செவ்வாய், 18 ஏப்ரல், 2017

அடையாளம் - 5

முதல் நான்கு பகுதிகளின் இணைப்புகள்


அமெரிக்காவில் கடுங் குளிரையும், பனியையும் கண்ட கார்த்திக்கு பனிமூட்டம் தொடங்கியிராத தில்லியின் குளிர்  பெரிதாகத் தெரியவில்லை. தங்கை தில்லியில்தான் வாசம் என்பதால் அங்குதான் தன் பெற்றோருடன் அமெரிக்காவிலிருந்து வந்ததும் தங்கியிருந்தான்.

அல்பெர்ட் எய்ன்ஸ்டீன் வேர்ல்ட் அவார்ட் பெற்ற கார்த்திக்கு நடந்த பாராட்டு விழாவில், கார்த்தி, அவனுக்கு வழங்க இருந்த ஊக்கத் தொகைப் பரிசை இந்திய ஆராய்ச்சிக் கல்விக்கு வழங்கிவிட்டதாக அறிவித்தார்கள். கார்த்தி பேசும் போது, எந்தத் துறையில் வெற்றி பெற வேண்டுமென்றாலும், அட்டிட்யூட், தோல்வி வந்தாலும் அதைப் புறந்தள்ளி வெற்றி இலக்கை அடையும் வரை விடா முயற்சி, நேர்மையான எண்ணம், இவற்றைக் கற்றுத் தரும் வகையில், மன அழுத்தம் ஏற்படுத்தாமல், ஊக்கம் அளித்து, சுய சிந்தனை, லேட்டரல் திங்கிங்கிங்க் மற்றும் தனிமனித மேம்பாடு போன்ற வகையில் கல்வியை நம் நாடு வழங்கினால், ஆராய்ச்சிகளில் முன்னோடியாகத் திகழலாம் என்று சொன்னவுடன், கூட்டத்திற்குப் புரிந்ததோ இல்லையோ எல்லோரும் பலமாகக் கைதட்டினார்கள். கைதட்டல்கள் எல்லாம் சடங்கு போன்றும், ஆட்டுமந்தை போலவும்தானே!.. மேலும் அவன் முத்தாய்ப்பாகச் சொன்னது, இந்த ஆராய்ச்சியைத் தான் செய்வதற்குப் பின்புலத்தில் மறைமுகக் காரணமாக இருந்தவர் மருத்துவர் சம்யுக்தா என்றும், இவ்வாராய்ச்சி தன் ஒருவனால் மட்டும் வெற்றி பெறவில்லை, பலர் சேர்ந்து குழுவாக உழைத்ததால்தான். எனவே, இந்த வெற்றி தனதானது மட்டுமில்லை, தன் குழுவைச் சாரும் என்றும் சொல்லி முடித்தான்.

விழா, முடிந்ததும், அவனது பெற்றோர் மற்றும் தங்கை குடும்பத்தினர் முன்னரே சென்று விட்டனர். வெகு நேரம் கழித்துதான் கார்த்தியால் விடுபட முடிந்தது. தான் தனியாகச் செல்ல விழைந்தாலும், கேட்காத விழா ஒருங்கிணைப்பாளர்கள், எழுதப்படாத சட்டமான இந்திய முறைப்படி கார்த்தியுடன் அவனுக்கு இடப்பட்ட சால்வைகள், பூங்கொத்துகள், என்று அனைத்தையும் எடுத்துக் கொண்டு பின்னால் வந்தது, கார்த்திக்குக் கூச்சமாகவும், ஆயாசமாகவும் இருந்தது.

வீட்டிற்கு வந்ததும், கார்த்தி, விழா அமைப்பாளர்களை அன்புடன் வழி அனுப்பிவிட்டு, ரிலாக்ஸ்டாக தரையில் அமர்ந்தான். தங்கையின் குழந்தைகளும் விழாவில் வழங்கப்பட்ட சாக்லேட்டுகளைக் கையில் வைத்துக் கொண்டு, சப்பிக் கொண்டு அவன் மடியில் வந்து அமர்ந்தன.

“சம்யுக்தா வரலை இல்லையாடா? அவளுக்கு எப்படியும் நியூஸ் தெரிஞ்சுருக்கும், வருவாளோனு எதிர்பார்த்தேன். 15 வருஷம் அப்படியும் இப்படியுமா ஓடிப் போச்சு…ம்ம்ம்” என்ற அம்மாவின் குரலில் ஓர் ஆதங்கம் இருந்ததை கார்த்தி உணர்ந்தான். அப்பா எப்போதுமே அமைதி. தங்கை, கார்த்தியைக் கட்டிக் கொண்டாள்.

15 வருடங்கள் ஓடிவிட்டது! கார்த்தி சம்யுக்த்தாவின் நினைவிலேயே வாழ்ந்து வருவதால் இப்போது அம்மாவின் கேள்வி, பலவற்றை அசை போட வைத்தது. தங்கையின் குழந்தைகளை அணைத்துக் கொண்டு அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டான். 15 வருடங்களுக்கு முன் அவனுக்கும், அவளுக்கும் நடந்த விவாத உரையாடல்கள் மனதில் நிழலாடி, அம்மா சொன்னதும் நினைவுக்கு வந்தது……….

“சம்யுக்தாவுக்குக் கிடைக்கலைனு ரொம்ப அழுதாளோ? நானும் அவ கூட பேசினேன்டா. அவ ரொம்ப குழப்பத்துல இருக்கானு நினைக்கறேன்….”

“அம்மா, நீயும் ஒரு பொண்ணு. அவ பேசறது கிட்டத்தட்ட என்னோடு போட்டி மாதிரி இருக்குமா. ரொம்ப நல்ல பொண்ணும்மா. ஆனா என்னால அவள அப்படி நினைச்சுப் பாக்கவும் முடியலை. நீயும் ஒரு பொண்ணுதானே சொல்லுமா.  இதுக்கு என்ன அர்த்தம்னு…”

“கார்த்தி கண்ணா, இது மேலோட்டமா பார்த்தா ஜெலஸ், போட்டினு தோணும். ஆனா, இது ஜெலஸ் இல்ல. ஒரு மயிரிழை வித்தியாசம்தான். பெண்ணியம் சார்ந்த ஒருவிதமான ஐடென்டிட்டி க்ரைஸிஸ். அடையாளச் சிக்கல். அதப் பத்தி விளக்கமா நான் அப்புறமா சொல்லறேன். இப்ப சுருக்கமா. தோல்விய ஏத்துக்கற மனம் இல்லை; அதுவும் ஒரு ஆண் முன்னாடி; ஏன்னா ஆண்களைப் பிடிக்கலை. ஆனா, உன்னைப் பிடிச்சுருக்கு. உன் மேல நம்பிக்கை இருக்கு. அதே சமயம், தன் லைஃப் பார்ட்னரா வர இருக்கும் ஆண் முன்னாடி இந்தத் தோல்விய ஏத்துக்க முடியல. தன் பார்ட்னரை விட கூடுதலா அச்சீவ் பண்ணனும் அல்லது அவனுக்கு நிகரா அச்சீவ் பண்ணனும். அந்த லெவல்ல இருக்கணும். எனக்கு என்ன தோணுதுனா இதுக்குக் காரணம் அவ சின்ன வயசுல ரொம்பவே காயப்பட்டுருப்பானு தோணுது. உங்கிட்ட ஏதாவது சொல்லியிருக்காளா”

“ஆமாம்மா. பணக்காரங்க. இவ ஒரே பொண்ணு. 4 வயசுல, அவங்க வீட்டுல வேலை செஞ்ச ஒருத்தன், பாலியல் சீண்டல்கள், உள்ளாடைக்குள்ள பொம்மைய வைச்சு அனுப்பி வெளில யார்க்கிட்டயாவது சொன்னா கொலை பண்ணிடுவேன்னு மிரட்டறது இப்படியெல்லாம் பண்ணிருக்கான். வீட்டுல பொம்மைய பார்த்து இவளாவே அப்படி செய்யறானு நினைச்சு அடிச்சுருக்காங்க. இவளுக்குப் பயம். அப்புறம் 10 வயசுல வீட்டுக்கு வந்த உறவுக்காரப் பெரிய பையன் ஒருத்தன் இவள தன் மேல படுக்க வைச்சு…..அப்பதான் இவளுக்குத் தெரிஞ்சுருக்கு அந்த செக்ரட்டரி செஞ்சது ஏதோ சரியில்லைனு….அப்புறம் இவ வளர்ந்து வரும் போது கொஞ்சம் புஷ்டியா இருப்பா போல. அப்ப பசங்க டீஸ் பண்ணினது. இப்படி, இன்னும் சில சம்பவங்கள் இதெல்லாம் பாதிச்சுருக்குனு தோணிச்சும்மா”

“ரொம்ப பாவம்டா. சம்யுக்தா. அவ ரொம்பவே பாதிக்கப்பட்டுருக்கா. அது இப்ப வேற விதமா….அடையாளச் சிக்கல்ல…வந்து நிக்குது..”

“ஓகே! அவ அச்சீவ் பண்ணறதுக்கு நான் தடையா இருக்க மாட்டேனேம்மா. இன்ஃபேக்ட் நான் அவளுக்கு ஹெல்ப் பண்ணுவேனே.”

