புதன், 12 பிப்ரவரி, 2014

பெண் அன்றி நான் அல்ல பொம்மை....பொய் அல்ல நான் சொல்வது உண்மை!

       



            ஜானகி டீச்சரின் மகளது கல்யாணம் நாளை.  மாலை எங்கள் பள்ளியிலிருந்து, வகுப்புகள் முடிந்ததும், பெரும்பான்மையோர் ஜானகி டீச்சரின் வீட்டிற்குப் போய் பேசிக் கொண்டிருந்தோம்.  அது வரை நாளை அணியப் போகும் நகைகள் மற்றும் கல்யாணச் சேலையைப் பார்க்காத ஆசிரியைகள் அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.  ஜானகி டீச்சரின் அக்கா மாதவி எங்களை எல்லாம் சிரித்து உபசரித்தாலும், ஏதோவொரு பிரச்சினை அவரை அலட்டுவது போல் எனக்குத் தோன்றியது.  இடையிடையே, தொலைபேசி அழைப்பு வந்தது.  சில அழைப்பை ஏற்றுக் கொண்டார்.  சிலவற்றை முணுமுணுத்துக் கொண்டே "கட்" செய்வதுமாக இருந்தார்.  மற்றவர்கள் கவனிக்காத போது "என்னப் பிரச்சினை?  ரொம்ப டென்ஷனாக இருக்கீங்க"  என்றேன்.



            "அந்த ஆள்தான்.  எவ்வளவு சொன்னாலும் புரிஞ்சுக்காம ஒரே தொந்தரவு.  இனி வேறு வழியில்லை.  போலீசில் கம்ப்ளையின்ட்  கொடுக்கத்தான் போறேன்".  என்றார். 

                          மாதவி, பாலக்காடு கலெக்ட்ரேட்டில் பணிபுரிகிறார்.  56  வயது.  வரும் மார்ச் மாதம் ரிட்டையராகப் போகிறார்.  (கேரள அரசும் தமிழகம் போல் பென்ஷன் வயதைக் கூட்டினால், 58 வயது, மார்ச் வரை தொடரலாம்தான்)  ஒரே மகள், இந்து.  அவரும் ஒரு வங்கியில் பணி புரிகிறார்.  மகள் இந்துவுக்கு இரண்டு ஆண் குழந்தைகள்.  இருவரும் படிக்கிறார்கள்.  மருமகன், கடந்த வருடம் நடந்த விபத்தில் மரணமடைந்தார்.  எனவே மகளுக்கும், பேரக் குழந்தைகளுக்கும் மாதவிதான் ஆறுதலாக இருக்கிறார்.  ஜானகி டீச்சர் தன் விஷயங்களைப் பற்றி பகிர்ந்து கொள்வதால், அவ்விரு குடும்பங்களிலும் நடக்கும், நடந்த பல சம்பவங்கள் பற்றி எனக்கு ஓரளவு தெரியும்.


                            ஜானகி டீச்சரின் பெற்றோர், எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர்கள்.  டீச்சரின் அம்மாவுக்கு, பாலக்காடு அருகே உள்ள முண்டூர் என்னும் கிராமத்திலுள்ள L.P. பள்ளியில் (லோயர் ப்ரைமரி பள்ளி) ஆசிரியையாகப் பொறுப்பேற்றதால், இங்கு குடியேறியவர்கள்.  அப்பா, விவசாயமும், அரசியலுமாக பிசியாக இருந்தார்.  ஜானகி டீச்சருக்கும், அக்கா மாதவிக்கும் முறையே 5, 8 வயதிருக்கும் போது, ஒரு நாள் வீட்டிற்கு ஒரு ஆன்டியும், அவருடன் இரண்டு பையன்களும், 10,12 வயதுகளில் வந்தனர்.  அப்பாவுக்கு உறவாம்.  இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டு அந்தப் பையன்களின் அப்பா இறந்து கஷ்டப்படும் குடும்பம். அதன்பினஇவர்களுடன் நிரந்தரமாகத் தங்கத் தொடங்கிவிட்டனர். முரளி, மாதவன் இருவரிடமும் ஏராளமான விளையாட்டுப் பொருட்கள்.  அதன் பின் 4 பேருமே எந்நேரமும் விளையாட்டுதான்.  வீட்டில் ஏராள்மான மாற்றங்கள் அவர்கள் வந்த பின்.  கார், வேலையாட்கள், ரேடியோ, இரண்டு சைக்கிள்க்ள், இப்படி.  பிறகுதான் தெரிந்தது, முரளியின் அப்பா இறக்கக் காரண்மான, இடுக்கியிலுள்ள அந்த இடம் விற்கப்பட்டு, கிடைத்த 15 ஆயிரம் ரூபாய் அப்பாவிடம் கொடுக்கப்பட்டிருந்தது என்று..


