நான் இருக்கிறேன் அம்மா
சரி(சிரி)தாயணத்தின்
இனிய மாலைப் பொழுதில், நான் இருக்கிறேன் அம்மா என்று சொல்லும், வலையுலகில்
வாத்தியார் என அழைக்கப்படும் திரு பாலகணேஷ், அவர்களின், இந்த வயதிலும் அவரைச் சிறு
பையனாகக் காணும் அவரது அன்பான, அம்மாவின் ஆசியுடன், நூல்கள் வெளியீட்டு விழா - 12.10.2014,
இன்று, டிஸ்கவரி புக் பேலஸையே சிரித்திரபுரமாக மாற்றி, மிகவும் இனிதாக நடைபெற்றது.
இந்தப் பதிவு வெளியிடும் நேரம் இரவு 12 ஐத் தாண்டி, திங்கள் – 13-10-2014 பிறந்து
விடுவதால் நேற்று என்று கொள்ளவும்.
சரிதாயணம் இரு பாகங்களாகவும், அதில் ஒன்று இரு நூல்களாக-முன்பக்கம் சரிதாயணம் கதைகள் -அட்டைப்படமும், பின்புறம் நான் இருக்கிறேன் அம்மா - சிறு கதைகள். இதை முன்புறமாகவும் கொள்ளலாம். அதுதான் இதன் சிறப்பு.
சரிதாயணம் இரு பாகங்களாகவும், அதில் ஒன்று இரு நூல்களாக-முன்பக்கம் சரிதாயணம் கதைகள் -அட்டைப்படமும், பின்புறம் நான் இருக்கிறேன் அம்மா - சிறு கதைகள். இதை முன்புறமாகவும் கொள்ளலாம். அதுதான் இதன் சிறப்பு.
விழாவில் வாத்தியார் திரு பாலகணேஷ் அவர்கள் எல்லோரையும் வரவேற்க, திடங்கொண்டு போராடு வலைத்தள பதிவர் சீனு வழக்கம் போல் தனது இனிய மொழியில் தொகுத்து வழங்கினார்.
சீனு
பயணம் வலைத்தளப் பதிவர்
திரு கோவை ஆவி வரவேற்புரை வழங்கி, விழாவை வாழ்த்தித் தொடங்கி வைத்தார்.
சேட்டைக்காரன்
சேட்டைக்காரன் அவர்களுக்கு முங்கில் காற்று டி.என் முரளிதரன் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்குதல்
புத்தகத்தை வெளியிட்டு
வாழ்த்தி சிறப்புரை ஆற்றியவர், வலையுலகில் நகைச்சுவைப் படைப்புகளுக்குப் பிரபலமான,
மொட்டைத் தலையும் முழங்காலும் என்ற புத்தகத்தின் ஆசிரியருமான, வாத்தியாரின் உற்ற
நண்பரும்/குருவமான, அவர் வலைத்தளம் ஆரம்பிக்கக் காரணமாக இருந்தவருமான, சேட்டைக்காரன் அவர்கள் (எங்கள் ஊர்
நாகர்கோவில்காரர் என்பதில் மிகவும் பெருமை). “நாம் எல்லோரும் அரசியல்வாதிகளைக் கலாய்க்கிறோம்
ஆனால் அவர்கள் நம்மைத்தான் காமெடி பீஸாக்குகிறார்கள். மனைவிமார்களைக் கலாய்த்தால் நாம் தான் அங்கு
காமெடி பீஸாகின்றோம்” என்று தனக்கே உரித்தான பாணியில் சிரிப்பு வெடிகளை
உதிர்த்தார்.
சேட்டைக்காரன் அவர்கள் புத்தகத்தை வெளியிட அதைப் பெற்றுக் கொண்டவர் எழுத்தாளர் திரு முகில் அவர்கள். ஆனந்த விகடனில் மாணவப் பத்திரிகையாளராக இருந்தவர். அகம், புறம், அந்தப்புரம் எனும் சரித்திரத் தொடரை அவர் குமுதத்தில் எழுத, அது 185 வாரம் தொடர உதவியாக இருந்தது நகைச்சுவை என்று சொன்னார்.
