புதன், 3 ஜூன், 2015

POET THE GREAT படப் பிடிப்பிற்கு முன் - பின்.....

எங்கள் குறும்படத்திற்காகச் சென்ற போது எனது பயண அனுபவக் குறிப்பே இந்தப் பதிவு.  இந்தப் பயணக் குறிப்பு, பயணக் குறிப்பு எழுதுவதில் வல்லவர்களான, நம் நண்பர்கள், வெங்கட்ஜி, சகோதரி துளசி கோபால், கூட்டாஞ்சோறு செந்தில், சீனு போன்றவர்களின் குறிப்பு போல் எல்லாம் இருக்காது. என்றாலும் எனக்குத் தெரிந்த வகையில் பகிர்கின்றேன்.

எனது பயணம் இப்போதெல்லாம், எனது மூன்றாம் கண் (மகனிடமிருந்து எனக்கு) வந்ததிலிருந்து அது இல்லாமல் லோக்கல் பேருந்தில் கூட பயணம் செய்வதில்லை! அது போன்றுதான் எனது மூன்றாவது செவியும்! இவை இரண்டும் எனது கவசங்கள்!

எனது பயணத்தின் ஆரம்பம் பெரிய அளவு முக்கியமானது இல்லை என்றாலும், போகிற போக்கில் சொல்லிப் போகலாமே என்று குறிப்பிடுகின்றேன். குறும்பட ஷீட்டிங்க் தேதி மே 3, 4.  பாலக்காட்டில்.  அதற்காக, முன்னதாகவே எனது பயணத் தேதிகள் முடிவாகி, காதுப் பிரச்சனையால் எல்லாம் குளறுபடியாகி, இறுதியில் மே1 ஆம் தேதி பயணம் செய்ய இரு ரயில்களில் பதிவு செய்து, இறுதியில் காலை 4.45 ற்கு கௌஹாத்தியிலிருந்து சென்னை வழி திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் தான் இடம் உறுதியானது.

 இதுவரை இந்த ரயிலில் பயணித்தது இல்லை.  ரயிலில் ஏறுவதற்கு முன் அப்படியே திகைத்துவிட்டேன்.  எனது பயணப் பைகளை எங்கு வைத்து ஏறுவது என தெரியாமல் குழம்பினேன். அந்த இடம் முழுவதும் ஆட்கள் நிறைந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். கால் வைப்பதற்குக் கூட இடம் இல்லை. எப்படி ஏறி எனது பயணப் பையுடன் உள்ளே எனது இடத்திற்குச் செல்வது என்று முழி பிதுங்கிவிட்டேன். முழுவதும் வட கிழக்கு மாகாணங்கள், பெங்கால், ஒரிசாவிலிருந்து வரும் இளைஞர் கூட்டம்.  அந்த இடத்தில் மட்டுமல்ல, அந்தப் பெட்டி முழுவதும் ஆண்கள்தான்.  ஒரே இருட்டு, எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்ததால். பெண் வாசனை நான் மட்டுமே.  எனது இருக்கை எண்ணைக் கண்டுபிடித்துச் சென்று பார்த்தால் அதிர்ச்சி.  அந்தக் காபின் முழுவம் இளைஞர்கள் தான்.  அதுவும் 6 பெர்த்தில் 14 பேர் படுத்திருந்தார்கள்.  தரையில் இருவர் 16 சைட் பெர்த்தில் மேலும் கீழுமாக 4 பேர்......இவர்கள் எல்லோர் நடுவிலும் இடம் இல்லாமல் நான் நின்று கொண்டிருக்க...பயணச் சீட்டு பரிசோதகர் வருவார் என்று பார்த்தால் வரவே இல்லை. எனக்கு இருக்கை கிடைத்தது என்னவோ 6 மணி அளவில்தான். அதுவும் அந்தக் கூட்ட நெரிசலில். எவரும் எழுந்திருக்கவே இல்லை 7 மணி வரை. எனக்குப் பயம் இல்லை என்றாலும் கூட்டத்தில் அமர்வது சற்றுக் கஷ்டமாகத்தான் இருந்தது. 

