வியாழன், 24 செப்டம்பர், 2015

கேரளத்தில்-செவ்வாய் கிழமை ராகு காலத்தில் ஒரு கம்யூனிஸ்ட் கல்யாணம்!!!!.../ தமிழ்நாட்டிலும் ஒரு கோலாகலம்

இணையத்திலிருந்து

சிபிஐ(எம்) கட்சியின் (இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சி – மார்க்சிஸ்ட்) பொலிட் ப்யூரோ மெம்பரும், முன்னாள் கேரள கல்வி அமைச்சருமான எம் ஏ பேபியின் மகன் அஷோக் பெட்டி(Betty) நெல்சன் மற்றும் வாகத்தானம் ஆண்டனி ஜோசெஃபின் மகள் சனிதாவின் திருமணம் வித்தியாசமானதாகவே இருந்தது. தனது மகனது திருமணத்திற்கு, திரு பேபி அவர்கள் திருமண அழைப்பிதழாக மார்க்சிஸ்ட் கட்சியின் நாளிதழான “தேசாபிமானி”யில் எல்லோரையும் வரவேற்று ஒரு விளம்பரம் கொடுக்கப்பட்டது முதல் தொடங்குகிறது இந்த வித்தியாசமான கல்யாணத்தின் நிகழ்வுகள்.

திருமணம் நடத்தப்பட்டதோ திருவனந்தபுரத்திலுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையகமான ஏகேஜி மையத்தின் முதன்மை ஹாலில். மணமகனும், மணமகளும் அமர்ந்ததோ வாஸ்து நிபுணரான(?) ஜி சங்கர் உருவாக்கிய ஓலைப் பந்தலில்(?!).  மணமக்கள் மாற்றிக் கொள்ள வேண்டிய மாலைகளை அவருக்கு வழங்கியதோ கே ஜே ஜேசுதாசும், மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனும்.

மாலை மாற்றும் போது கெட்டி மேளத்திற்குப் பதிலாக கேட்டதோ கைதட்டல்களும், உமையாள்புரத்தின் மிருதங்க ஒலியும்.

திருமணப் பரிசாக மணமக்களுக்கும், திருமணத்தில் பங்கேற்றவர்களுக்கும் வழங்கப்பட்டதோ வீட்டுத் தோட்டத்தில் பயிரிட ஏதுவான காய்கறி விதைகள் அடங்கிய பொட்டலங்கள்.

மணமக்களை வாழ்த்த வந்தவர்களுக்குக் கல்யாண விருந்தாக வழங்கப்பட்டதோ வேக வைத்தக் கப்பைக் கிழங்கும்(மரச்சீனிக் கிழங்கும்) சம்மந்தியும்!(தேங்காய், மிளகாய், வெங்காயம், உப்பும் சேர்த்து அரைக்கப்பட்ட துவையல்) கொழுக்கட்டையும், பருப்பு வடையும், உண்ணி அப்பமும்.

திருமண நாளோ செவ்வாய் கிழமை.  முகூர்த்தமோ சரியான ராகு காலத்தில்.  இப்படி எல்லாவிதத்திலும் புதுமையான இம்மணவிழாவில் பங்கெடுத்தவர்கள் எல்லாம் பிணராயி விஜயன், மம்மூட்டி, மார்க் மேத்யூ அரைக்கல் போன்ற அரசியல் மற்றும் கலை உலக பிரபலங்கள். 

திருமணத்தில் வித்தியாசமில்லாத விஷயங்கள் இரண்டே இரண்டுதான்.  திருமணம் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.  மணமகளும், மணமகனும் காதலித்து ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொண்டுதான் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். 

எனவே, “செவ்வாய் கிழமையும்”, “ராகு காலமும்” அவர்களது இனிய மணவாழ்க்கைக்குப் பிரச்சனை ஏதும் உண்டாக்க வாய்ப்பே இல்லை! “மதம் ஒரு மயக்க மருந்து” என்று மேடையில் மட்டும் பேசி, நிஜ வாழ்க்கையிலும் சாதி, மதம் பார்த்து, முக்காடு போட்டு யாரும் காணாமல் கோயிலுக்குப் போகும் மார்க்சிஸ்ட்காரர்களுக்கு, தான் அப்படிப்பட்டவன் அல்ல என்று தன் மகனது திருமணம் மூலம் புரிய வைத்த திரு எம் ஏ பேபியைப் பாராட்டத்தான் வேண்டும்.


அத்துடன், “தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என்பதை செயலில் காட்டிய இக்காலகட்டத்து இளைஞர் அஷோக்கையும் பாராட்டியே தீர வேண்டும்.  கூடவே இதற்கெல்லாம் ஒத்துழைத்த இக்காலகட்டத்துப் பெண்ணான, மருமகளான சனிதாவும் பாராட்டுக்குரியவரே.  நாமும் மணமக்கள் நலமாய் வாழ  பிரார்த்தனை (பிரார்த்தனையோடுதான் வாழ்த்த முடியும் என்பவர்கள் அப்படியும் செய்யலாம்) ஏதும் செய்யாமல் வாழ்த்துவோமே! 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
என்ன கேரளத்துல மட்டும்தான் புதுமையான கல்யாணமா? நம்ம தமிழ்நாட்டிலும், புதுக்கோட்டையில், புதுமையாக, நம் வலைப்பதிவர் விழா, ஒரு கல்யாண விழா போல் கோலாகலமாக நடைபெற உள்ளதே!!! இனி ஒவ்வொரு வருடமும் நடக்கவிருக்கும் பதிவர் விழாவுக்கு ஒரு உதாரணமாக, முன்னோடியாக இது அமைந்திருக்கும் என்றும் சொல்லலாம். 

அதாவது, குறிப்பாக, பிற நிகழ்வுகளை விட, நாங்கள் முக்கியமாகக் கருதுவது; வலைப்பதிவர்களின் ஆற்றலை, திறமையை வெளிக்கொணரும் விதமாகவும், தமிழ் மொழியை வளர்ப்பது மட்டுமல்லாமல், அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாகவும், தமிழ் வலையுலகையும் தொய்வில்லாமல் அடுத்த நிலைக்கு, ஒரு மேன்மையான நிலைக்கு உயர்த்தவும், இன்னும் பல திறமையுள்ள, எழுத்தார்வம் மிக்க, வளர்ந்து வரும் இளைஞர்களைத் தமிழ் வலையுலகில் இணைந்து, கைகோர்த்திட ஊக்குவிக்கும் அளவிலும், தமிழ் இணையக் கல்விக் கழகம் தமிழ் வலையுலகுடன் கைகோர்த்து, ஆதரவளித்து, போட்டிகள் நடத்தி, விருதுகள் அளித்து, ஊக்கமளித்து, ஒரு நல்ல விதையை விதைத்துள்ளது என்று சொன்னால் மிகையாகாது.

இந்த விதை, எதிர்காலத்தில், ஒன்றல்ல பல ஆலமரங்களாய், விழுதுகளை வேரூன்றி, நாளைய தமிழ் சிற்பிகளுக்கு தங்கள் எழுத்துகளை செதுக்கிட உதவும் ஒரு உலகமாய் மாறும், தமிழ் மொழியை பாரெங்கும் ஒலித்திட, ஒளிர்விட, அதிர்வலைகளை எழுப்பிட வழி கோலும் என்ற நம்பிக்கை துளிர் விடுகின்றது.