         டீச்சரின் அம்மா பலமுறை, அப்பாவிடம் அந்தப் பணத்தில், ஆன்டிக்கும், பிள்ளைகளுக்கும் ஒரு வீடும், நிலமும் வாங்கிக் கொடுக்கச் சொல்லியும், அப்பா அதை செவிகொடுத்துக் கேட்கவில்லையாம்.  எப்படியோ, 8 ஆண்டுகள் பிரச்சினை இல்லாமல் போயிருக்கிறது.  பின் பணப் பற்றாக்குறை. அப்பாவினுடைய கையில் இருந்த 15000 ரூபாய் செலவாகிப் போனதால்.  அம்மாவின் சம்பளத்தை வைத்து அனைவரும் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட, ஆன்டிக்கும், அப்பாவுக்கும் இடையிடையே வாய் சண்டை ஏற்படத் தொடங்கியது.

                       " நாங்கள் எங்காவது வேறு வீட்டிற்கு போகிறோம்" என்று ஆன்டி இடையிடையே சொல்லத் தொடங்கினார்.  இதற்கிடையில், முரளியும், மாதவியும் மிகவும் நெருக்கமாகப் பழகுவதைப் பற்றி, கிராமத்தில் கிசுகிசுக்கத் தொடங்கியிருக்கின்றனர்.  டீச்சரின் அம்மாவுக்கும் இது இடையிடையே, வீண் வதந்தி அல்ல என்று தோன்றியது.  ஒரு நாள், டீச்சரின் அப்பாவும், அம்மாவும், ஆன்டியும் , பிள்ளைகள் அனைவரையும் அழைத்து, ஒரு நீண்ட அறிவுரை வகுப்பே எடுத்தார்களாம். முரளிக்குத்தான் மாதவி என்றும், ஆனால், முரளிக்கு ஒரு வேலை கிடைத்த பிறகுதான் கல்யாணம் என்றும் முடிவு எடுத்திருக்கின்றனர். மாதவனும், ஜானகியும், அறிவுரை கிடைத்ததாலோ என்னவோ, நண்பர்களாகத் தொடர்ந்த போது, முரளியும், மாதவியும் காதலர்களாகி விட்டதாலோ என்னவோ, அவர்கள் இருவரும் வீட்டிலுள்ள எல்லோரிடமும் எரிந்து விழுந்தார்கள்.  அப்பா இல்லாத போது, எரிந்து விழல் கூடுதலாக இருந்திருக்கிறது.


                             இடையில் ஒரு நாள் அம்மா ஒரே அழுகை.  சில நாட்களுக்கு முன், முரளியும், மாதவியும், "யாக்கரை" விஸ்வேஸ்வ்ரர் கோயிலில், பெற்றோர்கள் அறியாமல், மாலை மாற்றித் திருமணம் செய்து கொண்டு விட்டார்களாம்.  அதனால் ஏற்பட்ட் அவமானத்தால், அதன் பின் டீச்சரின் அப்பா அதிகம் வெளியில் போகாமல் வீட்டிலேயே தங்க ஆரம்பிதுவிட்டார்.  அம்மா வேறு வழியின்றி ஸ்கூலுக்குப் போக வேண்டியிருந்தது.  கல்யாணச் சடங்கு இல்லாதது போல், பிரவத்திற்கு அழைத்துச் செல்லும் சடங்கும் இல்லாது போனது.