“அங்கதான் இருக்கு பாயின்ட்! அப்புறம் அவ அச்சீவ் பண்ணதுக்கு நீதான் காரணம்னு ஆயுடுமே! சம்யுக்தாவின் கணவன் கார்த்தி! நாட் அஸ் கார்த்தியின் மனைவி சம்யுக்தா. சம்யுக்தானு தான் அறியப்படணும். ஆனா இந்தப் பிரச்சனை அவ்வளவு ஈசியா வெளில தெரியாது. அதுதான் சிக்கல்..”
  
“ம்ம்ம்…இப்ப புரியுது அவ பிரச்சனை. ஓகேமா நான் அவகிட்ட பேசிப் பேசி அவள எப்படியாவது புரிஞ்சுக்க வைக்கறேன்.”

“உன் மனசுல அவதான் அப்படினா, உன்னால முடியும்னா கண்டிப்பா நீ அவளை வெளிக்கொணர ட்ரை பண்ணு கார்த்திக். யு கேன்! ஆனா அவ முதல்ல உன்னோடு பேசணும், அவ ப்ராபளத்தை அவ புரிஞ்சுக்கணும்…ம்ம்ம் இது உன் லைஃப். உன் சந்தோஷம். ஆல்த பெஸ்ட்டா கண்ணா. நாங்க உனக்கு சப்போர்ட்டிவா ஏன் உங்க ரெண்டுபேருக்குமே சப்போர்ட்டிவா இருப்போம்..”

கார்த்தி மனம் நெகிழ்ந்து அம்மாவின் மடியில் அப்படியே படுத்துக் கொண்டான். மனதின் பலம் கூடியது போல் இருந்தது. இந்த அன்பினால் எதை வேண்டுமென்றாலும் சாதிக்கலாம் என்று மனதில் நினைத்துக் கொண்டான்.

இப்போதும் அதே போன்று அம்மாவின் மடியில்தான் படுத்திருக்கிறான்.

“அம்மா நாளைக்கு நான் சம்யுக்தாவைப் பார்க்கப் போறேன்.”

“டேய் அப்ப நாங்க?.”

“அம்மா டோன்ட் பி எக்சைட்டட்! என்னவோ பொண்ணு பாக்க போறா மாதிரி…. நான் முதல்ல போய் பார்த்துட்டு அவ எப்படி இருக்கானு பார்த்துட்டு வரேன். அப்புறம் நாம எல்லாரும் போலாம்..ஓகே?” என்று அம்மாவைத் தன் தோளோடு அணைத்துக் கொண்டான். தன் தங்கையிடம் சென்னைக்கு ஃப்ளைட் டிக்கெட் பார்க்கச் சொன்னான். வாசலில் அழைப்பு மணி ஒலித்தது. திறந்தால், சம்யுக்தாவின் பெற்றோர்!
**************************************************************************************************
சென்னையில்......
அழைப்பு மணி ஒலிப்பது கேட்டதும், சம்யுக்தா அஞ்சலையாக இருக்கும் என்று நினைத்து, க்ரில் வழி பார்த்தால் அஞ்சலையேதான்.

“அம்மா நான் ஆஸ்பத்திரிக்குப் போறேன். மதியமா வேலைக்கு வரேன்.” என்று சொல்லிவிட்டுச் சென்றாள். கதவை மூடிவிட்டுத் தன் வேலையைப் பார்க்கத் தொடங்கினாள். க்ளினிக் சென்றாள். மனம் ஓடவில்லை. கார்த்தியின் நினைவு அலைக்கழித்தது. கேஸ் ஒன்றும் பெரிதாக இல்லை. 3 மணி அளவில் வீட்டிற்கு வந்துவிட்டாள்.

வந்ததும், காஃபி குடிக்கலாம் என்று காஃபி தயார்செய்த போது கார்த்தியின் நினைவு. அவன் இங்கு என்றால் ஹாட் காஃபிதான் குடிப்பான் என்று நினைத்துக் கொண்டே கலந்த போது, அழைப்பு மணி ஒலிக்கவே, யாராக இருக்கும் என்று நினைத்து க்ரில் வழி பார்த்ததும் ஸ்தம்பித்தாள். மகிழ்ச்சி ஒருபுறம், உணர்ச்சிகள் மறுபுறம். கதவை மெதுவாகத் திறந்தாள்..

“குட் ஈவினிங்க் சம்யுக்த்! திஸ் இஸ் ஃபார் மை லவ்” என்று தான் கொண்டுவந்த ரோஜா பூவை அவளுக்குக் கொடுத்தான். வியப்பிலிருந்து இன்னும் மீளாமலேயே அவனையே பார்த்துக் கொண்டு அந்த ரோஜாவை வாங்கினாள். சத்தமே எழாமல் உதடுகள் மட்டும் “தேங்க்யு” என்ற வார்த்தைகளை உதிர்த்தது.  

“ஹேய் என்ன அதிசயம்! அப்ப பார்த்தா மாதிரியே இந்த 40 வயசிலயும் இருக்க! உன் தலைமுடி நரைக்கத் தொடங்கியிருக்கும்னு நினைச்சு வந்தா….ஓ! யு லுக் வெரி யங்க்!!” என்று கலகலவென சிரித்துக் கொண்டே அவளது பதிலுக்குக் காத்திராமல் உள்ளே வந்து உட்கார்ந்தான்.

“ஹேய்! என்ன பேச்சே இல்லை? என்னடா நம்ம வீட்டுக்குள்ள நம்ம கார்த்தி, 15 வருஷத்துக்கு அப்புறம், சொல்லாமக் கொள்ளாம இப்படி திடீர்னு கண் முன்னாடி வந்து நிக்கறானே என்ன பண்றதுனு தெரியலையோ……கம கமனு காஃபி மணக்குதே” என்று சொல்லிக் கொண்டே எழுந்து கிச்சனுக்குச் சென்றான். அவளும் பின்னாலேயே சென்றாள்.

சம்யுக்தா இன்னும் பிரமிப்பிலிருந்து மீளாமல் பார்த்துக் கொண்டே இருந்தாள். அதே கார்த்தி! இன்னும் மாறவே இல்லை. பெரிய லெவலுக்குப் போயிருந்தாலும் அதே சிம்பிள் கார்த்தி!

“என்ன சம்யுக்த் அப்படியே என்னை பார்த்துட்டுருக்க? ஓ! நான் எப்படி இன்னும் அப்படியே சின்னப் பையனா இருக்கேன்னுதானே?!!” என்று கண்சிமிட்டினான். அதே கண் சிமிட்டல்!

“சரி நீ எனக்குக் காஃபி கொடுக்க மாட்ட. நீ கலந்து கொடுத்து எவ்வளவு வருஷமாச்சு? சரி நானே உனக்கும் கலக்கறேன்” என்று போனவனின் கையைப் பிடித்துத் தடுத்தாள். அவனை பார்த்து புன்னகைத்தாள். கண்ணில் கண்ணீர் எட்டிப் பார்த்தது. கார்த்திக்குப் பரவசம். கார்த்தி அவளது கண்ணீரைத் துடைத்தான்.

“நோ க்ரையிங்க் ப்ளீஸ் சம்யுக்த்! சரி காஃபி கொண்டுவா. குடிச்சுக்கிட்டே பேசலாம்…”

அவள் இருவருக்கும் காஃபி கொண்டுவந்து அவன் கையில் கொடுக்கவும், அவள் தன் கையில் வைத்திருந்த அந்தக் கோப்பையை கார்த்தி பார்த்ததும்,

“ஹேய் அப்ப நீ என்னை டெய்லி முத்தமிட்டுக்கிட்டுதான் இருந்திருக்கனு சொல்லு.” என்று அவள் அருகில் காதருகில் ரகசியம் பேசினான். சம்யுக்தாவிற்கு அவளையும் அறியாமல் உடல் சிலிர்த்தது. அவளுக்கு அப்போதுதான் புரிந்தது, தன் கையில் கார்த்தி முன்பு பயன்படுத்திய கப். அவளுக்கே தெரியாமல் கார்த்திதான் அவள் நினைவுகளை இத்தனை வருடங்களாக ஆக்ரமித்துக் கொண்டிருந்திருக்கிறான்! மெதுவாக இவ்வுலகிற்கு வரத் தொடங்கினாள்.

“வெல்..சம்யுக்த் ஜோக்ஸ் அபார்ட்……நீ எப்படியிருக்க?”

“குட்!”

“தாங்க் காட். பாசிட்டிவ் ரிப்ளை”

“பாசிட்டிவா நினைக்கற நீயே, நான் அப்படியே இருப்பேன்னு நினைச்சியோ?” மெதுவாக சம்யுக்தாவின் குரல் எழுந்தது. கார்திக்கு இது அடுத்த பாசிட்டிவ் அறிகுறியாகப் பட்டது.

“ஹேய் நெவர்! காலமும், உன் அனுபவமும் உன்னை மாற்றும்னு எனக்கிருக்கும் நம்பிக்கை. இப்பவும் உனக்கு அடையாளம் இருக்கு சம்யுக்த்! சம்யுக்தானா எல்லாரும் அறியும்படியான நீ ஒரு நல்ல கைனேக்காலஜிஸ்ட்னு பலருக்கும், எனக்கும் தெரியும். இருந்தாலும் உன் மனசுல இருக்கற…ம்ம்ம் ஸாரி.....”

அவளுக்கு வியப்பு. “பரவல்ல…சொல்லு கார்த்தி…..நான் ஹர்ட் ஆகிடுவேனோனு நீ தயங்கற இல்லை? ஐ வோன்ட்!

“இப்பவும் நீ பிம்பம் போட்டு வைச்சுருந்த அந்த ஐடென்ட்டி இல்லைன்ற அந்தக் குறை..…என்ன எனக்கு எப்படித் தெரியும்னு பார்க்கறியா. உனக்கு மெயில் கொடுத்தது எல்லாமே உன்னை இந்த ஃபீலிங்க்லருந்து வெளில கொண்டு வரத்தான். உன்னோடு நிறைய பேசறது போலத்தான் கொடுத்தேன். நீ ரிப்ளை பண்ணலை. அது நான் கெஸ் பண்ணினதுதான். நீ டிப்ரெஸ்ட்னு தோணிச்சு. ரொம்ப கூடிடக் கூடாதுதுனு நீ எப்படி இருக்கனு உன்னை பத்தித் தொடர்ந்து இன்ஃபர்மேஷன் கேதர் பண்ணிக்கிட்டேதான் இருந்தேன். இடையில ரெண்டு முறை இந்தியா வந்தேன். ஆனா, உன்னை தூரத்துல இருந்து பார்த்துட்டுப் போய்ட்டேன். நீ அப்ப இன்னும் மீண்டு வந்துருக்கலை…”

“ஓ! மை காட்! ரெண்டு முறை வந்தியா? முன்ன மாதிரி இல்லைதான். உன்கிட்ட நான் அப்படிப் பேசினதுக்கு அப்புறம் ரொம்ப மன அழுத்தம் வந்துச்சு. என் மனசு என் அறிவு சொன்ன அறிவுரைய கேக்கல. கிட்டத்தட்ட ஒருவிதமான ஐடென்டிட்டி பிரச்சனைனு தெரிஞ்சுச்சு. அதுல என் ஃபீமேல் சாவனிசம் சேர்ந்துருச்சு. அதனால டிப்ரஷென். வேலைல பிரச்சனை இல்லைனாலும், 2 வருஷம் கஷ்டப்பட்டேன். எனக்கு என் பிரச்சனை புரிஞ்சுது. வந்தனா சைக்கியாட்ரிஸ்ட் தெரியும்ல? அவங்க கன்சீவ் ஆனதும் கன்சல்டேஷன், பிரசவம் எல்லாம் அப்ப நான் வேலை பார்த்த கிளினிக்லதான். எனக்குப் பழக்கமானாங்க. அவங்களாவே என்கிட்ட பேசிப் புரிஞ்சுகிட்டாங்க. ‘மருந்து எதுவும் வேண்டாம், எப்ப நீ உன் பிரச்சனைய புரிஞ்சுகிட்டயோ, ஜஸ்ட் கவுன்சலிங்க் போதும். உனக்குத் தோணும் போதெல்லாம் எங்கிட்ட பேசுனு’ சொல்லி நிறைய பேசினாங்க. உணர வைச்சாங்க. இவ்வளவு வருஷத்துல நான் அதுலருந்து மீண்டுட்டேன்னு சொன்னாலும், எனக்கு இன்னும் கொஞ்சம் நான் நினைச்ச என் அடையாளத்தை இழந்த வலி உள் மனசுல இருக்கு.”

“உன்கிட்ட ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே? சொல்லட்டா? உங்கிட்ட என்னால எதையும் மறைக்க முடியல சம்யுக்த்”

அவளுக்கு ஒரு புறம் மகிழ்வாகவும், பெருமையாகவும் இருந்தாலும், இப்போது இப்படியான கார்த்திக்குத் தான் சமமானவளா என்று தோன்றாவும் செய்தது. கில்டி ஃபீலிங்க் வேறு. சுதாரித்துக் கொண்டு, “சொல்லு கார்த்தி. இப்போது மனம் நிறையவே பக்குவப்பட்டுருச்சு.”

“உனக்கிருந்த பிரச்சனை அவ்வளவு ஈசியா வெளில யாருக்கும் தெரிய வராது. அதுதான் பெரிய பிரச்சனை. நான் எங்கம்மாகிட்ட பேசினேன். அவங்கதான் கிளியர் பண்ணினாங்க. உடனே வந்தனாவ காண்டாக்ட் பண்ணினேன். வந்தனா என் சீனியர், நல்ல ஃப்ரெண்டும் கூட. அவங்களுக்கு மெயில் கொடுத்து பேசினேன். உன்னை எப்படியாவது காண்டாக்ட் பண்ணச் சொல்லி…உன்னை உன் பிரச்சனைலருந்து வெளில கொண்டுவரணும்னு. அப்படித்தான், இப்ப நீ சொன்னது. உன்னாலயும் என்னை மறக்க முடியாதுனு தெரியும், நான் உன் மனசுல இருக்கேன்னும் தெரியும். ஆனா அத தடுத்தது எதுனா, நீ உன் மனசுல உருவாக்கி வைச்சுக்கிட்ட ஒரு அடையாளம், அந்தச் சிக்கல், அதனால ஏற்பட்ட தாழ்வுமனப்பான்மைதான்”

“அப்ப இருந்த அதே அமுக்குத் தனம் உங்கிட்டருந்து போகலை. அது சரி நீ இந்த ஆராய்ச்சி பண்ணினதுக்கு நான்தான் பின்புலம்னு எல்லாம் பேசியிருக்க! எப்படி அது? இன்னிக்குத்தான் டீடெய்ல்டா வாசிச்சேன் நியூஸ!” என்று சொல்லிப் புன்னகைத்துவிட்டு தன் கைவிரல்களை மடக்கி விரித்து அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். சம்யுக்தா இப்போது தெளிவாகப் பேசினாலும், இன்னும் ஏதோ ஒன்று அவளைத் தயங்க வைக்கிறது என்பதை கார்த்தி உணர்ந்தான்.

"நீ நிச்சயமா மறந்துருக்கமாட்ட? நினைவிருக்கா நாம, நீ கைனே ஆகணும்னும், இந்த ஸ்டெம் செல் ஆராய்ச்சில நாம ரெண்டு பேரும் ஈடுபடணும்னு சொன்னது அதப் பத்தி டிஸ்கஸ் பண்ணினது....இப்ப நான் பண்ணிருக்கறது ஒரு தொடக்கம்தான். நீ இன்னும் நிறைய பண்ணலாம்....உன்னால முடியும்"

"...................." அவள் யோசிக்கத் தொடங்கினாள்.

“லு சம்யுக்த் லெட் அஸ் கம் டு அவர் லைஃப்.” என்று சொல்லி அவளது விரல்களை தன் விரல்களுடன் கோர்த்து இரு கைகளையும் சேர்த்துக் கொண்டான்.

“இப்ப நீ அல்மோஸ்ட் உன் பிரச்சனைலருந்து வெளில வந்துட்டல்ல. மிச்சம் இருக்கற உன் தாழ்வுமனப்பான்மை, தயக்கம் எல்லாம் உன்னை விட்டுப் போயிரும். நாம சேர்ந்து நம்ம வாழ்க்கையைத் தொடங்குவோம். என் கூட என் மனைவியா இருக்கறதுனால உன் அடையாளத்தை நீ இழக்க மாட்ட. நீ சம்யுக்தாவாகவே இரு. நீ இழந்ததா நினைக்கற அந்த அடையாளத்தையும் நீ பெறலாம். உன்னால முடியும்! உன் இடம் உனக்கானதுதான். எனக்கு உன் அன்பு மட்டும் போதும். ஏன்னா நீ ரொம்ப நல்லவள். நீ நிறைய ஏழைப் பெண்களுக்கு ஃப்ரீயா சிக்கலான பிரசவம் பார்க்கறன்றதும் தெரியும்.  என் அன்பும், ஆதரவும் எப்போதும் உனக்கு உண்டு."

அவளுக்குப் புரிந்தது தன்னை இத்தனை வருடங்கள் இயக்கியது கார்த்தியின் நினைவும் அவனது எண்ணங்களும்தான் என்று. "யெஸ் கார்த்தி, உன்னோட எண்ணங்கள் என்னையும் அறியாம எனக்குள்ளும் பதிஞ்சுருந்துருக்கு. அதுதான் இதுக்கெல்லாம் காரணம்னு புரியுது"

அவள் கைகள் அவனது விரல்களை இறுகப் பற்றிக் கொண்டன. அவள் கண்களிலிருந்து வழிந்த நீர் கார்த்தியின் கைவிரல்களை நனைத்தது. கார்த்திக்கு மெய் சிலிர்த்தது! அவள் தலையை வருடி அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டான்.

கண்களைத் துடைத்துக் கொண்ட சம்யுக்தா, கார்த்தியிடம் ‘ஒரு நிமிடம் என்று சைகையால் உணர்த்திவிட்டு, தன் அலைபேசியை உயிர்ப்பித்தாள்.

“அஞ்சலை உங்க பொண்ணையும், அந்தப் பையனையும் எங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வாங்க. இங்க ஒரு விஐபி இருக்காரு. அவர்கிட்ட பேசினா அழகா பேசி கிளியர் பண்ணிடுவாரு…” என்று சொல்லி கார்த்தியை ஓரக் கண்ணால் பார்த்துப் புன்னகைத்தாள். கார்த்திக்குத் தன்னிடம் உரிமை கொண்டாடும் தன் பழைய சம்யுக்தாவைப் பார்த்த சந்தோஷம். சம்யுக்தா மீண்டும் அலைபேசியில் எண்களை ஒற்றிட அவளைப் பேச விடாமல் தடுத்த கார்த்தி, தன் அலைபேசியை எடுத்து

“எல்லாரும் புறப்பட்டு வாங்க” என்று தன் அம்மாவிடம் சொல்லிவிட்டு, சம்யுக்தாவை அணைத்துக் கொண்டு, “உங்க அம்மா அப்பா இப்ப எங்கருக்காங்க தெரியுமா?” அவள் பதில் சொல்லுமுன், “தில்லில எங்க வீட்டுல” என்று சொல்லி அவளை வியக்க வைத்து, அவள் தோளில் முகம் புதைத்துக் குறும்புச் சிரிப்புடன், இறுக அணைத்துக் கொண்டான். 
                   
