“ஏமாறாதே
ஏமாற்றாதே!” என்ற ஒரு இடுகையை கடந்த வருடம், ஏதோ ஒரு ஆஃபிரிக்க நாட்டு ராணுவ
அதிகாரியின், சிறைப்படுத்தப்பட்டிருக்கும் மகளிடமிருந்து எனக்கு வந்த ஒரு மின்
அஞ்சல் சார்ந்த நிகழ்ச்சிகளை வைத்து எழுதியிருந்தேன்.
எனக்கு அன்று வந்தது போன்ற
மின் அஞ்சல்கள் இப்போதும் பலருக்கும் வரத்தான் செய்கிறது. அதில் சிலரெல்லாம் இப்போதும் சிக்கி
ஏமாறாத்தான் செய்கிறார்கள் என்பதை நினைக்கையில், அண்மையில் நடந்த அது போன்ற வேறு
ஒரு நிகழ்ச்சியை உங்களுடன் பகிர்வது மிக அவசியம் என்று எனக்குத் தோன்றுகிறது.
திருவனந்தபுரத்தைச்
சேர்ந்த 67 வயதான ஒரு பெண்மணிக்கு முகநூலில் கிடைத்த ஒரு நட்பு. அது நாளுக்கு நாள் வளரத் தொடங்கியது. ஜான் கென்னடி எனும் போலி நண்பர், நம்
அம்மணியைப் பற்றிய விவரங்களையும் முகநூலில் இருந்து சேகரித்த பின், அவரது விருப்பங்களுக்கு
ஏற்ப அவருடன் சாட் செய்து அவரது மனதில் நல்ல ஓரிடத்தைப் பிடித்து மிகக் குறைந்த
நாட்களிலேயே அவரது நெருங்கிய ஒரு நண்பராகவே ஆகிவிட்டார். நட்பின் பரிசாக, தான் அவ் அம்மணிக்கு ஒரு வீடு
வாங்கித் தர 5 லட்சம் பௌண்டுடன் இங்கிலாந்திலிருந்து கேரளாவிற்கு வருவதாகச்
சொன்னதும் நம் அம்மணிக்கு ஒரே அதிசயம்.
ஜான் கென்னடி பேசுவதெல்லாம் டெல்லியிலிருந்து. அம்மணிக்கு வருவதோ இங்கிலாந்திலுள்ள ஒரு
தொலைபேசி எண்ணிலிருந்து. எனவே பாவம் நம்
சகோதரிக்கோ அவர் வீட்டாருக்கோ சந்தேகம் ஏற்படவே இல்லை.
ஒரு
நாள் அவருக்கு ஒரு ஃபோன் வருகிறது.
ஃபோனில் ஜான் கென்னடி. தான் அதிகமான பணத்துடன் இந்திய விமான நிலையத்தில்
வந்து இறங்கியதால் அதிகாரிகள் அவரை விசாரணை செய்வதாவும், உடனே ரூ 67,500 இந்தியப்
பணமாகத் தந்து தன்னை விடுவிக்க வேண்டுமென்று சொல்லி அருகிலிருக்கும் ரிசர்வ்
பேங்க் அதிகாரியிடம் நம் அம்மணியை ஃபோனில் பேசவும் வைத்திருக்கிறார். அதிகாரியாக நடித்தது கென்னடியின் நண்பரானதால்,
அவரது பேச்சு நம் அம்மணியை அடுத்த ½ மணி நேரத்தில் அவர் சொன்ன ஒரு அக்கவுன்ட் நம்பருக்கு ரூ67,500 ரூபாயை
அனுப்ப வைத்தே விட்டது. அதன் பின் இது
போல் பல முறை, பல பிரச்சனைகள் என்று சொல்லி நம் அம்மணியின் பணத்தைக் கறக்க
ஆரம்பித்து விட்டார் கென்னடி. மொத்தமாக
அபகரிக்கப்பட்ட தொகை 10 ½ லட்சம் ஆனதும் நம் அம்மணி போலீசாரிடம் புகார் செய்திருக்கிறார். போலீசார் மிக சாமர்த்தியமாக நம் அம்மணியை
கென்னடியுடன் மீண்டும் பேச வைத்து, அவர்களுக்குத் தேவையான பணத்தை நேரடியாக்க்
கொடுக்க டெல்லியிலுள்ள ஒரு மாலுக்கு அவர்களை வரவழைத்து அவர்களைப் பிடித்தே
விட்டார்கள்.
நைஜீரியாவைச்
சேர்ந்த டெல்லியில் தங்கி மோசடி செய்யும் ஒபேரோ சாட்டர்டே, பாஸ்கல் இக்கியோமா
எனும் இருவரையும் கைது செய்து திருவனந்தபுரத்திற்குக் கொண்டு வந்தும் விட்டார்கள்
நம் பாராட்டிற்குரிய போலீசார்கள்.
இப்படி
இடையிடையே எத்தனையோ பேர் குறிப்பாக நைஜீரியாவைச் சேர்ந்தவர்கள் கைது
செய்யப்பட்டாலும் மீண்டும் ஏமாற்ற இது போன்ற நைஜீரியாக்காரர்களும், ஏமாற கேரளா,
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர மாநிலக் காரர்களும் உருவாகிவிடுகிறார்கள். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கதை. ஏமாறுபவர்கள்
இருக்கும் வரை, ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். எனவே எல்லோரும் முகநூலில் நண்பர்களாகும்
வெளிநாட்டு நண்பர்களிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. முக்கியமாக அவர்கள் பண விஷயம் பேசும்
போது. யாரும் யாருக்கும் இலட்சக்கணக்கான
பணத்தை “தருகிறேன் வாங்கிக் கொள்ளுங்கள்” என்று சொல்ல மாட்டார்கள். அப்படி யாரேனும் சொல்கிறார்கள் என்றால்,
அவர்கள் அப்படி யாரிடம் சொல்கிறார்களோ அவர்களிடமிருந்து லட்சக்கணக்கான பணத்தைக்
கறக்கப் போகிறார்கள் என்று அர்த்தம். அந்த
வித்தையைக் கற்ற சில முகமூடி அணிந்த இக்கியோமா போன்ற நைஜீரிய நபர்கள் நம் முகநூலை
வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றார்கள் முகமூடிகளாய், மாற்றுப் பெயரில்.