மாதங்களுக்குப் பின் ஒரு நாள் அந்த வீட்டிற்கு புதிதாய் ஒரு விருந்தாளி. மாதவிக்குப் பெண் குழந்தை பிறந்தது.  எல்லோருக்கும் சந்தோஷம்.  அம்மாவும், அப்பாவும் குழந்தை பிறந்த 28 ஆம் நாள் அரைஞாண் கட்டும் சடங்கை நன்றாகக் கொண்டாட முடிவு செய்தனர்.  பந்தல் போட்டு உற்றார், உறவினர், நண்பர்கள் எல்லோரையும் அழைத்து ஒரு விழாவாக கொண்டாடினர்.  அதன் பின் தான் தெரிந்தது அந்த நாள் எல்லோருக்கும் தீக்கனலாய் மனதை வாழ் நாள் எல்லாம் சுடும் நாள் என்று.

                           அன்று மாலை, முரளி "நான் இப்படி வேலை இல்லாமல் இனியும் இருந்தால் சரிவராது.  எர்ணாகுளத்தில் ஒரு வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. சில மாதங்களுக்குப் பிறகு, மாதவியையும், குழந்தையையும், நான் அங்கு அழைத்துப் போகிறேன்"  என்றெல்லாம்  சொல்லிப் போனார்.  வருத்தம் என்றாலும், எல்லோருக்கும் ஒரு விதத்தில் மகிழ்ச்சி. 'இப்போதாவது பொறுப்புணர்ச்சி வந்ததே என்று.  அன்று போன முரளி பின்பு வரவே இல்லை.  இடையே அப்பவின் மரணம்.  யாரோ சொன்னார்கள் முரளி சவூதி அரேபியா போயிருப்பதாய்.  இடையே ஆன்டியும், மாதவனும் என்னென்னவோ சொல்லி எர்ணாகுளம் போய்விட்டார்கள்.  பிறகுதான் தெரிந்தது, முரளி புதிதாய் கட்டிய வீட்டிற்குதான் அவர்கள் சென்றிருக்கிறார்கள் என்று.  விசாரிக்கவோ, சண்டை போடவோ போக யாருமின்றி, பெண்களாகிய அவர்கள் குமுறியும், அழுதும், ஒருவருக்கொருவர் ஆறுதலும் சொல்லிக் கொண்டார்கள். அப்பா, இறக்கும் முன் அம்மாவிடம், ஜானகிக்கும், மாதவிக்கும்,  யாரையும் எதிர்பாராமல் வாழ எப்படியாவது பென்ஷன் கிடைக்கும் அரசு வேலை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்றாராம்.

                       அதன்படி, அம்மா மாதவிக்கு அவரது பள்ளியில் UP (அப்பர் ப்ரைமரி) வேலைக்கு ஏற்பாடு செய்ய, மாதவி அதை ஜானகிக்குத் தானம் செய்தும் விட்டார்.  "ஜானகிக்கு வேலை இருந்தால் நல்ல கல்யாணம் அமையும்" என்று சொல்லி.  சொன்னது போல ஜானகி டீச்சரானார். ரயில்வேயில் பணிபுரிந்த ராதாக் கிருஷ்ணன் கணவர் ஆனார்.  இதற்கிடையில் படுத்தப் படுக்கையான, அம்மாவைக் காண வந்த மணி வாத்தியார் சொன்ன வார்த்தைகளை அவர்களால் நம்ப முடியவில்லை.  இந்துவுக்கு அரைஞாண் கட்டுவிழா முடிந்த அன்று மால எர்ணாகுளம் சென்ற முரளி, 2 வருடங்களுக்குப் பிறகு மணி வாத்தியாருக்கு கடிதம் எழுதியிருந்தாராம்.  அதில் "எங்களைப் பாதுகாக்கிறேன் பேர்வழி என்று எங்கள் சொத்தை எல்லாம் அபகரித்த அந்த மனிதனுக்கு (டீச்சரின் அப்பாவுக்கு) இது நான் கொடுக்கும் தண்டனை.  நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில், எங்கள் மாமா தந்த இடத்தில் ஒரு வீடு கட்டியிருக்கிறேன்.  இப்போது என் அம்மாவும், தம்பியும் இங்குதான் இருக்கிறார்கள்.  அடுத்த வருடம் நான் நாடு திரும்பும் போது ஒரு கல்யாணமும் செய்யப் போகிறேன்.  என்னுடைய ஒரே வருத்தம், கல்யாணத்திற்கு உங்கள் யாரையும் கூப்பிட முடியாதே என்பதுதான்".  என்று எழுதி அதை மறக்காமல் டீச்சரின் அப்பாவிடமும் கொடுக்கச் சொன்னாராம்.