எனவே புதியதோர் தமிழ் வலையுலகம் படைப்போம் என்று வீறுகொண்டெழுந்து போட்டிகளில் கலந்து கொண்டு உங்கள் படைப்புகளை இந்த மின்அஞ்சல் மூலம் அனுப்பிவிடுங்கள். bloggersmeet2015@gmail.com

தமிழ் இணையக் கல்விக் கழகம் பற்றி நாங்கள் ஏற்கனவே அறிந்திருந்ததால் அதன் தளத்திற்குச் சென்று உலா வருவதுண்டு. அரிய பொக்கிஷப் பெட்டகம் எனலாம். பல தகவல்களையும், தமிழ் நூல்களையும் அங்கு வாசிக்கலாம். அறிந்து கொள்ளலாம்.  நாம் எழுதுவதற்கு அடிப்படைத் தகவல்களையும் திரட்டிக் கொள்ளலாம். மதுரைத் தமிழன் அவர்களும் தனது தளத்தில் இந்தக் கழகத்தைப் பற்றி மிக மிக விரிவாக கொடுத்திருந்தார். http://avargal-unmaigal.blogspot.com/2015/09/tamil-virtual-academy.html

தமிழ் இணையக் கல்விக் கழகமும் தனது தளத்தில்  http://www.tamilvu.org/ போட்டிகள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.  அந்தத் தளத்திற்குச் சென்று தெரிந்து கொள்ளலாம்.

விழாவிற்கான வலைத்தளத்திலும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதோ சுட்டி.http://bloggersmeet2015.blogspot.com/2015/09/blog-post_24.html?showComment=1443101628103#c6450725783812729507

மிக்க நன்றி!

24 கருத்துகள்:

  1. >>> “செவ்வாய் கிழமையும்”, “ராகு காலமும்” அவர்களது இனிய மணவாழ்க்கைக்குப் பிரச்சனை ஏதும் உண்டாக்க வாய்ப்பே இல்லை!..<<<

    மணமக்களுக்கு நல்வாழ்த்துகள்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூடாக முதன் முதலில் வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  2. மன பொருத்தம் மட்டுமே போதும் ,ஜாதகமாவது ,செவ்வாயாவது ?
    எதிர்க்கட்சி தலைவரின் வீட்டுக் கல்யாணத்தில் முதல்வர் வந்து இருக்கிறாரே ,இந்த பண்பாட்டை தமிழகத்தில் இல்லையே:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி பகவான் ஜி! ஹும் தமிழ்நாட்டில் இந்தக் காட்சி எல்லாம் காணக் கிடைக்காது ஜி!

      நீக்கு
  3. நல்லதே நடக்கணும் என்பதற்கமைய நாளும் கிழமையும்
    நல்லவர்கள்முன் என்செய்யும்?..
    வாழ்த்துவோம் நாமும்!

    பதிவர் சந்திப்புத் திருவிழாவும் எந்தக் குறையுமில்லாமல்
    மிகத்திறம்பட நடக்கும்! பார்த்து மகிழப்போகின்றோம் நாமும்!..

    நல்ல தகவல்கள்! நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரரே!

    த ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி இளமதி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்!

      நீக்கு
  4. புதுமைதான். மணமக்கள் நீடூழி வாழ்க.

    பதிலளிநீக்கு
  5. மணமக்களுக்களை வாழ்த்துவோம்
    புதுகையில் கூடுவோம்
    நன்றி நண்பரே
    தம+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கரந்தையாரே! ஆம் புதுகையில் கூடுவோம்....

      நீக்கு
  6. இதுமாதிரியான திருமணம் அதிகம் நடக்க வேண்டும்.
    நல்ல பதிவு சார்.

    பதிலளிநீக்கு
  7. முன்மாதிரியான மனிதர்கள் நடாத்திய
    எடுத்துக்காட்டான
    இனிய திருமண நிகழ்வு
    இதனை
    ஏனையோரும் பின்பற்றலாமே!

    மற்றைய பதிவர் சந்திப்புக்கு
    புதுக்கோட்டைப் பதிவர் சந்திப்பு
    நல்லதோர் எடுத்துக்காட்டாக அமையுமே!

