வியாழன், 29 ஜனவரி, 2015

நான்கு சுவர்களுக்குள் தீர்க்கப்பட வேண்டியவற்றை நாற்சந்திக்குக் கொண்டுவருவது முறையா


நண்பர் மதுரைத் தமிழன் அவர்கள், சில தினங்களுக்கு முன் தன் வலைத்தளத்தில், “அவள் விகடனில்” வெளியான ஆ! அமெரிக்க மாப்பிள்ளை! அக்கரையிலிருந்து ஒர் அலறல்” என்ற ஒரு கட்டுரையை பகிர்ந்திருந்தார்.  அதற்கு வந்திருந்த எதிர்வினைக் கருத்துக்களையும் பகிர்ந்திருந்தார். பகிர்வுக்கு, ஒரு பின்னூட்டம் இடலாம் என்று சென்ற போது, நிறைய எண்ணங்கள் வந்து அலைமோதியதால், பின்னூட்டம் பெரிதாகி விடும் என்பதால் இங்கு பதிவாக இடுகின்றோம்.

இந்தப் போட்டி உலகில், பத்திரிகைகள், செய்தியாளர்கள் எல்லோருமே பரபரப்புச் செய்தி வெளியிட இயங்குவது என்பது, நிதர்சனமான உண்மை, என்பது பல சமயங்களில் நிரூபணமாகின்றதுபெண் கொடுமை என்பது எல்லா சமூகத்திலும், உலகம் முழுவதும் ஏதோ ஒரு விதத்தில் நடக்கத்தான் செய்கின்றதுஅது அமெரிக்கா செல்லும் இந்தியப் பெண்களுக்கு மட்டும் என்று இல்லை. அப்படிப் பார்த்தால் இந்தியப் பெண்கள் மணமானபின், உலகின் பல நாடுகளில் வசிக்கின்றார்கள். நிற்க,

இந்தியாவில் நடக்காத கொடுமைகளா? பலர் அதை வெளியில் சொல்லுவதில்லை, சட்டத்தின் முன் கொண்டு வருவதில்லை. அப்படியே கொண்டு வந்தாலும், உலகம் முழுவதுமே, சிற்றறிவுக்கு எட்டிய வரை பெண்களுக்கு ஆதரவாகத்தான் சட்டம் இயங்குகின்றதுஎப்படிப்பட்ட பெண்ணாக இருந்தாலும். பெண் பத்திரிகைகளும் சரி, பிற பத்திரிகைகளும் சரி,  ஊடகங்களும் சரி, பெரும்பாலும்/எப்பொழுதுமே பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றித்தான் பேசுகின்றன.  ஆண்களுக்கு நடக்கும் இன்னல்களைப் பற்றி அவர்களது கோணத்தில் எந்த சமுதாயமும் ஆராய்வதாகத் தெரியவில்லை.  இருக்கலாம் ஆனால் மிகச் சிறிய அளவே.

ஆண்களை வஞ்சிக்கும் பெண்கள், பணத்திற்காகக் கணவனுடன் வாழும் பெண்கள், பணத்திற்காக, கணவன் செய்யாத கொடுமைகளை எல்லாம் சொல்லி, பெண்களுக்கு ஆதரவாக இருக்கும் சட்டத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி விவாகரத்து கோரும் பெண்கள், குடும்பத்தில், தனது எதிர்மறையான ஆதிக்கத்தினால் கணவனை, அவரது தாய், சகோதர, சகோதரிகளிடமிருந்து பிரிக்கும் பெண்கள், மனைவி என்ற பெயரில்/உரிமையில் அதீத பொசசிவ்னெஸினால்/அதீத ஆதிக்கத்தினால், தங்கள் கணவரின் முன்னேற்றங்களுக்குத் தடையாக இருக்கும் பெண்கள், என்று ஒரு ஆணுக்கு நேரும் இன்னல்களைப் பற்றி பேசுவதில்லை. பல ஆண்கள் சமரசம் (காம்ப்ரமைஸ்) என்று – சமரசம் என்பது அவசியமே,  ஆனால், அது வரம்பை மீறிச் சென்று ஒரு ஆணின் எதிர்காலமும், அவனது ஆசைகளும், குறிக்கோள்களும் தடைபட்டு ஆழ்மனதில் உறங்கிப் போகும் அளவிற்கு சிலபெண்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.  
ஏன் இந்த சமூகம் பெண்களை மட்டுமே முன்னிருத்திப் பேசுகின்றது? ஆண்களைப் பற்றி, அவர்களின் துன்பங்களைப் பற்றிப் பேசுவதில்லை?