ஜாக்கிரதை!!
படம் : கூகுள்
படம் : கூகுள்
ஹா ஹா ஹா, இங்கேயும் இந்தக் கூத்துக்கள் நடப்பதுண்டு, ஏமாந்த கதைகளும் ஏராளம் !!
பதிலளிநீக்குஆம் தெரியும் சகோதரி! மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு!
நீக்குபேராசை பெரு நஷ்டம். எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள்! ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களுக்குக் கொண்டாட்டம்தான்.
பதிலளிநீக்குஆமாம் நண்பரே இன்னமும் எவ்வளவு தெரிந்துகொண்டாலும் ஏமாறுகின்றார்களே...ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது! மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு!
நீக்குஎப்படி எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள்
பதிலளிநீக்குஆசைதானே ஏமாறுவதற்கு அடிப்படை
நன்றிநண்பரே
தம +1
மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு..
நீக்குஇப்படியும் ஒரு தில்லுமுல்லு...!
பதிலளிநீக்கும்ம் என்னத்த சொல்ல....மிக்க நன்றி டிடி! தங்களின் கருத்திற்கு..
நீக்குஇப்படியும் ஏமாற்றலாம் என்பதை கண்டு பிடித்து இருக்கும் இருவருக்கும் ,இன்டர் நேஷனல் ஃபிராட் அவார்டே கொடுக்கலாம் :)
பதிலளிநீக்குஹஹஹஹஹ் அதுவும் சரிதான்....மிக்க நன்றி ஜி!
நீக்குநல்ல பதிவு. நிறைய செய்திகள். பெரும்பாலும் இந்த விஷயத்தில் நைஜீரியா ஆசாமிகள் பெயர்களே அடிக்கடி செய்திகளில் அடிபடுகின்றன.
பதிலளிநீக்கு( த.ம.4 / தமிழ்மணத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஓட்டு சரியாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. )
ஆமாம் ஐயா! மிக்க நன்றி ஐயா! தங்களின் கருத்திற்கு..
நீக்குசிறந்த எச்சரிக்கைப் பதிவு
பதிலளிநீக்குஇணையவழி உலாவுவோர்
காண்பிப்பது என்னவோ
போலித் (Fake Information) தகவலே - அதை
நம்பித் தலையைக் கொடுத்தால்
தலை போகுமே!
மிக்க நன்றி நண்பரே! தங்களின் கவிதை கருத்திற்கு..!!
நீக்குஇப்படியெல்லாம் கூட நடக்கிறதா ? மிக்க நன்றி சகோ பதிவுக்கு. விழிப்புணர்வு அவசியம் தேவை.தான் .எங்கே என் பக்கம் காணவே இல்லை. ம்..ம்..ம் ஓ busy போல ok ok ..
பதிலளிநீக்கு!ஆம்! சகோதரி! இப்படி எல்லாம் நடக்கின்றது. மிக்க நன்றி சகோதரி! தங்களின் கருத்திற்கு..
நீக்குவந்தோமே சகோதரி! கருத்திட்டோம்....வராமல் இருப்போமா....
எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்...? விழிப்புணர்வு பதிவு நன்றி.
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோதரி! தங்களின் கருத்திற்கு..
நீக்குபயனுள்ள பதிவு. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை இவ்வாறாக நடக்கத்தான் செய்யும்.
பதிலளிநீக்குஉழைக்காமல் பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கை மனதில் துளிர் விடுவதே தவறு. மூடர் கொள்கை.
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு!
நீக்குவட்டத்தில் சிக்க வைத்துவிடுவார்கள் என்பதால் வட்டத்திற்குள் அருகில்கூட செல்வதில்லை த.ம 4
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே!தங்களின் கருத்திற்கு!
நீக்குதலைப்பு மிக பொருத்தம்
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோதரி தங்கள் கருத்திற்கு!
நீக்குஏமாற நான் தயார் என்று கங்கணம் கொட்டிக்கொண்டு பேராசையுடன் பலர் இருக்க, இப்படி தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கும்......
பதிலளிநீக்குநல்லதொரு எச்சரிக்கை பதிவு.
மிக்க நன்றி வெங்கட் ஜி! தங்களின் கருத்திற்கு!!!
நீக்குவணக்கம்,
பதிலளிநீக்குமனிதம் எங்கே செல்கிறது, கவனமாக இருக்க ஒரு அருமையான பதிவு,
வாழ்த்துக்கள்,
ஏமாரும் வரை ஏமாற்றுவார்கள்,
நன்றிகள்
மிக்க நன்றிசகோதரி! தங்களின் கருத்திற்கு!!!
நீக்குஇது போன்ற செய்திகளை அறிந்தபின்னும் படித்த மக்கள் கூட ஏமாறுவதுதான் வேதனை.ஆசை யாரை விட்டது!
பதிலளிநீக்குத ம 7:))
மிக்க நன்றி சார்! தங்களின் கருத்திற்கு!!!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஎல்லாம் பண ஆசை...யாரை விட்டது...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி தம்பி ரூபன்! தங்களின் கருத்திற்கு!!!
நீக்கு