செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

குடியைக் கெடுக்கும் குடி, குழந்தைகளின் உயிரையும் பறிக்கத் தொடங்கிவிட்டது.


     கடந்தவாரம் கொல்லம் அருகே 8 வயது சிறுவன் தன் வீட்டில் வைக்கப்பட்டிருந்த மதுவை, அமிதமாக அருந்தி இறந்த செய்தி கேட்ட அதிர்ச்சியிலிருந்து மீளும் முன் மீண்டும் ஒரு பேரிடி.  


திருச்சூர் அருகே உள்ள இடக்களத்தூரில் ஒருவாரம் முன்பு தன் வீட்டருகே உள்ள காலியிடத்தில் விளையாடப் போன 6 வயது சிறுவன், புதருக்குள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கண்ட மது பாட்டிலில், மீதமிருந்த மதுவைக் குடித்து மயங்கி விழ, நீண்ட நேரம் மகனைக் காணாது தேடிவந்த தாய், மது பாட்டில் அருகே மயங்கிக் கிடந்த அவனை மருத்துவ மனைக்குக் கொண்டு சென்று எப்படியோ அவனது உயிரைக் காப்பாற்றி விட்டார் என்ற செய்தி, இடி விழுந்தவன் காலில் பாம்பு கடித்து கதை போல் மனதை நிம்மதி இழக்கச் செய்துவிட்டது.  திருச்சூர் பையன் வேறு எங்கேனும் மது பாட்டில் இருக்கிறதா என்று தேடிய போது அவனை ஒரு பாம்பும் கடித்திருந்ததாம்.  எப்படியோ எட்டு வயது சிறுவன் குடித்த அளவுக்கு மது குடிக்காததாலும், பாம்பு கடித்ததற்கான சிகிச்சை மருத்துவமனையில் தாமதமின்றிக் கொடுக்கப்பட்டதாலும், அந்த 6 வயது சிறுவன் உயிர் பிழைத்தான் என்று மருத்துவர்கள் கூறினார்கள்.


     தனக்கு வந்திருக்கும் நோய் குணமாகக் கசப்பான மாத்திரைகளைச் சாப்பிடவோ, மருந்தைக் குடிக்கவோ மறுக்கும் வயதில் இப்படிக் குடிக்கச் சிரமமுள்ள திரவத்தை எப்படிச் சிறுவர்களால் குடிக்க முடிகிறது என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. பெரியவர்கள் குடிக்கிறார்களே?! இதில் ஏதேனும் சுகம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு, ஆர்வம் அந்தக் குழந்தைகளுக்கு வர வேண்டும் எனில், அவர்கள் குடிப்பவர்களையும், குடித்தபின் அவர்கள் பேசுவதையும் செய்வதையும் (திரைப்படங்களில் மது அருந்துவது உடலுக்குக் கேடு என்று எழுதிக் காண்பித்தபின் கதாநாயகர்களும், வில்லன்களும் குடிப்பதையும், அதன் பின் அவர்கள் போடும் ஆட்டத்தையும் எத்தனை ஆங்கிளில், அருமையான ஷாட்டுகளில் கச்சிதமான இசையுடன் காண்பிப்பது போதுமே!) நுணுக்கமாகக் கவனித்து அதிலுள்ள சுகத்தை அறிந்தே தீர வேண்டும் என்ற அடங்காத ஆசை அவர்களுக்கு ஏற்படுவதுதான் காரணமாக இருக்க வேண்டும்.  






குழந்தைகள் வீட்டிலுள்ள, அக்கம்பக்கத்திலுள்ள பெரியவர்கள் செய்வதை, எப்போதும் அது போல் செய்து பார்ப்பதில் ஆர்வமுடையவர்கள். அப்பாவின்/அம்மாவின், தாத்தாவின்/பாட்டியின் கண்ணாடியை மாட்டி நடப்பது, அவர்களைப் போல் பேசுவது, இப்படி எல்லாம் செய்வது போல், அவர்கள் தன் வீட்டிலோ, அடுத்த வீட்டிலோ, டி.வி.யிலோ, குடிப்பது, சிகரெட் பிடிப்பது போன்றவற்றைக் காண நேர்ந்தால் அதை நிச்சயமாகச் செய்து பார்க்க வேண்டுமென்ற ஆர்வம், ஆசை பெரும்பான்மையான குழந்தைகளுக்கு வரத்தான் செய்யும்.


