1993 ல் வெளி வந்த ஸ்டீவன்
ஸ்பீல்பெர்கின் “ஷ்ச்சின்ட்லேர்ஸ் லிஸ்ட்” (Schindler's
List)
எனும் அருமையான படம், 20 ஆண்டுகள் கழிந்தாலும் மனதை விட்டு மறையாமல் எப்போதாவது
நினைவிற்கு வந்து போகும் படம்.
1982 ல் தாமஸ் க்னேய்லி (Thomas Keneally) எழுதிய
“ஷ்ச்சின்ட்லேர்ஸ் ஆர்க்” (Schindler's Ark) எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்த படம். நடிகர் “லயாம் நீசனின்” (Liam Neeson) அருமையான நடிப்பு. ஆஸ்கார் ஷ்ச்சின்ட்லர் ஆக வரும் லயன் நீசன், 1200
யூத மற்றும் போலந்து அகதிகளை தன் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களாக நியமித்து நாசிகள்
அவர்களை கான்சென்ட்ரேஷன் கேம்புகளுக்குக் கொண்டு போகாமல் தடுத்து உயிர் தப்ப
உதவுகிறார்.
7 ஆஸ்கார் விருதுகள் பெற்ற
படம். சிறந்த 100 அமெரிக்க
திரைப்படங்களில் 8 ஆம் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ள படம். இறுதிக் காட்சியில் ஜெருசலேமில் உள்ள ஷ்ச்சின்ட்லரின்
சமாதியில் அவரது உதவியால் உயிர் தப்பிய அனைவரது குடும்பத்தினரும் வைத்து வணங்கும்
இடம், கூடவே லயன் நீசன் உள்ளிட்ட அப்படத்தின் பாகமான எல்லோரும் ஷ்ச்சின்ட்லருக்கு
அஞ்சலி செலுத்தும் இடம். காண்போரது கண்களில் நீர் நிறைய வைக்கும். இப்படிப்பட்ட மனிதர்கள் இவ்வுலகில்
வாழ்ந்தார்கள் என்று அறியும் போது, நம் மனதிற்கு உண்டாகும் மகிழ்ச்சி, நிம்மதி
இருக்கின்றதே அதை வெறும் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது.
அப்படிப்பட்ட ஒரு ஷ்ச்சின்ட்லர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர், 700க்கும்
மேற்பட்ட யூதச் சிறுவர்களை இரண்டாம் உலகப் போரின் போது காப்பாற்றி
இருந்திருக்கின்றார். நல்ல மனமுடையவர்கள் மற்றவர்களுக்கு உதவி தேவைப்படும் போது
அதைச் செய்யத் தயங்கவே மாட்டார்கள் தானே!
1938ல் 30 வயதான நிக்கோலாஸ் வின்டன், ப்ராகில் (Prague) தங்கி ஷேர் பிசினஸ் செய்து கொண்டிருந்த போது ஒரு நண்பருடன் சேர்ந்து
700 யூதக் குழந்தைகளை 8 புகை வண்டிகளில் ஏற்றி நாசிப் படையிலிருந்துக் காப்பாற்றி
இங்கிலாந்து போன்ற பாதுகாப்பான நாடுகளுக்கு அவர்களை அனுப்பி இருக்கிறார். அதன் பின் ஒரு போதும் தான் செய்த அப்பேருதவியைப்
பற்றி யாரிடமும் பகிர்ந்து கொண்டதே இல்லை.
1988 ல் அவரது மனைவி க்ரீத் தற்செயலாக ஒரு பழைய புத்தகத்தில், முன்பு
அவர் காப்பாற்றிய குழந்தைகளின் பட்டியலைப் பார்த்து அதைப் பற்றி அவரிடம் விசாரித்த
போதுதான் அவரது கணவரான சர் நிக்கோலாஸ் விண்டன் செய்த பெரும் சாதனையைப் பற்றித்
தெரிய வந்திருக்கிறது. உடனே அவர் பிபிசியுடன் தொடர்பு கொண்டு அதைத் தெரிவிக்க,
பிபிசி “தட்ஸ் லைஃப்” எனும் நிகழ்ச்சியில் அன்று இங்கிலாந்திற்குத் தப்பி வந்த
சிறுவர்களை கண்டு பிடித்து இண்டெர்வியூ செய்து அந்நிகழ்ச்சியை நிக்கோலாஸ் வின்டனுக்கு
சமர்ப்பணமும் செய்து விட்டது. அப்படி
விண்டன் 50 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றில் இடம் பிடித்தார். இதை அறிந்த இங்கிலாந்து அரசு அவருக்கு “க்னைட்
ஹுட்” கொடுத்து கௌரவித்ததுடன் லண்டனில் உள்ள லிவர் பூல் ஸ்ட்ரீட் ஸ்டேஷனில்
வைக்கப்பட்டிருக்கும் நாசிகளிடமிருந்துத் தப்ப வழி தேடும் இரண்டு யூதக்
குழந்தைகளின் சிலைகளில் ஒன்றை அவருக்குச் சமர்ப்பித்தும் விட்டது.
Sir
Nicholas Winton, who has died aged 106, has been hailed as a hero of the
Holocaust.
மட்டுமல்ல செக்ரிபப்ளிக் அந்நாட்டு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்
கண்டுபிடித்த ஒரு கோளிற்கு அவரது பெயரைச் சூட்டியும் இருக்கிறது. ஏராளமான யூதர்கள்
தன் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் என்று சொல்லி அவர்களைக் காப்பாற்றிய ஷ்ச்சின்ட்லர்
எனும் மாமனிதரைப் போல், 700 யூதச் சிறுவர்களைக் காப்பாற்றிய, வரலாற்றில் மனிதரில்
மாணிக்கமான, நிக்கோலாஸ் விண்டன், ப்ரிட்டனின் ஷ்ச்சின்ட்லர் என்று
அழைக்கப்படுகிறார். அவர் கடந்த ஜூலை 1 ஆம் தேதி தனது 106 ஆம் வயதில்
காலமானார். இறக்கும் முன், அன்று நாசிகள்
யூதர்களைக் கொன்று குவித்தது போல், இன்று யூதர்கள் பாலஸ்தீனியர்களையும்,
பாலஸ்தீனிய குழந்தைகளையும், கொல்வதை அறிந்து மனம் குமுறியிருப்பார். இப்படித்தான் வரலாற்றில் மிதிபட்டவர்கள், அவர்களுக்கு மிதிக்க ஆட்கள் கிடைத்தால் மிதிக்கத் தயங்க
மாட்டார்கள்.
முன்பு தமிழகத்தில் பெரியார் தலைமையில், பிற்பட்டவர்களை இகழ்ந்து,
தீண்டாமை எனும் தீயால் சுட்டுக் காயப்படுத்திய பார்ப்பனர்களை எதிர்த்துப் போராடி,
திராவிடர்கள், மனிதரிடையே உயர்வு தாழ்வை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதவர்கள் என்று
நிரூபித்த அதே தமிழகத்தில், பிற்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை தாழ்த்தப்பட்ட
சாதியைச் சேர்ந்த ஒரு ஆண் மணந்தால், அவர்கள் சாதியை மறந்து இனிதான இல்லற வாழ்க்கை
வாழ்ந்து வந்தாலும், அவர்களது உற்றார் உறவினர்களுக்கு அது ஏற்றுக் கொள்ள முடியாத
ஒன்றாகி, இருவரையும் பிரிப்பதோடு நில்லாமல், அடித்தே கொன்று இவ்வுலகை விட்டே
வெளியேற வைத்து விடும் கொடுமைகள் இன்றும், இதோ இப்போதும் நடந்து கொண்டுதான்
இருக்கின்றது.
அன்று நாசிகளால் நசுக்கப்பட்ட யூதர்கள் இன்று பாலஸ்தீனியர்களை
நசுக்கிறார்கள் அங்கு. அன்று பார்ப்பனர்களால் நசுக்கப்பட்ட பிற்பட்டோர் இன்று
தாழ்த்தப்பட்டவர்களை நசுக்கிறார்கள் இங்கு. மதத்தின் பெயரால் மனித நேயம் மறந்த
மனிதர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகிறது அங்கு. திராவிடப் பண்பாடெனும் நோய் எதிர்ப்புத் சக்தியை
இழந்த, சாதி எனும் தொற்று நோயால் ஆக்ரமிக்கப்பட்டு மன நோயாளிகளாகிவிட்ட, பெயரளவில்
மட்டும் திராவிடர்களாய் வாழ்பவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கிறது இங்கு. என்று மாறும் இந்நிலை? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!
படங்கள் : இணையத்திருந்து. நன்றி: விக்கி
பதிலளிநீக்குஎழு ஆஸ்கார் விருதுகளை பெற்ற படத்தை பற்றி சொல்லிய விதம் அருமை அய்யா!
யூதர்களின் இன்றையை நிலையை ஆப்கானிஸ்தானில் அவர்களது நிலைப் பாட்டை நமது நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளோடு முடிச்சு போட்ட முடிச்சு சூப்பர் ஆசானே!
த ம + 1
நட்புடன்,
புதுவை வேலு
மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு..
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா.
ஒவ்வொரு தகவலும் பிரமிக்க வைக்கிறது. திறைப்படம் பற்றி சொல்லிய விதம் நன்று பகிர்வுக்கு வாழ்த்துக்கள் த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றிதம்பி ரூபன்! தங்களின் கருத்திற்கு..
நீக்குஅந்த ஆங்கிலப்படம் பார்த்ததில்லை. படம் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். மற்ற விவரங்கள் இப்போதுதான் கேள்விப் படுகிறேன். நல்ல பகிர்வு.
பதிலளிநீக்குகட்டுரையின் பிற்பகுதி, மருமகளைக் கொடுமைப்படுத்தும் மாமியார்களும் ஒரு காலத்தில் மருமகளாய் இருந்தவர்கள்தான் என்பதை நினைவு படுத்துகிறது. :)))))))
மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு..
நீக்குகீதா: ரெண்டாவதா எழுதிருக்கீங்க பாருங்க அது ரொம்ப சரிங்க....சூப்பர்....நான் அடிக்கடிச் சொல்லுவது ....
Padithen
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு..
நீக்குநிக்கோலாஸ் விண்டன்போற்றுதலுக்கு உரியவர்
பதிலளிநீக்குபோற்றுவோம்
தம +1
மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு..
நீக்கு---சென்ற வருடம் மறைந்த நடிகர் “லயாம் நீசனின்” (Liam Neeson) அருமையான நடிப்பு----
பதிலளிநீக்குதிரு துளசிதரன்,
நல்ல கட்டுரை. ஆனால் மேலே உள்ள தகவல் தவறானது. நீசன் இன்னும் நலமாகவே இருக்கிறார்.
மிக்க நன்றி நண்பர் திரு காரிகன் அவர்களுக்கு..தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு. விக்கியிலாவது அதை உறுதிப் படுத்தியிருக்க வேண்டும் நாங்கள் அதை வெளியிடும் முன்.....செய்யத் தவறிவிட்டோம். மிக்க நன்றி மீண்டும். இதோ மாற்றி விடுகின்றோம்.
நீக்குமிக்க மிக்க நன்றி மீண்டும்...
மனித நேயம் "கிலோ என்ன விலை...?" என்றாகி விட்டது...
பதிலளிநீக்குஅதச் சொல்லுங்க! டிடி !! மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு..
நீக்குவணக்கம்,
பதிலளிநீக்குதங்கள் பகிர்வு அருமை,
வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி சகோதரி! தங்களின் கருத்திற்கு..
நீக்குஅன்றைய நல்ல படத்திலிருந்து தொடங்கி,இன்றைஅய் அவலத்தில் முடித்து விட்டீர்கள்.காலம் பதில் சொல்லும்.
பதிலளிநீக்குமிக்க நன்றி சார்! தங்களின் கருத்திற்கு..
நீக்குநல்ல பகிர்வு அறியத்தந்தமைக்கு நன்றி ஆச்சரியமாக இருக்கிறது. எப்படிப்பட்ட மனித நேயம்.
பதிலளிநீக்குசரியான சமயத்தில் சரியான பதிவு கீதா & துள்சி.. பூனைக்கு யார் மணி கட்டுவது என்று யோசித்தே இதுபோன்ற பதிவுகளை நான் எழுதுவதில்லை. மிகுந்த தில்லோடு இதை எழுதிய உங்கள் இருவருக்கும் பாராட்டுகள்.
பதிலளிநீக்குஷிண்ட்லர்ஸ் லிஸ்டுடன் யூதர்ஸ் ஹிட்டையும் போட்டுத் தாக்கிட்டீங்க போங்க. :) !
குறும்படம் எடுக்க ஆரம்பித்ததில் இருந்து ஏராளமான திரைப்படங்களை பார்க்க ஆரம்பித்து விட்டீர்கள் என்று தெரிகிறது. அதனால் எங்களுக்கு நன்மையே! இன்னும் சற்று விரிவாக விமர்சனமா செய்துவிட்டால் படத்தை நேரில் பார்த்தது போலவே இருக்குமே! - இராய செல்லப்பா
பதிலளிநீக்குமிக்க நன்றி சார் தங்களின் கருத்திற்கு...இல்லை சார் இதெல்லாம் முன்பே பார்த்தது..இப்போது ஷின்ட்லர் கௌரவிக்கப்பட்டு செய்தி வந்ததால் இந்தக் கட்டுரை...
நீக்குஇப்படி ஆகும் என்று பெரியார் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார் ! பெரியாரை எங்கள் சாதிக்கார தலைவர் என்று அடையாளம் காட்டாமல் இருக்கிறார்களே ,அதுக்கு சந்தோசப் படணும்:)
பதிலளிநீக்குஆமாம் ஜி! மிக்க நன்றி ஜி தங்களின் கருத்திற்கு!
நீக்குஏழு ஆஸ்கார் விருதுகளை பெற்ற படத்தை பற்றி தெரிந்து கொண்டேன்..படத்தை பார்ப்பதற்கு எந்த தொலைக்காட்சியும் ஒளிபரப்பாது என்பதையும் தெரிந்து கொண்டேன் நன்றி!!!
பதிலளிநீக்குமிக்க நன்றி ந்ண்பரெ! தங்களின் கருத்திற்கு....
நீக்குநான் பார்க்க ஆசைப்பட்டு, பார்க்காத படங்களில் ஒன்று. தங்களுடைய பதிவு மூலமாகப் படத்தைப் பார்த்த உணர்வு. நன்றி.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா! தங்களின் கருத்திற்கு....மிக நல்லபடம் ஐயா!
நீக்குஇந்த படம் தியேட்டர்களில் ரிலீசான போதே பார்க்கவேண்டும் என்று நினைத்து முடியாமல் போனது. பின்னர் டிவிடி-காகா சென்னையில் பல கடைகள் ஏறி இறங்கி வாங்கிவிட்டேன்.
பதிலளிநீக்குமிக மெதுவாக நகரும் படம். அதிக பொறுமை தேவைப்படும் படம். ஆனாலும் அருமையான படம். பல தகவல்களை தந்தமைக்கு நன்றி நண்பர்களே!
த ம 10
மிக்க நன்றி நண்பரே தங்களின் கருத்திற்கு...
நீக்குநான் தமிழ் படமே அதிகம் பார்ப்பதில்லை! என்றால்!!!!?
பதிலளிநீக்குஅருமையானதோர் மனிதர்..... 700 சிறார்களை காப்பாற்றியது மட்டுமல்லாது, தான் செய்த இத்தனை பெரிய விஷயத்தினைப் பற்றி பெருமை பட்டுக்கொள்ளவில்லையே அவர் - இப்போது இருக்கும் அரசியல்வா[வி]யாதிகளோ........ மெட்ரோவை நாங்க தான் கொண்டு வந்தோம்னு அடிச்சுக்கறாங்களே!
பதிலளிநீக்குபகிர்ந்து கொண்டதற்கு நன்றி.