இவை
அனைத்துமே பலவருடங்களுக்கு முன் கல்கியில் வெளிவந்தவை. நான் சேகரித்து வைத்திருந்த
பழைய கட்டுரைகளையும், நாவல்களையும் அகழ்வாராய்ச்சி (!!!!?? ஆம் எல்லாமே மிகப் பழைய புராதான காலத்தவை போல
இருக்கின்றன) செய்ததில் கிடைத்தவை.
உழைப்பைத்
துதித்தவன்
தாகூரும்,
பாரதியும், தெய்வ பக்தியையும், மனிதாபிமானத்தையும் இணைத்ததாலேயே அவர்கள் உலக
மக்களிடத்தில் ஆண்டவன் திருவுருவைக் கண்டார்கள். தாகூர் தமது கீதாஞ்சலியில் பின்வருமாறு
பாடுகிறார்:
“தாளிட்ட
அடைபட்ட கோயிலின் இருண்ட மூலையில் நீ யாரைப் பூசிக்கின்றாய்? கண்ணைத் திறந்து உன்
கடவுள் உன் முன்னிலையில் இல்லை என்பதை அறிந்துகொள். கடினமான தரையில் வீடின்றி வாழ்வாரிடமும், சாலை
அமைக்கச் சரளைக் கல் பரப்புவோரிடமும் அவன் மழையில் நனைகிறான், வெய்யிலில் காய்கிறான்!”
பாரதியாரும்
கடவுளின் திருவுருவை உழைப்பவர்களின் உருவத்தில் காணத்தான் செய்கிறார்.
அரும்பும் வியர்வை உதிர்ந்துப் புவிமேல்
ஆயிரம் தொழில் செய்திடுவீரே!
பெரும்புகழ் நுமக்கே இசைக்கின்றேம்
பிரம்மதேவன் கலை இங்கு நீரே!!
---------------------------------------------------------------------------------------------------------------------
பாரதியாரும்
வ.வெ.சு ஐயரும் சதுரங்க விளையாட்டு விளையாடுவார்களாம். பாரதியாரின் காய்களை எல்லாம் ஐயர் வெகு
சீக்கிரத்தில் வெட்டிச் சாய்த்து விடுவாராம்.
“ஐயரே! இரக்கம் கொஞ்சமேனும் இல்லாமல்
வெட்டுகிறீரே! உமது நெஞ்சம் என்ன
கருங்கல்லா, இல்லை இரும்பா?” எனக் கேட்பாராம் பாரதி.
ஐயர்
சிரிப்பாராம், “ஐயா, சண்டை போடுகின்றோம், போர்க் களத்திலே வந்து ஒப்பாரி பாடுகிறீரே,
எதற்கு?” என்று கிளறி விடுவாராம் பாரதியாரின் கோபத்தை.
பத்துமுறை
வெல்லும் ஐயர் பூரிக்க மாட்டார். பத்து
முறை தோற்று ஒரு முறை வென்றாலும் போதும், பாரதிக்கு மகிழ்ச்சி வெள்ளமாகப்
பொங்கிடுமாம்.
----------------------------------------------------------------------------------------------------------------
அமெரிக்க,
இங்கிலாந்து, இந்திய அதிபர்கள் கடவுளைச் சந்திக்கிறார்கள்.
கடவுளிடம்
அமெரிக்க அதிபர் கேட்கிறார். “அமெரிக்க
மக்கள் எப்போது முழு மகிழ்ச்சி அடைவார்கள்?”
“ஐம்பது ஆண்டுகளில்” என்கிறார் கடவுள்.
அமெரிக்க
அதிபர் “ஐம்பது ஆண்டுகளா” என்று அழுதபடி செல்கிறார்.
அடுத்து இங்கிலாந்து
அதிபர் தன் நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைவது எப்போது என்று கடவுளைக் கேட்கிறார்,
“நூறு
வருடங்களில்” என்கிறார் கடவுள். அந்த
அதிபரும் அழுதபடி செல்கிறார்.
