https://thillaiakathuchronicles.blogspot.com/2017/04/Identity-1.html முதல் பகுதி
https://thillaiakathuchronicles.blogspot.com/2017/04/Identity-2.html இரண்டாம் பகுதி
முந்தைய பகுதியின் இறுதி வரி....ஒரு ஞாயிறன்று, கார்த்தி தனது பாடத்திற்கான குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்த போது தொலைபேசியில்
சம்யுக்தாவின் அழைப்பு வரவே எடுத்துப் பேசிட சம்யுக்தாவின் பதட்டமான குரல்….
“கார்த்தி
நீ இங்க உடனே வர முடியுமா? நீ இங்கு வா சொல்லறேன். அழுதுவிடுவாள்
போல இருந்தது.
“இதோ
வர்ரேன்” என்ற கார்த்தி தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு தான் இருந்த ஜான்ஸன் ஸ்ட்ரீட்டிலிருந்து
அவள் தங்கியிருந்த ஃபில்மோர் அவென்யுவிற்கு விரைந்தான். என்னவாக இருக்கும்? கையில்
மொபைல் வைத்துக் கொள்ள இயலாத காலம் அது. எப்படி சம்யுக்தாவைத் தொடர்பு கொள்வது என்று
கார்த்தி எண்ணிக் கொண்டே அவள் தங்கியிருந்த இடத்தை நெருங்கும் நேரம்,
சம்யுக்தா வெளியில் வந்துவிட்டாள். அங்கிருந்த அழகான தோட்டம் கார்த்தியின் மனதைக் கவர்ந்தது. ரசிக்கும் நேரம் இல்லை இது.
“கார்த்தி
ரொம்ப தாங்க்ஸ் உடனே வந்ததுக்கு…” குரலில் இன்னும் நடுக்கம் இருந்தது.
“எதுவா இருந்தாலும் கூல்
சம்யுக்த். பதட்டப்படாதே. இந்தத் தெரு எண்ட்ல ஸ்டார் பக்ஸ் இருக்குல அங்க போய் உக்காந்து பேசலாம்…”
அவள்
கண்களில் கண்ணீர் இதோ கொட்டிவிடுவேன் என்று கட்டியிருந்தது. கார்த்தி சைக்கிளுடன் நடந்தான்.
“எனக்கு
உடனேயே வீடு மாறியாகணும். இங்க சேஃப்டி இல்ல.” என்று சொல்லும் போதே சம்யுக்தாவிற்குக்
குரல் உடைந்தது.
“ஓகே.
மாறலாம். அமைதியா வரியா? ரிலாக்ஸ்.”
“ம்ம்ம்…”
ஸ்டார்பக் வந்ததும் வழக்கம் போல் கார்த்தி கோல்ட் காஃபியும், சம்யுக்தா ஹாட் காஃபியும்
ஆர்டர் செய்து எடுத்துக் கொண்டு வெளியில் வந்து புல்தரையில் இருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்தார்கள்.
ஒரு ஸிப் காஃபி உள்ளே சென்றதும் சம்யுக்தாவிற்குச் சிறிது ரிலாக்ஸ் ஆனது போல் இருந்தது.
“இப்ப
ஓகேயா? சம்யுக்த்?”
“யா.
ஃபீல் பெட்டர்.”
“இப்ப
சொல்லு என்னாச்சு?” அவள் தன் உணர்வுகளை வெளிப்படுத்தட்டும் என்று காத்திருந்தான்.
கொஞ்சம்
அமைதி காத்தாள் சம்யுக்தா. இன்னும் 3, 4 ஸிப் விழுங்கிவிட்டுத் தொடர்ந்தாள்.
நாங்க
3 பேர் தனித்தனி ரூம்ல வித் காமண் கிச்சன் தங்கியிருக்கோம்னு சொல்லியிருக்கேன்ல. ஓனர்
நம்மூர் ஆளு. நார்த் இண்டியன். மேரிட். வைஃப் கானடால வேலை பாக்கறாங்க. பசங்க வேற ஊர்ல
காலேஜ் படிக்கறாங்க.
"அதான் ஏற்கனவே சொல்லிருக்கியே..விஷயத்துக்கு வா.."
"வீக் என்ட் இல்லையா. மத்த 2 ரூம்ல தங்கியிருந்த 2 பசங்களும் வெளிய
போயிருக்காங்க. நான் வழக்கம் போல எனக்குத் தேவையானத சமைக்கப் போனேன். என் அப்பா மாதிரியான அவன்…. என் பின்னாடி வந்து என் தோள்ல மேல கை போட்டு ஹக் பண்ணி..ச்சே.….என்று சொல்லி
முடிப்பதற்குள் மீண்டும் அவள் குரல் உடைய அவளால் பேச முடியவில்லை.
“ஓகே.
நீ மேற்கொண்டு எதுவும் சொல்ல வேண்டாம். பயப்படாத. ஃபர்கெட் இட். நாம ஸ்டூடன்ட்ஸ். வெளிநாடு
வேற…. வேண்டாம் பிரச்சனை. இன்னும் 3 மாசம்தான். அப்புறம் க்ளினிக்கல் எக்ஸாம். நம்ம
விசா முடிஞ்சு இந்தியா போயிருவோம். இங்குள்ள லா இன்னும் சரியா தெரியாது. ஸோ… விட்டுரலாம்.
நான் தங்கியிருக்கற அப்பார்ட்மென்ட் வீட்டுல
இன்னும் ஒரு ரூம் ஃபில் ஆகாமதான் இருக்கு. அத ஃபிக்ஸ் பண்ணலாம். உனக்கு ஆட்சேபனை இல்லைனா.”
