செவ்வாய், 18 நவம்பர், 2014

கனவில் வந்த காந்தி


      எங்கள் இனிய நண்பர் கில்லர்ஜி அவர்களுக்குக் (காந்திஜியிடம் எங்களுக்குச் சிறிது வருத்தம்!  அவர் கில்லர்ஜியின் கனவில் போகக் கண்டுதானே இதோ எங்களுக்கும் கேள்விகள் ஷூட் ஆகியுள்ளது!! ஹஹஹ்) கனவில் காந்தி வந்துக் கேட்ட கேள்விகளைத் தான் பெற்ற இன்பம்/துன்பம் பெறுக இவ்வலை உலகம் என்பது போல் சுற்ற விட்டுள்ளார். . இப்போது காந்திஜி வலைத்தளத்தைச் சுற்றி வருகின்றார்! பாவம் அவரும் நாட்டின் நிலைமையைத் தெரிந்து கொள்ளட்டும்.  வாய்ப்பில்லாமல் நிறைய நல்ல உள்ளம் படைத்த ஆட்சியாளர்கள உள்ளார்கள் எனப்தையும்! அதில் நாங்களும் சிக்கிக் கொண்டோம் அவருக்கு ஸ்வாமி ஸ்ரீபூவு!  எங்களுக்கு யார் உதவப் போகின்றார்கள் என்று மண்டையைக் குடைந்து களிமண்ணை எடுத்துப் போட்டோம். பரீட்ச்சையில் கேட்ட கேள்விகளுக்கு பதில் தெரியாமல் முழித்துக் கொண்டு, என்ன செய்வது என்று தெரியாமல் எதையோ கிறுக்கி வைத்தது போல் இங்கும் செய்துள்ளோம்.  பின்னே என்ன இப்படிக் கடினமானக் கேள்விகளைக் கேட்டால்.....ம்ம்ம் மிகவும் சின்னப் புள்ளைத்தனமா இருக்கோ? எங்கள் பதில்கள்?!!


கில்லர் ஜி யிடம் முதலில் மன்னிப்பு!  தாமதமாக இதை வெளியிடுவதற்கு!  இங்கு பல நடமுறைப் பிரச்சினைகளால் எங்களால் உடன் பதிலுரைத்து வெளியிட முடியவில்லை கில்லர் ஜி!  மிகவும் தாழ்மையுடன் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றோம். 

நீ மறு பிறவியில் எங்கு பிறக்க வேண்டுமென்று நினைக்கின்றாய்?

மறு பிறவியா?  இந்த ஒரு பிறவியே போதும் காந்திஜி!  வேண்டாம் இனி ஒரு பிறவி.  அப்படியே பிறந்தாலும் நாம்தான் அது என்று நமக்குத் தெரிந்திருக்குமா?  இதற்கு விடை இருந்தால் பதில் தருகின்றோம்.

ஒருவேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்துவிட்டால் சிறப்பாக ஆட்சி செய்யும் திட்டம் உன்னிடம் இருக்கின்றதா?