அவள் விகடன் கட்டுரை, நடு நிலைமையானக் கட்டுரை என்று சொல்வதற்கில்லைபெண்கள் பத்திரிகை எல்லாமே பெண்களுக்கு ஆதரவு என்று சொல்லிக் கொண்டு, குரல் கொடுக்கின்றோம் என்று சொல்லிக் கொண்டுஒரு நிகழ்வை வைத்துக் கொண்டு ஒட்டு மொத்தமாகக் குற்றம் சொல்லுவது வாடிக்கையாகி விட்டதுஇது போன்ற செய்திகளை வெளியிடுவது அதிகமாகி உள்ளதுஇரு பாலாரிடையேயும் +, - இருக்கத்தான் செய்கின்றதுஅதைக் கடந்து வருவது அவரவர் கையில் தான் இருக்கின்றது. அல்லாமல் அதைப் பொதுவாக வைத்து அபிப்ராயம் சொல்லுவது என்பது ஆரோக்கியமற்ற சூழலையும், ஆண், பெண் உறவுகள் நல்ல விதத்தில் அமையாமல் போகவும் வாய்ப்பு உள்ளதுஇது பெண்கள் மத்தியிலும், பெற்றோர் மத்தியிலும், முன்னரே தீர்மானிக்கப்பட்ட (ப்ரி டிட்டெர்மின்ட்) எண்ணத்துடன் குடும்ப வாழ்வில் அடியெடுத்து வைக்கவும் தூண்டுவதாக உள்ளது.

முக்கியமாகச் சொல்ல விழைவது. சற்று அறிவியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும்: ஆணிற்கும், பெண்ணிற்கும் இடையில், எந்த வகையிலும் உயர்வு, தாழ்வு என்பது கிடையாது. இருவரும் சமமே. வேறுபடுவது என்பது ஆணிற்கும், பெண்ணிற்கும் பிறப்பு முதலே மூளையில் ஏற்படும் வேதியியல் நிகழ்வுகளும், ஆணும், பெண்ணும் பருவ வயதை அடையும் போது அவர்களது மூளையில் ஏற்படும் வேதியியல் ரசாயன மாற்றங்களினாலும், ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றங்கள் ஏற்படுவதால்தான். அதனால் தான் பெண்களின் உணர்வுகளுக்கும், ஆண்களின் உணர்வுகளுக்கும் வித்தியாசம் ஏற்படுகின்றது. பெரும்பான்மையான பெண்கள், ஆண்களை விட வெகு எளிதாகத் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த முடிவதும் இதனால்தான். ஒரு ஆணின், வாழ்க்கையைக் குறித்த கோணமும், பார்வையும், பெண்ணின் பார்வையும் வித்தியாசப்படுகின்றது. ஒரே விதமானப் பிரச்சினைகளை அணுகும் முறையிலும் இரு பாலாருக்கும் வித்தியாசம் உண்டு. அது போலத்தான் தீர்வுகளிலும் வித்தியாசம் ஏற்படும். ஆணின் அணுகு முறையும், பெண்ணின் அணுகு முறையும் வித்தியாசப்படும் – உணர்வுகளின் அடிப்படையில். பெரும்பான்மையான பெண்கள் எளிதாக உணர்ச்சிவசப்படுவார்கள். ஆண்களும் உணர்ச்சிவசப்படுபவர்கள்தான் என்றாலும் விகித அளவு குறைவே. இது தான் கணவன், மனைவி இருவருக்குள்ளும் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணங்கள்.

இந்த மாற்றங்களை ஒரு நேர் கோடாகக் கொண்டால், கணவனும், மனைவியும் எந்தப் புள்ளியில் சந்திக்கின்றார்கள் என்பதைப் பொருத்துதான் பிரச்சினைகள் வளர்வதும், வளராமல் இருப்பதும். இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு வாழ்ந்துவிட்டால் பிரச்சினைகளே இல்லையே. இதில் ஈகோ என்பது எட்டிப்பார்க்கும் போதுதானே பிரச்சினைகள் வலுக்கின்றன.  இரு மாடுகள் கட்டப்பட்ட மாட்டு வண்டி சீரிய நிலையில் செல்ல வேண்டும் என்றால் இரு மாடுகளும் சமமாக நடந்தால்தான் வண்டியும் சம நிலையில் ஓடும். அது போலத்தான் குடும்பமும்.

எதற்காக இது இங்கு என்று நீங்கள் வினா எழுப்புவது தெரிகின்றது. வருகின்றேன்.

இவை எல்லாம் உடகங்களும் அறியாமல் இல்லை. எல்லா ஊடகங்களிலும் ஏதாவது ஒரு உளவியல் மருத்துவர் அல்லது ஆலோசகர் இது குறித்துப் பேசத்தான் செய்கின்றார். அப்படி இருக்க, எதற்காக இப்படிப் பத்திரிகையில், ஊடகங்களில் குடும்ப விஷயங்களை அம்பலப் படுத்த வேண்டும். அலச வேண்டும்? தொலைக்காட்சிகளிலும், கதையல்ல நிஜம், சொல்லுவதெல்லாம் உண்மை, போன்ற நிகழ்ச்சிகள், குடும்ப விஷயங்களை, உறுப்பினர்களை அழைத்து வந்து, இந்த உலகம் முழுக்க அவர்கள் வீட்டு அவலங்கள் காட்சிப்படுத்த வேண்டும்? எதற்காக ஊடகங்கள் இது போன்ற நிகழ்வுகளை வெளியிட வேண்டும் (பெண்கள் பத்திரிகைகள்) தொலைக்காட்சிகள் காட்சிப்படுத்த வேண்டும்? இதனை ஊக்குவிக்க வேண்டும்? வெறும் விளம்பரமே! டிஆர்பி ரேட் ஏற்றவும், பத்திரிகைகள் பரபரப்பாக விற்கப்படவும் செய்யப்படுபவையே. தொலைக்காட்சியில் வருபவர்கள் பெரும்பான்மையோர் மிகவும் சாதாரணமான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், பாமர மக்கள். அவர்களுக்கு இதைப் பற்றிய ஒரு பார்வை இல்லை எனலாம். விழிப்புணர்வு இல்லை. இவர்களை ஊடகங்கள் தங்களுக்குச் சாதகமாக உபயோகபடுத்துகின்றன என்றுதான் தோன்றுகின்றது. இதனால் இவர்களது பிரச்சினைகள் பெரிதாகின்றதே அல்லாமல் தீர்வு காண முடியுமா? படித்தவர்களும், பத்திரிகைகளுக்கு, இது போன்று தங்கள் குடும்ப பிரச்சினைகளைப் பேசுவது அத்தனை ஆரோக்கியமானது அல்ல. விரிசல் அதிகமாகுமே அல்லாமல் புரிதல், சேர்தலுக்கான சாத்யக் கூறுகள் இருப்பதாகத் தெரியவில்லை. சுய மரியாதையை இழப்பதாகத்தான் உள்ளது.

கணவன், மனைவிக்குள் பிரச்சினை, மாமியார், மருமகள் பிரச்சினை என்பது சமுதாயப் பிரச்சினை என்று கொள்வதற்கல்ல. அது குடும்பப் பிரச்சினை.  நியாயம் வேண்டும் என்றால், குடும்ப உறுப்பினர்களுடன் பேசி இருதரப்பு நியாங்களையும், உணர்வுகளையும் முன் வைத்து சமரச முடிவுக்கு வரலாம். தீர்வு காண விழையலா.  இல்லையேல், குடும்ப நல, உளவியல் ஆலோசகர்களை அணுகலாம்.  இப்போது, பாமர மக்களுக்கும் உதவும் வகையில் ஆலோசகர்கள் இருக்கின்றார்கள். இல்லையேல், காவல் நிலையத்தை அணுகலாம். சட்ட ரீதியாகச் செல்லலாம். அதை விட்டு இப்படி ஊடகங்கள் வாயிலாக ஒரு குடும்பப் பிரச்சினை/விஷயங்கள் அம்பலமாவது ஆரோக்கியமானது அல்ல. குடும்பப் பிரச்சினைகள் நான்கு சுவர்களுக்கு வெளியில் வரும் போது அவை ஊதப்பட்டு, ஊதப்பட்டு, பூதாகாரமாக ஊதிப் போகுமே அல்லாமல், பலூன் வெடிப்பது போல் வெடிக்குமே அல்லாமல் தீர்வு கிடைக்காது.