“ப்ளடி
ராஸ்கல்…. ஸாரி கார்த்தி நான் அப்படித்தான் அவன சொல்லுவேன். இதுல அவன் போட்ட கண்டிஷன்ஸ்
இருக்கு பாரு, ஃப்ரென்ட்ஸ் பார்ட்டினு எல்லாம் வரக்கூடாது, ஃப்ரென்ட்ஸ் வீட்டுக்கு
வரக் கூடாது. அப்படி இப்படினு…. அந்த ப்ளடி ராஸ்கல, கிழத்த ஒரே தள்ளூ தள்ளிட்டு மேல
என் ரூமுக்கு வந்து உன்னை கூப்பிட்டேன். அவன் என் ரூம் கதவ தட்டி, ஏதோ சொல்லிட்டிருந்தான்.
கெஞ்சினான். நான் கதவைத் திறக்கவும் இல்ல. ப்ளாக்மெயில் பண்ணினேன். அவன் பயந்து போய்ட்டான்.
நீ வரத பார்த்துட்டுத்தான் நான் வெளில வந்தேன்.”
“பரவால்ல
நான் நினைச்சத விட தைரியமாத்தான் இருக்க.” என்று சொல்லி கார்த்தி அவளைப் பார்த்துக்
கண் சிமிட்டிச் சிரித்தான். சம்யுக்தாவும் அழுகை, கோபத்திற்கிடையில், "போடா, யு நாட்டி" என்று வெட்கத்துடன் சிரித்தாள்.
மீண்டும்
கார்த்தி தொடர்ந்தான். “இனி மேல மேல இதப் பத்திப் பேச
வேண்டாம். இந்தாள் கிட்ட செட்டில் பண்ணிட்டு, உன் லக்கேஜ் எடுத்துட்டு நாம அங்க போறோம்.
ஓகே?” என்று அவர்கள் பேசிக் கொண்டே எழுந்திருந்த போது, மெதுவான குரலில் கார்த்தி,
"பசங்க வராங்க, ரிலாக்ஸ்டா இரு, எதுவும் முகத்துல காமிச்சுக்காத.." என்றான்.
“ஹை!
கேர்ட்டி! ஹேய் ஸெம்யு! ஹௌ யா டூயின்?” என்று கேட்டுக் கொண்டே அவர்களது வகுப்பு மாணவ,
மாணவிகள் 4 பேர் காஃபியுடன் வந்தார்கள். அவர்கள் சினிமாவுக்குச் செல்ல இருப்பதாகச் சொன்னார்கள். சிறிது பேசிவிட்டு
இவர்கள் இருவரும் புறப்பட்டார்கள்.
“ஓகே
பை! ஹேவ் எ நைஸ் டே! நாளைக்கு காலேஜில் சந்திப்போம்.”
“பை”
என்று சொல்லி கார்த்தியும், சம்யுக்தாவும் புறப்பட்டார்கள். குளிர் காற்று அடித்தது.
சம்யுக்தாவிற்கு இப்போது மனம் கொஞ்சம் அமைதியாக இருந்தது. வரும்போது சோகமாகத் தெரிந்த
தோட்டம், புள்வெளிகள் இப்போது கண்ணிற்குப் பசுமையாக இருப்பது போன்று தெரிந்தது. மனதில்
ஓடும் எண்ணங்களுக்கு ஏற்பத்தான் காட்சிகள் மாறிக் கொண்டே இருக்கும் போலும்!
“தாங்க்ஸ்
எ லாட் கார்த்தி”
கார்த்தி வழக்கம் போல் தன் தோள்களைக் குலுக்கி, புருவம் உயர்த்தி அவளைப் பார்த்துக் கொண்டே புன்னகையால் ஏற்றுக் கொண்டான். ‘ஏற்கனவே சம்யுக்தாவிற்கு ஒரு
இன்செக்யூர்ட் ஃபீலிங்க் இருப்பது போல் தெரிகிறது. இந்தச் சம்பவம் அதற்கு இன்னும் துணை
போகுமோ? எப்படியாவது அதிலிருந்து அவளை வெளிக் கொணர வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டே
அடுத்தடுத்து செய்ய வேண்டியதைச் செய்து சம்யுக்தாவைத் தான் தங்கியிருந்த அபார்ட்மென்டில்
தங்க வைத்தான்.
அங்கு 4 ரூம்கள். பொதுவான சமையலறை என்பதால் இவர்கள் இருவரும் சேர்ந்து தங்களுக்கானதைச் சமைத்தார்கள்.
சாப்பாட்டிற்கான செலவைப் பகிர்ந்து கொண்டார்கள். பாடங்கள், புத்தகங்கள் என்று கார்த்தி சம்யுக்தாவிற்குக் கொடுத்து உதவினான். அவர்கள் நட்பும் மேலும் வலுவானது. நாட்கள் ஓடின. ஒரு நாள் மாலை
கல்லூரியிலிருந்து அப்பார்ட்மெண்டிற்குப் பேசிக் கொண்டே நடந்து கொண்டிருந்த போது திடீரென்று
சம்யுக்தா ஜப்பனீஸ் மேப்பிள் மரம் அருகில் நின்றாள்.