எழுத்தாளர் முகில்
முகில் அவர்களுக்கு திரு கேஆர்பி செந்தில் அவர்கள் பொன்னாடை போர்த்துகிறார்
ஆதிரா முல்லை அவர்களுக்கு சமீரா பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசும் வழங்கினார்
ஆதிராமுல்லை
(முனைவர்.ப.பானுமதி), உதவிப் பேராசிரியர், வள்ளியம்மாள் கல்லூரி, சென்னை, தனக்கு
இலக்கியம்தான் பேசவரும் என்றாலும் இங்கு இலக்கியம் பேசப்போவதில்லை என்றும் தனக்கு
நகைச் சுவை பேச வராது என்று சொன்னாலும் அழகிய நகைச்சுவைக் கதை ஒன்றைச் சொல்லி,
மிகவும் சுவைபட, வாழ்த்திப் பேசினார். முக்கியமாக, வாத்தியார் இனியும் எழுதப்
போகும் எல்லா புத்தகங்களுக்கும் தனது அணிந்துரைதான் இருக்க வேண்டும் என்ற விருப்பமான,
வேண்டுகோளை முன்வைத்தார்.
திருமதி கமலம் சங்கர்
திருமதி கமலம் சங்கர்,
தேர்வுநிலை விரிவுரையாளர், பணி ஓய்வு பெற்றவர், தமிழ்த்துறை, மதுரைக் கல்லூரி –
இவர், திரு பாலகணேஷ் அவர்களின் சித்தியுமாவார்.
(அவரது கணவர் வாத்தியாரின் தந்தையின் சகோதரர்). அவர் மிகவும் பெருமையாகவும், ஆச்சரியமாகவும் சொல்லிய ஒரு விஷயத்தை இங்குச் சொல்லியே ஆக
வேண்டும். வாத்தியார் சிறு பையானாக இருந்த
போது, சுருக்கமாக ஒரு மூன்று பக்கத் தொகுப்புரையைத் தமிழில் எந்த வித
எழுத்துப்பிழையோ, இலக்கணப் பிழையோ இல்லாமல் எழுதியிருந்தாராம். அப்போ கேட்கணுமா?!!!
வாத்தியார் இன்று பலருக்கும் வாத்தியாராகவும், பதிவுகளும், புத்தகங்களும்
எழுதுவதற்கான அடிப்படை அன்றே தொடங்கியிருக்கின்றது என்பது தெரிகின்றது அல்லவா?!! வாத்தியாரைப்
பற்றி இன்னும் பெருமைகள் பேசப்பட்டன. அது அப்புறம். (ஆஹா அப்போ இந்தப் பதிவு
எழுத்துப் பிழை இல்லாமல் இருக்க வேண்டுமே)
திருமதி கமலம் சங்கர் அவர்களைக் கௌரவிக்க, என் பெயர் திடீரென்று அழைக்கப்பட்டதும் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்றாலும் கணேஷ் அண்ணாவின் வார்த்தைகளை மறுக்க முடியுமா?!!