ஒன்று மட்டும் புரிகின்றது. சமுதாயம் ஆரோக்கியமாக இல்லாமல் விஷமாகிப் போவது போல் உள்ளது. நாம் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கலாமே! சொல்லுங்கள், நம் வீட்டுப் பிரச்சினைகள் அடுத்த வீட்டிற்குத் தெரிவதையே விரும்பாத நாம், நாற்சந்தியில் வெளியாவதை விரும்புவோமா? (கீதா வாயை மூடிப் பேச வேண்டுமோ?!!!)

-கீதா


39 கருத்துகள்:

  1. நல்ல ஒரு அலசல் பதிவு..

    பொதுவக இவ்வகை செய்திகளை பார்க்கும் போது நாமனைவருமே இதற்கு காரணமோ என்று தோன்றுகின்றது.. சமுதாயம் என்று தனியாக ஒன்றுமில்லை .. நீங்கள், நான், எதிர் வீட்டு நண்பர் என்று அனைவரும் சேர்ந்தே சமுதாயம் ஆகின்றோம்..ஆகையால் தனிப் பட்ட மனிதர்கள் மாறும் வரை ஒரு நல்ல மாற்றத்தை இவ்வுலகில் நாம் எதிர்பார்க்க முடியாது என்றே தோன்றுகின்றது..

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    அண்ணா

    மிக அருமையாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள்..

    ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு வாழ்ந்துவிட்டால் பிரச்சினைகளே இல்லையே. இதில் ஈகோ என்பது எட்டிப்பார்க்கும் போதுதானே பிரச்சினைகள் வலுக்கின்றன. இரு மாடுகள் கட்டப்பட்ட மாட்டு வண்டி சீரிய நிலையில் செல்ல வேண்டும் என்றால் இரு மாடுகளும் சமமாக நடந்தால்தான் வண்டியும் சம நிலையில் ஓடும். அது போலத்தான் குடும்பமும்....
    இதை விட வேறு கருத்து வேண்டுமா..... இதுவே போதும் பகிர்வுக்கு நன்றி..... த.ம1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன“-

    பதிலளிநீக்கு
  3. உண்மையைத் தான் எழுதி இருக்கிறீர்கள். ஆண்களைக் காப்பாற்ற உங்களைப் போன்ற சிந்தனையாளர்கள்தாம் தலைமை ஏற்கவேண்டும். ஆண்களில் யாரும் அதற்குத் தயாரில்லை என்றே தோன்றுகிறது. - இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சார்! ஒரு சங்கம் ஆரம்பிச்சுட்டாப் போச்சு!

      நீக்கு
  4. அதுவும் ஒரு தொலைக்காட்சியில் Z வருகிறதே.... பாருங்கள்... கொடுமையிலும் கொடுமை...

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான கட்டுரை. பொதுவாகவே பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் மட்டுமே வெளிச்சத்துக்கு வருகின்றன நம் வீட்டுப் பிரச்சனைகளை பொது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய அவசியம் ஏது.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வெங்கட்ஜி! அதான் சரி கொஞ்சம் ஆண்களுக்கும் சப்போர்ட் பண்ணலாமேனுதான்....மிக்க நன்றி!

      நீக்கு
  6. நியாயமான கருத்து..
    வீட்டுக்கு வீடு வாசற்படியாய் இருக்க -
    பாமரர்களை மட்டும் சுற்றிச் சுற்றி வருகின்றன ஊடகங்கள்.
    சமுதாயம் கொஞ்சம் கொஞ்சமாக விஷமாக்கப்படுகின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா! அவர்கள் தான் மாட்டிக் கொண்டார்கள். மிக்க நன்றி!

      நீக்கு
  7. மிகச்சரியாக அலசியிருக்கிறீர்கள். சமூகத்துக்கு பெண்கள் மீது இருக்கும் ஒரு சாஃப்ட் கார்னரே இதற்க்குக் காரணம். அதே சமூகம்தான் இதே வேறு விதத்தில் வியாபாரமாக்குகிறது. ஊடகங்களின் தற்கால போக்கு மிகவும் கீழ்த்தரமாக இருக்கிறது. இதே காலகட்டத்தில்தான் நமக்கான வாய்ப்பாக இணையத்தில் பங்கெடுப்பதும் கருத்து சொல்வதும் வேகமாக வளர்ந்து வருகிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றிய எனது மனக்குமுறலையும் பதிவாக்க எண்ணியிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! பதிவை புரிந்துகொண்டதற்கு. ஆம் நாமக்கானவாய்ப்பு இதுதான்

      நிச்சயமாக நிகழ்ச்சிகள் பற்றி எழுதுங்கள்! மிக்க நன்றி முதல் வருகைக்கும் கருத்திற்கும்!

