பதிவர் சகோதரி
ஏஞ்சலின், எங்கள், பிரிவு
தரும் வேதனை...பிரிந்து போகா வேதனை...பிறர் அறியா வேதனை இடுகைக்குத் தந்த பின்னூட்டத்தில்,
உடல் ஊனம் ஒரு பிரச்சினையே அல்ல என்பதை உலகிற்குத் தன் எழுத்து மற்றும் பேச்சாற்றலால்
உணர்த்திக் கொண்டிருக்கும் நிக் எனும் நிக்கோலாஸ் ஜேம்ஸ் வூஜிசிக்கைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.
காணொளி-கூகுள்
பாலா இயக்கிய “நான் கடவுள்”
எனும் படத்தில், உடல் ஊனமுற்றவர்களை பிச்சைக்காரர்களாக்கி பணம் சம்பாதிக்கும் கும்பலின்
இம்சையைத் தாங்க முடியாமல், கைகளும், கால்களும் இல்லாத எப்போதாவது மட்டும் பேசும் ஒரு
மனிதரிடம் சிலர் சென்று முறையிடும் ஒரு காட்சி வருகின்றது. கை, கால்கள் இல்லாத இடுப்புக்கு மேலே உள்ள உடல்
பாகம் மட்டும் உள்ள ஒருவரை ஆடை அணிவித்து, தலையில் முண்டாசுக் கட்டியபின் ஒருவர் ஒரு
ஷெட்டில் கொண்டுவந்து வைப்பார். அதிசயப் பிறவியானதால், அவரை எல்லோரும் சாமியாகக் கருதி,
காணிக்கையிட்டுத் தங்கள் குறைகளைச் சொல்லும்
காட்சிகளும் அப்படத்தில் உண்டு. அது போன்ற உருவமைப்புள்ள மனிதர்தான் நிக்கோலா ஜேம்ஸ் வூஜிசிக்
என்பவர்.
1982 டிசம்பர் 4 ஆம் தேதி, ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மருத்துவமனையில்
கை கால்கள் இல்லாத உடலுடன் பிறந்த அவரைக் கண்ட அவரது பெற்றோர்களான பாஸ்டர் போரிஸ் வூஜிசிக்கும்,
நர்ஸான லுஸ்காவும் செய்வதறியாது திகைத்தனர். கை,கால்கள் இல்லாத அவர்களது குழந்தைக்கு
கையும், காலுமாக அவர்கள் மாறி அவனை வளர்க்க முடிவு செய்தனர். தெற்றா அமீலியா எனும் ஜெனிட்டிக் குறைபாடு, உலகில்
மிகவும் அரிதாக மிகச் சிலருக்கு மட்டும் வருகின்ற ஒன்று. அதனால் பாதிக்கப்படும் குழந்தைகள் மட்டும்தான் இப்படிக்
கை மற்றும் கால்கள் இன்றிப் பிறக்குமாம். அப்படிப் பிறக்கும் குழந்தைகள் அதிக நாட்கள்
உயிர் வாழ்வதில்லையாம். ஆனால், நிக்கின் பெற்றோர்களது
அன்பும், பாசமும் நிக்கை ஆரோக்கியத்துடன் வளரச் செய்தது. பள்ளிப் பருவத்தில் ஔ முறை
தன் தந்தையிடம் ஒரு ஜோடி ஷூ வாங்கிவரச் செய்து இரவெல்லாம் மனமுருகிப் பிரார்த்தனை செய்த
நிக், ஹேசு தனக்குக் கை கால்களை வளரச் செய்வார் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்து,
இறைவனை வெறுக்க ஆரம்பித்தாராம். இடையில் ஒரு
முறை தற்கொலை செய்ய முடிவெடுத்துக் குளிக்கும் தொட்டியில் விழுந்தும் இருக்கிறார். ஆனால், தன் மரணத்திற்குப் பின் தனக்காகக் கண்ணீர்
சிந்தப் போகும் தன் பெற்றோர்களை நினைத்துத் தற்கொலை முயற்சியிலிருந்து பின்வாங்கியிருக்கின்றார்.
அதை அறிந்த நிக்கின் தாய், அன்று செய்தித் தாளில் வந்திருந்த, உடல் ஊனமுற்ற ஒருவர்
தன்னம்பிக்கையுடன் வாழும் செய்தியை வாசித்துச் சொல்லி அவரதுப்படத்தையும் காண்பித்திருக்கின்றார். அன் நிகழ்ச்சி நிக்கிற்கு வாழ வேண்டும் என்ற மன
உறுதியைக் கொடுத்ததாம்.
பள்ளியில்
நல்ல பேச்சாளராகத் திகழ்ந்த அவர், கல்லூரியில் வணிகவியலில் பட்டமும் பெற்றார். அவருக்கே
உரித்தான விதத்தில், நீச்சல் மற்றும் சர்ஃபிங்கில் தேர்ச்ஹ்கி பெற்று,2005 ஆம் ஆண்டு
“யங்க் ஆஸ்திரேலியம் ஆஃப் தெ இயர்” ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டும்
இருக்கிறார். இப்போது நிக், தன் மனைவி மற்றும் மகனுடன் மகிழ்ச்சியுடன் அமெரிக்கா கலிஃபோர்னியாவில்
வாழ்ந்து வருகின்றார். லாஸ்ட் ஷிப், பட்டர்ஃப்ளை
சர்க்கஸ் எனும் திரைப்படங்களை உருவாக்கி அதில் நடித்திருக்கிறார் நிக். அன்ஸ்டாப்பபிள்,
லைஃப் வித்தவுட் லைம்ப்ஸ், ஸ்டாண்ட் ஸ்ட்ராங்க் எனும் புத்தகங்களையும், நிக் எழுதியிருக்கிறார்.
பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தன் நம்பிக்கையின் அவசியம் பற்றி உரையாற்றியும், உலகெங்கும்
ஏசு தேவனின் அன்பையும், கருணையயும் பற்றி பிரச்சாரங்கள் நடத்தி, உடல் ஊனம், மனதை ஊனப்படுத்த
விடாமல் தடுத்து எப்படி வாழ்வை இன்பமயமாக்கலாம் என்று நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்.
2007ல்
நிக்கைப் போல் ஒரு குழந்தை கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் டெட்ரா அமிலியா எனும் ஜெனிட்டிக்
குறைபாடுடன் பிறந்தது. அக்குழந்தையின் பெற்றோர்கள்,
தங்களது வறுமை மற்றும் அக்குழந்தையை வளர்க்க இயல்லாமை காரணமாகவோ என்னவோ, அக்குழந்தையை
ஒரு அனாதை விடுதியில் விட்டிருக்கிறார்கள்.
குழந்தை மருத்துவரான சிஸ்டர் டாக்டர் மேரி லிட்டி அக்குழந்தையின் தாயாக மாறி,
அக்குழந்தையை பத்தனம்திட்டை குன்னம்தானம் தெய்வபரிபாலன பவனுக்குக் கொண்டு சென்று, அங்கு
வளரும் நூற்றுக் கணக்கான அனாதைக் குழந்தைகளுடன், அக் குழந்தைக்கு அபிஷேக் என்று பெயரிட்டு,அவனை
அங்கு வளரச் செய்திருக்கிறார். அபிஷேக்கிற்கு
11/2 வயதான போது அவனை வேலூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, 6 மாத காலம் பிசியோதெரப்பி
செய்து அவனை ஒரு “நிக்காக” மாற்றும் முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கிறார். 7 வயதான அபிஷேக், இப்போது தன் கால் விரல்களின்
இடையே பேனா மற்றும் பென்சிலைப் பிடித்து விரைவாகவும் தெளிவாகவும் எழுத முடிகிறது. இயந்திர நாற்காலியில் அமர்ந்து அதைச் சுலபமாக இயக்கி
ஓரிடத்திலிருந்து வேறு இடத்திற்கு அபிஷெக்கால் போகவும் முடிகின்றது. நிக்கின் வீடியோக்களைப் பார்க்கும் அபிஷேக், தானும்
வளர்ந்து பெரியவனாகி ஒரு “நிக்” ஆவேன் எனும் போது மதர் மேரி லிட்டிக்கும், அந்த அனாதை
இல்லத்திலிருக்கும் கன்னியா ஸ்த்ரீகள் மற்றும் குழந்தைகளுக்கு உண்டாகும் மகிழ்ச்சியை,
இதை எழுதும் நான் மட்டும் அல்ல, வாசிக்கும் நீங்களும் உணர்கின்றீர்கள் இல்லையா? – “அன்பிற்கும்
உண்டோ அடைக்கும் தாழ்?”
மதம்
மற்றும் இறைவனின் பெயரால் வெறுப்பையும், விரோதத்தையும் வளர்த்துக் கொண்டு ஒரு பாவமும்
அறியாக் குழந்தைகள் என்றும் பாராமல், அவர்களைக் கொன்று குவிக்கும் கல்நெஞ்சக்காரர்களின்
நடுவே, மதர் மேரி லிட்டி போன்றவர்களைப் பற்றிக் கேட்கும் போது, பாலைவன பயணத்தின் போது
எப்போதாவது தென்படும் பாலைவனச் சோலைக்குச் சென்று இளைப்பாகும் சுகம் மனதிற்கு ஏற்படுகின்றது.
நிக்கிற்கும், அபிஷேக்கிற்கும், மதர் மேரி லிட்டிக்கும் ஆயுளும், ஆரோக்கியமும் கூடவே
எல்லாம் நன்மைகளும் நிகழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.
காணொளிகள் : கூகுள் : நன்றி
பின் குறிப்பு:
பின் குறிப்பு:
விருப்பமுள்ளோர் உங்கள் திறமையை வெளிப்படுத்த அருமையான வாய்ப்பு. இதற்கான விவரங்களை மேலும் அறிய சொடுக்குங்கள் இந்தச் சுட்டியை...
வாழ்த்துக்கள்!
சிறந்த திறனாய்வுப் பார்வை
பதிலளிநீக்குதொடருங்கள்
மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கு!
நீக்குஅற்புதமான அனைவரும் அவசியம்
பதிலளிநீக்குஅறிந்து கொள்ளவேண்டிய கருத்துக்கள் அடங்கிய
கனமானப் பதிவு
அனைத்து உறுப்புகளும் மிகச் சிறப்பாக
அமையப் பெற்றவர்கள் பலரிடம் இல்லாத
சந்தோஷம் நிக்கின் முகத்தில் இருப்பதே
அவரின் ஆளுமையைப் பறைச்சாற்றும் அற்புத
அடையாளம்.
காணோளியுடன் பதிவு மிக மிக அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சார்! தங்களது மேலான கருத்திற்கு!
நீக்குtha.ma 1
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா.
சாதிக்க வேண்டும் என்றால் ஊனம் ஒரு பிரச்சினை இல்லை என்பதை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள். அவர்கள் நீண்ட ஆயுள் பெற்று வாழ இறைவனை பிராத்திப்போம்.. சிறப்பான கருத்தை சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன் தம்பி தங்கள் கருத்திற்கு!
நீக்குபொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
பதிலளிநீக்குஆள்வினை இன்மை பழி.
(குறள் எண் 618)
ஆஹா! இது டிடி! டிடியின் அக்மார்க் பின்னூட்டக் கருத்து! இதற்கான குறளை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி டிடி! சூப்பர்!
நீக்குநிச்சயமாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம் தான் ஆண்டவன் தந்த கை கால்களையும் மூளையையும் சோம்பலுக்கு அடிமையாகி வீணே வைத்திருக்க விரும்புவோர்கள் மத்தியில் இவர்கள் சாதனையை கண்டேனும் உணர்வோம். அவர்களையும் பாராட்டி கை கொடுக்க முன் வருவோம்.
பதிலளிநீக்குநல்லதோர் பதிவு வாழ்த்துக்கள் ....!
மிக்க நன்றி சகோதரி! தங்களின் அருமையான கருத்திற்கு.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா
சிறுகதைப்போட்டி சம்மந்தமான விளம்பர பதிவு பதிவிட்டமைக்கு மிக்க நன்றி... அண்ணா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன் தம்பி, நீங்கள் ஆற்றும் சேவையை விடவா?!!
நீக்குஉடல் ஆரோக்கியமாக இருந்தும் வாழ்க்கையில் சந்திக்கும் சின்ன பிரச்சனைகளுக்கு எல்லாம் தன்னம்பிக்கையை இழக்கும் பலரது மத்தியில் இவர்களின் தன்னம்பிக்கையை என்னவென்று சொல்லுவது. இவர்களின் பெற்றோர்களையும், குழந்தை மருத்துவரையும் கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்.
பதிலளிநீக்குஅதுபோல் இம்மாதிரியான செய்திகளை தேடித்தேடி எங்களுடன் பகிரும் உங்களுக்கும் ஊனுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் சகோஸ்.
மிக்க நன்றி சொக்கன் நண்பரே! தங்களின் அருமையான பின்னூட்டத்திற்கு! பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி! நீங்களும் மிக நல்ல பதிவுகளைத் தருகின்றீர்கள் அதுவும் தமிழ் வளர்த்தல் வெளினாட்டில்....அதுதான் பாராட்டிற்குரியது நண்பரே!
நீக்குதன்னம்பிக்கையின் சக்தியை அழகா உணர்த்தியவர்களை காட்டி இருக்கிறீர்கள். அபிஷேக் நன்கு வளர்ந்துவரகைறைவனை பிரார்த்திப்போம்.
பதிலளிநீக்குத ம 4
மிக்க நன்றி சகோதரி! தங்களின் கருத்திற்கு!
நீக்குமிக்க நன்றி..நான் இவரது நிகழ்ச்சி ஒன்றை சில வருடமுன் பார்த்து பிரமித்து போனேன் .இப்போ மணமாகி ஒரு குழந்தையும் உள்ளதாம்..
பதிலளிநீக்குஅபிஷேக்கும் தன்னம்பிக்கை மனிதனாக வளர பிரார்த்திப்போம் ...
ஆம் குழந்தை உள்ளதாக அறிந்தோம். ஒருவேளை இந்தக் காணொளியில் இருப்பது அவரது குழந்தைதானோ?
நீக்குமிக்க நன்றி சகோதரி. அபிஷேக்கின் புகைப்படம் கிடைக்கவில்லை...
தன்னம்பிக்கை ஊட்டும் பதிவு! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குமிக்க நன்றி சுரேஷ் நண்பரே! தங்கள் கருத்திற்கு!
நீக்குஇவர் பற்றிய காணொளி முன்னரே பார்த்திருக்கிறேன். எத்தனை தன்னம்பிக்கை இவருக்கு......
பதிலளிநீக்குமிக்க நன்றி வெங்கட்ஜி!
நீக்குதன்னம்பிக்கையை ஊட்டக்கூடிய பதிவு வாழ்த்துகள் நண்பரே...
பதிலளிநீக்குதமிழ் மணம் 6
தான் மட்டும் தான் சிறப்பான உயிர் என்று நினைப்பவரும்
பதிலளிநீக்குதான் எத்தனை சிறப்பான படைப்பு என்பதை 'அறிந்தும் அறியாமலும்'
தன்னை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை மட்டுமே வாழ்க்கை எனக்கறுதியும்
இறைவனோ! அல்லது இயற்கையோ! தன்னை மட்டுமே வஞ்சித்து விட்டதாக நினைக்கும் மனிதர்கள் நிறைந்த உலகமிது
அத்தகைய வேடிக்கை மனிதர்களுக்கு
தங்களின் பதிவு ஒரு விளக்கு.
மிக்க நன்றி நண்பரே! தங்களது அருமையான, அழகான, உயரிய கருத்திற்கு!
நீக்குஅவரது தன்னம்பிக்கை ஆச்சரியம் அளிக்கிறது ! நமக்கொரு படிப்பினை அவரின் சாதனை !
பதிலளிநீக்குத ம 8
ஆம் ஜி! படிப்பினைதான். மிக்க நன்றி ஜி! தங்கள் கருத்திற்கு!
நீக்குமனதை நெகிழச்செய்யும் பதிவு... பதிவினூடே பல வரிகள் என்னை வசீகரித்தாலும் கடைசி சில வரிகள்...
பதிலளிநீக்குமதம் மற்றும் இறைவனின் பெயரால் வெறுப்பையும், விரோதத்தையும் வளர்த்துக் கொண்டு ஒரு பாவமும் அறியாக் குழந்தைகள் என்றும் பாராமல், அவர்களைக் கொன்று குவிக்கும் கல்நெஞ்சக்காரர்களின் நடுவே, மதர் மேரி லிட்டி போன்றவர்களைப் பற்றிக் கேட்கும் போது,
மன்னிக்க வேண்டும் ! மதர் மேரி லிட்டியை உதாரணத்துக்கு கூட மிருகங்களின் அருகில் வைக்க மனம் ஏற்கவில்லை ! மதர் மேரி லிட்டி போன்றவர்களின் பணிதான் மதங்கள் போதிக்கும் நெறி, பணி எல்லாம் ! அவரை போன்ற கோடிக்கணக்கானவர்கள் அனைத்து மதங்களிலும், உலகம் முழுவதும் பரவியுள்ளார்கள். அவர்களின் மெளனப்பணியே இந்த விஷமிருங்கங்களை வேரறுக்கக்கூடிய ஒரே மாமருந்து.
நன்றி
சாமானியன்
ஆம் நண்பரே! மதரை மனித மிருகங்களின் அருகில் சொல்லியிருக்கக் கூடாதுதான். மிக அருமையான கருத்தை முன் வைத்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!
நீக்குநிக்கிற்கும், அபிஷேக்கிற்கும், மதர் மேரி லிட்டிக்கும் ஆயுளும், ஆரோக்கியமும் கூடவே எல்லாம் நன்மைகளும் நிகழ வேண்டும் என்பதே நிதர்சன உண்மை!
பதிலளிநீக்குஅந்த உண்மை உறங்காதிருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.
இன்றைய எனது பதிவு
"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
படரட்டும்!
நன்றியுடன்,
புதுவை வேலு,
WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM
மிக்க நன்றி ஐயா தங்கள் கருத்திற்கு!
நீக்குஐயோ என்ன ஐயா இது! நீங்கள் எங்களை அழைக்கவே வேண்டாம். நாங்கள் வந்து விடுவோம். சிறிது வேலைப்பளு கூடியய்தால்...தாமதம்...
தொடர்கின்றோம் ஐயா!
அருமையான பகிர்வு துளசி சார்...
பதிலளிநீக்குசாதனையாளருக்கு ஊனம் ஒரு குறையல்ல...
அவர்களை வாழ்த்துவோம்,
மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு!
நீக்குதேவையான, தன்னம்பிகையை உருவாக்கும் பதிவு!
பதிலளிநீக்குமிக்க நன்றி புலவர் ஐயா! தங்களின் கருத்திற்கு!
நீக்குஇந்த தன்னம்பிக்கை மனிதரைப் பற்றிய காணொளிக் காட்சியை
பதிலளிநீக்குவகுப்பில் மாணவிகளிடம் காட்டியுள்ளேன் நண்பரே
நன்றி
தம +1
ஆஹா! மிக்க மகிழ்ச்சி நண்பரே! இந்தக் காணொளியை நீங்கள் ஏற்கனவே மாணவிகளுக்குக் காட்டியமைக்கு. நீங்கள் அருமையான ஆசிரியராயிற்றே...
நீக்குவந்தோம், கருத்திட்டோம். மிக்க நன்றி சகோதரி! எங்களையும் அறிமுகப்படுத்தியமைக்கு
பதிலளிநீக்கு