அன்று ஞாயிற்றுக் கிழமை. மதுரை
மாநகரின் பெயரைத் தாங்கிய, மதுரைக் கல்லூரி வளாகம் அமைதி காத்தது. விடுதியில்
தங்கியிருந்த நாங்கள் சோம்பலுடன் அந்த நாளை வரவேற்றோம். எல்லாம் முந்தைய இரவின் விளைவு! இரவுக்காட்சி சினிமா பார்த்துவிட்டு, வெகு நேரம் விழித்திருந்து, கல்லூரியில் அன்று நடந்த விஷயங்களை எல்லாம் அரட்டை அடித்துவிட்டு, எல்லா
பேராசிரியர்களின் தலையையும் உருட்டி விட்டுத் தூங்கச் சென்ற போது சரியாக 3 மணி. சொல்லப்
போனால் அது இரவல்ல. ஞாயிறின் விடியற்காலம்! ஆதலால், ஞாயிறு காலை ஜன்னல் வழி வந்த சூரியனின் உஷ்ணக் கதிர்கள்தான் எங்களை எழுப்பியது.
நேரம் பார்த்தால் மணி 10. ஜன்னலுக்கு அருகில் இருந்த மரங்களில் காக்கைக் கூட்டம்
தங்களது அடிக்குரலினால் ஊரையே கூட்டிக் கொண்டிருந்தன. ஒருவேளை காக்கை ஏதாவது
இறந்து விட்டதோ என்று எட்டிப் பார்த்தேன். விடுதி மெஸ்ஸில் இருந்து உணவு அங்கு போடப்பட்டு இருந்ததைப்
பார்த்தேன். இனி விடுதி மெஸ்ஸில் காலை
உணவு கிடைக்காது என்று உறுதியானது! எனவே, நானும் கனகரத்தினமும், “செவிக்கு உணவு
இல்லாத போது சிறிது வயிற்றிற்கும் ஈயப்படும்” என்று வள்ளுவர் எங்களுக்காகவே எழுதி வைத்து
விட்டுப் போனதாக நினைத்து, வயிற்றிற்கு வஞ்சனை செய்யக் கூடாது என்ற எண்ணத்தில் வெளியில்
செல்ல தீர்மானித்தோம்.
இங்கு கனகரத்தினம்
பற்றி ஒரு சில வரிகள் சொல்லியே ஆக வேண்டும்! அவன் விடுதி மாணவன் அல்ல. மதுரை மேலமாசி வீதியில் இருந்த அவன் வீடு முகவரிக்கு
மட்டும்தான். பெரும்பாலும், அவன் எங்களுடன் ஹாஸ்டலில் தான் இருப்பான். எங்களுக்கு ‘மாப்ளே’, எனக்கு “மாப்பிள்ளை கனகு”, உங்களுக்கு கனகு”. இந்தக் கனகு தொலைந்து பலவருடங்கள் ஆயிற்று. தற்போது தஞ்சாவூர் அருகில் இருப்பதாகக் கேள்வி.
திருவள்ளுவர் பேருந்து நிலையத்திற்கு
அருகாமையில் ஆரம்பித்து எங்கள் கல்லூரி நுழைவாயிலின் அருகாமையில் முடிவடையும்
மேம்பாலம். மேம்பாலத்தின் அந்தப்பக்கம் சுப்பிரமணியபுரம் என்றால், இந்தப்பக்கம்
திருவள்ளுவர் பேருந்து நிலைத்திற்கும், ரயில்வே ட்ராக்குக்கும் இடையில் திடீர்நகர்.
இந்த்த் திடீர்நகரைத் தாண்டினால், திடீரென்று வரும் எங்கள் மதுரைக் கல்லூரியின்
க்ரௌண்ட். மேம்பாலத்தின் அடியில், ரயில்வே ட்ராக்கின் அருகாமையில்தான் நாயர்
டீக்கடை. ஹாஸ்டல் மெஸ்ஸின் டீயை விட நாயர் டீ அருமையாக இருக்கும்! கடையில் அன்று கூட்டம்
அலை மோதியது. சிங்கிள் டீ க்கு ஒரு பிஸ்கட்/பன் இலவசம்னு நாயர் அறிவிச்சுருப்பாரோ? நாயரிடம் கேட்டதற்கு,
“யப்பா, ஏன் தம்பி என் பொழப்ப, இலவசம்னு
சொல்லிக் கெடுக்கற? பக்கத்துல ஜெய்ஹிந்துபுரத்துல
கோயில் திருவிழா. அதான் கூட்டம்!” நாயர் என்றாலும், தமிழ் சங்கம் வளர்த்த மதுரையில் பல வருடங்களாக வாழ்ந்ததாலோ என்னவோ, மதுரையின்
தமிழ் காதல் இவரிடமும் தொற்றிக் கொண்டுவிட்டது போலும். தமிழ் நன்றாகப் பேசுவார்.