                         வேறு வழியின்றி, முரளியை இனி எதிர்பார்த்து பலனில்லை என்பதைத் தெரிவிக்க, மணி வாத்தியார், டீச்சரின் அப்பாவிடம் அந்தக் கடிதத்தைக் காண்பித்திருக்கிறார்.  மனம் உடைந்த அவர் அதன் பின் சில மாதங்களிலேயே இறந்தும் விட்டார்.  ஆனால், இறப்பதற்கு முன் மணி வாத்தியாரிடம் " இந்தக் கடிதத்தை என் மனைவியும், பிள்ளைகளும் வாசித்து என்னைப் போல் செயலிழந்து இடிந்து உட்கார மாட்டார்கள் என்று உறுதியாகத் தோன்றும் போது மட்டும், அவர்கள் கையில் கொடுத்தால் போதும்." என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டாராம்.  அதனால் தான், இத்தனை நாளாக அக்கடிதத்தைப் பற்றிச் சொல்லவில்லை என்று சொல்லியிருக்கிறார் மணி வாத்தியார்.  வாசித்த இவர்களுக்கும் வருத்தம்தான்.   ஆனால், அந்த வருத்தம் அவர்கள் எதிர்காலத்தை இருட்டாக்கும் அளவுக்குப் பெரிதல்ல.  இப்போது அவர்கள் வாழும் அவர்களது வாழ்க்கை, அவர்களுக்குப் பழக்கப்பட்டு விட்டது.  புதிய எதிர்பாராத திருப்பங்கள் அவர்களை ஒன்றும் செய்யாது என்பதுதான் உண்மை.



                                   இப்படி இருக்க, காலச் சக்கரத்தின் சுழற்சியில் வருடங்களுப் பிறகு முரளி இந்தியாவுக்குத் திரும்பி தாய் மற்றும் சகோதரனின் மரணத்திற்குப் பிறகு மனைவி, மற்றும் குழதைகளுடன் மகிழ்ச்சியாக  வாழத் தொடங்கினாலும், ஒருவேளை மனதில் எங்கேயோ ஒரு மூலையில் குற்ற உணர்வு உறங்காமல் விழித்திருந்திருக்க வேண்டும். அதனால்தானோ என்னவோ, இறையுணர்வை வளர்த்துக் கொள்ள "பிரம்மகுமாரி" எனும் ஆன்மீக இயயக்கத்தில் சேர்ந்து ராஜயோகம் பயின்று கொண்டிருக்கிறார்.  காலமும், வாழ்க்கை அனுபவங்களும் அவரது காயங்களைக் குணப்படுத்தி இருக்கலாம். அவரது பழி வாங்கும் உணர்வு செத்திருக்க வேண்டும்.  மனைவியையும், குழந்தையையும்  (இப்போது இரு இளஞர்களின் தாய்) பார்க்கவேண்டும் என்ற ஆசை அவருக்கு.  (மனைவியும், மகளும் மாத ஊதியம் பெற்று பொருளாதார நெருக்கடி இல்லாமல் வாழ்வதும் ஒரு காரணமாக இருக்கலாம்).  அவர்களைக் காண வேண்டும் என்றும், அவர்களுடன் வாழ வேண்டும் என்றும் விரும்பிய அவர், அவர்களுடன் பல முறை ஃபோன் மூலமும் தொடர்பு கொண்டிருக்கிறார்.