சிரிப்பானந்தா
சிரிப்பானந்தா அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசு வழங்குபவர், வெளிவர இருக்கும் திரைப்படம் தொட்டால் தொடரும் திரைப்படத்தின் இயக்குனரும், பிரபல பதிவருமான திரு கேபிள் சங்கர்
சிறப்பு விருந்தினராக
கலந்து கொண்ட “சிரிப்பானந்தா” அவர்கள் நகைச்சுவையுடனும், சுவைபடவும் வாழ்த்திப்
பேசினார். இவர் அம்பத்தூர் பகுதியில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிறு அன்று
நகைச்சுவை அரங்கம் நடத்தி வருகின்றாராம். இவர் பேசும் போது, ஒரு புத்தகத்தில் இரு கதைப் பிரிவுகள் இருப்பதைச் சொல்லி, முன்பக்கம் பக்கம் கணவனும், பின் பக்கம் மனைவியும் ஒரே சமயத்தில் வாசிக்கலாம்....ஆனால் மனைவி தலை கீழாக நின்று வாசிக்க வேண்டும் என்று சொல்ல......மனைவி நேராகவும்....கணவன் தலைகீழாகவும் வாசிக்கலாமோ என்றும் தோன்றியது........இறுதியில் கல்யாண சமையல் சாதம் பாடலைப்
பாடச் சொல்லி “ஹ்ஹ்ஹ்ஹ்ஹ” என்று கை கொட்டிச் சிரிக்கச் சொல்லி முடித்துக்
கொண்டார்.
காவேரிமைந்தன் அவர்கள் வாத்தியாருக்குப் பொன்னாடை போர்த்துகிறார்
பின்னர் காவேரி மைந்தன்,
தமிழ் சங்கத்தின் சார்பில் வாழ்த்திப் பேசினார்.
இவர் கவிஞர் கண்ணதாசனின் தாசன். அழகாகப்
பேசினார்.
பப்ளிஷர் திரு பிரகாஷ் அவர்களை வாத்தியார் நினைவுப் பரிசு அளித்துக் கௌரவித்தல்
வலைப்பதிவர் ஸ்கூல் பையன் வாழ்த்திப் பேசுகிறார்
மூங்கில்காற்று வலைப்பதிவர் திரு டி.என் முரளிதரன் அவர்கள் வாழ்த்திப் பேசுகிறார்
வலைப்பதிவர் மெட்ராஸ் பவன் திரு சிவக்குமார் அவர்கள் வாழ்த்திப் பேசுகிறார்
சமீரா வாழ்த்திப் பேசுகிறார்
திரு கேஆர்பி செந்தில் அவர்கள் வாழ்த்திப் பேசுகின்றார்
டிஸ்கவரி புக் பேலஸ் உரிமையாளர் திரு வேடியப்பன் அவர்களுக்கு சேம்புலியான் வலைத்தளப் பதிவர் திரு ரூபக் ராம் அவர்கள் நினைவுப் பரிசு அளிக்கின்றார்
திரு. பாலகணேஷ் அவர்கள்
இறுதியில் நன்றியுரை வழங்க, விழா மிகவும் இனிதே நிறைவுற்றது. மட்டுமல்ல இது ஒரு இனிய, பதிவர்கள், நண்பர்கள்
சந்திப்பாகவும் மிகவும் மகிழ்ச்சியான மாலைப் பொழுதாக, இருந்தது என்று சொன்னால்
மிகையாகாது. மிக்க நன்றி பாலகணேஷ் அண்ணா!
தம்பிகள்/நண்பர்கள் சீனு,
ஆவி, ஸ்பை “மேடம் நீங்க வாழ்த்தி பேசியிருக்கலாமே” என்றார்கள். “இல்லை அதை விட வலைத்தளத்தில் பேசுகின்றேன்”
என்று சொன்னதற்கு, மூவரும், “அப்ப கொஞ்சம் கட்/எடிட் பண்ணிக் கொடுங்க
சின்னதா......பெரிசா கொடுத்தா இரண்டு பதிவா போடுங்க” என்று சொல்ல சீனுவும்
அப்படித்தானே என்று நாங்கள் காலாய்த்துக் கொண்டோம். தம்பிகளே மிகச் சிறிதாகக்
கொடுத்துள்ளேன்????!!. ஃபோட்டோக்கள் இடுகையை
பெரிதாக்கியதற்கு நான் பொறுப்பல்ல தம்பிகளா!!!!
இன்னும் பல பேச விருப்பம். நடந்ததைப் பற்றி. இடுகை பெரிதாகிவிடுமே என்பதால் இங்கு இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.