                               முற்றும்...

-------கீதா




71 கருத்துகள்:

  1. நினைவுகள் தான் வழி நடத்தி செல்கின்றன... அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி டிடி தங்களின் கருத்திற்கு. ஆம் பல நினைவுகள் நமக்கு உத்வேஅம் அளித்து ஊக்கப்படுத்தி முன்னோக்கிச் செல்லவும் உதவும்...

      நீக்கு
  2. மிகப் பக்குவமாக பிரச்னையிலிருந்து வெளிப்பட்டிருக்கின்றாள் - சம்யுக்தா!..

    இனி - ஆனந்த வானில் அந்த இரு கிளிகளும் பறக்கட்டும்!..

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. முடிவு இருவரும் சரியாக புரிந்து கொண்டு இணைந்தது நன்று
      வாழ்க வளமுடன்

      நீக்கு
  4. எல்லாமே ஐடியலாக அணுக/ இருக்க விரும்பும் ஒரு கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம் ஜிஎம்பி சார். ஆனால் இது நடக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது அட்லீஸ்ட் ஒரு சிறு விகிதம். அந்த சிறு விகிதத்தைத்தான் சொல்லியிருக்கென் சார். இதனை ஐடியல் என்று சொல்வதற்கில்லை..இதிலும் பிரச்சனைகள் வரலாம்....இனியும் வரலாம்...

      மிக்க நன்றி சார்

      நீக்கு
  5. சுவராஸ்யமான அதே நேரத்தில் டென்சனை கூட்டி இறுதியில் சுகமாக முடிந்திருக்கிறது....கார்திக்கா இருக்க போய் இவ்வளவு பொறுமையாக இருந்திருக்கிறாம் இதுவே மதுரைத்தமிழனாக இருந்திருந்தால் இன்னொரு பெண்ணை காதலித்து கல்யாணம் பண்ணி குழந்தையை தூக்கி கொண்டு பழைய காதலியை பார்க்க போய் இருப்பான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹ்ஹ்ஹ் டிப்பிக்கல் மதுரை சகோவின் கருத்து!!! மிக்க நன்றி மதுரை சகோ.....வேறொரு முடிவும் வைத்திருந்தேன்...அதாவது பொதுவாக மலையாளத் திரைப்படங்கள் முடிவது போன்றான முடிவு ஆனால் மனம் அதை ஏற்கவில்லை அதனால் இந்தமற்றொரு முடிவைச் சொல்லி முடித்துவிட்டேன். இதிலும் இரு பாகங்கள் கட் பண்ணித்தான்...போட்டேன்...

      மிக்க நன்றி சகோ..

      நீக்கு
  6. நினைவுகள் மூன்று பாகத்தை தொடர்ந்து வாசித்தேன்.
    அருமையான கதை கீதாக்கா...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி குமார் தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும்

      நீக்கு
  7. முடிவு நன்று பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அசோகன் சகோ தங்களின் பாராட்டிற்கு

      நீக்கு
  8. முடிவு நல்லதுதான், ஆனாலும் சம்யுக்தாவின் மனம் சரியில்லை, இப்படி மனநிலையோடு ஒரு பெண் இருப்பின் வாழ்க்கையை நல்லபடி நடத்துவது கஸ்டமே. தன் கணவராகப் போகிறவர் பாஸ் ஆகிட்டார்ர் தன்னால முடியவில்லை எனும் ஒரே காரணத்துக்காக 15 வருடம் வெயிட் பண்ணியவ... வாழ்க்கையில் ஏற்படும் குட்டிக் குட்டித் தோல்விகளை மட்டும் எப்படி ஈகோ இல்லாமல் ஏற்று குடும்பத்தை நல்லபடி கொண்டு போவா?.. இப்படியான பெண்களால் வாழ்நாள் முழுக்க கஸ்டம்தான், பாவம் கார்த்திக்கும் அவர் குடும்பமும். கார்த்திக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்:(.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லையே அதிரா இப்போதுதான் அவள் தனது பிரச்சனையைப் புரிந்து கொண்டுவிட்டாளே! அவளது பிரச்சனையே ஒரு விதமான அடையாளச் சிக்கல்தானே. அவளது சிறு வயது நிகழ்வுகள்....அதிலிருந்து அவள் மீண்டு வந்துவிட்டாளே...15 வருடத்தில் அதுதானே மாற்றம்...அவளுக்கு அவளது தோழி வந்தானா எனும் சைக்கியாட்ரிஸ்ட் ..உதவி....மட்டுமல்ல இது மருந்து சார்ந்த பிரச்சனை அல்லாததால் தெளிவாகிவிட்டது. அதனால்தான் இத்தனை வருடங்கள்....இன்ஃபேக்ட் இருவரும் மகிழ்வாக இருக்கிறார்கள்....நல்ல புரிதலுடன்.....அதிரா நாமளும் போய் பார்த்துட்டு வருவோமா...ஹிஹி இல்லைனா தேம்ஸ்கு வரச் சொல்லறேன் எப்படி??!!!

      மிக்க நன்றி அதிரா.....

      நீக்கு
    2. ஓகே ஓகே போய்ப் பார்ப்போம் அப்பூடியே சகோ ஸ்ரீராமின் அந்த மரத்தையும் பார்த்துப் படமெடுத்து வருவோம்:)..

      நீக்கு
    3. அதிரா அந்த முருங்கை மரம் தானே? இல்லை உச்சா அடிக்கும் மரமா???!!!! ஹஹஹ்

      நீக்கு
    4. நோஓஓ முருங்கையில் கம்பளிப்பூச்சி.. மசுக்குட்டியாம்ம்ம்ம்ம்ம்:)

      நீக்கு
  9. இந்த சம்யுக்தாக்கள் எல்லாம் அந்த நாளில் எங்கே போயிருந்தார்கள்? அதாவது 1976இல்?
    - இராய செல்லப்பா நியூஜெர்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரியலை செல்லப்பா சார்....1976 இங்கு வரவே இல்லையே சார்....இப்போதும் 15 வருடங்களுக்கு முன் நடந்ததாகத்தானே போகிறது கதை.....விளக்கமாகச் சொன்னால் எனக்கு உதவியாக இருக்கும் சார்....

      மிக்க நன்றி சார்...

      நீக்கு
    2. சார் நீங்கள் சொன்னவற்றைத் திருத்தியிருக்கிறேன். முந்தைய பதிவில் சம்யுக்தாவின் கதாபாத்திரத்தோடு முடிந்தது அது இங்கு கார்த்தியைப் பற்றிச் சொல்லிவிட்டு...அங்கு தொடர்கிறது...போல் சொல்ல வந்தேன்....அழைப்பு மணி வைத்துத் தொடர்வது போல்....மிக்க நன்றி சார்...

      நீக்கு
  10. கதையின் கருத்தை தாண்டி, எழுதியவிதம், நகர்த்திய விதம்.... உரையாடல்கள் அனைத்துமே சூப்பர்... கதாசிரியர் கீதாவுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! தாங்கூஊஊஊஊ....அப்போ அதிரா ஒரு பரிசு அனுப்புங்கோ....ஹஹஹஹ மிக்க நன்றி அதிரா...

      நீக்கு
    2. பூரிக்கட்டை நிறைய ஸ்டாக் இருக்கு அதை பரிசா அனுப்பவா? அடிக்க அல்ல

      நீக்கு
    3. வெயிட் பண்ணுங்கோ அதிராவீர்கு தங்க மனசு அதனால் அவர் தன்னுடைய வைர நெக்லஸை உங்களுக்கு பரிசாக அனுப்புவார். அது போதாது ஏன்றால் சென்னையில் வீடு வாங்கி கேளுங்க அதையும் தருவார் அதுவும் போதாது ஏன்றால் நல்ல கார் வாங்கி தருவார். . அதிரா நான் சொல்வது சரிதானே?

      நீக்கு
    4. பரிசுதானே.. என் செக்கரட்டறிக்கு பவுண்ட்ஸ் அனுப்பிட்டேன்ன்.. அவ நல்ல பரிசாக வாங்கிக்கொண்டு வந்து தருவா, பாவிக்க முன் படமெடுத்துப் போடுங்கோ:)..

      நீக்கு
    5. மதுரை சகோ...பூரிக்கட்டை இப்ப பரிசா அனுப்புங்க....அப்புறம் திரும்ப மொய் வைச்சுடறோம்எங்க சகோதரிக்கு அதான் உங்க வீட்டு மாமிக்கு... என்ன நான் சொல்லறது சரிதானே!!ஹிஹிஹிஹி

      நீக்கு
    6. அதிரா உங்க செக்ரட்டரிகிட்ட கேட்டுக்கறேன்....

      ஏஞ்சல் உங்களுக்கு அதிரா பரிசு கொடுக்க பவுன்ட்ஸ் அனுப்பிட்டாங்களாமே....சரி சரி படம் எடுத்துப் போடறேன்..ஹிஹிஹி

      நீக்கு
    7. அதிரா மதுரை சகோ சொன்னா மாதிரிதானே பரிசுக்கு பவுன்ட்ஸ் உங்க செக்ரட்டரிக்கு அனுப்பிருக்கீங்க....ச்சே எனக்கெலாம் இப்படி ஒரு செக்ரட்டரி இல்லையே...ஹ்ஹஹ்

      நீக்கு
    8. ஹையோ இல்லை இல்லை ஒண்ணுமே வந்து சேரல இன்னும் வந்தா உடனே அனுப்பிருவேன் :)

      நீக்கு
    9. ட்றுத்துக்கு... கனவிலயும் பூரிக்கட்டைதான் வருதூஊஉ.... அவ்ளோதூரம் பூரிக்கட்டையால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது புரியுது:) இனி மாமியிடம் சொல்லோணும் உலக்கையை ஊஸ் பண்ண சொல்லி:)

      நீக்கு
  11. //வீட்டுல பொம்மைய பார்த்து இவளாவே அப்படி செய்யறானு நினைச்சு அடிச்சுருக்காங்க. //

    இது முழுக்க பெற்றோர் தவறே ..அந்த குழந்தை அவளாகவே தெரியாமல் வைத்திருந்தாலும் இவர்கள் அதை தவறு என பொறுமையுடன் சொல்லி திருத்தி வளர்த்திருக்கணும் ..சிறு வயது காயங்கள் பெரிய வயதில் நல்ல உயர் வந்தபின்னும் தொடர்கிறது என்றால் அந்த பிள்ளை சம்யுக்தா கால முழுதும்கில்ட்டி கான்சியசில் வளர்ந்திருக்கிறாள் என்றே நினைக்கிறன் ..நான் ஒன்று கேட்கிறேன் அப்படி அறியா வயதில் ஏதேனும் நடந்தால் தான் என்ன ? இதற்க்கு தன்னையே குறுக்கி அவமானத்தில் சுருங்கணுமா ? ..அப்பிள்ளையின் பின்போக்கான குணத்துக்கு முழு காரணம் பெற்றோர் ..அடுத்தது ஒரு பெண் வளரும் பருவத்தில் புஷ்டியாக இருப்பதும் மெலிவாக இருப்பதும் பருக்கள் acne பிரச்சினைகள் வருவதும் இயல்பே ..பெரும்பாலோனோர் நம் பிள்ளைகளுக்கே கருப்பு அசிங்கம் பாரு அசிங்கம் குண்டு அசிங்கம் என வீட்டில் அவங்க முன்னாடி பேசுவது அவர்கள் மனதில் விஷ வேர்கள்பதிந்து வளர்ந்து வெளியிடங்களில் விஷ பூக்களை தூவ செய்யுது அது பாவம் சம்யுக்தா போன்றோர் கூனி குறுக சுய பச்சாதாபத்தில் விழ காரணமும் ஆகிறது :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஏஞ்சல்! இதில் சொல்லப்பட்டிருக்கும் பாலியல் துன்பங்கள் அனைத்தும் நிகழ்ந்தது உங்கள் நடுவில் உலா வரும் ஒரு பெண்ணிற்கே.அவளது பெற்றோருக்கும் அத்தனை விழிப்புணர்வு கிடையாது...எல்லா பெற்றோரும் நாம் சிந்திப்பது போல் சிந்திப்பதில்லையே ஏஞ்சல். இப்பொதும் கூட படித்த பெற்ரோருக்கே பல உளவியல் ரீதியானப் பிரச்சனைகளை அணுகத் தெரியவில்லை....அது கொஞ்சம் கடினம்தான்...என்ன செய்ய..அந்தப் பெண் அவள் மிகவும் தைரியம் மட்டுமில்லை, எருமை மாட்டுத் தோல் எனவும் சொல்லலாம்...துடைத்துத் தள்ளிவிட்டுத் தன்னை மகிழ்வாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் உள்ளவள். இதையே ஒரு வேளை அப்பெண் தைரியமற்று இருந்தால் என்னாகும் என்றும், சமீபத்தில் கேட்ட சில டைவெர்ஸ் கேசில் பேசப்பட்ட பெண்ணியம் சார்ந்த அடையாளச் சிக்கல் என்ற உளவியல் ரீதியான பிரச்சனையும் சேர்த்துக் கலந்து கட்டி இதில் சொன்னேன்....

      ஆம் சம்யுக்தா போன்றோர் பாவமே....அதனால்தான் அவளைத் தாங்கும் ஆனால் அதே சமயம் அவளை சுயசிந்தனாவாதியாக அவளது அடையாளத்துடனேயே இருக்க ஏற்றுக் கொள்ளுவதாக கார்த்திக் கதாபாத்திரம்....ஆம் நீங்கள் சொல்லியிருப்பது போல் கருப்பு, சிவப்பு அழகில்லை என்று இதெல்லாம் நான் மேல் சொன்ன பெண்ணிற்கு நடந்ததே....

      மிக்க நன்றி ஏஞ்சல்....உங்களிடம் எதிர்பார்த்த கருத்து இதே!!!

      நீக்கு
    2. உண்மைதான் கீதா இக்கால பிள்ளைகளைவிட பெற்றோருக்கே கவுன்சலிங் மிக அவசியம் ..
      அந்த காலத்து பெற்றோர் வயிற்றில் நெருப்பு கட்டிக்கிட்டிருக்கேன் கற்பு அது இதுன்னு சொல்லியே பிள்ளைங்களை மேலே வர விடாமா நந்தி போலிருந்திட்டாங்க ,,கார்த்திக் சம்யுக்தாவை அவளாகவே அதாவது அவளது நிறை குறைகளுடன் ஏற்றுக்கொள்வது பெருந்தன்மை ....இவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரணம் சம்யுக்தாவின் பெற்றோர் மற்றும் உறவினர் அவள் சுற்று வட்டாரம் அதில் இருந்த அவளை bully செய்த சக மாணவர்கள் ஆக மொத்தம் அழகான வாழ்க்கையின்ஒரு பக்கம் இருந்த சில நெகட்டிவ் காரெக்டர்ஸ் ஒரு அப்பாவி பெண்ணின் மனதை வாழ்க்கையை 15 வருடம் வீணாக்கிவிட்டனர் ..
      karthi should have introduced his mum to samyukthaa earlier ..she would have been a good friend and an experienced and trusted adviser.

      நீக்கு
    3. karthi should have introduced his mum to samyukthaa earlier ..she would have been a good friend and an experienced and trusted adviser.//

      யெஸ் ஏஞ்சல் கதையில் சொல்லியிருந்தேன்......அதை எடிட் செய்துவிட்டேன் இன்னும் 2 பாகங்களுக்கும் மேலே போயிடுமேனு......அவள் ரிசல்ட் வந்ததும் அவர்களது கான்வெர்சேஷனை சொல்லியிருந்தேன் ஆனால் பின்னர் எடிட் செய்து அதைச் சுருக்கமாகக் கார்த்தியிடம் அம்மா சொல்லுவது போல் கொண்டு சென்றுவிட்டேன்....ஸ்ரீராமுக்குச் சொன்ன பதிலிலும் இதைக் குறிப்பிட்டுள்ளேன் ....மிக்க நன்றி ஏஞ்சல்....

      இப்படியான கருத்துகள் தான் நமக்கு எல்லோருக்குமே ஒரு உந்து சக்தி இல்லையா எழுதுவதற்கு....மிகவும் சந்தோஷம் இப்படியான நல்ல நட்புகளையும், விமர்சனங்களையும் காணும்போது....

      நீக்கு
  12. கதையை மிக அழகாக நகர்த்தி அமெரிக்கா டு டெல்லி சந்தோஷமான முடிவுடன் நிறைவு செய்ததற்கு ஒரு பொக்கே
    அந்த உளவியல் விஷயங்கள் பற்றி இன்னும் அதிகமாக தனி பதிவில் எழுதுங்க கீதா ..பாலியல் சீண்டல்கள் வன்முறைகள் பணக்கார படித்த குடும்பங்களிலேயே இப்படி நடக்குது என்றால் ஏழை எளியோர் படிக்காத மக்கள் வீட்டு பிள்ளைகளின் நிலை :( வேதனையும் கேள்விக்குறியும் தொக்கி நிற்கின்றது .இதற்க்கு ஒரு தீர்வே இல்லையா :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப நன்றி ஏஞ்சல்! பொக்கேவுக்கு! நிச்சயமா இந்த அடையாளச் சிக்கல் பத்தி எழுதப் போறேன்...நான் மருத்துவர் கிடையாது...ப்ரொஃபஷனல் சைக்காலஜிஸ்டும் கிடையாது....அனுபவம் மற்றும் வாசித்த சில புக்ஸ் தீசிஸ் பேப்பர்ஸ் வைச்சு ...எழுத நினைச்சுருக்கேன்...ஏழைப் பிள்ளைகள் அந்தோ பரிதாபம்தான்....தீர்வு??? அது வளர்ப்பு முறையில் தான் இருக்கிறது...வளர்ப்பு முறைனு பார்த்தா பெற்றோரின் வளர்ப்பு முறை சுற்றுப்புறம் எல்லாம் அடங்கும்...

      நீக்கு
  13. ஆண்டுகள் பல கடந்தாலும் மாறாத அன்பு ஒன்று சேர்த்து விட்டது.
    கார்த்தியின் அம்மாவின் புரிதல் அருமை.
    சம்யுக்தாவின் அடையாளம் இழக்கவில்லை அதை மீண்டும் பெறலாம் என்ற கார்த்தியின் அன்பும் ஆதரவும் அருமை. இப்படி புரிதல் இருந்தால பல குடும்பங்கள் பிரியாமல் இருக்கும்.

    கீதாவுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். அடுத்த கதை எப்போது என்ற ஆவலுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிக்கா முதலில் தங்களுக்கு மிக்க நன்றி....கதையில் நான் என்ன சொல்ல நினைத்துச் சொல்ல வந்தேனோ அதைத் தாங்கள் உள்வாங்கிக் கொண்டமைக்கு...யெஸ் அக்கா பல குடும்பங்கள் பிரியாமல் இருக்கும்....இரு கைகளும் தட்ட வேண்டுமே...இல்லையா....வாழ்த்துகளுக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி...அதுவும் அடுத்த கதை எப்போது என்று ...ஆஹா!! மிகவும் மகிழ்ச்சி அக்கா...தங்களின் ஊக்கத்திற்கு..முயற்சி செய்கிறேன்....மிக்க நன்றி அக்கா...

      நீக்கு
  14. கதையின் முடிவு சந்தோஷமே ஆனாலும் ..மனதில் தோன்றியதை கூற விரும்புகிறேன் ..கார்த்தி போன்ற நல்ல பரந்த மனப்பான்மை கொண்டவரின் வாழ்க்கையை 15 வருடங்கள் சம்யுக்தா வீணடித்தது எவ்விதத்தில் நியாயம் .சம்யுக்தாவின் ஈகோ இத்தனை காலம் அவரை தடுத்து வைத்தது சரியில்லை ...சம்யுக்தா இனியாவது பாசிட்டிவாக மட்டுமே வாழ்க்கையை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதே என்பதே எனது விருப்பம் ..சம்யுக்தாகள் மட்டுமல்லா சுய பச்சாதாபத்தில் வீழும் அவசர குணமுள்ள எந்த பெண்ணும் வாழ்க்கையில் சாதிப்பது மிக கடினம் ..சிறு தோல்விக்கும் துவள்பவர்கள் எப்படி வாழ்க்கையில் முன்னேற இயலும் அதுவும் மக்களை காக்கும் பொறுப்பில் உள்ளோர் .கார்த்தி உண்மையில் ஒரு குறிஞ்சி மலர் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது கார்த்தியை ரொம்ப பிடிச்சிப்போச்சா :) நமக்கு பிடிச்சவங்களுக்கு சின்ன கஷ்டம் வந்தாலும் நமக்கு கோபம் வரும் அது மாதிரிதான் சம்யுக்தாவை கொஞ்சம் திட்டினேன் :) ஆனால் சந்தோஷமான முடிவு இனியாவது காதல் புறாக்கள் கவலையின்றி பறக்கட்டும்

      நீக்கு
    2. ஆமாம் ஏஞ்சல் உண்மை!!! இந்த உளவியல் பிரச்சனைகளை , நாம் சொல்லுவோமே ஏஞ்சல், நீங்கள் கூட அடிக்கடி இந்த அன்பைப் பற்றி எழுதுவீர்கள்!!! குறிப்பாக நட்சத்திரக் குழந்தைகளைப் பற்றி எழுதும் போது....கிட்டத்தட்ட அதேதான் அவர்களுக்கும் உளவியல் பிரச்சனைகள் வருதே....அன்பு ஒன்னுதான் ஏஞ்சல் எதையும் வெல்கிறது...கொஞ்சம் கடினமான விஷ்யம்தான் ஆனால் அது ஒன்னுதான் வெல்லும்....இவர்களை எல்லாம் வெளிக் கொணர....ஆம் அவர்கள் கவலையின்றி பறக்கட்டும். பறப்பார்கள்...இது சமீபத்தில் கேள்விப்பட்ட சில டிவோர்ஸ் கேஸ்கள் வைத்து பல சம்பவங்களையும் குலுக்கிப்போட்டு எழுதியதுதான்...மிக்க நன்றி ஏஞ்சல்...

      நீக்கு
  15. அப்புறம் கார்த்தி போன்றோர் எப்பவும் கோழி குஞ்சுகளை காக்கும் தாய் போல சம்யுக்தாகளை பொத்தி பொத்தி காக்க கூடாது அது பலவீனமான சம்யுக்தாக்களை உருவாக்கும் ..சிறகை விரித்து பறக்க ஒரு இடத்தை மட்டும் காட்டணும் இல்லைன்னா கார்த்தி போன்றோர் 15 வருடங்கள் காத்திருக்க வேண்டியதுதான் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யெஸ் ஏஞ்சல் மிகவும் சரியே!!! நம் குழந்தைகளையுமே இல்லையா....இங்கு இது காதலாகிப் போனதாலும், கார்த்திக்கு முழு நம்பிக்கை இருந்ததாலும்....முடிந்தது....அவன் இப்போது அவளைத் தனித்தன்மையுடன் இருக்கச் சொல்லித்தானே இணைகிறான்..!!

      நீக்கு
  16. நல்லதொரு முடிவு.

    சிறப்பான முறையில் கதையை முடித்தது பிடித்திருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட்ஜி! தங்களின் கருத்திற்கு. எனக்கும் சுபம் போட்டால்தான் மகிழ்ச்சி வேறு முறையில் ஒரு முடிவும் வைத்திருந்தேன்...ஆனால் என் மனமே அதற்கு இடம் கொடுக்கவில்லை....மிக்க நன்றி வெங்கட்ஜி!!

      நீக்கு
  17. பாஸிட்டிவ். ஆனாலும் கார்த்தி பேசும்போது எங்கே ஸம்யுக்தா முருங்கை மரத்தில் ஏறிடுவாளோன்னு பயமும் இருந்தது. ஸம்யுக்தாவின் பிரச்னையை அழகாகி சொல்லியிருக்கீங்க. சிக்கலான பிரச்னை. அன்பு மட்டுமே காப்பாற்றுகிறது.ஸம்யுக்தாவின் அப்பாம்மா அங்கே என்ன பேசினாங்கன்னு சொல்லலையே... புரிஞ்சிக்க வேண்டிய விஷயம் அது இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம்.

      ஸ்ரீராம், ஏஞ்சல், உங்களது இருவரது கேள்விகளுக்கும் பதில்கள் அதாவது கார்த்தி தன் அம்மாவை சம்யுக்தாவிற்கு இன்ட்ரொ பண்ணியிருக்கணும்...பண்ணியபடி கதையில் உண்டு. இருந்தது. சம்யுக்தா கார்த்தியின் அம்ம்மா அவளுடன் பேசுவதாக அதாவது ரிசல்ட் தெரிந்ததும், சம்யுக்தா தன் முடிவைச் சொல்லுவதாக வருகிறது. அதனைச் சுருக்கிக்ச் சொல்லிவிட்டேன். எடிட்டிங்கில் கட் செய்துவிட்டேன். அதற்கு முன்பே அவர்கள் இருவரும் பேசுவது இருந்தது அதையும் கட்ஷார்ட் பண்ணிட்டேன்...அதைத்தான் கார்த்தியின் அம்மா கார்த்தியிடம் பேசுவதாக...விளக்குவதாக.....அது போல ஸ்ரீராம் சொல்லுவதையும் எழுதி வைத்திருந்தேன். அதையும் எடிட் செய்துவிட்டேன். சென்னையில் இவர்கள் இருவரும் பேசுவதாகவும்,. தில்லியில் அவர்கள் தங்கள் பெண்ணைப் பற்றிப் பேசுவதாகவும், அவளது சிறு வயதில் தங்களுக்குத் தெரியாமல்போனது என்றும், இப்போது அதை உணர்வதாகவும், கார்த்தியின் அம்மா அவர்களுக்கு விளக்குவதாகவும், இப்படி எழுதி வைத்திருந்தேன். இன்னும் 2 அல்லது 3 போவதாக இருந்தது. அதனால் எல்லாம் கட் செய்து நீங்கள் எல்லோரும் வெரி மெச்சூர்ட் பீப்பிள் (உண்மை உண்மை உண்மை!!!! நம்புங்கப்பா என் கணிப்பை!!..) அதனைப் புரிந்து கொண்டுவிடுவீர்கள் என்று ஹிஹிஹிஹி......கட் பண்ணிவிட்டேன்...இப்போது தோன்றுகிறது இன்னும் 2 பாகமாகப் போயிருந்தாலும் ஓகே தானோ என்று....சரி பரவால்ல...இனி கதை எழுதினால் இதனை மனதில் கொண்டு எழுதிவிடுகிறேன்....

      உங்கள் இருவரது கேள்விகளும் நான் எதிர்பார்த்த படி வந்துவிட்டது!!!! எனக்கும் ஒரு திருப்தி...

      மிக்க நன்றி மீண்டும்!

      நீக்கு
    2. அன்பு! யெஸ் ஸ்ரீராம்....இந்த அன்பு ஒன்னுதான் எந்த உளவியல் பிரச்சனை உள்ளவர்களையும் சமாளிக்க உதவும். வேறு எந்த மருந்தும் அதற்கு உதவாது. சம்யுக்தா போன்ற கேரக்டரை இந்த அன்பினால் கொண்டுவந்துவிட முடியும். ஆனால், இன்னும் சில உளவியல் பிரச்சனைகளை நாம் உலகில் சொல்லும் அன்பையும் விட சற்று கூடுதலான அன்பு இருந்தால் மட்டுமே வாழ்க்கையை சீராகக் கொண்டு செல்ல முடியும்....இல்லை என்றால் குடும்ப வாழ்வு தொலைந்து போகும். இதனை இன்னும் விரிவாக அடுத்த பதிவில் சொல்லுகிறேன்...

      உங்களின் கருத்தைக் கண்டதும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. கதையின் என்ன சொல்ல நினைத்தேனோ அதை நீங்கள் புரிந்து கொண்டமைக்கு.

      நீக்கு
    3. ஸ்ரீராம் முருங்கை மரத்தில் ஏறும் முடிவும் ஒன்று வைத்திருந்தேன்........ஆனால், என் மனம் அதற்கு ஒப்பவில்லை...அதனால்தான் ஒரு பாகம் கூட நீண்டது!!!!!

      நீக்கு
  18. பதில்கள்
    1. உங்களுக்கு எப்படி பெட்டி கண்ணில் படுது!!!?? எனக்கு பெட்டி தெரியவே இல்லை அதனால இணைப்பதும் இல்லை தமிழ்மணத்தில் யாரோ இணைச்சு விடறாங்க போல....நன்றி ஸ்ரீராம்...

      நீக்கு
  19. அதிரா, ஏஞ்சலின் ஆகியோரது கருத்தே என் கருத்தும். பொதுவாகப் பாலியல் சீண்டல்கள் ஏழை, பணக்காரன் என்று பார்ப்பதில்லை. சொல்லப் போனால் பணக்கார வீடுகளில் தான் பெற்றோர் அரவணைப்புக் குறைவாகக் குழந்தைகளுக்குக் கிடைக்கும். வேலைக்காரர்கள் துணையுடன் வளர நேரிடுகிறது. வேலைக்காரர்கள் நல்லவர்களாக இருந்தால் நல்லதே நடக்கும். இல்லை எனில் சம்யுக்தாவுக்கு நடந்தது போல் தான்! தில்லியில் டாக்டர் தம்பதிகளின் ஒரே பெண் கொலையான வழக்கே இதற்குச் சான்று!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சம்யுக்தாவிற்கு நடந்தது ஒரு சாதாரணக் குடும்பப் பெண்ணிற்கு சிறு வயதில் நடந்த ஒன்று....நீங்கள் சொல்லியிருப்பது போல எல்லா விதமான குடும்பங்களிலும் இருக்கத்தான் செய்கிறது...பணக்காரக் குடும்பங்களிலும் நீங்கள் சொல்லியிருப்பது போல தில்லி சம்பவம்....ஆம்...

      மிக்க நன்றி கீதாக்கா

      நீக்கு
  20. கார்த்திக்கின் பொறுமை சம்யுக்தாவிடம் இல்லை. மருத்துவம் படிக்கும் அளவுக்கு மனதில் தைரியமும் தெம்பும் உள்ளவளுக்குத் தன்னுடைய தவறான போக்கைத் திருத்திக் கொள்ள முடியவில்லை என்பதும் ஓஅர் ஆச்சரியம் தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா இது தவறான போக்கு என்று சொல்ல முடியாது.....மூளை என்பது விசித்திரமான ஒன்று. அதனுள் நடக்கும் வேதியியல் மாற்றங்கள் நல்ல படியாக அமைந்தால் நல்லது...இல்லை என்றால் இப்படியான பிரச்சனைகள் தலை தூக்கும். இது ஒரு விதமான உளவியல் பிரச்சனை....அக்கா. இதனை கேரக்டர் என்று சொல்ல முடியாது. ஒரு பிரச்சனைதான்...

      மிக்க நன்றி கீதாக்கா..

      நீக்கு
  21. அருமை அருமை
    முன்னமே நான் ஒரு பின்னூட்டத்தில்
    "கார்த்திக் மாதிரி மனமுதிர்ச்சி கொண்டவர்கள்
    நிச்சயம் காதலில் தோற்கமாட்டார்கள்"
    என எழுதி இருந்த ஞாபகம்
    அதனுடன் "எத்தனை வருடமானாலும்
    எந்த நிலையினாலும் "எனச் சொல்லத் தோன்றுகிறது
    இப்போது

    அற்புதமான கதை
    சொல்லிச் சென்ற விதம் மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "கார்த்திக் மாதிரி மனமுதிர்ச்சி கொண்டவர்கள்
      நிச்சயம் காதலில் தோற்கமாட்டார்கள்"// ஆமாம் ரமணி சகோ!!! நன்றாக நினைவிருக்கிறது. அன்பு ஒன்று போதுமே எதையும் வெல்ல இல்லையா சகோ...மிக்க நன்றி தங்களின் ஊக்கம் தரும் கருத்திற்கு...

      நீக்கு
  22. அருமை
    அருமை
    நிறைவாய் நிறைவு செய்துள்ளீர்கள்
    மகிழ்ந்தேன்

    பதிலளிநீக்கு
  23. கார்த்தி ,காத்திருந்தது வீண் போகவில்லை :)

    பதிலளிநீக்கு
  24. தாழ்வுமனப்பான்மை தான்
    அடையாளமா? - கதை
    இயல்பு வாழ்க்கையை
    அப்படியே வெளிப்படுத்தி இருக்கே!
    அருமையான பதிவு

    பதிலளிநீக்கு
  25. குட்டித்தொடர் மனசில் குறை என்று எதை நோக்கினாலும் அது தாழ்வுச்சிக்கலைத்தான் தரும்! அருமையான முடிவு! வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  26. சகோ

    வணக்கம். முதலில் வாழ்த்துகள்.

    வாழ்த்துக்கள் எதற்கென்றால், இதோ சம்யுக்தாவிற்காகவும் கார்த்திக்கிற்காகவும் போட்டி போட்டுக் கொண்டு பின்னூட்டத்தில் கேள்வி கேட்கும் இத்தனை வாசகர்களைப் பெற்றதற்காக.

    ஒரு கதாசிரியரின் வெற்றி, எழுத்துக்கள் மூலம் இரத்தமும் சதையும் உள்ள பாத்திரங்களை உருவாக்குவதில், அவர்களின் உணர்வுகளை வாசகர்க்குக் கடத்துவதில், ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று வாசகர்களைப் பொங்கியெழ வைப்பதில், இருக்கிறது என நான் நம்புகிறேன். புனைவென்ற நிலைகடந்து கதாசிரியன் வெல்லும் தருணம் அது.

    இங்கு வந்திருக்கும் பின்னூட்டங்கள் அதை உணர்த்துகின்றன.

    அழைப்பு மணி அடித்ததும் வந்தது கார்த்திதானே என்று சென்ற பதிவில் டிடி கேட்டதற்காக ஒன்றும்
    “““அழைப்பு மணி ஒலிப்பது கேட்டதும், சம்யுக்தா அஞ்சலையாக இருக்கும் என்று நினைத்து, க்ரில் வழி பார்த்தால் அஞ்சலையேதான்.““““

    என நீங்கள் மாற்றிவிடவில்லையே !!! :)

    பொதுவாகக் கதைகளை வேகமாகக் கடந்து போவேன். வேகமாக என்றால் மிக வேகமாக.

    இக்கதையை எழுத்தெண்ணி வாசித்தேன்.

    பாராட்டுக்கள்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விஜு சகோ மிகவும் வியந்து போனேன். தங்களது கருத்து கண்டு!! தங்களிடமிருந்து இப்படியான பாராட்டுக் கருத்தை எதிர்பார்க்கவில்லை சகோ. என்ன சொல்ல என்று தெரியவில்லை. மிக்க நன்றி! தங்களின் கருத்திற்கும், பாராட்டிற்கும், ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கும். உங்கள் எல்லோரது கருத்துகளையும் காணும் போது இன்னும் கதைகள் எழுதலாம் என்றே தோன்றுகிறது. முயற்சி செய்கிறேன்.

      டிடி யின் கருத்திற்காக மாற்றியது இல்லை சகோ....

      முடிவுதான் இரு முடிவுகள் வைத்திருந்தாலும், மகிழ்வான முடிவை மக்களின் (??!!) விருப்பத்திஎற்காக வைத்தேன். மற்றொரு முடிவு ஸ்ரீராமின் கருத்திலேயே தெரிந்துவிட்டதே..அந்த முடிவுதான்.....அவர் கூட அந்த முடிவை விரும்பவில்லை என்பது அந்தக் கருத்திலேயே தெரிந்தது...

      மிக்க நன்றி விஜு சகோ...

      நீக்கு
  27. சகோ! கதை முழுவதையும் படித்தேன்!

    கலக்கி விட்டீர்கள் போங்கள்! இந்த அளவுக்கு நான் எதிர்பார்க்கவில்லை. நான் வெறுமே நட்புக்காகவோ, அவை நாகரிகத்துக்காகவோ புகழ்பவன் இல்லை என்பது நீங்கள் அறிந்ததே! உண்மையிலேயே சொல்கிறேன் செம்மையான கதை!

    நீங்கள் நிறைய உளவியல் நூல்கள் படித்தவர் என்பது தெரியும். ஆனால், இவ்வளவு சிக்கலான உளவியல் விதயம் ஒன்றைக் கருப்பொருளாக எடுத்துக் கொண்டு எழுத மிகவும் துணிச்சல் வேண்டும். உங்களுக்கு அது இருக்கிறது. கதையின் ஒவ்வொரு பகுதியும் முடியும் இடம் மிக மிக அருமை! பெரிய எழுத்தாளர்கள் மட்டத்துக்கு நறுக்கெனத் திருப்பம் வைத்திருந்தீர்கள். மிகவும் ரசித்தேன்!

    கதையில் புவியியல் (geography) மிகவும் முதன்மையானது என்பார் சுஜாதா. அதை மிகவும் சிறப்பாக நீங்கள் கையாண்டிருக்கிறீர்கள். கதை அமெரிக்காவில் நடக்கிறது என ஒரு வரி எழுதிவிட்டு, பின்னர் அது பற்றி எதுவுமே பேசாமல் கதையில் வரும் நிகழ்ச்சிகளைப் பற்றி மட்டுமே அளந்து கொண்டிருப்பார்கள் அறிமுக எழுத்தாளர்கள். ஆனால் நீங்கள், ஜான்சன் தெரு, பில்மோர் அவென்யூ என ஆங்காங்கே புவியியலை நினைவூட்டி, கதை நடக்கும் இடத்துக்கே கூட்டிப் போய் விட்டீர்கள். போதாததற்கு, "மேப்பிள் மரத்தின் இலையை ரசித்துக் கொண்டிருந்தான்" என்றெல்லாம் எழுதி, மறைமுகமாகக் கூட நீங்கள் புவியியலை மனக்கண்ணில் கொண்டு வந்தது அசத்தல்! தவிர, திரைப்படத்தில் வருவது போல, கடந்த கால நிகழ்வில் காபி குடிப்பதையும் நிகழ்காலத்தில் காபி குடிப்பதையும் இணைத்தெல்லாம் எழுதி அசத்தி விட்டீர்கள் போங்கள்!

    இவை எல்லாவற்றுக்கும் மேலாக, கதையின் தொடக்கத்திலேயே நான் ரசித்தது, வீட்டு வேலைக்கு வரும் பெண்மணியை வீட்டுக்காரம்மாள் பன்மையில் அழைப்பதாக நீங்கள் உரையாடல் வைத்திருந்த விதம்! பெரியாரியமும், பொதுவுடைமையும் பேசுகிற பல பெரிய படைப்பாளிகள் கூட இன்று வரை காட்சிப்படுத்தாதது இது. உங்கள் நண்பர் என்பதில் பெருமைப்படுகிறேன் சகோ!

    இன்னும் ஒரு பாராட்டு இருக்கிறது. ஆனால், நாம் பேசும்பொழுது சொல்ல ஒன்றாவது மிச்சம் இருக்கட்டும்!

    இவ்வளவு அசத்தல்கள் இருந்தாலும், என் கண்ணில் உறுத்திய சில குறைகளைச் சொல்ல வேண்டியது என் கடமை என நினைக்கிறேன்.

    1. மிகச் சில இடங்களில் வரிகள் மிகவும் நீளமாக இருந்தன. எ.டு: மதிய உணவிற்குப் பிறகு, ஹாலில் இருந்த மூங்கில் கூடை சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு செய்தித்தாள் வாசிக்கத் தொடங்கி ஏதேதோ நினைவுகளில் மூழ்கிட, செய்தித்தாள் நெஞ்சின் மேல் சரிந்திட தான் அப்படியே உறங்கிப் போயிருக்கிறோம் என்பது.

    2. காபி அருந்தும் காட்சிகள் நிறைய. சில காட்சிகளில் காபி அருந்தும் சூழலுக்கு பதில் வேறு ஏதாவது பின்னணி வைத்திருக்கலாம். உங்களுக்கு காபி பிடிக்கும் என்பதற்காக இத்தனை காபி பருகல் காட்சிகளா!

    3. கார்த்தியும் சம்யுக்தாவும் முதன் முறை சந்திக்கும் இடத்தில் அவனை அவள் புகழும் வரிகள் மிகையாக இருந்தன.

    4. சம்யுக்தா சிறு வயதில் சந்தித்த பாலியல் துன்புறுத்தல்கள் பற்றிக் கார்த்தி தன் அம்மாவிடம் விவரிக்கும் இடம் அவ்வளவு வெளிப்படையாக இல்லாமல் கொஞ்சம் இலைமறை காயாக இருந்திருக்கலாம்.

    5. கார்த்திக்கை இந்த அளவுக்கு நூற்றுக்கு நூறு பக்குவமானவனாக இல்லாமல் கொஞ்சம், கொஞ்சமே கொஞ்சமாவது அவனும் அவளிடம் ஓரிரு இடங்களிலாவது எதிர்த்துப் பேசுவது போல் வைத்திருந்தால் இயல்பாக இருந்திருக்கும்.

    எல்லாவற்றுக்கும் மேலாக, இவ்வளவு அருமையாக, சுருக்கமான காட்சிகள் - உரையாடல்கள் - தடாலடித் திருப்பங்கள் போன்றவற்றுடன் அமைந்திருந்த கதை, முடிவில் மிக எளிமையாக முடிந்து விட்டது போல் இருந்தது . ஆனால், அதைக் குறை எனச் சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. காரணம், இயல்பான வாழ்க்கையில், வாழ்வின் முதன்மையான ஒரு முடிவு இப்படியொரு காட்சியாகத்தானே அமைந்திருக்கும்? எனவே, இயல்பு கருதியே நீங்கள் அப்படி முடித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஆனால், நானோ கொஞ்சம் இயல்புக்கு மீறிய கதைகளையே சிறு வயதிலிருந்து ரசித்து வருபவன். அதனால் கூட எனக்கு இது குறையாகத் தெரியலாம். எனவே இதைப் பொருட்படுத்த வேண்டா!

    ஒரே வார்த்தையில் சொன்னால் ‘அசத்தல்!’ கதையை அப்படியே தொகுத்து ‘புஸ்தகா’ மூலம் மின்னூலாக வெளியிட வேண்டுகிறேன்! இதைக் குறும்படமாக எடுத்தால் மிக அருமையாகக் காட்சிப்படுத்தலாம்! அதற்கும் நீங்கள் முயன்று பார்க்க வேண்டும் என்பது என் அடுத்த வேண்டுகோள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. சகோ.. இ. பு.இந்த pustaga பற்றி தான் நான் முதல் பகுதில கடசில சொல்ரெனு அப்படியே forgot .நன்றி ..நினைவு படுத்தியமைக்கு.note this geetha

      நீக்கு
    2. மிக்க நன்றி இபு சகா நேர்மறைக் கருத்துகளுக்கும், விமர்சனக் கருத்துகளுக்கும். அவற்றை மனதில் கொள்கிறேன். ஊக்கமிகு வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. புத்தகா.....முயற்சி செய்கிறேன். அது போன்ற எண்ணம் இல்லை. ஆனால் துளசிக்கு எனது கதைகளைக், கட்டுரைகளைப் புத்தகமாகக் கொண்டுவர வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். நான் அதற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. ஒரு சில யதார்த்த ரீதியானப் பிரச்சனைகள் இருப்பதால். என் மனதிலும் குறும்படமாக இதையும், மற்றொரு கதையும் உள்ளது முன்பே எழுதியது அதையும் மனதில் அசை போட்டுப் பார்த்ததுண்டு. சொல்லப் போனால் திரைக்கதை கூட மனதிலுண்டு. அதில் யார் நடிக்க வேண்டும் என்றும் மனதில் உண்டு. முதல் கதையில் துளசி பக்காவாகப் பொருந்துவார். ஆனால் புத்தகத்திற்கே நான் யோசிக்கும் போது குறும்படம் என்பதெல்லாம் ....விண்ணில் கட்டும் கோட்டைதான்.

      உங்களது கருத்துகளுக்கு மிக்க நன்றி. ஊக்கமிகு வார்த்தைகளுக்கும்தான்.

      நீக்கு
    3. உங்கள் யோசனைகளும் விண் கோட்டைகளும் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்!

      நீக்கு
    4. //சகோ.. இ. பு.இந்த pustaga பற்றி தான் நான் முதல் பகுதில கடசில சொல்ரெனு அப்படியே forgot .நன்றி ..நினைவு படுத்தியமைக்கு// - ஓ அப்படியா! நல்லது ஏஞ்சலின் அவர்களே!

      நீக்கு
  28. இக்கதைக்கு பின்னூட்டமிடாவிடில் எனக்குப் பாவம் பிடிக்கும். இக்கதைத் தொடரின் சிறப்பம்சம் உரையாடலை நீங்கள் கையாண்ட விதம். அதன் மூலமே கதை மாந்தரின் இயல்பை எளிமையாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். கதையின் முக்கியமான பகுதியாக பாலியல் வன்முறையைக் கையாண்டிருப்பது ஒரு உளவியல் ரீதியில் சமூக விழிப்புணர்வாகவும் இருப்பதில் நீங்கள் ஒரு கதை சொல்லியாக வெற்றி பெற்றிருக்கிறீர்கள். எனக்கு பொறாமையாக இருக்கிறது உங்களைப் போல் எழுத வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழானவன் வாங்க..வாங்க. ரொம்ப நாளாச்சு. உங்கள் கருத்திற்கு மிகவும் நன்றி மட்டுமல்ல மிக்க மகிழ்ச்சியும் கூட. ஆனால் என்னை ரொம்பவே பாராட்டிவிட்டீர்களோ. என்று தோன்றினாலும் இதை எனது தலைக்கு எடுத்துக் கொள்ளாமல், ஊக்கமிகு வார்த்தைகளாகவே எடுத்துக் கொள்கிறேன். இத்தனைக் கருத்துகளைக் கண்டதும் மெய்யாலுமெ மேலும் கதைகள் எழுதிடும் ஆர்வம் வருகிறதுதான். என்ன தமிழானவன்.நீங்களும் எழுதலாமே. உங்கள் கட்டுரைகள் நச்சென்று நறுக்கென்று இருக்குமே! அதை வாசித்துள்ளோமே...

      மிக்க நன்றி மீண்டும்.

      நீக்கு