வெள்ளி, 11 செப்டம்பர், 2015

ஆங்கில மொழியை இனியும் அந்நிய மொழியாகக் காண வேண்டிய அவசியமில்லை

இந்தப் பதிவு சகோதரி தேனம்மை அவர்கள்,  தனது தளத்தில்  சனிக்கிழமை தோறும் இடும் சாட்டர்டே போஸ்டில் எனது பேட்டி இடம் பெற வேண்டிக் கேட்ட போது எழுதிய கட்டுரை.  அவர்கள் தளத்தின் சுட்டி இதோ. http://honeylaksh.blogspot.in/2015/04/blog-post_25.html மிக்க நன்றி சகோதரி தேனம்மை.  அவர்கள் அனுமதியுடன் இங்கு பதிவை இடுகின்றோம்.

     2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் தாய் மொழியான தமிழில் எழுதப்பட்ட திருக்குறள், திருமந்திரம் போன்ற நூல்களைப் படித்து மகிழும் நமக்கு, வெறும் 700 வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் வாழ்ந்த சாசரால் எழுதப்பட்ட காண்டர்பரி டேல்சிலிரிந்து வளரத் தொடங்கிய ஆங்கிலம், இன்றியமையாத ஒரு மொழியாக மாறியிருப்பதை நினைத்தால் வியப்பாகத்தான் இருக்கிறது.  தமிழகம் உட்பட இந்தியா மட்டுமல்ல, கடந்த நூற்றாண்டின் இறுதி வரை ஆங்கில மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமலிருந்த சீனா, ரஷ்யா போன்ற நாடுகளும், இப்போது ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றன. 

ஆனால், 16 ஆம் நுற்றாண்டில், ஷேக்ஸ்பியரின் கால கட்டத்தில் வாழ்ந்த ஃப்ரான்சிஸ் பேகன் போன்ற மேதைகள் ஆங்கில மொழிக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்காது என்ற நம்பிக்கையில், அவர்களது படைப்புகளில் பெரும் பகுதியை க்ரேக்க மற்றும் லத்தீன் மொழிகளில்தான் எழுதியிருக்கிறார்கள்.  இத்தகைய சூழலில் வளர்ந்த ஆங்கில மொழிதான் இன்று நூலக மொழி எனும் பதவியிலிருந்து, கணினி மொழி, இணைய மொழி எனும் உயர் பதவியை எட்டிப் பிடித்து உலக மொழியாய் மாறி, உலகெங்கிலும் உள்ள மக்கள் அறிந்திருக்க வேண்டிய ஒரு மொழியாய் மாறியிருக்கின்றது.

பழைமையான க்ரேக்க மற்றும் லத்தீன் மொழிகளுக்கும், அதிகமான மக்கள் பேசும் சீன மொழிக்கும், தென் அமெரிக்காவில், ஸ்பெயினில், லாட்டின் அமெரிக்காவில் பேசப்படும் ஸ்பானிஷ், இனிமையான ஃப்ரென்ச் மொழிக்கும் கிடைக்கப் பெறாத பாக்கியம் எப்படி ஆங்கில மொழிக்குக் கிடைத்தது என்று கேட்டால், சந்தேகமே வேண்டாம், நமக்குக் கிடைக்கும் பதில்கள் இவைதான்.

16 ஆம் நூற்றாண்டு முதல், 20 ஆம் நூற்றாண்டின் முதல் பகுதி வரை, உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு, வியாபார நோக்குடன் சென்று, அவற்றை எல்லாம் தங்களது சாம்ராஜ்யத்தின் பாகமாக மாற்றி, அந்நாடுகளை ஆண்ட ஆங்கிலேயர்களும், அவர்களுக்கு இருந்த மொழிப் பற்றும், ஜெர்மன், ஃப்ரென்ச்சு, டானிஷ், க்ரேக்க மற்றும் லத்தீன் மொழிகளின் கலவையான ஆங்கில மொழி எல்லா மொழிகளிலிருந்தும் வார்த்தைகளைத் தன்னுள் உட் கொண்டு வளரத் தயாரானதும் அதற்கானக் காரணங்களே.  அத்துடன் 18, 19 ஆம் நூற்றாண்டுகளிலும் அதன் முன்பும், உலகில், முக்கியமாக ஐரோப்பாவில் நிகழ்ந்த அறிவியல் கண்டுபிடிப்புகளும், வரலாற்று முக்கியத்துவமுள்ள நிகழ்வுகளும், க்ரேக்க மற்றும் லத்தீன் மொழிகளில், ப்ளாட்டோ, அரிஸ்டாட்டில், போன்ற மேதைகளால் நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அரிய நூல்களும் ஆங்கில மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு, அச்சடிக்கப்பட்டு, புத்தகவடிவில் உலகெங்கும் உலா வரத் தொடங்கியதும், உலகெங்கிலும் உள்ளவர்களுக்கு அவற்றை எல்லாம் அறிய, ஆங்கில மொழி இன்றியமையாத ஒன்று என்பதை உணரச் செய்ததும் ஒரு காரணமே.

