சனி, 25 ஜூலை, 2015

ஷோபா மிஸ்ஸினால் கரைந்து போன கோபம்


      கார்த்திக் சரவணன் அவர்கள் எழுதிய கதையைத் தொடர்ந்த மூங்கில் காற்று முரளிதரன் அவர்களின் தளத்தில், மதுரைத் தமிழன் கதையைத் தொடர அழைக்க, அவர்களில் ஒருவராக நாங்களும் இருக்க, ஏற்கனவே நாங்கள் யோசித்த இரு வகை முடிவுகள் வெளியிடப்பட, பின்னர் இதோ எங்கள் வகைக் கதை தொடர்கின்றது. எல்லோருமே மிகவும் நன்றாக எழுதி முடித்திருந்தார்கள்.  அவர்களது சுட்டிகள் இதோ கீழே.  எங்களுக்கும் அழைப்பு விடுத்து, சிந்திக்க வைத்துக் கதை புனைய வைத்த மதுரைத் தமிழனுக்கு மிக்க நன்றி! மதுரைத் தமிழனும் எழுதியிருப்பதை இப்போதுதான் பார்த்தோம் அந்தச் சுட்டியும் இங்கு இப்போது சேர்த்துள்ளோம்...


ராஜேஷ் வேகமாக கோவைப்பழமாகச் சிவந்து கோபமேறிய கண்களுடன்.....நில்லு நில்லு என்னது இது கோவைப்பழமாகச் சிவந்த கண்கள் அப்படி, இப்படினுட்டு...கேப்டனின் கண்கள் போலனு சொல்லு....ஓகே.....கேப்டனின் சிவந்த கண்கள் போல – கோபத்துடன் அந்தப் பள்ளியின் ஆசிரியர்களின் அறையை நோக்கி நடந்தான். அவன் அந்த அறையை அடைவதற்குள் காரணத்தைச் சொல்லி விடுகின்றேன். வேறு ஒன்றும் இல்லை இப்போதெல்லாம் பள்ளியில் குழந்தையை ஒரு சின்னத் தட்டு தட்டினாலே ஆக்ரோஷத்துடன் வந்து விடுகின்றார்கள் இந்தப் பெற்றோர்கள்.  அப்படியான பெற்றோர்களில் ஒருவராய், பொறுப்பான தந்தையாய் நடந்தான். ஆசிரியர்களின் அறை வாசலில் நிழலாடுவதைக் கண்டதும், அங்கு பேசிக் கொண்டிருந்த ஆசிரியைகளில் ஒருவர் வாசலை நோக்க, அவர் அருகில் வந்து என்ன என்று கேட்கும் முன்னரேயே நம்ம ராஜேஷ்,

      “ஷோபா மிஸ் இருக்காங்களா?” என்ற கேள்வியிலேயே சிறிது கடுமை தெரிந்தது.

      “இருக்காங்க.  க்ளாஸ்ல. இப்ப பீரியட் முடிஞ்சு வர்ற நேரம்தான் சார்.  கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.” என்று பதிலுரைத்து விட்டு, மீண்டும் தனது பேச்சைச் தொடர்ந்த அவர்,

“ஹேய் இது தீபாவோட அப்பால்ல? என்று கேட்ட மற்றொரு ஆசிரியைக்கு, க்ளுக் என்று சிரித்துக் கொண்டே, “ம்ம் ஷோபா இன்னிகுச் செமயா மாட்டிக்கிட்டா இவர்கிட்ட.. எற்கனவே கொஞ்சம் டக்குனு கோபப்படுறவரு....ஆளு செம கடுப்புல இருக்காப்புல தெரியுது..” மீண்டும் சிரிப்பு அங்கு.

வெயிட் பண்ணக் கூட பொறுமை இல்லாமல் அங்குமிங்கும் கோபத்துடன் குட்டி போட்ட பூனை போல நடந்து கொண்டிருந்தான் ராஜேஷ்.  பின்னே, அந்தக் காத்திருக்கும் நேரத்தில் கோபம் குறைந்துவிட்டால் மிஸ்ஸுடன் எப்படிச் சண்டை போட முடியும்!

அதோ ஷோபா மிஸ் க்ளாஸ் முடிந்து வந்துவிட்டார். நல்ல மிடுக்கான நடை.  பார்த்தவுடனேயே மரியாதை கொடுக்கும் தோற்றம். கண்களில் கருணை, உதட்டில் புன்னகையுடன் வருபவரா என் மகளை அடித்தார்? தனது கோபம், மண்ணெண்ணை ஸ்டவ் அணைத்ததும் புஸ்ஸென்று மெதுவாகக் குறையுமே அது போல, குறைவதை உணர்ந்தான்.  இருந்தாலும் மீசையில் மண் ஒட்டக் கூடாதே! ம்ம் இல்லை அடித்தார்தான்.  என் மகள் குழந்தை. குழந்தை பொய் சொல்லாது. மனைவியிடமும் வேற டீச்சரே சொல்லி என்னிடம் சொல்லிவிடக் கூடாது என்றும் சொல்லி இருக்கிறாரே...ம்ம்ம்...என்று நினைத்துத் தன் கோபத்திற்கு ஸ்ருதி சேர்த்துக் கொண்டான்.

 “ஹலோ சார் எப்படி இருக்கீங்க? என்ன இந்தப் பக்கம்?” என்று மிகவும் யதார்த்தமாகக் கேட்டுக் கொண்டே வரவும், ஒரு நிமிடம் அந்தக் கம்பீரக் குரலில் ஆடித்தான் போனான் ராஜேஷ்.. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு...நேரடியாகவே தான் வந்த விஷயத்திற்கு வந்தான்.

“என் மகளை ஏன் அடிச்சீங்க? அதைக் கேட்டுட்டு போகத்தான் வந்தேன்”

“ஓ! அதுவா, நான் ஒண்ணும் அடிக்கலையே சார்.  அவ இடம் மாறி உக்காந்த குறும்பை நினைச்சு சிரிச்சு அவளை ஜஸ்ட் லைக் தாட் கன்னத்துல தட்டி, இனி மாறி உக்காரக் கூடாதுனு மட்டும்தான் சொன்னேன்...”

“இல்ல டீச்சர் நீங்க அடிச்சிருக்கீங்க..சின்னக் குழந்தை பொய் சொல்லாது. நான் என் பொண்ணை இது வரை அடிச்சது... ஏன் திட்டினது கூடக் கிடையாது...நீங்க எப்படி என் பொண்ணை அடிக்கலாம்..”

“சார் நீங்க நினைக்கற மாதிரி நான் ஒண்ணும் அடிக்கலை அவளை. அவளே அதை மறந்திருப்பா சார்” என்று மிகவும் பணிவுடன் சொன்னார்.

“அவ மனசு பாதிக்கும்ல? டீச்சரத்தானே பிள்ளைங்க ரோல்மாடலா நினைக்கறாங்க. அப்படி இருக்க, நீங்க அவளை அடிச்சது தப்பு. நியாயப்படுத்த ட்ரை பண்ணாதீங்க. நீங்க எங்களக் கூப்பிட்டு சொல்லி இருக்கணும். அதை விட்டுட்டு அவள நீங்க எப்படி அடிக்கலாம்? நீங்க சைல்ட் சைக்காலஜி படிச்சிருப்பீங்களே டீச்சர் ட்ரெய்னிங்கல....நீங்க பண்ணினது தப்பு. நான் ஸ்கூல் பிரின்சிப்பால், கரஸ்பாண்டன்ட்கிட்ட கம்ப்ளெய்ன்ட் கொடுக்கத்தான் போறேன்.”

“நீங்க சொல்றதுல நியாயம் இருந்தா கண்டிப்பா நான் அதை ஏத்துக்குவேன். நான் வேற ஏதோ கோபத்துலயோ, உணர்ச்சியோடயோ உங்க மகளை அடிச்சிருந்தா என் தப்புதான். ஆனா, நான் அப்படி எதுவும் பண்ணலையே சார். இப்படிக் க்ளாஸ் ரூம்ல நடக்கற சின்னச் சின்ன விஷயத்துக்கு எல்லாத்துக்கும் உங்கள கூப்பிட்டுச் சொல்லணும்னா ஸ்கூல்ல எப்பவும் பேரன்ட்ஸ்-டீச்சர்ஸ் மீட்டிங்க் கூட்டமாத்தான் இருக்கும். ஸ்கூல் நடத்தவே முடியாதுங்க. அப்புறம் நாங்க டீச்சர்ஸ் எதுக்கு சார்? பேரன்ட்ஸும் டீச்சர்ஸ் ஆங்கிள்ல கொஞ்சம் புரிஞ்சுக்கங்க. உங்களுக்கு ஒரு குழந்தை..... இல்லைனா 2 குழந்தைங்க. ஆனா, இங்க வர்ற அத்தனை குழந்தைகளுமே எங்க குழந்தைங்கதான். நாங்க டீச்சர்ஸ் ஒரே சமயத்துல எத்தனை குழந்தைங்கள மேனேஜ் பண்ணனும் பாருங்க. உங்கள் ரெண்டு குழந்தைங்களுக்குள்ள சண்டை வந்துச்சுனா எந்தக் குழந்தை அதிகமா தப்பு செஞ்சுச்சோ அந்தக் குழந்தையக் கண்டிக்க மாட்டீங்களா சார்? அது மாதிரிதான் சார் இதுவும். நானும் ஒரு அம்மாதான்.  ஸோ உங்க ஆங்கிள்ல இருந்தும் திங்க் பண்ண முடியும் சார். எனக்கும் சைல்ட் சைக்காலஜி தெரியும். பேரன்ட்ஸும் கொஞ்சம் சைல்ட் சைக்காலஜி தெரிஞ்சுகிட்டு பிள்ளைங்கள ஓவரா செல்லம் கொடுக்காம, அன்பானக் கண்டிப்போட வளர்க்கணும் சார். இதுக்கு அப்புறமும் நீங்க கம்ப்ளெயின்ட் கொடுக்கணும்னு நீங்க நினைச்சீங்கனா கொடுத்துக்கங்க சார்.” என்று மென்மையாக ஆனால் அதே சமயம் அழுத்தமாகச் சொல்லிவிட்டு அதே மிடுக்குடன் நடந்து சென்றார்.

ராஜேஷிற்கு என்ன சொல்லுவது என்று தெரியாமல் பேச்சிழந்து நின்றான். டீச்சர் சொல்லுவதிலும் நியாயம் இருந்ததாகத் தெரிந்தது.

மாலை. ராஜேஷ் வீட்டிற்குள் நுழையும் போதே மகள், “என்னப்பா எங்க டீச்சர்கிட்ட செம பல்பு வாங்கினியாப்பா? என்னப்பா நீ? எங்க டீச்சர்கிட்டலாம் போயி சண்டை போடுற?  நாளைக்கு டீச்சர் என்னப் பத்தி என்ன நினைப்பாங்க?  கோள் மூட்டினு நினைப்பாங்கல்ல....என்னை பேட் கேர்ள்னு நினைச்சுருவாங்க” என்று கண்ணில் கண்ணீருடனும், கோபத்துடனும் சொல்லவும், தான் .குழந்தையின் இந்தக் கோணத்தை நினைத்துப் பார்க்கலையே என்று தன்னைத்தானே தலையில் குட்டிக் கொண்டான். “ஆமாம் பல்புதான்! ஆனா எனக்குள்ள ஒரு நல்ல வெளிச்சத்தையும் கொடுத்த பல்பு.” என்று நினைத்தவாறே தனது முன் கோபத்தையும் கைவிட முடிவெடுத்தான். 

62 கருத்துகள்:

  1. அட.... இது நல்லாயிருக்கே... டீச்சருக்கான மிடுக்கைக் கொஞ்சமும் குறைக்காமல்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சொல்ல வந்ததை ஸ்ரீராம் மிக நறுக்கென சொல்லிவிட்டார்...பாராட்டுக்கள்.

      நீக்கு
    2. மிக்க நன்றி ஸ்ரீராம்! மதுரைத்தமிழன் இருவருக்குமே பாராட்டியதற்கு...

      நீக்கு
  2. அனைவர் கதைகளும் வாசித்தேன் அண்ணா /கீதா க்கா ..
    மதுரை தமிழனும் எழுதிட்டார்
    எல்லாம் அருமை..
    உண்மைதான் ..குழந்தைங்க மனச புரிஞ்சிக்க அவங்களாவே மாறினாதான் சரி.

    எங்க வீட்லயும் மகள் ஸ்கூலில் ,ஆனா டீச்சரால் இல்லை இன்னோர் மாணவியால் ..இறுதில பல்ப் வாங்கினது நான் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரி மிக்க நன்றி நீங்கள் இங்கு சொல்லியதை வைத்துத்தான் மதுரைத் தமிழனின் கதையும் வாசித்து சுட்டி சேர்த்தோம்..மிக்க நன்றி!

      அட நீங்களுமா பல்பு வாங்கிருக்கீங்க....!! ஆச்சரியமா இருக்கே...நன்றி தங்கள் கருத்திற்கும் ஏஞ்சலின்!

      நீக்கு
  3. அன்புள்ள அய்யா,

    ‘ஷோபா மிஸ்ஸினால் கரைந்து போன கோபம்’

    ஆசிரியர் பெற்றோராகவும்... பெற்றோர் ஆசிரியராகவும்... இருக்க வேண்டிய அருமையான கதை.

    எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான்
    மண்ணில் பிறக்கையிலே பின்
    நல்லவராவதும் தீயவராவதும்
    அன்னை வளர்ப்பதிலே
    அன்னை வளர்ப்பதிலே

    நான் ஆராரோ என்று தாலாட்ட
    இன்னும் ஆராரோ வந்து பாராட்ட

    தூக்க மருந்தினை போன்றவை பெற்றவர்
    போற்றும் புகழுரைகள்

    தூக்க மருந்தினை போன்றவை பெற்றவர்
    போற்றும் புகழுரைகள் நோய்
    தீர்க்கும் மருந்தினை போன்றவை கற்றவர்
    கூறும் அறிவுரைகள்
    கூறும் அறிவுரைகள்

    -மிக்க நன்றி.
    த.ம.1.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான பாடலோடு, அழகான கருத்துடன் பின்னூட்டம் இட்ட நண்பருக்கு மிக்க நன்றி!

      நீக்கு
  4. நல்ல வெளிச்சத்தை கொடுத்த பல்பு தான்....
    கதை அருமை....சகோஸ்

    பதிலளிநீக்கு
  5. அப்படா! டீச்சருக்கு சப்போர்ட்டா இன்னொரு கதை!!! தேங்க்ஸ் சகாஸ்! டீச்சரின் வார்த்தைகள் ஒவ்வொண்ணும் ஆயிரம் அர்த்தத்தோட இருக்கு. நல்ல படைப்பை வெளிகொணர்ந்த கார்த்திக் சகா, மற்றும் தமிழன் சகாவிர்க்கும் என் நன்றிகள் பல:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவுலகில் வரும் டீச்சர்களுக்கு எங்கள் சப்போர்ட் எப்பவும் உண்டு. இங்கு வந்து பதிவெழுதும் டீச்சர்களை நான் மிகவும் மதிக்கிறேன் வணங்குகிறேன்...காரணம் அனைவரும் மிக மிக பண்பு மிக்கவர்களாக இருக்கிறார்கள்...முத்துநிலவன்,கரந்தையார்,துளசி,மது,முரளி,மைதிலி பாண்டியன் மற்றும் திண்டுக்கல் தனபாலன் என்னடா தனபாலனை ஆசிரியர்கள் லிஸ்டில் சேர்த்துவிட்டேன் என்கிறீர்களா? வலையுலகில் அவரிடம் கற்காதவர் யாரும் உண்டோ ? அதனால்தான் அவரை ஆசிரியர் லிஸ்டில் சேர்த்து இருக்கிறேன்

      நீக்கு
    2. மிக்க நன்றி மைத்தூ! ஆமாம் கார்த்திக் சரவணனிற்கும் தமிழனுக்கும் நாம் நன்றிகள் சொல்ல வேண்டும்...எங்கள் நன்றிகளும் அதில்...

      நீக்கு
  6. அப்பாடா...! இது தான் பிரகாசமான முடிவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் அப்படித் தான் எண்ணினேன் சகோ !

      நீக்கு
    2. மிக்க நன்றி டிடி! தங்களின் கருத்திற்கு!

      இனியா அவர்களுக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  7. குழந்தை மன எண்ணத்தில் நான் நினைத்தவாறு (கிட்டத்தட்ட)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! உங்களுக்கும் அதே எண்ணம் வந்ததா.......மிக்க நன்றி டிடி! தங்களின் கருத்திற்கு!

      நீக்கு
  8. சிறப்பான கோணத்தில் கதை அணுகப்பட்டுள்ளது! அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சுரேஷ் நண்பரே! தங்களின் கருத்திற்கு!

      நீக்கு
  9. ஆசிரியரின் கோணத்தில் சொல்லப்பட்ட கதை. நன்று.

    பல சமயங்களில் இப்படி பல்பு வாங்கும் பெற்றோர்கள் உண்டு........ :)

    த.ம. +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹ்..ஆம் ! மிக்க நன்றி வெங்கட்ஜி! தங்களின் கருத்திற்கு!

      நீக்கு
  10. #நல்ல வெளிச்சத்தையும் கொடுத்த பல்பு,#
    உங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் கிடைத்தது வெளிச்சம் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹ மிக்க நன்றி பகவான் ஜி! தங்களின் கருத்திற்கு!

      நீக்கு
  11. ஆசிரியரின் விளக்கம் அருமை அண்ணா ..குழந்தையின் எண்ணம் சொன்னதும் அருமை.

    இந்த தொடர்பதிவில் ஆசிரியர் ஒற்றுமை ஓங்கியிருக்கே :-) நல்லது

    கோபமெல்லாம் புஷ்னு போச்சு :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம் வலையில் நிறைய ஆசிரியப் பெருமக்கள் இருக்கின்றார்கள் தானே! அல்லாமல், நீங்கள், தமிழன் சொன்னது போல் டிடி எல்லோரும் ஆசிரியர்கள் தான்...மிக்க நன்றி க்ரேஸ்! தங்களின் கருத்திற்கு!

      நீக்கு
  12. ஆசிரியராக இருப்பதால். தங்கள் தரப்பு வாதத்தை தெரிவித்துள்ளீர்கள் என்று எண்ணகிறேன்அய்யா... எனது ஒன்பதாம் வகுப்பில் பீட்டி வாத்தியாரின் பிரச்சனையால் என்ன பள்ளியிலிருந்தே தூக்கி விடடார்கள். “ ஒன்பதாம் வகுப்பில் பெயிலான் பலிப்போக்கன்” என்று பதிவிட்டுள்ளேன்் அய்யா அதைப்படித்தால் என்தரப்பு (மாணவன்) புரியும் அய்யா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே! நீங்கள் சொல்லுவதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. தங்கலின் அனுபவம் மிகவும் மன வேதனைக்குரியது. எங்களுக்கும் சில அனுபவங்கள் உண்டுதான். ஆனால் எல்லா ஆசிரியர்களும் மோசமானவர்கள் அல்லவே! இரண்டு தரப்பிலும் +, - உள்ளதுதானே நண்பரே! இது கதையில் சொல்லப்பட்ட சம்பவத்தின் அடிப்படையில் எழுதப் பட்ட ஒன்றுதான் நண்பரே!

      ஆசிரியரின் கோணத்தில் மட்டுமல்ல...ஆசிரியர்கள் எல்லோருமே பெற்றோர்களும் தானே!(பெரும்பான்மையோர்) எனவே அந்தக் கோணத்திலும் தான்...குழந்தையின் கோணத்திலும்தான்..

      மிக்க நன்றி நண்பரே! தங்களின் பதிவை வாசிக்கின்றோம்!

      நீக்கு
  13. வலிப்போக்கன் ஒன்பதாம் வகுப்பில் பெயிலான கதை..

    பதிலளிநீக்கு
  14. வணக்கம்
    அண்ணா

    சிந்தனை மிக்க அறிவுள்ள கதை படித்து மகிழ்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 8

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரூபன் தம்பி! தங்களின் கருத்திற்கு!

      நீக்கு
  15. அருமையான கதை... ரொம்ப நல்லாயிருக்கு.

    பதிலளிநீக்கு
  16. ஹா ஹா ........நன்று நன்று ரொம்ப அழகாகன நியாயமான முடிவு யதார்த்தமாக உள்ளது ஆசிரியரே .கலக்கிட்டீங்க.அப்போ எப்போ குறும்படம் எடுக்கப் போறீங்க .....

    பதிலளிநீக்கு
  17. நான் அழகான டீச்சரை கார்த்திக்கு தந்தேன் ஆனால் நீங்களோ அவரை பல்பு வாங்க வைச்சிட்டீங்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாரும் உங்களை மாதிரி பரந்த மனசோட இருக்க முடியுமா சகோ?

      நீக்கு
    2. ஹஹாஹஹஹ் தமிழா நீங்க பாட்டுக்குக் கொடுத்திட்டீங்க....அங்க எப்படியோ...அதான்....எல்லாம் அவரக் காப்பத்தத்தான்...

      நீக்கு
  18. இதுவும் வித்தியாசமான கோணத்தில் எழுதப்பட்ட முடிவு தான்.... குழந்தையையும் ஆசிரியையையும் ஒரு படி மேலே கொண்டுபோய் தந்தையை ஒரு படி கீழே இறக்கி விட்டீர்கள்.... தொடர்ந்தமைக்கு நன்றி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கார்த்திக் சரவணன் தங்களிங்கருத்திற்கு...

      ஹஹஹ் இறக்கவில்லை ...இப்போது பாருங்கள் பலர் எழுதியதைக் காணும் போது ..கதை எழுதுபவரின் உள்ளக் கிடக்கை ஒரு புறம் என்றாலும் சில சமயங்களில் சமூகத்தின் நோக்கிலும் சிலர் முடிப்பதுண்டு...ஒரு கதைக்கு எத்தனைமுடிவுகள் சொல்லப்படலாம் என்பது தெரிய வருகின்றது இல்லையா..

      நீங்கள் தொடங்கி வைத்தது பலரின் நல்ல முயற்சிகள் படைப்புகள் வெளிவந்துள்ளன...நன்றி!

      நீக்கு
  19. திடீர்னு படிச்சதாலே ஒண்ணுமே புரியலை! ஹிஹிஹி, நான் தான் பல்பு வாங்கி இருக்கேன் போல! எல்லாத்தையும் படிச்சுட்டு வந்து சொல்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹ சகோதரி! இது தொடர் போல ஓடியது...முதல் பாராவிலேயே சொல்லப்பட்டிருக்கிறதே...நிதானமா படிச்சுட்டு வாங்க ...வந்து சொல்லுங்க உங்க கருத்தை...மிக்க நன்றி சகோதரி!

      நீக்கு
  20. இது ஒரு தொடர் பதிவு என்று தெரியாமல் ஒரு பதிவின் பின்னூட்டத்தில் அரைத்த மாவையே அரைக்கிறீர்களே என்று எழுதினேன் பிறகுதான் புரிந்தது நான் பல்ப் வாங்கினேன் என்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹ்ஹ சார் ஆம் இது தொடர் பதிவு. ஒரு கதைக்கு ஒவ்வொருவருடைய கோணத்திலிருந்தும் முடிவுகள் கதைகள் வெளிவந்ததிலிருந்து அறிவது ஒரு கதைக்கு எத்தனை முடிவுகள் சொல்லப்படலாம் என்று. நல்ல ஒரு முயற்சி என்றே தோன்றுகின்றது சார்....

      நீக்கு
  21. வணக்கம் சகோதரரே!

    மிகவே ரசித்தேன் கதையை!
    வித்தியாசமான பார்வையோடு அசத்திவிட்டீர்கள்!

    மிகச் சிறப்பு! வாழ்த்துக்கள் சகோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி தங்களின் கருத்திற்கு.! மிக்க மிக்க மகிழ்ச்சி தாங்கள் தங்களது இடரிலிருந்து மீண்டு, மீண்டும் வலையுலகம் வந்தது குறித்தும். என்றென்றும் எங்கள் எல்லோரது பிரார்த்தனைகளும் ஆதரவும் உண்டு...

      நீக்கு
  22. இந்த கதை ஆசிரியர் பார்வையில் எழுதியது, கதை அருமை.
    டீச்சர் சொல்வது அருமை.

    குழந்தைகள் விளையாடும்போது ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டை போடுவார்கள், அடுத்த நிமிஷம் அதை மறந்து விடுவார்கள். நாம் அதை பெரிய விஷயமாய் எடுத்துக் கொண்டு சண்டையை கேட்க போனால் பல்பு வாங்குவது நிச்சயம் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி தங்களின் கருத்திற்கு! ஆம் உங்கள் கருத்தும் சரியே!

      நீக்கு
  23. மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு!

    பதிலளிநீக்கு
  24. கதை நகர்வு நன்று
    படிக்க தூண்டும் பதிவு
    தொடருங்கள்

    ‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா?
    கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.
    https://ial2.wordpress.com/2015/07/25/70/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு.

      தங்கள் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளோம்....

      நீக்கு
  25. எங்க எல்லாரையும் தூக்கிச் சாப்ட்டுட்டீங்களே துளசி.... பிரமாதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயையோ இல்லை அப்படி எல்லாம் இல்லை....நீங்கள் எல்லோரும் மிக அழகாக வடித்துள்ளீர்கள். ஒரு கதைக்கு எத்தனை முடிவுகள் வருகின்றன இல்லையா அதுவே இங்கு எல்லோரும் கற்றுக் கொள்ள உதவுகின்றது இல்லையா? கார்த்திக் சரவணன், எல்லோரையௌம் அழைத்த மதுரைத் தமிழன் இரண்டு பேருக்கும் நிறைய நன்றி சொல்லணும். நிறைய கற்றுக் கொண்டதற்கு....உங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி கணேஷ்!

      நீக்கு
  26. முதல் இரண்டுமூன்று வரிகளைப் படித்ததும் நகைச்சுவைக் கதையோ என நினைத்துவிட்டேன். ஆசிரியை பக்கம் நின்றதும் நன்று !

    பதிலளிநீக்கு
  27. டீச்சர்னா இப்படித்தான் இருக்கணும்!
    அருமை

    பதிலளிநீக்கு
  28. எல்லாத்தையும் படிச்சேன், அவரவர் கோணத்தில் அவரவருக்குச் சரியெனப்பட்டதைப் பகிர்ந்திருக்கின்றனர். எல்லாமே அருமை. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி தங்களின் கருத்திற்கு! ஆஅம் எல்லோருமேமிக நன்றாக எழுதி இருக்கின்றார்கள்!

      நீக்கு