தன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர்
கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில்,
வளர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்திப் படங்களில் எல்லாம்
நடித்து விஸ்வரூபம் எடுத்து, உலகநாயகனாய் மாறி இருக்கும் கமலுக்கு நவம்பர் 7, 2014 - 60 ஆவது பிறந்த
நாள். இன்று போல், இவ்வுலக நாயகன்,
என்றும் சிறப்புடன் வாழ நாம் எல்லோரும் வாழ்த்துவோம்!
பரமக்குடியில் பிரபலமான
வக்கீலாய் இருந்த கமலின் அப்பா திரு ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு அவரது 50 ஆவது வயதில்
பிறந்த செல்லப் பிள்ளைதான் கமல். கமல் தாயின் வயிற்றில் வளர்ந்த போது, மூத்த
அண்ணன் சாருஹாசன் அவர்களின் மனைவியும் தன் வயிற்றில் குழந்தையைச்
சுமந்திருந்தார்களாம். அப்படி சாருஹாசன் அவர்களுக்குக் கமல் அவரது குழந்தைகளுடன்
வளர்ந்த செல்லத் தம்பி. எனவே கமலுக்குச் சிறு வயதிலிருந்தே முழு சுதந்திரம்
கிடைத்திருக்கிறது. அதனால் தான் 10 வயதுக் கமல் தனக்கு பூணூல் வேண்டாம் என்றதும், அவரது குடும்பத்தினர்
அவரைப் பூணூல் அணியக் கட்டாயப்படுத்தவில்லை.
சுதந்திரப் போராட்ட வீரரானக் கமலின் அப்பா சிறைச்சலையில் இருந்த
வேளையில் அங்கே ஏற்பட்ட ஒரு கலகத்தின் போது முஸ்லிமான ஒரு ஹாசன் அவரது உயிரைக்
காப்பாற்றியதாகவும் அதனால்தான் அவர் தன் குழந்தைகளுக்கு சாருஹாசன், வசந்த ஹாசன், சந்திரஹாசன்,
கமலாசன் என்று பெயரிட்டார் என்று சொல்லப்படுவதில் உண்மை ஏதும் இல்லை என்று கமல்
சொன்னாலும், அக்ரஹாரத்தில் இருந்த கமலது குடும்ப வீட்டை ஒரு முஸ்லிமிற்கு
விற்றதையும், ஒரு முறை கமல் அப்பாவிடம் “நான் முஸ்லிமா என்று பலரும் கேட்கிறார்கள்”
என்று சிறு வயதில் சொன்ன போது அவரது அப்பா “ஆமாம்” என்று சொல்லிவிட வேண்டியதுதானே”
என்று சொன்னதையும் வைத்துப் பார்க்கும் போது அதில் ஏதேனும் உண்மை இருக்குமோ என்ற
சின்னச் சந்தேகம் நம்முள் எழத்தான் செய்கிறது.
உயர்ந்த பட்டப்படிப்பு பெற்றவர்கள் உள்ள கமலின் குடுமப்த்தில் கமல்
மட்டும் அவர் விருப்பப்படி, பரத நாட்டியமும், கதக்கும் கற்றும், டி, கே சண்முகம்
அவர்களின் நாடகக் கம்பெனியில் நாடகம் பயின்றும், தன் 16 ஆம் வயதில், நடன
இயக்குனரானத் தங்கப்ப மாஸ்டரின் உதவியாளர் ஆகிவிட்டார். எப்படியோ பாலச்சந்தரின்
கண்ணில் பட்டக் கமலின் உள்ளே இருந்த நடிகனை, பாலச்சந்தர் பதப்படுத்தித் தமிழ் திரை
உலகிற்குத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டார்.
அதே போல் மலையாளத் திரை உலகிலும் இயக்குனர் சேதுமாதவன், கமலை,
கன்னியாகுமாரியில், நாயகனாக்கி மலையாளத் திரை உலகிலும், நிலையான ஓரிடத்தைப் பெறச்
செய்துவிட்டார். தெலுங்கிலும், இயக்குனர் விஸ்வநாத் போன்றோர் தெலுங்கு தேசத்தையே கமலால்
அபரிக்கச் செய்து விட்டார்கள். கன்னடத்
திரை உலகும் கமலுக்குச் சொந்த வீடு போல்தான். இப்படித் தென்னகத்தைத் தன்னகமாக்கிக்
கொண்ட கமல், ஏக் துஜே கேலியே மூலமாக, ஹிந்தித் திரை உலகிலும் சென்று வெற்றிக் கொடி
நாட்டினார்.
