ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

ஆனைக்கு அடி சறுக்குவதெல்லாம் இல்லை...சறுக்குவது எல்லாம், வனத்துறைக்கும், சரிவதெல்லாம் அவர்கள் கட்டிய மின்சார வேலிகளும்தான்






        பாலக்காடு, வாளையார் வனப்பகுதியில், காட்டானைகளால்  பெரும் பிரச்சினையாக நீண்ட காலமாக இருந்து வருகின்றது. வனப்பகுதியொடு சேர்ந்து வாழும் மக்களின் வயல்களும் , வாழை மற்றும் தென்னை மரங்களும் காட்டானைகளால்  அழிக்கப்படுவது இடையிடையே நடந்து கொண்டுதான் இருக்கிறது.  பாவம், மனிதர்களும் பலியாவதும் உண்டு.










       


அது போல், ரயில் என்ஜினில் மோதி இடையிடையே யானைகளும், யானைக் குட்டிகளும் இறப்பதும் உண்டு. 





வனத்துறைக்கு, இங்கு, காட்டானைகளை உள்  வனப்பகுதிக்கு விரட்டி விடச், செய்யமுடிகின்ற ஒன்றே  ஒன்று, அவை வரும் வழிகளில் மின்சார வேலிகளைக் கட்டுவது என்பதுதான்.  அதிசயம் என்னவென்றால், வேலி  கட்டிய பின் ஒரு வாரம் வரை யானைகள் நல்ல பிள்ளைகளாக  வேலிக்கு இப்புறம் வராமல் விலகிப் போகுமாம்.  



பிறகு அவை கூடி ஆலோசிக்குமோ என்னமோ தெரியவில்லை.  ஒரு வாரத்திற்குப் பின் கூட்டமாக வந்து வேலிக்கு அருகே உள்ள மரங்களை, வேலிகளின் மேல் சாய்த்து வேலிகளைத் தகர்த்து, அது வழியாகக் கடத்தி விடப்படும் மின்சாரத்தை பூமிக்குள் போக வைத்த பின், எந்த வித ஷாக்கும் தங்களைத் தாக்காதவாறு, ஷாக்கை முழுவதுமாக வனத்துறைக்குக் கொடுத்து (என்ன ஒரு புத்திசாலித்தனம்! புன்னகை செய்யத் தெரியாததால் ஆனை நகை செய்து) எப்போதும் போல் வயல்களிலும், தோப்புகளிலும் மேய்ந்து தங்கள் பசியைப் போக்கிக் காடேறுகின்றனவாம்.  

வனத்துறையினரும் தங்கள் தலையைப் பிய்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழி தெரியாமல் தவிக்கின்றார்கள். மட்டுமல்ல சில மாதங்களுக்கு முன், பன்றிமடையில், ஒரு யானை ரயில் என்ஜினில் மோதி, கால் ஊனமானதன் பின் அவ்வழியாக யானைகள் வருவதே இல்லையாம். (அதற்கு வேறு மாநாடு அல்ல 'மா'காடு கூடியிருக்கலாம்)







காட்டை மனிதர்கள் அழிப்பதால் தான் மனிதர்களுக்கும், யானைகளுக்கும் இடையே போராட்டம் வருகின்றது.  காட்டை விழுங்கிய மனிதர்கள், யானைகள் தங்களுக்குத் தீனி கிடைக்காத வேளைகளில் மனிதர்கள் வாழும் பகுதியிலுள்ள யானைகளின் தீனிகளைத் தின்ன விடாமல் செய்கின்றனர். அப்படி அவர்கள் யானைகளை விரட்ட, செய்யும் ஒவ்வொரு தந்திரத்தையும் எப்படி முறியடிப்பது என்றுத் தீவிரமாகச் சிந்தித்து தீர்மானங்களை அந்த யானைகள் எடுக்கின்றனவோ? வனப்பகுதிகளில் இனி, ஆனைக் கிடங்குகளைத் தோண்டி, யானைகளிடமிருந்து மனிதர்களைக் காக்கத் திட்டம் தீட்டி, அதிகக் கோடிக் கணக்கானப் பணத்தை எப்படி விழுங்குவது என்று சிந்திக்காமல் வேறு பயனுள்ள, யானைகளைப் பாதுகாக்கும் வழிகளை ஆராய்வதுதான் நல்லது.












மனிதன் அவன் தேவைகளுக்காகப் புதிய, புதிய அதிக விளைச்சல் தரும் பயிர்களை எல்லாம் கண்டு பிடித்து விவசாயம் செய்து சுகமாய் வாழும் போது  யானை போன்ற வன விலங்குகளுக்கு, வருடம் முழுக்க உண்டு வாழ, காடுகளை அழிக்காமல் பாதுகாத்து, உள் வனத்தில் ஏன் மூங்கில் மற்றும் கற்றைக் காடுகளை மனிதன் வளர்த்துக் கொடுக்கக் கூடாது?  யானைகள்,தங்கள் பகுதிக்குள் வரும் போது  மின் வேலி கட்டி அவற்றை விரட்டுவதை விட, அவை நாட்டுப் பகுதிக்கு வர வேண்டிய அவசியம் நேரா வண்ணம் வனத்தில் அவர்களது பசிக்குத் தேவையானவற்றை நட்டு வளர்க்கக் கூடிய ஒரு திட்டம் தீட்டி யானைகள், அவற்றின் இடத்திலேயே தங்கக் கூடிய சூழலை ஏன் ஏற்படுத்தக் கூடாது? இந்த பூமி மனிதர்களாகிய நமக்கு மட்டும் சொந்தமான ஒன்று அல்லவே!  


படங்கள் : courtesy google

34 கருத்துகள்:

  1. //யானைகள்,தங்கள் பகுதிக்குள் வரும் பொது மின் வெளி கட்டி அவற்றை விரட்டுவதை விட, அவை நாட்டுப் பகுதிக்கு வர வேண்டிய அவசியம் நேரா வண்ணம் வனத்தில் அவர்களது பசிக்குத் தேவையானவற்றை நட்டு வளர்க்கக் கூடிய ஒரு திட்டம் தீட்டி யானைகள், அவற்றின் இடத்திலேயே தங்கக் கூடிய சூழலை ஏன் ஏற்படுத்தக் கூடாது? இந்த பூமி மனிதர்களாகிய நமக்கு மட்டும் சொந்தமான ஒன்று அல்லவே //
    மிக மிக நியாயமான கேள்விகள் அய்யா.

    பதிலளிநீக்கு
  2. வாழ்வியல் போராட்டம் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் என்பதனை உங்கள் பதிவு மூலம் அறிந்து கொள்ள முடிகிறது tha.ma 1

    பதிலளிநீக்கு
  3. ஆனைக்கு அடி சறுக்கும் மனிதர்களுக்கு குடி சறுக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் ஸ்டைல் பதில்......இது உங்களுக்கே உரித்தான ஒன்று! ரசித்தோம்!!

      நீக்கு
  4. உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுமே மனிதனால்தால்
    தொல்லைகளை அனுபவிக்கின்றன.
    ஆனால் யானைகள் அட்டகாசம் என நாளிதழ்களில் செய்தி வருகிறது.

    பதிலளிநீக்கு
  5. இதுல இர்ந்து இன்னா தெர்து...? ஆற விட அஞ்சுதான் பெர்சு...!

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

    பதிலளிநீக்கு
  6. மிகவும் 'புத்திசாலி'யான யானைகளுக்கு நடக்கும் கொடுமை - கொடூரம்... 'விலங்காகி' விட்ட மனித மனத்தால்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் டிடி! மிகச் சரியாக சொன்னீர்கள் "விலங்காகி" விட்ட மனித மனத்தால்....நமக்கு 6 அறிவு இருந்தும் அந்த 6 வ்து அறிவை சுயநலத்துக்காகத் தானே உபயோகிக்கின்றோம்! யாரை வீழ்த்தி விட்டு மேலே செல்லுவது என்று!!!!

      மிக்க நன்றி!

      நீக்கு
  7. யானைகளுக்கு பழி வாங்கும் குணம் அதிகம் என்று சொல்லப் படுவதை இதுவரையில் நான் நம்பவில்லை ,ஆனால் நடப்பைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது !
    மனிதனால் அதனுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் போதுஅதுவும் மனிதனின் செய்த வேலையை திருப்பி செய்து விடுகிறதே !
    நல்ல ஆலோசனை கொடுத்து உள்ளீர்கள் அரசு உணர்ந்தால் நல்லது !
    த ம 5

    பதிலளிநீக்கு
  8. கரிகாலன் அவர்களுக்கு, தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி!

    தொடர்கின்றோம் தங்களையும்!

    பதிலளிநீக்கு
  9. மதுரைத் தமிழனுக்கு.......மனிதன் சுயநல விரும்பியாக, உலகை ஆள நினைக்கும் வரை இந்தப் போராட்டம் இருக்கத்தான் செய்யும்! ஒவ்வொரு விலங்கினமாக அழிந்து வரும் நிலையில் மனித இனமும் ஒரு நாள் அழிந்து உலகம் திரும்பவும் black hole theory லிருந்து ஆரம்பிக்குமோ?!!!!

    பதிலளிநீக்கு
  10. அப்படித்தான் செய்தி வரும் நண்பரே! மனிதனுக்கு எப்பவுமே தன்னை விடத் தாழ்ந்த நிலையில் இருப்பவரை நோக்கிக் கை நீட்டித்தானே பழக்கம்! விலங்குகள் நினைத்தால் நாம் எல்லோருமே அழிந்தோம் அவர்களின் பலம் தெரியாமல் நாம் பேசி விடுகின்றோம்!!

    கருத்திற்கு மிக்க நன்றி!


    //உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுமே மனிதனால்தால்
    தொல்லைகளை அனுபவிக்கின்றன.
    ஆனால் யானைகள் அட்டகாசம் என நாளிதழ்களில் செய்தி வருகிறது.//

    பதிலளிநீக்கு
  11. ஆற விட அஞ்சுதான் பெர்சு நைனா! கரீக்டா சொன்னபா!! காட்டுல அதுங்களுக்கு சாப்பாடு இல்லதப்ப மட்டும் தான் நம்ம வூட்டாண்ட வருதுங்க....போற போக்குல இம்மாம் பெரிய உடம்ப வெச்சுகிட்டு சும்மாவா போவும்....அதான் நாலு தள்ளு தள்ளு தள்ளிகினு போகுதுக.....ஆனா நம்ம பேமானிங்க மனுசங்க....ச்யநலவாதிங்க....பரம்பரைக்கே சொத்து சேத்து ...அதன் இன்னா பேரு அது வாயில கூட நொழய மாட்டேங்குது...ஆங்க்....சுவிசு பாங்ககாமே அங்க எல்லாம் கொண்டு பதுக்குறானுங்க.........அஞ்சுங்க பாவம்...நாம சும்மா இருந்தா அதுங்களும் சும்மாருக்கும்.....

    ரொம்ப நன்றி தங்கள் அருமையான கருத்திற்கு!

    பதிலளிநீக்கு
  12. ஆமாம் பகவான் ஜி! நம்மை நாம் தற்காத்துக்கொள்ள வில்லையா அதுவும் மற்றவரை அடித்து வீழ்த்தி....வஞ்சனை, பொறாமை எல்லாம் கலந்த 6வது அறிவால்....ஆனால் அவை தனது இடம்,உணவு பறி போவதால் மட்டுமே உள்ளே வந்து கோபத்தில், போகிற போக்கில் நம்மை எல்லாம் அடித்து விட்டுச் செல்லுகின்றன!!!

    மிக்க நன்றி ஜி!

    பதிலளிநீக்கு
  13. ஜி! அரசு செய்தால் நல்லது என்று சொல்லுகின்றீர்கள்....அரசுக்கு இதற்கெல்லாம் எங்கு நேரம்....பெட்டி கொடுப்பதிலும், வங்குவதிலும் அவர்கள் எல்லோருமே எப்போதுமே பிசிதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாலு யானையை பாராளுமன்ற ,சட்டமன்ற ஹாலில் விட்டால்தான் உறைக்குமோ ?

      நீக்கு
  14. மிருகங்களுக்கு உள்ள அறிவை மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் யானைகளின்
    புத்திசாலித்தனம் வியக்கவைக்கிறது!!

    பதிலளிநீக்கு
  15. சரியாகச் சொன்னீர்கள் ஐயா! மிருகங்கள் நம்மை விட புத்திசாலிகள் தான்! நாம் அவற்றைக் கூர்ந்து கவனித்து, இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால் வாழ்வியலையே கற்றுக் கொள்ளலாம் தான்..

    மிக்க நன்றி ஐயா! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்!

    பதிலளிநீக்கு
  16. விலங்குகளின் வழியில் குறுக்கிடுவது மனிதர்களாகிய விலங்குகள்தான்! அருமையான பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யானையை அம்பாரி கட்டி ஏற்றியதற்கு மிக்க நன்றி! அஹ்டான் 7 வது ஓட்டு!

      நீக்கு
  17. மிக்க நன்றி! தங்கள் முதல் வருகைக்கும், அருமையான..."மனிதர்களாகிய விலங்குகள்" என்று சொன்ன கருத்திற்கும்!!!!

    பதிலளிநீக்கு
  18. வணக்கம்
    அண்ணா

    தங்களின் பதிவை படித்த போது என்னையும் ஒரு கனம் சிந்திக்கவைத்தது.....
    இந்த பூமி மனிதர்களாகிய நமக்கு மட்டும் சொந்தமான ஒன்று அல்லவே? நல்ல விழிப்புணர்வுக் கேள்வி... யானைகள் வாழும் இடங்களைில் மனிதன் வாழ்ந்தால் இப்படியான நிகழ்வு நிகழ்வதை யாராலும் தடுக்க முடியாது...
    ------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    மின்சாரத்தை பூமிக்குள் போக வைத்த பின், எந்த வித ஷாக்கும் தங்களைத் தாக்காதவாறு, ஷாக்கை முழுவதுமாக வனத்துறைக்குக் கொடுத்து (என்ன ஒரு புத்திசாலித்தனம்)
    ------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    இரு நாட்டு பிரச்சினை போல மனிதனுக்கும் யானைக்கும் நடக்கும் பிரச்சினை யானையும் விட்ட பாடு இல்லை மனிதனும் விட்ட பாடு இல்லை....விடை காண முடியாத புதிர்...பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  19. வணக்கம்
    த.ம 8வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  20. சுதந்திரமாய் திரியும் காட்டு யானைகளை விட
    சுதந்திரமாய் திரியும் மதம் பிடித்த மனிதர்கள்
    பலருக்கு
    யார் வேலி கட்டுவது ?

    அதுவும் மின்சார வேலி !!

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.in
    www.subbuthatha.blogspot.com

    பதிலளிநீக்கு
  21. வணக்கம்..

    நேற்று துளசி அம்மாவை சந்தித்த வேளையில் தங்கள் தளம் பற்றி கூறினார்கள். காட்டு யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் நடைபெறும் போராட்டமும், அவற்றில் யானைகளின் தந்திரம் பற்றி சிறப்பாக கூறியுள்ளார்கள்... சிறப்பு.

    மேலும் விவசாய உற்பத்தியைப் பெருக்க மனிதர்கள் முயற்சிக்கும் அதே வேளையில் காட்டு விலங்குகளுக்கும் பயனுள்ளது போல காடுகளில் மரங்களை நடலாம் என்று கூறியுள்ளது புதிய சிந்தனை.

    பாராட்டுக்கள், தொடர்ந்து எழுதுங்கள்....

    பதிலளிநீக்கு
  22. தாத்தா கருத்து மிக அருமை! மதம் பிடித்த மனிதர்கள்தாம்....மதத்தைப் ப்டித்துக்கொண்டு சண்டை போடும் மனிதர்கள்தான்...!!!!

    மிக்க நன்றி தாத்தா.. தோழி கீதா உங்களைப் பற்றி சொன்னார்.

    துளசிதரன்,கீதா

    பதிலளிநீக்கு
  23. தம்பி வெற்றிவேல்! உங்கள் முதல் வர்கைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி! தோழி கீதா உங்களைப் பற்றிச் சொனார். அருமையகப் பேசியதாகவும் சொன்னார்! பாராட்டுக்கள்!

    உங்களையும் தொடர்கிறோம்!

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  24. ரூபன் தம்பி! தங்கள் கருத்திற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி! நீங்கள் கூப்பிட்டுப் பேசியது மிகவும் சந்தோஷமாக இருந்தது!

    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  25. ஹஹஹா இதுதான் ஜோக்காளி !! ஜி! நல்ல யோசனைதான்! மக்கள் மட்டும்தான் போராடமா? பாராளுமன்ற, சட்ட மன்றத்துக்குள்ள நீங்க MPs, MLAs நீங்க மட்டும்தான் வேட்டிய கிழிச்சு அடிச்சு, மேச, நாற்காலி எல்லாம் போட்டு உடைப்பீங்களோ? நாங்களும் போராடறோம் அப்படினு உள்ள புகுந்தா எப்படி இருக்கும்?!!!! ஜி! நினைச்சுப் பார்த்தோம் சொல்லி சிரிச்சோம்!!

    பதிலளிநீக்கு
  26. மனிதர்கள் கடவுளின் Special படைப்பு அவனுக்குத் தான் இந்த உலகம் முழுவதும் சொந்தம் என்ற முட்டாள் தனமான கருத்துக்களை அடிப்படையாக கொண்டு தான் இன்றுள்ள அனைத்து தேசங்களும், சமூகங்களும் செயல்பட்டு வருகின்றன. உணவுச் சங்கிலியில் மனிதனை விட பிற உயிரினங்களின் பங்கு மிகப் பெரியது, அதன் வாழ்விடங்களை அழித்து நாம் வாழத் தொடங்கியதால் தான் இன்று மனிதனுக்கும் விலங்குகளுக்கும் போட்டி நிலவுகின்றது. மனிதனின் அறிவினால் இந்த விலங்குகளை அடக்கி ஒடுக்கி அழித்து வருகின்றான். காட்டுக்குள் ஊரை உருவாக்கி விட்டு ஊருக்கும் காட்டு விலங்குகள் வந்துவிட்டதாக செய்தி சொல்கின்றான். உணவுச் சங்கிலியை சீர்குலைப்பதன் பராபலனை மனிதன் அனுபவிக்கத் தொடங்கியுள்ளான், விரைவில் மனித குலம் சர்வ நாசம் காணும் காலம் வரப் போகின்றது. அந்த நிலையில் இயற்கையின் தாயன்பை நிச்சயம் உணர்வார்கள். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  27. ம்இக நல்ல ஆணித்தர்மான கருத்து! உண்மையும் கூட! நிச்சயமாக உணரத்தான் போகின்றார்கள்! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  28. விலங்குகளின் இடத்தினை மனிதர்கள் ஆக்ரமித்துக் கொண்டு அவற்றை திட்டுகிறோம்.....

    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  29. ஆம் அதுதான் உண்மை! மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு!

    பதிலளிநீக்கு