“ஓ! அப்படியா!
உங்க பொழப்ப எல்லாம் கெடுக்க மாட்டோம் நாயரே! .....சரி...சரி 2 லைட் டீ
போடுங்க நாயரே!” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்த செய்தித் தாளைக் கையில் எடுத்துக் கொண்டு,
பெஞ்சில் அமர்ந்தோம். டீக்கடை ரேடியோவில் பழைய பாடல், டி,எம்.எஸ், எம்.ஜி.ஆருக்காகக்க்
குரல் கொடுத்து, “நான் ஏன் பிறந்தேன் நாட்டுக்கு நலமென்ன புரிந்தேன்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்! எங்களுக்கும்
அது ஏனோ சற்று உரைத்த்து. நாங்கள்
எங்களுக்குள் கேட்டுக் கொண்டோம்.
“மாப்ளே, பாட்டக் கேட்டியா? நம்ம தலைவர் பாட்டு! நாம என்னடா நல்லது பண்ணினோம், இந்த
சமூகத்துக்காக? நாட்டுக்காக?”
“ஆமாம்ல...நீ இப்பக் கேட்டதும்தான்
தோணுது! நமக்கும் இப்பதான் இப்படிக் கேக்கணும்னு பொறுப்பு எட்டிப் பாக்குதோ?!”
“ஏதாவது நாம பொறுப்பா செஞ்சா என்ன?”
“ம்....கண்டிப்பா செய்யலாம்...யோசிப்போம்” என்று
பேசிக் கொண்டே டீயை குடித்துவிட்டு நடையைக் கட்டினோம். எதிர்த்தாற் போல் “சிம்லா
ஸ்பெஷல்” உலக நாயகனின் படம் ரிலீசான சுவரொட்டி,
மற்றொரு சுவரில் சூப்பர் ஸ்டாரின் “ரங்கா” சுவரொட்டி எங்களை ஈர்த்தது. ஞாயிற்றுக் கிழமை வேறு! கேட்கணுமா! அதுவும் சினிமா
ஆர்வம் உள்ள எனக்கு! நாங்கள் லீவை அனுபவிக்க நினைத்து, எந்தப் படத்திற்கு டிக்கெட்
கிடைக்கிறதோ அதற்குப் போகலாம் என்று முடிவு செய்தோம். புது ரிலீஸ், கூட்டமாக
இருக்குமே, அதுவும், கமல், ரஜனி படம் வேறு, டிக்கெட் கிடைக்குமா என்று யோசித்தவாறே
வரிசையில் முண்டியடித்து நின்றோம். வேறு எந்த வரிசையிலாவது இது போல முண்டியடிப்பீர்களா
என்று நீங்கள் கேட்கக் கூடாது! ரஜனி படம்தான் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாலும், சிம்லா ஸ்பெஷல் மதியக் காட்சிக்குத்தான்
டிக்கெட் கிடைத்தது. (என்ன ஆச்சரியமா இருக்கா? சம்பவம் நடந்தது 1982 ல). படம் முடிந்து வெளியில் வரும் சமயம் மாலையானதால், மதுரை மீனாட்சி
அம்மன் கோவிலுக்கும் சென்று விட்டு, ஹாஸ்டலை நோக்கிப் பொடி நடை போட்டோம். அப்பொழுதே மணி
இரவு 7.30. 8.30 மணிக்குள் சென்றால்தான்
இரவு உணவு கிடைக்கும்! காலையிலேயே தவற
விட்டுவிட்டோம். ‘இப்போதாவது,
நேரத்திற்குச் சென்று விட வேண்டும்’ என்று வேகமாக நடந்தோம். வழியில் திடீர் நகரில், ரயில்வே ட்ராக்கின் அருகில்
ஒரு 2 வயது குழந்தை அழுது கொண்டிருந்தது.
