புதன், 7 அக்டோபர், 2015

புலியென புறப்பட்டு வா! சிங்கமென சீறி வா! -1

“கேக்கற செய்திய நம்பறதானு தெரில....அவன் இறந்துட்டான்னும் சொல்லிக்கறாங்க...”

“அடப்பாவி!”......தொடர்ச்சி இதோ....

“ம்ம்ம் என்னத்த சொல்ல.  இது நம்ம ராஜ்ஜியம் இல்லையே...”

இப்படியாக வருத்தத்துடன் நாட்கள் கடந்து இரு புலியார்களும் சாதாரண நிலைமைக்கு வந்துவிட்டார்கள்.

“சரி வேற என்ன நாட்டு நடப்பு? என்ன நியூஸ் நீதான் மனுஷங்க வம்புக்கு அலைவியே”

“அந்த வம்பும் உனக்கும் வேண்டித்தானே இருக்கு.  இந்த ஊருல ஒருத்தர் எழுதாறார் இல்லை?  வெங்கட்ஜி னு அவரு போட்டுருந்தாராம்...புதுக்கோட்டைனு ஒரு ஊராமே அங்க இந்த எழுதற மனுசங்க எல்லாம் மீட்டிங்க் போடுறாங்களாம்.”

“ஏய் இது பழைய நியூஸ். ஆங்க் வெங்கட்ஜி நல்லா ஃபோட்டோ புடிப்பாரு தெரியுமா? ம்ம் அதுக்குனு இப்ப உடனே போய் அலங்கரம் பண்ணிக்காத.  அவரு வரும் போது நம்மள ஒரு ஃபோட்டோ எடுக்கச் சொல்லிட்டா போச்சு. ச்சே விஜய் இல்லாம போய்ட்டான். ம்ம்ம்...  சரி விஷயத்துக்கு வர்ரேன். அதுக்கு அப்புறம் வேற நியூஸ் எல்லாம் கேட்டுச்சு. காடு ரொம்ப முக்கியம் அப்படினு போட்டி எல்லாம் வைச்சு,  இந்த மாதிரி காட்டை எல்லாம் மனுஷங்க அழிக்கறாங்க.  பூமி சூடாகுது.  நாலு காலுங்க எல்லாம் வாழ இடம் இல்லாம அலையுதுங்க பாவம் அப்படினு நம்மளுக்கு சப்போர்ட் பண்ணி நிறைய பேரு எழுதிருக்காங்க அது தெரியுமா?”

“ஆரம்பிச்சுட்டியா திரும்பவும் காடு காடுனு....ஹும்...”

“நீ சொகுசுக்குப் பழகிட்ட.  இங்க சுதந்திரக் காத்து இல்ல.  நாத்தக் காத்து. நமக்கு சப்போர்ட் பண்ண நிறைய பேரு இருக்காங்க. அப்புறம் இந்த விழாவை நடத்தறதுக்கு, நம்ம காட்டு ராஜா மாதிரி அங்க முத்துநிலவன் அப்படினு ஒரு பெரியவரு இருக்காராம்.  அவரு வேற நம்மள அழைச்சுருக்காரு அது தெரியுமா உனக்கு?”

“என்னது மனுஷங்க நம்மள அவங்க மீட்டிங்குக்கு அழைச்சுருக்காங்களா..யேய் அப்ப நம்ம உஷாரா இருக்கணும். கூப்பிட்டுட்டு நம்மள சுட்டுறப் போறாங்க....

“ஹ்ஹ்ஹ் ஆமா கண்டிப்பா சுடுவாங்க நம்மள....ஆனா துப்பாக்கியால இல்ல.  கேமரா, அது ஏதோ செல்ஃபோனாமே இங்க கூட நிறைய பேரு நம்மள எடுக்கறாங்க இல்ல.....அத வைச்சு சுடுவாங்க....சுட்டுப் பேப்பர்ல எல்லாம் போடுவாங்க. சும்மா எப்ப பாரு மனுஷங்கள இப்படிச் சந்தேகப்படுறியே.  இங்க பாரு அந்தப் பெரியவரு எப்படிப் பாடி அழைச்சுருக்காருன்னு.....ஆனா கொடுத்து வைக்கலையே..போக முடியாதே.....