நம் நாட்டிலும், க்ரேக்க மற்றும் லத்தீன் மொழிகளில் எழுதப்பட்ட அரிய நூல்களுக்குச் சமமான நூல்கள், வட மொழியிலும், திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் துளு மொழிகளில் இருக்கத்தான் செய்தன.  ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டிருந்த அவை எல்லாம் சமஸ்க்ருத மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு எல்லோரும் கற்கவோ, எல்லோராலும் கற்பிக்கப்படவோ அனுமதிக்கப்படாமல் பாழாய்ப் போனது நம் துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.  அப்படித் தனி உடைமை ஆக்கப்பட்ட சமஸ்க்ருத மொழி எல்லோராலும், பேசப்படாத, வாசிக்கப்படாத காரணத்தால் அழிந்த போது, எல்லோராலும் பேசப்பட்ட, வாசிக்கப்பட்ட ஆங்கில மொழி உலக மொழியாக வளர்ந்து விட்டது.  சமஸ்க்ருதம் மட்டுமல்ல. அது போல மக்கள் பேசாததாலும், எழுதாததாலும், அழிந்த மொழிகள் தான் ஈப்ருவும், லத்தீனும்.

20க்கும் மேலான மொழிகள் பேசப்படும் இந்தியாவில், இந்தி தேசிய மொழியாக அங்கீகாரம் பெற்ற போது, அது திராவிட மொழி பேசும் தென்னிந்திய மக்களுக்குக் கற்கவும், பேசவும் எழுதவும் சிரமமான ஒன்றானது.  எனவே, ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்ற நாம் ஆங்கிலத்திற்கு விடை சொல்லி அனுப்ப முடியவில்லை. ஆங்கிலம் நம்முடனேயே தங்கி விட்டது. தென்னிந்தியாவிலிருந்து, வட இந்தியா செல்லுபவர்கள் ஆங்கில மொழியின் உதவியோடுதான் தங்களது கருத்துகளை அங்குள்ளவர்களிடம் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்ற நிலை நம் நாட்டில் உருவானது.  

இந்தியப் பல்கலைகழகங்களில் ஆங்கில மொழி வாயிலாகக் கல்வி கற்பிக்கப்படுவதால் இங்கு கற்பவர்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகெங்கும் சென்று உயர் கல்வி பெறவும், வேலை வாய்ப்புத் தேடவும் முடிகின்றது.  இருப்பினும், 20 க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படும் இந்தியாவில் பேசப்படும் ஆங்கிலத்தில், ஒவ்வொரு மொழி பேசுவோரது மொழி ஆதிக்கம், அவர்கள் பேசும் ஆங்கிலத்தில் கலந்து விடுவதைத் தடுக்க, ஏனோ இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு முயற்சியும் எடுக்கப்படவில்லை.  அல்லது எடுத்த முயற்சிகள் வெற்றி காணவில்லை என்பதை எண்ணும் போது வியப்பாக இருக்கிறது.  இனிமேலாவது அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

உலகமயமாக்கலின் பாகமாக யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது உண்மையானதால், உலக மொழியான ஆங்கிலத்தை முறையாகக் கற்று, பேசவும், எழுதவும் வேண்டும். அதற்கு முதற்படியாக, ஆங்கில மொழியை முறையாகத் தொடக்கப்பள்ளி முதல் கற்பிக்க வேண்டும்.  பிற மொழி கற்பதால், தாய் மொழி கற்பதில் சிரமம் ஏற்படும் என்பதெல்லாம் வீண் வாதமே. இரண்டோ, மூன்றொ மொழிகளில் குழந்தைகள் சிரமமின்றி பேச முடியும்.  

உதாரணமாக, பீஹாரில், போத்கயாவில் பீடா விற்கும் லகன் எனும் 5 வயதுச் சிறுவன் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் ஆங்கிலமும், கொரிய மொழியும், ஜப்பான் மொழியும் பேசி அவர்களை வியப்பில் ஆழ்த்துகிறானாம். 6 வயது மோனு எனும் சிறுவன் ஆங்கிலம், ஜப்பான் மொழி, திபெத் மொழி மற்றும் தாய்லாந்து மொழிகளில் பேசி அவ்வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றானாம்.(!!) (பள்ளி செல்ல வேண்டிய இக் குழந்தைகள் இப்படிப் பணம் சம்பாதிக்க வைப்பது குற்றம்.  விரைவில் அவர்கள் பள்ளிக்கு அனுப்பப்படுவார்கள் என்று நம்புவோம்.)  இதிலிருந்து 5 அல்லது 6 வயது குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டிய விதத்தில் மொழிகளைக் கற்பித்தால், கற்கும் சூழல்களை ஏற்படுத்தினால், அவர்கள் கற்பார்கள் என்பது உறுதியாகின்றது.

தொடரும் ...அடுத்த பதிவில் முடிகின்றது.
--------------------------------------------------------------------------------------------------------------------
வலைப்பதிவர் விழாவிற்கு இன்னும் ஒரு மாதமே இருக்கின்றது. உங்கள் வருகையைப் பதிவு செய்யுங்கள். வர இயலவில்லை என்றாலும், வாழ்த்திவிட்டு, கையேட்டிற்கான விவரங்களையும், 20-09-2015 ற்குள் தயவாய் பதியுங்கள். உங்கள் விவரங்கள் எல்லோருக்கும் பயனுள்ளதாகவும், உங்களையும் பலரும் அறிந்து கொள்ளவும் பயனுள்ளதாக இருக்கும். விழாவிற்கான வலைத்தளமாகிய இந்தத் தளத்தில் http://bloggersmeet2015.blogspot.com நிகழ்வுகள், தகவல்கள் அவ்வப்போது வெளியாவதால் அதைத் தொடருங்கள். தகவல்கள் அறிந்து கொள்ளலாம். சந்தேகங்களுக்கும், தகவல்கள் அறியவும், விவரங்கள் கொடுக்கவும், தங்கும் அறை தனியாக வேண்டும் என்றாலும் இந்த மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.  bloggersmeet2015@gmail.com

47 கருத்துகள்:

  1. மொழிகளில்
    சீனமொழி முதலாமிடத்திலும்
    ஷ்பானிஸ் மொழி இரண்டாமிடத்திலும்
    ஆங்கில மொழி மூன்றாமிடத்திலும்
    இருப்பதாக
    பேசுவோர் எண்ணிக்கையைக் குறித்துச் சொல்கிறார்களே!
    ஆங்கிலம் உலகெங்கும் பரவி இருப்பினும்
    மூன்று வேளை பசிக்குச் சாப்பிடுவது போல
    தொடர்பாடல் தேவைக்குத் தேவையான வேளை
    பாவித்தாலும் - அவரவர்
    தாய்மொழியைத் தானே உலகெங்கும் பேசுகிறார்கள்!
    ஆங்கில மொழியை
    அந்நிய மொழியாகக் காண வேண்டாம்
    நெருங்கிய நண்பராகப் பேணுவோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே! பேசுவோரின் எண்ணிக்கையை வைத்துதான் சொல்லப்படுகின்றது. உலகமயமாக்கலின் விளைவால் இன்று ஆங்கிலம் எல்லா இடங்களிலும் ஊடுருவி பயணித்துதான் வருகின்றது. நமது தாய் மொழியை நன்கு கற்றுக் கொண்டால் ஆங்கிலமென்ன எந்த மொழியானாலும் நன்றாகக் கற்றுக் கொண்டுவிடலாம். ஆங்கிலம் கற்பதற்காக நமது தாய்மொழியை விட்டுவிடக் கூடாது என்பதையும் இங்கு அறிவுறுத்துகின்றோம்.

      தங்களின் அழகான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி! நண்பரே!

      நீக்கு
  2. வணக்கம் மொழிகளைப்பற்றிய நல்ல ஆய்வு அனைத்தும் உண்மையே தொடர்கிறேன்
    தமிழ் மணம் 1
    நாங்க எப்பவுமே முதலில் வந்து விடுவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர் ஜி!!! அதானே பார்த்தோம் முதல்ல வந்து விடுவோம்...அதச் சொல்லாம பின்னூட்டம் இட மாட்டீங்களே!! ஹஹஹஹ ஜி வலது கை செய்வது இடதுகைக்குத் தெரியக் கூடாது ஜி!!!ஹ்ஹஹஹ் விளங்கிச்சா...!!??

      நீக்கு
  3. அங்கேயே படித்திருந்தாலும் மீண்டும் ஒரு முறை இங்கேயும்....

    எந்த ஒரு மொழியையும் கற்றுக் கொள்வதில் தவறில்லை என்பது தான் என் கருத்தும்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் உங்கள் கருத்தை அங்கேயும் பார்த்தோமே...மிக்க நன்றி வெங்கட் ஜி மீண்டும் வாசித்தமைக்கு...உண்மைதான் பிற மொழிகளைக் கற்றுக் கொள்வதில் எந்த தவறுமே இல்லை...இப்போது நீங்கள் தமிழிலும் பின்னி பெடலெடுக்கின்றீர்கள்!!! ஹிந்தியும் ஆங்கிலமும் உங்களுக்குத் தெரிவதால் நீங்கள் இருக்கும் இடத்தில் பிழைக்க முடிகின்றது...மட்டுமல்ல ஹிந்தியில் வாசிப்பதை இங்கு எங்களுக்கும் தமிழில் தாங்கள் பல பதிவுகளில் சொல்லி வருகின்றீர்கள்....வட நாட்டுப் பயணக் கட்டுரைகள் என்று எவ்வளவு உபயோகமாக இருக்கின்றது...நமது தாய்மொழி தமிழ் வளர வேண்டும் என்றால் பிற மொழிகள் தெரிந்து கொண்டால் மிகவும் நல்லதே....மிக்க நன்றி வெங்கட்ஜி!

      நீக்கு
  4. எத்தனை மொழிகள் தெரியுமோ, அத்தனை மனிதர்கள் நமக்குள்...

    பதிலளிநீக்கு
  5. உண்மைதர்ன் நண்பரே
    இன்று நம் பள்ளிகளில் பெருவாரியான குழந்தைகள்
    தாய் மொழியைப் படிக்கக் கூட இயலாதவர்களாக இருக்கிறார்கள்
    என்பதுதான் வேதனையான உண்மை
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்..

      நீக்கு
  6. ஆங்கிலம் என்பது எளிதானது. ஆனால் கையாளும் ஆசிரியர்கள் தான் அதனை பயமுறுத்தும் அளவிற்கு மாணவர்களுக்கு மாற்றி விடுகின்றார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக மிகச் சரியே நண்பரே! ஆங்கிலம் என்றாலே ஒருவித பய உணர்வு மாணவர்களிடையே வந்துவிடுகின்றது....மிக்க நன்றி ஜோதிஜி தங்கள் கருத்திற்கு

      நீக்கு
  7. விரிவான ஆராய்ச்சி. எனக்கு இது பற்றி தெரியாது.

    //ஒவ்வொரு மொழி பேசுவோரது மொழி ஆதிக்கம், அவர்கள் பேசும் ஆங்கிலத்தில் கலந்து விடுவதைத் தடுக்க, ஏனோ இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு முயற்சியும் எடுக்கப்படவில்லை.//

    இது வெளி நாட்டினருக்கும் பொருந்துமே... ஜப்பானியர்கள், சீனர்கள், ஏன், கிரிக்கெட்டிலேயே எடுத்துக் கொள்வோம்..மேற்கிந்தியத் தீவு அணிக்காரர்களோ, ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஆட்டக் காரர்களோ... ஒவ்வொருவர் பேசும் ஆங்கிய உச்சரிப்பும் ஒவ்வொரு மாதிரித்தானே இருக்கிறது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக வெளிநாட்டவருக்கும் பொருந்தும். ஒவ்வொருவரது உச்சரிப்பும் ஒவ்வொரு விதம்தான். நம்நாட்டைப் பற்றித்தானே சொல்லமுடியும் ஸ்ரீராம் அதனால்தான்....மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு...

      நீக்கு
  8. தாய்மொழியுடன் பிற மொழிகளைத் தெரிந்துவைத்திருப்பது அவசியமே. குறிப்பாக ஆங்கிலத்தைப் படிப்பதிலோ, அறிந்துகொள்வதிலோ தவறில்லை. அதற்காக தாய்மொழியான தமிழைவிட்டு அந்நியப்பட்டுப்போய்விடக்கூடாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் ஐயா தங்களின் கருத்திற்கு. தாய்மொழியை விட்டு விலகுதல் கூடாதுதான்...

      நீக்கு
  9. உலகமயமாக்கலின் பாகமாக யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது உண்மையானதால், உலக மொழியான ஆங்கிலத்தை முறையாகக் கற்று, பேசவும், எழுதவும் வேண்டும். அதற்கு
    முதற்படியாக, ஆங்கில மொழியை முறையாகத் தொடக்கப்பள்ளி முதல் கற்பிக்க வேண்டும்.  பிற மொழி கற்பதால், தாய் மொழி கற்பதில் சிரமம் ஏற்படும் என்பதெல்லாம் வீண் வாதமே.///

    athu entha moziyaanaalum aakattum 5 muthal 15 vayathukkul katrukkondal avarkalaal saralamaaka pesa-ezutha mudiyum.
    athu pola aangkilam indri amaiyaatha oru athiyaavasiyamaanathaal ungal karuthu arumai sir.

    pathivai padiththathum psg arts and science kalluriyil english professor aaka pani puriyum jeyanthi bala krishnan madam avarkal oru murai sonna kathai ninaivukku vanthathu link kodukkuren.


    …Dr. Jayanthasri Balakrishnan motivation speech

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மகேஷ் கருத்திற்கு. காணொளி பார்க்கின்றோம் பார்த்துவிட்டுக் கருத்து சொல்லுகின்றோம்..

