சனி, 31 ஜனவரி, 2015

சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா

 

       “நான் இந்துவாக இறக்க மாட்டேன்.” இதைச் சொன்னவர் நம் இந்தியக் குடியரசின் அரசியலமைப்புச் சட்டத்தை 141 நாட்களில் எழுதி சாதனை படைத்த டாக்டர் ஆம்பேத்கார். அவர் இங்கிலாந்தில் தங்கியிருந்த வீட்டைக் கோடிகள் கொடுத்து வாங்கும் நம் அரசு அதை ஒரு ம்யூசியமாக மாற்ற இருக்கிறது. இப்படி எல்லாம் பெருமைப்படுத்தப்படும் அவர் மகர் சாதியில் பிறந்ததால் பட்ட அவமானங்களாலும், அனுபவித்த வேதனைகளாலும் மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கானத் தாழ்த்தப்பட்டவர்கள் என முத்திரைக் குத்தப்பட்டவர்கள் படும் அவமானத்தையும், வேதனையையும் கண்டதாலும், தீண்டாமையை ஒழித்தாலும் அவ்வளவு எளிதாக, சாதியை ஒழிக்க முடியாது என்பதை உணர்ந்ததாலும் லட்சக்கணக்கான, தாழ்த்தப்பட்டவர்கள் என்று முத்திரைக் குத்தப்பட்டவர்களுடன் புத்த மதம் தழுவினார்.  அவர் சொன்னது போல அவர் ஒரு இந்துவாக இறக்கவில்லை. புத்த மதத்தவனான [ ஒரு இந்தியனாக இறந்தார்.

       இந்து மதத்தை விட்டுப் போனவர்களுக்கு, போகின்றவர்களுக்குச் சாதியில்லை.  அல்லது சாதிகளால் வரும் பிரச்சினைகள் இல்லை என்பதுதான் உண்மை. 

“புத்த மதம், கிறித்தவ மதம், இஸ்லாம் மதம் போல் இந்த இந்து மதத்திற்கு உயிர் கொடுத்தது யார்?” என்று கேட்டால்,

“இவை எல்லாம் தோன்றும் முன் இந்தியாவில் இருந்த மதம் இது” என்பது பதில்.

“அம்மதங்கள் தோன்றும் முன் “சைவ, சமண மதங்கள் தானே இருந்தன”?, என்று கேட்டால்,

“வைணவமும் இருந்தது. சைவமும், வைணவமும் சேர்ந்துதான் இந்து  மதம்  உண்டானது '' என்பது பதில்.

“எப்போது, யார், ஏன் சைவத்தையும், வைணவத்தையும் கலந்து இந்து மதத்தை நிறுவினார்கள்”? என்று கேட்டால் பதிலே இல்லை.

“அப்படியானால் சாதிகள் எப்படித் தோன்றின?” என்பதற்குப் பதிலாக

“விஷ்ணு பகவானின் நெற்றி, தோள், வயிறு, கால் போன்ற பாகங்களிலிருந்து தோன்றிய மனிதர்கள், வழி வந்தவர்கள் தான் உயர்ந்த, மற்றும் தாழ்ந்தவர்கள்.  மிக உயர்ந்தவர்கள், கொஞ்சம் உயர்ந்தவர்கள், இடைப்பட்டவர்கள், தாழ்ந்தவர்கள்.  இப்படி மேலிருந்து கீழாக '' என்கின்றார்கள்.

“அப்படியானால், சிவநெறி பின்பற்றி வாழும் சைவ மதத்தினருக்குச் சாதிகள் பாதகமில்லையே ?'' என்று கேட்டால்,'' இந்து மதத்தில் சைவமும் உட்படுத்தப்பட்டதால், சாதி சைவ மதத்தினருக்கும் பாதகமே'',என்பது பதில் .

இப்படி இறைவனைக் கூறு போட்டு ஏலம் விட்டதைப் பார்த்த , இறைவன் பெயரால் நடத்தப்படும் அக்கிரமங்களையும், அநீதிகளையும் கண்டு, பொறுக்க முடியாமல்தான், “மனிதனால் பொறுத்துக் கொள்ள முடியாததை, இறைவனால் எப்படி பொறுத்துக் கொள்ள முடிகிறது......அப்படியானால் இறைவனே இல்லை” என்ற முடிவுக்கே வந்தார் தந்தை பெரியார்.  மட்டுமல்ல மூட நம்பிக்கைகள்  மற்றும்  தீண்டாமையை ஒழிக்க சாதி எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தியும், கலப்புத் திருமணங்களை ஊக்குவித்தும் , ஆதரித்தும் திராவிடர்களை ஒன்றுபடுத்தும் முயற்சியில் ஓரளவு வெற்றியும் கண்டார். ஆனால், எப்படியோ காலப்போக்கில் பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றுபவர்களில் பலரும், பார்ப்பன விரோதத்தையும், நாத்திகத்தையும், மூட நம்பிக்கை எதிர்ப்பையும்  மட்டும் உள்வாங்கி, சாதி ஒழிப்பு மற்றும் தீண்டாமை ஒழிப்பை மறந்தே போனார்கள் என்றே தோன்றுகின்றது.  அதன் விளைவோ தமிழகத்தில் சாதிக்கட்சிகளும், சாதிக் கலவரங்களும் வளர்ந்து கொண்டே இருக்கின்றது.  முற்பட்டோருக்கும், பிற்பட்டோருக்கும் இடையே இருந்த இடைவெளி , விரிசல் இப்போது பிற்பட்டோருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே வந்திருக்கிறது.  ஒரு காலை பாதித்திருந்த யானைக்கால் வியாதி மருந்து சாப்பிட, அது வலது காலை விட்டு இடது காலுக்கு வந்த கதை போலாகிவிட்டது. 

       மதசார்பற்ற இந்தியாவாக இனி இந்தியா இருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூச்சலிடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே  இருக்கிறது .அதற்கு  எதிர் குரல் கொடுத்து பலனில்லை எனும் நிலை நம்நாட்டில்.  எனவே, மதத்தையும், சாதியையும் ஒழிக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.  சரிநிகர் சமானமாக பல மதங்கள் உள்ள  நம் நாட்டில் ,  சரிநிகர் சமானமான   பல சாதிகள் என்ற நிலையை உருவாக்குவதைத் தவிர வேறு வழி இல்லை என்றே தோன்றுகிறது. முற்பட்டவர்களை, பிற்பட்டவர்கள் புறக்கணித்து நாங்கள் ஒருவிதத்திலும் பிற்பட்டவர்கள் அல்ல என்று உறுதியாய் இருந்தது இடைவெளியை இல்லாமல் செய்தது போல், பிற்பட்டோரிடம், நாங்கள் ஒருவகையிலும் தாழ்ந்தவர்கள் அல்ல என்று சொல்லி தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வாழவேண்டும்.  தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள்தான் உயர்வு மனப்பான்மை உள்ளோரது சூழ்ச்சிக்குப் பலியாடாகின்றவர்கள்.  “நாமார்க்கும் குடியல்லோம்” என வாழ்ந்தால் மட்டும் போதாது. அப்படி வாழத் தெரியாத வாழ தைரியமில்லாத நம்மைச் சூழ்ந்துள்ள எல்லோருக்கும் உதவி,  அப்படிப்பட்டவர்களது சமூக மற்றும் பொருளாதார நிலையை உயர்த்தி, வரையப்பட்ட ஒரு கோடை அழிக்காமலேயே அதனருகே அதை விட பெரிய கோடாகவோ, அதற்கு சமமான கோடாகவோ மாறி, மாற்றி இன் நிலைக்கு ஒரு விடை காண வேண்டும்.