புலியெனப் புறப்பட்டு வா!
சிங்கமென சீறி வா!
அலைகடலென ஆர்ப்பரித்து வா!
(ஆனா மனுசனா மட்டும் வந்துறாதே!) என்றழைக்கும் அரசியல் பாணியில் அல்ல நண்பர்களே!  (நன்றி முத்துநிலவன் ஐயா)

அந்தக் கடைசி வரி பாத்தியா....மனுசனா மட்டும் வந்துறாதே!!! அப்படினு. அதுவும் அவங்க நாட்டு அரசியல் பாணில இல்லாம நம்மையும் அன்போடு நண்பர்களே! அப்படினு அழைச்சுருக்காரு பாரு.”

“மாட்டிக்கிட்டியா...மனுசனா மட்டும் வந்துறாதே!  அப்படினா அவரே மனுசங்க எல்லாம் மோசம் அப்படினுதானே சொல்லிருக்காரு?!! பிரியாணி போடுறாங்களோ அதான் இப்படி நாக்கத் தொங்கப் போட்டுட்டுப் பாட்டைக் காமிச்சுப் பேசற....”

“ஏய் சும்மாரு. நாம எப்படி போக முடியும்? மனுஷங்கள்ல நல்லவங்களும் இருக்காங்க. அங்க காட்டுல சிங்க ராஜா மீட்டிங்க் போட்டுருக்காருனு சொன்னல. அந்த மீட்டிங்குக்கும் நாம போக முடியாது நம்மள எங்க இந்த நம்ம டாக்டரும், ஆஃபீசரும் கூட்டிட்டுப் போகப் போறாங்க.  அதனால ஒரு செய்தி அனுப்பலாமானு யோசனை...மேல ஏதாவது கொக்கு இல்லைனா புறா பறக்குதானு பாரு”

“ஹும் என்ன செய்தியோ? சொல்லு பாக்கறேன்”

“நம்மள அன்போடு அழைச்சுருக்காங்க. எழுதறவங்க பலரும் நமக்கு ஆதரவா பேசறவங்க..  இந்த எங்கள் ப்ளாக் ஆளுங்க இல்ல அவங்க கூட நம்ம ஃபோட்டோ வீடியோ எல்லாம் போடுவாங்க. வெங்கட்ஜியும் அப்படித்தான். ஜிஎம்பி னு ஒரு வாலிப வயோதிகர், டிடி,(இவர் ரொம்ப ஃபேமஸ்) அப்புறம் க்ரேஸ் அக்கா, ஏஞ்சலின் அக்கா,, கீதாமதிவாணன் அக்காதுளசிகோபால் அக்கா, செந்தில்அண்ணன், விசு அண்ணன், கில்லர்ஜி அண்ணன் அப்படினு ஒருத்தர் கில்லர்ன உடனே பயந்துராதே.  பேருதான் அப்படி. இப்படி ஒரு பட்டாளமே இருக்குது நமக்கு ஆதரவா பேசஇவங்கள எல்லாம் சொல்லிட்டு எங்களைச் சொல்லலையேனு யாரும் கேட்டுராதீங்க நீங்க எல்லாருமே எங்களுக்கு ஆதரவாதானே எழுதறீங்க.”

“நல்ல மணக்குது......இல்ல நீ சோப் போட்டதச் சொன்னேன்....அதுசரி ஒரு முக்கியமான ஆளை விட்டுட்ட போல....ஏதோ மாறுவேஷத்துல ஓருத்தர் வராருனு நியூஸ் வந்துச்சே”

“ஏய் அது மதுரைத் தமிழன்! பரமரகசியம். வெளில சத்தமா சொல்லாத. அவரும் நம்மளப் போல புலி வேஷமா இல்ல சிங்க வேஷமா இல்ல....வேற...அவங்க மூதாதையர் வேஷமா.....தெரில. அவரு பூரிக்கட்டை அடிலருந்து தப்பிக்க இப்படி வந்தாலும் வரலாம் நம்ம கூட்டத்தோட கூட்டமா. நம்ம சிங்க ராஜா கிட்ட சொல்லணும் காட்டிக் கொடுத்துராதீங்க” அப்படினு. (நம்மளப் போலனு சொன்ன உடனே ம.தமிழன் கேப்பாரு அட நீங்களும் அப்ப மாறுவேஷம் தானா ஒரிஜினல் இல்லையா அப்படினு...நாங்க ஒரிஜினல் தமிழா! உர்ர்ர்ர்ர்)