இளைஞர்கள் எல்லோரும், வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்காளம், ஒரிசா, ஆந்திரா/தெலங்கானா மாநிலங்களில் இருந்து கேரளாவில் கட்டுமானத் தொழிலுக்கும், சாலை அமைப்பு, மற்றும் அங்கு தற்போது எர்ணாகுளம், ஆலுவா பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மெட்ரோ இரயில் பாலம் கட்டும் தொழிலுக்கும் ஒரு ஏஜண்டின் மூலம் வரவழைக்கப்பட்டவர்கள் என்பது தெரியவந்தது.  கேரளம், தமிழ்நாடு மற்றும் பங்களூர் பகுதிகளில் இப்போது இவர்களின் வரவு அதிகம்.  அதனால், இந்த மூன்று மாநிலங்களில் இருந்தும் இவர்களைப் பற்றிய புகார் கூக்குரல்கள் அவ்வப்போது எழுந்து கொண்டுதான் இருக்கின்றது. என்றாலும் பள்ளிக்கூட வாசனை அறியாத அந்த இளைஞர்களின் வயிற்றுப் பிழைப்பு இதுதான்.  ரயிலில் நான் அந்தக் கூட்டத்தை எடுத்த புகைப்படங்கள் எப்படியோ தவறி எனது கவனக் குறைவால் அழிந்துவிட்டது.

அந்தப் பெட்டியில் இருந்த பெரும்பான்மையான ஆண்கள்/இளைஞர்கள் மேல் சட்டை அணியாமல், அரை கால் சட்டை மட்டுமே அணிந்திருந்தார்கள். பலர் 15 - 18 வயதில் தான் இருந்தார்கள். எல்லோரும் ஏதோ ஒரு பொடியை அவ்வப்போது கையில் எடுத்து அதை நம்பியார் ஸ்டைலில் கைகளைத் திருகி மூக்கில் அடைத்துக் கொண்டார்கள். என்ன பொடியோ? என்ன பழக்கமோ? அதில் அவர்களுக்கு என்ன சுகமோ, மாயமோ தெரியவில்லை!  எல்லோருக்கும் மூக்கிலிருந்து ஒரு வஸ்து ஒழுகிக் கொண்டிருந்தது. அதை அவர்கள் ஒரு அழுக்கு டவலால் துடைத்துக் கொண்டிருந்தார்கள் இல்லை என்றால் கையால்.  குழந்தைகள் எப்படி வளர வேண்டும், வளர்க்கப்பட வேண்டும், குடும்ப அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று உளவியல் ரீதியில் நான் சிந்திப்பதாலோ என்னவோ, அவர்கள் வளர்ந்த சூழலை நினைத்து மனம் கனத்தது.  மட்டுமல்ல நமது நாடு இன்னும் முன்னேறவே இல்லை என்றும் தோன்றியது. இப்படியாக எனது பயணம் கோயம்புத்தூரிலும், பாலக்காட்டிலும் ஒரு ப்ரேக் எடுத்துக் கொண்டது.  படப்பிடிப்பு பற்றி துளசி எழுதி விட்டதால், இங்கு அதற்கு சென்சார் கேட்டோ....இனி எனது பயணம் கேரள எல்லையில் அதனால் அவ்வப்போது மலையாளத்தில் சம்சாரிக்க்கும் கேட்டோ...

படப்பிடிப்பிற்குப் மறு நாள் துளசி குடும்பத்தாருடன், ஆவியும், நானும் மலம்புழா அணைக்கட்டிற்குச் சென்றோம்.  எனது மூன்றாவது கண்ணிற்குப் பணம் கட்டாமல் நான் தெரியாமல் உள்ளே எடுத்துச் சென்றதால், அது பொருட்கள் வைக்கப்படும் அறைக்குள் வைக்கப்பட்டுவிட்டது.  அதனால் புகைப்படங்கள் இல்லை. எனக்கு அத்தனை சுவாரஸ்யம் இல்லை அணைக்கட்டில்.  நான், ஆவி, துளசி மூவரும் அமர்ந்து சம்சாரித்தோம். அதன் பின் துளசி அவரது குடும்பத்தார் குழந்தைகளுடன் செல்ல, நானும், ஆவியும் சம்சாரித்துக் கொண்டிருந்தோம். மழை பெய்த போதும், வெயிலின் கடுமையாலோ என்னவோ, மலம்புழா அத்தனை சுவாரஸ்யமாக இல்லாததால் அதைப் பற்றி இங்கு நான் எதுவும் சொல்லவில்லை. 


துளசி குடும்பத்தாருடன் எர்ணாகுளம் பயணம். அங்கு துளசியின் சகோதரரின் மகனது திருமணத்திற்குச் செல்லும் உபயத்தில் எர்ணாகுளத்தப்பன், எர்ணாகுள படகுத் துறை, லுல்லு மால், செம்மந்தட்டா கோயில் பற்றி. துளசி கார் ஓட்ட, நிலம்பூரிலிருந்து, பட்டாம்பி, திருச்சூர் வழி எர்ணாகுளம் செல்லான் 6 மணிக்கூரே என்னாலும், கிட்டத்தட்ட 8 மணி நேரம் ஆகிவிடுகின்றது. இடையில் கேரளத்து கடிக்கான் (தின்பண்டங்கள்) பண்டங்களைக் கடிக்காது போகான் பற்றுவோ?! கேரளத்து நெய்யப்பம், கேக் (இது கேக் அல்ல ஒரு இனிப்பு) பக்கவட (பக்கோடா அல்ல) மைதாவில் செய்யப்படும் வடை, எல்லாம் கடிச்சு! என்னைப் போன்ற சாப்பாட்டுப் பிரியர்கள் உங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள்!


எர்ணாகுளத்தை அடைந்தவுடன், மெட்ரோ பணியினால் சென்னையைப் போல அங்கும் போக்குவரத்து நெரிசல்.  இஞ்ச் இஞ்சாக நகர்தல். ஆனால், துளசிக்கு ரொம்ம்ம்ம்ம்ம்பவே பொறுமை!  எந்தவித எரிச்சலும் இல்லாமல் (என்னைப் போன்று! இப்படித்தான் சைக்கிள் காப்ல நம்மளப் பத்தி எடுத்து விட்டாத்தான் உண்டு. அதுவும் துளசிக்குப் போட்டியாக!!!) இ மனுஷன் இ லோகத்து மனுஷனோ என்று வியப்படைய வைக்கிறார்! 
Image result for GOD'S OWN COUNTRY BOARDS IN KERALAImage result for GOD'S OWN COUNTRY BOARDS IN KERALA
நிலம்பூரிலிருந்து பயணம் செய்த வழி நெடுகிலும், இரு புறமும், பசுமை, நீர் வளம், புழைகள் என்று ஒரே கண்ணுக்குக் குளிர்ச்சிதான் போங்க....எனது மூன்றாவது கண்ணிற்கு வேலை அதிகம்....முடிந்த வரை அதை ஜன்னலுக்கு வெளியில் திறந்தே வைத்து சிமிட்டிக் கொண்டே வந்தேன். துளசி, “நிறுத்தட்டுமாடா, நல்லா எடுத்துக்கடா..நம்ம பதிவுக்கு.” என்றார்.  நான், என்னால் நேரம் அதிகமாகிவிட வேண்டாம் என்பதாலும் பொறுமையின் சிகரமான அந்த மனுஷருக்கே நான் ஆப்பு வைத்து விடக் கூடாது என்பதால், வேண்டாம் என்றுவிட்டேன். ஆனாலும், இந்தக் கேரளத்துக்காரர்களுக்குக் கொஞ்சம் தற்பெருமை அதிகம்தான்.  எங்கு பார்த்தாலும், “KERALA- GOD’S OWN COUNTRY” என்ற போர்டுகள். 

அப்படி என்றால் மற்ற மாநிலங்கள்? எங்கள் வெங்கட்ஜியின் பதிவுகளைப் படியுங்கள். வட கிழக்கு, வட மேற்கு மாநிலங்களும் கடவுளின் மாநிலங்கள்தான் என்பதைத் தெரிந்து கொள்வதற்கேனும் தமிழ் கற்றுக் கொள்ளுங்கள்.  ஏன் தமிழ்நாடும் தான்! இப்படி இடையில் புகுந்து நம் பெருமையையும் சொல்லிக் கொள்ள வேண்டும். இதைப் பற்றி எழுத வேண்டும் என்றால் தனி பதிவு வேண்டும். எனவே இங்கு இதற்கு ஒரு முற்றுப் புள்ளி.

காயல் - படகுத் துறை

நாங்கள் ஒரு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கி, மறுநாள் முதல் வேலையாக அருகில் இருந்த எர்ணாகுளத்தப்பன் எனச் சொல்லப்படும் சிவன் கோயிலுக்குச் சென்றோம்.  அது நகரின் மையத்தில், மிகப் பெரிய காயலின் – மிகப் பெரிய படகுத் துறைக்கு எதிர்த்தாற் போல் அமைந்துள்ளது.  படகுத் துறை பற்றியும், ஆசியாவிலேயே மிகப் பெரிய மால் என்று சொல்லப்படும் லுல்லு மால் (இது சரியல்ல என்பது எனது வாதம். சிங்கப்பூரில் இருக்கும் மால் தான் ஆசியாவிலேயே மிகப்பெரிய மால்) பற்றியும் அடுத்த பதிவில்.

எர்ணாகுளத்தப்பன் கோயில்.  வேறு படங்கள் எடுக்க அனுமதி இல்லை.

இப்போது எர்ணாகுளத்தப்பன் பற்றி. இந்தச் சிவன் கோயில் சேரர்களின் ஆட்சிக் காலத்தில் மிகவும் முக்கியமாகக் கருதப்பட்ட ஒரு கோயில் என்று முதன்முதலாகச் சங்க கால இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது. அதற்கான பாடலைத் தேடிப்பார்த்தேன் கோயிலில் எங்கும் காணவில்லை. தமிழ் எங்கும் இல்லை. ஒரு வேளை என் கண்களில் புலப்படவில்லையோ எனவோ.  கூட்டம் வேறு. கல்வெட்டுகள் போன்று எதுவும் இல்லை.  அங்கிருந்த கோயில் தேவசம் போர்ட் ஒருவரிடமும், மற்றும் நம்பூதிரி ஒருவரிடமும் கேட்டேன். அவர்களுக்கு சேர வரலாறு தெரிந்திருக்கவில்லை.  கல்வெட்டுகள் எதுவும் பற்றிக் குறிப்பிடவில்லை. சேர ஆட்சியில் ஏரி நாள் குளம் (அதாவது எப்போதும் தண்ணீர் நிறைந்திருக்கும் ஏரி- அதான் அந்தக் காயல்) என்பது, சேர ஆட்சி கவிழ்ந்து நாயர்களின் கைக்கு வந்த போது அது எர்ணாகுளம் என்றாகியது. (அந்தக் கோயிலில் இருக்கும் புனிதமான குளத்தை நினைவுகூரும் வகையில்) அதன் பிறகு இது கொச்சி அரசாட்சியின் கீழ் வந்தது. பின்னர் கொச்சிக் கோட்டை, 17 ஆம் நூற்றாண்டில் டச்காரர்களின் வருகையால் அவர்களின் கீழ் வந்ததும், கொச்சியை ஆண்டவர்கள் எர்ணாகுளத்தைத் தங்களது தலைநகரமாக மாற்றிக் கொண்டார்கள். மட்டுமல்ல இந்தக் கோயிலை அடுத்து தங்களது அரண்மனையை நிறுவினார்கள். அரசர்களின் ஆதரவும், பாதுகாப்பும் கிடைத்ததால் கோயில் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது. இந்தக் கோயிலின் இறைவன் அந்த நகரின் பாதுகாவலன் என்று அறுதியிட்டு முடிவாக்கப்பட்டதால், கொச்சி ஆட்சியாளர்களுக்கும் பழமையான எடப்பள்ளி நாயர் நிலப் பிரபுக்களுக்கும் கருத்து வேறுபாடு வந்தது.

அதன் பிறகு, இந்தக் கோயில் கொச்சி திவான் திரு எடக்குன்னி சங்கர வாரியரால் புதுப்பிக்கப்பட்டு இரு கோபுரங்கள் அமைக்கப்பட்டது. 1846 ல் பொது மக்கள் வழிபாட்டிற்கு விடப்பட்டு, அரச கோயிலாக உயர்த்தப்பட்டு, கொச்சி தேவசம் போர்டின் கீழ் வந்தது. 1949 ல் கொச்சி இந்தியப் பகுதியுடன் இணைக்கப்பட்டதும், தேவசம் போர்டு அரசின் கீழ் வந்து இன்று வரை அது தொடர்கின்றது. இது எனக்கு கூகுள் தேவதை தந்த வரலாறு.