ஆஹா!  இப்படி எல்லாம் கனவில் கூட நினைத்துப் பார்த்தது இல்லை காந்திஜி! எங்களிடம் யாருமே கேட்டதில்லை ஜி! இந்த கொடுவா மீசைக்கார கி. ஜியின் உதவியால் தேசத் தந்தை கா. ஜி யான உங்களை எங்களிடம் கேட்க வைத்ததற்கு அவருக்கு நன்றிகள் பல! ஏதோ நாங்க ஒரு மூலையில கிடக்கறோம். எங்களை எல்லாம் யாருங்க ஆட்சிக்குக் கூப்பிடப் போறாங்க?  சரி கூப்பிட்டு விட்டார்கள்! உங்களுக்கு நினைவிருக்கின்றதா? உங்களது பொருளாதாரக் கொள்கைகள்?  நாங்களும் படித்தோம் “காந்தியன் தாட் ஆஃப் எக்கனாமிக்ஸ்” “காந்தியன் எக்கானமி என்று....ம்ம்ம்,,,  எல்லாம் ஏட்டுச் சுரைக்காய் தான்.  ஒருவேளை ஆட்சியாளர்கள் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதை அப்படியே பின்பற்றிவிட்டார்கள் போலும்.  எனவே, உங்கள் பொருளாதாரக் கருத்துக்களில் மிகவும் நம்பிக்கையும், ஆர்வமும் உள்ள நாங்கள், இப்போது அது டூ லேட் ஆனாலும், சீரழிந்த பொருளாதாரத்தை உங்கள் கொள்கைகளைக் கொண்டு நிமிர்த்த முயற்சி செய்வோம். ஒரு நாட்டின் பொருளாதாரம் உயர்ந்தால், அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முறையும் உயர்ந்தால், மலைக்கும், மடுவுக்கும் இடையே உள்ள வித்தியாசம் நிரப்பப்பட்டால் அமைது நிலவும்! ஏழ்மைதான் பல தீவிரவாதத்திற்கும், பொருளாதாரம் கெடுவதற்கும் காரணம்.  உங்கள் அஹிம்சைக் கொள்கைகளையும், அமைதிப் போராட்டங்களையும் நிலை நிறுத்த முயல்வோம். அதே போன்று தங்கள் கல்விக் கொள்கைகளையும்! (இது விடுபட்டு போனதற்கு மிகவும் வருந்துகின்றோம்.  அதனால் லேட்டானாலும் பதிந்துவிட்டோம்) உங்களுக்குச் சந்தோஷம்தானே!  ஜி? இரு ஜி க்களுக்கும்!

இதற்கு வெளி நாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தால் என்ன செய்வாய்?

அட! போங்க ஜி! எதற்குத்தான் எதிர்ப்பு வரவில்லை?  நியாயமாக இருந்தாலும் எதிர்ப்புதான்.  அநியாயத்திற்கும் எதிர்ப்புதான். நீங்கள் சந்தித்திராத எதிர்ப்புகளா?  நீங்கள் நல்லது என்று நினைத்து சொன்னதற்கும் அப்போது எதிர்ப்பு இருக்கத்தானே செய்தது? அது போலத்தான்.  +, _ இதுதான் யதார்த்தம்.  எனவே போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும் என்று எங்கள் கொள்கைகளில் உறுதியாக இருப்போம்.  முதலில் எதிர்ப்பார்கள்.  பின்னர் வேறு ஒன்று வரும் போது அடங்கிவிடுவார்கள்.  இதுதான் எங்கள் மக்கள்! ஜி!  உங்களுக்கு அது தெரிந்து இருக்க வாய்ப்பில்லை!

முதியோர்களுக்கென்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?

நிறைய! அவர்கள் அனாதைகளாக விடப்படமாட்டார்கள்! முதியவர்கள் மட்டுமல்ல, குழந்தைகளை நாங்கள் மிகவும் போற்றுவதால் அவர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்...அது போல இளைஞர்களையும்!

அரசியல்வாதிகளுக்கென்று புதிய திட்டம் ஏதாவது?

நீங்கள் எப்படிப்பட்ட அரசியல்வாதிகளைப் பற்றிக் கேட்கின்றீர்கள் என்று தெரியவில்லை!  அரசியல்வாதிகளுக்கு என்று திட்டம் வகுக்க முடியாது! ஒரே சட்டம்தான்.  ஒருவர் ஒரு முறை மட்டுமே பதவிக்காலம் வகிக்க முடியும். படிப்பறிவு/பட்டறிவு/தீர்க்க சிந்தனை உள்ளவர்கள் மட்டுமே.  அந்தக் காலகட்டத்திலும் அவர்களின் மீது ஊழல் என்றோ, வேறு ஏதேனும் குற்றம் வந்தால் போதும், அது ரூமராக இருந்தாலும்/எதிர்கட்சிக்காரரின் சதி என்று சொல்லப்பட்டாலும் பதவி விலக வேண்டும்.  விலக்கப்படுவார்கள்!

