வெள்ளி, 2 அக்டோபர், 2015

நாளாம் நாளாம் திருநாளாம் தமிழ் வலைப்பதிவர் கூடும் பெருநாளாம்!

அக்டோபர் 11, 2015 
மன்னாரு அண்ணே!  பதிவர் விழா அழைப்பிதழ் எல்லாம் வந்துருச்சு போல!

டேய் தம்பு!  உன்னையத்தான் தேடிக்கிட்டிருந்தேன்.  ஆமாம் விழா அழைப்பிதழ் வந்துருச்சு.  இப்பதான் முத்துநிலவன் ஐயா அனுப்பியிருந்தாரு. அப்புறம் நம்ம சகோ மைதிலி கூப்பிட்டு பேசினாங்க...

சரி இப்ப நான் என்ன பண்ணனும்?  நம்ம பதிவர் நண்பர்களை எல்லாம் அழைக்கணும் அவ்வளவுதானே..பண்ணிட்டா போச்சு...அப்படியே கொஞ்சம் அந்த லேப்டாப்ப எங்கிட்ட கொடுங்கண்ணே!  

ம்ம் அதானே பார்த்தேன் உன் குடுமி சும்மா ஆடாதேனு....சரி நான் சொல்லறத அப்படியே தட்டி விடு....

வலை அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!

நாம் எல்லோரும் சந்திக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!  இதோ நெருங்கிவிட்டது.  10 நாட்களே உள்ளன.  சந்திக்கும் நாள் நினைவில் உள்ளது தானே! 11-10-2015 அன்று புதுக்கோட்டையில்.  இடம் எல்லாம் மேலே பாருங்கள்!  அதில் இருக்கிறதே! 

குறித்துக் கொண்டிருப்பீர்கள். புதுக்கோட்டையே விழாக் கோலம் பூண்டிருக்கின்றதாம்!  நாம் எல்லோரும் இருப்பது பல இடங்களில், வெவ்வேறு மாநிலங்களில், வெவ்வேறு நாடுகளில் என்றாலும் நம்மை எல்லாம் இணைத்தது இந்த வலைத்தளமே!  யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று இருந்த இடத்திலிருந்தே, முகம் பார்க்காமலேயே வலையுலகினால் அறிமுகமாகி, மீன் பிடிக்க உதவும் வலை போல் இந்த வலை நம்மை எல்லாம் இணைத்து பல கருத்துகளைப் பகிர்ந்து, எண்ணங்களை விதைத்து, பகிரச் செய்து, உறவாட வைத்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.  சென்ற மூன்று வருடங்கள், சென்னை, மதுரை என்று நிகழ்ந்த வலை உறவுகளின் சந்திப்பு, இந்த வருடம் புதுக்கோட்டையில்! நாம் சந்திக்கவிருக்கும் தருணமும், அந்த நாளும் வந்திடாதோ என்று நெருங்கிவிட்டது!  வாருங்கள், வாருங்கள் எல்லோரும்!  கை கோர்ப்போம்!  சந்திப்போம் மகிழ்வுடன்! கொண்டாடுவோம் அந்த இனிய பெருநாளை!

நாங்கள் ரெடி!  அப்போ நீங்களும் தானே!  On Your Mark! At your Place! Set! Ready! Come On! Meet At Puthukottai! 11-10-2015, ஞாயிறு! இதோ அழைப்பிதழ்!


மிக்க நன்றி!


41 கருத்துகள்:

 1. அழைப்புக்கு நன்றி மகிழ்ச்சி, சந்திப்போம்.

  பதிலளிநீக்கு
 2. நன்றி. ஆனால் முதலில் தெரிவது நம் அழைப்பிதழாக இருந்தால் இன்னும் அழகு!

  பதிலளிநீக்கு
 3. அண்ணா!! அட்டகாசமாக இருக்கே பதிவு!!! உங்க அன்புக்கு மிக்க நன்றி சகாஸ்!! விழாக்குழுவில் கைகோர்த்தமைக்கு புதுகை பதிவர் குழு சார்பாக பல கோடி நன்றிகள்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோ! அட்டகாசமா இருக்கா..போங்கப்பா இப்படி எல்லாம் சொல்லி எங்களை மிகவும் வெட்கப்பட வைத்துள்ளீர்கள்...கொஞ்சம் தேனம்மை அவர்களின் தளத்தை எட்டிப் பாருங்கள்! செம! கலக்கிருக்காங்கப்பா!!!!

   நீக்கு
 4. உங்கள் மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்கிறேன். புதுக்கோட்டை நோக்கி பயணம் செய்வோம்.

  பதிலளிநீக்கு
 5. உங்களை எல்லாம் போனில் கூப்பிட்டு அழைப்புவிடுவித்து இருக்கிறார்கள் அந்த வரிகளைபடித்ததும் அழுகையாய் வருது.... ஊர்காரங்க எல்லாம் ஒன்றாக கூடிட்டீங்க ஜாலியாக இருங்க... எங்காத்து மாமி பூரிக்கட்டையை எடுத்து வருகிறார்கள் அதனால் மீதியை அப்புறம் வந்து வைச்சுகிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹ மதுரைத் தமிழன் அழுகிறாரா!!! அட! இப்ப கூட ஒன்றுமில்லை நீங்களும் உங்கள் பாணியில் அசத்துங்க உங்க தளத்துல வெளியிட்டு!! என்ன உங்க ஊர் நேரப்படி! நீங்களும் எங்க ஊர்க்காரங்கதான் தமிழா....அதான் நீங்கதான் மாறு வேஷத்துல வரப் போறீங்களே அப்புறம் என்ன...

   கீதா: ஹை! அப்ப நான் பொக்கேக்குள்ள மறைச்சு வைச்சு மாமிக்கு அனுப்பின பூரிக்கட்டை வந்துருச்சா....தமிழா அது விலை உயர்ந்த பூரிக்கட்டை...காச் பண்ணிக்கோங்க...ஓகேயா!!!

   நீக்கு
 6. நமக்காக நாம் விடுக்கும் அழைப்பு கிடைத்தது. சந்திப்போம் புதுக்கோட்டையில்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் ஐயா! மிக்க நன்றி சந்திப்போம் புதுகையில்...

   நீக்கு
 7. நண்பர்களே நீங்கள் அழைத்து வராமல் இருப்போமா..! இதோ வந்துட்டோம்..!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதானே!!! ஹஹ வாருங்கள் வாருங்கள்...நாங்களும் தான்....தங்கள் எல்லோரையும் சந்திக்கும் ஆவலுடன்....

   நீக்கு
 8. அட அட்டகாசம் சரி சரி கலக்குங்கோ கலக்குங்கோ .....ம்..ம் .சும்மா வயித்தெரிச்சலைக் கிளப்புகிறீர்களே சகோ ! ஹா ஹா .... சும்மா .....நிஜமா எல்லாம் இல்லப்பா மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. அனைத்தும் சிறப்புற வாழ்த்துக்கள் ...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோ! நேரலை இருக்குமே காணலாமே எல்லோரையும்...உங்களை எல்லாம் எப்போது சந்திப்பது என்று தெரியவில்லை சகோ! சந்திக்கும் நாள் வரும் என்று நம்புகின்றோம்....மிக்க நன்றி சகோ

   நீக்கு
 9. தகவல் நன்று சந்திப்போம் புதுக்கோட்டையில் தமிழ் மணம் 555

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகிறீர்களா ஜி! அட!! வாங்க வாங்க! சந்திப்போம்!

   நீக்கு
 10. அசத்திட்டிங்க விழாவில் சந்திப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சசி சகோ இன்னும் பலர் மிக அழகாக அழைத்துள்ளார்கள் எங்களை விட....நாங்கள் அசத்தவில்லை..ஏதோ எங்களுக்குத் தெரிந்த வகையில் அவ்வளவே...

   சந்திப்போம் மிக்க நன்றி சகோ...

   நீக்கு
 11. அன்புள்ள அய்யா,

  அன்பான அழைப்பு கண்டு மகிழ்ந்தேன்.

  நன்றி.
  த.ம. 6

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! சந்திப்போம் புதுகையில்...

   நீக்கு
 12. மகிழ்ச்சியாக இருக்கிறது சகோதரரே!
  யாவும் சிறப்புற வாழ்த்துக்கள் ...!

  த ம +1

  பதிலளிநீக்கு
 13. வணக்கம்.வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்.

  பதிலளிநீக்கு
 14. விட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........

  பணம்அறம்

  நன்றி

  பதிலளிநீக்கு
 15. வணக்கம்
  அண்ணா.

  நிகழ்வை அழகாக படம்பிடித்து காட்டியுள்ளீர்கள்..
  இனி வேலை எல்லாம் குறைவு... இனி முழு நேரம் வலைதான்... வழமை போல் பதிவுகளை படிக்க நேரம் இருக்கும்...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு