புதன், 23 அக்டோபர், 2013

கதை கதையாம் காரணமாம்

கதை கதையாம் காரணமாம்

 

தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகும் போது திடீர்னு ஒரு சீசன்’ காளான் போல ஒரே மாதிரிப் படங்கள் முளைக்கும் பாருங்க..... அதாவது காதல் கதை ஒண்ணு சக்ஸஸ் ஆச்சுனு வையுங்க....... உடனே அதே கதை அமைப்புல பல படங்கள் அடுத்தடுத்து வெளிவரும். நம்ம தமிழ்த் திரையுலகின் ஒரு அவல நிலை. 

காதல்’ படம் வெற்றி அடைஞ்சதும் அதே ரீதியில படங்கள் வெளி வந்துச்சு. காக்க காக்க’ பெரும் வெற்றி, அடுத்து சாமி’, ‘சத்யம்’னு போலிஸ் கதைகள் படமா வெளியாச்சு.  சுப்ரமண்யபுரம்’ வெற்றி பெற்ற உடனே, காளான்கள் போல மதுரையைச் சுத்திக் கதைக் களமா வைச்சும், நண்பர்கள் தங்கள் நண்பன் ஹீரோவின் காதலுக்கு ஹெல்ப் பண்ணி தங்கள் உயிரை விடுவது போலவும், கிராமீய மணத்துடனும்  பல படங்கள் வெளி வந்துச்சு.  அதே போல அந்நியன்’ வெளிவந்து ஹிட் ஆனதும், ‘கந்தசாமி’, ‘வேலாயுதம்’னு கிட்டத்தட்ட அதே ஸ்டைல் படங்கள் வெளிவந்துச்சு.  

 இயக்குனர்களிடம் உங்க படம் அந்த படத்தைப் போல இருக்குனு விமர்சனங்கள்.... என்று கேள்வி கேட்டால் போச்சு. ஒரு கதையே வரும் பாருங்க அதையே ஒரு படமா எடுக்கலாம்....

இல்ல.  இது வித்தியாசமான கதைக் களம். இந்தக் கதையோட கரு நான் என் அம்மாவுடைய வயித்துல கருவா இருக்கும் போதே வந்துருச்சு.  அப்ப எடுக்க முடியாது இல்லையா.  அப்புறம் நான் பிறந்து அந்தக் கதைய பாலிஷ் பண்ணி எடுக்க நினைச்ச போது ஃபைனான்ஸ் அது இதுனு அதற்கான சூழல் இல்லாததால எடுக்க முடியாம அப்படியே போட்டு வைச்சுட்டேன்.  இப்ப அதற்கான நேரம் வந்து சூழல் அமைஞ்சுச்சு, ஸோ அத தூசு தட்டி, படமா எடுத்தேன்” இப்படி பேட்டி எல்லாம் வரும்.  இப்படி பல சீசன் சொல்லலாம்.

அந்த வகைல, இப்ப வெளியாகி ஓடிக்கிட்டு இருக்கற வித்தியாசமான த்ரில்லர் கதை ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஹிட் ஆனதுனால நம்ம இயக்குனர்கள் ரூம் போட்டு யோசிச்சு அதே மாதிரி காக்காயும், ஆந்தையும், பாட்டி சுட்ட வடையும் அப்படினு ஒரு படம் எடுத்தாங்கனா? ன்னு  கொஞ்சம் கற்பனையத் தட்டிவிட்டா எப்படினு.........

இருட்டு கவிழும் நேரம். ரோட்டோரம் ஒரு பாட்டி வடை சுட்டுகிட்டு இருக்காங்க.  அங்க வடை சாப்பிட வர்ர ஹீரோயினோட மோதிரம் அவங்களுக்கே தெரியாம அந்த வடைமாவுல விழுந்து விட, அந்தப் பாட்டியும் அத பார்க்காம வடை சுட்டுகிட்டே இருக்க…..

அதுக்குள்ள கதையோட ஒன்லைன் சொல்லிடறேன். ஹீரோ, ஹீரோயின வில்லன்கிட்டருந்து காப்பாத்தி பிரிஞ்சு போன அவங்க அப்பா, அம்மா எல்லாரையும் ஒண்ணு சேர்க்க ட்ரை பண்ணிகிட்டு இருக்காரு.  ஹீரோ, வில்லன் ரெண்டு பேருமே தாதாதான்.

இப்ப கதைக்கு வருவோம், ஹீரோவும், வில்லனும் அதே இடத்துல இருந்தாலும், வில்லனுக்கு ஹீரோ இருக்கறது தெரியாது, ஆனா ஹீரோக்கு வில்லன் அங்க இருக்கறது தெரியும். 

இதப் பார்க்குற ஹீரோ, வில்லன் கண்ணுல படாம மோதிரம் இருக்கற வடையை எடுக்க ட்ரை பண்ண, ஏன்னா ஹீரோக்கு மட்டும்தான் அந்த மோதிரம் எந்த வடைல இருக்குனு தெரியும், வில்லனும் அந்த மோதிரம் விழுந்ததைப் பார்த்து  அத எடுக்க முந்திகிடுறாரு, ஆனா அவருக்கு எந்த வடைல அந்த மோதிரம் இருக்குனு தெரில. 

ஸோ, ‘ஏய்’னு சத்தம் போட்டுகிட்டே எல்லா வடையையும் அள்ளிப் போட்டுகிட்டு ஓடுறாரு.  பாட்டி திகைச்சுப் போயிடறாங்க.

ஹீரோ அவங்கள சமாதானப் படுத்தி, “எல்லா வடையும் கெட்டு போறதுக்குள்ள உங்க கையில வந்து சேரும்னு வீர வசனம் பேசிட்டு அவரு காதலியையும் இழுத்துக்கிட்டு ஓட, இவங்கள போலீஸ் துரத்த, வில்லன் எல்லா வடையையும் தொலை தூரத்துல உள்ள (பரவால்ல ஏதோ ஒரு வெளிநாட்ட யோசிச்சுக்கோங்க) ஒரு வீட்டுக்குள்ள இருக்கற ஃபிரிட்ஜுல அங்க இருக்கறவங்களுக்குத் தெரியாம வைக்க சமயம் பார்த்து ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கும்போது……

நம்ம ஹீரோ எப்படி அந்த வடைகளை வில்லன்ட்ட இருந்து பறிச்சுக்கிட்டு வராரு, அந்த மோதிரம் இருக்கற வடையை மட்டும் தனியா எடுத்து, அந்த மோதிரத்தை காதலியின் விரலில் போட்டு தன் காதல உணர்த்த, அவரை பிரிந்து போன அவர் குடும்பத்தாரோடு சேர்க்க முயல….

எதுக்கு அந்த ஆளுங்க அள்ளிக்கிட்டு ஓடினாங்கன்னு பாட்டி கேட்க, ஹீரோ வடைய ஒப்படைச்சுகிட்டே சொல்ல..... ...கடைசில ஹீரோ ஹீரோயின் ரெண்டுபேரும் சேர...... ஸ்பாஆஆ

பாவம் மறுநாள் பாட்டிகிட்ட வரும் கஸ்டமருக்கெல்லாம் முந்தைய நாள் இரவு சுட்ட பழைய வடைகள தர…."எடே! ஏதாச்சும் ஒரு வடைல மோதிரம் இருக்குமாலே" என்று தன் நண்பனிடம் ரகசியக் குரலில் சொல்லிக்கொண்டே ஒரு கஸ்டமர் வடையைக் கடிக்க.... படம்…. சுபம்.

இடைல டூயட், ஆண் காக்கை ஹீரோ, பெண் காக்கை-ஹீரோயின, ரெண்டுபேரும் ஓடிகிட்டே இருப்பாங்க, ஆந்தை.-வில்லன்.  ஆந்தைக்கு இரவிலதானே கண்ணு தெரியும் ஸோ நைட்லதான் கதை ஓட்டம்.  கழுகுகள் போலீஸ். பல காக்கைகள், ஆந்தைகளை சுடும், ஆந்தைகள் காக்கைகள சுடும், காக்கையும், ஆந்தையும் கழுகுகளையும் சுடும்.

அப்புறம், மரம் கொத்தி பறவைகள், கிளிகள், குருவிகள் இவர்களின் பங்களிப்புனு......மீதி வெள்ளித் திரையில்......இது எப்புடி?! நாங்களும் யோசிப்போம்ல...ஆனா என்ன,? ரூமெல்லாம் போட வேண்டியதில்ல.......வேலை செஞ்சுகிட்டே, காய் நறுக்கிட்டுருக்கும்போதே கதையும் நறுக்குவோம்ல...... 

 

2 கருத்துகள்:

  1. #.வேலை செஞ்சுகிட்டே, காய் நறுக்கிட்டுருக்கும்போதே கதையும் நறுக்குவோம்ல...... #
    நல்லாவே வடை சுட்டு இருக்கீங்க,எதுக்கும் விரல் பத்திரம் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா.... இதுவும் நல்லாத்தான் இருக்கு...! ரொம்ப சந்தோஷமாக இருக்கு சார்! உங்கள் கமெண்ட் பார்த்து. ஹப்பா கடைசியா நம்ம ப்ளாகயும் பார்த்து, வாசிச்சுக் கமெண்ட் கொடுக்க ஒருத்தர் இருக்காரேனு!!! இது போல உங்க கமென்ட் தான் சார் எங்களுக்கு உற்சாகத்தையும், எழுதுவதற்கான ஆர்வத்தையும் கொடுக்குது! இந்த ப்ளாக்குக்கு முதல் கமென்ட், முதல் வருகை...மிக்க நன்றி. உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

      நீக்கு