புதன், 29 ஜூலை, 2015

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது, ஆனால் புசிக்க ஒன்றும் இல்லாத போது....


      கடந்த ஜூலை 2 ஆம் தேதி மதியம் வயநாடு நூல்புழா பஞ்சாயத்தில் குற்றிச்சாடு கிராமத்தைச் சேர்ந்த 23 வயதுள்ள பாபுராஜ் காட்டினுள் விறகு சேகரிக்கப் போயிருக்கின்றார். இரவாகியும் திரும்பாது போக அவரைப் பல இடங்களில்  தேடியும் காணவில்லை. மறுநாள் தேடிச் சென்றவர்கள் கண்டதோ அவரது தலை பாகம் மட்டும். புலி அவரது உடல் பாகம் முழுவதும் தின்றுவிட்டிருந்தது. 

கடந்த ஃபெப்ருவரி 9 ஆம் தேதி இதே பஞ்சாயத்தைச் சேர்ந்த மூக்குத்திக் குன்று புத்தூரைச் சேர்ந்த 62 வயதுள்ள பாஸ்கரனைக் கொன்று தின்று இருந்த்து. நான்கு தின்ங்களுக்குப் பிறகு அங்கிருந்து 2 கிமீ தொலைவிலுள்ள நீலகிரி மாவட்டம் பாட்ட வயலில் உள்ள தேயிலைத் தோட்ட்த்தில் வேலை செய்து கொண்டிருந்த 32 வயதுள்ள மகாலட்சுமியையும் கொன்றதால், ஃபெப்ருவரி 18 ஆம் தேதி தமிழ்நாட்டு வனவிலாகாவினர் அப்புலியைச் சுட்டுக் கொன்றுவிட்டார்கள்.

நான்கு மாதங்களுக்குப் பிறகு இப்போது இதோ மீண்டும் வேறு ஒரு புலி மனிதர்களைக் கொல்லத் தொடங்கி இருக்கிறது.  இப்புலியும் அதிகம் தாமதியாமல் கொல்லப்படும்தான். மீண்டும் சில மாதங்களுக்குப் பின் வேறு ஒரு புலி தென்படலாம். நூல்புழையைச் சேந்த ஏதேனும் ஒரு மனிதர் அதற்கு உணவான பின் அதுவும் கொல்லப்படலாம். இது தொடர்கதையாக முதுமலைக் காடுகளில் புலிகள் இல்லை என்ற நிலை நாளடைவில் ஏற்படலாம். 

Belinda wright

      “வயநாடு மாவட்டத்தில், உள்காடுகளில் புலிகள் வாழும் இடங்களில் ஏற்படும் மனித நடமாட்டம், புலிகளை அங்கிருந்து வேறு இடம் தேடிச் செல்ல வைக்கிறது. இதற்குக் காரணமாகிறவர்கள் வேறு யாருமல்ல அங்கு சுற்றுலா விடுதிகள் நடத்துபவர்களே! இது இங்குமட்டுமல்ல.  வட இந்தியக் காடுகளிலும் நடக்கும் ஒன்றுதான்.” சில நாட்களுக்கு முன் பாலக்காட்டில் வனவிலங்குகளின் தோல் மற்றும் அவையவங்கள் கடத்தல் பற்றிய தன் அனுபவங்களின் அடிப்படையில் ஒரு வகுப்பு கேரள காவல்துறை அதிகாரிகளுக்கு எடுக்க வந்த பெலிண்டா ரைட்டின் வார்த்தைகள் தான் இது. 

லாப நோக்குள்ள சிலருக்கு அதிக லாபம் கிடைக்க அவர்கள் செய்யும் இது போன்ற தவறுகளுக்கு பலியாடாவது வன விலங்குகளும் வனத்தைச் சார்ந்த இடங்களில் வாழும் பாவம் மனிதர்களும்.  உண்மையான இக்காரணம் உலகம் அறியாமல் இருக்க அவர்களது லாபத்தின் ஒருவிகிதம் அரசியல்வாதிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் கிடைப்பதுதான்.  காட்டிலிருந்து நாடேறும் புலிகளுக்கு அதற்கான காரணத்தை நம்மிடம் சொல்ல முடியாவிட்டாலும் அவர்கள் சார்பில் பெலிண்டா சொல்வதை நாம் உதாசீனப்படுத்த முடியாதுதானே.

      புலிகள் தினமாகக் கொண்டாடப்படும் இன்று (29/7/2015) உலகப் புகழ் பெற்ற எம்மி அவார்ட் உள்ளிட்ட 14ற்கும் மேலான விருதுகள், புலி மற்றும் யானை பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க காரணமானதால், பெற்றவர்தான் பெலிண்டா ரைட்.  1953ல் கல்கத்தாவில் பிறந்து இப்போது டெல்லியில் வாழும் இங்கிலாந்தைச் சேர்ந்த இவரது தாய் ஆனி ரைட் உயர்ந்த வன இலாகா அதிகரியாக இருந்தவர்.  நோய்வாய்ப்பட்ட, விபத்துக்குள்ளான  வன விலங்குகளைப் பாதுகாக்க சிறிய மிருகக் காட்சிச்சாலை போன்ற ஒரு மீட்புப் புகலிடம் (Recue home) அவரது வீட்டிலிருந்தது.  அதனால், சிறு வயதுமுதலேயே வன விலங்குகளுடன் பழகும் வாய்ப்பைப் பெற்ற அவர் தனது 20 வது வயதில் நேஷனல் ஜியாக்ரஃபி சானலில் ஃபோட்டோ கிராஃபர் ஆனார்.  அன்றிலிருந்து வன விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்டவர் பெலிண்டா ரைட்.

      1973ல் ப்ராஜக்ட் டைகர் தொடங்கப்பட்டது.  இந்தியா முழுவதும் உள்ள தேசிய மிருகமான புலிகளை மட்டுமல்ல, எல்லா வனவிலங்குகளுக்கும் தேவையான பாதுகாப்பளிக்க அது காரணமானது.  அது போல் 1994 ல் WPSI ஐ (Wild life protection society of India) உருவாக்கியவர் பெலிண்டா ரைட்.  எனவே, அவரது வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தே ஆகவேண்டும்.

வனவிலங்குகள் நாடேறி மனிதர்களைத் தாக்கக் காரணம் சமீபத்தில் மிகச் சிறிய அளவில் வனவிலங்குகளின் எண்ணிக்கை கூடியது மட்டுமல்ல, வனவிலங்குகள் வாழும் காட்டின் உட்பகுதியில் மனித நடமாட்டம் அதிகமாவதும் அதற்கான ஒரு முக்கியமான காரணம் எனில், அதற்குக் காரணமாகின்றவர்கள் கஞ்சா போன்ற போதைச் செடிகள் தோட்டம் உருவாக்குபவர்களானாலும் சரி, வனவிலங்குகளின் தோல் மற்றும் உறுப்புகளைக் கட்த்துபவர்களானாலும் சரி, சந்தன மரங்களை வெட்டச் செல்பவர்களானாலும் சரி, சுற்றுலாவின் பெயரில் ரிசார்ட்டுகள் கட்டுகிறேன் பேர்வழி என்று  உட்காடுகளுக்குச் சென்று வனவிலங்குகளுக்கு இடையூறு செய்பவர்களானாலும் சரி அவர்களுக்கு எத்தனை பண பலமும், படை பலமும் அரசியல் செல்வாக்கும் இருந்தாலும் சரி, அவர்களை அங்கிருந்து விரட்டி வனப்பகுதிகளில் வன விலங்குகள் வாழ வழி காண்பதுடன், வனத்தை ஒட்டிய பகுதிகளில் வாழும் மனிதர்களும் வனவிலங்குகளின் தாக்குதலுக்கு ஆளாகாமலும் தடுக்க வேண்டும்.



வியாபம் போன்ற சம்பவங்கள் லஞ்சமும் ஊழலும் இந்தியாவெங்கும் எவ்வளவு ஆழத்தில் வேரூன்றி இருக்கிறது என்பதை வெளிப்படுத்தி இருப்பது போல் இப்போது காட்டில் வாழ வேண்டிய புலியும் பிற வன விலங்குகளும் நாடேறக் காரணமும் லஞ்சமும் ஊழலுமாகத்தான் இருக்கும். கடமை தவறிய, பணம் பெற்று வனத்தின் புனிதத் தன்மையைக் குலைத்த அக்கயவர்கள் யாரென்று கண்டறிய வேண்டும்.  அப்படிப் பயிரை மேயும் வேலிகளையும் பிடுங்கி எறிய வேண்டும்.  அதைச் செய்யாமல் மனிதர்களைத் தாக்கும் வனவிலங்குகள் ஒவ்வொன்றையும் கொன்று குவித்துக் கொண்டிருந்தால், மிருகங்கள் மட்டுமல்ல காடுகளும் இல்லாத நாட்டில் நாம் வசிக்க வேண்டியிருக்கும்.  அப்படிப்பட்ட நாடு பாலைவனமாக மாறி இறுதியில் மனித இனத்திற்கே வாழத் தகுதி இல்லாத இடமாகிவிடும்.  அப்படி ஏதும் ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில் நாம் ஒவ்வொருவருவரும் இதற்கு எதிராகக் குரல் கொடுப்போம்.  தட்டுங்கள் திறக்கப்படும் என்பது உண்மையாகும் வரை!

படங்கள்: நன்றி இணையம்
(கீதா இன்று பயணம் மேற்கொள்ள இருப்பதால் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை  வலைப்பக்கம் வருவது சற்று குறைவாக இருக்கலாம்.  இடையிடையில் வர முயற்சிக்கின்றோம். )

32 கருத்துகள்:

  1. நாட்டில் உலவிக் கொண்டிருக்கும் புலித்தோல் போர்த்திய நரிகள் தான் காரணம்...!

    பதிலளிநீக்கு
  2. சக மனிதனின் மரணத்திற்கு - சக மனிதனே காரணமாகின்றான் என்பது இந்த விஷயத்திலும் உறுதியாகி இருக்கின்றது..

    பலருடைய கல்லாப் பெட்டிகளும் நிறைந்து விடுவதால் - கேள்விக்குறியே முன் நிற்கின்றது..

    எனினும் - என்றாவது ஒருநாள் நல்லது நடக்காமலா போய்விடும்!..

    பதிலளிநீக்கு
  3. மனிதர்களைத் தாக்கும் வனவிலங்குகள் ஒவ்வொன்றையும்
    கொன்று குவித்துக் கொண்டிருந்தால், மிருகங்கள் மட்டுமல்ல காடுகளும் இல்லாத நாட்டில் நாம் வசிக்க வேண்டியிருக்கும்.  அப்படிப்பட்ட நாடு பாலைவனமாக மாறி இறுதியில்
    மனித இனத்திற்கே வாழத் தகுதி இல்லாத இடமாகிவிடும்.////

    sonnaa ketpaarkala? doubt thaan.
    muthalil government kadumaiyaana sattangal konduvanthalthaan thani manithan thiruntha mudiyum nampukiren.
    aana inga avarkale sari kidaiyaathe.

    aathanal thani manithanaak paarthu thiruntha vendum.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மகேஷ் தங்களின் அழகான கருத்திற்கு!

      நீக்கு
  4. அருமையானதொரு பதிவு... அட்டகாசம்

    பதிலளிநீக்கு
  5. அதே மாதிரி ஆன்மிகம் என்ற பேரில் அரசியல் பண்டாரங்கள் துணையுடன் காட்டையே பிடித்துக்கொள்வது. யானைத் தடங்களை தடுப்பது, அழிப்பது...எல்லாம் உங்க ஊர்க்க்கரர்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நம்பள்கி! அவங்க பண்ற அலப்பறை தாங்கலை....மிக்க நன்றி!

      நீக்கு
  6. வனவிலங்குகளின் இடத்தை நாம் பிடித்துக் கொண்டால் அவை என்ன செய்யும்? இயற்கையை அழித்தால் இடையூறு ஏற்படத்தான் செய்யும் பெலிண்டா ரைட் சொல்வதை கொஞ்சம் செவிமடுக்க வேண்டியது அவசியமே! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சுரேஷ்! தங்களின் அழகான கருத்திற்கு!

      நீக்கு
  7. வன விலங்குகளை சுடுவதற்கு பதில் ஊழல் பேர்வழிகளை சுட்டுத் தள்ளணும்

    பதிலளிநீக்கு
  8. இதே சுற்றுலாத்துறையினர் செய்த அராஜகங்கள்தானே காஷ்மீர்ப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக்கும் காரணம்? அவர்கள் இடத்தை மனிதன் ஆக்கிரமித்தால் அவைகள்தான் என்ன செய்யும் பாவம்!

    பதிலளிநீக்கு
  9. நல்ல பதிவு சகோ. எங்கே போகிறோம் நாம்....தம 5

    பதிலளிநீக்கு
  10. வனவிலங்குக்கும் பாதுக்காப்பு இல்லை சில குள்ள நரிகளால்!