சாதியை ஒழிக்க சில சமுதாயத்தினர் மட்டும் சாதிப் பெயரை இனியும் உபயோகிக்காமல் இருந்து பயனில்லை. முள்ளை முள்ளால் எடுப்பது போல் - If you want peace be prepared for war, என்பதைப் போல - சாதியை சாதியால் முறியடிக்க, எல்லோரும் அவர்களுக்கு உகந்த ஒரு பெயரை சாதிப் பெயராக உபயோகிப்பது நல்லது என்று தோன்றுகின்றது. அப்படி எல்லோரும் உபயோகித்தால் நாளடைவில் சாதிப் பெயர் என்பது ஒரு சுருக்கொப்பம் (இனிஷியல்) போல ஒரு அடையாளம் ஆக வாய்ப்பு உண்டு. இதற்கு உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்றால், வட இந்தியாவில் பிற்பட்டவர்களான யாதவர்கள், யாதவ் என்று சாதிப் பெயர் வைத்துள்ளது போல் மீணா எனும் தாழ்த்தப்பட்டவர்களும் தங்களது சாதிப் பெயரை தங்கள் பெயருடன் உபயோகின்றார்கள். பெரும்பாலும், அப்படி எல்லோரும் அவரவர்களது சாதியை அவர்களது பெயருடன் இணைத்திருக்கிறார்கள். எனவே, சாதி பார்க்கும் மனிதர்களிடையே நான் இன்ன சாதி என்று சொல்லத் தயங்கவோ, அஞ்சவோ தேவையில்லை.  ஏனென்றால் சாதியை உருவாக்கியது இறைவன் அல்ல. தந்திரசாலிகளான சில சுயநலவாதிகள். அந்த விஷப்பாம்புகளுக்கு பாதுகாவலர்களாய் நிற்பவர்கள், அவர்கள் சமூகத்திற்கு செய்யும் அநீதியைப் பற்றிச் சிந்திப்பதே இல்லை. அதனால் தான் “காலமெல்லாம் வாழும் காதல்” எங்கெல்லாம் எப்போதெல்லாம் எட்டிப்பார்க்கிறதோ அங்கெல்லாம், அப்போதெல்லாம் அவர்கள், நம் நம்பள்கி சொல்வது போல், “யாரவன்/அவள் நம் சாதியா. அப்படின்னா, சம்பந்தம் பேசிக் கல்யாணத்தைப் பேசுவோம். இல்லை வேற சாதின்னா அருவாளை எடுத்துட்டுப் போய் கலவரம் பண்ணி அவங்க கதைய முடிப்போம்” என்று கொந்தளிக்கிறார்கள். 

இப்படிப்பட்டவர்கள் வாழும் நாட்டில் தான், சாதியில்லை என்று உதட்டளவில் மட்டும் சொல்லாமல், சாதி பாராமல் எழிலை தன்னில் ஒரு பாகமாக்கி சாதியை ஒழித்து வாழும் பெருமாள் முருகன், நம் முன்னோர்கள் சாதி பார்த்ததில்லை எனும் உண்மையை தன் மாதொருபாகனில் சொல்லத் துணிந்திருக்கிறார்.  அதற்கு நாங்கள் எழுதிய விமர்சனத்திற்கு வந்த பின்னூட்டங்களுக்கு அவ்வப்போது பதில்கள் கொடுத்திருக்கின்றோம்.  ஆனால், பல பின்னூட்டங்களிலும், பல கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. பல நல்ல  விளக்கங்கள் தரப்பட்டிருந்தன. நிறைகளும், குறைகளும் சுட்டிக்காட்டப்பட்டன.  பெருமாள் முருகனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் நண்பர்கள் மலரன்பனும், வருணும் அருமையாக எழுதியிருந்தார்கள்.  ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல்தான் ஒவ்வொரு பிரச்சினைக்கும் இரு வாத முகங்கள். அவற்றை எல்லாம் எழுதிய நம் பதிவர் நண்பர்கள் எல்லோரும் இடுகையை மட்டுமல்ல, மாதொருபாகனையும் ஆழமாக வாசித்து, உணர்ந்து கருத்துச் சொல்லியிருக்கிறார்கள்.  எனவே, அவையெல்லாம் இவ்விடுகையை மட்டுமல்ல, மாதொருபாகனையும் புரிந்து கொள்ள அவசியாமானவையே.  

இங்கு முக்கியமாக சாதி பற்றிய எங்கள் கருத்தைச் சொல்லவே இந்த இடுகை. சாதி இரண்டொழிய வேறில்லை என்று நம்பும் எங்களுக்கு, சாதி ஒழிய வேண்டும் என்று விரும்பும் எங்களுக்கு மாதொருபாகனை எழுதிய முருகனுக்கு எதிராக நடந்தவை வேதனை தந்தது.  அதே சமயம், அவர் கொங்கு வெள்ளாளரையும், திருச்செங்கோடையும் குறிப்பிட்டதால், அவர்களுக்கு ஏற்பட்ட அவமானம், மற்றும் வேதனையை நினைக்கையிலும் எங்களுக்கு வேதனையே.  எழுத்தாளரான முருகனே தனது படைப்பு கொங்கு வெள்ளாள சமுதாயத்தையும், திருச்செங்கோடில் வாழ்பவரையும் வருத்தியதை எண்ணி வருந்தி ,'' திருச்செங்கோடு மக்களை விட பெரிதல்ல எனது புத்தகங்கள் '', என்று சொல்லிய பின்னும், அவரை மீண்டும் மீண்டும் சொல்லாலும், செயலாலும், துன்புறுத்த முயல்வது மனிதாபிமானமுள்ளவர்கள் செய்யக் கூடாத ஒன்று. சென்னை உயர்நீதி மன்றமும், இது போல் ஒரு எழுத்தாளனின் எழுத்துச் சுதந்திரத்தை, மாவட்டப் பஞ்சாயத்து தன் அதிகாரத்தை உபயோகித்து கவர்வது முறையல்ல என்று சொல்லி இருக்கிறது.  தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமுள்ள பெரும்பான்மையான எழுத்தாளர்கள் பெருமாள் முருகனுக்கு ஆதரவு தெரிவித்து  அவர் தொடர்ந்தும் எழுத வற்புறுத்துகிறார்கள் . மட்டுமல்ல அவர் இதற்கு முன் கொங்குநாட்டவருக்கு சிறப்புச் சேர்க்கும் வகையில் எழுதியவைகளை எல்லாம் மறந்து விடவும் கூடாது.  அது போன்ற பல படைப்புகளை வாசிப்பவர்களது மனம் புண்படாமல் இதற்கு முன் எழுதியது போல் அவரால் இனியும் எழுத முடியும்.  அவர் எழுத வேண்டும்.  எழுதுவார் என்று நம்புவோம். 


பின் குறிப்பு: “1950, 60 களில் பிறந்த கொஞ்சப் பேர்தான், இப்பவும் சாதி பேசி கலவரம் பண்ணிக் காதலைத் தடுக்கறாங்க.  அவனுக செத்தாத்தான் இந்தச் சாதிப் பிரச்சினை ஒழியும்” கயல் படத்தில் நாயகன் சாதி பாராமல் காதலிக்கும் காதலர்களை பிரிக்க முயல்பவர்களைப் பற்றிச் சொல்லும் வார்த்தைகள்தான் இவை.  இதைக் கேட்டதும், அந்த வசனம் எழுதிய கைககளைக் குலுக்கி அவர் வாயில் சர்க்கரை போட வேண்டும் போலிருந்தது.  திரைப்படத்தில் வரும் ஒரு வசனம்தான். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதுதான் என்றாலும், இளைஞர்களில் சிலரேனும் இப்படிச் சிந்திக்கின்றார்கள் என்பதை எண்ணி மகிழத் தோன்றுகின்றது.  இப்படி எல்லோரும் சிந்த்திக்க மாட்டார்களா என்ற ஏக்கமும் வருகின்றது.  எப்படியோ மனதில் சின்னதாக ஒரு நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் தலை தூக்குகின்றது. 

47 கருத்துகள்:

 1. அக்காலத்தில் சாதி என்பதே ஒருவர் செய்யும் தொழில் சார்ந்து அவரை அடையாளப்படுத்தும் நோக்கில் குறிப்பிடப்பட்டதே. இன்றுதான் விவசாயம் உட்பட எல்லா தொழிலையும் நசித்து பெரு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் ஆளவும் நாம் தாழவும் பழகிக்கொண்டோமே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகச் சரியே! ஆனால் அதுவும் இந்தக் கால கட்டத்தில் ஒத்துவராது ஐயா! விவசாயம் என்பது நசிக்கப்பட்டது கொடுமையே அதற்கு அரசும் ஒரு காரணம். தீர்க்கமான சிந்தனைகள் இல்லாத காரணத்தாலும், காந்திய பொருளாதாரக் கொள்கைகளை சிறிதளவேனும் கூட பின்பற்றாத காரணங்களாலும்....

   நீக்கு
 2. இப்போதைக்கு தமிழ் மணம் 1 மட்டும்

  நாங்களெல்லாம் மொய் வச்சப்புட்டுதான் சாப்பிட வருவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹலோ சரிங்க நண்பரே! ஏத்துக்கறோம் உங்கள்....நாங்க உங்க வீட்டுக்கு வருவோம்....சாப்டுட்டு அந்த உணவைப் பற்றிய கருத்தும் சொல்லுவோம்....ஆனா மொய் வைக்காம பல சமயங்கள்ல போயிடறோம் தான்...இல்லைன தாமதமாக உபயோகமில்லாத மொய் வைக்கிறோம் தான்...சரி சரி...இனி அப்ப்படி இல்லாம பாத்துக்கறோம்....மீசைய முறுக்கிக்காதீங்க நண்பரே! ஹஹஹ்

   நீக்கு
 3. சாதி இரண்டொழிய வேறில்லை என்று சொல்லிக் கொண்டே அரசியல் செய்கிறார்கள் இன்னமும்! :(

  பதிலளிநீக்கு
 4. அன்புள்ள அய்யா,

  சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா- படித்தேன்.
  ‘சிவநெறி பின்பற்றி வாழும் சைவ மதத்தினருக்குச் சாதிகள் பாதகமில்லையே என்று கேட்டால்... நல்ல கேள்வி... இந்து மதத்தில் சைவமும் உட்படுத்தப்பட்டதால், சாதி சைவ மதத்தினருக்கும் பாதகமே. ஆரியர்கள் கொண்டுவந்த சாதியை வேரொடு மண்ணாக சாய்க்க வழிகாண்போம்.
  எல்லா மதத்திலும் சாதிகள் இருக்கின்றன... மதம் மாறினாலும் சாதி மாறுவதாக இல்லையே! இந்தியாவில் இருப்பது போன்று அயல்நாடுகளில் இந்தக் கொடுமைகள் இருக்கின்றதா என்பது தெரியவில்லை... ! நிற வெறி இருக்கும் என்றே கருதுகின்றேன்.

  இப்படி இறைவனைக் கூறு போட்டு ஏலம் விட்டதைப் பார்க்கும், இறைவன் பெயரால் நடத்தப்படும் அக்கிரமங்களையும், அநீதிகளையும் கண்டு, பொறுக்க முடியாமல்தான், “மனிதனால் பொறுத்துக் கொள்ள முடியாததை, இறைவனால் எப்படி பொறுத்துக் கொள்ள முடிகிறது......அப்படியானால் இறைவனே இல்லை” என்ற முடிவுக்கே வந்தார் தந்தை பெரியார். மட்டுமல்ல தீண்டாமையை ஒழிக்க சாதி எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தியும், கலப்புத் திருமணங்களை ஊக்குவித்து, ஆதரித்தும் திராவிடர்களை ஒன்றுபடுத்தும் முயற்சியில் ஓரளவு வெற்றியும் கண்டார். ஆனால், எப்படியோ காலப்போக்கில் பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றுபவர்களில் பலரும், பார்ப்பன விரோதத்தையும், நாத்திகத்தையும் மட்டும் உள்வாங்கி, சாதி ஒழிப்பு மற்றும் தீண்டாமை ஒழிப்பை மறந்தே போனார்கள் என்றே தோன்றுகின்றது’ என்பது முற்றிலும் உண்மையே! பெரியாரின் பெயரைச் சொல்கிறார்களே தவிர அவரது கொள்கைகளை சொன்னால் ஓட்டு வங்கி இழக்க நேரிடும் என்று ஒதுங்கி விடுகிறார்கள். பெரியாரின் கட்சித் தலைவர்கள்கூட அவரது கொள்களைப் பேசுவதாக தெரியவில்லை. இருப்பது காப்பாற்றினால் போதும் என்றே எண்ணுகிறார் என்றே எண்ணத்தோன்றுகிறது.
  ‘மாதொருபாகன்’ -பெருமாள் முருகன் என்ற படைப்பாளியின் படைப்புக்கு .... அவரது எழுத்து சுதந்திரத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். வாசகர்கள் அவரவர் கருத்துச் சொல்ல உரிமையிருக்கிறதே தவிர... படைப்பைக் கொல்லுகின்ற செயலில் ஈடுபட... படைப்பாளியை அழிக்கின்ற செயல்வரை செல்லவேண்டியதில்லை.
  ‘சாதியை சாதியால் முறியடிக்க, எல்லோரும் அவர்களுக்கு உகந்த ஒரு பெயரை சாதிப் பெயராக உபயோகிப்பது நல்லது என்று தோன்றுகின்றது’ என்பது பாம்பை அடிக்க வேண்டுமென்றால் கம்புதான் எடுக்கவேண்டுமே தவிர இன்னொரு பாம்பை எடுத்து அடிக்க முற்படக்கூடாது என்றே எண்ணுகிறேன்.
  நாட்டுக்கு நல்ல கருத்துகளைச் சொல்லியிருக்கிறீர்கள்.
  ’ கயல்’ விழி அழகு! விழிப்புணர்வுடன் விழிக்கட்டும்!
  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே! அயல்நாடுகளில் சாதிப் பிரச்சினைகள் இல்லை ஆனால் தாங்கள் சொல்லி இருப்பது போல சில நாடுகளில் சில இடங்களில் சில நேரத்தில் மட்டுமே இன வெறி உண்டு. (இங்கு நம்மை அடுத்துள்ள நாடுகளைக் கணக்கில் சேர்த்துக் கொள்ள வில்லை)

   உங்கள் கருத்துக்கள் யாவும் சரியே...//பாம்பை அடிக்க வேண்டுமென்றால் கம்புதான் எடுக்கவேண்டுமே தவிர இன்னொரு பாம்பை எடுத்து அடிக்க முற்படக்கூடாது// அருமையான எடுத்துக்காட்டு.
   எடிசன் பல்பில் டங்க்ஸ்டன் உஅப்யோகிப்பது வெற்றி காணும் முன் நூற்றுக் கணக்கான பொருட்களை உபயோகித்து பார்த்தாராம். அதில் ஒன்று லேப் க்கிற்கு வந்த ஒருவரது தாடியில் இருந்து பிடுங்கித் தரவைத்த முடியும் உட்படுமாம். என்பது போல் எப்படியாவது சாதியை ஒழிக்க வேண்டுமே எனும் எண்ணத்தில், if you
   want peace be prepared for war “ எனும் பாரடாக்ஸ் நினைவுக்கு வர எழுதிவிட்டோம். ஆனால் அது நோக்கமல்ல. ஸாரி. மன்னிக்கவும். சாதிகளை ஒழிக்க முடியாவிட்டாலும் அதனிடையேயும் நாம் ஒற்றுமையாக வாழ முடியாதா? அதைப் முன்னிருத்தி நடக்கும் அவலங்களைத் தவிர்க்க முடியாதா? என்பதும் ஒரு எண்ணம்....

   மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 5. “1950, 60 களில் பிறந்த கொஞ்சப் பேர்தான், இப்பவும் சாதி பேசி கலவரம் பண்ணிக் காதலைத் தடுக்கறாங்க. அவனுக செத்தாத்தான் இந்தச் சாதிப் பிரச்சினை ஒழியும்”
  ஆஹா இந்த வட்டத்துக்குள்ளே நான் இல்லை தப்பிச்சேன்.

  முதலில் பள்ளியில் ஜாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாடத்தை எதற்காக ? சொல்லிக் கொடுக்கிறார்கள் முதலில் அதை நீக்க வேண்டும்
  அல்லது பள்ளியில் சேர்க்கும்போது எந்தஜாதி என கேட்பதை நிறுத்த வேண்டும்

  ஏன் ? ஆணினம், பெண்ணினம் என குறிப்பிட்டால் போதாதா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹஹஹ! நாங்களும் தப்பித்தோம் ஆனால் வயதினால் அல்ல....எண்ணங்களினால்.

   நல்ல கேள்வி. நாம இங்க தான் கேக்கறோம். அரசிடம் கேட்க யாருக்குத் துணிச்சல்.. பேசுபவர்களும் சாதி பார்ப்பவர்கள் தான். என்ன செய்ய. அதனால் தான் பல நிறங்கள் இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை என்று பீற்றிக் கொள்கின்றோமே...சும்மானாலும், வெத்து வேட்டாக அந்த ஒற்றுமையை சாதியைக் கடந்து நிலை நாட்ட முடியாதா என்ற ஏக்கமே.

   மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 6. நம் நாட்டில் மதத்தை விட ஜாதிதான் எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது. ஜாதியைப் பற்றிய உங்கள் பார்வையையும், பெருமாள் முருகனுக்கு நேர்ந்த சோகத்தைப் பற்றியும் நன்றாகவே சொல்லி இருக்கிறீர்கள். காலம்தான் பதில் சொல்ல வேண்டும். ஏனெனில், எல்லாவற்றிலும் நடந்து வரும் மாற்றம், ஜாதியிலும் ஒருநாள் வந்தே தீரும். அப்போது இன்றைய ஜாதீயவாதிகளைப் பற்றி யாரும் நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள்.
  த.ம.2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஐயா தங்களின் நல்ல கருத்திற்கு. ஆம் சாதியிலும் வர வேண்டும். அப்போது இந்த சாதியாவாதிகள் அடிபட்டுப் போவார்கள்தான். அந்த நாளும் வந்திடாதோ! என்று இருப்போம்...நம் அடுத்த தலை முறையினராவது அதை அனுபவிக்கட்டுமே.

   நீக்கு
 7. சாதிகள் சாகவில்லை என்பதும், அவற்றைச் சாகடிக்க வேண்டும் என்பதும் சரியே! ஆனால், அதற்கு நீங்கள் காட்டும் வழி அபாயகரமானது ஐயா, அம்மணி!

  அவரவர் சாதியை அவரவர் பெயரோடு சேர்த்துக் கொண்டால் சாதி ஒழியும் என்று நீங்கள் கூறியிருப்பது மண்டையைப் பிய்த்துக் கொள்ள வைக்கிறது. இது எப்படி நடக்கும்? வேளா வேளைக்குப் போதுமான நீரூற்றி, காலாகாலத்துக்குத் தேவையான உரம் போட்டு, கண்ணுங் கருத்துமாய் வளர்த்தால் நச்சுச்செடியை எளிதில் அழித்து விடலாம் என்பது போல் இருக்கிறது இது. சாதியை ஒழிக்க வேண்டுமானால், சாதிக்கு இருக்கும் பயன்பாடுகளைத் தவிர்ப்பதுதான் வழியே தவிர, மேற்கொண்டு அதற்கொரு பயன்பாட்டை உருவாக்குவதில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் உள்ளத்திலும், வாழ்க்கை முறையிலும் ஊறிப் போய்விட்ட சாதியை ஒழிப்பது மிகக் கடினமானதுதான்; ஆனால், இயலாதது இல்லை. பெரியார், அண்ணா காலத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சியையும், விழிப்புணர்வையும் தொடர்ந்து நிலைக்கச் செய்திருந்தாலே அவை ஒழிந்திருக்கும். ஆனால், அவர்கள் வழி வந்த கருணாநிதியோ அதையே தனக்குச் சாதமாகப் பயன்படுத்தி, சாதி என்கிற பெயரால் திரண்டிருக்கும் மக்களிடமிருந்து அப்படியே வாக்குகளை அள்ளத் திட்டமிட்டு, சாதி எதிர்ப்பு என்கிற பெயரில் சாதிய அரசியலைத் திட்டமிட்டே வளர்த்தார். அவருக்குப் பின் வந்த இராமதாசும், திருமாவளவனும் அவரையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு சாதியை நேரடியாகவே ஆதரித்துத் தமிழர்களுக்கு எதிரான அந்தப் பிரிவினைவாதத்தைப் பட்டொளி வீசிப் பறக்க வைத்தனர். சாதி ஒழிப்பு முன்னெடுக்கப்பட்டு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு மேலாகியும் இப்படிப்பட்ட கயவர்களால் அது தொடர்ந்து வலுவடைந்திருப்பதால்தான் சாதி ஒழிக்கவே முடியாத ஒன்றோ என்கிற மாயை நம்மிடையே வலுப்பெற்று விட்டதே தவிர, சாதி ஒன்றும் ஒழிக்க முடியாதது இல்லை. உண்மையான அக்கறையோடு ஆட்சியாளர்கள் படிப்படியாக இதற்கென வழிமுறைகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்தினால் கண்டிப்பாக நடக்கும். 'முதல்வன்' படத்தில் 'சாதிப் பெயரைக் குறிப்பிடுவதற்குப் பதிலாக, இருக்கும் நான்கு பிரிவுகளுள் தன் சாதி எந்தப் பிரிவில் வருகிறது என்பதை மட்டும் குறிப்பிட்டால் போதும்' என ஷங்கர் ஓர் அருமையான சிந்தனையைத் தூவியிருப்பார். அப்படிப்பட்ட அடிப்படை முயற்சிகள் கூட இன்னும் மேற்கொள்ளப்படவில்லையே! சாதிச் சங்கங்களை ஒழிப்பது, சாதி அடிப்படையிலான கட்சிகள் நடத்துவது போன்றவற்றைக் கூட இன்னும் தடை செய்யவில்லையே! அவ்வளவு ஏன், சாதி மாநாடுகள் கூட்டவே இங்கு இன்னும் அரசு ஒப்புதல் வழங்கிக் கொண்டுதானே இருக்கிறது? இப்படி மக்களிடையே தொடர்ந்து சாதியை நினைவூட்டும் வகையிலும், சாதி அடிப்படையில் மக்களை ஒருங்கிணைக்கும் செயல்களை ஊக்குவிக்கும் வகையிலும் எல்லாவற்றையும் செய்து கொண்டே, இவற்றுக்கெல்லாம் ஒப்புதல் அளித்துக் கொண்டே பார்ப்பனர்களை மட்டும் திட்டிக் குவித்துக் கொண்டே இருந்தால் சாதி ஒழிந்து விடுமா? முதலில், இப்படிப்பட்ட அடிப்படை நடவடிக்கைகள் அமல்படுத்தப்படட்டும்; அப்புறமும் சாதி உயிரோடு இருந்தால், நீங்கள் கூறும் வழிமுறை பற்றிச் சிந்தித்துப் பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே! நீங்கள் சொல்லி இருக்கும் அந்த அரசியல் வாதிகள் சமூகத்தை நாசம் செய்கின்றார்கள் என்பது உண்மையே! ஆம் அதனால் இதை ஒழிக்கவே முடியாதோ என்றும் தோன்றத்தான் செய்கின்றது. தமிழ் நாட்டில் மட்டுமில்லையே நண்பரே! எல்லா மாநிலங்களிலும் அதுவும் வடக்கே இன்னும் மோசமாகத்தானே இருக்கின்றது. தங்களின் எல்லா கருத்துக்களும் நியாயமானதே. அதை நாங்களும் பேசினோம்....மேலே மணவை அவர்களுக்குச் சொல்லியதுதான்...

   எடிசன் பல்பில் டங்க்ஸ்டன் உஅப்யோகிப்பது வெற்றி காணும் முன் நூற்றுக் கணக்கான பொருட்களை உபயோகித்து பார்த்தாராம். அதில் ஒன்று லேப் க்கிற்கு வந்த ஒருவரது தாடியில் இருந்து பிடுங்கித் தரவைத்த முடியும் உட்படுமாம். என்பது போல் எப்படியாவது சாதியை ஒழிக்க வேண்டுமே எனும் எண்ணத்தில், if you
   want peace be prepared for war “ எனும் பாரடாக்ஸ் நினைவுக்கு வர எழுதிவிட்டோம். ஆனால் அது நோக்கமல்ல. ஸாரி. மன்னித்துவிடுங்கள்.

   சாதிகளை ஒழிக்க முடியாவிட்டாலும் அதனிடையேயும் நாம் ஒற்றுமையாக வாழ முடியாதா? அதைப் முன்னிருத்தி நடக்கும் அவலங்களைத் தவிர்க்க முடியாதா? என்பதும் ஒரு எண்ணம்...கல்வித் துறையிலும் அதேதானே. அதைப் பற்றிய ஒரு அனுபவ இடுகை வரும். கீதாவிடமிருந்து.

   நீங்கள் இறுதியில் சொல்லி இருப்பதை நாங்களும் சொல்லத்தான் செய்கின்றோம். ஏற்கின்றோம் //இப்படி மக்களிடையே தொடர்ந்து சாதியை நினைவூட்டும் வகையிலும், சாதி அடிப்படையில் மக்களை ஒருங்கிணைக்கும் செயல்களை ஊக்குவிக்கும் வகையிலும் எல்லாவற்றையும் செய்து கொண்டே, இவற்றுக்கெல்லாம் ஒப்புதல் அளித்துக் கொண்டே பார்ப்பனர்களை மட்டும் திட்டிக் குவித்துக் கொண்டே இருந்தால் சாதி ஒழிந்து விடுமா?// கயவர்களை ஒடுக்குவது எப்படி அரசியல் தானே விளையாடுகின்றது.

   நீங்கள் அந்த முதல்வன் வசனத்தைச் சொல்லி இருக்கின்றீர்கள் நண்பரே! அது இராஜாஜி சொல்லும் குலக் கல்வி போல் ஆகி விடுமே! அதுவும் சரியானது இல்லையே. அந்த நான்கு பிரிவுகள் என்பது அந்தக் காலத்திலிருந்தே சொல்லப்பட்டது என்றால்.....

   மிகவும் அழகான கருத்து தங்களது கருத்து வழக்கம் போல். மிக்க நன்றி.

   நீக்கு
  2. மன்னிக்க வேண்டும்! நான் இந்தப் பதிவில் கருத்திட்டதையே மறந்து போய்விட்டேன். பதிலுக்கு நன்றி!

   'முதல்வன்' படத்தில் வரும் அந்த யோசனை பலனளிக்காது என்று கூறியிருக்கிறீர்கள். அஃது அப்படித் திசை மாறிப் போய்விடுமா என்பதை நான் சிந்தித்துப் பார்க்கவில்லை. நன்றி! ஆனால், அப்படிப்பட்ட அடிப்படை முயற்சிகள் கூட மேற்கொள்ளப்படவில்லையே, அதற்குள் ஏன் நாம் சாதியை ஒழிக்கவே முடியாதோ என நினைக்க வேண்டும்; ஏன், சாதியை ஒழிக்காமல் அதிலுள்ள தீமைகளை மட்டும் ஒழித்து வாழ்தல் எனும் முடிவுக்கு இறங்கி வர வேண்டும் என்பதே என் கேள்வி. நன்றி!

   நீக்கு
  3. //'முதல்வன்' படத்தில் வரும் அந்த யோசனை பலனளிக்காது என்று கூறியிருக்கிறீர்கள். அஃது அப்படித் திசை மாறிப் போய்விடுமா என்பதை நான் சிந்தித்துப் பார்க்கவில்லை. நன்றி! ஆனால், அப்படிப்பட்ட அடிப்படை முயற்சிகள் கூட மேற்கொள்ளப்படவில்லையே, அதற்குள் ஏன் நாம் சாதியை ஒழிக்கவே முடியாதோ என நினைக்க வேண்டும்; ஏன், சாதியை ஒழிக்காமல் அதிலுள்ள தீமைகளை மட்டும் ஒழித்து வாழ்தல் எனும் முடிவுக்கு இறங்கி வர வேண்டும் என்பதே என் கேள்வி.//

   சாதியை ஒழிக்க பெரியார், அம்பேத்கார் மட்டுமல்ல எத்தனையோ மகாங்கள் எத்தனையோ காலமாக முயன்றும் அது அடிக்க அடிக்க பெரிதாகும் உடும்பைப் போல் நம் சமூகத்தை விட்டுப் போவதாய் இல்லை. முற்பட்டவர்களுக்கும், பிற்பட்டவர்களுக்கும் இடையே இருந்த இடைவெளி, தீண்டாமை, காலப்போக்கில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் அவர்களி பிற்பட்டவர்களாக்கப்பட்ட தாழ்த்தப்படவர்களுக்கும் இடையே வந்துவிட்டது. இதை எல்லாம் ஒழிக்க ஒரு போதும் ஒரு தலைவர் இனி வரப்போவது இல்லை. ஒழிக்க ஏதேனும் வழி உண்டா என்று சிந்திக்கும் போது, ஒரு வேளை இப்படிச் செய்தால் சாதி ஒழியுமோ என்ற எண்ணத்தில் எழுதியதுதான்....அது. இது போன்ற ஏதேனும் காலப்போக்கில் உண்டாகித்தான் சாதி ஒழியும் அப்படியும் சாதி ஒழியாமப் போனால்,சாதியை பற்றி வேணே சிந்திப்பதால் பலனில்ல என்ற நிலையேனும் வந்தால் போதும். தாங்கள் சொன்னதும் நாங்கள் சொல்லுவதும் அதை ஒழிக்க உதவும் யோசனைகள் தான். இது போன்றவை ஒரு வேளை இதைவிடச் சிற்னதவை பலரது மனதிலும் இருக்கலாம். இவற்றில் ஏதெனும் ஒன்று காலத்தால் தேர்ந்தெடுக்கபடும் காலம் சாதியை விழுங்கும். உறுதி. காத்திருப்போம். இடையில் தொற்றிக் கொண்ட இந்த சாதி மனித குலத்தில் இறுது வரை எல்லாம் உயிர் வாழ்ந்து உடன் போகாது...

   மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏன் நீக்கி விட்டீர்கள் ஐயா?! நல்ல கருத்தைத் தானே முன் வைத்திருந்தீர்கள்

   நீக்கு
 9. ஒரு நீண்ட பின்னூட்டம் எழுதி இருந்தேன். என்னவோ தவறு செய்து அது காணாமல் போய் விட்டது. சுருக்கமாக, சாதி உணர்ச்சி நம் ரத்தத்தில் ஊறி இருக்கிறது. சாதீயத்துக்கு எதிராகப் பேசுபவர்கள்பலரும் உதட்டள்வில்தான் உடன் படுகிறார்கள். இதை ஒழித்துக்கட்ட நாம் சிறார்களிடம் இருந்து தொடங்க வேண்டும்.அவர்கள் மனதில் இந்த வேற்றுமை உணர்ச்சி அகல்விக்கப்பட நம் பள்ளிகளில் ஏற்றதாழ்வு பாராமல்
  ( ஏழைபணக்காரன், மேல்ஜாதி கீழ் ஜாதி எல்லா மதத்தினருக்கும்) அனைவருக்கும் ,நாடு முழுவதும் கட்டாய இலவச உணவு, இலவச சீருடை,சமகல்வி என்று கட்டாயப் படுத்தப் படவேண்டும். அப்போது சிறார்கள் உள்ளன்ங்களில் ஏற்றதாழ்வு ஜாதி இன மத வித்தியாசம் தெரியாமல் இருக்கும். அனைவரும் சமம் என்னும் எண்ணம் மேலோங்கினால் சாதிகள் ஒழியும். இதற்கு நம்மிடையே ஒரு benevolent சர்வாதிகாரி தோன்றவேண்டும். என் பதிவுகள் பலவற்றில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன் அறிவு ஜீவிகளுக்கு இது உடன் பாடாக இல்லாமல் இருக்கலாம் நன்கு அலசி எழுதி இருக்கிறீர்கள்.எனக்குத் தெரிந்த தீர்வைக் கூறி இருக்கிறேன் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சார்! தங்களின் கருத்திற்கு‍! benevolent சர்வாதிகாரி " ஒத்து வருமா சார். நாம் எல்லா சுதந்திரத்தையும் இழந்து விட மாட்டோமா...அதை விட இருக்கும் வேற்றுமையிலும் ஒற்றுமை காண விழையலாமே இல்லையோ...

   நீக்கு
 10. ***இப்படிப்பட்டவர்கள் வாழும் நாட்டில் தான், சாதியில்லை என்று உதட்டளவில் மட்டும் சொல்லாமல், சாதி பாராமல் எழிலை தன்னில் ஒரு பாகமாக்கி சாதியை ஒழித்து வாழும் பெருமாள் முருகன், நம் முன்னோர்கள் சாதி பார்த்ததில்லை எனும் உண்மையை தன் மாதொருபாகனில் சொல்லத் துணிந்திருக்கிறார். அதற்கு நாங்கள் எழுதிய விமர்சனத்திற்கு வந்த பின்னூட்டங்களுக்கு அவ்வப்போது பதில்கள் கொடுத்திருக்கின்றோம். ஆனால், பல பின்னூட்டங்களிலும், பல கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. பல விளக்கங்கள் தரப்பட்டிருந்தன. நிறைகளும், குறைகளும் சுட்டிக்காட்டப்பட்டன. பெருமாள் முருகனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் நண்பர்கள் மலரன்பனும், வருணும் அருமையாக எழுதியிருந்தார்கள். ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல்தான் ஒவ்வொரு பிரச்சினைக்கும் இரு வாத முகங்கள். அவற்றை எல்லாம் எழுதிய நம் பதிவர் நண்பர்கள் எல்லோரும் இடுகையை மட்டுமல்ல, மாதொருபாகனையும் ஆழமாக வாசித்து, உணர்ந்து கருத்துச் சொல்லியிருக்கிறார்கள். எனவே, அவையெல்லாம் இவ்விடுகையை மட்டுமல்ல, மாதொருபாகனையும் புரிந்து கொள்ள அவசியாமானவையே. ***

  மன்னிக்கணும் ஐயா!

  "பெருமாள் முருகன் ஒரு பாவமும் அறியாத அப்பாவி" என்றோ, இவர் எழுதலைனா தமிழ் இலக்கியம் செத்துவிடும் என்றோ சொல்வதை ஏற்கலாகாது. அவர் புனைவை வாசிச்சுப் பார்த்தால் சாதியில் ஊறி வளர்ந்த ஒரு ஆள் அவர்னு தெளிவாகத் தெரியும்..

  60-70 வருடங்கள் முன்னால் போய்ப் பார்த்தால் மனிதன் காட்டுமிராண்டியாகத்தான் வாழ்ந்து இருப்பான். இதை கிளறி எடுத்து நாற வைப்பதால் யாருக்கு என்ன பயன்? அப்போ வாழ்ந்த சாதிவெறியர்களெல்லாம் செத்த பிறகு அவர்கள் பிணத்தை தோண்டி எடுத்து முகர்ந்து பார்க்கிறார் இந்த பெ னா மு னா! அபப்டி இவர் செய்ததால் நமது சமூகத்திற்கு சுகாதாரக் கேடுதான் ஏற்பட்டு இருக்கு.

  செத்துப்போன அம்மை வைரஸையும், காலரா பாக்டீரியாவையும் உயிர்ப்பித்தவனை பாராட்டணுமா? இல்லை அவன் முகத்தில் அறையணுமா??


  சாதி இருந்தது. இருக்கும்.சாதிப் பற்று/சாதி வெறி ஒழிவது கடினம் என்பதென்னவோ உண்மைதான். ஆனால் பதிவுலகில் சாதி அடையாளங்களை தவிர்க்கலாம். அதுதான் நாகரீகம். "தமிழர்" என்கிற பொது அடையாளம்தான் உங்களுக்கும் எனக்கும் தேவை.

  -----------------------

  புனைவு புனைவு என்று சொல்லும் மேதாவிகளுக்கு.. பதிவுலகில் புனைவு எழுதிய நரசிம்மன் என்கிற பதிவரை ஆளாளுக்கு ஏறி மிதித்த கதையெல்லாம் உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை..

  புனைவா இருந்தாலும் இழிவுபடுத்தப்பட்டவர்களுக்கு வலிக்கத்தான் செய்யும். அதைப்பற்றி அவர்கள் சொல்லக்கூடாது என்று பேசும் பெரிய மனுஷனுக பொதுவாக அப்புனைவால் எவ்வ்கையில் பாதிக்கப்படாத ஒரு சாதியையோ, ஒரு பாலையோ சேர்ந்தவராகத்தான் இருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை!

  நான் இந்த சாதியைச் சேர்ந்தவன்.. என் சாதியை நான் இழிவுபடுத்துவேன், அது என் உரிமை என்கிற வாதமும் சத்தற்றது. ஏன் என்றால் உன் சாதியில் பத்தினியும் வாழ்கிறாள் தேவடியாளும் வாழ்கிறாள். என் சாதியில் எல்லாரும் தேவடியாளுகதான்னு சொல்லாதே! உன் சாதியில் உள்ள அனைவரும் உன் குடும்பம் போலதான்னு நீ சொல்ல முடியாது.. அதற்கு உனக்கு தகுதியில்லை!

  ***அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா ***

  Then one should avoid using casteist remarks and slurs even in the name of "fiction".

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக அழகாக, ஆழமாக சொல்லியிருக்கின்றீர்கள் நண்பர் வருண் அவர்களே. காயப்பட்டவர்களுக்குத்தான் அந்த வலி தெரியும். அது தெரியாமல் அறியாமையால் பட்ட காயம் என்பதால் வலி குறையாது. அது போல் காயப்படாதவர்கள் சொல்லும் மறப்போம், மன்னிப்போம் எனும் வாத்தைகளும் வலியைக் குறைக்காது. ஆனால், காலம் தான் பதில் சொல்லும்...காலமும், பொறுமையும் தான் எல்லா புண்ணையும் ஆற்ற முடியும்.

   நீக்கு
 11. I am an Arivu Jeevi. I don’t feel ashamed of being so.

  Arivu Jeevi is a person who accepts the realities of life, either bitter or sweet, and constructs his opinions or theories strictly based on such realities. He doesn't build castes in the air. He has his feet firmly rooted in realities of life. He therefore summarily rejects this written by Shri GMB here: அனைவரும் சமம் என்னும் எண்ணம் மேலோங்கினால் சாதிகள் ஒழியும். Because there is no such thing as EQUALITY created by Man or by God. Both the man-made and Nature-made inequality follow us everywhere we go and always. Natural inequalities are called DIFFERENCES. Man vs Woman, Boy vs Girl, differences: linguistic, regional and skin-color. Knowing all these nature made differences, which cannot be wished away at all with any magical wand, and which have to be lived with, the ancient arivi jeevis (the Rishis) created varnas, and the theory changed into castes by latter society. If you abolish the system using your BENEVOLENT DICTATOR's iron fists, it will only morph into another avatar like Ravana's heads. It won’g disappear at all. In other words, inequality is permanent in human society: the natural differences will be exploited by humans.

  The only way is to live with differences amicably while allowing people mobility in society if they desire, using legitimate means, to change their circumstances of life. The people in authority should facilitate the process for individuals or groups by making suitable laws. The Benevolent Dictator envisaged by Shri GM Balasubramanian, should ensure that there is unity in diversity and all persons, irrespective of the differences, the physically disabled, the sexually disabled, the low caste disabled, the circumstances-disabled, becoming able to achieve a life of dignity: possible if the dictator should put down with iron hands the cunning, crafty and criminal-minded members of society who exploit the ineradicable natural and man-made differences for their own welfare by calling one sections untouchable and eliminating opportunity of life to them. Frame laws and enforce them to outwit the exploiters and help the people who cannot help themselves.

  To sum up, inequalities in whichever form, either negative or positive, CANNNOT BE ERADICATED AT ALL. No human has the power to eradicate. Still, it is in our hands to ensure that the ineradicable differences do not become stumbling blocks to get dignified life for every one of us.

  All things bright and beautiful,
  All creatures great and small,
  All things wise and wonderful,
  The Lord God made them all

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனிகளான நம் முன்னோர்கள் குறிப்பிட்ட பிரிவுக்குள் (வர்ணங்கள்), கிரேக்க அறிஞர்களான சாக்ரடிஸ், ப்ளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்றவர்கள் சொன்ன, ரஸ, கப, வாத பித்த அதிகமுள்ளவர்களை எப்படி அவர்கள் திறமைக்கு ஏற்ப பணிகளை அவர்களுக்குக் கொடுத்து அவர்களை சமூகத்திற்கு பயனுள்ளவர்களாக்கலாம் என்பதை மனதில் கொண்டுதான் சொல்லியிருக்கின்றார்கள். ரஸ உடலமைப்புக் கொண்டவர்களுக்கு, பிறக்கும் குழந்தைகள் அது அதிகமாகவோ இல்லை வாத, பித்த, கபம் அதிகமாக உள்ள உடலமைப்பு கொண்டவர்களாகவும் பிறக்கலாம். ஆனால், அதை நிலையான ஒன்றாக்கி, வர்ணம் என்ற பெயரில் 4 வர்ணப் பிரிவுகள் என்றாக சில சுயநலக்காரர்கள் ஏற்படுத்தியவையே. இதை அறிந்தும், எப்படியோ போகட்டும் நடந்தது நடந்து விட்டது அப்படியே தொடரட்டும் என்று சொல்ல ஏனோ மனம் வரவில்லை நண்பர் மலரன்பன் அவர்களே. கறுத்த, சாம்பல் நிறப் பூனைகளுக்கு நாமெல்லாம் சமமெ என்கின்ற உணர்வு வந்தால் போதும் நீங்கள் சொல்வது போல்...
   மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 12. சாதிகளின் ஆதிக்கம் முன் எப்போதையும் விட இப்போதுதான் உச்சகட்டத்தில் இருக்கிறது ,விரைவில் இதற்கு சுபம் போடும் காலகட்டம் நெருங்கிக் கொண்டு தான் இருக்கிறது ,அடுத்த தலைமுறையில் இந்த கொடுமைகள் இருக்காது !
  த ம 3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதென்னமோ க்மிக்வும் சரியே பகவான் ஜி! முன்னை விட இப்போதுதான் இன்னும் அதிகமாகி உள்ளதாகத் தெரிகின்றது...வேதனைதான்...

   நீக்கு
 13. பள்ளியில் சாதிகள் இல்லையடி பாப்பன்னு பாடம் நடத்துறோம்...
  ஆனா சேரும் போது என்ன சாதியின்னு எழுதலைன்னா சேர்ப்பாங்களா?
  சாதி ஒழிந்தாலன்றி இந்தப் பிரச்சினைகள் ஒழியாது.

  பதிலளிநீக்கு
 14. ****The Lord God made them all***

  Really? Never thought of the Lord ever!

  Now the debate is becoming very interesting!

  So. your Lord created caste system? He let some human beings to insult some other human beings based on who his/her parents are? Lord instructed some human beings to discriminate one another based on his caste which was created by "Him"?!!

  He instructed you and per Murugan to remind us about "caste system" as own creation, I guess?
  I am learning something new here after all these years.

  Can I have word with the Lord? Or he will only listen to idiots? Ask him to come and respond me here in this blog.

  பதிலளிநீக்கு
 15. சாதிகள் இல்லையடி பாப்பா என்பது பாட புத்தகத்தில் மட்டும் இருந்து பயனில்லையே.
  பள்ளிச் சேர்க்கையின்போதும், வேலை வாய்ப்பின் போதும் சாதிகளை கேட்காவிட்டால்,
  சாதி தானே ஒழியும்
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 50 வருடங்களாகத்தான் இட ஒதுக்கீட்டிற்காக சாதி சான்றிதழ்களில் எழுத பள்ளிகளில் கேட்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதற்கு முன் என்ன நம்நாடு சமத்துவ பூமியா ? இப்போது தீண்டாமை பண்ணினால் எதிர்க்கும் துணிவு இருக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் தீண்டாமையை ஏற்றுக்கொண்டு வாழ்ந்ததால் சண்டை சச்சரவு இல்லை. இப்படி தாம் நடாத்தப்படுகிறோமேன்று தெரியாமலே அல்லது தெரிந்தடங்கி வாழ்ந்தவர்களுக்காகவே //புலையருக்கும் விடுதலை! பரவ ரோடு குறவ ருக்கும் மறவ ருக்கும் விடுதலை!.. என்று பாடினார் - அதாவது சுதந்திர நாட்டில் சமத்துவம் வருமென்று. வந்ததா? வரவில்லையென்பதால்தானே துளசிதரன் பதிவு எழுதிக்கொண்டிருக்கிறார்?


   ஆக, பள்ளிகளில் சாதிகள் கேட்டதாலே சாதிகள் அழுந்துகின்றன. கேட்காவிட்டால் சாதிகள் ஒழிந்துவிடும் என்பதற்கு ஆதரவான வரலாற்று உண்மைகளில.

   நீக்கு
  2. மிக்க நன்றி கரந்தையாரே! நீங்கள் சொல்லுவது ஒரு விதத்தில் சரிதான். அது தொடக்கமாக இருந்தால் நல்லதுதான். ஆனால் அது மட்டும் போதாதே...இன்னும் பல விஷயங்களில் மாற்றங்கள் வந்தால் தான் நடக்கும். அது படித்தவர்களிடையே கூட இருக்கும் போது சாதாரண மூட நம்பிக்கைகளில் பற்றி இருக்கும் பாமர மக்களை எப்படி எதிர்ப்பார்க்க முடியும். பல வருடங்கள் எடுக்கலாம்...மிக்க நன்றி நண்பரெ!

   நீக்கு
 16. பதில்கள்
  1. ஓர் கேள்வி. ஆண் - பெண் என்ற வேறுபாடு பிறப்பிலிருந்து இறப்புவரைக்கும் அழிக்க முடியாதது. மூன்றாம் பாலினத்தை யான் கதைக்கவில்லை.

   ஆனால் இவ்வேறுபாட்டிற்கு ஏன் சாதி என்ற பெயரிடுகிறீர்கள்? சாதி என்பது பொதுப்பெயர். இருபாலரையும் சேர்த்தே குறிக்கும். இல்லையா?

   எனவே வெறும் இயற்கை வேறுபாடு என்று சொன்னால் போதாதா?

   நீக்கு
 17. //He doesn't build castes in the air//

  castles, not castes.

  Varun! The Lord God has made only natural differences like Man, Women, places of our births, one in cold country, and one, in equable country, and one in hottest country. The geopraphy leads to topographical differences, which lead different plants and animals, our lifestyles, and we take on the differences unconsciously, physically and mentally.

  Such differences are God-made. Add to this, biological differences that lead to different types of personalities. I am what I am; and you are what you are - that is due to the genes you and I have inherited. For e.g you are intelligent and I am a duffer - due to the genes our respective parents have passed to us! ;-( I don't complain against God. I accept the difference. All that I want is that the State should control you from exploiting my nincompoopery to your advantage to abuse me in public fora :-( Benevolent dictator should come to my rescue !

  All these are God made that cannot be changed. If you are a non-believer, you can substitute the word Lord or God with the word Nature. The inherent characteristics of humans and the other natural differences led to the theory of varnas. Up to this, there is no room for complain. The theory was abused or exploited by some and this can be corrected by the State or the Benevolent Dictator. Therefore, God didn't create castes, nor varnas.

  God won't come to reply to your Questions because he has endowed already with power to search for the answers. You should use it, He would desire.Why should He do your work? Think hard and you will get the answers, He would say.

  Murugan was already discussed. Not again.

  பதிலளிநீக்கு
 18. இந்த முறை எனக்கு பல முரணான கருத்துக்கள் இந்த பதிவில் தோன்றுகிறதே சகாஸ்:(( மதம் மாறியவர்களுக்கு சாதித் தொல்லை இல்லையா?? அப்படித் தோன்றுகின்றது என்றால் நீங்கள் சாதிக்கொடுமை நிலவுகிற கிராமப்புறங்களின் பக்கம் வரவே இல்லை என்று தான் பொருள். ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள். என் பிரியத்திற்குரிய மாணவன் ஒருவன் என்னை சந்திக்க என் வீட்டிற்கு வந்திருந்தான். அவன் தாத்தா காலத்தில் கிறிஸ்துவத்துக்கு மாறிய குடும்பத்தை சார்ந்தவன். அவன் சென்ற பின் என் அண்டை வீடுகார தாத்தா, "அம்மா இப்போ வந்துட்டு போனானே ஒரு சின்ன பையன், அவன் நம்ம தெருவில பார்த்த மாதிரி இல்லையே " என்றார். நான் அவன் பேரை சொல்லிவிட்டு, இன்னார் மகன், இந்த தெருவில் இருக்கிறான் என சொன்னது தான் தாமதம். ஒ! ---- பய குடும்பத்தில , இப்போ இங்கிலீஷ் ல பேரு வச்சுக்கிறாங்களா?? என்றாரே பார்க்கணும். எனக்கு கண் கலங்கிவிட்டது. வயதான மனிதரை இனி திருத்தி என்ன ஆகப்போகுது. பெரியார் அப்போதும் அம்பேத்கர் எடுத்த முடிவு தவறென்று அவரிடமே கூறியிருக்கிறார். சாமான்யன் சாம் அண்ணா வின் பதிவை பாருங்கள்.


  அப்புறம் இன்னொரு விஷயம். சகாஸ் இப்படி சொல்வதால் மன்னியுங்கள். வடநாட்டு முட்டாள்கள் இன்னும் சாதியை கட்டிக்கொண்டு தொங்கும் மூடர்கள். நம் தமிழகத்தின் அரசு அலுவலங்களை போல இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இப்படி எல்லோருக்கும் வேலைவாய்ப்பு கிட்டியிருக்கிறதா ? அது பெரியாரின் சாதனை. அவர் வழிவந்த திராவிட கட்சிகள் செய்த ஒரே நல்ல காரியம். ரொம்ப கஷ்டப்பட்டு நாம சாதிய இந்த அளவு ஒழித்திருகிறோம். அந்த முட்டாள்களை பார்த்து நாமும் பேருக்கு பின் சாதி சேர்ந்துகொள்வதென்பது பரமபதத்தில் பாம்பு தீண்டி தொடக்க நிலைக்கு போவதற்கு சமம். தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயொ அதல்ல...வட இந்தியாவில் கூடுதல் என்பது நன்றாகவே தெரியும் அதுவும் பீஹார், உத்தர்பிரதேஷ், ஒரிசா, ராஜஸ்தான், மஹாராஷ்ட்ரா எல்லாம் மிகவும் மோசம் ....வெட்டும் கொலைகளும் நடந்த கிராமங்களும் தெரியும் சகோதரி.

   நான் மதுரையில் பி.ஏ படித்துக் கொண்டிருந்த போத் எங்கள் ஹாஸ்டலில் சாதிக் கலவரம் ஏற்பட்டு என் நல்ல நண்பர்களை எல்லாம் இழக்க வேண்டியதாகியது. என் நிறம் (வேறொண்ணும் இல்லைங்க வெள்ளை நிறம்) என்னை ஏதோ ஒரு சாதி என்று அவர்களாகக் கற்பனை செய்து கொண்டு என்னை என் மற்ற அருமையான நண்பர்களிடமிருந்து பிரித்து சேரவே முடியாமல் ஆகிப் போனது, இன்னும் என் மனதில் ஆழ்ந்த வடுவாக இருக்கின்றது. அவர்களில் ஒருவருடன் இப்போது முக நூலில் நண்பராக இருந்தாலும், என் வடு இன்னும் ஆறவில்லை. எப்படி என் மனம் துடித்தது என்று எனக்கு மட்டுமே தெரியும். அந்தக் கலவரம் ஏற்படும் முன் எங்கள் சாதி பேசப்படவில்லையே. அதைப் பற்றி கவலை இல்லாமல், அன்புடந்தானே பழகி வந்தோம். அப்படி இருக்க அதே போன்று சாதியை ஒழிக்க முடியய்வில்லை என்றாலும் ஒற்றுமையாக ஏற்றுக் கொண்டு வாழ முடியாதா என்பதுதான் ஆதங்கம்.

   ஐயோ சகோதரி! அவை எல்லாம் ஏதோ ஒரு விதத்தில் ஒழிந்து விடாதா என்று தான் மேலே இருவருக்கு எழுதியது போல...." if you
   want peace be prepared for war “ எனும் பாரடாக்ஸ் நினைவுக்கு வர எழுதிவிட்டோம். ஆனால் அது நோக்கமல்ல. ஸாரி. மன்னித்துவிடுங்கள் சகோதரி! தமிழ் நாட்டில் பெரியார் கொண்டு வந்ததை எப்போதுமே பெருமையாக நினைப்பவன்... இப்போது அது பிறழ்ந்து போகின்றதே என்ற ஒரு வருத்தம்தான்....எத்தனை தற்கொலைகள்....சாதிக் கொலைகள்......

   இல்லை நிச்சயமாக நீங்கள் தவறாகச் சொல்ல வில்லை சகோதரி!

   நீக்கு
  2. சகோதரி நம்ம ஊர்ல நிறத்துக்கு எல்லாம் கூட சாதி வைக்கிறாங்களே ! இருங்க கீதாவின் ஒரு பதிவு வரும்....அவர், மற்றும் அவரது மகனின் அனுபவப் பதிவு....

   நீக்கு
 19. சொல்ல மறந்துவிட்டேன். தலைப்பு அட்டகாசம்:)

  பதிலளிநீக்கு
 20. ****God won't come to reply to your Questions because he has endowed already with power to search for the answers. You should use it, He would desire.Why should He do your work? Think hard and you will get the answers, He would say.***

  This is hilarious! ROTFL

  Let me get this "God theory" correctly..

  God will be given credit if A R Rahman wins an OSCAR!

  God WILL NOT BE given credit for the disappearance of MH370 or when a pedophile abuses a child!

  So, what we learn here is "God" exists only in human's imagination. "It" does not exist in the real world.

  ****The Lord God made them all****

  So, DON'T EVER BRING up "your imagination" in any discussion in order to justify any nonsense going on in the ignorant world.

  பதிலளிநீக்கு
 21. பொருளாதார நிலை மேம்பட்டால் சாதி ஒழியும் என்பதால்தான் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இந்த இட ஒதுக்கீட்டினால் உண்மையான ஏழைகள் பயன் பெறுவதில்லை. இதனை அந்த சாதியில் உள்ள வசதியானவர்களே அனுபவிக்கிறார்கள். இட ஒதுக்கீட்டினால் பலன் பெற்றவர்கள் தங்கள் இனத்தில் உள்ள மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்கவேண்டும் . கோடி கோடி யாக பணம் உள்ள அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் கூட மருத்துவம் பொறியியல் படிப்பில் என்று தங்கள் குடும்பத்திற்கு சலுகைகளை பெற்றுக் கொள்கிறார்கள். முற்பட்ட இனத்தவர்கள் பட்டியலில் ஒரு சதவீதமாவது இருப்பார்களா என்று தெரியவில்லை. பிராம்மணர் அல்லாத FORWARD இனத்தை சேர்ந்தவர்கள் கூட தங்களது உட்பிரிவில் உள்ள பிற்படுத்தப்பட்ட இனத்தை சேர்ந்தவராக சான்று பெற்று பெற்று விடுகிறார்கள். அதனால் பின் தங்கிய இனத்தவரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது . சான்றில் ஒரு சாதியும் சொல்லிக் கொள்வது வேறொரு சாதியுமாக இருக்கிறது அதனால் யாருக்கு அதன் பயன் கிடைக்கவேண்டுமோ அவருக்கு பலன் கிடைப்பதில்லை. இந்த நிலையில் சாதி ஒழிப்பு எந்த அளவிற்கு சாத்தியம் என்று தெரியவில்லை.
  இதில் நான் கவனித்த இன்னொரு விஷயம் கலப்பு திருமணங்கள் . பெரும்பாலும் SC ST,BC MBC இனத்தில் உள்ள ஆண்கள் மட்டுமே தங்களை விட மேல்நிலையில் உள்ள இனத்து பெண்களை திருமணம் செய்து கொள்கிறார்கள். மாறாக இவ்வினத்தில் உள்ள பெண்களுக்கு மேல் சாதி ஆண்களோடு நடக்கும் கலப்பு திருமணங்கள் மிகக் குறைவாகவே இருப்பதாக கருதுகிறேன்.
  காலம் மட்டுமே இவற்றை மாற்றக் கூடிய சக்தி படைத்தது . விரைவில் மாறும் என்று நம்புவோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே! மிக மிக உண்மை! உண்மை! சரியான கருத்து! இதையும் இதில் சொல்ல விழைந்தோம். ஆனால் இதை கீதா சொல்லுவார் ஒரு பதிவாக என்பதால் அதுவும் அனுபவப் பதிவாக....சொல்லுவார் என்பதால் இதை விட்டுவிட்டோம்....நீங்கள் சொல்லி இருக்கும் அனைத்துக் கருத்துக்களும் எழுதி வைத்திருக்கின்றோம்.

   அழகான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. நண்பரே!

   நீக்கு
 22. மதம் மாறினாலும் சாதியைக் கட்டிக்கொண்டு அழுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்..ஏன் என் கொள்ளுத்தாத்தா தன் பெயரின் பின்னால் சாதிப்பெயர் சேர்ந்து தான் இருக்கும்..அவருடைய சகோதரர்கள், அவர் வயதோத்தவர்களும். என் தாத்தா அதை விட்டு விட்டார், ஆனாலும் அவரின் ஒன்றுவிட்ட சகோதரர்கள் இன்னும் சாதிப் பெயரைச் சேர்த்துத் தான் சொல்கிறார்கள். சில குடும்பங்கள் விட்டுவிட்டாலும் பல குடும்பங்களில் சாதி இருக்கத்தான் செய்கிறது..ஆக, மதம் கடந்து சாதி இருக்கிறது..கீதா அவர்களின் பதிவைப் படித்துவிட்டு இங்கு வந்தேன்..
  வடஇந்தியர்கள் சாதிப் பெயரை சர்நேமாக வைத்திருக்கிறார்கள்...இங்கு லாஸ்ட் நேம் கேட்கும்பொழுது தந்தை பெயர் தான் இனிசியலில் இருந்து விரிவுப் படுத்திக் கொடுக்கிறோம்..இங்குள்ளவர்கள் உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் வெவ்வேறு லாஸ்ட் நேமா என்று கேட்பார்கள்? நான் அவர்களிடம் சொல்வது, என் மாநிலத்தில் சாதிப்பெயரை விட்டுவிட்டதால் சர்நேம் இல்லை என்றுதான்.. ஆனாலும் இன்னும் முழுதாக நீங்கவில்லையே..

  பதிலளிநீக்கு