    பதிலளிநீக்கு
  8. அருமை இதைப்போன்று திருமணம் ஏற்கனவே சுமார் 25 வருடங்களுக்கு முன்பு ஜவஹர் - கலைச்செல்வி தம்திகளுக்கு ஆத்தூரில் நடந்தது எனக்கு அதன் நினைவு வந்து விட்டது வாழ்க மணமக்கள்
    தமிழ் மணம் 6

    பதிலளிநீக்கு
  9. எல்லா நாட்களும் நல்ல நாட்களே,
    அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. திருமணப்பரிசாக வழங்கப்பட்டதும் விருந்தும் மிகவும் புதிய தகவல் படிப்படியான முன்னேற்றங்கள். வரவேற்போம் வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  11. /அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாகவும், தமிழ் வலையுலகையும் தொய்வில்லாமல் அடுத்த நிலைக்கு, ஒரு மேன்மையான நிலைக்கு உயர்த்தவும், இன்னும் பல திறமையுள்ள, எழுத்தார்வம் மிக்க, வளர்ந்து வரும் இளைஞர்களைத் தமிழ் வலையுலகில் இணைந்து, கைகோர்த்திட ஊக்குவிக்கும் அளவிலும், தமிழ் இணையக் கல்விக் கழகம்/ அப்ஜெக்‌ஷன் யுவர் ஆனர்...! இளைஞர்கள் என்றால் என்னையும் சேர்த்திதானே?பொதுவாகவே கேரளக் கல்யாணங்கள் சிறப்பானவை ஒரு பொதுஜனப் புள்ளி அல்லாதவர் நடத்ட்க்ஹுவது என்பதே விசேஷம்

    பதிலளிநீக்கு
  12. மணமக்களுக்கு எனது வாழ்த்துகளும்.

    பதிவர் விழா சிறக்க எனது வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  13. பாராட்டப்பட வேண்டிய விஷயம். பாராட்டிய உங்களுக்கு எனது பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  14. இரு கோலாகலத்தையும் பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம்
    அண்ணா

    இரு அடியில் இருமாங்காய் என்பது போல.. ஒரு பதிவில் இரு வேறு கருத்தை சொல்லியுள்ளீர்கள்..படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் அண்ணா.த.ம11
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  16. அன்புள்ள அய்யா,

    இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொலிட் ப்யூரோ மெம்பரும், முன்னாள் கேரள கல்வி அமைச்சருமான எம் ஏ பேபியின் மகன் அஷோக் பெட்டியின் சுயமரியாதைத் திருமணம் இனிதே வித்தியாசமாக மிகவும் எளிமையாக பிரபலமானவர்கள் முன்னிலையில் நடந்தேறியதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி.

    பகுத்தறிவுத் திருமணத்திற்குப் பாராட்டுகளுடன் வாழ்த்துகள்.

    த.ம.12

    பதிலளிநீக்கு
  17. நான் கொஞ்ச காலம் பெங்களூரில் இருந்தேன். அப்போது புரிந்ததுதான் நேரங்காலமெல்லாம் நல்ல நேரத்தில் இல்லை என்பது. தமிழ் காலண்டர்படி கெட்ட நேரமாக அல்லது கெட்ட நாளாக உள்ள ஒரு தினம், கன்னட நாட்காட்டியில் நல்ல நேரமாக இருக்கும். அதெப்படி ஒரே நேரம் ஒரு இனத்துக்கு நல்ல நேரமாகவும், மற்றொரு இனத்துக்கு கெட்ட நேரமாகவும் இருக்கும் என்று. அன்றிலிருந்தே நல்ல நேரம் பற்றி அலட்டிக் கொள்வதில்லை.
    அருமையான தகவல்களை அறிய தந்தமைக்கு நன்றி நண்பர்களே!
    த ம 13

    பதிலளிநீக்கு
  18. நம்மூர் பகுத்தறிவு வியாதிகள் வெளியே ஒன்றும் உள்ளே எதிராகவும் இருப்பவர்கள்

    பதிலளிநீக்கு
  19. நல்ல நேரம் பார்க்காமலும் . வசதி,சாதி பார்க்காமலும் நடக்கும் திருமணங்கள் அதிகம் நடைபெற்வேண்டும்.

    பதிலளிநீக்கு