திரு பாலகணேஷ் அவர்களுக்கு எங்கள்
மனமார்ந்த வாழ்த்துக்கள்! இன்னும் பல
புத்தகங்களை (அடுத்து சரித்திரத் தொடர் எழுத இருக்கின்றார். அதுவும் புத்தகமாக வெளிவர வேண்டும்) அவர்
வெளியிட வேண்டும் என்றும் அதைக் காண, வாசிக்க
நாங்கள் எல்லோரும் மிகவும் ஆவலுடன் இருக்கின்றோம் என்பதைத் தெரிவித்துக் கொண்டு,
அன்பார்ந்த வலைப்பதிவர்கள் எல்லோர் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்களைத்
தெரிவித்துக் கொள்கின்றோம் அண்ணா!
வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!
-கீதா
நிகழ்ச்சியை நேரில் பார்த்தது போல் இருந்தது அனைத்தும் அழகாக விபரித்துள்ளீர்கள்.
பதிலளிநீக்குதாங்கள் இல்லையல்லவா இப் புகைப்படங்களில் நான் தேடித் தேடி பார்த்தேன். காணவில்லை. மிக்க மகிழ்ச்சி தோழி.
சகோதரர் திரு பாலகணேஷ் அவர்களுக்கும் மேலும் மேலும் அவர் புகழ் ஓங்கவேண்டும் பல படிப்புகள் தரவேண்டும் என மனமார வாழ்த்துகிறேன்....!
மிக்க நன்றி சகோதரி!
நீக்குபொதுவாக நான் புகைப்படத்தில் வருவதை விரும்பாதவள். ஆனால், சில சமயங்களில் அது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகின்றது! மற்றவர்களை எடுக்க விழைவேன் அவர்கள் சம்மதத்துடன். நேற்று, நான் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்ததால் என் புகைப்படக் கருவியில் இல்லை.
மிக்க நன்றி தங்கள் கருத்திற்கும், கணேஷ் அண்ணாவை வாழ்த்தியதற்கும்.
வணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா.
பல நாட்கள் புார்க்க வேண்டும்என்று ஆசையாக அலைமோதியவர்களின் உருவப்படங்கள் மூலம் அவர்களை அறியக்கிடைத்துள்ளது நிகழ்வு சிறப்பாக நடைபெற்றுள்ளது என்பதை தங்களின் பதிவு வழி அறியக்கிடைத்துள்ளது வாழ்த்துக்கள்.த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன் தம்பி! தங்கள் கருத்திற்கு! எல்லோரும் நண்பர்களையும், விழா படங்களையும் பார்க்க விரும்புவார்கள் என்பதால் தான் இடுகையைக் குறைத்துக் கொண்டு படங்களைப் போட்டோம்.
நீக்குமிக்க நன்றி!
நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொண்ட ஓர் உணர்வு
பதிலளிநீக்குநண்பர் பால கணேஷ் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்
தம 2
மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கும், பாலகணேஷ் அண்ணாவுக்கு தாங்கள் சொல்லிய வாழ்த்துக்களுக்கும்!
நீக்குஎன்னடா! அண்ணனை கொஞ்ச நாளா பார்க்கவே முடியலையேன்னு நினைச்சுகிட்டு இருந்தேன் இப்போ தான் புரியுது!! சரிதாயணம் பார்ட் 2 !!! விழாவை அட்டகாசமா தொகுத்த கீதா மேடம் ஏன் உங்க போட்டோவை போடலை:((( நான் எவ்ளோ ஆவலா இருந்தேன்:(( ஒருவேளை அந்த மஸ்டர்ட் கலர் saree யா???
பதிலளிநீக்குஅண்ணா செம பிஸி! சகோதரி/தோழி, நான் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்ததால்....
நீக்குமஸ்டர்ட் கலர் புடவை?!! ஆஹா! மைதிலி, நான் நாலடியார் தான்! அது ஆதிரா முல்லை அவர்கள்! அவர்கள் இலக்கியவாதி! அவர்கள் எங்கே நான் எங்கே!!!!
