15
வருடங்களுக்கு முன், அமெரிக்காவில், மருத்துவக் கல்லூரி ஒன்றில் சிறப்பு அறுவை சிகிச்சைப்
பயிற்சி பெறுவதற்கு முன் அந்நாட்டு மருத்துவ உரிமம் பெறுவதற்கான சிறப்பு வகுப்புகள்
தொடங்கி சில மாதங்கள் கடந்திருந்தது. உரிமம் பெற்றாலும், அறுவை சிகிச்சைப் பயிற்சி
கிடைப்பது என்பது அத்தனை எளிதல்ல.
அங்கு பல நாட்டைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சேர்ந்திருந்தனர். வகுப்புகள் முடிந்ததும், அவ்வகுப்பு மாணவ மாணவிகள்
தங்களுக்குப் புரியாத பாடங்களை கார்த்தியிடம் கேட்டுக் கற்றுக் கொள்ள அவனை சூழ்ந்து
கொள்வார்கள். கார்த்தியும் மாலை நேரங்களில் 2 மணி நேரம் அவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பது
வழக்கம். சக மாணவ, மாணவிகள் எப்படியான சில்லியான கேள்விகள் கேட்டாலும் அவர்களை இளக்காரமாகப்
பார்க்காமல் விரிவாகச் சொல்லிக் கொடுப்பான். அப்படியான ஒரு நல்ல குளிர் நாளில் தான்….
“ஹை!
கார்த்தி, யு டீச் வெரி வெல் யா…ர். யு க்னோ எ லாட்… யு ரெஸ்பெக்ட் வுமன் எ லாட்! யு
ஆர் ரியலி க்ரேட்!”
இது
என்ன இப்படி திடீர்னு இந்தப் பொண்ணு சம்யுக்தா என்னைப் பற்றி சொல்லுகிறாள் என்று வியந்தான்.
குழம்பினான்.
“இஸ்
இட்? தாங்க்ஸ். ஆர் யு ஃப்ரம் தமிழ்நாடு? இஃப் ஸோ தமிழ்ல பேசலாமா? இப்படியே நடந்துகிட்டே
பேசலாமா”
“ஷ்யூர்.
யெஸ் நான் தமிழ்நாடுதான். தமிழ் தெரியும். ஆனா, இங்கிலிஷ் தான் அதிகம் பேசறதுனால….”
“ஓ!
பரவால்ல.”
“ஆமா..நீ
எப்படி இப்படிப் பொறுமையா எல்லாருக்கும் சொல்லிக் கொடுக்கற? எல்லாம் தெரிஞ்சு வைச்சுருக்க..எப்பவுமே
ரேங்க் ஹோல்டரோ?”
“ஹஹாஹஹ்ஹ்ஹ்”
“ஏன்
சிரிக்கற?”
“சொல்லிக்
கொடுக்கறதுக்கு ரேங்க் ஹோல்டரா இருக்கணும்னு ஏதானும் இருக்கா என்ன…..ம்?”
“புத்திசாலியா
இருந்தாத்தானே இப்படிச் சொல்லிக் கொடுக்க முடியும்?”
“ஸோ,
ராங்க் வாங்கறவங்க எல்லாரும் ரொம்ப அறிவாளி, எல்லா அறிவாளியும் ரேங்க் வாங்குறவங்க,
நல்லா சொல்லித்தருவாங்கனு நினைக்கற இல்லையா”
அவள்
பதில் சொல்லாமல் கார்த்தியையே பார்த்துக் கொண்டு நடந்தவள், கால் இடறிடத் தடுமாறி சமாளித்தாள்.
“பார்த்து.
ஆர் யு ஓகே?” என்று சொல்லிவிட்டு கார்த்தி தொடர்ந்தான். “இந்த மாதிரியான ஒரு பொதுவான
கருத்து நம்ம மக்கள்கிட்ட இருக்கு. நான் அத தப்புனு சொல்ல மாட்டேன். ஆனா, உனக்கு ஒன்னு
தெரியுமா? பெரிய படிப்பெல்லாம் படிக்காதவங்க, ஏன் ஸ்கூல், காலேஜ் கூட ரொம்ப போகாதவங்க
பலர் நல்ல டீச்சர்ஸ். நல்ல வாசிக்கற பழக்கம், தெரிஞ்சுக்கற ஆர்வம், தெரிஞ்சுக்கறத அப்ளை
பண்ணிப் பார்க்கறது, மாற்றுச் சிந்தனை, சமயோசித புத்தி இதெல்லாம் தான் வாழ்க்கைக்கு
ரொம்ப தேவைனு எனக்குத் தோணும்.”
“அப்போ
நீ ரேங்க் ஹோல்டர் எல்லாம் இல்லையா?”
மீண்டும்
கார்த்திக் சிரித்தான்.
“இல்லை.
பொதுவா சமூகத்தோட அகராதிப்படி பார்த்தா, நான் ஸ்கூல்ல பிலோ ஆவெரெஜ், கடைசி பரீட்சையிலதான்
ஏதோ பாஸாகி அடுத்த க்ளாஸ் போனேன்..…கடைசி பெஞ்ச் பையன், காலேஜ்ல ஏதோ கொஞ்சம் மேல போனேன்.
அவ்வளவுதான்…”
“ரியலி
சர்ப்ரைசிங்க்! ஆனா, நீ இங்க க்ளாஸ்ல கேக்குற
டவுட்ஸ், உன் டிஸ்கஷன், உன் பதில்கள், டீச்சர்ஸ் உன்னை புகழறது எல்லாம், நீ ரேங்க்
ஹோல்டர்னு நினைக்க வைச்சுச்சு”
தன்
முதுகுப் பையை முன்னால் இழுத்துக் கொண்டே, தலையைச் சாய்த்து புன்சிரிப்பொன்றை உதிர்த்துக்
கொண்டு பெரிதாக மூச்சை இழுத்து விட்டான்.. “நீ ரைட் ஃப்ரம் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் எப்பவுமே
ஃபர்ஸ்ட்தான் இல்ல?. காலேஜ்ல கூட கோல்ட் மெடலிஸ்ட் இல்லையா”
“ம்ம்ம்….”
“பெரிய
விஷயம்தான் அது”
“பெண்களை
மதிக்கற இப்படியான ஆண் பையனை இப்பத்தான் பார்க்கறேன்.!”
இதற்கும்
கார்த்தியின் பதில் சிரிப்புதான். ஆனால் அவன் மனதுள், இவளுக்கு ஏதோ காயம் ஏற்பட்டிருக்கிறது.
அதுவும் ஏதோ ஒரு ஆணினால், இல்லை ஆண்களால் இருக்கலாம். ஆனால் இப்போது அதைப் பற்றிக்
கேட்பது நல்லதல்ல. சரியான தருணமும் அல்ல. அவளாகச் சொன்னால் சொல்லட்டும். இல்லை அப்புறம்
பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டே வந்தவன் சட்டென்று நின்றான். வழியில்,
தன் கிளைகளைக் குடை போல் விரித்து அழகான ரோஸ் நிறமும், ஆரஞ்சு நிறமும் கலந்த ஒருவிதமான
மனதை மயக்கும் நிற இலைகளை உதிர்த்து ஒய்யாரமாக நின்றிருந்தது ஜப்பனீஸ் மேப்பிள் மரம்.
“என்னாச்சு
கார்த்தி? அப்படியே நின்னுட்ட…ஏதோ ஆழ்ந்த யோசனை வேற போல?”
“இல்ல
தினமுமே இப்படிப் போகும் போது இந்த மரத்தோட அழகுல கொஞ்ச நேரம் லயிச்சு அழக ரசிச்சுட்டுப்
போறது வழக்கம். இன்னிக்கு நிறையவே இலைகளை உதிர்த்து ஏதோ கார்ப்பெட் விரிச்சுருக்கறா
மாதிரி….ஆ! என்ன ஒரு அழகு!! மனிதன் இயற்கையை மிஞ்சறதா நினைச்சுட்டு எத்தனை உயரம் தொட்டாலும்,
விதவிதமா செயற்கை கலர்கள் உருவாக்கி வர்ணம் அடிச்சு படம் வரைஞ்சாலும்…. இயற்கை இயற்கைதான்…இல்ல!!”
“நேச்சர்
லவ்வர்?”
“ம்ம்ம்…சின்ன
வயசுலருந்தே இயற்கையோடு இணைஞ்சு வாழணும்னு நினைப்பேன்…”
“பை
த பை, கார்த்தி கஃபேட்டரியா கிட்ட வந்துட்டமே. ஒரு கப் காஃபி?”
“ஓகே!”
என்று கார்த்தி தோள்களைக் குலுக்கிப் பதிலளிக்க இருவரும் காஃபி ஷாப்பிற்குள் சென்றார்கள்.
“கார்த்தி
என்ன சாப்பிடற?”
“எந்த
காஃபினாலும் சில்லுனு….”
“ஹேய்!
என்ன நீ. ஏற்கனவே செமையா குளிருது. கோல்ட் காஃபி வேணும்ற…”
“இந்த
ஊர்ல கோல்ட் காஃபிதான் சாப்பிடணும். சூடா காஃபினா அது நம்மூர்தான்…” என்று சன்னமான
குரலில் சொல்லிச் சிரித்தான்.
ஸம்யுக்தா
தனக்கு ஒரு ஹாட் காஃபி மோக்காவும், கார்த்தி தனக்கு ஒரு கோல்ட் காஃபி லாட்டெயும் ஆர்டர்
செய்தார்கள்.
“உனக்கு
நிறைய ஃப்ரென்ட்ஸ் உண்டோ கார்த்தி? நீ எல்லார்க்கிட்டயும் மூவ் பண்ணுற, ஹெல்ப் பண்ற.
எல்லார்கிட்டயும் சிரிச்சு பேசுற. சொல்லிக் கொடுக்கற. ஈசியா பழகிடுற…”
கார்த்தி
புன்னகை ஒன்றை உதிர்த்து, “ம்ம்ம் அது ரொம்ப முக்கியம் லைஃப்லனு அம்மா அடிக்கடி சொல்லி
என்னைப் பழக்கப்படுத்தினதும் அவங்கதான்..”
“யு
ஆல்வேஸ் ஸ்மைல் ஃபார் எவ்ரிதிங்க்! ஆனா, நான் இன்ட்ரோவெர்ட். யார்க்கிட்டயும் டக்குனு
பழகிடறது இல்ல. ஃப்ரென்ட்ஸ் ரொம்ப கம்மி.”
“ம்ம்ம்,
பரவால்ல….இருந்தாலும் நீ முடிஞ்சா மாத்திக்க முயற்சி செய்…அது உனக்கு நல்லது…” என்று
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே காஃபி நுரையுடன் வந்தது.
“ஐ
வுட் லைக் டு கன்டினியு திஸ் ஃப்ரென்ட்ஷிப் வித் யு கார்த்தி. வில் யு?”
“நிச்சயமா.
ஏன் உனக்கு அதுல என்ன சந்தேகம்?” அவளுக்குள் ஒரு இன்செக்யூர்ட் ஃபீலிங்க் இருக்கிறதோ
என்றும் கார்த்திக்குத் தோன்றியது. பொதுவாகவே பெண்களுக்கு ஒரு இன்செக்யூர்ட் ஃபீலிங்க்
இருக்குமாமே! அதுதானோ இல்லை இது அதையும் மீறியதாக இருக்குமோ என்றும் நினைத்துக் கொண்டே
காஃபியை உறிஞ்சிக் கொண்டிருக்க….
கார்த்தியையே
பார்த்துக் கொண்டிருந்த சம்யுக்தா கண்களின்
வழியாகத் தன் மனதில் கார்த்தி மெதுவாக நுழைவதை உணர்ந்தாள். கார்த்தி நிமிர்ந்ததும்
சட்டென்று சம்யுக்தா காஃபியை சிப்பினாள்!
“அம்மா,
காஃபி ஆறியே போயிருக்கும் இப்பத்தான் குடிக்கிறீங்களா. அப்படி என்னம்மா யோசனை?” அஞ்சலையின்
குரல் சம்யுக்தாவின் நினைவுகளை சற்று ஒரங்கட்டியது.
“ம்ம்ம்ம்
ஒன்னுமில்லை அஞ்சலை… வேலை முடிஞ்சுருச்சா?”
“வேலை
முடிஞ்சுருச்சும்மா. அது சரி…அப்ப என் பொண்ணு தன் மனசுல யாரையோ நினைச்சுருக்கும்னு
நினைக்கிறீங்களாம்மா. அதான் அந்தப் பையன வேணான்னுத்துக்குக் காரணமோ?”
“அப்படி
உறுதியா சொல்லலை அஞ்சலை. .இருக்கலாமோனு.. அவ்வளவுதான். நான் பேசிப் பார்க்கிறேன்”…..என்று
அஞ்சலையை அனுப்பிவிட்டு, மறு நாளைக்கான மருத்துவக் குறிப்புகள் எழுதி வைத்திருக்கும்
நோட்டினை எடுத்துப் புரட்டத் தொடங்கினாள். மனதை மீண்டும் நினைவலைகள் விசா இல்லாமலேயே
அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றது.
இருவரும்
கல்லூரி அருகில் வேறு, வேறு பகுதியில், கல்லூரியிரியிலிருந்து 10 நிமிட நடை தூரத்தில் தங்கியிருந்தனர். ஒரு
ஞாயிறன்று, கார்த்தி தனது பாடத்திற்கான குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்த போது தொலைபேசியில் சம்யுக்தாவின் அழைப்பு வரவே எடுத்துப் பேசிட சம்யுக்தாவின்
பதட்டமான குரல்….
------கீதா
கார்த்தி 3 இடியட்ஸ் ஆமிர்கானை நினைவு படுத்தும் கேரக்டராகத் தெரிகிறார்! கொசுவர்த்திச் சுருளில் சுழலும் கதையை தம வாக்கிட்டுத் தொடர்கிறேன்!
பதிலளிநீக்குஹஹ்ஹ் ஹப்பா நல்ல காலம் உங்களுக்கு விஜய் நினைவுக்கு வரலை!!! நிஜமாகவே அப்படியான ஒரு கேரக்டர் இருப்பதால்....மட்டுமல்ல என் மகனிடம் அடிக்கடிச் சொல்லுவதும் நாங்கள் இருவரும் பேசிக் கொள்ளும் வரிகள்....அதனாலேயே 3 இடியட்ஸ் படத்தை நாங்கள் லைக்கினோம்...
நீக்குநன்றி ஸ்ரீராம்...
எனக்கும் பதட்டம் தொற்றிக் கொண்டுவிட்டது சகோதரியாரே
பதிலளிநீக்குஅடுத்தப் பகிர்விற்காகக் காத்திருக்கிறேன்
நன்றி
மிக்க நன்றி கரந்தை சகோ தங்களின் கருத்திற்கு
நீக்குசம்யுக்தாவின் பதற்றம் எனக்கும் ஒட்டிக்கொண்டது.
பதிலளிநீக்குமிக்க நன்றி கில்லர்ஜி...அடுத்த பகுதியில் தெரிந்துவிடும் பதற்றத்தின் காரணம்....
நீக்குஇந்தக் கதாசிரியர்களே பொம்பள கேரக்டர வச்சி தான் பொழைக்கறாங்க போல... நல்ல எடத்துல வந்து பிரேக் உட்டுடறாங்க..
பதிலளிநீக்குஇராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து
ஹஹஹாஹஹ்ஹ ஐயோ சார் சிரிச்சு முடில.......ஆமாமாம் நீங்கள் சீனியர் ஆச்சே உங்களை எல்லாம் தான் பின்பற்றுகிறோம்....ஹஹஹஹஹ்..
நீக்குஆஹா சரியான இடத்தில் ஒரு ப்ரேக்! :) என்ன ஆயிற்று அந்தப் பொண்ணுக்கு....
பதிலளிநீக்குதொடர்கிறேன்.
அடுத்த பகுதியில் தெரிந்துவிடும் வெங்கட் ஜி....தொடர்வதற்கு மிக்க நன்றி
நீக்கும் கொட்டி விட்டேன் அடுத்த அத்தியாத்திற்குக் காத்திருக்கிறேன். :)
பதிலளிநீக்குவாருங்கள் தமிழானவன். மிக்க நன்றி தமிழானவன் வந்து கருத்திட்டமைக்கு
நீக்குஅடுத்த பதிவு எப்போது?..
பதிலளிநீக்குஇன்னும் இரு நாட்களில் துரைசெல்வராஜு ஐயா மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு
நீக்குசம்யுக்தா அமைதியான கார்த்தியின் லைனில் குறுக்கா நுழைய மாதிரி இருக்கே !!
பதிலளிநீக்குஹஹஹஹ்ஹஹ் ஏஞ்சல் பாருங்க பாருங்க...உங்களுக்குச் செம தீனி போடப் போகுது இந்தக் கதைக் கரு. இதை அடுத்து இக்கதையின் கருவைத் தழுவிய பதிவும் உண்டு ஏஞ்சல்
நீக்குநோஓஓஓஓஒ எனக்கு கார்த்திக்கிலதான் சந்தேகம் வருது.. சம்யுக்தா பாவம்:(
நீக்குமனித மனங்களை அறியும் நுண்உணர்வு சிலருக்கு மட்டுமே இருக்கு அது கார்த்திக்கும் இருக்குன்னு நினைக்கிறேன்
பதிலளிநீக்குஆம்! கதாசிரியரின் வழியாக உருவாக்கப்பட்ட கதாநாயகனாயிற்றே !! காதாசிரியரின் சிலதும் எட்டிப் பார்க்குமோ...எல்லா கதைகளிலுமே ஏதேனும் ஓரிரி இடங்களில் கதாசிரியரின் சிலது எட்டிப் பார்க்கலாம். நமக்குத் தெரிந்தவரானால் அதை நாமே அறிந்து கொள்ளலாம்...இல்லையா ஏஞ்சல்.
நீக்குஉங்கள் மாலா நீலா கதையில் உங்கள் குணங்கள் எட்டிப் பார்த்தது போன்று இருந்தது எனக்கு...சரியா...
பல மனிதர்களின் கண்களை உற்று நோக்கிப் பார்த்துப் பேசினால் பலதை அறிய முடியும். அகத்தின் அழழு கண்களின் வழி தெரிவதால் தான் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்லிருப்பாங்கனு நினைக்கிறேன்...அதனாலதான் கண்களைப் பார்த்துப் பேசணும்னு ஆளுமைத் திறன் வகுப்புகள் ல சொல்லிக் கொடுக்கறாங்க இல்லையா...ஏஞ்சல்?!
ஆமாம் கீதா பலநேரம் நமது கேரக்டர்ஸும் வெளிபட்டுடுது :) அதுவும் உண்மைச்சம்பவங்களை சொல்லும்போது எங்காவது மாட்டிப்பேன் நான் :)
நீக்குஆமா ஆமா.. அப்பூடி மாட்டிய இடத்திலதானே அஞ்சுக்கு 66 என, கையும் களவுமாப் பிடிச்சேன் நான்:)..
நீக்குகார்த்தியோட அம்மா கார்த்திக்கு ஒரு நட்பு போல இருந்து வளர்த்ததால்தான் கார்த்திக்கு இந்த அறிவும் கூறாமையும் பழகும் தன்மையும் வந்திருக்குன்னு நினைக்கிறேன் ..எங்கப்பாவும் இப்போ என் கணவரும் இப்படித்தான் எல்லார்கிட்டயும் பழகனும்னு சொல்லி சொல்லி வளர்த்தாங்க :) எனது தன்னம்பிக்கையை
பதிலளிநீக்குஇருக்கலாம் ஏஞ்சல். பொதுவாகவே பெற்றோர் எத்தனைக்கெத்தனை குழந்தைகளுடன் நட்புடன் இருக்கிறார்களோ அப்படியே குழந்தைகள் வளரும்..ஏன் உங்கள் ஷரனையும் உங்களையும் எடுத்துக் கொள்ளலாம்....!!
நீக்குமரத்தையும் இலையையும் ரசிக்கரத பார்க்கும்போது கார்த்தி நம்ம இனமோன்னு தோணுது :) நேச்சர் லவ்வர்
பதிலளிநீக்குஇதை வாசிக்கும் போது மனதில் ஒன்று தோணுது அதை கதை முடிவில் சொல்றேன்
ஏஞ்சல் நம்ம இனமே தான்...பாருங்க என்னதான் கதை கற்பனையாக வளர்ந்தாலும் நம்மைச் சுற்றி நடக்கும் ஒரு சில நிகழ்வுகளை வாசிக்கும் போது, அறிய நேரிடும் போது ஏற்படும் கற்பனைதான் என்றாலும், நம்ம கேரக்டர் எப்படியும் எட்டிப் பார்த்துடுது இல்ல? எண்ணங்கள், ஆர்வங்கள் ஏதேனும் ஒன்று எட்டிப் பார்த்துவிடும் ஏதேனும் ஒரு கதாபாத்திரத்தின் வழி இல்லையா ஏஞ்சல்?!!!
நீக்குசரி சரி நீங்க கதை முடிவில் என்ன சொல்லப் போறீங்கனு என்னால் கொஞ்சம் ஊகிக்க முடியுது...காத்திருக்கிறேன் நீங்க சொல்ல வருவதை...
சில நிஜங்கள் கற்பனையில் கலப்பதே கதை இங்கு நிஜங்கள் அதிகமோ என்று நினைக்க வைக்கிறது பாராட்டுகள்
பதிலளிநீக்குநம்மைச் சுற்றி நடப்பவைதானே சார் கதைகளும் கதை மாந்தர்களும். ஒரு சில நம் குணாதிசயங்கள் பிரதிபலிக்கும். கதையின் கரு மட்டுமே நிஜம். மற்றதெல்லாம் கற்பனை. அதில் சில குணங்கள் வெளிப்படலாம் அவ்வளவே சார்.
நீக்குமிக்க நன்றி சார் தங்களின் பாராட்டிற்கு
நல்ல இடம் பார்த்துத் தொடரும்! ஹூம், தொடருங்க, காத்திருக்கேன், வேறே வழி? ஆனால் கார்த்திக்-சம்யுக்தா கல்யாணம் ஆகி இருக்காதோனு ஒரு எண்ணம்! :)
பதிலளிநீக்குஹஹஹஹஹ் ஐயோ சிரிச்சே எல்லாத்தையும் சொல்லிருவேன் போல..நன்றி
நீக்குகீதாசாம்பசிவம் அக்கா உங்கள் ஊகத்திற்கு...
ஹாஹாஹாஹாஹா! :)))))
நீக்குகதாபாத்திரங்களின் குணங்களை இயல்பாகக் கொண்டு வரும் பாணி ரசிக்கத்தக்க வகையில் உள்ளது. பாராட்டுகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா தங்களின் பாராட்டிற்கும் கருத்திற்கும்
நீக்குகார்த்திக் பற்றி நன்றாகவே "அடையாளம் 'காட்டி விட்டீர்கள் :)
பதிலளிநீக்குபகவான் ஜி மிக்க நன்றி கருத்திற்கு. தொடருங்கள் தெரிந்துவிடும்!
நீக்குஒரு கதாப்பாத்திரத்திற்கு எப்படி
பதிலளிநீக்குஇயல்பாக அதன் போக்கிலேயே
மெருகூட்டுவது என்பதை
இந்தத் தொடர் மிக மிக அழகாகச்
சொல்லிப்போகிறது
ஆவலுடன் அடுத்தப் பதிவை எதிர்பார்த்து...
மிக்க நன்றி ரமணி சார் தங்களின் கருத்திற்கு. ஊக்கமளிப்பதாக இருக்கிறது..
நீக்குஅடையாளம் அருமையாக நகர்கிறது....
பதிலளிநீக்குஒரு தேர்ந்த நடையில் மெல்லிய நட்பின் பயணம்...
பதட்டத்துடன் காக்க வைத்துவிட்டதே....
ஆஹா! குமார் உங்களிடமிருந்து இந்த வரிகளா...நீங்கள் எல்லாம் எப்படி அழகாக எழுதுவீர்கள்...பரிசுகள் பெறும் அளவிற்குத் தேர்ந்த எழுத்தாளர் நீங்கள். மிக்க நன்றி தங்களிடமிருந்து இத்தகைய ஊக்கமிகு வார்த்தைகளுக்கு குமார்!
நீக்கு//“இஸ் இட்? தாங்க்ஸ். ஆர் யு ஃப்ரம் தமிழ்நாடு? இஃப் ஸோ தமிழ்ல பேசலாமா? ///
பதிலளிநீக்குஅம்மா.. தாயே... தமிழ்ல பேசுங்கம்மா:) இந்தத் தமிழ் எனக்கு நுழையுதில்லை:)
ஹஹஹஹ தமிழ்ல தான் அதிரா...ஆனா நீங்கள் எல்லாம் அழகாகத் தமிழில் பேசுவீர்கள். ஆனால் இங்கு எல்லாம் ஆங்கிலம் கலந்துதானே இருக்கிறது. அதனால்தான் இயல்பாக யதார்த்த ரீதியில் பேசுவது போல் எழுதியிருக்கிறேன்...உண்மைதான் ஆங்கிலத்தைத் தமிழில் எழுதினால் வாசிப்பது கடினம் தான்....சரி சரி தமிழில் பேசச் சொல்லுகிறேன் சம்யுக்தாவை...ஹஹஹஹஹ்
நீக்குஎதுக்கு சம்யுக்தா அக்கா, கார்த்தியோடு கதைக்க இவ்ளோ பயப்படுறா.. அப்போ இதுக்கு முன்பு ஏதோ பிரச்சனையில் மாட்டியிருக்கிறாவோ பாவம்... ஆனா கார்த்திக்குடனான நட்பும் பாதியில் முறிஞ்சதுபோல உணர்கிறேன்ன்.. ஆண்டவா நீதேன் எல்லோரையும் காப்பாத்தப்பா..:)
பதிலளிநீக்குஏஞ்சல், மதுரை எல்லாரும் ஓடிவாங்கோ....சம்யுக்தா அக்காவாம்...அதிரா அல்லோ அக்கா?? நீங்கள் தானே அதிராவுக்கு 80 நு சொன்னது ஹிஹிஹிஹி
நீக்கும்ம்ம்ம் உங்கள் யூகம் சரிதானோ...கேட்போம் அடுத்த பகுதியில் ...
///கடைசி பரீட்சையிலதான் ஏதோ பாஸாகி அடுத்த க்ளாஸ் போனேன்..…கடைசி பெஞ்ச் பையன்,///
பதிலளிநீக்குஹையோ கீதா இதைவிட நீங்க நேரடியாப் பெயரையே சொல்லியிருக்கலாமே:) ஆவ்வ்வ் நான் ட்றுத் ஐச் சொல்லல்ல:).. ஹையோ இண்டைக்கு என் வாய்க்கு என்னமோ ஆகுதே:)..
அதிரா ஐயோ பாவம் மதுரை சகோ....அவர் பொய்யே சொல்ல மாட்டார் தெரியுமா.....!!!ஹஹஹஹ்
நீக்கு///“நேச்சர் லவ்வர்?”//
பதிலளிநீக்குஆவ்வ்வ்வ் யேஸ் யேஸ்ஸ் மீயும் அஞ்சுவைப்போல றீச்சர் லஃப்வர்தான்.. ஹையோ நேச்சர் ல்வ்வர்தான்ன்:).
யெஸ் நீங்களும் உண்டுனு தெரியுமே....3 இடியட்ஸ்??!!!! அதை நீங்களே சொல்லியும் விட்டீர்கள் ஆனால் நிஜமாவே நானும் உங்களைப் போல யாரேனும் சிரிச்சுப் பேசினா ஏமாந்த்ரூவேன்....கேட்டால் கொடுத்துருவேன்...இப்பதான் எல்லாரும் என்னைத் திட்டி திட்டி....அதுவும் என் மகன் திட்டி திட்டி கொஞ்சம் முழு லூசா இருந்தவ அரை லூசா கிருக்கேனாக்கும் ஸோ ஹைஃபைவ் அதிரா...ஏஞ்சலும் ஈசியா ஏமாந்துருவாங்கனு தோனுது...ஸோ 3 இடியட்ஸ் ஹஹஹஹஹ்...
நீக்கு/// தனக்கு ஒரு ஹாட் காஃபி மோக்காவும்,///
பதிலளிநீக்குஆவ்வ்வ்வ் இதுதான் மை ஃபேவரிட்டும்:) என் பக்கம் அஞ்சுவுக்கு சொல்லிட்டு இங்க வந்தேன்ன்.. இங்கே அதையே எழுதியிருக்கிறீங்க..
அதிரா எனக்கு எல்லா காஃபியும் பிடிக்கும் சில்லுனு.... மோக்கா, லாட்டே, கேப்புசினோ...
நீக்கு///“அம்மா, காஃபி ஆறியே போயிருக்கும் இப்பத்தான் குடிக்கிறீங்களா. அப்படி என்னம்மா யோசனை?” அஞ்சலையின் குரல் சம்யுக்தாவின் நினைவுகளை சற்று ஒரங்கட்டியது.///
பதிலளிநீக்குஸ்ஸ்ஸ் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நானும் அப்படியே கதையில் மூழ்கிப் படிச்சிட்டு வந்தேனா, இந்த இடத்தில் திடுக்கிட்டுவிட்டேன்ன்.. கற்பனை பண்றா என்பதையே நினைக்க விடாமல் கதையை நகர்த்தி வந்த கதாசிரியர்.. கீதாவுக்கு வாழ்த்துக்கள்.
அழகா சொல்லிட்டு வாறீங்க.. எனக்கு இப்பவே பயம்ம்மாக்கிடக்கு, கடசியில கார்த்தி என்னிடம் அடி வாங்கிடப்போறாரோ என நினைச்சு:)[சம்யுக்தாவுக்கு ஏதும் விபரீதம் ஏற்படுத்தியிருந்தால்].. பொறுத்திருகிறேன்.. அடுத்த பாகத்துக்கு.
ஹஹஹஹஹ் ரொம்ப தாங்ஸ் அதிரா....பாருங்கள் எப்படிப் போகுதுனு....
நீக்குகதையை கொண்டு செல்லும் விதம் மிக நன்றாக இருக்கிறது சிறந்த எழுத்தாளர் எழுதும் நடையை போல மிக நன்றாக வந்திருக்கிறது பாராட்டுக்கள்
பதிலளிநீக்குமிக்க நன்றி மதுரை சகோ! உங்கள் ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கும் பாராட்டிற்கும்...
நீக்குவணக்கம் சகோ.
பதிலளிநீக்குகதையோ?!
நெடுநாளாயிற்று.
பின்னால் சென்று உங்களின் பழைய பதிவுகளையும் பார்க்க வேண்டும்.
பார்த்து வருகிறேன்.
நன்றி.
வாங்க விஜு சகோ! ஆம் கதைதான்... மெதுவாக வாருங்கள்...அவசரமில்லை...மிக்க நன்றி வருகை தந்த்தமைக்கும் கருத்திற்கும்
நீக்குகார்த்திக், ஓவர் அக்டிங்க போல இருக்கே! சில நேரம் இப்படி அனைத்திலும் பெர்ப்கடாக இருப்பதாக நாம் நினைப்பவர்கள் நிஜத்தில் உல்டாவாக இருப்பார்கள்.தொடருங்கள் பார்க்கலாம். கதையின் ஆரம்பமும், எழுத்தோட்டமும் அருமை.
