வியாழன், 25 ஜூன், 2015

Poet The Great-குறும்படத்தின் முன்னோட்டக் காட்சி நிகழ்வும் வெளியீடும்

 
க்ளாசிக் கல்லூரி முதல்வர் திரு சோனி அவர்கள் ஊடகங்களுக்கு ஆங்கிலத்தில் அறிவித்தலை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை, மாணவ மாணவிகளுக்கு நிகழ்த்திக் காட்டுதல்.
  
POET THE GREAT” எங்களது ஐந்தாவது குறும்படத்தின் முன்னோட்டக் காட்சி, க்ளாசிக் காலேஜ், நிலம்பூர், மலப்புரம் மாவட்டத்தில் 19-06-2015 அன்று நடைபெற்றது. 
நிகழ்ச்சியைக் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தவர், நாடகங்களிலும், தொடர்களிலும், திரைப்படத்திலும் நடித்த, நிலம்பூர் ஆயிஷா  எனும் பழம் பெரும் நடிகை.  அவரது காலகட்டத்திலேயே புரட்சிகரமான சிந்தனைகள் கொண்ட ஒரு பெண். மிக மிக எளிமை.  நம் பக்கத்து விட்டுப் பெண்மணி போன்ற ஒரு தோற்றம் மட்டுமல்ல எல்லோருடனும் எளிமையாகப் பழகும் பெண்மணி. நாங்கள் இங்குக் கொடுத்திருக்கும் புகைப்படத்தைப் பார்த்தாலேயே உங்களுக்குத் தெரியும் நாங்கள் சொல்லுவது சரிதான் என்று. 
குத்துவிளக்கேற்றும் திரு சோனி அவர்கள்  க்ளாசிக் கல்லூரியின் முதல்வர் மட்டுமல்ல இந்தக் குறும்படத்தின் கதாநாயகனான எழுத்தச்சன் கதாபாத்திரத்தில் நடித்தவர். மிக மிக அருமையான மனிதர்!
தயாரிப்பாளர் குறும்பட டிவிடியை ஆயிஷா அவர்களிடம் வழங்கினார்.
குறும்படத்தின் டிவிடியை நிலம்பூர் ஆயிஷா அவர்களிடம் வழங்குதல்
ஆயிஷா அவர்கள் கதாநாயகன், முதல்வர் திரு சோனி அவர்களிடம், க்ளாசிக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு என்று டிவிடியை வழங்குகின்றார்.
  மிக அழகான ஆங்கில உச்சரிப்பில் மூன்றாம் ஆண்டு ஆங்கில இலக்கியம் பயிலும் மாணவி லுபின் வரவேற்புரை வழங்கினார். 
விழாவைத் தொகுத்து அளித்து, எழுத்தச்சனைப் பற்றி மலயாளத்தில் ஒரு அறிமுகம் வழங்கி, வாழ்த்துரையும் வழங்கிய திரு பிஜு பி டி அவர்கள்.  இவரும் க்ளாசிக் கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர்
விழாவிற்குத் தலைமை தாங்கி, தலைமை உரை ஆற்றும் திருமதி ஜோசி அவர்கள்.  PTA(Parent Teacher Association) தலைவி
நடிகை, நிலம்பூர் ஆயிஷா அவர்கள் சிறப்புரை ஆற்றுகின்றார்.  ஒரு குறிப்பிட்ட மத சமூகத்தைச் சார்ந்த, பெண்களுக்கு அவ்வளவாகச் சுதந்திரம் இல்லாத காலகட்டத்திலேயே புரட்சிகரமான சிந்தனைகளுடன், இப்போது இருப்பது போல் எந்தவிதமான ஆதரவோ,  ஊடகத் தொழில்நுட்பமோ வளர்ந்திராத காலகட்டத்தில் தன் சமூகத்திற்கு எதிராக வெளியே வந்து, போராடித் தனது திறமையை உலகிற்கு அறிவித்தவர்.  பாராட்டப்பட வேண்டியப் பெண்மணி.  அவரைப் பற்றி மேலும் அறிய இந்த விக்கி சுட்டியைச் சொடுக்கவும். https://en.wikipedia.org/wiki/Nilambur_Ayisha  அவருக்கு எங்களது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். அவர் இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்து, எதிர்கால சந்ததியினர் தங்களது கலை திறமையைத் தைரியமாக வெளிக் கொணர்ந்து மிளிர வெண்டும் என்று எல்லோரையும் ஊக்குவித்து சிறப்புரை ஆற்றினார். 

