செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

ஆவிப்பா-ஒரு பார்வை


    “ஆவிப்பா கேட்பதற்குப் புதுமையாகத்தான் இருக்கிறது இல்லையா?!  “ஹேய் அது ஆவிப்பா! என்று பயந்து விடாதீர்கள்! இது, பதிவர் கோவை “ஆவியின் காதல் பாக்கள்.  ஆவிக்கு ஏதப்பா காதல்?  என்றுக் கேள்வியா?  இது ஆனந்த விஜயராகவனின் காதல் பாக்கள்! காதலியை, கண்களையேத் தூரிகையாய் கொண்டு வரைந்திடும் திறமை மிக்க கவிஞனுக்கு “காதல்ப்பா எழுதுவது ஒன்றும் பிரம்ம சூத்திரம் இல்லையே!

              முதலாம், இரண்டாம் மற்றும் எல்லாக் காதலிகளுக்கும் சமர்ப்பணம் செய்யும் கவிஞர், காதல் கவிதைகளில் புகுந்து விளையாடாமல் இருப்பாரா?! விளையாடிப் பதக்கமே வென்றுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்!

“ஒற்றை வார்த்தையில்
ஒரு பாடல்
“சரிகமபதநீ’”

என்ற ஆரம்பமே ஆரோஹணம்தான்! ஆஹா! சங்கீதத்தில் ஆரோகணம், அவரோகணம் இருந்தாலும், ஆசிரியர், காதலில் ஆரோகணம் மட்டுமே! அவரோகணம் இல்லை என்ற அழகான வெளிப்பாடுடன் ஆரம்பிக்கின்றார்! ஆம்! காதல் பாக்கள் படைத்ததிலும் காதல் அழகு மிளிர்ந்து கூடுகிறதே அல்லாமல் இறங்குவரிசை இல்லை!

கடவுளையே காத்திருக்கச் சொல்லும் காதல் ஹைக்கூ! கடவுள் கூட காதலுக்காகக் காத்திருப்பார் போலும்!  கவிஞரின் வரிகளில்!

காதலுக்குக் கண்ணில்லை என்பார்கள்!  இவர் காதலுக்கு வயதில்லை என்கின்றார்!  ஆம்! அது தோன்றியது எப்போது? மனிதன் தன் ஆறறிவு கொண்டு சிந்திக்கத் தொடங்கியதினாலா இல்லை மனிதன் தோன்றிய காலத்தேவா?!! என்ற கேள்வியும் கேட்டு அவரே இனிமையாகப் பதிலுரைக்கிறார்! எந்த டெக்னாலஜியும் இல்லாத காலத்தே தோன்றியதுதான் காதல்பா என்று!

அவரது சக போட்டியாளன், காதலி கிடைக்காத வருத்தத்தில் காப்பியில் விழுந்து உயிர்விட்ட ‘ஈயாகிப் போக, ஒருவேளை அந்த ஈ ஆவியாக வந்து ஆவியின் ஆவிப்பாவைப் பார்த்து விட்டு “ஈப்பா எழுத ஆரம்பிக்குமோ?!!  இருக்கலாம்! அதற்கு பதிலுரைப்பதாக “ஆவிப்பா இரண்டாவது பகுதியாக வெளிவந்தாலும் வரலாம்!

காதல் என்றாலே பெரும்பான்மையோர் “சோகப்பா, “கோபப்பாவாக எழுதுவார்கள்! ஆனால், நம் ஆவிப்பா எல்லா பாக்களையும் இனிமைப்பாவாக நேர்மறையாக எழுதியுள்ளது மிகவும் ரசிக்கும்படியும், இதமாகவும் உள்ளது!  பாரதியாரே காதல் போயின் சாதல் என்றார். ஆனால் ஆவி, காதலொன்றும் கலிங்கத்துப்பரணியில்லை கஷ்டப்பட்டு சாவதற்கு!  என்கின்றார்!  என்னே அருமையான ஒரு சிந்தனை!

இன்றைய காலகட்டத்திற்கேற்ற “ஹைடெக் ஊடுருவிய பாக்களும் இடையிடையே நெய்திருப்பது, ஆசிரியர் கணினித்துறையில் பொறியியல் பட்டதாரி என்பதையும் சொல்லாமல் சொல்லுகின்றதோ!

இலக்கண வரையறைக்குட்பட்ட கலிப்பா அல்லாமல் இந்த ஆவிப்பா, காதல் இலக்கணத்திற்குள் எழுதப்பட்டிருப்பதால், மழைச் சாரலாகவும், துள்ளி ஓடி வரும் குற்றாலமாகவும், பல இடங்கள் மனதிற்கு இதமளிக்கும் சுகப்பாவாகவும் உள்ளது. மறுபடியும் வாசிக்கத் தூண்டிஹை!” சொல்ல வைக்கும் ஹைக்கூக்கள்! ஒரு சில பாக்களில் காதல் ரசம் சொட்டும் வார்த்தை ஜாலங்கள்!

“மையல் கொள்ளும் போது
நாணிச் சிவக்கும்
தையல் பெண்ணே
நீ என் நெஞ்சம்
பறிக்கிறாய்!

“கோலமயில் நீ
கோலம் போடும்
கோலத்தைக் காண
கண்ணுறக்கமில்லாமல்
அலங்கோலமாய் நான்!!

இது போன்று, “இடை, “தினம் என்ற சொற்களை வைத்தும் பாக்களில் பௌண்டரி அடித்துள்ளார், கோவை ஆவி!  ஒவ்வொன்றின் அழகையும் சொல்ல விழைந்தால் எல்லா பாக்களையும் நாங்கள் இங்கு தர வேண்டி வரும். இந்த விமர்சனப் பதிவு, எங்கள் வலைப்பூவை மற்றொரு பதிப்பகம் ஆக்கிவிடும், நஸ்ரியா இல்லாதப் பாலைவனமாய்! (அந்த அளவிற்கு நஸ்ரியா “ஆவிப்பாவுடன் இரண்டறக் கலந்திருக்கிறார்!)

ஆசிரியற்கு, காதல்பா இயற்றியதால் கல்லறைதான் கிடைத்ததாம்!.  இல்லை! காதல்பாவாகிய “ஆவிப்பா காதல் சின்னமாகக் கூறப்படும் தாஜ்மஹாலையும் விஞ்சி நிற்கிறது எனலாம்! அத்தனைப் பாக்களுமே காதல் நயாகராதான்! அவரது கன்னி முயற்சியாகிய இந்த “ஆவிப்பாவை வாசித்து அந்த இனிய உணர்வுகளை, காதல் மொழியின் அழகை, நூலகமாய் பாதுகாக்க, கல்லறை அல்லாது பல இதய அறைகள் கிடைத்துள்ளன என்று சொன்னால் அது மிகையாகாது! அவருக்குக் கிடைத்த வெற்றியே!

சுருங்கச் சொன்னால், வாசித்தவுடன் இது ஆவியாகிப் போகிற ‘ஆவிப்பா இல்லை! வாசிப்பவரின் மனதை, உடனே தாவிப் பிடிக்கும் “தாவிப்பா! எப்போதும், எல்லோர் மனதிலும் ‘ரிங்க்டோனாய் ஒலிக்கப் போகும் “கூவிப்பா”! வாசிப்பவர் மனதில் நிரந்தரமாகத் தங்கிவிடும் “மேவிப்பா! (அப்பா!  மூக்சு வாங்குதுப்பா!!)


வாழ்த்துக்கள்! கோவை ஆவி எனும் ஆனந்த விஜயராகவன்!


இந்த நூலை அழகு செய்திருக்கும் பதிவர்களால் "வாத்தியார்" என்று செல்லமாக, நட்புடன் அழைக்கப்படும் பதிவர் திரு பாலகணேஷ் அவர்களைப் பாராட்டியே ஆக வேண்டும்! மிக நேர்த்தியான நூலழகு! வாழ்த்துக்கள் "வாத்தியாரே"!!

-கீதா, துளசிதரன்

வெளியீடு" இந்திரா ப்ரியதர்ஷினி பப்ளிகேஷன்ஸ், ஆச்சிப்பட்டி, பொள்ளாச்சி
கிடைக்கும் இடம் Discovery Book Palace PVT.LTD
K.K. Nagar West, Chennai-78 (Near Pondicherry Guest House)












24 கருத்துகள்:

  1. என்ன நம்ம வாத்தியார் எல்லோருக்கும் காதல் பாடம் சொல்லி தருகிறாரா என்ன? வாத்தியாரின் சிஷ்யர்கள் எல்லாம் காதல் படைப்பில் இறங்கி விட்டார்கள்..

    வாத்தியார்கிட்ட பாடம் கத்துக்க் ஆசை கரெஸ்பாண்ட் கோர்ஸில் காதல் பற்றி நமக்கு பாடம் எடுப்பாரான்னு கேட்டு சொல்லுங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா! ஹலோ! மதுரைத்தமிழனுக்குக் காதல் பாடமா? திருநெல்வேலிக்கே அல்வாவா?!!! என்னாச்சு? பூரிக்கட்டையால் அடியா? !!!!! நண்பர் வெங்கட் நாகராஜ் தொடங்கிவிட்ட தோய்க்கும் பேட்டினால் அடியா?!!!!!!! வாத்தியாருக்கே நீங்கள் பாடம் எடுத்துவிடுவீர்கள்! இருந்தாலும் கேட்டுச் சொலிகிறோம்!

      நீக்கு
  2. நூலினை முழுமையாக வாசிக்கக்க் இன்னும் கிடைக்கவில்லை நல்ல முயற்ச்சிக்கு உங்களின் இந்த் ஊக்கம் இன்னொரு உந்து சக்தி !

    பதிலளிநீக்கு
  3. ரசனையான விமர்சனம்... இனிய நண்பர் ஆவிக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. ஆவிப்பா என்று பெயர்வைத்த ஆவி அவர்களுக்கு நன்றி
    எதுகை மோனையில் என் சகோ சிக்ஸர் மேல் சிக்ஸர் தூக்க இப்படி ஒரு தலைப்பு அவசியம் தானே !
    அருமையான மதிப்புரை படிக்கும் ஆவலை தூண்டுகிறது சகோ!

    பதிலளிநீக்கு
  5. நல்லதோர் அறிமுகத்துக்கு நன்றி.. :) :)

    பதிலளிநீக்கு
  6. /சுருங்கச் சொன்னால், வாசித்தவுடன் இது ஆவியாகிப் போகிற ‘ஆவிப்பா’இல்லை! வாசிப்பவரின் மனதை, உடனே தாவிப் பிடிக்கும் “தாவிப்பா”! எப்போதும், எல்லோர் மனதிலும் ‘ரிங்க்டோனாய்’ ஒலிக்கப் போகும் “கூவிப்பா”!/// ப்ப்ப்ப்பாஆ..

    ஆவி ஏதும் போன் போட்டு மிரட்டி எழுத சொன்னாரா :-))))

    உற்சாகமான புத்தக விமர்சனம்.. இந்த புத்தக விமர்சனத்தை முன் உதாரணமாகக் கொண்டு நானும் ஆவிப்பாவிற்கு போட்டியாக ஏதேனும் பா எழுத வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன் :-))




    பதிலளிநீக்கு
  7. என்ன சார் இது, தமிழ்மணத்தில் இதுவரை 13 பேர் மைனஸ் மார்க் போட்டிருக்கிறார்கள்! ஒருவேளை, நஸ்ரியாவின் அபிமானிகளாக இருப்பார்களோ? ஆவியின்மீது கொண்ட பொறாமையினால் மைனஸ் போட்டிருப்பார்களோ? எதற்கும் பாலகணேஷ் மூலம் நஸ்ரியாவிடம் சொல்லிவிடுவது நல்லது....

    பதிலளிநீக்கு
  8. தங்கள் முதல் வருகைக்கும்.....ப்பா! (ஹாஹாஹ) விற்கும் மிக்க நன்றி! போரடித்துவிட்டதோ! பாவம் ஆவி!

    பதிலளிநீக்கு
  9. நன்றி ஆவி! உண்மையை, அதாவது நாங்கள் ரசித்ததை ஏதோ எங்களுக்குத் தெரிந்த மொழி நடையில் எழுதினோம் அவ்வளவே!

    பதிலளிநீக்கு
  10. #அவரோகணம் இல்லை#
    காரணம் ,ஆவியே கனமாய் இருப்பதாலா ?
    த ம 7

    பதிலளிநீக்கு
  11. சீனு, மிக்க நன்றி தங்கள் பாராட்டிற்கு! நீங்கள் அற்புதமாக எழுதுவதை விடவா?!

    ஆவி ஃபோன் போட்டு மிரட்டவில்லை! அவரது "ஆவிப்பா"வே மிரட்டி விட்டது!

    கண்டிப்பாக நீங்களும் பா எழுதுதுங்கள்! விமர்சனம் வரும்!

    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  12. ஹாரி.....அட//

    முதல் வருகைக்கும் "அட" க்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  13. இருக்கலாம்! ஸார்! திரு பாலகணேஷ் மூலம் சொல்லிட்டாப் போச்சு ஸார்!

    நன்றி!

    பதிலளிநீக்கு
  14. ஹாஹாஆ ஜி! நீங்கள் சொல்லுவது சரிதான்! ஆவி எப்பொதுமே லைட் தான்....அத்னால பறக்கும்....ஆரோஹணமே!

    நன்றி!

    பதிலளிநீக்கு
  15. நன்றி! முகம் தெரியாத பின்னூட்டத்திற்கு!

    பதிலளிநீக்கு
  16. சகோதரி மைதிலி! மிக்க நன்றி தங்கள் பாராட்டிற்கு!

    பதிலளிநீக்கு
  17. நல்ல அறிமுகம்..... ஏன் இத்தனை மைனஸ் ஓட்டு.... புரியல! :)

    பதிலளிநீக்கு
  18. மிக்க நன்றி! அதாங்க தெரியல....ஏன் இத்தனை மைனஸ் ஓட்டு என்று! எங்களுக்கு முதலில் அதைப்பற்றிய ஞானம் இல்லை! அதனால் தெரியவில்லை! பின்னர் இராயச் செல்லப்பா ஸார் சொன்ன பிறகுதான் அதில் ஏதோ இருக்கிறது என்று அவரைக் கூப்பிட்டுக் கேட்டோம். அதன் அர்த்தமே பின்னர்தான் தெரிந்தது! பரவாயில்லை! காரணம் தெரியவில்லை! தெரிந்தால நன்றாக இருக்கும்! எழுதியது சரியில்லை என்றால் திருத்திக் கொள்ளலாமே என்பதால்!

    பதிலளிநீக்கு