“ஆமா...காட்டு ராஜாகிட்ட சொல்லிரணும் இல்லைனா அப்புறம் ம.தமிழன் கிட்ட மாட்டிக்கிட்டா அவ்வளவுதான்....ஹிர் ஹிர் ஹிர் ஹிர்...(ஒண்ணும் இல்ல இது எங்க சிரிப்பு!!). சரி அவங்க மூதாதையர்னா?”

“ம்ம்ம் அப்புறமா சொல்லுறேன். இப்ப விஷயத்துக்கு வரேன்.  நம்ம சிங்க ராஜாவுக்கு அனுப்ப ஒரு மனு தயாரிச்சுட்டேன். அவங்கள கேரளாலருந்து, துளசியோட அங்க புதுக்கோட்டைக்கு அனுப்பி அங்க ஸ்ரீமலையப்பன், மது/கஸ்தூரி விதைக்கலாம் குழுவ பார்த்து, “ஐயா அன்பர்களே நீங்க மரம் நடுறீங்கனு கேள்விப்பட்டோம். இங்கேயும் நடுங்க, எங்க காட்டுப் பக்கமும் எங்க ஏரியாவ அழிக்காம, இன்னும் காட்ட விரிவாக்குங்க. அப்படி இல்லைனாலும் இருக்கறதயாவது எங்களுக்கு விட்டுக் கொடுங்க அப்படினு உங்க அரசுக்கு கோரிக்கை வைச்சு செயல்படுத்துங்களேன். உங்களுக்குப் புண்ணியமா போகும்.”னு பேசச் சொல்லப் போறேன்”

“அதேதான்...அங்க பெரிய மனுசங்க எல்லாம் வராங்களாமே! யாராவது நம்ம கோரிக்கையைக் கேட்க மாட்டாங்களா”

“ம்ம்ம் அந்த நம்பிக்கைதான். சொல்லிட்டு அப்படியே அங்க நம்மள பத்தி எழுதினவங்கள்ல யாருக்கு முதல் பரிசு, 2வது பரிசு, 3வது பரிசு கிடைக்குதுனு பார்த்துட்டு கை குலுக்கி குல்ஃபி எடுத்துக்கிட்டு வரச் சொல்லப் போறேன். மனுஷங்க ...

"கிகிகிகி...ஏய் இரு இரு..அது குல்ஃபி இல்ல எனதருமைக் கணவர் புலியாரே!  அது செல்ஃபி”.

“சரி ஏதோ ஒண்ணு விடு...ஆமாம் அது என்ன ஒரு மா....திரி சிரிப்பு குல்ஃபினு சொல்லி?”

“அதெல்லாம் மதுரைத் தமிழன் கிட்ட கேளு..சொல்லுவாரு...."

"உர்ர் ..சரி அதெல்லாம் அப்புறம்.....ஆங்க் நான் சொல்ல வந்தது மறந்துரும்.....மனுஷங்க இந்த மாதிரி விழால என்ன பண்ணறாங்கனும் பார்க்கலாம், நம்ம மனுவ கொடுத்தா, அங்க போற நம்ம உறவுகள ஃபோட்டோ எடுத்து பேப்பர்ல போட்டு நாம படற கஷ்டத்த எழுதி, மனு பத்தி எல்லாம் போடுவாங்கல்ல? நம்ம சப்போர்ட்டர் பெரிய மனுசத் தலைகள் படிப்பாங்கல்ல?  ஏதாவது செய்ய மாட்டாங்களானுதான்..”

“ம்ம்ம்ம்ம் எனக்கு இங்கதான் பிடிச்சுருக்கு. ஹாங்க்....சரி இதெல்லாம் யாரு உனக்கு எழுதிக் கொடுத்தது?”

“அதுவா இதோ நாம பேசறத ஒட்டுக் கேட்டு எழுதுறாங்களே இவங்கதான்.  சரி நீ போய் பாரு சீக்கிரமா கொக்கு, புறா ஏதாவது பறக்குதானு....இன்னும் 4 நாள் தான் இருக்கு...சீகிரமா இதக் கொடுத்து விடணும்.”

கீதா

32 கருத்துகள்:

  1. நாள் நெருங்க நெருங்க ஜிரம் கூடுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம்ம்ம் தனிமரம் எங்களுக்கும் ஜுரம் கூடுது..ஹஹாஹ்ஹ் நன்றிங்க...

      நீக்கு
  2. படத்துடன் பார்த்தவற்றை தொடராக எழுதுங்க தூரத்து நமக்கு ஆறுதலாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக முடிந்த வரை நிழற்படங்கள் எடுப்பதுடன் விழா பற்றி போடுகின்றோம்..தனிமரம் நேரலை இருக்கே முடிந்தால் பாருங்களேன்...

      நீக்கு
  3. ஹிஹிஹி.... எல்லார் பேரோட எங்கள் பெயரும் சேர்ந்து.. நன்றியோ நன்றி!

    ஆமாம், இந்த பதிவர் மீட்டில் நேரலை ஒளிபரப்பு உண்டாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருப்பதாகத்தான் தெரிகின்றது ஸ்ரீராம்...நேற்று வாசித்த புதுகை கீதா மு அவர்களின் பதிவில் கூட அது பற்றிச் சொல்லியிருந்ததாக நினைவு. இருக்காமல் இருக்குமா..டெக்னாலஜி ஹேச் இம்ப்ரூவ்ட் ஸோ மச் ஹ்ஹ்...(மகளிர் மட்டும் க்ரேசி வசனம்...)

      நன்ற் ஸ்ரீராம்...

      கீதா

      நீக்கு
  4. பதில்கள்
    1. மிக்க நன்றி கரந்தையார் சகோ தங்களின் கருத்திற்கு..

      கீதா

      நீக்கு
  5. ஆஹா... புலிக்கு என்னை கூட தெரிஞ்சிருக்கே! :)))

    சிறப்பான முறையில் ஒரு பதிவு... இல்லை இல்லை ரெண்டு பதிவு!

    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹ் வெங்கட்ஜி நீங்கள் எத்தனை படங்கள் வெளியிடுகின்றீர்கள் நீங்கள் போகும் இடமெல்லாம் நாலு கால்களைப் படம் எடுத்து...அவங்களுக்கு உங்களைத் தெரியாமல் இருக்குமா....நன்றி வெங்கட் ஜி!

      நீக்கு
  6. அருமையான அழகான பதிவு.
    காட்ல கூட நம்ம சேதி பரவியிருப்பது உங்க பதிவு மூலமா தெரிஞ்சுக்கிட்டேன்.
    அந்த புலிகளையும் சந்திப்போம்! பதிவுலக புலிகளான உங்களையும் சந்திப்போம்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் ஊடகத்தில் இருக்கும் போது உங்களைப் பற்றிக் காட்டில் சேதி பரவாமல் இருக்குமா சொல்லுங்கள்?!!! பதிவுலக புலிகள்??!!! என்ன நண்பரே இப்படி எல்லாம் நம்மை கலாய்க்கிறீர்கள்! உங்களை விடவா....நீங்கள் என்னமா அருமையாக, நல்ல நல்ல தகவல்களை அல்லவா அள்ளித் தருகின்றீர்கள். அனைத்துமே அருமையான பதிவுகள்..கனமான பதிவுகள்..

      மிக்க நன்றி நண்பர் செந்தில்...

      நீக்கு
  7. கொண்டுசெல்லும் விதம் சுவாரசியமாக உள்ளது

    பதிலளிநீக்கு
  8. வருது! வருது! .. ஹஹ இப்படி பாடத்தோன்றியது. உங்கள் எழுத்து நடையில் அப்படியொரு உற்சாகம் வந்துவிட்டது. சூப்பருங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சசி தாங்களும் உற்சாகம் பெற்றதற்கு....

      நீக்கு
  9. துணி /மணி எடுத்துவைக்க ஆரம்பிச்சுட்டேன்
    முதல் நாள் மாலை வர உத்தேசம்
    நேரில் சந்திப்போம்
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! நாங்களும் மெதுவாக தயராகி வருகின்றோம் நேரில் சந்திப்போம்....ஆர்வம் மேலிடுகின்றது...

