நாங்களும் கடலில் குளிப்போமே!
ஹப்பா! அடிக்கிற வெயிலுக்கு என்ன சுகமா இருக்கு!!
இது ஃபீனிக்ஸ் மால் சென்ற போது இதனைத் தாங்கி நான் நிற்பது போல் எடுக்க முயற்சி. ஆனால் கூட்டம். மக்கள் இடையில் புகுந்து அப்படியும், இப்படியுமாகச் சென்றதால் இன்னும் நன்றாக எடுக்க முடியாமல் போயிற்று. கூட்டம் அதிகம் உள்ள பகுதியில் இப்படி எல்லாம் எடுக்க ரொம்பவே பொறுமை வேண்டும். முதலில் நின்று எடுத்தேன். பின்னர் நடப்பது போல் ஒரு கால் முன் வைத்து எடுத்தேன். என்னுடன் வந்த நபர் ரொம்பவே டென்ஷன் பார்ட்டி என்பதால் அதிகம் முயற்சி செய்ய இயலவில்லை. இப்படி நிழற்படம் எடுக்க முயற்சி செய்வது மிகவும் பிடிக்கும்
நான் சென்னைக்குள் தான் இருக்கிறேன் என்னைத் தெரிகிறதா? நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன் இல்ல? ஹும் ஆனால் நீங்கள் எல்லோரும் என் அழகைக் கெடுக்கிறீர்களே!
சிறிய இடத்திலும் பசுமை விடியல்!!!?
வெண்டைப் பூவும், வெண்டைப் பிஞ்சுகளும்
சிறிய இடத்து பசுமை விடியலில் முளைக்கீரை அறுவடை!!!
--------------------------------------------------------------------------------------------------------------------------
நான் எடுத்த போது காய்க்கத் தொடங்கியிருந்தது. இப்போது கூடை கூடையாகக் காய்கள். பழுக்க வைத்து......அருமையான மணம், இனிப்பு, சுவை என்று இப்பழத்தைச் சுவைத்துவிட்டால், வெளியில் மாம்பழம் வாங்கவே தோன்றாது. நாங்கள் வாங்குவதும் இல்லை. ஜூஸ் அடித்தால் சர்க்கரையே தேவை இல்லை. மிகவும் செழுமையாக இருக்கும். அணில்கள் கூட்டம் அள்ளும்!!
இது சப்போட்டா காய்ப்பதற்கு முன். இப்படி நிறைய இருக்கின்றன.
சப்போட்டா மிகவும் இனிப்பாகச் சுவையோடு இருக்கும். எங்களுக்கு கிடைப்பது அரிது. அணில்கள் புகுந்து விளையாடும். நாங்களும் விட்டுவிடுவோம்.
வீழ்ந்துவிட்டதால், வீட்டவர்கள் வெட்ட எண்ணினார்கள். என் மனம் மிகவும் வேதனை அடைந்தது. ஆனால், அங்கிருக்கும், கணவரின் தம்பியும் இயற்கை ஆர்வலர். எனவே, நான் அருகில் சென்று பார்த்த போது, "வீழ்வேனா நான்! உயிர்த்தெழுவேன்" என்பது போல் முறிந்த பகுதியில் இன்னும் மரம் ஒட்டிக் கொண்டிருப்பது தெரிய, பச்சையமும் காயாமல் இருப்பதைக் கண்டதும், வெட்டிவிடாதீர்கள், மரத்திற்கு உயிர் இருக்கிறது. முயன்று பார்ப்போம் என்று நான் கெஞ்சிட....இதோ அம்மரத்தில் காய்த்த கொய்யாக்கள்!!! இப்போது அணில்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்!! அணில்கள் மட்டுமல்ல கிளிகளும் வந்து புகுந்து விளையாடும்! கொய்யா கிடைக்கவே கிடைக்காது! போனால் போகிறது. இவ்வுயிரினங்களின் நிலம் தானே! கொண்டாடட்டும்!