                மகள் தன் தந்தையின் தவறை மன்னித்து ஏற்றுக் கொண்டார்  இடையிடையே அப்பாவும், மகளும் பேரன்களும் சந்தித்து ஒன்றாய் தங்கிப் பேசி பிரச்சினை இல்லாமல் போகிறது  அவர்களது வாழ்க்கை.  ஆனால் மனைவி மாதவி மாற்றம் இல்லாமல் தொடர்கிறார்.  இதுதான் நான் இந்தக் கதையின் ஆரம்பத்தில் சொன்ன அந்த ஃப்ப்ன் கால் சம்பவம் உண்டாகக் காரணம். முரளி மாதவியை அழைத்தது.

"நான் பெண்தான், ஆனால், பொம்மை  அல்ல தோன்றும் போது கையிலெடுத்துக் கொஞ்சவும், வேண்டாத போது வீசி எறியவிம்.  கடந்த 35 வருடங்கள் தனியே வாழ்ந்த எனக்கு, இனியுள்ள 5, 10 வருடங்கள் தனியே வாழத் தெரியும். மட்டுமல்ல அவர் வேறு ஒருத்தியின் கணவனும், குழந்தைகளின் தந்தையும் கூட. அந்தப் பெண்ணின் கண்ணீர் என்னைச் சுடும்.  கணவனால் கைவிடப்பட்டு தனியே வாழும் ஒரு பெண்ணை இச்சமூகம்  எப்படியெல்லாம் ஏசும், ஏளனம் செய்யும்!  அதையெல்லாம் நான் இத்தனை வருடங்கள் சகித்தாகிவிட்டது.  இந்த வாழ்க்கையைத் தான் நான் மரணம் வரைத் தொடர்வேன்" என்றெல்லாம் மாதவி கொந்தளித்தார்.  

                                என்றாலும், எனக்கென்னவோ, சந்தேகமாகத்தான் இருக்கிறது.  காலம் எல்ல காயங்களையும், வலிகளையும் குணமாக்கும் திறனுடைய்துதானே. ஒருவேளை முரளியின் ப்ழிவாங்கும் உணர்ச்சியைப் போக்கியது போல் (வசதியுடம் சுகமாய் வாழ நடத்தும் தத்திரமாகவும் இருக்கலாம்).  காலம் ஒரு வேளை மாதவிக்கு முரளியிடம் உள்ள வெறுப்பையும் விரோதத்தையும் போக்கி விடுமோ?  அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும் என்பார்களே !!  இப்படிக், 'கால் மேல் கால் வந்து '  வெறுப்பையும்,கோபத்தையும் நகர்த்தி விடுமோ? மகள் மற்றும் பேரங்களுடன் ஒன்றானது போல, முரளியும் மாதவியும் ஒன்றாவார்களா?
காலம்தான் பதில் சொல்லவேண்டும்!!! காத்திருப்போம்.!!!



      

23 கருத்துகள்:

  1. ///பெண்தான், ஆனால், பொம்மை அல்ல என்று தலைப்பு வைத்திருக்கலாம். என நான் நினைக்கிறேன் மேலும் இந்த மாதிரி உண்மைக் கதை பதிவிடும் போது முதலில் எழுதி வைத்துவிட்டு சில மணிநேரம் அல்லது அடுத்த நாள் அதை படித்து பார்த்தால் அதை மேலும் எப்படி எளிதாக சொல்லலம் என்று மனதில் தோன்றும் அதன் பின் திருத்தி எழுதி வெளியிடுங்கள் அதன் பின் அந்த பதிவு மிக சிறப்பாக இருக்கும். இது என் அனுபவம் இதை சொல்லக் காரணம் முதலில் படித்த போது கொஞ்சம் குழப்பமாக இருந்தது எனவே அதை மீண்டும் படிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது அதனால்தான் சொல்லுகிறேன் நான் சொன்னதில் தவறு ஏதும் இருந்தால் மன்னிக்கவும் மேலும் இதை சுட்டிக்காட்ட காரணம் உங்களின் பல பதிவுகளை படித்துள்ளேன் அதில் உள்ள சிந்தனையும் கருத்தோட்டமும் சொல்லிச் செல்லும் முறையும் மிக நன்றாக இருக்கும் ஆனால் அது இந்த பதிவில் மிஸ்ஸிங்க் tha.ma 1

    பதிலளிநீக்கு
  2. நான் பெண்தான், ஆனால், பொம்மை அல்ல தோன்றும் போது கையிலெடுத்துக் கொஞ்சவும், வேண்டாத போது வீசி எறிய. கடந்த 35 வருடங்கள் தனியே வாழ்ந்த எனக்கு, இனியுள்ள 5, 10 வருடங்கள் தனியெ வாழத் தெரியும். மட்டுமல்ல அவர் வேறு ஒருத்தியின் கணவனும்,குழந்தைகளின் தந்தையும் கூட.

    எனக்கு அவரின் நிலைப்பாடு
    சரியெனத்தான் படுகிறது
    தவறுகள் மன்னிக்கப்படலாம்
    துரோகங்கள் ?

    பதிலளிநீக்கு
  3. முரளி அவர்களுக்கு தனது மனச்சாட்சி நல்லவிதமாக மாற்றி இருக்கிறது என்று சொல்ல முடியாது... யோகம் பயின்று தான் மாற வேண்டும் என்பது ஒரு மாற்றம் அல்ல... மாதவி அவர்கள் இந்தளவு கொந்தளிப்பதற்கு - அனுபவித்த வலிகள்...

    குணத்தை இழப்பவன் இறுதியிலே - நல்ல
    சுகம் அடைவதேது...?

    குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
    கொள்வதென்பதேது...?

    பதிலளிநீக்கு
  4. மாதவியின் நிலைபாடு சரியே!

    பதிலளிநீக்கு
  5. உண்மைகள், கதைகளைவிடவும் திருப்பங்கள் நிறைந்தவையாக இருக்கும் என்பது தெரிகிறது. இம்மாதிரி விஷயங்களை நீங்கள் கதையாகப் புனைய முயல்வது சரியாக இருக்கும். (2) எந்த நிலை வந்தாலும், ஒரு பெண், ஒரு ஆணைவிட மனவலிமை மிக்கவள் என்பது சரித்திரபூர்வமான உண்மை. ஆண்துணை இல்லாமல் பெண்ணால் இயங்கமுடியும். ஆனால், பெண்துணை இல்லாத ஆண், வயது ஏற, ஏற, எப்படியாவது ஒரு பெண்துணை (மனைவி அல்ல!) கிடைக்காதா என்றே ஏங்குகிறான். இயற்கையின், படைப்பின் விசித்திரம் அது. பெண்மையின் மாட்சிமையும் அதே. (3) உங்கள் தளத்திற்கு வரச் சற்று தாமதமாகிவிட்டது. பொறுத்தருள்க!

    பதிலளிநீக்கு
  6. பெரிய கதை; கொஞ்சம் சின்னதா இருந்தா நல்லா இருக்கும்! (
    அது சரி! பெரிய பெரிய கட்டுரை எழுதும் நான் அதை சொல்லக்கூடாது!)
    நல்ல கதை!

    நான் ஒரு அப்பூர்வ பிறவியை இங்கு பார்த்தேன், வெள்ளைத்தோல் தான். பலர் ஏமாற்றினார்கள்; துரோகிகள் என்று தெரிந்தும்..அதை கண்டு கொள்ளவில்லை..கேட்டேன் ஏன் என்று? அதற்கு பதில்...

    "I know I am short changed and cheated but I see the bigger picture in front of me; and I don't want to expend my energy on dealing these issues!

    பதிலளிநீக்கு
  7. மிக்க நன்றி! இத இத த்தான் இது போன்ற் பின்னூட்டங்கலத் தான் எதிர்பர்க்கிறோம்! மதுரைத் தமிழா முதலில் உங்களுடைய இந்த நேர்மையான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி!