என்னைப் பார்க்க வேண்டுமென்றால் பரோட்டாக் கார்த்திக்கின் கடைசிக் காட்சியில் இருப்பேன், கண்ணாடியுடன்....நம் வலை நண்பர்களுடன்!
கீதாவின் படத்தை நான் என் தளத்தில் நாளை எழுதும்போது வெளியிடுகிறேன் மைதிலி. அங்க நீங்கள்ளாம் பார்த்து ரசிக்கலாம்.
நீக்குஅண்ணா! என்ன இது! என் படத்தைப் போட்டு அதுவும் பார்த்து ரசிக்கலாம்னு (?!!??)வேற...ஹாஹஹஹஹ்.......நான் ஃபோட்டோக்கு நிக்கறதையே கூடியவரை தவிர்க்க விரும்புபவள்....ம்ம்ம்ம் பாவம் பார்க்கறவங்க......
நீக்குதொடக்கம் முதல் அழகாகத் தொகுத்து வழங்கி உள்ளீர்கள்.
பதிலளிநீக்குஅடுத்து பாலகணேஷ் சரித்திரக்கதை ஒன்று எழுத இருக்கிறார் என்ற ஒரு ரகசியத்தையும் சிறிய எழுத்துகளில் ( ! ) சொல்லி இருக்கிறீர்கள். நன்றி.
நண்பர் பால கணேஷுக்கு எங்கள் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
புகைப்படங்கள் அருமை.
மிக்க நன்றி நண்பரே!
நீக்குஅது ரகசியம் இல்லையா அதான் சின்ன எழுத்துக்கள்! (ரகசியம்??!!!! ஹஹாஹ்...அதான் கண்டுபிடித்துவிட்டீர்களே! அது அவர் வலைத்தளத்தில் கூடச் சொல்லியிருந்தார்!.
கணேஷ் அண்ணாவிற்குத் தங்கள் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி!
சரித்திரக் நாவலை எழுதிட்டு அப்பறம் சொல்லலாம்னு நினைச்சிருந்தேன் ஸ்ரீராம். பட். சித்தியும். சீனுவுமா விழாவுல போட்டு உடைச்சிட்டாங்க. உங்க எல்லாரோட வாழ்த்துகளோடயும் அந்தப் பொறுப்பை நிறைவேத்திடுவேன்னு நம்பறேன்.
நீக்குஅழகான தொகுப்பு. நேரில் வர முடியாத என் போன்றவர்களுக்கு இது சிறப்பு பதிவு.
பதிலளிநீக்குநண்பர் கணேஷ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.
கணேஷ் அண்ணாவை வாழ்த்தியதற்கு மிக்க நன்றி!
நீக்குமிக்க நன்றி வெங்கட் ஜி! தங்கள் பாராட்டுகளுக்கும், கருத்திற்கும்!
விழாவினை நேரில் கண்டு மகிழ்ந்தோம்...
பதிலளிநீக்குபால கணேஷ் சகோதரருக்கு வாழ்த்துக்கள்.
படமும் ,கருத்துமாய் தொகுத்து வழங்கிய தங்களுக்கு நன்றி.
வாழ்த்துகளுக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி சகோதரி!
நீக்குமிக அருமையான நிழற் படங்களுடன் நிகழ்வினைத் தொகுத்துத் தந்துள்ளீர்கள்!
பதிலளிநீக்குஇப்படியாகிலும் அவ்விடத்து நிகழ்வுகளைக் நாமும் காணப் பதிவிட்டமைக்கு
உங்களுக்கு என் உளமார்ந்த நன்றி!
சகோதரர் பாலகணேஷிற்கும் இனிய வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி தங்கள் வாழ்த்துகளுக்கும்(அண்ணாவிற்கு) , வாழ்த்துகளுக்கும், கருத்திற்கும்! சகோதரி!
நீக்குபாலகணேஷ் ஒரு சுவாரசியமான மனிதர்.அவரது சரிதாயணம் வாசித்து இருக்கிறேன்/ பதிவுலகில் தனக்கென ஒரு பாணியையும் குழுவுடனும் இருப்பவர். பத்திரிக்கை துறையாளர் . வாழ்த்துக்கள் அவருக்கும் பதிவிட்ட உங்களுக்கும் .
பதிலளிநீக்குஆமாம் சார்! ஹாஸ்யம் நிறைந்த மனிதர்!
நீக்குதங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி சார்!
விழாவை சிறப்பாக தொகுத்து பகிர்ந்துள்ளீர்கள்! வேலைகள் இருந்தமையால் விழாவில் கலந்து கொள்ள இயலாமல் போய்விட்டது!
பதிலளிநீக்குஅடுத்த முறை தங்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகின்றோம்! மிக்க நன்றி சுரேஷ் தங்கள் வாழ்த்திற்கு!
நீக்குபடங்களே பேசுகிறது...வாழ்த்துகள்..
பதிலளிநீக்குமிக்க நன்றி ஜெயசீலன்!
நீக்குஅழகான தொகுப்பு! தெளிவான விளக்கமும் படங்களும் அருமை!
பதிலளிநீக்குமிக்க நன்றி புலவர் ஐயா தங்கள் கருத்திற்கு!
நீக்குஅருமையான விழாவை சிறப்பாகக் காட்சிப்படுத்தி இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!
மிக்க நன்றி சகோதரி! தங்கள் வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும்!
நீக்குஅடாடா, என்னது இது, அடிக்கடி இப்படி பதிவர்கள் சந்தித்துக்கொண்டே இருக்கிறோம்ன்னு சொன்னா, எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கு. (என்னால இந்த மாதிரி நிகழ்வுகளில் கலந்துகொள்ள முடியலையேன்னு ஏக்கம் தான் வேற ஒன்றும் இல்ல)
பதிலளிநீக்குஇந்த பதிவை படிச்சவுடனே, விழாவை நேரில் பார்த்த மாதிரி ஒரு திருப்தி.
வாங்க சொக்கன் நண்பரே! ஆமாம் நண்பரே இப்படித்தான் இந்தப் புதுக்கோட்டைக்காரர்கள் தாங்கள் சந்தித்தோம் என்று சொல்லிய போது கொஞ்சம் பொறாமையாகத்தான் இருந்தது.....ஆம் அதே ஏக்கம்தான்.....அதுவும்தாங்கள் கடல் கடந்து உள்ளீர்கள்...புரிந்து கொள்ள முடிகின்றது....தங்கள்து நாடகம் பற்றிய இடுகை வாசித்த போதும் அப்படித்தான் எங்களுக்குத் தோன்றியது........அதுதான் இப்போது நாம் வலைத்தளத்தில் அவ்வப்போது பகிர்ந்து விடுகின்றோமே! இணையம் இணைக்கின்றது/........
நீக்குமிக்க நன்றி நண்பரே!
ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு கீதாம்மா இங்க உங்க எழுத்துக்களோட படங்கள் பாக்கறப்ப. நான் நாளை அல்லது நாளை மறுநாள் தான் பதிவிட முடியும் என்கிற நிலையில எக்ஸ்பிரஸ் வேகத்தில் இங்கே விழாவை ஒரு சிறு விஷயமும் விடாமல் தொகுத்து வழங்கி அசத்திருக்கற உங்க அக்கறைக்கு ஒரு ஸ்பெஷல் சல்யூட்.
பதிலளிநீக்குமிக்க நன்றி கணேஷ் அண்ணா! இன்னும் தொகுத்திருக்கலாமோன்னு தோன்றியது...ம்ம்ம் பரவாயில்லை நீங்கள் சுவை பட எழுத இருக்கும் போது....மிக நல்ல ஒரு மனிதரின் விழாவை அன்றே தொகுத்து அளிக்க வேண்டும் என்ற ஒரு ஆசை, வேகம்....அதுதான்...மிக்க..மிக்க நன்றி அண்ணா...