மதிப்பெண்கள் தவறென மேல் நீதிமன்றங்களுக்குப் போனால்?

மதிபெண்கள் விஷயம் எல்லாம் நீதிமன்றங்களுக்கு வரவே வராது!  பள்ளி, கல்லூரிகளிலேயே தீர்த்து வைக்கப்பட்டு விடும்!

எல்லா ஊர்களிலும் நீதி மன்றங்கள் உண்டு.  ஆனால், எல்லாம் ஒன்றே!  ஒரே நீதிதான் நாடு முழுவதும்! அரசன் அன்றே கொல்லும் நீதிதான்! குற்றம் பெரிதாக இருந்தால்! சிறிதாக இருந்தாலும் அதே, ஆனால், அதற்கேற்ற தண்டனை உடனே!  நோ, வழக்குத் தள்ளுபடி! மக்களுக்குச் சுந்தந்திரமும் உண்டு.  உங்களுக்குத் தெரியாததா? There is a subtle difference between Freedom and Independence. 

விஞ்ஞானிகளுக்கென்று....ஏதும் இருக்கின்றதா?

ஆம்! நிச்சயமாக! நம் நாட்டில் அவர்களுக்குச் சுதந்திரம் இல்லை!  அதனால் அவர்கள் வெளிநாடுகளுக்குப் போக வேண்டிய சூழ்னிலை.  அதை மாற்றிடுவோம்.  அவர்களுக்கு இங்கு ஆராய்ச்சிகளைச் சுதந்திரமாகச் செய்ய ஊக்கப்படுத்து உதவுவோம்.  ஆனால், அங்கும் நேர்மை வேண்டும் என்ற பிடிவாதத்துடன்!

இதை உனக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் செய்வார்களா?

அதைப் பற்றிக் கவலை இல்லை. ஏனென்றால், மக்கள் நல்ல ஆட்சிக்குப் பழகிவிட்டார்கள் என்றால், அவர்கள் அதை நிலைநிறுத்த முயற்சிப்பார்கள்.  தங்களது உரிமைகள் போற்றப்படும் போது அதை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.  அப்படி அவர்கள் விட்டுக் கொடுத்தால் நஷ்டம் அவர்களுக்கே.  கவலை இல்லை! அதைப்பற்றி எங்களுக்குக் கவலை இல்லை!  ஏனென்றால் எங்கள் பதவிக் காலமும் ஒரு முறை தானே!

மற்ற நாடுகளில் இல்லாத ஏதாவது புதுமையாக?

மற்ற நாடுகளில் இல்லாத பல இங்கு ஏற்கனவே இருக்கின்றதே! காந்தி ஜி! பல செல்வங்கள்!  முக்கியமாகச் சொல்ல வேண்டும் என்றால் மக்கள் செல்வம்/ உழைக்கும் வர்கம்/ லேபர்.  எனவே, அதை அழியாமல் பாதுகாக்க முயல்வோம்!   அவர்கள் வெளிநாட்டிற்குச் சென்று கஷ்டப்படாமல் இருக்க ஆவன செய்வோம். 

இங்கு ஒரு சின்னத் திருத்தம் காந்தி ஜி!  உங்கள் கேள்வி இப்படி இருந்திருக்கலாமோ என்பது. உன் நாட்டில் இல்லாத, மற்ற நாடுகளில் உள்ள, உன்னைக் கவர்ந்த ஒன்று  எது என்று கேட்டிருந்தால்....