    பதிலளிநீக்கு
  11. காரண காரியங்கள் அநேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது, ஆனால் பூனைக்கு மணி கட்ட ஆளில்லையே.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம்,
    அருமையான பதிவு,
    வாழ்த்துக்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  13. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது, ஆனால் புசிக்க ஒன்றும் இல்லாத போது....மனிதனை கொன்று புசிக்கும் என்பதை தெரிந்து கொண்டேன்..

    பதிலளிநீக்கு
  14. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது, ஆனால் புசிக்க ஒன்றும் இல்லாத போது....மனிதனை கொன்று புசிக்கும் என்பதை தெரிந்து கொண்டேன் அய்யா...

    பதிலளிநீக்கு
  15. தகுந்த நேரத்தில் தாங்கள் தட்டியதும் பொருத்தமே!
    நாமும் தட்டுவோம் - திறக்கும்...

    பதிலளிநீக்கு
  16. இது மாதிரி தகவல்கள் எல்லாம் நீங்க கையாளும் விதமே சூப்பர் சகாஸ்!!! பயனுள்ள பதிவு!!

    பதிலளிநீக்கு
  17. வன விலங்குகளிடம் நாம் மனிதத்தனமாக (?) நடந்துகொள்ளத் தவறிவிடுகிறோம் என்பதே உண்மை.

    பதிலளிநீக்கு
  18. அழியும் புலிகளின் குரலாக, காடுகளின் குரலாக, இரையாகும் மனிதர்களின் குரலாக உங்கள் கட்டுரை

    பதிலளிநீக்கு
  19. அன்புள்ள சகோதரி,

    புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது, ஆனால் புசிக்க ஒன்றும் இல்லாத போது....உண்மையை உரைத்தீர்கள்...!

    பெலிண்டா ரைட். 1953ல் கல்கத்தாவில் பிறந்து இப்போது டெல்லியில் வாழும் இங்கிலாந்தைச் சேர்ந்த இவரது தாய் ஆனி ரைட் பாராட்டுக்குரியவர்.

    ஊழல் பேர்வழிகளை இனி புலிகளுக்கு உணவாக்குவோம்.

    நன்றி.
    த.ம.10



    பதிலளிநீக்கு
  20. என் கம்மென்ட்டை எங்கே காணோம்!! ஓகே! மறுபடி சொல்லறேன். இந்து மாதிரியான பதிவுகளில் உங்க ஸ்டைல் தனி தான் சகாஸ்! பயன்னுள்ள பதிவு:)

    பதிலளிநீக்கு
  21. //அப்படிப்பட்ட நாடு பாலைவனமாக மாறி இறுதியில் மனித இனத்திற்கே வாழத் தகுதி இல்லாத இடமாகிவிடும்.// அதை நோக்கித்தான் போகிறோமோ :-(
    பேராசைக்குக் ரிசார்ட் கட்டி விடுகிறார்கள், அங்கும் போகத் தானே செய்கிறோம்..எங்கு, எப்படி யார் முற்றுபுள்ளி வைப்பது?
    த.ம.11

    பதிலளிநீக்கு
  22. மனிதனின் ஆக்கிரமிப்பில் அவற்றிற்கு இடமில்லாமல் போவதுதானே காரணம்...
    நல்ல பகிர்வு...

    பதிலளிநீக்கு
  23. வணக்கம்

    இன்று வலைச்சரத்தில் என் நன்றியுரை...

    http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post.html

    உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கும் சாமானியன் !

    பதிலளிநீக்கு
  24. ஒரு மரத்தை வெட்டினால் அதற்கு அடுத்துள்ள மரமோ செடி கொடியோ வந்து ஏன் என்று கேட்காது ஆதலால் காடுகளை அழித்து வீடுகளாக்கினோம். இன்று காடுகளில் வாழும் விலங்குகளை அழிக்கத்துவங்கியுள்ளோம். விலங்குகள் முடிந்த வரை எதிர்த்து போராடும் அதுகளுக்கு துப்பாக்கி குண்டுகள் போன்ற செய்திகள் தெரிந்தால் விழிப்புடன் இருக்கும் என்ன செய்து அழிக்க மட்டுமே கற்ற ஆறறிவு ஜீவன்களிடமிருந்து தப்பிக்க வழியையும் யார் கண்டு பிடிப்பது?
    நல்லதொரு ஆக்கம் சிந்திக்க வைத்தது.
    பகிர்வுக்கு நன்றிங்க.

    பதிலளிநீக்கு