க்ளாசிக் கல்லூரி ஆசிரியர் திரு ஷாஜி அவர்கள் வாழ்த்துரை வழங்குதல்

க்ளாசிக் கல்லூரி ஆசிரியர் திரு ஷெரில் பாபு அவர்கள் வாழ்த்துரை வழங்குகின்றார்
க்ளாசிக் கல்லூரி ஆசிரியை ஸ்ரீலதா அவர்கள் வாழ்த்துரை வழங்குகிறார்
க்ளாசிக் கல்லூரி ஆசிரியர் திரு ப்ரசாத் அவர்கள் வாழ்த்துரை வழங்குகிறார்.
மூன்றாம் ஆண்டு ஆங்கில இலக்கியம் பயிலும் மாணவி நமிதா தாஸ்,   நல்ல ஆங்கிலத்தில் நன்றி உரை வழங்க, விழா இனிதே முடிந்து, படம் திரையிடப்பட்டது.

           மாணாவ, மாணவிகள் அவர்களது கல்லூரி முதல்வர் திரு சோனி சார் அவர்கள் இதில் எழுத்தச்சனாக, கதாநாயகனாகத் திரையில் தோன்றியதும், கைதட்டி ஆரவாரம் செய்தனர்.  படம் முடிந்தபின் ஒரு கலந்துரையாடல் நிகழ்வு ஆங்கிலத்தில் பேசி நடத்தினோம். படம் பிடித்திருந்ததா, எந்தக் கதாபாத்திரம் பிடித்திருந்தது, எந்தக் காட்சி, எந்த வசனம் பிடித்திருந்தது என்பதை அவர்களிடம் கேட்டு அவர்களை ஆங்கிலத்தில் அதைப் பற்றிச் சொல்லச் சொன்னோம்.  அவர்களிடம் முதலில் ஒரு சிறு தயக்கம் இருந்தாலும், பின்னர் அழகாக பதிலுரைத்தனர்.  
படம் பார்க்கும் முன், உரையாடல்,படத்தைப் பற்றிய சுவரொட்டியைப் பார்த்து உரையாடல், 
குழு சார்ந்த கலந்துரையாடல் என்ற நிகழ்வுகளை மாணவ மாணவிகளை ஆங்கிலத்தில் உரையாட, பேச வைத்து ஊக்கப்படுத்தினோம்.  அனைத்து மாணவ மாணவிகளும் திறமையானவர்கள் என்பதையும் அறிய முடிந்தது.
பின்னர் படம் பார்த்தபின் குழு சார்ந்த உரையாடல்,
   டயரி எழுதுதல், இரண்டாம் ஆண்டு பிகாம் மாணவி
மாணவ, மாணவிகளை, படத்தில் பங்கு பெற்றவர்கள் சிலரிடம் நேர்முகக் காணல் போன்றவற்றையும் ஆங்கிலத்தில் பேசவைத்தோம்.  
அன்றைய நிகழ்வு முழுவதும் மாலை 6 மணியளவில் இனிதே முடிவடைந்தது. க்ளாசிக் கல்லூரி முதல்வர் முதல், ஆசிரியர்கள், பிற பணியாளர்கள் வரை அனைவரும் எங்களுக்கு மிகவும் ஆதரவளித்து, உற்சாகம் அளித்து, விருந்தோம்பல் செய்து மகிழ்ந்ததை நினைத்து நாங்களும் மிகவும் மகிழ்ந்தோம்.  எங்கள் குழுவினர் அனைவரும் எங்கள் மனதார்ந்த நன்றிகளையும், வணக்கங்களையும் கல்லூரி சார்ந்த அனைவருக்கும் சமர்ப்பிக்கின்றோம்.  எங்கள் வாழ்வில் மறக்க முடியாத மிக நல்லதொரு அனுபவமாக அமைந்தது என்றால் மிகையல்ல.  க்ளாசிக் கல்லூரி அனைத்து மாணவ மாணவிகளுக்கும் எங்கள் குழு அனைவரதும் மனமார்ந்த வாழ்த்துகள்! 