இது போலத்தான், திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் காண்பிக்கப்படும் வன்முறைக்காட்சிகளும், ஆபாசக் காட்சிகளும். அவற்றை எல்லாம் ஓரளவாவது அவர்கள் பார்க்காமல் இருக்கக் கூடியச் சூழல்களை-உதாரணமாக கலைகளை வளர்க்கும் வகுப்புகள், விளையாட்டு, பெர்சானலிட்டி வளர்ப்பது-பெற்றோர்கள் குறைந்தபட்சம், அவரவர் வீடுகளிலாவது கடைபிடிக்க வேண்டும். 

அதுமட்டுமல்ல, உடலையும், மனதையும் பாதிக்கும் அவற்றை, குழந்தைகள் பார்க்காமல் இருக்க உதவும் மனக் கட்டுப்பாட்டை அவர்களுக்கு உருவாகும் விதத்தில், அவர்களுக்குப் புரியும் விதத்தில் அன்பாகச் சொல்லிப் புரியவைக்க வேண்டும்.  “அதற்கெல்லாம் எனக்கு/எங்களுக்கு நேரமில்லை என்ற காரணமெல்லாம், வாதமெல்லாம் வேண்டாம். குழந்தைகள் நம்மவர்கள். அவர்களின் நன்மைக்காக நாம் எப்படியாவது நேரம் ஒதுக்கி (இங்கு குழந்தைகளின் மூடுக்குத்தான் முக்கியத்துவம்.  அவர்கள் நாம் சொல்வதை ஆர்வத்துடன் கேட்கக் கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்த வேண்டும்) அவர்களை நல்வழிப்படுத்த முயல வேண்டும்.  அப்போதுதான் இது போன்ற விபரீத சம்பவங்களைத் தவிர்க்க முடியும். அது நாம் அவர்களுக்குச் செய்யும் கடமையோ, உதவியோ மட்டுமல்ல, நம் அமைதியான, மகிழ்ச்சியான பிற்கால வாழ்க்கைக்கு இடையூறு நேராது இருக்க எடுக்கும் தற்காப்பு நடவடிக்கையும் கூட!.

40 கருத்துகள்:

  1. அதிர்ச்சி தரும் செய்தி
    குழந்தைகள் நாம் செய்வதைப்போலத்தான்
    செய்வார்களே ஒழிய நாம் சொல்வதைப்போலச்
    செய்வதில்லை எனக் குறிப்பாகச் சொல்லிப்போனவிதம்
    மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அருமையான, தகுந்த விமர்சனத்தத்கு மிக்க நன்றி!

      நீக்கு
  2. ஒரு நல்ல ஆசிரியரின் உண்மையான ஆதங்கம் புரிகிறது!
    ஆனால் புரியவேண்டியவர்களுக்கு புரியவில்லையே?
    எண்பது ருபாய் ஒரு குவாட்டர் அப்டின்னு என்கிட்ட படிக்கிற ஒரு எட்டாம் வகுப்பு மாணவன் தன் நண்பன்கிட்ட சொல்லிட்டு இருக்கான் . உலகம் எங்க போகுதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்லியிருப்பது போன்ற சம்பவங்கள் எங்கள் பள்ளியிலும் நடப்பதுண்டு! என்ன செய்ய, நாம் காணும் கேட்கும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு நம்மால் முடிந்த வரை நம் மாணவர்களை நல்வழிப்படுத்த முயற்சி செய்வோம்!

      தங்கள் முதல் வருகைக்கும் அழகான கருத்திற்கும் மிக்க நன்றி! தொடர்கின்றோம்!

      நீக்கு
  3. குடிகாரர்களுக்கு நல்ல எச்சரிக்கை !
    த ம 3

    பதிலளிநீக்கு
  4. பெற்றோர்கள் குடிகாரராக இருந்தால், அவர்களின் வாரிசை... க'போதி'களை மாற்றவே முடியாது...

    அதிலும் தப்பிப்பவர்கள் சில பேரே... தனது தந்தையையே திருத்திய தங்கபாண்டி என்ற நண்பனும் உண்டு...