மற்ற நாடுகளில் ஒரு சாமானியனுக்கும் அவன் தாய் நாட்டின் மீதுள்ள கடமை உணர்வும், நேர்மையும், நேசமும்.  கொடியேற்றி தேசீய கீதம் பாடுவதில் இல்லை நாட்டுப் பற்று. அது 1947ல் முடிந்துவிட்டது. தற்போது வேண்டுவது, நாட்டைச் சுத்தமாக வைத்திருத்தல், நாட்டு விதிகளை பின்பற்றுதல் – அது அன்றாடத் தேவையான சாலை விதிகளை மதிப்பதில் இருந்து, வருமான வரி கட்டுவது வரை.- எங்கேனும் ஒரு பொருள், பை விலை உயர்ந்த பொருட்களுடன் இருந்தால் நேர்மையாக அதை காவல் துறையிடம் ஒப்படைத்தல், இயற்கைப் பேரழிவு வரும் போது எப்படி மக்கல் நடந்து கொள்ள வேண்டும், தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வுகள் போன்ற பல “சிவிக் சென்ஸ்” மேலை நாட்டவரும், கீழை நாட்டவரும் (சிங்கப்பூர், ஜப்பான்.......) பின்பற்றுவதை இங்கு மக்களின் ரத்தத்தில் ஊற வைக்க ஜப்பானில் செய்வது போல பள்ளியில் சிறு வகுப்பு முதலே கற்பித்து தேசீய உணர்வை நடைமுறைப்படுத்துவது போல நாங்கள் கொண்டுவர முயல்வோம்.  எதிர்கால இந்தியாவாவது உருப்படட்டுமே!  இன்றைய மழலைச் செல்வங்களால்!

எல்லாமே நீ சரியாக சொல்வது போல் இருக்கு, ஆனால் நீ மானிடனாகப் பிறந்து நிறைய பாவங்களைச் செய்துவிட்டாய் உனக்கு மீண்டும் மானிடப்பிறவி கொடுக்க முடியாது ஆகவே வேறு என்ன பிறவி வேண்டுமென்று இறைவன் கேட்டால்?

பரவாயில்லை! முதலில் மறு பிறவி வேண்டாம் என்று சொல்லிவிட்டோம்.  இருந்தாலும் நீங்கள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டியக் கட்டாயம் இருப்பதால், நல்லது செய்வதும் பாவம் என்றால், திருவிளையாடலில் தருமி சொல்வது போல் நாங்கள் செய்த பாவத்திற்கான தண்டனையைக் குறைத்துக் கொண்டு ஒரு சான்ஸ் தரலாமே! அது மனிதப் பிறவியோ இல்லை வேறு ஏதேனுமோ! ஆனால் நாங்கள் முற்பிறவியில் யார் என்று அறிந்திருக்க வேண்டும்.  அந்தக் கண்டினியூட்டி வேண்டும்.  இல்லை என்றால் திரைக்கதையில் தொய்வு வரும்.  அப்படி இல்லை என்றால், வேண்டாம். பிறவி. இல்லை விட்டில் பூச்சிகளாய்!

இதில் பத்து நண்பர்களை இணைக்க வேண்டும் என்று நண்பர் கில்லர் ஜி கேட்டுக் கொண்டிருப்பதால்

நாங்கள் தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளும் நண்பர்கள்

நண்பர் ஸ்ரீராம்

நண்பர் ராம் குமார்
http://www.sivakasikaran.com/

திரு இராய செல்லப்பா சார்
http://chellappatamildiary.blogspot.com/

நண்பர் விசு

நண்பர் பரதேசி
http://paradesiatnewyork.blogspot.com/

நண்பர் கோயில்பிள்ளை

நண்பர் யாதவன் நம்பி

நண்பர் மணவை ஜேம்ஸ்
http://manavaijamestamilpandit.blogspot.com/

நண்பர் இப்படிக்கு ஆ.ரா


நண்பர் ராஜபாட்டை ராஜா
மிக்க நன்றி கில்லர் ஜி!  இப்படி ஒரு வாய்ப்பைத் தந்தமைக்கு!  ஆட்சி அமைக்க.....(ஹஹஹஹ)



50 கருத்துகள்:

  1. காந்திஜி கூட நல்லா பேசி பேசியே வித்தியாசமான பதில்கள் அவருக்கு கொடுத்து விட்டீர்கள்.

