனிமை அய்யா!
    சுகம் தரும் பாடல்களை சுவைத்தேன்!
    இனிய படைப்பு!
    இதம்தரும் பதிவு!
    நன்றி!
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  2. அனைத்தையும் கேட்டு இரசித்தேன்
    ஆழமான விரிவான பார்வை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. நல்லதொரு நினைவலைகள். இந்த வகையில் நிறைய பாடல்கள் தேத்தலாம்!!

    ஆட்டோ ராஜா படத்தில் 'மலரே என்னென்ன கோலம்; என்றொரு அற்புதமான எஸ் பி பி பாடல் உண்டு. (சில படங்களின் பெயரைக் கேட்கும்போதே அதில் நமக்குப் பிடித்த முதலிடத்தில் இருக்கும் பாடல்கள் நினைவுக்கு வந்து விடுகிறதே... என்ன செய்ய!)

    என்ன ஒரு அற்புதமான பாடல் எழு ஸ்வரங்களும் - ஏழிசை கீதமே... எனக்கு மிகவும் பிடிக்கும். இதே படத்தில் 'பாடி அழைத்தேன்' பாடலும் மிகவும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நண்பரே! நீங்கள் சொல்லி இருக்கும் பாடலும் மிகவும் அருமையான பாடல்....அதென்னவோ சரிதான் பிடித்த பாடல்கள் நினைவுக்கு வந்துவிடும் படத்தின் பெயரை கேட்டதுமெ....

      நீக்கு
  4. தமிழில் சற்றே வேகம் குறைவாக இருக்கும். மலையாளத்தில் கொஞ்சம் ஸ்பீட்! யார் அந்த நடிகர்? மோகன்லால் இல்லையே? மலையாளத்தில் ஒரு சீசனில் ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா, கானம் உள்ளிட்ட பல படங்களில் யேசுதாஸ், பாலமுரளி பாடல்கள் மிகப் பிரபலமாகின இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தும்பீ வா தானே கேட்கின்றீர்கள்?! மலையாளத்தில் அந்த நடிகர் அமுல் பலேக்கர் (ஹிந்தி).

      ஏழு ஸ்வரங்களுக்குள் மலையாளத்தில் நடித்திருப்பவர் நடிகர், இயக்குனர் பாலச்சந்திர மேனன்.

      மலையாளத்தில் ஆம் நீங்கள் சொல்லி இருப்பது போல் ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா, பரதம், கானம், ஆறாம் தம்புரான், பல படங்கள் பாடல்கள் பிரபலமாகின. ரவீந்திரன் மாஸ்டர்தான் இசை. இதை நாங்கள் அடுத்த்த இந்தத் தொடர் பதிவில் வெளியிட உள்ளோம்.

      நீக்கு
  5. அருமையான அலசல்
    அருமையான பாடல்கள்
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  6. சங்கத்தில் பாடாத கவிதை, ஏழிசை கீதமே இரண்டும் மிக நல்ல பாடல்கள்.

    ஒரு செய்தி. The Four Lads என்ற கனடா நாட்டைச் சேர்ந்த 50,60,70 களில் புகழ்பெற்றிருந்த இசைக் குழுவின் இஸ்தான்புல் நாட் கான்ஸ்டண்டிநோபில் என்ற பாடலின் சாயல் அதிகம் கொண்டது சங்கத்தில் பாடாத கவிதை. இரண்டுக்கும் ஒற்றுமை இருப்பதை ஆழ்ந்து கேட்டால் உணரலாம்.

    https://www.youtube.com/watch?v=Wcze7EGorOk

    ஸ்ரீராம் என்பவர் ஆட்டோ ராஜா படத்தின் மலரே என்னென்ன கோலம் பாடலைப் பற்றிச் சொல்லியிருந்தார். சந்தேகமில்லாமல் மிக ரம்மியமான பாடல். அதற்கு இசை அமைத்தது இளையராஜா அல்ல ராஜன் நாகேந்திரா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் மிகப் பெரிய இசை ஆய்வாளர் என்பது அறிவோம். தங்கள் தளத்தை வாசிப்பதுண்டு. தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி! காரிகன்.

      தாங்கள் கொடுத்திருக்கும் லிங்க் கேட்டோம். பாடல் மிகவும் அருமையாக உள்ளது ஃபோட் லாட்ஸ்....ம்ம்ம் இருக்கின்றது....சங்கத்தில் பாடாத கவிதை நம்ம ஊருக்கு ஏற்றார் போல் போடப்பட்டுள்ளது....