குறும்படத்தின் சுட்டி இதோ இங்கு.....
https://www.youtube.com/watch?v=Ma6nYO5k4Eg (Poet the Great with tamil subtitile - 1)  https://www.youtube.com/watch?v=daoNCAIbXv8  (Poet the Great with tamil subtitile - 2) 


பின் குறிப்பு: மாணவ மாணவிகள் கலந்து கொண்ட நிகழ்வுகள் அனைத்தும் படம் பிடிக்கப்பட்டுள்ளது.  அந்தத் தொகுப்பு விரைவில் யூட்யூபில் பதிவேற்றம் செய்யப்படும்.  இந்த நிகழ்வின் காரணமாகப் பிரயாணத்தில் இருந்தமையால் நண்பர்களின் வலைத்தளங்களுக்கு வர இயலவில்லை.  பல இடுகைகள் விடுபட்டுள்ளன. இன்றிலிருந்து மீண்டும் வலைத்தளம் வந்து எல்லா பதிவுகளையும் வாசிக்கின்றோம். 

34 கருத்துகள்:

  1. குறும்படத்தை முழுமையாகப் பார்த்தேன். கதாபாத்திரங்களின் தேர்வு, நடிப்புப்பாணி போன்றவை அருமையாக உள்ளன. ப்ளாஷ்பேக் நிலையில் அமைத்துள்ள விதம் பாராட்டத்தக்க வகையில் உள்ளது. இம்முயற்சியில் ஈடுபட்ட கலைஞர்கள், தொழில்நுட்பாளர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள். விழா நிகழ்வுகளையும் பார்த்தேன். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா. முதலில் வருகைதந்து பார்த்து ரசித்து பாராட்டிக் கருத்திட்டமைக்கு மிக்க மிக்க நன்றி ஐயா! தங்களைப் போன்றோரின் ஊக்கம் தான் எங்களை வழி நடத்திச் செல்கின்றது ஐயா! நன்றி!

      நீக்கு
  2. கூகிள் ப்ளஸ்ஸில் ஜம்புலிங்கம் ஐயா பகிர்ந்திருந்த லிங்க் வழி சென்று படத்தை ரசித்தேன்.

    படத்தை ரசித்தேன். வசனங்கள் எல்லோருக்கும் புரியும் வண்ணம் நிறுத்தி நிதானமாக பேசப்பட்டிருப்பது சிறப்பு.

    பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ஜம்புலிங்கம் ஐயாவுக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம்! தங்களின் கருத்திற்கு...ஆவியைப் பார்த்தீர்கள் தானே?!! பொன்னியின் செல்வன் ஆழ்வார்க்கடியான் நினைவுக்கு வந்தார் தானே தாங்களுக்கு? என்ன அந்த உச்சிக் குடுமி இல்லாத குறைதான்....இல்லையா?!!!!!

      நாங்களும் பதிவை பதிவேற்றம் செய்துவிட்டு எல்லாவற்றிலும் இணைக்க முயன்ற போது கூகுள் + வரவே இல்லை. முகநூல் சென்றால் முதலில் மால்வேர் என்று வந்து பயமுறுத்தியது. கணினி மிக மெதுவாக மூச்சு விட்டது.....பின்னர் ஏதோ ஒரு அப்ளிகேஷன் வந்து ஒட்டிக் கொண்டிருந்தது. அது என்ன என்று பார்த்து அதை நீக்கிய பின் தான் கணினியின் மூச்சு சீரானது. உடனே எல்லாவற்றிலும் பகிர்ந்து விட்டோம்....

      அதற்கு முன் பகிர்ந்து கொண்ட திரு ஜம்புலிங்க ஐயா அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள் பல!

      நீக்கு
    2. முதலில் நான் வந்தபோது தமிழ்மணம் சப்மிட் செய்யப் பட்டிருக்கவில்லை. இப்போது வாக்களித்து விட்டேன்.

      நான் பார்த்தது இரண்டாம் பாகம் மட்டும்! பின்னர் ஆனந்துடன் பேசினேன். அவர் முதலாம் பாகம் பற்றிக் குறிப்பிட்டார். (நான் பால கணேஷைக் காணோமே என்ற போதுதான் இந்த விவரம் தெரிந்தது!)

      குடந்தையார், பால கணேஷ், துளசிஜி ஆகிய நீங்கள்,ஆனந்த் எல்லோரையும் ரசித்தேன். ஆம், ஆனந்தைப் பார்த்தால் ஆழ்வார்க்கடியான் நினைவுக்கு வந்தது நிஜம்.

      அறிமுக விழாவும் கன ஜோர்.

      நீக்கு
    3. மிக்க நன்றி வாக்கும் அளித்து முதல் பாகமும் பார்த்ததற்கு.....இரண்டாம் பாகம் பார்க்கும் போது புரிந்திருக்காதே....

      நீக்கு
  3. நிறையவே உழைத்டிருக்கிறீர்கள் என்று தெரிகிறது The proof of pudding is in eating வாழ்த்துக்கள். குறும்படம் பார்த்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சார்! தங்களது கருத்திற்கும், வாழ்த்திற்கும்.....

      நீக்கு
  4. அய்யா வணக்கம்,
    தங்கள் தளத்திற்கு 3 முறை வந்து, இப்ப தான் எனக்கு கருத்துபெட்டி வந்தது,
    தங்களின் உழைப்பு அருமையாக உள்ளது,
    தங்களுடன் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்,
    பதிவையும் அழகாக சொல்லியுள்ளீர்கள்,
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி! தங்களின் விரிவான கருத்திற்கும் வாழ்த்திற்கும்....

      நீக்கு
  5. குறும்படத்தை பார்த்தேன். நிதானமாக, அழகாக எடுத்து இருக்கிறீர்கள். தங்கள் அனைவரின் உழைப்பும் நன்கு தெரிகிறது.பிள்ளை பிரசவித்த பின் சிரிக்கும் போது அனைத்தும் மறந்து விடும் அல்லவா...? பாராட்டுக்களுடன் கூடிய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி தங்களின் கருத்திற்கு! பாராட்டிற்கும்.....வாழ்த்திற்கும்...

      நீக்கு
  6. படத்தை பார்த்து ரசித்தேன் கிளைமாக்ஸ் முற்று பெறாத மாதிரி ஒரு ஃபீலிங்க்ஸ் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம்ம் ஜி அது காட்சியாக்கப்படாமல், வசனத்தில் சொல்லப்பட்டு விடுவதால் இருக்கலாம் ஜி....மிக்க நன்றி ஜி!

      நீக்கு
  7. அருமையாக உள்ளது... அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்... நன்றிகள்...

    பதிலளிநீக்கு
  8. எனக்கு எந்த கதாபாத்திரம் கொடுப்பதாக இருந்தது என்று எனக்கு மட்டும் அல்ல... வீட்டில் உள்ள அனைவருக்கும்...

    பதிலளிநீக்கு
  9. இடுகையைப் படித்தேன் படம் பார்க்கவில்லை.
    மீண்டும் வருகிறேன் ஆசானே!
    நன்றி

    பதிலளிநீக்கு
  10. இதை எழுதியது தோழியா? அண்ணாவா!!! எனக்கெனவோ background ல கீத்து வாய்ஸ் கேட்டுகிட்டே இருக்கு! படத்தை பார்த்துட்டு மீதம் சொல்றேன் சகாஸ்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணாவும், கீத்துவும் சேர்ந்து எழுதியதுதான்......அட கரெக்டா சொல்லிட்டீங்களே...கீத்து வாய்ஸ் கேட்டுக்கிட்டே இருக்குனு.....வாங்க வாங்க எப்போ வேணாலும்.....