    முற்பிறவி நினைவு கண்டின்யூ வேண்டும்டஆம் அப்பத்தானே நாம சரி செய்துக்க முடியும்.

    பள்ளியில் சிறு வகுப்பு முதலே கற்பித்து தேசீய உணர்வை நடைமுறைப்படுத்துவது போல நாங்கள் கொண்டுவர முயல்வோம். எதிர்கால இந்தியாவாவது உருப்படட்டுமே! இன்றைய மழலைச் செல்வங்களால்! //

    நன்று நன்று..


    தம. 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹ்ஹஹ மிக்க நன்றி சகோதரி! ஆமாங்க அந்தக் கண்டினியுட்டி இல்லனா போரடிக்கும் இல்லையா?

      மிக்க நன்றி!

      நீக்கு
  2. ஒவ்வொரு கேள்விக்கான பதிலும் அருமை சகோ. ரொம்பவே யோசிச்சு யோசிச்சு பதில் எழுதியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

    அந்த கடைசி பதில் - இதை தெரிந்து கொள்வதற்கு தானே ஞானிகளும், ரிஷிகளும் பாடுபட்டார்கள். நீங்கள் என்னடா என்றால் சர்வ சாதாரணமாக "//நாங்கள் முற்பிறவியில் யார் என்று அறிந்திருக்க வேண்டும்//" என்று கேட்கிறீர்களே!!!!

    என்னுடைய கனவுல வரவுங்களை எல்லாம் வரவிடாம பண்ணிட்டாருன்னு கில்லர்ஜி மேல கோவமா நான் இருக்கேன், நீங்க என்னடான்னா அவருக்கு நன்றியை சொல்றீங்க. இதெல்லாம் நல்லா இல்லை, ஆமா சொல்லிப்புட்டேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேரு மட்டும் உண்மையானவன் நீங்க சொன்ன தெல்லாம் பொய்.
      உங்களோட கனவு எவளும் வரலைனு நான் தெரிஞ்சுக்கிட்டேன் காலையிலிருந்து அவளுகள்ட்ட போண் செய்து கேட்டதுக்கு நான் யாருகிட்டேயும் போகலைனு சொல்றாளுக,,, உங்களாலே எனக்கு இரண்டாயிரத்து முன்னூத்தி அருபத்து நாலு ரூபாய் என்பத்து ஐந்து பைசா செலவு இதை இப்ப யாரு எனக்கு தர்றது ? என்னோட கனவுல காந்தி வந்தாரா ? இல்லையா ? போண் செய்து கேட்டுகங்க....

      நீக்கு
    2. மிக்க நன்றி நண்பரே (சொக்கன்) அதை அறிய ஞானிகளும், ரிஷிகளும் பாடுபட்டார்கள்தான். ஆனா நாம ஞானி இல்லை ரிஷி இல்லை. சாதாரண பாமரன். அதனால தெரிஞ்சுக்கலாமே! அஹஹ்ஹா...

      அஹஹ்ஹஹ்ஹ் அப்படியா பண்ணினாரு?!!!! இருக்குங்க அவருக்கு! அவரு பண்ற லொள்ளு தாங்கலப்பா.....

      நீக்கு
    3. ஹலோ கில்லர்ஜி, நான் எப்பவுமே உண்மையைத்தான் பேசுவேன். உங்களோட நட்பு வச்சுக்கிட்ட ஆரம்பச்சதிலிருந்து தான் அவுங்க யாரும் என்னோட கனவுல வராம இருக்காங்க. என்னோட பதிவை படிச்சீங்க தானே, அவுங்க தான் உங்க மீசையை பார்த்து பயந்துட்டாங்களே, அப்புறம் எப்படி உங்க கிட்ட உண்மையை சொல்லுவாங்க.
      நீங்க வெட்டியா செலவு பண்ணிட்டு, அப்புறம் எதுக்கு புலம்பனும்... அதான் என் கனவுல காந்தி சொல்லிட்டாரே, முதல்ல உங்க கனவுல தான் வந்தேன்னு.

      நீக்கு
  3. நானும் ஒரு பதிவுக்கான draft தயார் செய்து கொண்டிருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவிடுங்கள் சார்! காத்திருக்கின்றோம் வாசிக்க!

      நீக்கு
  4. பதில்கள் சுவையாய் இருந்தன.

    நானுமா....?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா! நீங்களும் தான் சந்தேகம் என்ன!? னீங்கதான் அருமையா எழுதுவீங்களே அதான் உங்களையும் சேர்த்துவிட்டோம்! உங்கள் பதில்களை வாசிக்க ஆவலாக இருக்கின்றோம்!

      மிக்க நன்றி!

      நீக்கு
  5. சுவாரஸ்யமான பதில்கள் அருமை
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. அருமை.. ரசனையான பதில்கள்...
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  7. ஒவ்வொரு கேள்விக்கும் அருமையான பதில்கள்! சிறப்பான பதில்கள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க ந்னறி சுரேஷ்! நணப்ரே! தங்கள் பாராட்டிற்கு! கருத்திற்கும்!

      நீக்கு
  8. வித்தியாசமான பதில்கள். பொறுமையாகப் படித்தேன்.காந்தியின் பொருளாதாரத்தை இன்னும் நினைவில் வைத்து இருக்கிறீர்கள்.
    த.ம.4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க ந்னறி ஐயா! ஆமாம் ஐயா காந்தியின் பொருளாதாரக் கொள்கைகள் மறக்கக் கூடியதல்லவே!

      மிக்க நன்றி!

      நீக்கு
  9. வணக்கம்
    அண்ணா.

    பதில்கள் ஒவ்வொன்றும் மிகச்சிறப்பாக உள்ளது.. பகிர்வுக்கு நன்றி த.ம5வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரூபன் தம்பி! தங்கள் கருத்திற்கும்!

      நீக்கு
  10. வணக்கம் தோழர் & தோழி அவர்களே… தாங்களுக்கு காந்திஜியின் மீது வருத்தம் உண்டானதற்க்கு உண்மையான காரணம் அறிந்து கொண்டேன் இந்தியாவில் இருக்கும் நமது கனவில் வராமல் அரபு தேசத்தில் பிழைக்கப்போன இடத்தில் கில்லர்ஜியின் கனவில் வந்ததின் விளைவே இந்தப்பொறாமை இல்லையா ? ஆம் எமக்கும் கொஞ்சம் மனோதத்துவம் தெரியும் (அது எப்படியென பின்வரும் எமது பதிவுகளில் காணலாம்) ஆஹா நாம மனசுக்குள்ளே உள்ளதெல்லாம் சரியாச் சொல்லிட்டாரேனு யோசிக்கிறீங்களா ? பார்த்தீயளா ? இதையும் கரெக்டா சொல்லிட்டேன். இனிமேல் எந்தப்பதிவு போட்டாலும் எனது நினைவு இருக்கட்டும்
    .
    இதில் மன்னிப்புக்கு என்ன இருக்கிறது ?

    பதிவு தாமதமானதின் அர்த்தம் புரிகிறது நண்பரே... அருமையான தொகுப்பு லேட்டானாலும் லேட்டஸ்டா போட்டீங்க... தங்களது ஒவ்வொரு பதிலிலும் எதிர்கால இந்தியாவின் வளர்ச்சி எப்படி இருக்கவேண்டுமென்றும், கனவும், (மறுபடியும் கனவா ? ) தங்களது நாட்டுப்பற்றும் தெரிகிறது. (ஒருக்கால் நண்பர் சொக்கன் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் ?????????? (நான் தூக்குல தொங்குவேன்... யாரப்பா ? அது இடையிலே ) உங்களை இந்தியாவின் பொருளாதார வல்லுனர் குழுவின் தலைவராக போடச்சொல்லி கண்டிப்பாக சிபாரிசு செய்வேன் அதை அவர் செய்யவில்லையெனில் நான் கோடரி எடுக்கவேண்டியது இருக்கும் 80 வேறு விசயம்) முதல் கேள்வியிலேயே காந்திஜியிடமே திருப்பி கேள்வி கேட்டீங்க பாருங்க உண்மையிலேயே தைரியமானவர்கள்தான் அதற்க்காகவே பாராட்டனும் அருமை அருமை.