      நீக்கு
  8. அமெரிக்காவில் விகடனில் சொன்னமாதிரி ஆட்கள் இல்லாமல் இல்லைங்க. ரெண்டு பேரு சேர்ந்து அனுசரித்து வாழ்வதென்பது இன்றைய காலகட்டத்தில் கொஞ்சம் "சேலஞிங்" தான்.

    ஒரு சிலரால் அவர்கள் பிரச்சினையை தனக்குள் அல்லது நாலு சுவருக்குள் வைத்திருக்க முடியாது. எங்கேயாவது யாரிடமாவது உளறினால்த்தான் அவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கும்.

    All kinds of people to make the world. :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம்ம்ம் அதென்னவோ சரிதான் லௌட் ஸ்பீக்கர் போட்டு புலம்புவதுதான் பலரும் செய்வது....இங்கயும் அது ரொம்ப பிரபலம்க...

      நீக்கு
  9. கட்டுரை கீதாவின் கைவண்ணம் அல்லவா.வாய்மூடிப் பேசவில்லை. மனம் திறந்து எழுதி இருக்கிறார் .வாழ்த்துக்கள். பல இடங்களில் ஆன்கள் சைலெண்ட் டார்ச்சர் அனுபவிப்பதைக் கண்டிருக்கிறேன். போகிற போக்கைப் பார்த்தால் பெண் உரிமை என்னும் பெயரில் எல்லாமே சற்று மிகைப் படுத்தியே காண்பிக்கப் படுகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சார்! மிகைப்படுத்தல்தான் சார்! நிச்சயமாக! மிக்க நன்றி சார் தங்களின் பாராட்டிற்கு! அறிவார்ந்த உங்களின் கருத்து எங்களுக்கு மிக்க ஊக்கத்தைத் தருகின்றது சார். நன்றி!

      நீக்கு
  10. "//பெண்களுக்கு ஆதரவாக இருக்கும் சட்டத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி விவாகரத்து கோரும் பெண்கள்,//"
    விவகாரத்து மட்டும் இல்லை, கணவன் குடும்பத்தையே கம்பி எண்ண வைப்பதும் நடக்கிறது.
    மிகவும் தீவிரமாக ஆராயப்பட்ட ஒரு கட்டுரை.
    நீங்கள் சொல்வது போல், ஊடங்கங்கள் தான் இவர்களின் பிரச்சனைகளை எல்லாம் பெருசாக்கி காசு பார்க்கின்றன. "ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல".

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! ஆம் கம்பி எண்ண வைப்பது ரொமப்வே நடக்குதுங்க...

      மிக்க நன்றி! கருத்திற்கு!

      நீக்கு
    2. மிக்க நன்றி நண்பரே! ஆம் கம்பி எண்ண வைப்பது ரொமப்வே நடக்குதுங்க...

      மிக்க நன்றி! கருத்திற்கு!

      நீக்கு
  11. குடும்பப் பிரச்சினைகள் நான்கு சுவர்களுக்கு வெளியில் வரும் போது அவை ஊதப்பட்டு, ஊதப்பட்டு, பூதாகாரமாக ஊதிப் போகுமே அல்லாமல், பலூன் வெடிப்பது போல் வெடிக்குமே அல்லாமல் தீர்வு கிடைக்காது./..................உண்மை
    நல்ல கூற்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு! வருகைக்கும்!