      நீக்கு
    2. இவர்களை நான் பார்த்திருக்கின்றேன் மகேஷ். இவர்கள் பேசியதையும் அறிவோம். தாயகம் கடந்த தமிழ் ...செமினாரில் கட்டுரை ஒன்று ப்ரெசன்ட் செய்தார் இவர்...-கீதா

      நீக்கு
  10. 700 ஆண்டுகள் ஆகும் ஆங்கில மொழியின் பிறப்பு வளர்ப்பு ஆளுமை பற்றி தெளிவான விளக்கம் தந்தீர்கள் சகோ. எங்கு சென்றாலும் குழந்தை எப்படி தாயை மறப்பதில்லையோ அப்படியே தாய்மொழியை நாமும் எப்படி மறந்து விட முடியும்?
    இன்றைய நவீன அறிவியல் வளர்ச்சிகளைக் கற்று அவரவர் திறமைகளை மேம்படுத்திக்கொள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளை கற்பதில் தவறில்லை என்பேன். தங்களை பேட்டி கண்ட தோழி தேனம்மைக்கும் எனது வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி சசி தங்களின் கருத்திற்கு...ஆம் தாய்மொழியை மறந்திட முடியாதுதான்...ஆனால் தமிழ் குழந்தைகள் பிற மாநிலங்களிலோ, பிற நாட்டிலோ வளர்ந்தால, அதுவும் பெற்றோருக்கும் தமிழ் தாய்மொழியாகவெ இருந்தாலும், தமிழை அவர்கள் அவ்வளவாக அறியாதவர்கள் என்றால் அவர்கள் குழந்தைகளுக்கும் தாய்மொழி மாறிவிடுகின்றது...தாய்மொழி ஹிந்தி அல்லது ஆங்கிலம் ஆகிவிடுகின்றது....தாய் பேசும் மொழியைத்தானே தாய் மொழி என்கின்றோம்...இல்லையா..

      பிற மொழிகள் கற்பதில் தவறே இல்லை..

      நீக்கு
  11. வணக்கம் அய்யா,
    தங்களிக் தொகுப்பு அருமை,,,,,
    தாய்மொழிக் கல்வியில் சிறந்தால் பிறமொழிக்கற்றல் என்பது எளிது என்பது என் துணிவு, தாய் மொழியில் தெரிந்துக்கொள்ளப்படும் தகவல்கள், பரிமாற்றங்கள் ,,,,,,
    பிற மொழிகள் கற்க சிரமப்படுவது தாய்மொழி சரியான புரிதல் இல்லாமையே,,,,,,,,,
    இன்றைய காலத்தில் பல மொழிப் பயிற்சி என்பது அவசியம், ஆனால் அது இயல்பாக வரனும்,,,,,,,,,
    சட்டமோ கட்டுப்பாடோ,,,,,,,,,,,,,,
    தாய்மொழியை மறத்தல் என்பது ,,,,,,,,
    வழக்கொழிந்த மொழிகளுக்கு வரிந்துக்கட்டுபவர்கள் உண்டு, மொழி என்பது பயண்பாட்டிற்கே, தேவைப்படும் நேரத்தில் இடத்தில்,
    தங்கள் அலசல் அருமை, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி மகேஸ்வரி தங்களின் கருத்திற்கு..ஆம் தேவைப்படும் நேரத்தில் பிற மொழிகள்....பயன்பாட்டிற்கு

      நீக்கு
  12. தமிழ் மட்டுமே வேண்டும் என்று கூறுவோர் அவர்களால் பிற மொழிகளைக் கற்க முடியாமல் போகிறவர்களே பல ஒலிகளுக்குத் தமிழில் வித்தியாசம் காட்ட முடியாது கற்கவும் சிரமப் படுகிறார்கள் மேலும் எங்கே ஹிந்தி ஆதிக்க மொழியாகி விடுமோ என்னும் பயத்தில்தான் பெரும்பாலான தமிழர்கள் ஆங்கிலம் வேண்டும் என்கிறார்கள் உங்கள் கட்டுரை நல்ல அலசல். தமிழில் பிற மொழிக்கலப்பு கூடாது என்று வாதிடுவோர் தமிழ்ப் பற்றால் மட்டும் அல்ல அறியாமையினாலும் கூடத்தான் வாதிடுகிறார்கள் ஆங்கிலம் எல்லா மொழிகளையும் சீரணிக்கும் சக்தி கொண்டு விளங்குவதால் உலக மொழியாக இருக்கிறது.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பவர்களைப் பற்றி என்ன சொல்ல. ?

    பதிலளிநீக்கு
  13. தாய்மொழியை விட ஏனைய மொழிகளையும் கற்றிருத்தல் அதுவும்
    இன்ரைய காலக்கட்டத்தில் மிக அவசியம். ஆனால் தாய் மொழியைத் தவிர்த்து
    அன்னிய மொழிகளை அதற்கு முதலிடம் கொடுத்துக் கற்கின்றார்களே அது கொடுமை!

    நல்ல பகிர்வு சகோதரரே!
    தொடருங்கள்!..

    த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி இளமதி தங்களின் கருத்திற்கு..தாய்மொழி தவிர்க்காமல் கற்றிடல் நலமே!!

      நீக்கு
  14. ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டிருந்த அவை எல்லாம் சமஸ்க்ருத மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு எல்லோரும் கற்கவோ, எல்லோராலும் கற்பிக்கப்படவோ அனுமதிக்கப்படாமல் பாழாய்ப் போனது நம் துரதிர்ஷ்டம் அல்ல..சதி ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த சதியாலும் நல்லதே நடந்துள்ளது சமஸ்கிருதம் என்றாலே ஆத்திகர்களுக்கு மட்டுமே சொந்தமான மொழி போல் எனக்கு படுகிறது ,என் கருத்து தவறென்பவர்களின் கருத்தை எதிர்பார்க்கிறேன் !

      நீக்கு
    2. மிக்க நன்றி வலிப்போக்கன் தங்களின் கருத்திற்கு.

      பகவாஞ் ஜி ஆத்திகர் மட்டுமல்ல ஜி...நாத்திகர்களிலும் மொழி ஆர்வம் உள்ளவர்கள் சமஸ்க்ருதம் பயின்றுள்ளார்கள் ஜி!

      நீக்கு
  15. //2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் தாய் மொழியான தமிழில் எழுதப்பட்ட திருக்குறள், திருமந்திரம் போன்ற நூல்களைப் படித்து மகிழும் நமக்கு, வெறும் 700 வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் வாழ்ந்த சாசரால் எழுதப்பட்ட காண்டர்பரி டேல்சிலிரிந்து வளரத் தொடங்கிய ஆங்கிலம், இன்றியமையாத ஒரு மொழியாக மாறியிருப்பதை நினைத்தால் வியப்பாகத்தான் இருக்கிறது. //


    ஆங்கில மொழி ஒன்று அல்ல. இந்த மொழி பேசப்படும் இடங்களுக்குத் தகுந்தவாறு பேச்சு மட்டும் அல்ல இலக்கியமும் மாறி வருகிறது.
    இதன் காரணம் வெகுவாக இந்த மொழி க்கு உள்வாங்கும் திறன் (அப்சார்பிங் கபாசிட்டி) அதிகம் இருப்பதாக மொழி ஆய்வு வல்லுனர்கள் சொல்லுகிறார்கள். இன்னொரு காரணம் ஆங்கிலேயர்களிடத்திலும் கூட ஒரு ப்யூரிடன் ஆக இருந்து தான் இலக்கியம் எழுதப்படவேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடு இருந்தது இல்லை.

    தமிழில் இந்த தாராள மனப்பான்மை (அது சரியா தவறா என்ற கேள்விக்குச் செல்லாது ) பார்த்தால் இல்லை எனத் தோன்றுகிறது.
    மலையாளம் பேசும் கேரளா மக்கள் இடையே அவர்கள் சிறுவர்கள் படிக்கும் புத்தகங்கள் வாசித்தால், பற்பல மலையாள வார்த்தைகள் (ப்ளஸ் டூ புத்தகம் உட்பட) ஆங்கில வார்த்தைகளை அப்படியே மலையாளத்தில் எழுதுகிறார்கள். ஆகவே, இந்த மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்கும்போது சிரமம் ஏற்படுவதில்லை.

    இது ஒரு பக்கம் இருக்க,சீனா, ரஷ்யா இந்த நாடுகளில் கல்லூரி வரை அவரவர் தாய் மொழிகளில் தான் என்ஜீநீரிங், மெடிகல் படிப்புகள் இருக்கின்றன. அங்கே ஆங்கில ஆதிக்கம் இல்லை. ரஷியாவுக்கு இந்தியாவிலிருந்து மேற்படிப்புக்குச் செல்லும் மெடிகல் மானவர்கள் ரஷியன் மொழியைப் படித்துத்தான் ஆகவேண்டும்.

    இதெல்லாம் இருக்கட்டும்.
    சுப்பு தாத்தாவுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை.
    22 முதல் 25 வருடங்கள், ஏன் , சில சந்தர்ப்பங்களில், 30 வருடங்கள் வரை தாய் மொழி ஒன்றிலேயே ஒன்றிப்போய் இருக்கும் ஒருவன்,

    திருமணம் ஆன அடுத்த வினாடி,

    தாரத்தின் மொழியிலே அடங்குகிறானே !!

    என்ன தான் ரகசியமோ உலகத்திலே !!
    நினைத்தால், சிரிப்பு வரும் சமயத்திலே.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com
    www.subbuthathacomments.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹஹ் தாத்தா கடைசி பஞ்ச்!!!!!! அருமை அருமை!!!

      சரி இப்ப மேட்டருக்கு...ஆம் மலையாளத்தில் பல வார்த்தைகள் அப்படியே ஆங்கில வார்த்தைகளை மலையாளத்தில் அந்த அக்சென்டில்தான் உபயோகிக்கின்றார்கள். கீதா கூட நான் எனது இடுகைகளை வாசிக்கும் போது சில வார்த்தைகளை ஆங்கிலத்தில் சொல்லும் போது அதற்குத் தமிழ் வார்த்தைகளைச் சொல்லுவார். ஆனால் மலையாளத்தில் அதற்குவார்த்தைகள் கிடையாது. ஏனென்றால் மலையாளத்தில் தூய தமிழ் வார்த்தைகளும், சமஸ்க்ருத வார்த்தைகளும் கலந்து வருவதால்..தமிழிலிருந்து பிரிந்த மொழிதானே தாத்தா...

      அருமையான நகைச்சுவை இறுதியில்....அருமை...

      மிக்க நன்றி தாத்தா....

      நீக்கு
  16. அருமை அருமை சபாஷ். கீத்ஸ் & துளசி சகோ.

    வலைப்பதிவர் மாநாட்டு நிகழ்ச்சிகளை இனிதான் பார்க்கணும். கலையரசி இடுகையை பார்க்கப் போறேன்.

    ஒரே ப்ரயாணம், வீட்டு விசேஷங்கள் என்று ரொம்ப பிசியாகிவிட்டது. எழுத நேரமில்லை. டாஷ்போர்டிலிருந்து ஷெட்யூல்ட் போஸ்ட்தான் எல்லாமே வெளிவருகிறது . 200 இருக்கு. :) எல்லாருமே மன்னிச்சுக்கோங்க மக்காஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் சகோ தேனம்மை! பாருங்கள் நிகழ்ச்சிகளை. உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது...எதற்கு மன்னிப்பு என்ற பெரிய வார்த்தைகள் எல்லாம்...வருகின்றீர்களா விழாவிற்கு? சந்திக்கலாம்....

      நீக்கு
  17. உலகத்தின் எந்த மூலைக்கும் சென்றாலும் பிழைத்துக் கொள்ள ஆங்கிலம் கண்டிப்பாக அவசியம். தாய்மொழியை நன்கு கற்ற பிறகு இரண்டாவது மூன்றாவது மொழி கற்க துவங்குவது தான் சரியாக இருக்கும். அதிலே கொஞ்சம் இதிலே கொஞ்சம் என்று கற்றுக் கொள்வது தான் மொழிக்கலப்பிற்கு வித்திடுகிறது. நல்லதொரு கருத்தாக்கம். கூடவே வலைப்பதிவர் சந்திப்பு பற்றிய நினைவூட்டலுக்கும் எனது அன்பு நன்றிகள் சகோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்து மிகவும் சரியே நண்பர் பாண்டியன்....உண்மைதான் நுனிப்புல் மேய்ந்தால் கடினம்தான்....அருமையான கருத்து...மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  18. மொழிகளை கற்பதால் நம் சிந்தனை ஓட்டம் இன்னும் விசாலமாகும் என்பதே என் கருத்து அருமையான அலசல் கட்டுரை.

    பதிலளிநீக்கு
  19. அன்புள்ள அய்யா,

    ஆங்கிலம் கோலோச்சியது எவ்வாறு என்பதை விளக்கமாக கூறியிருந்தீர்கள். உலகத்தோடு ஒட்டி உறவாட ஆங்கிலம் அவசியம் தான் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. நம் நாட்டு மக்களோடு தமிழோடு...தாயோடு விளையாடுவதுதானே சிறந்தது.

    நன்றி.
    த.ம.14

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு. ஆம் நம் தாய் மொழியோடு விளையாடுவது சிறப்புதான்...பிற குழந்தைகளையும் நாம் விளையாட்டில் சேர்த்துக் கொள்வோம்தானே அது போலத்தான்...

      நீக்கு
  20. //பீஹாரில், போத்கயாவில் பீடா விற்கும் லகன் எனும் 5 வயதுச் சிறுவன் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் ஆங்கிலமும், கொரிய மொழியும், ஜப்பான் மொழியும் பேசி அவர்களை வியப்பில் ஆழ்த்துகிறானாம். 6 வயது மோனு எனும் சிறுவன் ஆங்கிலம், ஜப்பான் மொழி, திபெத் மொழி மற்றும் தாய்லாந்து மொழிகளில் பேசி அவ்வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றானாம்.(!!) (பள்ளி செல்ல வேண்டிய இக் குழந்தைகள் இப்படிப் பணம் சம்பாதிக்க வைப்பது குற்றம். விரைவில் அவர்கள் பள்ளிக்கு அனுப்பப்படுவார்கள் என்று நம்புவோம்.)//

    பிஹாரில் மட்டுமில்லை. வடமாநிலங்களிலேயே குழந்தைத் தொழிலாளர்களை அதிகம் பார்க்கலாம். குடும்பச் சூழ்நிலை காரணம்னு சொல்ல முடியலை. நல்ல குடும்பத்துச் சிறுவர்களும் சிறு வயதிலேயே வணிகம் செய்யப் பழக்கப்படுத்தப்படுகின்றனர். பள்ளி செல்லும் சிறுவர்களும் பள்ளி சென்று வந்து திரும்பிய பின்னர் அவர்கள் வியாபாரங்களில் பெற்றோருக்கு உதவி செய்வது வழக்கமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! சகோதரி! வட இந்தியச் சிறுவர்கள் கையேந்துவது ஒரு புறம்...சிறு தொழிலாளர்கள் மற்றொருபுற,ம்.....மட்டுமல்ல அவர்கள் குடும்பமே கூட வணிகத்தில் ஈடுபடுவது உதவி செய்வது உண்டுதான் அறிவோம்...இங்கு சொல்லபட்டது ஒரு சிறு உதாரணம்தான். குழந்தைத் தொழிலாளர்கள் பள்ளி செல்வது அவசியம் என்ற கருத்திற்காகத்தான்....அவர்கள் வியாபரத்தில் தென்னிந்தியர்களை விட அதுவும் தமிழரை விட ஈடுபடுகின்றனர்தான்....

      நீக்கு
  21. மற்றபடி இந்தப் பல்மொழி பேசும் திறனை மங்களூரிலும் பார்த்தோம். அங்கே அநேகமாக அனைவருக்கும் தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி தெரிந்திருந்திருக்கிறது. நாங்கள் பயணம் செய்த வண்டி ஓட்டுநர் கூடுதலாக அவர் தாய்மொழியான உருதும் பேசுவார். அவர்கள் சொல்வது: தமிழ்நாட்டில் தான் மொழி பேதம் எல்லாம் என்பதே! கேட்கவே மனம் கஷ்டப்படும். மங்களூரில் உள்ளூரைச் சுற்றிப் பார்க்கப் பயணித்த ஆட்டோ ஓட்டுநர் தமிழ்நாட்டுக்காரர். அவரும் அதைத் தான் வலியுறுத்தினார். மொழியை அரசியலாக்கி விட்டதாக வருந்தினார். என்ன செய்ய முடியும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்லுவதும் சரிதான்....மொழி அரசியலாக்கப்படுகின்றதுதான். இங்கும் கூட பாருங்கள் மஹாபலிபுரத்தில் உள்ள சிறுவர்கள் சிலர் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் பேசக் கற்றுக் கொண்டிருக்கின்றனர்.....அதாவது சமாளிக்கும் அளவில்...
      கீதா : நாகர்கோவில் சுசீந்திரத்தில் ஒரு முறை அங்கிருந்த கைடு ஹிந்திக்காரர்களுக்கு ஆஞ்சநேயர் சன்நிதியில் ..ஆஞ்சநேய பக்வான்...,உஸ்கா நாம் மாருதி பி...ஊப்பர் மே சிர் பர் வாலு.....டெய்ல் ஹை என்று சொல்லியதைக் கேட்டும் சிரித்த காலம் உண்டு....

      நீக்கு
  22. குழந்தைகளுக்கு எளிதாகப் பல மொழிகளைக் கற்க முடியும் என்பதாலேயே நவோதயா பள்ளிகளை நான் ஆதரிக்கிறேன். இந்தப் பள்ளிகள் மட்டும் தமிழ்நாட்டுக்கு வர அனுமதித்தால் பட்டி, தொட்டி, பட்டிக்காட்டுக் கிராமத்துக் குழந்தைகள் கூடப் பல்மொழி அறிவோடு விஞ்ஞானம், கணிதம் போன்றவற்றிலும் அகில இந்திய அளவுக்குப் போட்டி போட்டு முன்னேற முடியும்! எங்கே! அதிலே ஹிந்தியைக் கட்டாயப்பாடமாக வைத்திருக்கிறார்கள் என்பதால் நம் அரசியல்வாதிகள் நவோதயா பள்ளிகளை வர விடுவதில்லை இது குறித்துச் சில பதிவுகளும் எழுதி உள்ளேன். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மூரில்தான் கல்வி அரசியலாக்கப்பட்டுவிட்டதே அப்புறம் என்னத்தச் சொல்ல? ம்ம்ம்

      மிக்க நன்றி சகோதரி தங்களின் விவரமான, தகவலுடன் கூடிய பின்னூட்டங்களுக்கு.....

      நீக்கு
  23. இன்று என் வலைப்பூவில்”என்னங்க!புதுக்கோட்டைக்குப் போறீங்களா”.பாருங்கள் http://kuttikkunjan.blogspot.com/2015/09/blog-post.html

    பதிலளிநீக்கு