-------கீதா
(தலைமையகத்தில் இணையம் பிரச்சனை பண்ணுகிறது. வரும்...வராது என்ற நிலையில். எனவே பதிவுகள் வெளியிடுவதும், அலைபேசியில் வாசித்தாலும் கருத்துகளைப் பதிவதும் தளங்களுக்கு வருவதும், சற்று சிரமமாக இருக்கிறது. பயணமும் மேற்கொள்ள இருப்பதால், இனி மே 5 ஆம் தேதிக்குப் பிறகுதான். இடையில் முடிந்தால் தளங்கள் வந்து வாசித்துக் கருத்திட முயற்சி செய்கிறோம்.)
புகைப்படங்கள் அனைத்தும் இரசிக்க வைத்தன... வர்ணனைகள் ஸூப்பர்
பதிலளிநீக்குத.ம
மிக்க நன்றி கில்லர்ஜி!!! கருத்திற்கு
நீக்குஅழகான படங்கள்..
பதிலளிநீக்குதோட்டத்தினூடாக நடந்தது போலிருக்கின்றது..
வாழ்க நலம்..
மிக்க நன்றி துரைசெல்வராஜு ஐயா! தங்களின் கருத்திற்கு
நீக்குபடங்கள் அனைத்தும் நன்றாக வந்து இருக்கிறது எனக்கு மிகவும் பிடித்த படம் முதல் இரண்டு படங்களும் ஐந்தாவது படமும்தான்
பதிலளிநீக்குமிக்க நன்றி மதுரை சகோ!! அதே அதே...நான் பீச்சில் பைரவர்களைக் கண்டதும் அதுவும் அவர்கள் தண்ணியில் பயமில்லாமல் இறங்குவதைக் கண்டதும் உடனே எடுத்துவிட்டேன். (நாங்க எப்பவுமே கேமராவும் கையுமாத்தானே அலைவோம்..அது ஓட்டைக் கேமராவா இருந்தாலும்..ஹிஹி) எங்கள் வீட்டுச் செல்லங்கள் தண்ணீனாலே ஓடும்....மற்றொரு பீச்சில் வெயிலுக்கு ஒரு பைரவர் நாம் தண்ணீரை அடுத்துச் செல்வது போல் சென்று அலை வரும்போது குளித்து நீந்தி வந்ததைக் கண்டதும் அதையும் எடுத்து வைத்துள்ளேன். பிறிதொரு சயமத்தில் போடுகிறேன்...
நீக்குஅந்த 5வது படத்தை சென்னை வாசிகள் யாராவது கண்டு பிடிக்கிறாங்களானு பார்ப்போம்.....ஆனா இங்க வர சென்னைவாசி, ஸ்ரீராம் மட்டும்தான் என்று நினைக்கிறேன்...பார்ப்போம்...கண்டுபிடிக்கிறாரானு...
ஆஹா சென்னை வாசி ராயச்செல்லப்பா சார் அவர்கள் கண்டுபிடித்துவிடுவார்..
நீக்குஅடையாறு (கூவம்). அதுக்கா இந்த பில்டப்? ஒரு கையால மூக்கப் பொத்திக்கிட்டு படம் எடுத்தீங்களா?
நீக்கு//
பதிலளிநீக்கு(தலைமையகத்தில் இணையம் பிரச்சனை பண்ணுகிறது. // அப்ப தலைமையகத்தை அமெரிக்காவிற்கு மாற்றிவிட வேண்டியதுதான்
ஹை நல்ல ஐடியாவா இருக்கே!! மதுரை சகோ அங்கிருக்க எமக்கென்ன பயம்!! மாத்திடுவோம்!! ஹ்ஹஹ
நீக்குதோட்டம் பார்க்கவே அருமையா இருக்கு. அதுவும் பங்கனப்பள்ளி (அல்லது பச்சரிசி) மாங்காய்கள், கொய்யா.... காணிநிலம் வேண்டும் பராசக்தி என்று பாடத்தோன்றுகிறது. பீனிக்ஸ் மால் படம் என்ன என்று தெரியவில்லை.
பதிலளிநீக்குவாங்க நெல்லைத் தமிழன்...ரொம்ப நாளாச்சு...பார்த்து..
நீக்குஅது பங்கனப்பள்ளி இல்லை...அது என்ன மாங்காய் என்று மாமியாருக்கும் சொல்லத் தெரியவில்லை...ஆமாம். காணி நிலம் வேண்டும்னு பாடமுடியுமா இப்ப? தொட்டி நிலம் வேண்டும்னு வேணா பாடலாம்... அதான் இங்க பால்கனி பசுமை விடியல்...ஹிஹி
ஃபீனிக்ஸ் மாலில் ஆங்காங்கே கண்ணாடிக் கூண்டிற்குள் இந்த மாதிரி பாட்டில் எல்லாம் வடிவமைத்து ஒரு பூங்கொத்து போல வைச்சுருக்காங்க. பாட்டில்னு இல்ல, வெல்த் ஃப்ரம் வேஸ்ட் அப்படினு பேட்டரி, குளிர்பான டின் கள் எல்லாம் கூட உருமாறி நிறைய விச்சியாசமா செஞ்சுருக்காங்க. அப்படியான இந்த பாட்டில் பூங்கொத்தைப் படம் எடுக்க முனைந்த போது கண்ணாடி பேழைக்குள் என்பதால் அதில் பல உருவங்களின் நிழல்களும் தெரிந்தன. நேராக நான் நின்றதால் என் கால்கள் அதன் மேல் பூங்கொத்து இருப்பது போல் கண்ணாடியில் தெரிய உடன் எடுத்துவிட்டென். நடப்பது போல் என் காலை முன்னால் நீட்டி வைத்து அப்படியும் என்று எடுத்தேன்...பலரும் இடையில் புக்ந்து சென்று நடந்து கொண்டிருந்ததாலும் பின்னால் நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்ததாலும் என்னால் ஃப்ரேமுக்குள் சரியாக வைத்து எடுக்க முடியவில்லை....இருந்தாலும் வந்தது வரட்டும் என்று எடுத்ததே இது.
மிக்க நன்றி நெல்லைத் தமிழன்...கருத்திற்கு
"ரொம்ப நாளாச்சு...பார்த்து.." - இல்லை தில்லையகத்து கீதா ரங்கன். தொடர்கதைன்னா, அது முடிஞ்சு, நேரம் கிடைக்கும்போதுதான் வாசிப்பேன். மற்றபடி முடிந்த அளவு இடுகைகளைப் படித்துவிடுவேன்.
நீக்குஇன்றைக்கு மாங்காய், கொய்யா, வெண்டைப்பிஞ்சு, சப்போட்டா போன்ற படங்களைப் பார்த்தவுடன் எல்லாவற்றையும் மிஸ்பண்ணுகிறேனே என்று மனதில் தோன்றியது. முதல் மாங்காய் படம், கிளிமூக்கு மாங்காய். இரண்டாவது, ஊறுகாய் மாங்காய் (பங்கனப்பள்ளியோ என்று தோன்றியது). கிளிமூக்கு மாங்காய், பெரிய மாங்காய் ஆவதற்குமுன் நல்லா இருக்கும். (அதாவது உள்ளே ஓடு உள்ள விரை இருக்கக்கூடாது). வாஷ் பேசின் பக்கத்துல வச்சிருக்கிற கீரை.. அதைப் பறித்து தண்ணீர் உள்ள பாத்திரத்தில் வைத்திருக்கிறீர்களா? பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு.
நான் பல வருடங்களுக்கு முன் பாலக்காடு போயிருந்தபோது, அங்கிருந்த அமைதியான சூழலும், மா, பலா மரங்களையும் பார்த்துவிட்டு, ஏண்டா மக்கள் இந்த அருமையான இடத்தைவிட்டு வெளி'நாடு செல்கிறார்கள் என்று தோன்றியது. எனக்கும்கூட, அங்கேயே பெரிய இடம் வாங்கி செட்டில் ஆயிடலாமா என்று தோன்றியது. எனக்கு மாங்காய் படம் பார்த்தாலே... எவ்வளவு மிஸ் பண்ணுகிறோம் என்று வருத்தம் தோன்றிவிடும். மாங்காய், நுங்கு, பலாப்பழம் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா?
பதிலளிநீக்குபாதுகாப்பா கடல்லே எப்படி குளிக்கிறதுன்னு நாய்களுக்கு தெரியுது ,மனுசனுக்குத்தான் தெரியலே :)
பதிலளிநீக்குஆஹா.. மனிசரைப்போல நாய்கள் மாறிவிட்டன இப்போ:).. அதென்ன பலூன் சோடிப்பா?..
பதிலளிநீக்குஅந்த ஏரி மிக மிக அமைதியாக இருக்கிறதே.. அதிராவைப்போலவேதேன்ன்ன்ன்:).
தேம்ஸ் போல இருக்குல்ல.....அதிரா...கடலோரம் வாழும் பைரவர்கள் இதுக்கு பழக்கம்....
நீக்குஓ உங்க வீட்டு கார்டினோ கீதா... அந்த கீரையைப் பார்க்க எனக்கு புகைப் புகையாப் ........ போகவில்லை எனச் சொல்ல வந்தேன்...
பதிலளிநீக்குஇப்படி இங்கு வளருதில்லையே.. வாங்கவும் முடியாது. இப்போ எங்கள் தமிழ்க் கடைக்கு கொண்டு வந்தார்கள், ஆனா அது விரைவில் அழுகுகிறது பிளைட்டில் வரும்போது என நிறுத்தி வச்சிருக்கினம்.. மீண்டும் வருதோ பார்க்கலாம்..
புகுந்த வீடு என்கிறீர்களே, வேறொரு வீட்டிற்குள் புகுந்து விட்டீர்களா? எப்போது? (2) உங்கள் வீட்டு பைரவிகள் இருவரையும் எப்படித்தான் கடல்வரைக்கும் கொண்டுபோய் பத்திரமாகத் திரும்பிநீர்களோ!(3) அதென்ன 'மே 5' கெடு? பிஎஸ்என்எல்-இல் இருந்து வேறொன்றுக்கு மாறுவீர்களோ?
பதிலளிநீக்கு-இராய செல்லப்பா நியூஜெர்சி
ஹஹஹ...1. யாரேனும் இந்த வார்த்தையைச் சொல்லிக்க்எடப்பார்கள் என்று நினைத்தேன்......2. அது எங்கள் பைரவிகள் இல்லை.....3. ஹஹஸ் சார் பயணம் முடிந்து வருவது...அந்த தேதியில்....என்பதால்....
நீக்குஅழுகுப் படங்களால் ஒரு பதிவு
பதிலளிநீக்குஅருமை
அழகு
எங்கின விட்டிட்டுப் போனேன் எனத் தெரியல்லியே முருகா.... ஆங் பிடிச்சிட்டேன்ன் கீரையில விட்டேன்ன்..
பதிலளிநீக்குகீதா அந்த சாடியில் குட்டிக் கன்றுகளாக நிற்பவை என்ன செடிகள்? மரக்கறி வகையா? இல்ல பூங்கன்றுகளோ?
ஓ வெண்டிக்காய் பூவோ அது? ரொம்ப அழகா இருக்கு.
மாம் பிஞ்சுகள் பார்க்கவே வாய் ஊறுது.. எனக்கு இப்படியே பிஞ்சாக மரத்திலிருந்து பிடுங்கிச் சாப்பிட ஆசை...
இது விலாட் பழம் போல இருக்கே.. எங்கள் வீட்டில் இருந்ததே.. பென்னாம் பெரிய பழம் பழுக்கும்.. இனிப்பெனில் கற்கண்டுதான். கறுத்தக் கொழும்பான் என இலங்கையில் சொல்லுவோம் அதை, கருமை நிறமாக இருக்கும் பிஞ்சில்.
பதிலளிநீக்குஎங்களுக்கும் வெளவால் விடாது, ஆனா மரத்தில் அங்காங்கு மணிகள் கட்டி... அதனை கயிறின் மூலம் வீட்டுக்குள் எடுத்து வந்து, அப்பா அம்மா பெட்டுக்குப் பக்கத்தில் வச்சிருந்து, நைட் முழிக்கும் நேரமெல்லாம், இழுத்து ஆட்டி விட்டால் மணி அடிக்கும்.. அப்போ வெளவால்கள் ஓடிடும்...
ஆனா கறுத்த கொழும்பு மாமரம் பென்னம் பெரிசு.
ஓ சப்போர்ட்டா.. எனக்கிந்த சப்போர்ட்டாவை இன்னும் சரியாக அடையாளம் பிடிக்க முடியவில்லை.. இதை ஊரில் லாபுளூ பழம் எனச் சொல்லுவோம் என நினைக்கிறேன், எனக்கது பெரிதாக பிடிக்காது.
பதிலளிநீக்குகொய்யாமரமும் பழமும் அழகு.. எங்கள் வீட்டிலும் நிறைய இருந்துது, பல்ப் பூட்டியதுபோல அங்காங்கு மஞ்சள் பழங்கள் தொங்கும்... இப்போகூட கனவில் பழம் பிடுங்குவதுபோல கனவுகள் வரும்:(.. நம் நாட்டுப் பிரச்சனையால்.. அத்தனை மரங்களும்.. வீடும் அழிக்கப்பட்டு விட்டது:(.[இரு வீடுகள், ஒன்று முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது, அதில்தான் நிறைய மரங்கள்] , மற்றையது இப்பவும் இருக்கு ஊரில்.
ஊரிலும் ஒரு தடவை ஏற்பட்ட பலத்த காற்றால், எங்கள் பென்னாம் பெரிய மாமரம், வேரோடு சரிந்து விழுந்து விட்டது... அப்பா அம்மாவுக்கும் வெட்ட மனமில்லை, அதனால சில கொப்புக்களை மட்டும் வெட்டி விட்டு, ட்ரக்டர் பிடிச்சு செயின் போட்டுக் கட்டி இழுத்தி நிமித்தி விட்டார்கள்.. அது தப்பி விட்டது... பலகாலம் இருந்துது.. பின்னர் ஆமியால் அழிக்கப்பட்டு விட்டது.
பதிலளிநீக்குஓ நானும் நேரம் கிடைக்கும் போதுதான் எட்டிப் பார்க்கிறேன், நேரம் கிடைக்கையில் வாங்கோ. அருமையன பதிவு, ரசித்தேன், பழைய நினைவுகளையும் கிளறி விட்டுவிட்டது.
பதிலளிநீக்குநீராடும் பைரவர் மற்றும் மணலோடு விளையாடியுறங்கும் பைரவர்கள் பிடித்தது எனக்கும் ..சென்னையில் ஒரு அழகி :) எவ்ளோ அழகு ..கொஞ்சம் பராமரித்தால் இன்னும் செழிப்பாவாள் ..
பதிலளிநீக்குவெண்டைக்காய் பூ எனக்கு பிடித்த மஞ்சள் நிறம் மெரூன் சென்டர் செம கலக்கல்
நான் இங்கேயும் கூட தக்காளி ரெட் கரென்ட்ஸ் அப்புறம் பிளாக் பெரி எல்லாத்தையும் அணிலுக்கும் பேர்ட்ஸுக்குவிட்டுடுவேன் ..
அதை பார்த்து ரசிப்பதில் அளவில்லா ஆனந்தம் ..சிறிய ஜீவராசிகளின் வயிறு நிறைஞ்சா இறைவன் ஆசீர்வதிப்பார் நம்மை ..கீரைகள் எல்லாம் நல்லா வந்திருக்கே இங்கே ஒரு நாள் கொளுத்துது அப்புறம் மழை இருட்டுன்னு குளிர் ..செடிகள் முளைக்க தாமதமாகுது
ஆயிரம் வரிக் கவிதை எழுதினாலும்
பதிலளிநீக்குஒரு புகைப்படத்திற்கு ஈடாகுமா?
அழகான படங்கள் தரும் செய்தி
அருமையாகத் தொகுத்துள்ளீர்கள்
பாராட்டுகள்!
அருமையான படங்கள். மாமரத்தைப் பார்த்ததும் அம்பத்தூர் வீடு நினைவில் வருது! நன்றாகக் காய்த்துக் கொண்டிருந்த மூன்று மாமரங்கள் பக்கத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டுகையில் அவங்க கொட்டின சிமென்ட் வேரில் பட்டு உயிரை விட்டு விட்டன. பட்டுப் போன மரத்தை வெட்ட ஆயிரம் ரூபாய் கொடுத்து வெட்டச் சொன்னோம். ஒரு மரத்துக்கு ஆயிரம் ரூபாய்! அதே போல் நல்ல ஜாதி நாரத்தை மரமும்! :(
பதிலளிநீக்குஅப்புறமா இன்னொரு விஷயம். எந்தப் பழத்தில் சாறு செய்தாலும் அதில் சர்க்கரை சேர்க்க வேண்டாம். பழத்தின் ருசியும் பழத்தின் சத்தும் மாறுபடும். நாங்க கடையில் வாங்கிச் சாப்பிடும்போது கூட ஐஸோ அல்லது சர்க்கரையோ சேர்க்க வேண்டாம் என்று சொல்லி விடுவோம். எலுமிச்சை தவிர்த்து! எலுமிச்சையில் நன்னாரி சர்பத் சேர்த்தால் சர்க்கரை வேண்டாம். இல்லைனா சர்க்கரை, உப்புச் சேர்க்கணும்.
பதிலளிநீக்குமரங்களை, செடிகளைக் காக்கும் பண்பு போற்றத் தகுந்தது. படங்கள் அருமை. அந்தக் கொய்யா மரம் போல இங்கேயும் நிலவேம்பு! சாய்ந்து கிடந்ததை வெட்டி விட்டோம். இப்போது அது படுக்கை வசத்திலேயே வளர்ந்து வருகிறது!
பதிலளிநீக்குதம +1
பேசும் படங்கள். எங்கள் வீட்டை நினைவு செய்கின்றன.
பதிலளிநீக்குதங்கள் நேசம் வளரட்டும் அம்மா. மரங்கள் உயிர்க்கு
பல ஆண்டுகளுக்கு முன் எங்கள் வீட்டில் கொய்யா மாதுளைகருவேப்பிலை போன்ற மரங்கள் இருந்தன கல்லடி தாங்கமுடியாமல் கொய்யா மரத்தை வெட்டினோம் கருவேப்பிலை தானாகவே பட்டு விட்டது மாதுளைக்கு இடம் போதவில்லை இப்போதைக்கு மாமரமும் ஒரு தென்னையும் பல பெயர் தேரியாத செடிகொடிகளும் இருக்கின்றன .
பதிலளிநீக்குnice pictures
பதிலளிநீக்குஆஹா! இந்த கொளுத்தும் கோடைக்கு இதமாக எத்தனை குளுமையான படங்கள்!
பதிலளிநீக்குபடங்களும் அதன்கீழ் இடம்பெற்ற கருத்துகளும் ரசனை.
பதிலளிநீக்குபுகைப்படங்கள் அனைத்தும் அழகு.
பதிலளிநீக்குநல்ல படங்கள்! வீட்டில் ஒரு தோட்டமே வைத்திருக்கிறீர்கள் போல? அருமை! எங்கள் வீட்டிலும் அணில்கள் வந்து கொய்யா சாப்பிட்டுக் கொண்டிருந்தன. ஆனால், வீடு கட்டுவதற்காக மரத்தை வெட்ட வேண்டியதாகி விட்டது. ஆனாலும், வழக்கம் போல் நாங்கள் வைக்கும் சாப்பாட்டைச் சாப்பிட அணில்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இதுவரை கிளி ஒன்று கூட வந்ததில்லை. உங்கள் வீட்டில் வருகிறது என்பதை அறிய மகிழ்ச்சி!
பதிலளிநீக்கு