முருகன் கோயில்

 லிங்க வடிவில் இறைவன்.  கௌரிசங்கரர் அரபிக் கடலை-காயலை நோக்கி வீற்றிருக்கின்றார். அர்ஜுனன் வழிபட்டதாகச் சொல்லப்படும் கீர்த்தமூர்த்தி லிங்க வடிவில் கருவறையின் வடக்குப் பகுதியில் ஒரு புறம் இருக்கின்றார். தெற்குப் பகுதியில் விநாயகர். கருவறையின் பின் புறம் பார்வதி தேவியின் இடம். அதனால் கிழக்கு முகப்பு தேவியின் முகப்பு என்று சொல்லப்படுகின்றது. இந்த வளாகத்திற்குள் சமீபத்தில் கட்டப்பட்ட முருகன் கோயிலும் அழகாக இருக்கின்றது. முருகன் எப்போதுமே தனியாகத்தான் இருப்ப்பார்.  அப்போதே அவர் அண்ணனிடம் ஞானப் பழத்திற்காகப் போட்டியிட்டு, தந்தையிடம் கோபப்பட்டுக் கொண்டு வந்ததாலோ என்னவோ! கேரளத்திற்குள் தமிழ் கடவுளைக் கண்டதும் ஒரு மகிழ்வு! அப்படியாக சிவன், குடும்ப சமேதராக அங்கு வாசம் செய்கின்றார். கோயிலில் இருந்து நாங்கள் வெளிவந்து, இந்தியன் காஃபி ஹவுசில் காலை உணவை முடித்துக் கொண்டு அடுத்து படகுத் துறைக்குச் சென்றோம்....அதைப் பற்றி அடுத்த பதிவில்....தொடர்கின்றேன்.


n  கீதா 

23 கருத்துகள்:

  1. பயணத்தில் நாங்களும்வந்து கொண்டிருக்கிறோம்...சரி தானே சேச்சி....)))))).....
    படகுத்துறையில் காத்திருக்கிறோம் அடுத்து போகுமிடத்துக்கு....

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு. தெளிவான நீரோடை போன்ற நடையில்இந்த கேரள பயணக்குறிப்பு அமைந்துள்ளது. நன்றி.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    அண்ணா
    தங்களின் பயண அனுபவத்தினை மிக அழகாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்...த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. கேரளா முழுமையும் சுற்றிக் பார்க்க எண்ணமுண்டு.

    பதிலளிநீக்கு
  5. தங்களுடன் சேர்ந்தே பயணித்த ஓர் உணர்வு
    நன்றி சகோதரியாரே
    தம +1

    பதிலளிநீக்கு
  6. அனைத்தையும் கலந்து கட்டி ஆதங்கத்துடன் + மகிழ்ச்சியுடன்...

    கோவிலைப் பற்றிய தகவலுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  7. அனுபவம் புதுமை, அருமை. படகுத்துறையில் சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
  8. யப்பா என்ன ஒரு நிலையில் பயணம் ..
    உங்கள் துணிச்சலுக்கு ஒரு சலுட்..
    தம +

    பதிலளிநீக்கு
  9. நீங்களும்தான் மிக அழகாக விவரிக்கிறீர்கள். கடவுளின் தேசத்துக்கு நாங்களும் நேரில் வந்தது போலிருந்தது கீதா :)

    பதிலளிநீக்கு
  10. உங்கள் பதிவைப் படிக்கும் போது நானும் என் மனைவியும் எர்ணாகுளத்தப்பனை தரிசித்த நினைவு. எனக்கு கோவிலை விட சுமார் எட்டு பத்து யானைகளுடன் சீவேலி(?) பார்த்ததும் படம் எடுத்ததும் நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  11. கீதா மேடத்திற்கு என்னவொரு தன்னடக்கம். பயணம் பற்றி எழுத வராது என்று சொல்லிவிட்டு, அசத்தலான பயணக் கட்டுரையை அதுவும் வரலாற்று தகவல்களுடன்.. அருமை. தங்களுடன் பயணம் செய்த உணர்வு ஏற்பட்டது.
    த ம 8

    பதிலளிநீக்கு
  12. நானும் உடன் பயணிக்கத் துவங்கிவிட்டேன்
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...

    பதிலளிநீக்கு
  13. ஆனாலும், இந்தக் கேரளத்துக்காரர்களுக்குக் கொஞ்சம் தற்பெருமை அதிகம்தான். எங்கு பார்த்தாலும், “KERALA- GOD’S OWN COUNTRY” என்ற போர்டுகள்.
    சூப்பர்ம்மா, தொடர்கிறோம், தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  14. பார்காத இடங்கள் ! பதிவைப் படித் து அறிந்து கொண்டேன்! சுவைமிகு கட்டுரை!

    பதிலளிநீக்கு
  15. இனிய வில்லங்கத்தாருக்கு...
    அருமையாக ஒசியில் அழைத்துச் சென்றமைக்கு நன்றி பயண அனுபவங்களை அழகாக நகர்த்திக் கொண்டு போகிறீர்கள் தொடர்கிறேன்.

    மீண்டும் ஒருமுறை நன்றி காரணம் வெகு நாட்களாக என் மனதை அரித்துக்கொண்டு இருந்த ஒரு விடயம் இன்று தங்களது பதிவால் உடனே எழுதத் தொடங்கி விட்டேன் இது கோபமும் கூட விரைவில் சந்திப்போம்.
    தமிழ் மணம் 111

    பதிலளிநீக்கு
  16. POET THE GREAT படப் பிடிப்பிற்கு முன் - பின்..... பயணக் கட்டுரை அருமை!

    நன்றி.

    பதிலளிநீக்கு
  17. அருமையான பயணக் கட்டுரை.

    என்னையும் இக்கட்டுரையில் குறிப்பிட்டமைக்கு நன்றி. என்னை விட அருமையாக எழுதி இருக்கிறீர்கள் கீதா! பாராட்டுகள்.

    ஒவ்வொரு ஊரிலும் பல சிறப்புகள். கேரளத்திற்கு God's Own Country முன்பே அமைந்து விட்டது. :) பல ஊர்களில் இருக்கும் சிறப்புகளை அம் மக்களோ, அல்லது அந்த அரசாங்கமோ வெளிப்படுத்துவதே இல்லை!

    பதிலளிநீக்கு
  18. payana katturai nalla aarampithirukkurirkal madam.
    chennai l irunthu vivaritha rail payanam ernakulam kovil varai arumai.
    Malamula dam 2011 l sendrirukkiren. Rope Way anupavam ok.




    நமது நாடு இன்னும் முன்னேறவே இல்லை என்றும் தோன்றியது.///

    30-kodi makkal oru velai sorilthaan irukkirkal. enge namathu naadu valarum naadukal pattiyalilthaan irukkirathe.
    ulaka makkal thokaiyil 3 elaikalil oruthar indiavilthan irukkirarkalam kanakkeduppu.

    பதிலளிநீக்கு
  19. அருமையான பயண தொடர். நானும் உங்க கூடவே வந்திருக்கலாமோ என தோன்றுகிறது, அத்தனை தின் பண்டங்களை ஒரே ஆளாக விழுங்கி ஏப்பம் விடும் கேப்பில் கதை சொல்லுவதை பார்த்தால்.......... நீங்கள் குறிப்பிடும் ஒவ்வொரு இடத்தின் மேன்மையை உணர முடிகிறது.

    கார் ஒட்டுபவர்தான் துளசியா?

    பயணம் தொடரட்டும்.

    நட்புடன்

    கோ

    பதிலளிநீக்கு
  20. கீதா,

    திருப்பதி போனபோது இதே இளைஞர்களால் மிகுந்த மனவருத்தமானது. எதற்காக என்றே தெரியாமல் ஏறி மிதிக்காத குறைதான்.

    பயணக்கட்டுரை அருமையாக உள்ளது. படகுத் துறையை ஏற்கனவே பார்த்துவிட்டேன். நம்ம ஊர் ரயில் பயணம் இதுவரை இல்லை. இனி அமையுமாயின் நிச்சயம் இப்பதிவு நினைவில் வரும். தொடரட்டும் உங்களின் பயண க்கட்டுரைகள் !

    பதிலளிநீக்கு