      நீக்கு
  12. வணக்கம் கணமான, கடினமான, மானப்பிரட்சினையை கையிலெடுத்து இருக்கிறீர்ரகள்.
    கணவன் - மனைவி மட்டுமல்ல...
    முதலாளி – தொழிலாளி மட்டுமல்ல...
    அரசாங்கமும் – தீவிரவாதமும் மட்டுமல்ல...
    உலகில் பேசித்தீர்க்க முடியாத விசயங்களே இல்லை 80 எமது ஆணித்தரமான கருத்து.
    ஊடகங்களில் வருபவர்கள் முழுக்க முழுக்க படிக்காத பாமரர்கள் இவர்களை குறையும் சொல்ல முடியாது இவர்களை வைத்து ஊடகங்கள் லாபம் பெறுகிறார்கள் 80ம் உண்மையே...
    அதிலும் சில தொலைக்காட்சிகளில் விபச்சாரிகளே நீதி தேவதைகள் போல காண்பிப்பதைக் கண்டு மனம் குமுறி தொலைக்காட்சி பெட்டியையே உடைத்து விடுவோம் என்று எனக்கு தோன்றும் இந்த எழவுக்காகவே நான் பார்ப்பது கிடையாது ஒருமுறை எனது அறையில் எடை முஷினை எடுத்து எறிந்து விட்டேன்.
    (டி.வி. தப்பியது டிம்பிள் கபாடியா புண்ணியம்)
    அன்று முதல் நானிருந்தால் யாரும் இந்த எழவுகளை காணமாட்டார்கள் இத்தனைக்கும் நான் திரும்பி உட்கார்ந்து கொண்டு கணினியில் மூழ்கியிருப்பேன் ஒலியைக்கேட்டே எனக்கு கோபம் வந்தால் ? ஒளியைக்கண்டால் ?
    உலகில் ஜனித்த ஆண் – பெண் 6அறிவு மானி(ட்)டர்களில் நல்லவர்களும் உண்டு. கெட்டவர்களும் உண்டு 80 – 100% உண்மை 80தே எமது சிற்ற்றிவுக்கு 8கிறது 80தை இங்கு பதிவு செய்கிறேன்.

    தமிழ் மணம் – 7
    இப்படிக்கு
    அப்பாவி கில்லர்ஜி (ஆண் இனம்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே! எதையுமே பேசித் தீர்க்க முடியும். ஆனா எல்லாத்துக்குமே உணர்ச்சிவசபட்டு உடைச்சுடாராங்க...உறவை....உங்க எடை மிஷினைச் சொல்லல ஹஹஹஹ்

      எங்கள் அப்பாவி அண்ணனுக்கு நன்றி!

      நீக்கு
  13. ஆண் – பெண் என்று எந்த பக்கமும் சாராது எழுதப்பட்ட கட்டுரை.
    த.ம.

    பதிலளிநீக்கு
  14. ஆடவர்களுக்காக தங்களது கருத்து மாடத்தை திறந்தமைக்கு மிக்க நன்றி!
    புரிதல் என்பது அரிதாகிப் போவதால்தான் பிரச்சனைகள் பெரிதாகி விஸ்வரூபம்
    எடுக்கின்றன!
    நமது தேசம் பெண்மையை போற்றுவதோடு மட்டுமல்லாது,
    ஆடவர்/பெண்கள் இருபாலரும் சமம் என்னும் நிலையினை எட்டவும் வேண்டும்.
    விட்டுக் கொடுத்து வாழ்ந்து வந்தால் ?
    ஈகோவுக்கு ஈமச் சடங்கு செய்தால் மட்டுமே வாழ்வு சிறக்கும்!

    நன்றியுடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  15. மிக அருமையான கட்டுரை. பகிர்ந்தமைக்கு நன்றி சார். இதுபோல் சொல்வதெல்லாம் உண்மை என்று எளிய மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பொதுவெளியில் அசிங்கமாக விவாதித்து வெளியிடுகிறார்கள். பாவம். அதுவும் நிற்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  16. தோழி!!! வாழ்த்துகள் ! ஆண் பாவம் என குறள் கொடுத்த பெண்மை வாழ்க:)
    பத்திரிக்கை பரவாயில்லைங்க, டி.வி ல டெய்லி இதை பஞ்சாயத்து பண்ணவே லக்ஷ்மி ஒரு ப்ரோக்ராம் பண்ணுறாங்க. என்னம்மா இப்டி பண்ணுறீங்களே மா எனும் அவரது டயலாக் தான் இப்போ வைரல் ஹிட்டு:))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தோழி! ஆண் பாவம் என குறள் கொடுத்த பெண்மை வாழ்க:)// ரசித்தோம்...

      லஷ்மி இன்னும் அந்தப் ப்ரோக்ரம் முடிக்கலையா? இங்க கேபிள் கிடையாது வீட்டுல இருந்துச்சு ஆனா இல்ல...ஸோ தெரில...இந்த வைரல் ஹிட் பத்தி...

      நீக்கு
  17. சிறப்பான கட்டுரை பொதுவெளியில் பேசாமல் இருப்பதே மேல்!

    பதிலளிநீக்கு