“என்னடா, இங்க பாரு தனியா அழுதுகிட்டிருக்கு இந்த
பாப்பா. ஒருவேளை கோயில் திருவிழாவுக்கு
வந்த கூட்டத்துல பிரிஞ்சு வந்துருக்குமோ” – இது நான்
“இருக்கலாம்...அங்க பாரு அந்தக் குழந்தை பக்கத்துல ஒரு பொம்பளை”
அருகில் சென்றோம். அந்தப் பெண்மணியின் தோற்றம் சந்தேகதிற்கு
உரியதாகவே என் கண்ணில் பட்டது. இப்போதெல்லாம் நாகரீகமாக இருப்பவர்கள் கூட
ஏமாற்றுகிறார்கள்.! என்ற யோசனையில், குழந்தைக் கடத்தல் பற்றிய ஒரு காட்சியே மனத்திரையில்
ஓடிக் கொண்டிருந்த வேளையில், அந்தப் பெண்மணி குழந்தையிடம் “கண்ணு, உன் பெயர்
என்னமா? உன் வீடு எங்க இருக்குமா? யார்
கூட வந்த?” என்று கேட்டுக் கொண்டிருந்தாள், ஏதோ அந்த 2 வயதுக் குழந்தை இவளுக்கு பதில் சொல்லுவது
போல. எங்களைப் பார்த்ததும்,
“தம்பி, பாவம், இந்தக் குழந்தை வழி தவறி வந்திருச்சி
போல. யார் பெத்த புள்ளையோ? பெத்தவங்க எப்படி தவிச்சுகிட்டு இருக்காங்களோ?” என்று சொல்லிவிட்டுக்
குழந்தையிடம் திரும்பினாள்.
“வா பாப்பா, எங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன்” என்று தன் கையிலிருந்தச் சாக்கலேட்டைக்
குழந்தைக்குக் கொடுத்தாள். நானும்,
கனகுவும் உஷாரானோம். “ஒருவேளைக் குழந்தைகளைக் கடத்தும் பெண்மணியோ” என்று அவள் காது படாமல் பேசிக் கொண்டு,
பக்கத்துக் கடைகளில் விசாரித்தோம்.
எல்லோருமே அப்போதுதான் கவனித்தது போல பதில் சொன்னார்கள். பதில்கள் எதுவுமே சாதகமாகவோ, திருப்திகரமாகவோ
இல்லை. என்ன செய்வது என்று யோசித்தோம்.
“படிச்சவங்கதானே நீங்க! ஏதாவது செய்யுங்க!” எங்களுக்கும் காலையில் டீக்கடையில் கேட்ட
பாடலும், நாங்கள் பேசிக் கொண்டதும் நினைவுக்கு வர,
“மாப்ளே, நாம ஏன் குழந்தையக் கூட்டிக் கொண்டு பக்கத்துல
இருக்கற போலீஸ்டேஷனுக்கு போய் கம்ப்ளையின்ட் கொடுக்கக் கூடாது? அவங்க குழந்தையோட அம்மா, அப்பாவக் கண்டுபிடிச்சு
சேர்த்துடுவாங்கல”. கனகுவும் சரியென்று தலையசைக்க,
நாங்கள் குழந்தையை அந்தப் பெண்மணியிடம் இருந்து வாங்க முயற்சித்தோம்.
“நாங்க குழந்தைய பக்கத்து போலீஸ் ஸ்டேஷன்ல கொண்டு போய்
ஒப்படைச்சுடறோம். அவங்க எப்படியாவது
கண்டுபிடிச்சு சேர்த்துடுவாங்க”
“இந்தா, என்ன குழந்தைய நைசா கடத்திப்புட்டு போகலாம்னு
பாத்திங்களாடா. நான் தரமாட்டேன். நான் அதோட அம்மா. அப்பாவக் கண்டுபிடிச்சு
ஒப்படைச்சுக்கறேன்”!