பதிலளிநீக்குவாங்க நிஷா ரொம்ப நாளாச்சே! பிசியோ?!! சரி உங்கள் ஊகம் சரியா இல்லையா என்று அடுத்து வரும் பகுதிகளில் தெரிந்துவிடும்...மிக்க நன்றி நிஷா தங்களின் கருத்திற்கும் ஊக்கம் தரும் வரிகளுக்கும்.
நீக்குஆமாம்பா, ரெம்ப வேலை, இங்கே ஸ்கூல் ஹாலிடேஸ் வசந்தகால விடுமுறை மூன்று வாரம். கூடவே ஈஸ்டர் விடுமுறை தினங்கள். ஹோட்டலிலும் விழாக்காலங்கள் ஆர்டர்கள் ஆரம்பம். இந்திய, அரபி குருப்புக்களும் வருகை தர ஆரம்பித்து விட்டதனால் அதிக வேலைப்பளி, இருவரை புதிதாக வேலைக்கு எடுத்தும், இன்னும் இருவர் வாகனச்சாரதி பத்திரத்துடன் தேடிக்கொண்டிருக்கின்றேன். இதில் எங்கே எழுதுவது? மூளையும் மனசும் செம களைப்பில் இறுக்கமாக இருக்கின்றது. ஹாஹா
நீக்குதொடரை எப்படியும் தொடர்வேன். பின்னூட்டங்கள் தான் மிஸ்ஸாகும்,
வேளைப்பழு தான். நோ பளி
நீக்குபுரிந்தது நிஷா! பின்னூட்டங்கள் மிஸ் ஆனால் என்ன... எப்போ உங்களுக்கு நேரம் கிடைக்கிறதோ வாசியிங்கள்..போதும். நானும் இடையில் சில பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வருகிறது. எனவே தளத்திற்கு விடுமுறை விட வேண்டி வரலாம்..மிக்க நன்றி நிஷா....
நீக்கு“ஆமா..நீ எப்படி இப்படிப் பொறுமையா எல்லாருக்கும் சொல்லிக் கொடுக்கற? எல்லாம் தெரிஞ்சு வைச்சுருக்க..எப்பவுமே ரேங்க் ஹோல்டரோ?”
பதிலளிநீக்கு“ஹஹாஹஹ்ஹ்ஹ்”
“ஏன் சிரிக்கற?”
“சொல்லிக் கொடுக்கறதுக்கு ரேங்க் ஹோல்டரா இருக்கணும்னு ஏதானும் இருக்கா என்ன…..ம்?”
“புத்திசாலியா இருந்தாத்தானே இப்படிச் சொல்லிக் கொடுக்க முடியும்?”
இந்தப் பகுதி எனக்குப் பிடித்தையால் இங்கே பகிருகிறேன்.
“புத்திசாலியா இருந்தாத்தானே இப்படிச் சொல்லிக் கொடுக்க முடியும்?” என்பதை விட இப்படிச் சொல்லிக் கொடுப்பதால் தான் ஒருவர் புத்திசாலியாக முடியும் என்பது என் கருத்து.
நல்ல கருத்து சகோ யாழ்பாவாணன். கற்றுக் கொடுக்கக் கொடுக்க நம் அறிவு வளரும்!! மிகவும் சரி!!! மிக்க நன்றி சகோ!!! அழகான, ஆழமான கருத்திற்கு!!!
நீக்குஅவன் மனதுள், இவளுக்கு ஏதோ காயம் ஏற்பட்டிருக்கிறது. அதுவும் ஏதோ ஒரு ஆணினால், இல்லை ஆண்களால் இருக்கலாம். //
பதிலளிநீக்குகார்த்தியின் எண்ணம் சரிதானோ?
ஆஹா கற்பனை ஓட்டம் அதுவும் அமெரிக்கா வாழ்வியல் பற்றி அறியாதவன் அறியும் ஆவலில் தொடர்கின்றேன்.
பதிலளிநீக்குவணக்கம்.
பதிலளிநீக்குகதையெழுதுதல் ஒரு வரம்தான்.
சில தருணங்களில் நமது பிரதியாய் இன்னொருவரை உருவாக்கி எல்லாம் கொட்ட முடிகிறது.
சில இழைகளைப் பிரித்தறிந்தேன். :)
தொடர்கிறேன்.
நன்றி.