இறுதியாக
இந்திய அதிபர், “இந்தியர்கள் முழு மகிழ்ச்சி அடைவது எப்போது?” என்று கேட்கிறார்.
கடவுள்
அழுதபடி அந்த இடத்தை விட்டு மறைகிறார்.
இது
நகைச்சுவையாகச் சொல்லப்பட்டாலும், பல வருடங்களுக்கு முன்னர் கல்கியில் வெளிவந்த
இந்தத் துணுக்கு இத்தனை வருடங்களாகியும் நம் நாட்டிற்குப் பொருத்தமாக இருப்பதை
நினைத்தால், நம் இந்தியா வளரவில்லை என்பது புலனாகின்றது.
அப்படித்தானே
நிகழ்வுகளும் இருக்கின்றன! கல்வியின் தரம் தாழ்வதிலிருந்தும், அதற்கான கட்டணம் விண்ணைத்
தொடும் அளவு பெருகுவதிலிருந்தும், சாதிப் பிரச்சனைகளும், அதனால் விளையும்
கொலைகளும், சச்சரவுகளும், எழுதுவதுற்குக் கூட உரிமை இல்லாத நிலைமையும் (திரு
இராயச் செல்லப்பா அவர்கள் மிக அழகான ஒரு பதிவு பதிந்திருந்தார் இது குறித்து http://chellappatamildiary.blogspot.com/2015/06/blog-post_9.html) நம்
அரசியல்வாதிகளின் ஆட்சியையும் நினைக்கும் போது அந்தத் துணுக்கு இன்னும் எத்தனை
காலமானாலும் பொருந்துமோ என்ற வேதனையும் வரத்தான் செய்கின்றது.
---------------------------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------------------------
இப்போது மட்டும் ஏன்?
தொட்டிலிலே கிடந்த போது
பாலுக்கு அழுதேன்;
பால் தந்தீர்கள்.
தரையில் தவழ்ந்த போது
பொம்மைக்கு அழுதேன்;
பொம்மை தந்தீர்கள்.
பள்ளியிலே சேர்த்த போது
புத்தகத்திற்கு அழுதேன்;
புத்தகம் தந்தீர்கள்.
சின்னஞ் சிறுசினிலே
கொலுசுக்கு, வளையலுக்கு அழுதேன்;
வாங்கித் தந்தீர்கள்.
தோழியரோடு ஆடிய போது
பாவாடை தாவணிக்கு அழதேன்;
தந்து மகிழ்ந்தீர்கள்.
கலைகளை ரசித்த போது
வீணைக்கு அழுதேன்;
மீட்டச் சொன்னீர்கள்.
ஈரெட்டு வயது வரை எது எதற்கோ அழுதேன்;
எல்லாம் தந்தீர்கள்.
காதலித்து நின்ற போது
காதலனுக்கு அழுதேன்;
சாபம் ஏன் தருகின்றீர்கள்?
தடை ஏன் போடுகின்றீர்கள்?
-எஸ்
அறிவுமணி
-----------------------------------------------------------------------------------------------------------------
புதுக் குறள் (இது “எங்கள் ப்ளாகிலும்”
நண்பர் பகிர்ந்துள்ளார்....)
கோவை பழைய புத்தகக் கடை ஒன்றில் உள்ள
போர்டில்
“கற்க கசடறக் கற்க கற்றபின்
விற்க அதன் எடைக்குத் தக”
எழுத்தாளர் திரு ராமகிருஷ்ணன் அவர்கள் கடைத்தெருவில்
நடந்து சென்றுகொண்டிருந்த போது பழைய கலைப்
பொருட்கள் விற்கப்படும் கடையைக் கடந்து செல்லும் போது அவருக்குத் தோன்றியதான
எண்ணத்தைப் பதிந்திருந்தது நினைவுக்கு வருகின்றது. “இன்று நமது என்று சொல்லிக் கொள்ளும் பொருட்கள்
நாளை யாருடையதோ?” இது எல்லாவற்றிற்கும்
பொருந்தும்தான். வீடு உட்பட......
எனவேதான் நான் எதையுமே எனது என்று சொல்லிக்
கொள்வதில்லை. பல வருடங்களாக, எனது சிறு வயது
முதலே. அதைத் தனி பதிவாக எழுதுகின்றேன்.
இப்படித்தான்
பல இடுகைகளில் தனிப் பதிவு வேறொரு சமயம் என்பேன். எப்போது என்று கேட்காதீர்கள். எனக்கு
மூட் வரும் போது. இன்னும் நிறைய இடுகைகள் “எங்களை எப்போது முடித்துப் பதிவிடப்
போகிறாய்” என்ற ஏக்கத்துடன் என்னைப் பார்த்து முழித்துக் கொண்டிருக்கின்றன
வரிசையில். நல்லநேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். இப்போதைக்கு இங்கு ஒரு “.” ஆனால் “,”வுடன்.....
-----கீதா
அனைத்தையும் ரசித்தேன். எங்கள் ப்ளாக்கில் 'அதன் எடைக்கு' என்கிற வார்த்தை கிடையாது!
பதிலளிநீக்குவிற்க அதற்குத் தக...!
நீக்குஆம் நண்பரே! அந்த வார்த்தை இல்லைதான் என்றாலும் அதே போன்றது அர்த்தமும் அதுதானே....!!!
நீக்குமிக்க நன்றி நண்பரே ரசித்தமைக்கு!
திருக்குறள் தாசன் டிடி எப்படி எல்லாம் மக்கள் எழுதறாங்க பாருங்க திருக்குறளை..ஹஹஹ
நீக்குகல்கியில் வெளிவந்த நகைச்சுவை சூப்பர் மேடம்.
பதிலளிநீக்குஇந்தியாவின் மிக முக்கிய பிரச்சினை ஜனத்தொகை. அரசாங்கம் கட்டுப்படுத்து நடவடிக்கைகள் எடுக்காத வரை இந்தியா வளரவில்லை சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.
இந்த பிரச்சினை எவ்வலவு தீவிரமாக இருப்பதை புரிந்துக் கொள்ள
http://senthilmsp.blogspot.com/2015/06/blog-post_7.html
மஹேஷ்! மிக்க நன்றி மஹேஷ்! தங்களின் கருத்திற்கு. ஆம் நாங்கள் நண்பர் செந்தில் அவர்களின் கட்டுரையைப் படித்தோம். உண்மைதான். என்றாலும் நம்நாட்டைப் பொருத்தவரை, மக்கள் தொகை என்பதை விட அரசியலாளர்களின் ஆட்சியும் ஒரு காரணம். நம் நாடு வளம் மிக்க நாடு....கல்வியை அரசு தன் கையில் எடுத்து மேலை நாடுகளைப் போலக் கையாண்டாலே பல முன்னேற்றங்களைக் கொண்டுவரலாம்...எதிலும் ஊழல் நிறைந்திருப்பதால் தான் வளர்ச்சி அடையாமல் இருக்கிறோம் என்பது எங்கள் தாழ்மையான கருத்து.
நீக்குold is gold:)
பதிலளிநீக்குஆம்! ஜி பகவானே! பகவானும் வருகின்றாரே!!! ஸோ ஓல்ட் இஸ் கோல்ட்!!!!ஹஹஹஹ் உள் குத்து இருக்கோ??!!!!!!
நீக்குதமிழ் மணம் 5
பதிலளிநீக்குமிக்க நன்றி தேவகோட்டை அலைஸ் அபுதாபி கொடுவா மீசைக்காரரே!!!
நீக்குரசித்தேன்
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே! ரசித்ததற்கும், + செய்தமைக்கும்.
நீக்குபாரதியும் தாகூரும் அடித்தட்டு மக்களை நேசிக்க சொல்கிறார்கள். இந்த குணம் நாளுக்கு நாள் நம் மக்களிடம் குறைந்து வருகிறது. இன்று மனிதனுக்கு மதிப்பில்லை. அவன் வைத்திருக்கும் பணத்திற்குதான் மதிப்பு.
பதிலளிநீக்குபழைய சங்கதிகள் எல்லாம் அருமை!
த ம 7
ஆம்! மிக மிக உண்மையே நண்பரே! தங்கள் கருத்து! அதைப் பற்றி நாம் எத்தனைதான் எழுதினாலும் அது கடலில் கரைத்தப் பெருங்காயம் போல்தான். பணத்திற்குதான் மதிப்பு என்பது எங்கள் அனுபவமும் கூட நண்பரே!
நீக்குதமிழ்நாட்டில் - அரசு நிதி பெறும் பள்ளிகளில் - பணத்திற்காக - பொய்க்கணக்கில் அதிக மாணவர்களைக் காட்டுகின்றார்களாம்..
பதிலளிநீக்குஇதையறிந்த கடவுள் கதறிக் கதறி அழுவதாகத் தகவல்!..
கடவுளையே அழவைக்கும் மகாபாவிகள் வாழும் நாடு!..
கல்கியின் பழைய துணுக்கு மெய்யாகி விட்டது..
ஆம் ஐயா! தாங்கள் சொல்லியிருக்கும் தகவலை நாங்களும் அறிந்தோம். மிக மிகக் கேவலமான ஒன்று! எத்தனை காலமானாலும் இந்தக் கருத்துகள் உண்மையாகிவிடுமோ என்ற ஆதங்கமும் கூடவே எழத்தான் செய்கின்றது
நீக்குமிக்க நன்றி ஐயா!
எத்தனையோ விஷயங்கள் நமக்குத் தெரிகின்றனபாரதியார் தாகூர் உட்படப் பலரும் எடுத்துக் கூறிச் சென்றிருக்கிறார்கள் ஆனால் படித்துப் புகழ் பாடும் நம்மில் பலரும் ஏன் அவற்றைப் பின் பற்றக் கூடாது. நம்மில் பலரும் இரு பக்கம் உடையவர்கள் என்றே தோன்றுகிறதுபழைய செய்திகளையும் புதுப்பித்து வெளிக் கொணரும் உங்கள் பாணி பாராட்டுக்குரியது.
பதிலளிநீக்குஉண்மைதான் சார்! நாம் அதைப் பின்பற்றத்தான் வேண்டும் ஆனால் ஒரு சிலரைத் தவிர பெரும்பான்மையானோர் பின்பற்றுவதில்லை என்பது நிதர்சனம்.
நீக்குமிக்க நன்றி சார்!
ஒரு புறம் இலவசக் கல்வி
பதிலளிநீக்குமறு புறம் பல விஷக் கல்வி
முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!
நீக்குஇலவசக் கல்வி என்பதே கோல்மால்தானே நண்பரே! அதிலும் விஷம் ஊடுருவி நிற்கின்றதே. இலவசம் என்பதற்கு மதிப்பு என்பதே இல்லாமல் போனது. கிடையாது. அங்குதான் தவறுகள் அதிகம் நடக்கின்றது. விஷக் கல்வி கேட்கவே வேண்டாம்....நம் நாடு என்று கல்வியில் முன்னேற்றம் அடைகின்றதோ அன்றுதான் வளர்ந்த நாடாகும்...
தோண்டி எடுத்த வைரக்கற்கள்
பதிலளிநீக்குமிக்க நன்றி சார்! தங்கள் கருத்திற்கு...
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா
சொல்லிய விடயம் கவிதை அனைத்தும் அருமை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன் தம்பி தங்கலின் ரசனைக்கும் கருத்திற்கும்!
நீக்குஅனைத்தையும் ரசித்தேன் சகோதரியாரே
பதிலளிநீக்குநன்றி
தம +1
மிக்க நன்றி சகோதரரே தங்களின் ரசனைக்கும் கருத்திற்கும்! வாக்கிற்கும்!
நீக்குஅகழ்வாராய்ச்சியில் எடுக்கப்பட்டவை எல்லாம் ரத்தினங்கள் !
பதிலளிநீக்கு//கடவுள் அழுதபடி அந்த இடத்தை விட்டு மறைகிறார்.//
அது அவருக்கு காலம் காலமா தொடரும்
நானும் வைச்சிருக்கேன் :) அகழ்வாராய்ச்சியில் ஒன்லி சமையல் குறிப்பு புக்ஸ் ..
மிக்க நன்றி ஏஞ்சலின்.....நானும் கூட நிறைய வைத்திருக்கிறேன்...இப்போது கணினியில் ஃபைலாக ....
நீக்குசுவையான துணுக்குகள்! பழமைக்கு என்றுமே மவுசு அதிகம்தான்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குசரிதான் சுரேஷ்! மிக்க நன்றி..இன்னும் வரும்....
நீக்குதோண்டத் தோண்ட ஊறுமாம் மணற்கேணி...! இன்னும் தோண்டுங்கள்....சுவையான பதிவு! - இராய செல்லப்பா
பதிலளிநீக்குநிச்சயமாக சார்! இன்னும் வரும் அவ்வப்போது! மிக்க நன்றி சார்!
நீக்குபத்துமுறை வெல்லும் ஐயர் பூரிக்க மாட்டார். பத்து முறை தோற்று ஒரு முறை வென்றாலும் போதும், பாரதிக்கு மகிழ்ச்சி வெள்ளமாகப் பொங்கிடுமாம்
பதிலளிநீக்குஇதே நிலை எனக்கும், மலையாள நண்பரொருவருக்கும் அடிக்கடி ஏற்படும். சீட்டு விளையாட்டில்
நான் ஐயர், நண்பர் பாரதி
ஹஹஹ் அட!
நீக்குமிக்க நன்றி ஜி!
கீதா,
பதிலளிநீக்குஎல்லாத் துணுக்குகளையும் ரசித்தேன்.
உங்களின் மனமுதிர்ச்சியை நினைத்து சந்தோஷமாக உள்ளது. உண்மையும் அதுதானே ! அந்தத் தனிப் பதிவுகளையும் படிக்க ஆவல் !
மிக்க நன்றி சித்ரா! அதெல்லாம் மன முதிர்ச்சி எல்லாம் இல்லை....சும்மா சைக்கிள் கேப்ல...ஹஹஹ் ம்ம் பதிவுகள் எழுதி முடிக்க முயற்சிக்கின்றேன்....
நீக்குநானும் இதழ்களைச் சேகரிக்கும் வழக்கம் உள்ளவன்தான். ஆகையால், ரசித்துப் படித்தேன். ஆனால், இப்படி வெறும் எழுத்துக்களாக இல்லாமல் அந்தந்த இதழ்ளின் படங்களையும் ஒன்றிரண்டாவது வெளியிட்டிருந்தால் பழைய பொத்தகத்தைப் படிக்கும் அந்த உணர்வு கமகமவெனக் கிடைத்திருக்கும்.
பதிலளிநீக்குகல்கி மட்டுமில்லை, பழைய இதழ்கள் எல்லாமே படிக்கப் படிக்கத் திகட்டாத எழுத்துக் கருவூலங்கள்தாம். முன்பெல்லாம் இதழ்களைப் பகுதிவாரியாகக் கிழித்தெடுத்துத் தனித் தனிப் பொத்தகங்களாகச் செய்து வைத்துக் கொண்டிருந்தேன். இப்பொழுதெல்லாம் அதற்கு நேரம் கிடைக்காமையால் எல்லாம் ஆண்டுக்கணக்கில் அப்படியே தூங்குகின்றன. வேறு வழியில்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக அவற்றைக் காலி செய்யத் தொடங்கி விட்டேன் மிகுந்த வருத்தத்துடன்.
இதில் என்ன வென்றால் இந்தத் துணுக்குகள் எல்லாம் ஒவ்வொரு பக்கத்திலும் பக்கவாட்டில் சிறிது சிறிதாக பெட்டிக்குள் இருந்தன....தனியாக இல்லை. ஏதேனும் கட்டுரைகள் தொகுப்பு, புதினங்களின் தொகுப்பு என்று. ஆம் கல்கி மட்டுமல்ல பழைய இதழ்கள் எல்லாமே மிகவும் அருமைதான். ஆனால் எங்கள் மாமனார் வீட்டில் வாங்கியதைத்தான் நான் சேர்த்தது. அவரும்....அதற்கு முன் எங்கள் வீட்டில் எந்தப் புத்தகமும் வாங்கித் தரமாட்டார்கள் பாடபுத்தகங்களைத் தவிர....பொருளாதார நெருக்கடி..கிராம்த்தில்.....நானாக அவர்களுக்குத் தெரியாமல் நூலகம், பக்கத்து வீடுகளில் வாசித்தவைதான்.
நீக்குதங்களது ஆதங்கமும் புரிகின்றது. இங்கும் வீட்டிலும் பல வெளியில் சென்றுவிட்டன. இருப்பவைகளில் இருந்து எடுத்து வந்துதான் வாசித்தது,
இம்முறை புகைப்படக் கருவி உயிரழந்திருந்தது.....அடுத்த முறை படங்கள் புகைப்படம் எடுத்து வெளியிட முயற்சிக்கின்றேன்.
மிக்க நன்றி நண்பரே!
நீக்கு//இந்தத் துணுக்குகள் எல்லாம் ஒவ்வொரு பக்கத்திலும் பக்கவாட்டில் சிறிது சிறிதாக பெட்டிக்குள் இருந்தன....தனியாக இல்லை// - ஆம்! அதுதான் பழைய பாணி. 90-க்குப் பின் இப்படிப்பட்ட நறுக்குச் செய்திகள், நகைச்சுவைத் துணுக்குகள் போன்றவற்றை மொத்தமாக ஒரே பக்கத்தில் வெளியிட்டு விடுவதுதான் பாணி (trend). அதுவும் கல்கி அந்தப் பழைய பாணியை வெகு காலத்துக்குக் கடைப்பிடித்து வந்தார்கள்; மிக அண்மையில்தான் மாற்றிக் கொண்டார்கள்.
நீக்கு//அதற்கு முன் எங்கள் வீட்டில் எந்தப் புத்தகமும் வாங்கித் தரமாட்டார்கள் பாடபுத்தகங்களைத் தவிர....பொருளாதார நெருக்கடி..கிராம்த்தில்.....நானாக அவர்களுக்குத் தெரியாமல் நூலகம், பக்கத்து வீடுகளில் வாசித்தவைதான்// - ஆம்! அந்தக் காலத்தில் அப்படித்தானே!
//இங்கும் வீட்டிலும் பல வெளியில் சென்றுவிட்டன. இருப்பவைகளில் இருந்து எடுத்து வந்துதான் வாசித்தது// - அடடா!!
//அடுத்த முறை படங்கள் புகைப்படம் எடுத்து வெளியிட முயற்சிக்கின்றேன்// - நல்லது. காத்திருக்கிறேன்.
நல்ல தொகுப்பு
பதிலளிநீக்குவாழ்த்துகள்
கடவுளை அழவிடும் ஒரு தேசத்தின் குடிமகன் என்கிற முறையில் ... வாழ்த்து தெரிவித்தேன்
தம +