“ஐயோ! நாங்க பக்கத்துல இருக்கற காலேஜ்ல படிக்கற பசங்க” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அருகில்
ஒரு சிறிய கூட்டம் கூடத் தொடங்கியது. அதில்
எங்களுக்குப் பரிச்சயமானவர்களும் இருந்ததால்
“நீ யாரும்மா? உன்ன
இந்தப் பக்கம் பாத்ததே இல்ல. இந்தத்
தம்பிங்ககிட்ட வம்பு வளர்க்கற...பேசாம குழந்தைய இந்தத் தம்பிங்ககிட்ட கொடு....அவங்க
இங்க படிக்கற பசங்கதான். எங்களுக்குத் தெரிஞ்சவங்கதான்....அவங்க பாத்துப்பாங்க..நீ
உன் வேலையப் பாத்துட்டு போ...இல்ல போலீஸ்ல பிடிச்சுக் கொடுப்போம்” என்று
சொல்லி எங்களுக்குச் சப்போர்ட் கொடுக்க, நாங்கள் குழந்தையைத் தூக்கிக் கொண்டு
பக்கத்தில் இருக்கும் B-2 போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றோம். அங்கு 3 போலீஸ்
கான்ஸ்டபிள்கள் இருந்தார்கள்.
“படிக்கற பசங்க நீங்க உங்க வேலையப் பார்த்துட்டு போக
வேண்டியதுதானே? குழந்தைய இப்ப நாங்க என்ன
பண்ண?” என்று அங்கலாய்த்தனர்.
“என்ன சார்...போலீஸ் நீங்களே இப்படிச் சொன்னா எப்படி? நாங்க மக்கள் எல்லாரும் உங்க பாதுகாப்ப
நம்பித்தானே இருக்கோம், சார்...பாவ்ம் இந்தக் குழந்தை...அதுவும் பெண் குழந்தை
சார்....பக்கதுல நடக்கற திருவிழாக்கு வந்த ஏதோ ஒரு குடும்பத்துல இருந்து பிரிஞ்சு
வந்துருக்குமோனு சந்தேகமா இருக்கு சார்...நீங்கதான் கண்டுபிடிச்சு இந்தக் குழந்தைய
அவங்க அம்மா, அப்பாகிட்ட சேர்க்கணும் சார்.”
“என்ன, எழவோ...இதெல்லாம் தலைவேதனை பிடிச்ச வேலை. இங்க கூட்டிட்டு வந்து நம்மள ரோதனை
பண்ணுறானுங்க” என்று அவர்கள் முணுமுணுத்தாலும், நாங்கள் எப்படியோ
அவர்களிடம் பேசி அவர்கள் எங்கள் குலம், கோத்திரம் எல்லாம் எழுதி வாங்கிக் கொள்ள, குழந்தையை அங்கு விட்டுவிட்டு நகரத் தொடங்கினோம். மனசில் ஒரு
சமாதானம். ஏதோ நல்லது செய்துவிட்ட ஒரு
மகிழ்வு, திருப்தி. ஆனால், அது சிறிது
நேரம்தான்.
வழியில் வந்த ஒரு சிலர், அதோ அந்த 2
ஆளுங்கதான். பிள்ளையக் கொண்டுட்டு வந்தது. பிடிங்கடா அவனுங்கள” என்று கத்திக்
கொண்ட எங்களை நோக்கி ஓடி வரத் தொடங்கினர். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன நடக்கிறது இங்கு என்று யோசிக்கும் முன்னர்,
“டேய் குழந்தைய எங்கடா ஒளிச்சு
வைச்சுருக்கீங்க...சொல்லுங்கடா உண்மைய...இல்ல இங்க ஒரு கொலையே விழும்..” என்று கத்திக்
கொண்டே இரண்டு, மூன்று பேர் எங்கள் மீது பாய்ந்து அடியும், உதையுமாகக் கொடுக்கத்
தொடங்கினர்.
“ஐயோ! அம்மா, ஏண்டா, எங்கள எதுக்காக இந்த
அடி அடிக்கிறீங்க? நாங்க குழந்தையக் கடத்தல..நம்புங்க...ஏம்பா
இப்படிப் போட்டு மொத்தி நையப் புடைக்கிறீங்க!
.நாங்கள் சொன்னது எதுவும் அவர்கள் காதில்
விழுந்ததாகத் தெரியவில்லை. வாயில் ஏதோ உப்பு கரிப்பது போல் இருந்தது. கடைவாயில் ரத்தம். சட்டைக் கிழிந்தது.
“டேய்!. உன் பேச்சைக் கேட்டேன் பாரு... இது
நமக்குத் தேவைதான்......நாம நல்லது செய்யணும்னு நினைச்சுக் குழந்தையக் கொண்டு போயி
போலீஸ் ஸ்டேஷன்ல விடப் போக...பாரு ..இப்ப நமக்கு நல்லா கிடைச்சுருக்கு பரிசு!......இந்தச் சட்டைக் கிழிசலும்,
ரத்தமும்தான்...ஐயோ உடம்பு வலி தாங்கலடா.....இப்படிப் போட்டு அடிக்கறாங்களேடா” கனகு அந்த
களேபரத்திலும் புலம்பினான்.
அவன் புலம்பியது அவர்கள் செவியில்
விழுந்தது போலும், “இங்க இருக்கற போலீஸ் ஸ்டேஷன்லயா? பொய்யா சொல்றீங்க? மரியாதையா நடங்கடா ஸ்டேஷனுக்கு” என்று சொல்லி
எங்களை அந்தக் கோலத்திலேயே ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்றனர். அங்கு
சென்றதும் குழந்தையைப் பார்த்த மாத்திரத்தில் எங்களை விட்டுவிட்டு, ஓடிச் சென்று,
அந்தக் கும்பலில் இருந்து அப்பா, மாமா, சித்தப்பா என்று குழந்தையைத் தூக்கிக் கொஞ்சத் தொடங்கினர். குழந்தையும் அவர்களைக் கண்டதும் அவர்களை நோக்கி ஓடத் தொடங்க.... போலீசார் அவர்களைக் கண்டித்தனர்.
“கூட்டதுல இப்படியா அஜாக்கிரதையா தவற
விடுறது? ஜாக்கிரதையா இருக்கத் தெரியாதா?
இனி இந்த மாதிரி அஜாக்கிரதையா இருக்காதீங்க”...என்று கண்டித்து ஒரு பெரிய லெக்சரே
கொடுத்தார்கள். அவர்களிடமும் அவர்கள் குலம்,கோத்திரம் எல்லாம் வாங்கிக் கொண்டு, குழந்தை அவர்களுடைய குழந்தைதான் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டனர்.
நேரம் 9.30 ஆகியிருந்தது. போயே போச்சு! இரவு உணவும்! நையப் புடைத்தார்களே தவிர எங்களை யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை! நாங்கள் அங்குத் தேவையில்லாத ஆட்களாக மாறியதால் நடந்தோம், கல்லூரியை
நோக்கி, ஹாஸ்டலில் போய் சகாக்களிடம் எங்கள் வீர சாகசத்தின் மானம் கப்பலேறாமல்
இருக்க என்ன பொய் சொல்லி சாமாளிப்பது என்று சிந்தித்துக் கொண்டே!.
அட நான் குப்பை கொட்டிய காலேஜ்......
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குநண்பரே....
கல்லூரியில் படித்த நாட்களில் செய்த அற்புதங்கள் நன்றாக உள்ளது... அதுவும் குழந்தை பற்றி சொல்லிய கதை நன்று அதிலும்.... பக்கத்தில் இருந்த பெண்மணியிடம் குழந்தை கொடுத்து விட்டு அந்த பெண்மணியின் பேச்சை வைத்து அவள் தாய் இல்லை என்பதை அறிந்து குழந்தையை கவல்துறையிடம் ஒப்படைத்தது.. நல்ல விடயம்
ஆனால் குழந்தைக்கு சொந்தக்காரர்கள் இவர்கள்தான் பிள்ளை கடத்தினவர்கள் பிடியுங்கட என்று சொல்லி அடிவாங்கிய நினைவையும் சொல்லியுள்ளிர்கள் நல்லது செய்தால் விபரம் விளங்காமல் செயற்படும் மனிதர்கள் இவர்கள்தான்...இருந்தாலும் கல்லூரியில் உள்ள நண்பர்களை எப்படி சமாளிப்பது என்ற கருத்து எழுதாமல் அடுத்த பகுதி தொடர்வது போல நிக்கிறது இறுதியில்...சிறப்பாக உள்ளது... வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
பதிலளிநீக்குத.ம 2வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்லது செய்யப் போய், இப்படி (ஆகும்) ஆகி விட்டதே... எப்படியோ மனதில் ஒரு திருப்தி இருந்திருக்கணும்....
பதிலளிநீக்குயாத்தாடி... புள்ள புடிக்கிற குரூப்பா நீங்க...? சூதானமா இருந்துக்கனும் போல...!
பதிலளிநீக்குஅல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...
நல்லது செய்ய போய் இப்படி அடிவாங்கும்படி ஆகிவிட்டதே! எப்படியோ பொறுப்பா குழந்தையை ஒப்படைச்சி இருக்கீங்க! பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குஇப்படி நடந்தால் நல்லது செய்யத்தான் மனசு வருமா ?காவலர்கள் கூட உங்கள் நல்ல மனதை புரிந்து கொள்ளவிலையே !
பதிலளிநீக்குநீங்களும் எங்கட ஊரில் படித்ததை அறிய மகிழ்ச்சியாய் இருந்தது !
த ம 5
மதுரைத் தமிழனுக்கு நன்றி!
பதிலளிநீக்குமிக்க நன்றி ரூபன் தம்பி! தங்கள் கருத்திற்கும், ஓட்டிற்கும்!
பதிலளிநீக்குDD மிக்க நன்றி! தங்கள் கருத்திற்கு!
பதிலளிநீக்குஹாஹாஹா நைனா நன்றி நைனா! தங்கள் நகைச்சுவையான பின்னூட்டத்திற்கு!
பதிலளிநீக்குஆமாங்க! நன்றிங்க! பாரட்டிற்கும், கருத்திற்கும்!
பதிலளிநீக்குஜி! ஆமாம் நானும் மதுரைக்காரந்தான் ஒரு வகையில! ஆமாம் என்ன செய்ய காலம் கெட்டுப் போச்சு! நல்லதுக்கு காலம் இல்லையே!
பதிலளிநீக்குநன்றி! ஜி!
ஹா ,ஹா ,ஹா ..செம காமெடி. அதுக்குதான் எப்பவும் நல்லது பண்ணனும். இப்டி திடீர்னு பொருப்பானவங்களா மாறின இப்படி தான் நடக்கும்!
பதிலளிநீக்குஹாஹா ரசித்தோம்! சகோதரி! ஐயோ நாங்க ரொம்.......ப நல்லவங்க! சரிதானுங்க! ஒத்துக்கறோம்! வேற வழி!!!??
பதிலளிநீக்குமிக்க நன்றி!
நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்நானும் மதுரைக்காரந்தான்
பதிலளிநீக்குமதுரைத் தமிழா இது என்ன?ஹஹஹஹ நம்ம வைகைப் புயல் சொல்றா மாதிரி 'நானும் ரௌடிதான் நானும் ரௌடிதான்" அப்படினு.......
பதிலளிநீக்குஒரு நாள் மதுரைல தங்கினாலே அவர் மடுரைகாரனாகிவிடுவார். அந்த அளவுக்கு மதுரைக்கு ஈர்ப்பு சக்தி! 3 வருஷம் தங்கிப் படிச்ச எனக்கு....எப்படி இருக்கும்?!!!! மட்டுமல்ல...நான் மதுரைப் பக்கம், தேனி, கம்பம் பக்கத்துல இருக்கற ராசிங்கப்புரத்துலதான் அவதரித்தேன்.....அதனால நானும் உங்கலை போல் மதுரைக் காரந்தான் மதுரைகாரந்தான் அப்படினு கூவலாம் பெருமையா....
மதுரைத் தமிழரே.....இருந்தா...மதுரையே உன்னால் இருந்தேன்...விருந்து நியூயார்க்கில் /நியூஜெர்சியில் என்றாலும் வேண்டேன்!.......
(நீங்கள் எனக்கு ரொம்ப ஜூனியராக இருப்பீர்கள் இன்று நினைக்கிறேன்.....)ரொம்ப சதோஷமாக இருக்கிறது! பதிவர்களில் நிறைய பேர் மதுரைக்காரர்களாக இருப்பதைப் பார்க்கிறோம்!
நல்லது செய்யப்போய் இப்படி அடி வாங்கி விட்டீர்களே.....
பதிலளிநீக்குபழைய நினைவுகளை எங்களுடன் சுவையாகப் பகிர்ந்து கொண்டது நன்று.
மிக்க நன்றி! நண்பரே! தங்கள் கருத்திற்கு! இன்னும் உள்ள பகிர்வுகள் பதிவுகளாக அவ்வப்பொழுது வரலாம்!
பதிலளிநீக்கு