      மலரே என்னென்ன கோலம் இசைஅமைப்பாளர் ராஜன் நாகேந்திரா எனப்து புதியய் தகவல்..மிக்க நன்றி

      நீக்கு
  7. பாடல்கள் பலவிதம்...ஒவ்வொன்றும் ஒருவிதம் என்றாலும் ரசிக்க வைக்கும் விதம் :)
    த ம 5

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் நல்லதொரு அலசலுக்கு நன்றி....
    //தும்பிவா தும்பக்குடத்தின்//
    நான் தினம் தவறாது கேட்கும் பாடல் மிகவும் ரசிப்பேன்.
    ரவீந்திரன் மாஸ்டரின் இசையை பிடிக்கவில்லை என்பவன் ஒரு ரடனையற்ற ஜடம் என்பேன்.
    தமிழும். மலையாளமும் மட்டுமல்ல தெலுகிலும் இதுபோல் உள்ள ஒற்றுமை பாடல்கள் என்னிடம் உள்ளது
    என்னைப்போல் ரசனையுள்ள தில்லை அகத்தாரைக்கண்டு குழப்பமான சந்தோஷம்
    பதிவர்கள் பலவிதம் அதில் தில்லை அகத்தார் ஒருவிதம்.
    தமிழ் மணம் 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ரவீந்திரன் மாஸ்டரின் இசையை பிடிக்கவில்லை என்பவன் ஒரு ரடனையற்ற ஜடம் என்பேன்.// ஆஹா நம்ம கேசு....ஆம் நண்பரே! தெலுங்கிலும் உண்டு, கன்னடத்திலும் உண்டு, அதையும் தர நினைத்தோம். ஆனால் பல காணொளிகள் இருந்தால் பல சமயங்களில் னெட் பிரச்சினையாகி வேலை செய்யாது....நிறைய நேரம் எடுக்கும் என்பதால் தரவில்லை.

      அதென்ன குழப்பமான சந்தோஷம்??!!!!?!?!? சந்தோஷம் கூட குழம்புமா என்ன?!?! ஹஹஹ்ஹ ஆமாம் நாங்க "ஒரு விதம்"தான்...ஹஹஹ்ஹ

      நீக்கு
    2. // ஆஹா நம்ம கேசு //

      இதென்ன அர்த்தம் ஆஹா.... செல்லாது, செல்லாது....

      நீக்கு
  9. அனைத்து பாடல்களும் சுகமான ராகங்கள். அருமை.
    சூப்பர். இன்னும் இந்த மாதிரி தாங்கள் ரசித்த பாடல்களை பகிரவும்.
    கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சொக்கன் நண்பரே! ரசித்தமைக்கு. நிச்சயமக பகிர்கின்ரோம்1

      நீக்கு
  10. கைபேசியில் படித்துக்கொண்டிருக்கிறேன். Plug in not supported என்று வருகிறது . எனவே இசை கேட்க முடியவில்லை . Desktop. அல்லது Laptopஇல் நாளை படித்து இசை கேட்ட பின் வருவேன். சரியா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லை சார்! எப்போது கேட்க முடிகின்றதோ கேளுங்கள்! மிக்க நன்றி சார்!

      நீக்கு
  11. ஆஹா எனக்குப் பிடித்த பாடல்கள் தான் ரசித்தேன் சகோ. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் இருவருக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! உங்களுக்கும் ப்டித்த பாடல்களா....ரசித்தமைக்கு மிக்க நன்றி! சகோதரி!

      https://www.youtube.com/watch?v=Wcze7EGorOk

      நீக்கு
  12. இனிமையான கீதங்கள் கேட்டு ரசித்தேன். நன்றி சகோஸ்.

    பதிலளிநீக்கு
  13. த.ம வாக்கிற்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  14. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  15. வணக்கம்
    அண்ணா

    பாடல்கள் ஒவ்வொன்றும் தாங்கள் சொன்னது போல பல விதம்... இனிமையாக இரசித்தேன்.. பகிர்வுக்கு நன்றி த.ம6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரூபன் தம்பி தாங்கள் ரசித்ததற்கு!

      நீக்கு
  16. நினைவலைகள்...
    ஓய்வதில்லை
    அருமையான தொகுப்பு தோழர்
    த ம +

    பதிலளிநீக்கு