நல்ல இயக்குனர்களுடன் பல
நல்ல படங்களில் நடித்ததால், அவருக்குக் கிடைத்த நீண்ட காலத் திரை உலக அனுபவங்களும்,
அவருள் நல்ல ஒரு நடிகனை மட்டுமல்ல, நல்ல ஒரு திரைப்படக் கலைஞனையும்,
இயக்குநரையும், தயாரிப்பாளரையும் வளரச் செய்தது. அதன் பலனாகத்தான் அவரால் 16 வயதினிலே, மூன்றாம்
பிறை, ராஜபார்வை, சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, குணா, மஹாநதி, குருதிப்புனல்,
அவ்வைஷண்முகி, விருமாண்டி, அன்பே சிவம், போன்ற நல்ல படங்களை, நம் மனதில் எப்போதும்
தங்கி நிற்கும் படங்களைத் திரையுலகிற்கு வழங்க முடிந்தது. மருத நாயகம் போன்ற படங்களை அவர் எடுக்க முயன்று
தன் கையைச் சுட்டுக் கொண்டதும் அதனால்தான்.
இறை உணர்வு எனக்கில்லை என்று கமல் சொன்னாலும், இறையருள் அவருக்குத்
தேவையான நேரத்தில் கிடைக்கத்தான் செய்கிறது.
அதனால்தான், அவர்தன் கையிலுள்ள பணத்தை எல்லாம் செலவழித்து படம் எடுக்கும் போது,
அதில் ஒன்று ஓடாமலும், வேறொன்று வெளியிடமுடியாமலும், இக்கட்டான சூழ்நிலை வந்தாலும் எப்படியோ அப்படமோ, அடுத்த படமோ
ஓடி அவர் செலவழித்தப் பணத்தை அவரிடம் திரும்ப வந்து சேர வைக்கிறது. விருமாண்டி விவாதிற்குள்ளானாலும்,
அதன் பின் வந்த படங்கள் பலதும் வீணான விவாத்த்திற்கு உள்ளாகி, அதன் வாயிலாக
அவருக்கு ஓரளவு லாபத்தைக் கொடுத்திருக்கிறது.
இறுதியில் விஸ்வரூபமும், அவரது வீட்டை விற்க வேண்டிய நிலைக்குக் கொண்டு வந்தாலும்,
அப்படியெல்லாம் நிகழாமல் தடுத்து இப்போது அவரை அப்படத்தின் இரண்டாம் பகுதியை
எடுக்கச் செய்திருக்கிறது.
விவாதமும் பிரச்சனைகளும்
அவர் எடுக்கும் படங்களுக்கு மட்டுமல்ல, அவரது வாழ்விற்கும் ஏராளமான இன்னல்களைக் கொடுத்திருக்கிறது. வாணிகணபதியை, வாணி கமலஹாசனாக்கி, அவருடன்
திரையுலகில், அவருக்குக் காஸ்ட்யூம் டிசைன் செய்து சிலகாலம் மட்டுமே வாழ்க்கைத்
துணையாக வலம் வர வைத்தது. பின் இருவரும் பிரியவேண்டியதானது. அதன் பின் சரிகா, சரிகாகமலஹாசனாக
அவருடன் வாழ்ந்து அவர்களது குழந்தைகளுக்கு நல்ல தாயாகவும், அவரது திரையுலக
சாதனைகளில் எல்லாம் நல்ல இணையாகவும் திகழ்ந்திருந்தாலும், ஏதோ சில பிரச்சனைகள்
அவர்களிடையே தோன்றி அவர்களையும் பிரித்து விட்டது. இப்போது அவர்தன் அன்புத் தோழி கௌதமியுடன்
அமைதியாக வாழ்ந்து வருகின்றார். ஒத்துப்
போக முடியாது என்று ஒருநிலை வந்துவிட்டால், கமல், உண்டு, இல்லை என்ற முடிவு
எடுப்பதுடன், அதில் அவர் இறுதி வரை நிற்பவரும் கூட. இதெல்லாம் பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்த
விஷ்யம்தான். இனி நான் சொல்லப் போவது அவரை
எண்ணி நான் வியந்த இரு சம்பவங்களைப் பற்றி.