“கார்த்தி,
நான் ஒன்னு சொன்னா நீ எப்படி எடுத்துப்பனு தெரில…ம்ம்ம்”
“எதுவுமே
சொல்லாம, எப்படி எடுத்துப்பனு நீயாவே டிசைட் பண்ணினா எப்படி?” என்று கீழே விழுந்திருந்த
அந்த மேப்பிள் இலைகளை எடுத்து அதன் அழகை ரசித்துக் கொண்டு புல்தரையில் அமர்ந்தான்.
“பாட
சம்பந்தமாவும், வேற சில விஷயங்கள்லயும் நம்ம ரெண்டு பேருக்குள்ளயும் ஆர்க்யுமென்ட்ஸ்
வந்தாலும், நிறைய விஷயங்கள், ரெண்டு பேரோட லட்சியங்கள், எண்ணங்கள், ப்ரொஃபொஷன் இப்படி
ஒத்துப் போறதுனால நாம வாழ்க்கைலயும் சேர்ந்து வாழலாம்னு தோனுது…..எனக்கு உன்னை ரொம்பப்
பிடிச்சுருக்கு கார்த்தி!”
“ம்ம்ம்
எனக்கும் உன்னை பிடிச்சுருக்கு. ஆனா, இது ரைட் டைம் இல்லையோனும் தோனுச்சு. சொல்லிருக்கேன்ல
என் தங்கை இப்பதான் காலேஜ்ல 2 வது வருஷம், ஆர்க்கிடெக்சர். ஃபேமிலில எனக்கு சில கமிட்மென்ட்ஸ்
இருக்குல. அதனாலதான் இன்னும் கொஞ்சம் போனப்புறம் பேசலாமேனு தோனுச்சு…”
“ஓ!
ரியலி?!! உன் மனசுலயும் இந்த எண்ணம் இருக்குன்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு கார்த்தி.
தேங்க்ஸ் எ லாட்! கமிட்மென்ட்ஸ் நா அப்போ உங்க வீட்டுல ஏதாவது சொல்லுவாங்களா?”
“ஹேய்
நோ! நான் ஏற்கனவே என் அப்பா, அம்மா, தங்கைகிட்ட உன்னை பத்திச் சொல்லிட்டேன். அவங்களுக்கு
என் மேல முழு நம்பிக்கை உண்டு”
“இஸ்
இட்?! அமுக்கு மாதிரி இருந்து இவ்வளவு வேலை பண்ணிருக்கியா? நான் என் அம்மா கிட்ட நம்ம
ஃப்ரென்ட்ஷிப் பத்தி சொல்லிருக்கேன். ஆனா இது பத்தி இனிதான் பேசணும். பட் பிரச்சனை
வராது. என் விருப்பம்தான். அப்பாவும் ஒன்னும் சொல்ல மாட்டார். நான் ஒரே பொண்ணுல..”
“ம்ம்ம்”
என்று சொல்லிக் கொண்டே ஏதோ யோசனையில் நடந்து வந்து கொண்டிருந்த கார்த்தி, “உன் குடும்ப
ஃபினான்ஸியல் ஸ்டேட்டஸ் ஹை…. என் குடும்ப ஃபினான்சியல் ஸ்டேட்டஸ் லோ தான்… பெரியவங்களுக்கு
அது தடைக்கல்லா ஆகாம இருந்தா ஓகே னும் தோனுது….பார்ப்போம்..”
“ஹேய்.
கமான் கார்த்தி! நம்ம எய்ம் பண்ணினத அச்சீவ் பண்ணிட்டு, நாம ஃபொரொஃபஷன்ல செட்டில் ஆனதும்
மேரேஜ் பத்தி பேசிக்கலாமே! இல்லையா” என்று சொல்லி கார்த்தியைப் பார்த்தவள் கார்த்தி
ஏதோ யோசனையில் இருப்பதைப் பார்த்ததும், “என்ன யோசனை கார்த்தி? நான் சொன்னது சரிதானே?"
“ம்ம்
ஐ ஃபுல்லி அக்ரீ வித் யு. கண்டிப்பா…சம்பாத்தியம் இல்லாம மேரேஜ் பத்தி யோசிக்க முடியாது.
ஓகே! அடுத்த வாரம் க்ளாஸஸ் முடியுது, அப்புறம் கிளினிக்கல் எக்ஸாம் வருது. ஸோ அதப்
பார்ப்போம் எக்ஸாம் முடிஞ்சப்புறம் இதப் பத்திப் பேசலாம்”
“அக்ரீட்!
நல்ல குளிருது கார்த்தி. வீட்டுல போய் சமைக்கணுமே.”
“பார்ப்போம்
என்ன இருக்குதோ அதை வைச்சு சமாளிப்போம். எதுவும் இல்லைனா நான் ஏதாவது செய்யறேன். ஓகேதானே?”
என்று சொல்லிக் கொண்டே வந்த போது தங்கள் அப்பார்ட்மென்டின் அடுத்து இருந்த 7-லெவன்
கடை கண்ணில் பட்டதும், எதற்கும் ப்ரெட் வாங்கிக் கொண்டு போகலாம் என்று கார்த்தி ப்ரெட் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து சான்ட்விச்
செய்து சம்யுக்தாவிற்கும், தனக்கும் எடுத்து டேபிளில் வைக்கவும், அவளுக்கு அவள் பெற்றோரிடமிருந்து
அழைப்பு வந்தது.
அலைபேசியின்
ரிங்க் டோன் சம்யுக்தாவின் நினைவுகளைக் கலைத்தது. பார்த்தாள். அவள் பெற்றோர்தான்.
“சம்யு
இப்பதான் ரிசப்ஷனுக்குப் போறோம். என்ன செஞ்ச? சாப்டியா”
“இனிதான் சாப்டனும்மா. ப்ரெட் இருக்கு! அப்பா ஓகேதானேம்மா? காலைல கல்யாணம் நல்லா நடந்துச்சா”
“அப்பா
ஓகே. கல்யாணம் நடந்துச்சு. என்ன கொஞ்சம் சம்பந்திப் பிரச்சனை வந்துச்சு….மாப்பிள்ளை
வீட்டுக்காரங்க பொண்ணோட அம்மா அப்பாவோடு பிரச்சனை பண்ணிட்டாங்க. சரி மா. கார் வந்துருச்சு.
நாளைக்குப் பேசறேன். ஒழுங்கா சாப்டுட்டுப் படு என்ன?”
“ஓ!....
சரிம்மா. பார்த்துப் போங்கமா..”
கிச்சன் சென்று, ஏனோ ப்ரெட் சான்ட்விச் சாப்பிடத் தோன்றியதால், செய்து சாப்பிடத் தொடங்கவும் மீண்டும் எண்ண அலைகள்
அமெரிக்காவிற்குப் பயணம்…
“கார்த்தி,
நான் உங்க அம்மா அப்பாவை நிச்சயமா ரெஸ்பெக்ட் பண்ணுவேன். அதே மாதிரி நீ எங்க அம்மா
அப்பாவை ரெஸ்பெக்ட் பண்ணுவதானே”
கார்த்தி
ஒரு நிமிடம் அவளையே உற்றுப் பார்த்தான்.
“என்னாச்சு
சம்யுக்த்? ஏன் இப்படி ஒரு கேள்வி?”
“இல்ல
எங்க வீட்டுல நடந்த சில விஷயங்கள் மனசுல வந்துச்சு அதான்…”
“யார்
வேணா எப்படி வேனா இருந்துட்டுப் போகட்டும். என் மேல உனக்கு நம்பிக்கை இருக்குதா இல்லையா?
நான் நிச்சயமா உன் பேரன்ட்ஸயும் என் அம்மா அப்பா போலத்தான் நடத்துவேன் போதுமா? சரி
இன்னும் ஏதாவது சந்தேகம் இருந்தா தீர்த்துக்க” என்று சொல்லி வழக்கமான அதே புன்சிரிப்பு.
“ஒரு
வேளை நான் உன்னைவிட நிறைய சம்பாதிச்சா உனக்கு ஈகோ பிரச்சனை வருமா?” என்று கேட்டுவிட்டு அவனது கண்ணை நேரடியாகப் பார்த்தாள்.
கார்த்தி
பெரிதாகச் சிரித்தான்! இவளிடம் நிறைய பேச வேண்டும். பேசித் தெளிய வைக்க வேண்டும்..என்று
நினைத்துக் கொண்டான்.
“ஒன்னு
சொல்லறேன் உன் மனசுல பதிய வைச்சுக்க. நீ என்னைவிட சம்பாதிக்கறது எல்லாம் எனக்குப் பிரச்சனையே
இல்ல. அன்பு. அதுதான் எனக்கு முக்கியம். என்னைப் பொருத்தவரை ஜஸ்ட் இருக்க ஒரு இடம்,
பசிக்குச் சாப்பாடு, உடுக்க ட்ரெஸ், முடிஞ்ச அளவு உதவணும், நம்ம ப்ரொஃபொஷன்ல நிறைய செய்யணும், தொழில் சாட்டிஸ்ஃபேக்ஷன்.
அவ்வளவுதான்.”
சம்யுக்தா தங்கள் இருவருக்கும் உரிமம் கிடைத்து சிறப்புப் பயிற்சி என்று தங்கள் வாழ்க்கைத் தொடர்வதாக கனவில் இருந்தாள்.
வகுப்புகள்
முடிந்தது. அதன் பின் உரிமம் பெறுவதற்கான கிளினிக்கல் பரீட்சை எல்லாம் முடிந்தது. விசா முடியும் காலம் ஆனதால், இருவரும் இந்தியாவிற்குத் திரும்பினர். அடுத்த ஒரு மாதத்திற்குள்
இருவருக்குமே ECFMG certification - உரிமம் கிடைத்துவிட்டது. அடுத்து சிறப்புப் பயிற்சி
பெறுவதற்கு விண்ணப்பித்தார்கள். இடைப்பட்ட காலத்தில் இருவரும் அவரவர் ஊரில் மருத்துவமனை
ஒன்றில் வேலை செய்துவந்தார்கள். தொடர்பில் இருந்தார்கள். இடையில் சந்திக்கவும் செய்தார்கள்.
சிறப்புப்
பயிற்சிக்கான முடிவுகள் வெளியாகின. கார்த்திக்குக் கிடைத்தது. சம்யுக்தாவிற்குக் கிடைக்கவில்லை.
சம்யுக்தா மனம் ஒடிந்து போனாள். யாரிடமும் பேசவில்லை. கார்த்தி அவளைத் தொலைபேசியில்
அழைத்தான். முதலில் அவள் அழைப்பை ஏற்கவில்லை. பின்னர், அவன் மீண்டும் அழைக்க அவள் எடுத்தாள்.
“ஐ
ஆம் ஸாரி கார்த்தி, யு ஆர் நாட் பார்ட் ஆஃப் மை லைஃப் எனிமோர்.”
தொடரும்....
-----கீதா
என்ன இது இப்படியாகி விட்டது..
பதிலளிநீக்குகதை தான் என்றாலும்?..
ஆம் ஐயா!! கதைதான். ஆனால் இதன் கரு அப்படியானது. மிக்க நன்றி துரைசெல்வராஜு ஐயா தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும்
பதிலளிநீக்குஅட ஏன் இப்படி ஒரு முடிவு சம்யுக்தா! :)
பதிலளிநீக்குதெரிந்து கொள்ள தொடர்கிறேன்!
வெங்கட்ஜி அதுதான் மெயின் கருவே இக்கதையின் ...மிக்க நன்றி
நீக்குநல்லதொரு மாற்றம் அடுத்த பதிவில்...?
பதிலளிநீக்குகாத்திருக்கிறேன்...!
ஹஹஹ டிடி அது நல்ல மாற்றமா இல்லையானு நீங்க தான் சொல்லணும்...மிக்க நன்றி டிடி
நீக்குதொடர்கிறேன்....சம்யுக்தாவை.
பதிலளிநீக்குஆஹா! கில்லர்ஜி இந்த வாட்டி நீங்களா...முதல் பகுதில ஸ்ரீராம் தொடர ஆரம்பித்தார்...இப்ப நீங்களா...
நீக்குஇந்த அதிரா எங்க போனாங்கனு தெரில.....சம்யுக்தாவைப் ப்ரொட்டெக்ட் பண்ணாம..ஹஹஹஹ்ஹ்
ஹையொ கீதா.. நா கவனிக்க வில்ல சத்தமாக சொல்லாதிங்க அதிரா payments still pending
நீக்குஆவ்வ்வ்வ்வ் நாஆஆஅ... வந்துட்டேன்ன்ன்:).. என்னாது எங்கட ஸ்ரீராமைடமிருந்து ஒருமாதிரி சம்யுக்தா அக்காவைக்:) காப்பாற்றினேன்.. இப்போ நான் வரப் பிந்திய இந்த சைக்கிள் ஹப் ல கில்லர்ஜி யாஆஆ?:)...
நீக்குஎதுக்கும் இருங்க கதையைப் படிக்காமல் இங்கின வம்பளக்க மாட்டேன்ன்:) பிறகு நானே மாட்டிடுவேன்:).
////அதிரா payments still pending///
நீக்குஇதென்ன புயுக் கதை:)யாக் கிடக்கூஊஊஊஊ:).. நானே உண்டியல் வச்சு பெனிப் பெனியா சேர்க்கிறேன் வள்ளியின் நேர்த்திக்கடனை தீர்க்க:).
ஏஞ்சல் சத்தமா சொல்லிட்டனோ...பருங்க அதிரா வந்துட்டாங்க...ஹஹஹஹ்
நீக்குஇல்ல கீதா, நீங்க ரகசியமாத்தான் சொன்னீங்க:) ஆனா நேக்குப் பாஆஆஆஆஆம்புக் காதாக்கும்:).
நீக்குஅவர்கள் சேர்வதும் சேராததும் எழுதும் பிரம்மாவைப் பொறுத்ததுதான் அல்லவா பல விஷயங்கள் அனுபவங்கள் மூலமே தெரியும் பேசுவதால் மட்டும் அல்ல/ ஆனால் பேசுவது ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதில் இருக்கிறது தொடர்கிறேன்
பதிலளிநீக்குஉண்மைதான் சார் கதாசிரியரின் புனைவில்தான் இருக்கிறது முடிவு!!!அனுபவம் தான் மிகச் சிறந்த ஆசிரியர்..! மிக்க நன்றி சார் கருத்திற்கு
நீக்குசம்யுக்தா ரொம்ப சென்டிமென்டல் எமோஷனல்டைப் ..எல்லாவற்றுக்கும் அவசரப்படும் குணம் .பாப்போம் என்னவாகிறார்கள் இருவரும் என
பதிலளிநீக்குபாருங்கள் ஏஞ்சல்!!! சென்டிமென்டல், எமோஷனல் டைப் ஆம் அதுவும் எதனால் என்பது அடுத்த பகுதியில் தெரிந்துவிடும்....அவசரப்படும் குணமா??!!!ம்ம்ம்ம் சரி கார்த்தியையே கேட்போம் அடுத்த பகுதியில்...மிக்க நன்றி ஏஞ்சல்!!
நீக்குஆமாம்ம்ம் ஆமாம்ம் சம்யுக்தா.. குறை மாதக் கொயந்தை:) எங்கட..... வைப்போலவேதேன்ன்ன்ன்ன்:).
நீக்குபொம்பளைங்களே இப்படித்தான்...திடீர் திடீர் என்று மாறிவிடுவார்கள். அர்த்தமே வேறுதான், அகராதி வேறுதான்...('மிஸ்சியம்மா') சுவாரஸ்யமாகக் கொண்டுபோகிறீர்கள். சபாஷ்!
பதிலளிநீக்கு- இராய செல்லப்பா (இன்று) நியூ ஆர்லியன்ஸ்.
மிக்க நன்றி செல்லப்பா சார்.கதைகள், கட்டுரைள் என்று அருமையாக எழுதும் எழுத்தாளர் வாயிலிருந்து சபாஷ்!!! தங்களது வார்த்தைகள் மேலும் எழுதத் தூண்டுகிறது சார். மிக்க நன்றி சார்!!