    நிச்சயம் ஒருநாள் இந்தியாவில் தங்களது ஆட்சி உண்டாகட்டும் என உலக மேலாளரிடம் பிரார்த்திக்கின்றேன்.

    எமது வார்த்தைக்கும் மதிப்பளித்து அழகாக பதில்கள் உரைத்தமைக்கு எமது மனமார்ந்த நன்றியும் ஞானி ஸ்ரீபூவு அவர்களின் ஆ(ச்)சியும் உண்டாகட்டும்.

    நல்லது இந்த பதில்களை காந்திஜி அனேகமாக இந்தமாதம் 27ம் தேதி கனவில் வருவார் வரும்போது அவரிடம் சமர்ப்பித்து விடுகிறேன்.

    குறிப்பு – இலக்கம் கேட்டிருந்தீர்கள் இலக்கம் தற்போது இலக்குமாறி இலக்கணம்மீறி போய் விட்டது நண்பரே.. காந்தி கூட சாந்தியானார் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் இவ்வுலகு.
    நன்றியுடன் கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹ்ஹஹஹ் நண்பரே! உண்மையானவன் பாவம் நண்பரே!ஹஹஹஹ் அவரு நிசமாகவே உண்மையானவன். அதனால் நல்லாதான் ஆட்சி செய்வார்! உங்களுக்குப் பொறாமை?!!!!!ஹஹஹ

      நீக்கு
    2. அயையோ திரும்பவும் வராரா காந்தி 27 அன்று! ப்ளீஸ் அவரு கேள்வி கேட்டா கொஞ்சம் ஈசியா கேக்கச் சொல்லுங்க....ஓகேவா ...

      நீக்கு
  11. அருமையான பதில்கள்...
    மிகவும் யோசித்து... நிறைவான பதிலைத் தந்திருக்கிறீர்கள்...
    வாழ்த்துக்கள் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே தங்கள் கருத்திற்கும்பாராட்டிற்கும்!

      நீக்கு

  12. ஒவ்வொரு கேள்விக்கும் காபி போட்டு குடித்து உட்கார்ந்து யோசித்து அருமையான பதில்களாக வழங்கி இருக்கின்றீர்கள் ! வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழா! முதலில் மிக்க நன்றி!

      ஐயோ அத ஏன் கேக்கறீங்க? காபியா? அட பொங்க நீங்க வேற, நாங்க போட லேட்டக, நேத்துதான் கீதா பாண்டிச்சேரி போய்ட்டு வர ராத்திரி 10.30 மணிக்கு துளசியும் கீதாவும் ஃபோன்ல விவாதிக்க..12.30 மணி வர ....கீதாவுக்கு தூக்கம் வர "இனி முடியாதுப்பானு" துளசி கழண்டு கொள்ள, கீதாவும் உறங்க செல்ல முற்பட்ட போது, அப்ப இந்த கொடுவா மீச, காந்திய மிகவும் வயோதிக காலத்துல வ்லைத்தளத்துல சுத்தவிட்ட ஆளு இடையில, கூகுள் சாட் ல வந்து எழுதி போடாததற்கு மிரட்ட, எப்படியாவது நாளை காலைஅல் போட்டுடறோம் அப்படினு கீதா சொல்லிட்டு தூங்கிட, அப்புறம் காலைல எழுந்து வீட்டு வேலை முடித்து ஏனோ தானோனு வெளியிட்ட பதிவு இது.

      யோசிக்க கூட இல்லை தமிழா பார்க்கப் போனா இன்னும் காந்தி கல்விகொள்கை பத்தி எல்லாம் எழுத எங்களுக்கு ஆசை...ஆனால் முடியல....

      ஒருவேளை நீங்க சொன்னாப்புல காப்பி குடிச்சுருந்தா யோசிச்சுருக்கலாமோ?!!!!!!

      போகட்டும்! மிக்க நன்றி தமிழா தங்கள் பாராட்டிற்கு!

      நீக்கு
  13. ரொம்பவே யோசித்து சொல்லி உள்ளீர்கள்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹை வாங்க டிடி! மிக்க நன்றி! ரொம்பவே யோசித்து??!!!!! ஹிஹிஹி!

      நீக்கு
  14. ஒரு தொடர் பதிவு போடுங்கப்பா ன இந்த புள்ளைக ரெண்டும் சேர்ந்து ஒவ்வொரு பதிலையும் ஒரு பதிவு அளவு போடுதுக்கப்பா ஆப்டினு தானே சொல்ல வந்தீங்க தமிழன் சகா!!:))))

    எவ்ளோ நீளமா இருந்த என்ன, ஒவ்வொரு பதிலும் எவ்ளோ தெளிவா சின்சியரா இருக்கு அப்டின்னு நான் சொல்றேன்>> அம்புட்டு தான் எனக்கொன்னும் தெரியாதுப்பா:))))))

    ஆனாலும் உங்களுக்கு ஆட்சி அமைக்க ஒரு சான்ஸ் கொடுத்து தான் பார்க்கலாம் போலவே!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹ்ஹஹஹஹ! மிக்க மிக்க நன்றி சகோதரி ! அயையோ ஆட்சியா?!! வுடு ஜூட்!

      நீக்கு
  15. என்னாது கனவில் காந்தி வந்தாரா ? ரொம்ப நல்லவராய் இருக்காரே கில்லர்ஜீ.
    ஆனா காந்தி அஹிம்சாவாதி ஆச்சே , கில்லர் ( கொலையாளி ) கனவில் வந்தாரென்றால் நம்பமுடியவில்லையே .என்னுடைய பதில்களுடன் விரைவில் வருகிறேன் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹ்ஹஹஹ! ஹை நல்லாருக்கே இந்த விளக்கம் நல்ல நகைச்சுவை! வாருங்கள் தங்கள் பதிலுடன் காத்திருக்கின்றோம் வாசிக்க!

      மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  16. தம ஏழு
    படித்தோம் மகிழ்ந்தோம் ...

    பதிலளிநீக்கு
  17. சிந்திக்கும் பதில்கள் ஆட்சியாளர் பதில் இன்னும் பிடிச்சு இருக்கு அப்படி நடந்தால் !!!!ம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தனிமரம்! அப்படியொரு ஆட்சி அமைந்தால் ஆஹா சுகம்தான்.....தங்களுக்குப் பிடித்ததற்கும் மிகவும் மகிழ்ச்சியே! மிக்க நன்றி தனிமரம்.

      நீக்கு
  18. உங்கள் பதில்களை கேட்டு காந்திஜியே அசந்து இருப்பார் போலிருக்கே ,காந்தீய கொள்கை இன்னும் வாழ்கிறதே என்று :)
    த ம 9

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹாஹ் இல்ல ஜி. வலைத்தளத்துல பலர் நாங்கள் சொன்னதை விட மிக நல்ல கருத்துக்களை ரசிக்கும்படியாக முன் வைத்துள்ளனர். உங்கள் கருத்துக்கள் உட்பட அவை இன்றைய உண்மையான நிலைமையை அவருக்கு எடுத்துரைக்கும் அல்லவா.
      மிக்க நன்றி ஜி!

      நீக்கு
  19. காபி குடிக்காமலேயே இப்படி என்றால்.....

    அருமையான பதில்கள் அண்ணா.

    பதிலளிநீக்கு
  20. ஆழமான சிந்தனையுடன் கூடிய
    அருமையான பதில்கள்
    பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  21. சிறந்த நல்லெண்ண வெளிப்பாடு
    தங்கள் கருத்தை வரவேற்கிறேன்

    பதிலளிநீக்கு