அவர் சினிமாவில்
மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் மற்றவர்களுக்குப் பிரச்சினகள் உருவாக்காமல் தன்
நடிப்பாற்றலை வெளிப்படுத்துபவர். மேக்கப்
போட்டு ஆலப்புழை பகுதிகளில் தனியே கைலியைக் கட்டிக் கொண்டு நடப்பது, படகில் பயணம்
செய்வது, கடற்கரை மற்றும் கடைத்தெருக்களில், சுற்றித் திரிவது போன்றவற்றை எல்லாம்
இடையிடையே செய்து புதுப்புது அனுபவங்களை நுகர்பவர். (சில அருடங்களுக்கு முன்பு
வரை. இப்போது செய்கிறாரா என்று தெரியவில்லை)
“எனக்கு ஸ்ரீவித்தியாவின்
கண்கள் மிகவும் பிடிக்கும்” என்று எப்போதோ (1979-80?) அவர் சொன்னதை குமுதம் வார
இதழில் படித்திருக்கிறேன். அது போல் ஒருமுறை படப்பிடிப்பின் போது கமலுக்கு அருகே அமர்ந்து
உணவருந்த மாட்டேன் என்று சொல்லி ஸ்ரீவித்தியா கோபத்துடன் எழுந்து போன செய்தியை
வாசித்திருக்கிறேன். அவர்களிடையே நட்புறவு
சிலகாலம் இருந்து பின் இல்லாமல் போயிருக்கலாம். அப்படிப்பட்ட, அழகானக் கண்களையுடைய,
ஸ்ரீவித்தியா அவரது இறுதி நாட்களில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு படுத்த
படுக்கையாக திருவனந்தபுரத்தில் இருந்த போது ஓரிரு தினம் கமல் அவரோடு தங்கி
அவருக்கு ஆறுதலாக இருந்து சென்றிருக்கிறார். கமல் ஸ்ரீவித்தியா உறவு பற்றி பல
வித்தியாசமானச் செய்திகள் வந்திருந்தன.
அதில் சிலவற்றை உறுதி செய்யும் வண்ணமாக திரக்கதா (திரைக்கதை) எனும் ஒரு
மலையாளப்படம் ஆறு வருடங்களுக்கு முன் வெளிவந்தது.
அதைப் பார்த்த எனக்கு அனூப்மேனன், ப்ரியாமணி, ப்ருத்விராஜ் போன்றோர்
எவ்வளவு அருமையாக, கமலையும், ஸ்ரீவித்தியாவையும், ஸ்ரீவித்தியாவிற்கு எல்லா
உதவிகளும் இறுதிவரை செய்த, நடிகரும் அப்போது மந்திரியாகவும் இருந்த கணேஷ் குமாரையும்
நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்கள் என்று வியந்தேன். இப்படத்தை கமலின்
மேல் அன்பும், அக்கறையும், உள்ளவர்கள்
கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். பார்த்தால், உண்மையிலேயே கமலின் மேல் உள்ள
அன்பும், மதிப்பும் பன்மடங்கு கூடும். என்பதில் ஐயமில்லை. மனித நேயமிக்க கமலை நமக்கு அப்படம் காண்பிக்கின்றது. அந்த மனித நேயம்தான் அவர் தன் உடலை மரணத்திற்குப்
பிறகு மருத்துவக் கல்லூரிக்குத் தானம் செய்யத் தீர்மானம் எடுக்கச்
செய்திருக்கிறது. இத்தகையச் சிறப்புகள்
பவலவற்றை தன்னுள் தக்க வைத்துள்ள கமலஹாசன் எனும் கலைஞன் நோயற்ற வாழ்வும், குறைவற்ற
செல்வமும் பெற்று நீண்ட நாட்கள் வாழ நாம் எல்லோரும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்
கொள்வோம்.