    நேற்று ஒரு சில பிரச்சினகள், பவர் கட், நெட் பிரச்சினை இருந்தாலும் தாங்கள் கூறியிருப்பது போல அதை வெளியிடாமல், திருத்தி பின்னர் வெலியிட்டிருந்த்திருக்கலாம்...தவறு நேர்ந்து விட்டது! மன்னிக்கவும் தங்கள 2 முறை வசிக்க வைத்ததற்கு. இனி இது போன்ற தவறுகள் நடக்கா வண்ணம் பார்த்துக் கொள்கின்றோம்!

    எங்கள் எழுத்தைக் கூர்மைப் படுத்த இது போன்ற கருத்துக்கள் மிக மிக அவசியம்! நாங்கள் தவறாக் நினைக்க வில்லை! சொல்லப் போனால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது நண்பரே! இடித்துரைப்பவன் தான் நண்பன் என்று சொல்லுவதற்கு இணங்க நீங்கள் கருத்து போட்டதால் இந்த "நண்பரே" என்ற அழைப்பு!

    மிக்க நன்றி மிக்க நன்றி!.

    பதிலளிநீக்கு
  8. தவறுகள் மன்னிக்கப்படலாம்
    துரோகங்கள் ? ஆம்.....மன்னிக்கப்படக்கூடாதுதான்.....மிக்ச் சரியே!

    தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  9. தவறுகள் மன்னிக்கப்படலாம்
    துரோகங்கள் ? ஆம்.....மன்னிக்கப்படக்கூடாதுதான்.....மிக்ச் சரியே!

    தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி! வோட்டிற்கும் சேர்த்து, திரு ரமணி அவர்களே

    பதிலளிநீக்கு
  10. மிக அழகான கருத்து DD அவர்களே! தங்கள் இடுகியை நினைவு படுத்துகின்றாதோ! குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
    கொள்வதென்பதேது...?

    ஆம் நிம்மதி இல்லாமல் துடித்துக் கொண்டுதான் இருப்பான்!

    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  11. புலவரே ! வாருங்கல் தங்கள் நிலைபாடும் சரியே "மாதவியின் நிலைபாடு சரியே!" என்று சொல்லி!

    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  12. வாருங்கள் சார்! உங்கள் வருகை மிக்க சதோஷத்தைத் தருகின்றது! பொறுத்தருள்க என்ற பெரிய வார்த்தை எல்லாம் வேண்டாம்! சார்.

    தாங்கள் சொல்லியிருக்கும் இயற்கையின் படைப்பின் விசித்திரம் மிக மிக உண்மையே! ஆம் இயற்கையின் படைப்பில் எது தவறாகும்! ? மிக அழகான கருத்தைச் சொன்னதற்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  13. மாதவியின் வாழ்வில் ..துரோகமும் கடந்து போகும் !
    த ம் 8

    பதிலளிநீக்கு
  14. கதை மிக அருமையா இருந்தது சார்.
    நட்புமுறையில் சொல்வதென்றால் இன்னும் கொஞ்சம்
    எடிட் பண்ணி, டச்சப் பண்ணிருக்கலாமோ?
    ஏனென்றால் உங்கள் முந்தைய கதை இன்னும் கிரிஸ்பி ஆ இருந்தது !

    பதிலளிநீக்கு
  15. மாதவியின் கோபம் நியாயமானது! அருமையான கதை! நன்றி!

    பதிலளிநீக்கு
  16. ஜி தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி! ஜி!!!

    பதிலளிநீக்கு
  17. மிக்க நன்றி சகோதரி! தாங்கள் சொன்னது சரியே! செய்திருக்கலாம். இனி அவ்வண்ணம் நேரா வண்ணம் கவனமாக இருக்கின்றோம்.!

    இது போன்ற தங்கள் கருத்துக்களை வரவேற்கின்றோம்! அது எங்கள் எழுத்துக்களை இன்னும் மெருகேற்ற உதவும்! தயவு செய்து இது போன்று தொடருங்கள்!

    தங்கள் இந்த நட்பு எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகின்றது!

    மிக மிக நன்றி!

    பதிலளிநீக்கு
  18. திரு சுரேஷ் அவர்களுக்கு, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  19. திரு சுரேஷ் அவர்களுக்கு, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  20. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் எத்தனை எத்தனை கதைகள்.....

    பதிலளிநீக்கு