      நீக்கு
  11. வணக்கம் சகோ.மீண்டும் தங்களை வலைத்தளத்தில் காணவும் மகிழ்ச்சியாக உள்ளது நீங்களும் மைதிலியும் இல்லாமல் வலையே வெறிச்சோடிக் கிடந்தது போல் இருந்தது. மீண்டும் இருவரையும் காணவும் ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.
    பதிவில் அனைத்து விபரங்களும் பார்த்து அறிந்து ரோம்ப பிரமிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. குறும்படத்தை பார்த்து விட்டு மீண்டும் வருகிறேன். தங்களுக்கும் பங்கு பற்றிய அனைவர்க்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். முக்கியமா கீதாவிற்கும். நன்றி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி! தங்களின் வருகைக்கும் அன்பான கருத்திற்கும்....

      நீக்கு
  12. ஆஹா! அருமை சகோ..நன்றாக உள்ளது. உங்கள் நடிப்பு அபாரம். ஆவி, கணேஷ் அண்ணா, குடந்தை சரவணன் சகோ எல்லோரும் கலக்கியிருக்கிறீர்கள். பாடல் அருமை, கீதா தானே பாடியது? மிகவும் இனிமையாக இருக்கிறது. பெரும்புலவராக நடித்திருக்கும் முதல்வர் அவர்களின் நடிப்பும் பிரமாதம். காஸ்ட்யூம், ஒப்பனை படம்பிடித்த இடம் எல்லாம் அருமை. மொத்தத்தில் அருமையான படம் அண்ணா. மனம் நிறைந்த வாழ்த்துகள், உங்கள் குழுவிற்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி! ஆம் கீதாதான் பாடியது...

      வாழ்த்துகளுக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி சகோதரி..

      நீக்கு
  13. குறும் படத்தினைக்கண்டு ரசித்தேன்
    உழைப்பின் வெளிப்பாடு கண்டு மகிழ்ந்தேன்
    படத்தின் பணியில் ஈடுபட்ட ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்களைப் தெரிவிப்பதில் பெருமை கொள்கின்றேன்
    வாழ்த்துக்கள்
    தம +1

    பதிலளிநீக்கு
  14. சகோ துளசி & கீதா,

    இரண்டு காணொளிகளையும் பார்த்து ரசித்தேன். இக்கதையைப் படமாக்கவும் மிகப்பெரிய தைரியம் & உழைப்பு வேண்டும். திறம்படச் செய்த உங்கள் குழுவினருக்குப் பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் !

    ஹ்ம்ம்ம் ? படம் முடிந்தும் கீதாவின் குரல் ஒலித்துக்கொண்டே உள்ளதே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி.....ஹஹஹ சகோதரி அது எஸ்பிபி......ஜோக்ஸ் அபார்ட்....கீதாவின் குரலும் உள்ளதுதான்....

      நீக்கு
  15. குறும்படம் பார்த்து ரசித்தேன் சகோ நன்றாக வந்துள்ளது அனைத்தும். யாரையும் எனக்கு அடையாளம் தெரியவில்லை நல்ல தெளிவாக இருந்தது காணொளி. முதல் நடனமும் பாடலும் அசத்தல் தான் இன்னும் என் காதுகளில் கணீரென்று ஒலித்துக் கொண்டே இருக்கிறது பாடல். அவர் தான் கீதவா அல்லது யார் பாடுகிறார்கள். மிக்க நன்றி சகோ ! அனைவருக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா தான் பாடுகின்றார்.....மிக்க நன்றி சகோதரி பாராட்டிற்கும் வாழ்த்திற்கும்...

      நீக்கு
  16. இரண்டு காணொளிகளையும்
    கண்டு இரசித்தேன்.
    தமிழில் இணை எழுத்து இருந்தது
    மிகச் சரியாக உணர்ந்து பார்க்க முடிந்தது
    ஒளிப்பதிவு,நடிப்பு,வசனம், பின்னிசை இயக்கம்
    அனைத்தும் அற்புதம்
    கலைஞர்கள் அனைவருக்கும்
    மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு