ஞாயிறு, 30 மார்ச், 2025

ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் - ஸ்ரீரங்கப்பட்டினம் கோயில் - பயணம் - 1

பெங்களூரிலிருந்து 3, 4 மணி நேரப் பயணத்தில் - குறிப்பாக சாம்ராஜ்நகர், மாண்டியா மாவட்டங்களில் - சுற்றிப் பார்க்க நிறைய இடங்கள் இருக்கின்றன. (அருகில் மைசூர், மடிக்கேரி). கொக்கரேபெல்லூர் சென்றுவந்த உடனேயே அடுத்த வார ஞாயிறில் அதாவது மார்ச் தொடத்திலேயே ரங்கனதிட்டு சென்று விட்டு வரவேண்டும் - பறவைகள் சீசன் என்பதால் - என்ற திட்டம் இருந்தது. ஆனால், சென்னைக்குச் செல்வது அந்தச் சனிக்கிழமையா அல்லது அடுத்த சனிக்கிழமையா என்ற குழப்பம் இருந்தது.

புதன், 26 மார்ச், 2025

அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டி - 2024 - பரிசு வென்ற கதைகளைப் பற்றிய என் பார்வை - 5 - நிறைவுப்பகுதி

 ஒரு பிரியமான கதை - ஸ்ரீமதி ரவி

ஸ்ரீமதி ரவி என்ற புனைபெயரில் எழுதும் திரு பி டி ரவிச்சந்திரன் அவர்கள் சிறந்த புகைப்படக் கலைஞர். விகடனில் இவரது முதல் கதை வெளிவந்ததும், ஆசிரியர் பாலசுப்ரமணியன், கதை நன்றாக இருக்கிறது என்று இவரைத் தொடர்ந்து விகடனில் எழுதச் சொன்னாராம். நிறைய பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார்.

சனி, 22 மார்ச், 2025

அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டி - 2024 - பரிசு வென்ற கதைகளைப் பற்றிய என் பார்வை - 4



தையலின் தடம் - முகிலன் அப்பர்

அப்பர் - தந்தையின் பெயர். எனவே முகிலன் அப்பர். பெயரே அழகாக இருக்கிறது! பரிசு பெற்றவர்களில் மிகவும் இளையவர். வயது 22. பொறியியல் பட்டதாரி என்றாலும் தமிழ் மொழியின் மீதான பற்றின் காரணமாகத் தற்போது இளங்கலை (தமிழ்) இரண்டாமாண்டு படித்து வருகிறார். பேச்சாற்றல், எழுத்தாற்றல் மிக்கவர்.

புதன், 19 மார்ச், 2025

அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டி - 2024 - பரிசு வென்ற கதைகளைப் பற்றிய என் பார்வை - 3

 

சலூன் - ச சுரேஷ்

 

அமெரிக்காவில் வசித்துவரும் கதாசிரியரைப் பற்றி பிரமிப்பான குறிப்புகள். ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதி வந்தவர், சமீபகாலமாகத் தமிழில் எழுதி வருகிறார். கட்டுரைகள் நாவல்கள் கதைகள் என்று.

பொதுவாகக் கதை இலக்கணம் என்று சொல்லப்படும் தொடக்கம் முடிச்சு அதை அவிழ்த்தல், சஸ்பென்ஸ், என்று எதுவும் இல்லாமல் இயல்பான உரையாடல்களுடன் ஒரு கதாபத்திரம் - பெற்றோர் யார் என்று தெரியாத, குடும்பம் என்பதே இல்லாத, சலூன் நடத்தும் ஒண்டிக்கட்டை சிவா - பற்றிச் சொல்லும் கதை.

ஞாயிறு, 16 மார்ச், 2025

அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டி - 2024 - பரிசு வென்ற கதைகளைப் பற்றிய என் பார்வை - 2

 

மஞ்ச கலருல ஒரு புடவை - கமலா முரளி


கமலா முரளி, ஆசிரியையாகப் பணியாற்றி விருது பெற்றவர் என்பதோடு இவரது கதைகள் அச்சு இதழ்களில் வந்திருக்கின்றன கூடவே கதைகளுக்கும் பல பரிசுகள் பெற்றவர்.

வியாழன், 6 மார்ச், 2025

அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டி - 2024 - பரிசு வென்ற கதைகளைப் பற்றிய என் பார்வை - 1

2013 லிருந்து செல்லப்பா தமிழ் டயரி மற்றும் இமயத்தலைவன் என்று இரு தளங்களில், (முன்னதில் அன்றாட நிகழ்வுகளையும், பின்னதில் இலக்கியமானவைகளையும்) எழுதி வரும் பதிவர், எழுத்தாளர் திரு இராயசெல்லப்பா அவர்களை நாம் எல்லோரும் அறிவோம். Subtle Humour என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் நுட்பமான நகைச்சுவை எழுத்தும் பேச்சும் இவருக்கு வசப்பட்ட கலை.

திங்கள், 3 மார்ச், 2025

எனது மூன்றாவது விழியின் பார்வையிலே - 28

சென்ற பதிவுகளை எல்லாம் வாசித்துக் கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றி. அடுத்த பதிவு எழுத கொஞ்சம் நேரம் எடுக்கிறது. எனவே இடைவெளியில் நாம ஒரு சின்ன பிக்னிக் போய்வரலாம் வாங்க! இப்படித்தான்.

ரயிலில் பயணித்துக் கொண்டே.......காட்சிகளைப் பார்த்துக் கொண்டே ...