படம் இணையத்திலிருந்து
மணி
4 என்று டிஜிட்டல் கடிகாரம் ஒலி எழுப்பிப் பேசியது. திடுக்கிட்டு விழித்தாள் சம்யுக்தா.
ஓ! மணி நான்கா? அவ்வளவு நேரம் தூங்கியிருக்கிறேனா? அப்போதுதான் உரைத்தது தான் மதிய
உணவிற்குப் பிறகு, ஹாலில் இருந்த மூங்கில் கூடை சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு
செய்தித்தாள் வாசிக்கத் தொடங்கி ஏதேதோ நினைவுகளில் மூழ்கிட, செய்தித்தாள் நெஞ்சின்
மேல் சரிந்திட தான் அப்படியே உறங்கிப் போயிருக்கிறோம் என்பது. ஞாயிற்றுக் கிழமை. என்றாலும்
காலையில் மருத்துவமனை வரை சென்று ஏதேனும் முக்கியமான கேஸ் இருக்கிறதா என்று எட்டிப்
பார்த்துவிட்டு வந்து, உணவு உண்டு இதோ மணி
4..
மூக்குக்
கண்ணாடியைக் கழட்டி அருகிலிருந்த முக்காலியின் மீது வைத்துவிட்டு, எழுந்து சென்று முகத்தைக்
கழுவிக் கொண்டு, சோர்ந்திருந்த மனதிற்கு ஒரு கப் காஃபி குடித்தால் தேவலாம் என்று தோன்றிட
சமயலறைக்குள் சென்றாள்.
ஏனோ
மனமும், உடலும் சோர்ந்து உள்ளது போல் தோன்றியது. மனம் சோர்ந்தால் உடலும் சோர்வடையும்தான்
என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே வாசல் மணி ஒலித்தது. அடுப்பிலிருந்த பாலை சிம்மில்
வைத்துவிட்டு, அஞ்சலையாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே கதவைத் திறந்தாள். அஞ்சலையேதான்.
அஞ்சலை அந்த வீட்டில் அவர்களுக்கு உதவியாக இருப்பவள். அடுத்த தெருவில் இருப்பவள்.
“என்னமா
இன்னிக்கு அசந்து தூங்கிட்டீங்க போலருக்கு. கொஞ்சம் முன்னாடி வந்தேன். பெல் அடிச்சேன்
அனக்கம் இல்லைன உடனே ரேஷன் கடை வரைக்கும் போய்ட்டு வந்துரலாம்னு போய்ட்டு வந்தேன்.”
“ஓ!
பாருங்க, நீங்க வந்து பெல் அடிச்சது கூடத் தெரியாம தூங்கியிருக்கேன். அம்மாவும், அப்பாவும்
இருந்திருந்தா இப்படித் தூங்கியிருக்க மாட்டேன். இருங்க இப்பதான் பால் வைச்சேன் அடுப்புல
உங்களுக்கும் சேர்த்துக் காஃபி கலக்கறேன்.”
இன்றைய
செய்தித்தாளில் அவனை பற்றிய அந்தச் செய்திதான் தன் மன உளைச்சலுக்குக் காரணம் என்று
நன்றாகத் தெரிந்தது.
“என்னாச்சும்மா?
பால் பொங்குறது கூடத் தெரியாம என்னவோ யோசனை. ஏதாவது ரொம்பச் சிக்கலான கேஸோ?” என்று
கேட்டுக் கொண்டே அஞ்சலை அடுப்பை அணைத்தாள்.
“ஓ!
மை காட்”
“ம்ம்ம்
சிக்கலான கேஸ் தான் என்று சொல்ல வாய்வரை வந்ததை நிறுத்தி…அதெல்லாம் இல்லை அஞ்சலை…..ஒரு
எமர்ஜென்சி கேஸ்….சரி அத விடுங்க…இருங்க காஃபி. குடிச்சுட்டு அப்புறமா வேலை பாருங்க…”
“அம்மா
உங்ககிட்ட ஒரு யோசனை கேக்கணும்னு நினைச்சேன் கேக்கட்டுமா? இப்ப நீங்க ஃப்ரீதானேமா?”
“சொல்லுங்க
அஞ்சலை”
“என்
பெரிய பொண்ணுக்கு பரிசம் பேச வந்தாங்க…..எங்க ஊருதான் தூரத்துச் சொந்தம்…பையன் படிச்சுட்டுப்
பட்டணத்துல வேலை செய்யுறாப்ல”
“ஓ!
படிச்ச பையன்! நல்ல விஷயம்! என்ன வேலை செய்யறாரு பையன்?”
“அத்த
ஏன் கேக்குறீங்க என் பொண்ணு வேண்டாங்குது”
“ஏன்
பிடிக்கலையாமா?”
“இது
கொளுப்பெடுத்து அலையுது….. நாந்தான் படிக்கலை கஷ்டப்படுறேன்னு பொம்பளைப் பிள்ளை… நாலெளுத்து
படிக்கட்டும்னு படிக்க வைச்சது தப்பு போல..படிச்சா இப்படித்தான் போல” என்று சொன்னவள்,
தான் அதிகம் பேசிவிட்டோமோ? ஐயோ, பெரிய படிப்பு படித்து, நல்ல டாக்டராகக் கல்யாணம் செய்துகொள்ளாமல்
வாழும், 40 வயதாகும் சம்யுக்தா தவறாக எடுத்துக் கொண்டுவிடுவாளே என்று தயங்கிட, அதைக்
கணித்துவிட்ட சம்யுக்தா..
“அஞ்சலை
ஏன் நீங்க தயங்குறீங்கனு தெரியுது. நான் தப்பா எடுத்துக்குவனோனுதானே? அந்தக் காலமெல்லாம்
கடந்தாச்சு அஞ்சலை… நீங்க சொல்லுங்க…”
“ஐயோ
அம்மா தப்பா எடுத்துக்கிடாதீங்க. உங்க குடும்பங்கள்ல இதெல்லாம் பிரச்சனை இல்லை ஆனா
எங்க குடும்பங்கள்ல சனங்க ஏதாவது பேசுவாங்க. எங்க குடும்பங்கள்ல எல்லாம் பொம்பளைப்
பிள்ளைய நிறைய படிக்க வைச்சுட்டா பையன் கிடைக்கறது கஷ்டம். பையன் சரினு சொல்லிட்டாப்புல.
என் பொண்ணுதான் வேண்டானுது. தான் எஞ்சினியரு. பையன் டிப்ளமாதான். பையன் படிப்பு தன்னை
விடக் கம்மினு. இத்தனைக்கும் பையனுக்கு நல்ல வேலை, இவளைவிட சம்பளம் கூடுதலு…”
“அப்புறம்
என்ன?”
“அவன்
சொல்லிக் காமிப்பானாம். ‘பாரு நான் உன்னைவிடக் கம்மியா படிச்சவன் ஆனா உன்னை விட ஜாஸ்தி
சம்பாதிக்கறேன்னு.’ அதான் வேண்டாமாம். என்னென்னவோ பேசுதும்மா. நீங்க அதுகிட்ட கொஞ்சம்
பேசுங்கம்மா”
“ம்ம்ம்.
அவ மனசுல வேற யாரும் இருக்காங்களோ என்னமோ! அஞ்சலை பார்க்கறேன். ஒரு ரெண்டு நாள் டைம்
கொடுக்க முடியுமா?” என்று கேட்டுவிட்டு, பேப்பரை எடுத்து அந்தச் செய்தியை மீண்டும்
வாசித்தாள். அவனது ஸ்டெம்செல் ஆராய்ச்சி மருத்துவ உலகில் மிகப் பெரிய மைல்கல், சாதனை
என்று அவார்ட் வாங்கியிருப்பதைப் பற்றிய செய்தி! இந்தத் தலைப்புச் செய்தியும், அஞ்சலையின்
வார்த்தைகளும் சம்யுக்தாவின் மனதை 15 வருடங்களுக்கு முன் இழுத்துச் சென்றது.
அடையாளம் தொடரும்...
--------கீதா
அடையாளம் தொடர்ந்து அடையாளப்படுத்தட்டும்.
பதிலளிநீக்குத.ம.+1
மிக்க நன்றி கில்லர்ஜி....
நீக்குத.ம.சப்மிட் ஆகட்டும் பிறகு வருகிறேன்
பதிலளிநீக்குமிக்க நன்றி கில்லர்ஜி
நீக்குவாவ்வ்வ்வ்வ் வழிவிடுங்கோ மீ தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ:) பரிசு எனக்கே:)
பதிலளிநீக்குபரிசெல்லாம் கடைசில...இப்ப ஒரு ரீயை அனுப்பறேன்...
நீக்குடீயெல்லாம் வேணாம் கீதா நாலு அருகம்புல்லை போட்டு ஜூஸ் போதும் பூனைக்கு
நீக்குநோஓ ஈ வோண்ட் பிஸ் பிறைஐஐஐ:)
நீக்குஅதிரா நான் ஃபிஷ் ஃப்ரை அனுப்ப முடியாதே!!
நீக்கு///அஞ்சலையாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே கதவைத் திறந்தாள். அஞ்சலையேதான். அஞ்சலை அந்த வீட்டில் அவர்களுக்கு உதவியாக இருப்பவள். அடுத்த தெருவில் இருப்பவள்.///
பதிலளிநீக்குஹா ஹா ஹா அஞ்சலை நல்ல பெயர்:) நான் அஞ்சுவைச் சொல்லல்லே:)
ஏஞ்சல வம்புக்கு இழுத்தாச்சா...ஹஹ்ஹஹ்...
நீக்குஆவ்வ்வ் இதன் கதாசிரியர் கீதாவோ... வாழ்க ஆசிரியர். ஓ அந்த ஸ்டெம்செல் ரிசேஜ் ல அவோரட் எடுத்திருப்பது.. சம்யுக்தாவின் பழைய ஆளோ?:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)).. அடுத்த பகுதிக்கு வருகிறேன்.. பிளீஸ்ஸ்ஸ் இங்கயும் 4 மணியாகுது எனக்கும் ஒரு ஸ்ரோங் ரீ கிடைக்குமோ?:).
பதிலளிநீக்குரீ அனுப்பினேனேன்...வரலையா....
நீக்குசரி சரி அடுத்த பகுதி வரும் போது புரிஞ்சுரும் ...
ரீ வந்துது பட் அதை எதனோடு குடிப்பதாம். வெஜ் பக்கோறா பிளீஸ்ஸ்ஸ்.
நீக்குஅடுத்த பகிர்விற்காகக் காத்திருக்கிறேன் சகோதரியாரே
பதிலளிநீக்குநன்றி
மிக்க நன்றி கரந்தை சகோ தொடர்வதற்கு..
நீக்குவாவ்வ்வ்வ் கீதா, துளசி அண்ணன் உங்கள் போஸ்ட்டை நானே தமிழ்மணத்தில் இணைச்சு, வோட்டும் போட்டிட்டேன்ன்ன்ன்:))... ரொம்ப ரயேட் ஆகிட்டேன்ன்ன்.. ஒரு கப் க்சூடா மங்கோ லஸி பிளீஸ்ஸ்:).
பதிலளிநீக்குநன்றி அதிரா...நெட் இல்ல...போஸ்ட் போட்டு, கில்லர்ஜிக்கு கருத்து போட...நெட் போச்சு...டயர்ட அதோட போராடி....ஸோ நாளை வரேன் ...மொபைல்ல அடிக்க கஷ்டமா இருக்க்உ....பாருங்க மொபைல் கூட உங்களை மாதிரி உ போட்டு அடிக்குது..ஹஹஹ}
நீக்குஎன்னாது...சூடா மங்கோ லஸ்ஸியா...யாருப்பா இந்த அதிராக்கு என்னாச்சு..ஹிஹி
நீக்குசம்யுக்தா , ! பேப்பரில் வந்தவர் அந்த ரிசர்ச் செய்தவர் யார் என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்
பதிலளிநீக்குஅடுத்த பகுதியில் தெரிந்துவிடும்...ஏஞ்சல்...
நீக்குஇப்படிப் பகல்நேரத்தில் தன்னைமறந்து உறங்கினால் stemcell ஆராய்ச்சியில் கோட்டைவிட வேண்டியதுதான் என்று அந்த டாக்டரம்மாவிடம் சொல்லிவையுங்கள்!
பதிலளிநீக்கு(பதினைந்து வருடங்களுக்கு முன்பு என்ன நடந்திருக்கும் என்று ஊகித்துவிட்டேன். பார்க்கலாம், நீங்கள் என்ன சொல்லுவீர்கள் என்று.)
- இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.
பாவம் சார் சம்யுக்தா...அவள் கடும் உழைப்பாளி......நீங்களும் எழுத்தாளராயிற்றே அதனால் ஈசியாக ஊகித்துவிடுவீர்கள் சார்.....மிக்க நன்றி சார் தங்கள் கருத்திற்கு
நீக்குஅடையாளம் அருமையான தொடக்கம் . சம்யுத்தா முன்னால் நடிகை என்று ஞாபகம்)))
பதிலளிநீக்குவாங்க நேசன்....ஆமாம் மலையாளக் கரையோரத்து நடிகை...
நீக்குமிக்க நன்றி நேசன்...
அஞ்சலை நல்ல பெயர்தான் பாட்டின் முதல் வரி ))) தொடர்கின்றேன்!
பதிலளிநீக்குஹஹஹ் ஆமாம் தொடருங்கள் நேசன்....நன்றி
நீக்குஎன்னது பதிவு தொடருமா.......அப்ப சரி அடுத்த தொடருக்கு மனதை ரெடி பண்ணிக்கிட்டு வருகிறேன்.. களைச்சு போன அதிராவிற்கு ஒரு டீயும் எனக்கு ஒரு பாட்டிலும் அனுப்பி வையுங்கோ
பதிலளிநீக்குபின்ன சற்று பெரிய கதையைப் பிரித்துத்தானே போட முடியும் மதுரை சகோ......ஹஹஹ் சரி சரி மனச ரெடி பண்ணிக்கிட்டு வாங்க...அதிராவுக்கு ரீ அனுப்பியாச்சு...உங்களுக்கும் பாட்டில் நீங்க கேட்ட பாட்டில் அனுப்பியாச்சு...பாட்டில்தானே கேட்டீங்க...அதுக்குள்ள என்னனு சொல்லலியே ஹிஹிஹிஹி...அதனால் பாட்டில் மட்டும் வருது...
நீக்குஒரு பாட்டில் ஆப்பிள் cider வினிகர் தானே :)
நீக்குஅடையாளம் - அது
பதிலளிநீக்குஅருமையான கரு
தொடருங்கள் - நாமும்
தொடருவோம்!
மிக்க நன்றி யாழ்பாவாணன் சகோ...தொடருங்கள் சகோ
நீக்குதம இன்று சடக் படக் என வாக்கு விழுந்து விட்டது. சம்யுக்தாவைத் தொடர்கிறேன்.
பதிலளிநீக்கு@athiraaaa இங்கே ஓடியாங்க
நீக்குஹா ஹா ஹா இது எங்கட சகோ ஸ்ரீராமா? :) .... ஓடி வந்ததில கால் வேற உழு/ளுக்கிடுச்சே:).... எனக்கு??? ஹையோஒ ஆராவது சம்யுக்தா அக்காவைக் காப்பாத்துங்ங்ங்கோஓஓ:)
நீக்குஹா.... ஹா.... ஹா.... (அதிரா மாதிரி சிரிக்கிறேன்னு சொல்லிடாதீங்க! எல்லோருமே இப்படித்தான் சிரிப்பாங்க. நான் ஆரம்பத்திலிருந்தே இப்படித்தான் சிரிக்கிறேன்! கீதா ரெங்கன்தான் ஹஹ் ஹஹ் ஹஹ் என்று சிரிப்பார்!!!!)
நீக்குசம்யுக்தாவுக்கு ஒரு கார்த்தி இருக்கார். நான் எதற்கு சந்தானம் அங்கு!
அதிரா ஹஹஹஹஹ் ஐயோ....ஸ்ரீராமை இப்படிக் காலை வாரறீங்களே....இப்போ அவர் தடுக்கி விழுந்துடாம.....
நீக்குஅது சரி ஸ்ரீராம் இப்ப நான் தடுக்கி விழுந்துட்டேன்ன்...அது டைப்பும் போது செம போர் அப்படி டைப்பினா இப்படியா வாரரது ஹ..ஹ...ஹ இப்ப ஓகேயா....ஹிஹீஹிஹி
நீக்குஅதிரா நான் கண்ணுல விளக்கெண்ணெயை விட்டு இதெல்லாம் புடிக்கிறேன் ஒழுங்கா அந்த சம்பளத்தை செகரெட்டரிக்கு அதான் மீக்கு அனுப்பி வைங்க :)
நீக்குஇல்லை கீதா :) உங்களுக்கு ட்ரேட்மார்க் அந்த ஹஹஹ் ஹஹ் ஹஹ் தான்
நீக்குஹா ஹா ஹாஇப்போ சகோ ஸ்ரீராமால நிம்மதியா சிரிக்கக்கூடச் சுகந்திரம் இல்லாமல் போச்சு எங்களால:).
நீக்குஅஞ்சூ டோண்ட் வொறி... ஸ்ரீராமின் புயுப் போன் உங்களுக்கே:).
ஸ்ரீராம் அட தம எல்லாம் தெரியுதா...இங்க பொட்டியே தெரியலியே...தமிழ்மணம் தெரியவே இல்லையே...அதனாலேயே இணைப்பதில்லை...யாராவது வருபவர்கள் இணைக்கிறார்கள். இதை அதிரா இணைத்துள்ளார்...
பதிலளிநீக்குதொடருங்கள்
>>> அஞ்சலையின் வார்த்தைகளும் சம்யுக்தாவின் மனதை பதினைந்து வருடங்களுக்கு முன் இழுத்துச் சென்றது.. <<<
பதிலளிநீக்குஎன்னையும் தான்!..
மிக்க நன்றி துரை செல்வராஜு ஐயா. தங்களின் கருத்திற்கு...
நீக்குநல்ல ஆரம்பம். தொடர்ச்சிக்காகக் காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஜம்புலிங்கம் ஐயா கருத்திற்கு
நீக்குதொடர்கிறேன்
பதிலளிநீக்குமிக்க நன்றி ஜிஎம்பி சார் தொடர்வதற்கு
நீக்குஆவலுடன் தொடர்கிறேன்...
பதிலளிநீக்குமிக்க நன்றி டிடி
நீக்குஇப்பதான் இரண்டாவது பதிவு பார்த்து, அட முதல்ல முதல் பகுதியைப் படிப்போம்னு வந்தேன்! நல்ல தொடக்கம். நான் சம்யுக்தாவை தொடர்கிறேன் என்று சொல்ல மாட்டேன் - ஏற்கனவே இங்கே ஸ்ரீராம் மாட்டிட்டு இருக்காரே!
பதிலளிநீக்குஇதோ இரண்டாம் பகுதிக்குப் போறேன்!
ஹஹஹஹ்ஹ்ஹ் வெங்கட்ஜி !!!! ஆமாம் ஸ்ரீராம் நல்லா மாட்டிக்கிட்டார்....ஹஹஹஹஹ் உங்கள் கமென்டை ரசித்தோம்...மிக்க நன்றி வெங்கட்ஜி!
நீக்குவெங்கட்.... இந்த சம்யுக்தாவால் எனக்குக் கெட்ட பெயர்!!!!
நீக்குஎன்னாதூஊஊஊஊ .... அச்சச்சோஓஓஒ அபச்சாரம் அபச்சாரம்... சும்மா இருந்த சம்யுக்தாவைத், தொடர்றேன் எனச் சொல்லிட்டு, இப்போ அந்த அப்பாவீஈஈ சம்யுத்தாவால் தனக்கு கெட்ட பெயர் என ஈசியா சொல்லிட்டாரே சகோ ஸ்ரீராம்ம்ம்ம்ம்.... விட மாட்டேன்ன்ன் சம்யுக்தாவுக்கு நீதி கிடைக்கப் போராடுவேன்ன்ன்ன்:)
நீக்கு//“அவன் சொல்லிக் காமிப்பானாம். ‘பாரு நான் உன்னைவிடக் கம்மியா படிச்சவன் ஆனா உன்னை விட ஜாஸ்தி சம்பாதிக்கறேன்னு.’ அதான் வேண்டாமாம். என்னென்னவோ பேசுதும்மா. நீங்க அதுகிட்ட கொஞ்சம் பேசுங்கம்மா”//
பதிலளிநீக்குஅஞ்சலையின் வார்த்தைகளும், பேப்பரில் வந்த செய்தியும் பழைய நினைவுகளுக்கு சம்யுக்தாவை அழைத்து சென்று விட்டதோ?
வணக்கம் சகோ.
பதிலளிநீக்குசுவாரஸ்யம்.
//பெல் அடிச்சேன் அனக்கம் இல்லைன உடனே// என்றதும் வாசகர் யாரேனும் அனக்கம் என்றால் என்னவெனக் கேட்பார்கள் என நினைத்தேன். அதிசயம்……..யாரிடமும் அனக்கம் இல்லை :)
கதாசிரியராகப் புதிய அவதாரம் எடுத்திருக்கும் சகோவிற்கு வாழ்த்துக்களுடன் நானும் அடுத்த பகுதிக்குக் கடக்கிறேன்.