படங்கள் : கூகுள்
(ஒரு சிறிய குறிப்பு: சில நொடி சினேகம் குறும்பட்த்தின் இயக்குனரும்,
பதிவருமான குடந்தை ஆர்.வி. சரவணன் அவர்கள் தனது வலைத்தளமாகிய http://kudanthaiyur.blogspot.in/ ல் “திருமண ஒத்திகை” எனும் மிகவும் சுவாரஸ்யமான தொடர், சினிமா போன்று
கதை வசனங்களுடன் எழுத ஆரம்பித்துள்ளார். ஆர்வம் உள்ளவர்கள் அவரது வலைத்தளத்தில்
வாசிக்கலாம். சுட்டி http://kudanthaiyur.blogspot.in/2014/10/blog-post_23.html)
நாளையிலிருந்து, வலைத்தளம் வருவதில் திறு தடங்கல். எனவே அன்பர்களே உங்கள் வலைத்தளத்திற்கு வருவது சற்று சிரமமாக இருக்கும். எனவே தவறாக எண்ண வேண்டாம். அடுத்த வாரம் மீண்டும் வந்துவிடுவோம். மிக்க நன்றி!
நல்ல டிரிபியூட்
பதிலளிநீக்குநிறைய அறிந்தேன்
மிக்க நன்றி நண்பரே! கீதா வெளியூர் சென்றதால் பதில் அளிக்கவும், வெளியிடலும் தாமதாமாகி விட்டது!
நீக்குஎனக்குப் பிடித்த நடிகர் கமலின் பிறந்த நாள் பகிர்வு மிகவும் அருமை சார்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
மிக்க நன்றி நண்பரே! அவர் எப்பேற்பட்டக் கலைஞன்!
நீக்குஇப்போ தான் நான் வரேன், நீங்க கிளம்புறீங்களா:((( ஓகே! வழக்கம் போல நிறைய தெரிஞ்சுகிட்டேன் சகாஸ்:)
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோதரி! ஆமாம்! கீதா வெளியூர் பயணம். அதனால் தாமதம்!
நீக்குகமல் பற்றிய அருமையான ஒரு தொகுப்பு. பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி
பதிலளிநீக்குமிக்க நன்றி சொக்கன் நண்பரே! பதிலளிக்கத் தாமதமாகி விட்டது!
நீக்குகமலுக்கு என் வாழ்த்துக்களும்
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே! அந்த மாபெரும் கலைகனை வாழ்த்தத்தான் வேண்டும்!
நீக்குஅன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குகமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்! மிகவும் அருமையாகச் சொல்லி வாழ்த்தியிருக்கிறீர்கள். மாபெரும் ஒரு கலைஞனை இந்தியா பெற்றிருப்பதை எண்ணி எண்ணி நாம் பெருமை கொள்ளலாம்.
பூணூல் வேண்டாம் என்ற பொழுது பாரதியாக...இறை மறுப்பாளரான நாத்திகவாதியான பொழுது பெரியாராக...அவர் தன் உடலை மரணத்திற்குப் பிறகு மருத்துவக் கல்லூரிக்குத் தானம் செய்யத் தீர்மானம் எடுக்கச் செய்ய முன் வந்த பொழுது மனித நேயமிக்கவராக திரையில் நன்றாக நடிக்கும் கமல் வாழ்க்கையில் நடிக்காமல் ஒரு முன்மாதரியாக வாழ்ந்து வருகிறார் என்பதை எண்ணுகின்ற பொழுது பெருமையாக இருக்கிறது.
அவரின் முத்திரைபதித்த படங்களையெல்லாம் 16 வயதினிலே, மூன்றாம் பிறை, ராஜபார்வை, சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, குணா, மஹாநதி, குருதிப்புனல், அவ்வைஷண்முகி, விருமாண்டி, அன்பே சிவம், போன்ற நல்ல படங்களை, நம் மனதில் எப்போதும் தங்கி நிற்கும் படங்களைத் திரையுலகிற்கு வழங்க முடிந்தது என்ற நல்ல செய்தி மறவாமல் கூறியது அருமை. பல அரிய தகவலகளைக் கூறினீர்கள்.
இயக்குநர் திரு.பாலச்சந்தரால் கண்டெடுத்த கலைஞனை காலம் வாழ்த்தும் நாமும் வாழ்த்துவோம்.
நன்றி.
ஆம் நண்பரே!
நீக்கு//பூணூல் வேண்டாம் என்ற பொழுது பாரதியாக...இறை மறுப்பாளரான நாத்திகவாதியான பொழுது பெரியாராக...அவர் தன் உடலை மரணத்திற்குப் பிறகு மருத்துவக் கல்லூரிக்குத் தானம் செய்யத் தீர்மானம் எடுக்கச் செய்ய முன் வந்த பொழுது மனித நேயமிக்கவராக திரையில் நன்றாக நடிக்கும் கமல் வாழ்க்கையில் நடிக்காமல் ஒரு முன்மாதரியாக வாழ்ந்து வருகிறார் என்பதை எண்ணுகின்ற பொழுது பெருமையாக இருக்கிறது.//
கமலைப் போன்ற ஒரு மாபெரும் கலைஞண் இந்தியாவின் ஒரு பொக்கிஷம்! தங்களது கருத்துக்கள் அனைத்தும் மிகவும் சரியே!
மிக்க நன்றி அய்யா.
நீக்குசிறந்த கலைஞனுக்கு சிறந்த பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு.வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி சகோதரி! தங்களது பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும்!
நீக்குசில தகவல்கள் அறியாதவை... அறிந்தேன்...
பதிலளிநீக்குஅடுத்த தங்களின் குறும்படம் எப்போது...?
வாங்க டிடி! எவ்வளவு நாளாச்சு! இப்பத்தான் வலைஉலகமே சுறுசுறுப்பா இருக்கும்! மிக்க நன்றி !
நீக்குஅடுத்தக் குறும்படம் எப்போதும் போல் 2015 ஏப்ரல் இறுதி வாரத்தில் இரு நாட்கள்! ஒரு சரித்திரப் பின்னணி கொண்டப் படம் நண்பரே! எல்லாம் ரெடியான பிறகு சொல்கின்றோம்!
ஒரு நல்ல களைஞனின் பிறந்த நாளில் அவரைப் பற்றி நல்ல பதிவு.நன்றி
பதிலளிநீக்குஆம்! மிகவும் நல்ல ஒரு கலைஞனே! மனிதனும் கூட!
நீக்குதங்களின் அலசலை ரசித்துப்படித்தேன், ஒரு நல்லதொரு கலைஞன் என்பதில் யாருக்கும் எள் அளவும் ஐயமில்லை, இவரைத் தமிழன் என்பதால் பல சமயங்களில் பெருமைப்படுகிறேன், சில இடங்களில் சிறுமையும் கொள்கிறேன் ஆனால் இவரைப்போன்றவர்களால் மக்களுக்கு ஒரு பிரயோசனமும் இல்லை என்பதையும் நினைவில் கொள்கிறேன், இந்தத் தமிழன் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து சாதனை படைத்திட வாழ்த்துவோமாக...
பதிலளிநீக்குஉண்மையை உள்ளபடி எழுதுபவன் என்ற உணர்வுடன்
கில்லர்ஜி
மிக்க நன்றி கில்லர் ஜி! நல்ல கலைஞன்! அவர் பல நல்ல விஷயங்களும் செய்கின்றார் ஜி! கலை உலகிற்கு அவர் பிரயோசனப்படுகின்றாரே! கலையும் சமூகத்தின் ஒரு அம்சம்தானே ஜி! அப்படி எடுத்துக் கொள்வோம். அவரது தனிப்பட்ட வாழ்க்கை நமக்கெதற்கு! ஜி! பரவால்ல ஜி! கலையை வாழ்த்துவோம்!
நீக்குகமலின் பிறந்த நாள் பகிர்வு நன்று
பதிலளிநீக்குஅவருக்கு
எனது பிறந்த நாள் வாழ்த்துகள்
தொடருங்கள்
மிக்க நன்றி நண்பரே! தங்கள் வாழ்த்துக்களுக்கு!
நீக்குஅனுஷ்காவுக்கும் இன்று பிறந்தநாள். அவங்க பற்றி எழுத மாட்டீங்களா! :))))
பதிலளிநீக்குஹஹஹஹஹஹ! ஐயையோ அது தெரியாமப் போச்சே இல்லனா அவங்களையும் சேர்த்திருக்கலாமே! சரி அவங்களுக்கு என்ன வயசாச்சு?!!!!!
நீக்குஆறிலிருந்து அறுபது வரையை ரசித்துப் படித்தேன் ,நீங்க அவ்விட வந்த படத்தைச் சொன்னது ,நான் அறிந்திராத ஒன்று !
பதிலளிநீக்குத ம 6
ஹஹஹ்ஹ் ஓ! ஆபடத்தையோ?!! மலையாளத் திரையுலகில் அவர் சில படங்கள் செய்திருக்கின்றார்! அவருக்கு மலையாளமும் தெரியும்! மிக்க நன்றி ஜி!
நீக்குநல்ல பதிவு! உண்மையிலேயே நீங்கள் கடைசியாகக் கூறிய அந்த இரு செய்திகளும் நான் அறியாதவை. இப்படி ஒரு படம் வந்திருக்கிறதா? ஏன் அதைத் தமிழில் படைக்கவில்லை? ஒருவேளை தொடர்புடையவர்கள் யாரையாவது புண்படுத்தும் என்பதாலா?
பதிலளிநீக்குசரி, அஃது இருக்கட்டும்; அவர் தன் ஆழ்வார்பேட்டை வீட்டை விற்றுத்தான் 'விஸ்வரூப'மெடுத்தார் என்றுதான் கேள்விப்பட்டேன். ஆனால், அந்த முயற்சி கடைசியில் கைவிடப்பட்டு விட்டதாகக் கூறியிருக்கிறீர்களே! உறுதியாகவா?
//தென்னகத்தைத் தன்னகமாக்கிக் கொண்ட கமல்// - அருமை!
மிக்க நன்றி நண்பரே! ஆம்! திரக்கதா ! நல்ல ஒரு படம்! நீங்கள் சொன்ன காரணமாக இருக்கலாம்! தமிழில் படைக்கப்படாததன் காரணம். மட்டுமல்ல அந்தக் கதையை மலையாள உலகில் ஒரு சிலர், மலையாள நடிகர், நடிகை இருவரின் கதையாகவும் கண்டார்கள்! ஆனால் அது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை!
நீக்குஆமாம்! அப்படித்தான் செய்தி வந்தது! நிலப்பத்திரத்துடன் (எந்த நிலப் பத்திரம் என்று தெரியவில்லை) ராயப்பேட்டை சார்பதிவாளர் அலுவலத்தில் நின்றிக்கும் போது, அங்கு ஒரு வயதான மூதாட்டி கையில் துடைப்பத்துடனும், கூடையுடனும், "ஏம்பா விக்கற நாங்கல்லாம் இருக்கோம். உன் ப்டத்த பாக்கறோம். தைரியமா போ" என்று வாழ்த்தியதாகக் கமல் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கின்றார். இந்தப் பதிவிற்காக விடயம் திரட்டிய போது அறிந்தது. அவர் வீட்டை வங்கியில் மார்ட்கேஜ்தான் செய்திருப்பதாகவும், அதையும் விரைவுல் மீட்டிடுவார் எனபதும் தான் தெரிய வருகின்றது.
சினிமா உலகில் இருப்பவர்கள் பலருக்கும் இது ஒரு தினப் பிரச்சினைதான். இயக்குனர் கௌதம் மேனனும் கூட நஷ்டத்திலும், கஷ்டத்திலும் இருப்பதாகவும், அவருக்கு உதவத்தான் அஜித் நடித்துக் கொடுப்பதாகவும் சொல்லப்படுகின்றது.
கமல் சமீபத்தில் பல சமயங்களில் நஷ்டத்தில் அடிபட்டுத்தான் தனது திரைப்படத்தை எடுத்துவருகின்றார். அவர் தன்னையே திரை உலகிற்காக அர்பணித்துக் கொண்டவராயிற்றே! அதனால் அதில் வியப்பில்லை!
தங்கள் யுவா தொலைக்காட்சியின் கமலைப் பற்றிய தங்கள் படைப்பைக் கண்டோம். மிக அருமை! நண்பரே! தொகுப்பு! பின்னணிக் குரல் தங்களுடைய குரலா?! தமிழும் குரலும் அருமை! வாழ்த்துக்கள்! மிகவும் ரசித்தோம்!
//"ஏம்பா விக்கற நாங்கல்லாம் இருக்கோம். உன் படத்த பாக்கறோம். தைரியமா போ" என்று வாழ்த்தியதாகக் கமல் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கின்றார்// - ஆகா! எனக்கு இதைப் படிக்கும்பொழுது அம்பிகாபதிக்காகக் கொட்டிக்கிழங்கு விற்ற கலைமகள் நினைவு வருகிறது.
நீக்கு//அவர் வீட்டை வங்கியில் மார்ட்கேஜ்தான் செய்திருப்பதாகவும், அதையும் விரைவுல் மீட்டிடுவார் எனபதும் தான் தெரிய வருகின்றது// - மிக்க மகிழ்ச்சி!
கமல் பற்றிய படைப்புக் குறித்து உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் ஐயா, அம்மணி இருவருக்கும் நன்றி! எழுத்து மட்டும்தான் என்னுடையது. பின்னணிக் குரல் கொடுத்தவர் ஜெயா தொலைக்காட்சியின் ரசூல் ஜெயபதி அவர்கள்!
கமலைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்! நன்றி!
பதிலளிநீக்குமிக்க நன்றி சுரேஷ் நண்பரே!
நீக்குசிறப்புப் பதிவு வெகு சிறப்பு
பதிலளிநீக்குஇதுவரை அறியாத கமல் அவர்களின்
மற்றொரு உயரிய பக்கத்தை காட்டிப் பதிவிட்டமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ரமணி சார்! தங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும்!
நீக்குகமல் ஹாசன் ஒரு நல்ல நடிகர் என்பதை யாராலும் மறுக்க இயலாது. நினைவு தெரிந்த நாளில் இருந்து இவர் படங்களை பார்த்து ரசித்தவன் தான் நான்.
பதிலளிநீக்குஆனாலும் தான் ஒரு பகுத்தறிவாளி என்று சொல்லி கொண்டு இவர் பண்ணும் ஆட்டங்கள் தான் கொஞ்சம் ஓவர் தி டாப்!
நல்ல பதிவு நண்பரே தொடர்ந்து எழுதுங்கள்!
மிக்க நன்றி நண்பரே! கலைஞனாக மட்டும் பார்ப்போம்! மனித நேயம் மிக்க ஒரு படைப்பாளியாகவும் பார்போம். பகுத்தறிவாளிகள் பலரும் அதைத்தான் செய்துவருகின்றார்கள்! நண்பரே!
நீக்குமிக்க நன்றி! வருகின்றோம் தங்கள் தளத்திற்கு!
'யுவா தொலைக்காட்சி'க்காக நான் எழுதிய 'கலையுலகில் கமலியல்!' (Kamalism in Tamil Cinema!). கமல்ஹாசன் வைர விழாப் பிறந்தநாள் சிறப்பு விழியம் (video)! இங்கே உங்கள் பார்வைக்காக! http://yuvatv.co.in/e-mag/kamalism-in-tamil-cinema-documentary--51
பதிலளிநீக்குபார்த்தோம்! ரசித்தோம்! அருமை! பின்னூட்டம் மேலே!
நீக்குமிக்க நன்றி நண்பரே! அதை நாங்கள் முக நூலிலும் பகிர்ந்துள்ளோம்!
நீக்குமிக்க நன்றி!
நீக்குகமலின் பிறந்த நாளுக்கு அருமையான பரிசு உங்கள் கட்டுரை...... வாழ்த்துகள்.
பதிலளிநீக்குத.ம. +1
மிக்க நன்றி வெங்கட் ஜி! வாழ்த்துக்களுக்கு! தங்கள் இடுகைகளை இனிதான் வாசிக்க வேண்டும்! வருகின்றோம்!
நீக்கு