நீக்குகாதலிக்கத் துவங்கும் காலங்களில்
பதிலளிநீக்குஒருவரை ஒருவர்
மிகச் சரியாகப் புரிந்து கொள்ளாததால்
இதுபோன்ற தடுமாற்றங்கள்
ஏற்படுவது சகஜம்தான்
ஆயினும் கார்த்திக் போன்ற
முதிர்ச்சியான இளைஞர்கள் இதை
எளிதாக சமாளித்துப் போவார்கள்
எனபது என் எண்ணம்
பார்ப்போம்
சுவாரஸ்யமான கதைப் பின்னல்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
ரமணி சார் தங்களின் விரிவான அழகான கருத்துள்ள பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சார். ஊக்கம் தருகிறது...
நீக்குநான்ன்ன் வந்திட்டேன்ன்ன்ன்... ஆங்ங்ங்ங் எங்கின விட்டேன்ன் ஜாமீஈஈ:)... இடையிடையே பின்னூட்டத்துக்கே பின்னூட்டம் போட்டமையால் ஒண்ணும் பிரியுதில்ல இப்போ...
பதிலளிநீக்குசரி 2 வது வோட் என்னோடது... இதைச் சொன்னாத்தானே என் பக்கம் வந்து வோட் போடீனம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. அதிரா பாவம்.. வோட் போடுவமே என ஆரும் நினைப்பதில்லை:).. சரி விடுங்கோ விசயத்துக்கு வாறேன்..
///“இதோ வர்ரேன்” என்ற கார்த்தி தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இக்கால ஸ்டைலில் நேற்று மொக்கா குடிக்கினம்.. இன்று சைக்கிள்ளயா போறார் கார்த்திக்.. சரி விடுங்கோ நல்லதுதான்ன்...
ஹலோ கதை 15 வருடத்திற்கு முன்.....சம்யுக்தா நினைத்துப் பார்க்கிறாள்....இப்போதும் அமெரிக்காவில் சைக்கிளில் செல்பவர்கள் உண்டு...என் மகன் அங்கு தினமும் கல்லூரி கிளினிக்கிற்குச் சைக்கிளில்தான் செல்கிறான்.15 வருடத்திற்கு முன்பும். மோக்கா 15 வருடத்திற்கு முன்பே உண்டே....கப்புசினோ...எல்லாம். குடித்ததுண்டு...
நீக்குசரி சரி விடுங்கோ சண்டை வாணாம்ம்:) ஹா ஹா ஹா .. நினைச்சேன்ன்.. இருந்தாலும் ச்ச்சும்மா எடுத்து விட்டேன்ன்:)..
நீக்கு///எதுவா இருந்தாலும் கூல் ////சம்யுக்த்.///
பதிலளிநீக்குஅய்ய்ய்ய்ய் யூ மீன்ன் சம்யுக்த்த்த்.. ஹா..ஹா..ஹா.. ரொம்ப நெருங்கிட்டார் கார்த்திக்.. விடமாட்டேன்ன் இண்டைக்கு.. இருங்கோ தொடர்ந்து படிக்கிறேன்ன்:).
///என் பின்னாடி வந்து என் தோள்ல மேல கை போட்டு ஹக் பண்ணி..ச்சே.….//
ஹையோ இங்கேயும் ஹக்கிங் ஆஆஆஆ?:).. இது என்ன பிரீஈஈஈஈ ஹக் வீக் போல இருக்கே முருகா... நில்லுங்கோ..என்ன நடக்குதெனப் பார்க்கிறேன்ன்:)..
ஆம் அதிரா அப்போதே இப்படி நடந்த சம்பவம் உண்டு. இப்போதும் சமீபத்தில் கனடாவில், அஒன்டேரியோவில் ஒரு.........இந்தியர் இப்படி நடந்து கொண்டார்....அதனாலாயே இந்தியர்கள் ஷேர்ட் அக்கமொடடேஷன் கொடுத்தால், அங்கு ஆண்கள் இல்லாமல் அல்லது அப்பார்ட்மென்ட் இப்படித்தான் இருப்பதைப் பலரும் விரும்புகிறார்கள். என் மகன் சொன்னான் நம் இந்தியர்கள் சிலர் கெட்ட பெயர் உருவாக்குகிறார்கள் என்று சொன்னான்...
நீக்குஇருக்கும் கீதா, யாரையும் நம்ப முடிவதில்லை இக்காலத்தில்.. பாட்டு வாச்சா கிளவியும் பாடுவாவாம் கதைதான்..., ஆனா இங்குதான் யாரும் சேட்டை விட முடியாதே.. உடனே போலீஸ்தான்..
நீக்குஅதிலயும் இங்கு சொல்லியிருக்கிறார்கள், ஏதும் இக்கட்டான சூழலில், போன் பேச முடியாத சூழலில் இருந்தால், எமேஜென்சி நம்பருக்கு கோல் பண்ணிட்டு, ஆன்சர் பண்ண தேவையில்லை, போனைக் கட் பண்ணாமல் இருந்தால் போதும்.. போலீஸ் அதை வச்சே வந்து சேருவார்கள்.
கீதாஅதிரா நிறைய சம்பவங்கள் நானும் கேள்விப்பட்டிருக்கேன் ..இங்கே இப்போல்லாம் ரொம்ப செக்யூரிட்டி அதிகம் மேலும் வீட்டு ஓனர் மட்டுமில்ல கூட படிக்கும் அறையில் தங்கும் சிலரால் இப்படியான அபியூஸ் நடக்குதாம் ..நாடு விட்டு நாடு வந்து இப்படி செய்றாங்கன்னு வருத்தமா இருக்கு :(
நீக்குஎல்லாரும் கார்த்தி மாதிரி இருந்தா நல்லாருக்கும்
அப்பாடா.. படிச்சு முடிச்சுட்டேன்ன்ன்.. ஸ்பெஷலில் பாஸ் ஆகவில்லை எனும் ஒரே காரணத்துக்காக கார்த்தியை வாணாம் சொல்லிட்டாவா கர்:).. சேரோணும் எனும் விருப்பம் ஆழமா இருந்தால்ல்.. திரும்ப திரும்ப ட்ரை பண்ணி பாஸ் பண்ணலாம்.. சரி பார்ப்போம்ம்.. அடுத்த பகுதியில் ஆர் என்னிடம் அடிவாங்கப் போறாங்க என:).. ஏனெனில் எனக்கு முக்கியம் கடமை.. நேர்மை.. எருமை:).
பதிலளிநீக்குகதை சுவாரசியமாக போகிறது . தொடர்கிறேன்
பதிலளிநீக்குமிக்க நன்றி மதுரை சகோ!
நீக்குஅந்த பெரியவர் ஏஞ்சல் அவர்களின் free hug பற்றிய பதிவை படிச்சு இருப்பார் அதனால hug பண்ணியிருப்பர் அதை அந்த பெண் தப்பாக எடுத்து இருக்கிறார்
பதிலளிநீக்குAYYAAANGA AWWWW
நீக்குஅந்த பெரியவர் ஏஞ்சல் அவர்களின் free hug பற்றிய பதிவை படிச்சு இருப்பார் அதனால hug பண்ணியிருப்பர் அதை அந்த பெண் தப்பாக எடுத்து இருக்கிறார்
பதிலளிநீக்குGARRRRRRRRRRRRR :) அடாடா :))))))) நான் நினைச்சேன் எங்கிருந்தாவது யாரவது இப்படி கிளப்பி விட்றுவாங்கன்னே செவப்பு கலர்ல டிஸ்கி போட்டேன் :)
நீக்குட்ரூத் நானா உங்களுக்கு சந்தோஷமா ஒரு ஹாப்பி நாலு கால் நியூஸ் ஷேர் பண்ண வந்தேன் :) அநியாயத்துக்கு என்னை சொல்லிட்டிங்க :)
ஹஹஹஹ் மதுரை சகோ!!! இந்தக் கமென்டைப் படித்ததும் கொஞ்ச நேரம் எனக்கு அப்படியே இருந்தேன்...வியப்பில்...அங்கு ஏஞ்சலின் பதிவைப் படித்ததும்....மதுரை வந்தால் ஒரு வேளை இதையும் நம்ம கதையில் சொல்லியிருப்பதையும் சுட்டிக் காட்டுவாரோ...
நீக்குஆனால் பதிவைச் சொல்லி இப்படி லிங்க் பண்ணினீங்க பாருங்க..உங்கள் டைம்லி விட் வியக்க வைத்தது உண்மை சகோ!!! ரசித்தேன்....
ஏஞ்சல்! ஹஹஹ ...நானும் நினைச்சேன்......அவரது டைம்லி விட் வியக்க வைக்கிறது இல்லையா...
நீக்குஅந்தப் பெரியவர்..... ட்றுத் ஆக இருக்குமோ எனத்தான் இப்போ எனக்கு டவுட்டு டவுட்டா வருதூஊஊஊஊ....:)
நீக்குதிடீரென்று ஒரு திருப்பு முனை...
பதிலளிநீக்குஆமாம் ஐயா. மிக்க நன்றி ஐயா கருத்திற்கு
நீக்குஅட, என்ன சம்யுக்தா இப்படி இருக்கிறாள்! அவளுக்கு வேறு ஏதோ ஒரு காரணமும் இருந்திருக்க வேண்டும். அப்பா அம்மாவின் ஃபோன்!
பதிலளிநீக்குஅப்பா அம்மாவின் ஃபோன் அமெரிக்காவில் இருக்கும் போது வருகிறது....அந்த நினைவில் இருக்கும் போது நிகழ்காலத்தில் அம்மாவின் ஃபோன் நினைவைக் கலைக்கிறது..நான் ஃப்ளாஸ் பேக், நிகழ்காலம் மாறி மாறி வரும் போதுலைன் பிரித்துலைன் போடாமல்...அப்படியே வார்த்தைகளால் பிரித்திருப்பது தொடர்வதில் கஷ்டம் இருக்கோ? புரிவது?..மீண்டும் நினைவு அங்கு சென்று...அவர்கள் இந்தியா வந்த பிறகும் கூட அவர்கள் நட்பு காதல் தொடர்கிறது. பயிற்சிக்கான ரிசல்ட் வந்ததும்தான் அவள் மனது மாறுகிறது அது எதனால் என்பது அடுத்த பகுதியில் தெரிந்துவிடும்...அதுதான் மையக் கரு.....உங்களுக்கே புரியும்...நன்றி ஸ்ரீராம்..
நீக்குதம வாக்கு முதல் வேலையாக முடிச்சுட்டேன்.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஸ்ரீராம் தம வாக்கிற்கு. எனக்கு எங்கள் பெட்டியே தெரியவில்லை. உங்களுக்கு எல்லாம் தான் தெரிகிறது போலும்...
நீக்குசம்யுக்தா அக்கா!!!!!!!!!!!!!!!!!!!! அதிரா இது கொஞ்சம் இல்லை, நிறையவே ஓவர்!
பதிலளிநீக்குகடவுளே ஸ்ரீராம்ம் இது 15 வருசத்துக்கு முந்தின கதையாம்ம் அப்போ எனக்கு பாற்பற்கள் கூட முளைக்கல்லியே....... :) மீ இப்போதானே சுவீட் 16:).,,,
நீக்குஎங்கே என் செகட்டறி... ?:) இதுக்கெல்லாம் விளக்கம் குடுக்காமல் எங்க சுத்திட்டிருக்கிறா.... ?.:).. கடவுளே கொப்பை இறுக்கிப் பிடிச்சிட்டிருப்போம், இப்போ வந்தாவோ .....மரத்தை ஆட்டுற ஆட்டுதலில் விழுந்த்கிடப்போறேன் சாமீஈஈஈ... கீதா பீஸ்ஸ்ஸ் சேவ் மீ... என்னை கொஞ்சம் தேம்ஸ்ல ட்றொப் பண்ண முடியுமோ?:).
அதிரா! 15 வருஷத்துக்கு முந்தி என்றால் ஃப்ளாஷ் பேக்...இடை இடையில் சம்யுக்தாவிற்கு நினைவுகள் வருதல்லோ..கதையில்..அவளுக்கு இப்ப 40 வயது....உங்களுக்கு 80 அல்லோ??!!! அப்போ ஸ்ரீராம் கேட்டது சரிதானே!!!ஹிஹிஹிஹிஹி நான் எப்படி இதை நீங்கள் அக்கானு சொன்னதை பார்க்காமல் விட்டேன்??!!!
நீக்குநான் சொன்னனே எனக்கு எதிரி வெளில இல்ல.... வீட்டுக்குள்ளேயேதேஏஏஏன்ன்ன்:)..
நீக்குஹஹஹ்ஹஹஹ்ஹ் அதிரா....
நீக்கு//அந்த பெரியவர் ஏஞ்சல் அவர்களின் free hug பற்றிய பதிவை படிச்சு இருப்பார் அதனால hug பண்ணியிருப்பர் அதை அந்த பெண் தப்பாக எடுத்து இருக்கிறார் //
பதிலளிநீக்குஹா..... ஹா.... ஹா...
ஸ்ரீராம் நானும் மதுரையின் அந்தக் கமென்டைப் பார்த்துட்டு சிரிச்சு முடியலை...என்ன ஒரு ரைமிங்க் ல....ஏஞ்சல் பதிவ படிச்சதுமே ஐயோ நம்ம கதையிலும் வருதே...இந்த மதுரை வந்தா என்ன சொல்லப்போறாருனு நினைச்சேன்...ஆனா டைமிங்க் விட்...
நீக்குசம்யுக்தா உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுப்பவள் போலிருக்கு! அடுத்த பகுதிக்குக் காத்திருக்கேன். நல்லாக் கொண்டு போயிருக்கீங்க! :)
பதிலளிநீக்குமிக்க நன்றி கீதாசாம்பசிவம் அக்கா கருத்திற்கு...
நீக்குஅன்பு. அதுதான் எனக்கு முக்கியம். என்னைப் பொருத்தவரை ஜஸ்ட் இருக்க ஒரு இடம், பசிக்குச் சாப்பாடு, உடுக்க ட்ரெஸ், முடிஞ்ச அளவு உதவணும், நம்ம ப்ரொஃபொஷன்ல நிறைய செய்யணும், தொழில் சாட்டிஸ்ஃபேக்ஷன். அவ்வளவுதான்.”//
பதிலளிநீக்குஎவ்வளவு அருமையான எண்ணம் கார்த்திக்கு! உயர்ந்தவனாக தெரிகிறான்.
நான் திருமணமாகி முதலிரவில் "உன்னுடைய அப்பா, அம்மாவை நான் பார்க்கிறேன். அவ்வாறே நீ எனது அப்பா, அம்மாவைப் பார்க்கணும்" என்று எனது மனைவியிடம் உறுதி மொழி பெற்றேன்.
பதிலளிநீக்குஅப்படித் தான்...
“கார்த்தி, நான் உங்க அம்மா அப்பாவை நிச்சயமா ரெஸ்பெக்ட் பண்ணுவேன். அதே மாதிரி நீ எங்க அம்மா அப்பாவை ரெஸ்பெக்ட் பண்ணுவதானே” என்ற வரிகள் அருமையான உணர்வுகள்.
ஓ காதல் போதையில் திளைக்கும் போது இடிபோல இது சாத்தியம் அல்ல என்றால்!ம்ம் தொடருங்கள் இந்த மருத்துவ் படிப்பு பெயர் புரியவில்லை[[! தொடர்கின்றேன்.
பதிலளிநீக்குவணக்கம் சகோ.
பதிலளிநீக்குஇந்தக் கதைக்கான குறிப்புகளும் திட்டமிடலும் முன்பே உங்களுக்குள் உருவாகி இருக்க வேண்டும் எனப் படுகிறது.
சில பூட்டுகளை இங்கே வைத்து விட்டு சாவிகளை அடுத்த அத்தியாயத்திற்குக் கொண்டு செல்வது தொழில்முறை எழுத்தாளர்களின் சாமர்த்தியம். உங்களுக்கும் கைவந்திருக்கிறது. சபாஷ்
சம்யுக்தாவிற்குத் திருமணம் ஆகவில்லை என முதல் அத்தியாயத்தில் வேலைக்காரி மூலம் அறிந்து கொண்டதால், இந்நிமிடம் வரை இவர்களுக்குத் திருமணம் ஆகவிலலை என்பது தெரிந்துவிட்டது.
அங்குச் சாவியை வைத்துவிட்டு இங்குப் பூட்டியிருந்ததால் திறந்தேன். :)
தொடர்கிறேன்.