நீக்குஎன் புத்தக நிகழ்வையும் என்னையும் இங்கே வாழ்த்தியிருக்கற எல்லா நட்புகளுக்கு மிகமிகமிக மகிழ்வோட என் மனம் நிறைந்த நன்றி.
பதிலளிநீக்குநாங்களும் அதே. கருத்திட்டு வாழ்த்திய அனைவருக்கும் எங்கள் நன்றி!
பதிலளிநீக்குநேரடி ஒளிபரப்பில் நெகிழ்ந்தது நெஞ்சம் ஸ்கூல் பையனை காணொளியில் காணாது வருந்தியது கொஞ்சம். வாழ்த்துக்கள் நிகழ்வை புகழும்: புதுவைவேலு
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா! ஸ்கூல் பையன் புகைப்படத்தில் இருக்கின்றாரே ஐயா! மிக்க நன்றி ஐயா தங்கள் வாழ்த்திற்கு!
பதிலளிநீக்குபுதுக்கோட்டையில் ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்களது நூல்கள் வெளியீட்டு விழா! பதிவர்கள் சந்திப்பு! சென்னையில் வலையுலக வாத்தியார் பாலகணேஷ் அவர்கள்து நூல் வெளியீட்டு விழா! அங்கும் பதிவர்கள் சந்திப்பு!
பதிலளிநீக்குபரவாயில்லை! இப்போது பதிவர்கள் புகைப்படங்களில் தென்படுகிறார்கள். முன்பெல்லாம் முகம் காட்டவே பயந்தார்கள்.
மேடையில் சீனு. வலைப்பதிவில் சகோதரியின் தொகுப்புரை. மின்னல் வரிகள் பாலகணேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
த.ம.7
மிக்க நன்றி ஐயா! ஆம்! இரு இடங்களிலும் பதிவர்கள் சந்திப்பு! மிக்க நன்றி ஐயா தங்களது வாழ்த்துகளுக்கு!
நீக்குதங்கள் வலைத்தளத்தின் FACEBOOK முகவரியைக் கொடுக்கவும்.
பதிலளிநீக்குஐயா! இதுதான் முகவரி thulasidharan thillaiakathu
நீக்கு(அடுத்து சரித்திரத் தொடர் எழுத இருக்கின்றார். அதுவும் புத்தகமாக வெளிவர வேண்டும்) அவர் வெளியிட வேண்டும் என்றும் அதைக் காண, வாசிக்க நாங்கள் எல்லோரும் மிகவும் ஆவலுடன் இருக்கின்றோம் என்பதைத் தெரிவித்துக் கொண்டு, அன்பார்ந்த வலைப்பதிவர்கள் எல்லோர் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் அண்ணா!//என் கருத்தும் இதுவேதான் சகோ அவர் எழுத நான் வாசிக்க காத்து இருக்கின்றேன். பகிர்வுக்கு நன்றி.வரமுடியாவிட்டாலும் ஆசி அவருக்கு எப்போதும் உண்டு.
பதிலளிநீக்குமிக்க நன்றி தனிமரம் அவர்களே! தங்கள் வாழ்த்திற்கு!
நீக்குவிழாவிற்கு வர முடியாத குறையை உங்கள் இந்தப்பதிவு தீர்த்துவிட்டது.
பதிலளிநீக்குபுகைப்படங்களுடன் விவரமாக எழுதியதற்கு நன்றி. பால கணேஷிற்கு வாழ்த்துகள்!
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!
மிக்க நன்றி அம்மா! தங்கள் முதல் வரவிற்கும், கருத்திற்கும்!
நீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எங்கள் மனமார்ந்த இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
இந்தப் பதிவை எப்படி பார்க்காமல் விட்டேன் என்று தெரியவில்லை. சிறப்பாக விவரித்திருக்கிறீர்கள். தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. தாங்கள் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கலாமே.
பதிலளிநீக்கு