    பதிலளிநீக்கு
  5. "இந்தியாவில் எதையும் ஒழுங்காகவும் பாதுகாப்பவும் செய்வதில்லை." மதுவை அருந்திதான் குழந்தைகள் சாவுகிறது என்பதில்லை வீட்டில் பாத்ரும் க்ளினிங்க் திரவங்களை குடித்துவிட்டும் அநேக குழந்தைகள் சாகின்றன அதை யாரும் பெரிதாக பேசுவதில்லை. ஆனால் இந்த மதுவை மட்டும் பெரிதாக எடுத்து பலரும் பேசுகின்றனர்

    இங்கே அமெரிக்காவில் குழந்தை பிறந்ததும் பெற்றோர்கள் செய்யும் முதல் காரியம் கிச்சன் பாத்ருமில் உள்ள கப்போர்டுகளில் முதலில் Child lock போட்டுவிடுவார்கள் காரணம் மதுவை விட க்ளினிங்க் திரவங்கள் தான் அதிக பாதிப்பு உடையது. இங்கு எனக்கு தெரிந்த அனைத்து நண்பர்களின் வீடுகளிலும் பக்கத்துவிடுகளிலும் மதுவில்லாத வீடே இல்லை எனலாம் எனக்கு தெரிந்த வட்டாரத்தில் 2 மூஸ்லிம் குடும்பதில் உள்ளவர்கள் வீட்டில்தான் மது இல்லை அதில் ஒருத்தர் குடிப்பவர் என்றாலும் அவர் வீட்டில் சரக்கு கிடையாது. இங்கு எல்லார் வீட்டிலும் கைக்கு எட்டும் தூரத்தில்தான் மது இருக்கிறது. ஆனால் இங்கு நீங்கள் சொன்ன மாதிரி தவறுகள் ஏதும் நடக்கவில்லை ..இங்கு நாங்கள் குடிக்கும் போது குழந்தைகளும் பல சமயங்களில் எங்களுடன் உட்கார்ந்து அவர்களுக்கான கோக் ஜுஸ் போன்றவைகளை குடிக்கிறார்கள் அதை பெரும் தவறு போல யாரும் சித்தரிப்பது இல்லை நாங்கள் அவர்களுக்கு சொல்லுவதெல்லாம் இது சிறுவர்களுக்காக ட்ரிங்க் இல்லை அதை இளம் வயதில் குடித்தால் பலவித உடல் பிரச்சனைகள் வரும் அதனால்தான் அரசாங்கம் 21 வயதுவரை குடிப்பதற்கு தடை விதித்து இருக்கிறது ஒரு வேளை நீங்கள் எடுத்து குடித்தால் அரசாங்கம் உங்களை எங்களிடம் இருந்து பிரித்து பாஸ்டர்ஹோமில் சேர்த்துவிடுவார்கள் அதன் பின் நீங்கள் ங்களிடம் வளர முடியாது என்று சொல்லி வளர்த்து வருகிறோம் அதனை புரிந்து கொண்டு அவர்களும் வளருகிறார்கள் இங்கு குடிப்பதை யாரும் தவறாக எடுத்து கொள்வதில்லை அப்படி நினைப்பவர்கள் ஒரு சிலர் உண்டு அதுவும் நம் நாடுகளில் இருந்து வரும் சில அரை லூசுகள் ம்ட்டும்தான்...


    நான் இன்றுதான் மதுவை எதிர்ப்பவர்களைப் பற்றியும் அவர்கள் எண்ணங்கள் பற்றியும் பதிவு எழுதி இருந்தேன் அதை சிறிது காலம் கழித்து வெளியிடுகிறேன். காரணம் அந்த பதிவு இதற்கு எதிர் பதிவாக இருக்கிறது என்று யாரவது குட்டையை கலக்கிவிடுவார்கள் என்பதால்தான்... எனது மனதில் பட்டதை சொல்லி இருக்கிறேன். இது உங்கள் மனதை ஏதாவது காயப்படுத்துவது போல இருந்தால் மன்னித்து கொள்ளவும் நீங்கள் விரும்பினால் டெலீட் பண்ணிக் கொள்ளலாம் நான் தவறாக ஏதும் எடுத்து கொள்ள மாட்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்குள்ள கல்விமுறையும் தட்பவெப்ப நிலையும் மதுவுக்கு சாதகமாக உள்ளன. குடும்பத்தினர் அளவோடு மது அருந்துவது அங்குள்ள பழக்கம். இங்கு எது அளவு என்றே தெரியாதவர்கள்தான் அதிகம். அங்கே ஹீரோ ஒர்ஷிப் என்பதே கிடையாது. இங்கே எல்லாமே அதுதான்.

      மிகப் பெரிய அளவிலுள்ள இந்தியாவில் எல்லோரும் சாதி, மதங்களின் பெயரால் தனித்தனிக் குழுக்களாகவும் அருகருகேயும் இருக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளிலும் இந்தியாவிலும் சட்டத்தின்முன் எல்லோரும் சமம்தான் இருப்பினும் யூனிபார்ம் சிவில் கோட் இந்தியாவில் கிடையாது. எப்படியானாலும், ஐரோப்பிய நாடுகளில் உள்ள வெளிப்படைத்தன்மை இந்தியாவில் அறவே கிடையாது.

      பெரிய அளவில் கல்வியில் முன்னேற்றம் வரவேண்டும். என்போன்றவர்கள் ஆசிரியர் தொழிலில் மட்டும் இடஒதுக்கீடு நுழையக்கூடாது என்பது அதனால்தான்.

      எது அளவு என்று மக்கள் தெரிந்துகொள்ளும் நிலை வரும்வரை மதுவிலக்கு கட்டாயம் இந்தியாவில் இருக்கவேண்டும்.

      கோபாலன்

      நீக்கு
    2. மதுரைத் தமிழா! தாங்கள் அமெரிக்காவைப் பற்றிச் சொல்லியிருக்கின்றீகள். இது இந்தியா! நம் நாட்டில் மது குடிக்கும் அளவும், வேகமும் அதிகமே! இறந்த பையன் 250ml குடித்துள்ளான்! தாங்கள் சொல்லியிருக்கும் கருத்து சரிதான். இங்கு குழந்தைகள் நலத் திட்டம் என்பதே கிடையாதே!.அங்கு போல் சட்டத் திட்டங்களும் கிடையாதே! இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, முழு பொறுப்பும் பெற்றோர்களைச் சாந்ததே!

      ஒரு நாணயத்திற்கு இரு பக்கம் இருப்பது போல், எல்லாவற்றிற்கும் இரு கருத்துகள் இருக்கத்தானே செய்யும்! இருந்தாலும் இது போன்ற குழந்தைகள் மது அருந்தி மரணம் தழுவும் சூழலகள் தவரிக்கப்பட வேண்டும். எனவே தங்கள் பின்னூட்டத்தைத் தவறாக நினைக்க வில்லை! . உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்! குட்டையைக் கலக்குபவர்கள் கலக்கட்டும்! கலக்கினாலும், நாங்கள் தெளிவு காண்பவர்கள்!

      னீங்கள் வாசித்து, ஆழமான, விரிவானக் கருத்தைத் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி!

      நீக்கு
    3. இதே இரண்டு கருத்துக்களை தான் நானும் சகோதரர் மதுரை தமிழன் அவர்களுக்கு சொல்லநினைத்தேன்! நன்றி கோபாலன் சார்!

      நீக்கு
  6. வீட்டில் மதுவை ஒளித்துவைத்திருந்தது நிச்சயம் இளைஞர்களின் செயலாகத்தான் இருக்கும். மதுவிலக்கைக் கொண்டுவந்தால் அவர்கள் அயல் மானிலத்திலிருந்து வாங்கிக் குடிப்பார்கள், அந்தப் பணம் வெளி மானிலத்துக்குத்தானே போகும் எனும் சந்தர்ப்பவாதம்தான் இப்போது முன்னிற்கிறது.

    மதுவினால் பெரிதும் பாதிக்கப்படும் பெண்கள் இதை ஒரு பொருட்டாகவே ஏன் நினைப்பதில்லை என்பது வேதனையளிக்கும் விசயம். நமது ஆண்களுக்கு இதைவிட ஊழலும் சாதிகளும் பெரிய விசயமாகத் தெரிவது ஏனோ.

    மதுவுக்கு முன்பாக திரைப்படங்களை ஒழிக்கவேண்டும். முன்பெல்லாம் ஒரு பழைய நடிகர் சிகரெட்டை வட்டமாகப் புகை வரும்படி குடித்ததைக் கண்டும் சிகரெட் வளர்ந்தது. சிகரெட்டை ஒழித்ததில் அன்புமணியின் பங்கு அதிகம். அவர்போன்றோர் மதுவையும் திரைப்படங்களையும் அழிக்க வெளிவரும் காலமும் வரும் என்று நம்பலாம்

    கோபாலன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்பு, இப்போது ராணுவ மந்திரியாக இருக்கும் A.K. ஆண்டனி கேரளாவில் சாரயத்தை ஒழித்தார். ஆனால் அவரால் கள்ளையும், அயல்நாட்டு மதுவையும் ஒழிக்க முடியவில்லை! அரசுக்கு வருமானமே இதிலிருந்துதானே! அப்படி இருக்கும் போது பூனைக்கு யார் மணி கட்டுவது!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      நீக்கு
    2. அதற்கு மணிகட்ட வேண்டியவர்கள் முழுக்க் முழுக்க அந்த வேதனையை உணர்ந்த பெண்கள்தான். தமிழகத்தில் அவர்களுக்கு எல்லாமே விலையில்லாப் பொருட்கள்தான்.

      இவ்வளவு நேர்மைமிக்க AK அன்டோனி தற்போது எங்கிருக்கிறார்.

      கோபாலன்

      நீக்கு
  7. வணக்கம்
    நண்பரே.

    நல்ல விழிப்புணர்வு+எச்சரிக்கை பதிவு..... மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்
    த.ம5வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    பதிலளிநீக்கு
  9. அதுக்கு முன்னாடி பெண் பிள்ளைகளை வச்சிருக்குறவங்கதான் வயத்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருப்பாங்க. இப்ப ஆண்பிள்ளைகளைப் பெத்தவங்களின் நிலையும் இதான்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரிதான் சகோதரி தாங்கள் சொன்னது! தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி!

      நீக்கு
  10. துளசி,
    இந்தியாவில் இறப்பு ஏதோ சிகரெட் குடியினால் எண்று கூருகிர்ரக்ள.
    ஒரு வருடத்தில் ஒரு சிறுவன் மது குடித்து இறந்தால் அது செய்தி!
    அதே சமயம், ஒரு நாளில் 5000 குழந்தைகள் நல்ல தண்ணீர இல்லாமல் வயிற்ருபோக்கு வந்தால் செத்தால் அது செய்தி அல்ல! ஒகே!

    என்ன கராணம்?
    இவர்கள் குழந்தைகள் பேதியில் சாவப் போவதில்லை; அதாலால், மதுவை கட்டுப் படுத்தவேண்டும். மற்ற குந்தைகள் எப்படி செத்தாலும் ஒகே!
    சாக்டையில் இறங்கி செத்தாலும் ஓகே.; அனால், மதுவை ஒழிக்கணும்!

    இந்தியாவே ஒரு போலி நாடு!

    Avargal Unmaigal3 சொன்னது சரி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்பள்கி னீங்கள் சொல்லியிருக்கும் கருத்து 100% சரிதான்! இங்கு குடியென்பது மொடாக் குடியாயிற்றே! மேட்டுக் குடி மக்களும் கூட குடி போதையில் தவறுகள் செய்கிறார்களே! சாதாரணக் குடி மகன் மதி மயங்கி, தள்ளாடி, ரோட்டில் மயங்கிச் சரியும் சம்பவங்கள் தினமும் நடக்கின்றதே! அப்படி மயங்கி சாக்கடையில் விழுவதும், வாந்திஎடுத்து, நாய்க்கடிக்கு உள்ளாகி உதடும், மூக்கின் ஒரு பகுதியும் இழந்த சம்பவங்களும் தேக்கடியில் நிகழ்ந்திருக்கினறதே!

      நீங்கள் சொல்லும் குழந்தைகள் நலன் எல்லம் இங்கு கிடையாதே! அதைத்தான் வருந்திச் சொல்லியிருக்கிறோம்! இங்கு எல்லாமே பெற்றோர் கையில்தானே! குழந்தைகளுக்காக அரசு என்னத்த செய்கின்றது!

      நன்றி நம்பள்கி!

      பி.கு. இந்த பின்னூட்டமே நெட் தகராறில் பலதடவை ஏற்றம் செய்ய வேண்டியதகி விட்டது. தங்கள் இடுகைக்கு பின்னூட்டம் வருகின்றது...நெட் சரியானவுடன்.

      நீக்கு
    2. குடிகாரர்களுக்கு பிறந்த குழந்தைகள் தான் பொருளாதர மற்றும் போதிய கவனமின்றி சாக்கடையில் விழுந்து இறப்பதற்க்கும் கிடைத்ததை உண்டும் சுகாதாரத்தை பேண வழியும் இன்றி வயிற்றுப்போக்கால் இறந்துபோக வாய்ப்புகள் அதிகம் அடுத்தது இந்திய மருத்துவ கல்லூரிகளில் படித்து வெளி நாட்டு டாலர்களுக்கு விலைபோகும் மருத்துவர்களும் அதர்க்கு ஒரு காரணம்.

      நீக்கு
    3. பணத்தை தேடி பணம் கொழிக்கும் நாடுகளுக்கு ஓடிப்போனவர்களெல்லாம் இப்படித்தான் பேசுவார்கள் குடி தவறில்லை அப்படியா இப்படியா என்று சப்பை கட்டு கடுவார்கள். நாள் ஒன்றுக்கு 10000 ரூபாய் சம்பாதிக்கிறவன் 500 ரூபாய்க்கு குடித்தாலும் அவங்க குடும்பத்துக்கு ஒரு பாதிப்பும் இல்லை 200 ரூபாய் சம்பாதிப்பவன் 150 ரூபாய்க்கு குடித்தால் அவன் குடும்பம் குட்டுசுவராய் போவாதா? குழந்தைகளுக்கான படிப்பு செலவையும் சுகாதார செலவையும் செய்யாமல் சொற்ப்ப பனத்தையும் டாஸ்மாக்கில் செலவழிப்பது இவர்களுக்கு எல்லாம் தெரியாது. மேலே சென்றவர்கள் மேலும் சென்று கொண்டே இருக்கவேண்டும் கீழே இருப்பவர்கள் அதள பாதலாம் செல்லவேண்டும் என்பதுதான் இது போன்று குடிக்கு ஆதரவு தெரிவிப்பவர்களின் குரூர எண்னம்.

      நீக்கு
    4. இந்தியா போலி நாடு என்று கூறிய போலி இந்தியருக்கு என் கண்டனங்கள்.

      நீக்கு
  11. மலைப்பகுதியில் வசிப்பவர்கள் குழந்தைகலித் தூங்க வைக்கவும் குளிருக்காகவும் அலாவான மதுவை கொடுப்பதைப் பார்த்திருக்கிறேன்.அதுபோல விளையாட்டாக குழந்தைகளுக்கு மதுவை குடிக்க கொடுத்து ரசிப்பது போன்ற செயலையும் தவிர்ப்பது நல்லதுதான். தங்களின் பயனுள்ள இந்த சிறந்தப் பதிவைப் படிக்கும் நண்பர்கள் விழிப்புணர்வைக் கொடுத்தால் நல்லதுதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அதுபோல விளையாட்டாக குழந்தைகளுக்கு மதுவை குடிக்க கொடுத்து ரசிப்பது போன்ற செயலையும் தவிர்ப்பது நல்லதுதான். //

      தாங்கள் சொன்னது சரியே! தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி!

      நீக்கு
  12. துளசி!
    வெள்ளைத் தோல் கஷ்டப்பட்டால் அதில் இன்பமடையும் படித்த இந்தியர்கள் அதிகம்; அதுவும் இங்கு அரசாங்கம் பண்ணும் தப்புக்கு மக்கள் என்ன பண்ணுவார்கள்; அதைப் புரிந்து கொள்ளாமல், "வேனுண்டா அவளுக்கு வேணுண்டா" என்று படித்த இந்தியர்கள் பின்னூட்டங்கள் வருவதை தடுக்கவே நான் என் இடுகையில் தடுத்தேன்.

    அதே சமயம், இங்குள்ள நாங்கள் வருத்தப்ப்டுது ஏழை இந்திய மக்களுக்கு! 20 விழுக்காடு மக்கள் 80 விழுக்காடு எச்சு தின்றான்; அதை கேள்வி கேட்டா படித்த மக்களுக்கு கோபம் வருகிறது. என்னடா நம்ம ஏழைகளை ஏச்சு பிழைக்கிறதை கேள்வி கேட்கிறானே என்ற கோபம்..!?
    -------------------------------------------
    இந்த பதில் இந்திய அறிவி ஜீவிகளுக்கு...!

    இந்திய வரிப்பனத்தில் முதலில் கக்கூஸ் கட்டுங்கள் , நல்ல குடி தண்ணீரை கொடுங்கள்..அப்புறம் ராக்கெட் விடலாம்.

    இதுல ஒரு டூப்பு; கேட்டால், 480 கோடி தான் ஆகுது அது ஒன்னும் பெரிய பணம் இல்லை என்கிறார்கள். சுதந்திரம் வந்ததில் இருந்து இப்படித்தான் படித்ய்வர்கால் ஏழைகளை எமாற்றுகிர்ரர்கள்!

    அதை விடுங்கள் ராக்கெட் 480 கோடி தான் என்பது பெரிய பெரிய பொய். கேட்டால் எல்லாம் நாங்களே பண்ணினோம்; இது ஒரு இந்திய தயாரிப்பு அப்படி என்று சொல்கிறார்கள். சரி! ஒரு பென்ஸ் கார் விலை; ஒரு கோடி; நான் இங்களுக்கு ஒரு கோடி ரூபாய் தருகிறேன் ' நீங்களே ஒரு கோடிகு ஒரு கார் தயாரியுங்கள். ஒரு கார் கம்பனிக்கு எவ்வளவு பணம் ஆகும்; அப்ப ராக்கெட்டுக்கு 480 கோடி ரூபாய் சரி! அப்ப அங்க வேலை செய்யறவன் எல்லாம இலவசமா வேலை செய்யறனா/ கட்ட்மைப்ப்பு எல்லாம் ராக்கெட் தாயரிக்க தேவையில்லையா? யார் கிட்ட டூப்பு விடற --- 480 கோடி ரூபாயில் ராகேட் தயரிக்கிரணுங்கலாம்.

    கூடுதல் செய்தி: 10 விழுக்காடு மக்கள் தான் அதான் நம்ம ஆளு தான் அரசாங்க ஊழியார்கள்--பென்சன் எல்லாம உண்டு; மீதி 90 விழுக்காடு மக்கள் மருத்தவ காப்பீடு கூட இல்லாத ஒப்பந்த தொழிலளர்கள்...அதான் இந்துயாவில் சீப்பா ராகேட் விட முடியுது~

    இந்த இந்திய வரிப்பணம் வசனம் புளித்து போன ஒன்னு!

    ஒரு இரண்டு விழுக்காடு டாக்டர்கள் வெளி நாடு போனால் இந்தியா நாடு நாசமாக போகுமா? கொஞ்சம் கூடா அறிவை உபயோகப்படுதாமால்....அப்ப மீதி 98 விழுக்காடு இந்திய டாக்டர்கள் எண்ணத்தை புடுங்குகிறார்கள்? அவர்கள் அவ்வளவு அறிவில்லாதவ்ர்களா?

    இதை விடுங்கள்...
    எத்தனை எத்தனை பெண்கள் எல்லா ஜாதியிலும் (பிராமனர்களைத் தவிர) B.E., MBA படித்து அடுப்பு ஊதுகிறார்கள்; ஏன் வேலைக்கு அனுப்பல என்று மாப்பிளையை கேட்டால், நானே மாசம் இரண்டு லட்சம் சம்பாதிக்கிறேன்; எதற்கு என் மனைவி வேலைக்கு போகனும்? அப்ப எதற்கு படித்த மனைவியை கட்டினே? அப்ப இதில் அதில் அரசாங்கம் வரிப்பணம் நஷ்டம் ஆகாதோ? இந்த வேலை திருச்சிக்கு தெற்க்கே எல்ல்லா மாவட்டங்களும் அதிகம்.. மேற்கே கொங்கு நாடும் பேஷா இதில் அடக்கம்.

    டாக்டருக்கு படித்து விட்டு வேலை இந்தியாவில் கிடைக்கவில்லை என்றால், என்ன செய்யணும்? மருத்துவ கல்லூரியில் பனி புரியணும் என்ற ஆசை நிறைவெராவிட்டலும, ஏதாவது ஒரு அரசு வேலை கூட கிடைக்கவில்லை என்றால் என்ன செய்யனும்? பிச்சை எடுக்கணுமா?

    கிராமம் டவுனில் போய் தனியா வைத்தியம் செய் என்று சொல்ல எவனுக்கும் உரிமை இல்லை; அப்படி [போனாலும் நாட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம். கோடங்கி வைத்தியம், மருந்து கடைக்காரன் வைத்தியம் வாலிப வயோதிக அன்பர்கள் வைத்தியம்---இவர்களுடன் போட்டி போடும் அறிவோ சாமர்த்தியமோ "எனக்கு
    இல்லை! அவர்கள் முன்னால் நாங்கள சம்பாதிக்க முடியாததால், பிழைப்பை நோக்கி இந்தியாவை வீட்டு வெளியேறினோம்!

    உண்மையில சொன்னால்...அவர்கள் எங்களை விட நன்றாகவே மருத்துவம் செய்கிறர்கள். எப்படி சொல்கிறாய் என்று கேட்டால், கூட்ட்டம் கூட்டமாக அவர்களிடம் போகும் நம் மக்கள் என்ன முட்டாள்களா?
    _________
    Thulasidharan V Thillaiakathu said...
    நம்பள்கி! உங்கள் அடுத்த வீடியோ இடுகைக்கு பின்னூட்டம் எழுத முடியவில்லையே. வீடியோ பார்த்து மிகவ்ம் வேதனையாக இருந்தது. முழுவதும் பார்க்க முடியவில்லை! கண்ணதாசனின் வரிகள்தான் நினைவுக்கு வந்தது! உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!

    பதிலளிநீக்கு
  13. நானும் உங்கள் கருத்துடன் உடன் படுகிறேன் .இது பற்றி ஒரு தனி பதிவே போடலாம் என்றிருக்கிறேன். சரி மதுப்பழக்கம் என்பதை ஒரு பதிவால் திருத்துவது என்பது சாத்தியமல்ல என்ற நினைப்பும் இருப்பதால் நன்கு யோசித்த பின் எழுத நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  14. ஆம்! நன்றி! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்!

    பதிலளிநீக்கு
  15. மதுப்பழக்கம் திருத்துவது என்பது சாத்தியமில்லை! அவர்களாக உணர்ந்தால்தான் உண்டு! நன்றி தங்கள் அருமையான கருத்திற்கு!

    பதிலளிநீக்கு
  16. பதிவிட்டமைக்கு நன்றி. அன்பார்ந்த தமிழ் அன்பர்களுக்கு தமிழ் மூலமாக ஆங்கிலம் கற்க அற்ப்புத வலைப்பின்னல் http://aangilam.blogspot.in/ படித்து பயன் பெருக நன்றி வணக்கம்.

    பதிலளிநீக்கு
  17. புரிந்தது நம்பள்கி! நன்றி!

    //துளசி!
    வெள்ளைத் தோல் கஷ்டப்பட்டால் அதில் இன்பமடையும் படித்த இந்தியர்கள் அதிகம்; அதுவும் இங்கு அரசாங்கம் பண்ணும் தப்புக்கு மக்கள் என்ன பண்ணுவார்கள்; அதைப் புரிந்து கொள்ளாமல், "வேனுண்டா அவளுக்கு வேணுண்டா" என்று படித்த இந்தியர்கள் பின்னூட்டங்கள் வருவதை தடுக்கவே நான் என் இடுகையில் தடுத்தேன்.

    அதே சமயம், இங்குள்ள நாங்கள் வருத்தப்ப்டுது ஏழை இந்திய மக்களுக்கு! 20 விழுக்காடு மக்கள் 80 விழுக்காடு எச்சு தின்றான்; அதை கேள்வி கேட்டா படித்த மக்களுக்கு கோபம் வருகிறது. என்னடா நம்ம ஏழைகளை ஏச்சு பிழைக்கிறதை கேள்வி கேட்கிறானே என்ற கோபம்..!?//

    பதிலளிநீக்கு
  18. தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும மிக்க நன்றி!

    தங்கல் வலைப் பூவைத் தொடர்கிறோம்!!

    //விழித்துக்கொள்9 February 2014 00:43
    பதிவிட்டமைக்கு நன்றி. அன்பார்ந்த தமிழ் அன்பர்களுக்கு தமிழ் மூலமாக ஆங்கிலம் கற்க அற்ப்புத வலைப்பின்னல் http://aangilam.blogspot.in/ படித்து பயன் பெருக நன்றி வணக்கம்.//

    பதிலளிநீக்கு
  19. ராமஜெயம்.....தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  20. கோபாலன்.சார்.....இப்போது அண்டனி மத்தியில் பிசியாக உள்ளார்!!!!!! தங்கள் நல்ல கருத்துக்களுக்கு மிக்க நன்றி!

    தொடர்கின்றோம் தங்களை!

    பதிலளிநீக்கு