      நீக்கு
  10. வலைபதிவர் சந்திப்பு பற்றி வித்தியசமாக பதிவுகலைப் படிகும்போது மகிழ்ச்சி அளிக்கிறது

    பதிலளிநீக்கு
  11. அதுசரி புலியாண்டியாரிடம் என்னைப்பற்றி போட்டுக் கொடுத்துடீங்களா ? அவுங்களுக்கு 6 அறிவுனாலே பிடிக்காதே..
    தமிழ் மணம் 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹ இல்லை ஜி அவங்களுக்கு 6 அறிவும் பிடிக்கும் அன்பா இருந்தாங்கனா....உங்களையும் பிடிக்கும் ஜி அவங்களுக்கு

      மிக்க நன்றி

      நீக்கு
  12. ஆஹா! பிரமாதம் கீதா! புலிகளின் கனவு நிறைவேற வேண்டும்..
    ஹைய்ய்ய்! எனக்கொரு புலி தம்பியா!! ஆஹா, அப்புறம் என்ன கவலை..என்னையும் உங்கள் அருமையான பதிவில் சேர்த்ததற்கு நன்றி கீதா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹ் ஆமாம் உங்களுக்கும் தம்பி...நீங்களும் சமூக ஆர்வலர்! உங்கள் பல பதிவுகள் அதைச் சொல்லுதே...அப்போ அவங்களுக்கு உங்களைப் பிடிக்காம போகுமா என்ன...

      நீக்கு
  13. ஹா ஹா :) பரவாயில்லை காட்டுக்குள் இருந்தாலும் என் பதிவுகளை படிச்சிருக்காங்களே .அதுவும் fb யில் போட்ட பதிவு பெட்டிஷன் சைன் பண்ணது எல்லாம் தெரிஞ்சிருக்கே !! ...செம கலக்கல் சகோதரி கீதா .காமெடியா எழுதினாலும் ...அவற்றின் வலி பதிவில் தெரிகிறது ...விஜய்(புலி)க்கு நாங்க அக்கா அவங்க அப்பா அம்மாவுக்கும் நாங்க அக்காவா ??? பரவாயில்லை :) ..வாழ்த்துக்கள் கீதா அருமையான அழைப்பு பதிவர் சந்திப்புக்கு ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஏஞ்சல்...நீங்க சைன் பண்ணினது எல்லாமே அவங்களுக்கும் தெரியுமே...நீங்க இல்லைனாலும் அவங்கள பத்தி அப்பப்ப பேசுவது கேட்கிறதே....ஹலோ விஜய்க்கு 7 வ்யசுதான்...னீங்க அவனுக்கு அத்தையோ பெரியம்மாவோ அஹஹஹ்ஹ்

      மிக்க நன்றி ஏஞ்சல்...

      நீக்கு
  14. கீத்ஸ் படிச்சுட்டு சிரிச்சு சிரிச்சு கன்னம் வலிக்குது:)))))))))

    அதிலும் "அவரும் நம்மளப் போல புலி வேஷமா இல்ல சிங்க வேஷமா இல்ல....வேற...அவங்க மூதாதையர் வேஷமா.....தெரில."" செம செம!!!

    புதுகை உங்களை நேரில் காண ஆவலோடு காத்திருக்கிறது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்களும் ஆர்வமாக இருக்கின்றோம் மைத்து.....உங்களை எல்லாம் சந்திக்க...

      நீக்கு
  15. அனைவரும் கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்! புலிகளுக்குக் கூடத் தெரிஞ்சிருக்கு! ஆனைங்களுக்கும் தகவல் சொல்லிடுங்க! நமக்கு அவங்க தான் பிரியமானவங்க! :)

    பதிலளிநீக்கு
  16. வணக்கம்
    அண்ணா

    பதிவர்களின் ஒற்றுமை கண்டு மகிழ்கிறேன் அண்ணா.. தாங்கள் சொல்லியது சிறப்பாக உள்ளது சந்திப்போம் ஒரு நாள் காலம் விரைவில் விடை கொடுக்கும்.... அதுவரை காத்திருப்போம.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு